BK Murli 31 March 2016 In TamilBK Murli 31 March 2016 In Tamil

31.03.2016    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


இனிமையான குழந்தைகளே! நீங்கள் ஸ்ரீமத்படி தத்துவங்களுடன் சேர்த்து முழு உலகையும் தூய்மையாக்கக்கூடிய சேவை செய்ய வேண்டும். அனைவருக்கும் சுகம் மற்றும் அமைதிக்கான வழியைக் காட்ட வேண்டும்.


கேள்வி:

குழந்தைகளாகிய நீங்கள் தேகத்தைக்கூட மறக்கக் கூடிய முயற்சியை செய்கிறீர்கள், ஆகையால் உங்களுக்கு எந்த பொருள் தேவையில்லை?


பதில்:

சித்திரங்கள் தேவையில்லை. இந்த சித்திரத்தையே (சரீரத்தையே) மறக்க வேண்டும் எனும்போது அந்த சித்திரங்களுக்கு அவசியம் என்ன? தன்னை ஆத்மா எனப் புரிந்துக் கொண்டு தேகமற்ற தந்தை மற்றும் இனிமையான வீட்டை நினைவு செய்யுங்கள். இந்த படங்கள் சிறு குழந்தைளுக்காக அதாவது புதியவர்களுக்காக. நீங்களோ நினைவில் இருக்க வேண்டும் மற்றும் அனைவரையும் நினைவு செய்ய வைக்க வேண்டும். வேலை முதலானவைகளை செய்தபடி சதோபிரதானம் ஆவதற்காக நினைவிலேயே இருக்கக் கூடிய பயிற்சி செய்யுங்கள்.


பாடல்:

அதிர்ஷ்டத்தை விழிக்கச் செய்து வந்தேன். . .


ஓம் சாந்தி.

இனிமையிலும் இனிமையான குழந்தைகள் இந்த வார்த்தைகளைக் கேட்டீர்கள். மேலும் அடிக்கடி குஷியில் உரோமம் சிலிர்த்தபடி இருக்கும். தனது சௌபாக்கியத்தை, சொர்க்கத்தின் அதிர்ஷ்டத்தை எடுப்பதற்காக இங்கே வந்துள்ளோம் என குழந்தைகள் அறிவார்கள். இப்படி வேறு எங்கும் சொல்லமாட்டார்கள். நாம் தந்தையிடமிருந்து சொர்க்கத்தின் ஆஸ்தியை எடுத்துக் கொண்டிருக்கிறோம் அதாவது சொர்க்கத்தை உருவாக்குவதற்கான முயற்சியை செய்து கொண்டிருக்கிறோம் என நீங்கள் அறிவீர்கள். சொர்க்கவாசியாக ஆவதற்காக மட்டும் அல்ல, சொர்க்கத்தில் உயர்ந்ததிலும் உயர்ந்த பதவியை அடைவதற்காக முயற்சியை செய்து கொண்டிருக்கிறோம். சொர்க்கத்தின் காட்சியை காட்டக் கூடிய தந்தை நமக்குக் கற்பித்துக் கொண்டிருக்கிறார். இந்த போதையும் குழந்தைகளுக்கு அதிகரிக்க வேண்டும். பக்தி இப்போது முடிய வேண்டும். பக்தர்களை முன்னேற்றுவதற்காக பகவான் வருகிறார் என சொல்லப்படுகிறது, ஏனெனில் இராவணனின் சங்கிலியில் அனைவரும் மாட்டிக் கொண்டிருக்கின்றனர். பல மனிதர்களின் பல வழிகள் உள்ளன. நீங்கள் உண்மையை அறிந்துக் கொண்டு விட்டீர்கள். சிருஷ்டியின் சக்கரம், இது அனாதியான விளையாட்டாக உருவாகியுள்ளது. இதையும் பாரதவாசிகள் புரிந்து கொள்கின்றனர், நாம் ஆரம்பத்தில் புதிய உலகில் வசிப்பவர்களாக இருந்தோம், இப்போது பழையதாகிவிட்ட உலகில் வசிப்பவர்களாகி விட்டோம். தந்தை சொர்க்கமாக புதிய உலகை உருவாக்கினார், இராவணன் பிறகு நரகமாக ஆக்கிவிட்டார். பாப்தாதாவின் வழிப்படி நீங்கள் இப்போது உங்களுக்காக புதிய உலகை உருவாக்கிக் கொண்டிருக்கிறீர்கள். புதிய உலகத்திற்காக படித்துக் கொண்டிருக்கிறீர்கள். யார் படிப்பிப்பது? ஞானக்கடல், பதித பாவனர் என அவருடைய மகிமை உள்ளது. ஒருவரைத் தவிர வேறு யாருடைய மகிமையும் பாடப்படுவதில்லை. அவர்தான் பதித பாவனர். நாம் அனைவரும் பதிதர்கள் (தூய்மையற்றவர்கள்). தூய உலகின் நினைவு யாருக்கும் இல்லை. மிகச் சரியாக 5 ஆயிரம் வருடங்களுக்கு முன்பு தூய்மையான உலகம் இருந்தது என இப்போது நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். இந்த பாரதம் மட்டும் தான் இருந்தது. மற்ற அனைத்து தர்மங்களும் அமைதியில் இருந்தன. பாரதவாசிகளாகிய நாம் சுகதாமத்தில் இருந்தோம். மனிதர்கள் அமைதியை விரும்புகின்றனர், ஆனால் இங்கே யாரும் அமைதியாக இருக்க முடியாது. இது சாந்திதாமம் அல்ல. அது நிராகாரமான உலகம், அங்கிருந்து நாம் வருகிறோம். மற்றபடி சத்யுகத்தில் அமைதி (மௌனம்) இருப்பதில்லை. அது சுகதாமம் ஆகும். அதனை சாந்திதாமம் என சொல்லமாட்டோம். அங்கே நீங்கள் தூய்மை-சுகம்-அமைதியில் இருப்பீர்கள். எந்த சச்சரவும் இருக்காது. வீட்டில் குழந்தைகள் சண்டை முதலானவைகளில் ஈடுபட்டால் அமைதியாக இருங்கள் என சொல்லப்படுகிறது. ஆக, ஆத்மாக்களாகிய நீங்கள் அந்த அமைதி தேசத்தினராக இருந்தீர்கள் என தந்தை சொல்கிறார். இப்போது கலகம் நிறைந்த தேசத்தில் வந்து அமர்ந்திருக்கிறீர்கள். இந்த விஷயம் உங்களுடைய புத்தியில் உள்ளது. நீங்கள் தந்தையின் மூலம் மீண்டும் உயர்ந்ததிலும் உயர்ந்த பதவியை அடைவதற்கான முயற்சி செய்து கொண்டிருக்கிறீர்கள். இந்த கல்விசாலை ஏதும் குறைவானதல்ல. இறைத் தந்தையின் பல்கலைக்கழகமாகும். முழு உலகில் இது பெரியதிலும் பெரியதான பல்கலைக்கழகமாகும். இதில் அனைவருமே அமைதி மற்றும் சுகத்தின் ஆஸ்தியை அடைகின்றனர். ஒரு தந்தையைத் தவிர வேறு யாருடைய மகிமையும் இல்லை. பிரம்மாவுக்கு மகிமை கிடையாது. தந்தைதான் இந்த சமயம் வந்து ஆஸ்தி கொடுக்கிறார். பிறகு சுகமே சுகம்தான். சுகமும் அமைதியும் கொடுப்பவர் ஒரு தந்தை மட்டுமே ஆவார். அவருடையதுதான் மகிமை ஆகும். சத்யுகம்-திரேதாவில் யாருடைய மகிமையும் இருப்பதில்லை. அங்கேயோ இராஜ்யம் நடந்தபடி இருக்கும். நீங்கள் ஆஸ்தியை அடைந்துவிடுவீர்கள், மற்ற அனைவரும் சாந்திதாமத்தில் இருப்பார்கள். மகிமை யாருக்கும் கிடையாது. கிறிஸ்து தர்மத்தை ஸ்தாபனை செய்யலாம், அதனை செய்யவே வேண்டும். தர்மத்தை ஸ்தாபனை செய்கிறார், எனினும் கீழே இறங்கியபடி செல்கிறார். என்ன மகிமை இருந்தது? மகிமை ஒருவருடையதே ஆகும். அவரை பதித பாவனரே, விடுவிப்பவரே என சொல்லி அழைக்கின்றனர். அவருக்கு கிறிஸ்து, புத்தர் முதலானவர்கள் நினைவில் வருவார்கள் என்பது கிடையாது. எனினும் கூட ஓ இறைத் தந்தையே! என ஒருவரை நினைவு செய்கின்றனர். சத்யுகத்திலோ யாருடைய மகிமையும் இருப்பதில்லை. பின்னர் இந்த தர்மங்கள் தொடங்கும்போது தந்தையின் மகிமையைப் பாடுகின்றனர் மற்றும் பக்தி தொடங்குகிறது. நாடகம் எப்படி உருவாகியுள்ளது, சக்கரம் எப்படி சுற்றுகிறது என்பதை தந்தையின் குழந்தைகளாக ஆனவர்கள்தான் அறிவார்கள். தந்தை படைப்பவர் ஆவார். புதிய சிருஷ்டியாகிய சொர்க்கத்தைப் படைக்கிறார். ஆனால் அனைவருமே சொர்க்கத்தில் வர முடியாது. நாடகத்தின் இரகசியத்தையும் புரிந்துக் கொள்ள வேண்டும். தந்தையிடமிருந்து சுகத்தின் ஆஸ்தி கிடைக்கிறது. இந்த சமயத்தில் அனைவருமே துக்கம் மிக்கவர்களாக உள்ளனர். அனைவரும் திரும்பிச் செல்ல வேண்டும், பிறகு சுகத்தில் வருவீர்கள். குழந்தைகளாகிய உங்களுக்கு மிகவும் நல்ல நடிப்பு கிடைத்திருக்கிறது. எந்த தந்தைக்கு இவ்வளவு மகிமை உள்ளதோ அவர் இப்போது வந்து நம் முன்னால் அமர்ந்திருக்கிறார், மேலும் குழந்தைகளுக்குப் புரிய வைக்கிறார். அனைவருமே குழந்தைகள் அல்லவா. தந்தை எப்போதும் மகிழ்ச்சி மிக்கவராக இருக்கிறார். உண்மையில் தந்தையை இப்படியும் சொல்ல முடியாது. ஒருவேளை அவர் மகிழ்ச்சியானவராக ஆகினார் என்றால் பின்னர் மகிழ்ச்சியற்றவராகவும் ஆக வேண்டியிருக்கும். பாபாவோ இவை அனைத்திற்கும் அப்பாற்பட்டவர். பாபாவின் மகிமையே இந்த சமயத்தில் உங்களின் மகிமையும் ஆகும், பின்னர் எதிர்காலத்தில் உங்களின் மகிமை தனிப்பட்டதாக ஆகும். தந்தை எப்படி ஞானக் கடலாக இருக்கின்றாரோ அது போல் நீங்களும் இருக்கிறீர்கள். உங்களுடைய புத்தியில் சிருஷ்டி சக்கரத்தின் ஞானம் இருக்கிறது. தந்தை சுகக் கடலாக இருப்பவர் என அறிவீர்கள். அவரிடமிருந்து அளவற்ற சுகம் கிடைக்கிறது. இந்த சமயத்தில் நீங்கள் தந்தையிடமிருந்து ஆஸ்தியை அடைந்து கொண்டிருக்கிறீர்கள். தந்தை குழந்தைகளுக்கு உயர்ந்த கர்மத்தை கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். இந்த இலட்சுமி நாராயணர் போல, இவர்கள் கண்டிப்பாக முந்தைய பிறவியில் நல்ல கர்மங்கள் செய்திருக்கின்றனர், அதனால் இந்த பதவியை அடைந்தனர். இவர்கள் எப்படி பதவியை அடைந்தனர் என உலகில் யாருக்கும் தெரிவதில்லை.


குழந்தைகளாகிய நீங்கள் இப்படி ஆகிக் கொண்டிருக்கிறீர்கள் என தந்தை சொல்கிறார். நாம் இப்படி இருந்தோம், இப்போது இப்படி ஆகிக் கொண்டிருக்கிறோம் என உங்களுடைய புத்தியில் வருகிறது. தந்தை அமர்ந்து கர்மம்-அகர்மம்-விகர்மத்தின் ஆழமான விளைவுகள் குறித்து புரிய வைக்கிறார், அதன் மூலம் நாம் இப்படி ஆகிக் கொண்டிருக்கிறோம். ஸ்ரீமத் (உயர்ந்த வழி) கொடுக்கிறார் எனும்போது ஸ்ரீமத் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமல்லவா. ஸ்ரீமத்-இன் மூலம் தத்துவங்களுடன் சேர்த்து முழு உலகையும் உயர்வாக ஆக்குகிறார். சத்யுகத்தின் அனைத்துமே உயர்வானதாக இருந்தன. அங்கே சச்சரவுகள் அல்லது புயல் காற்று முதலானவை எதுவும் ஏற்படுவதில்லை. அதிக குளிரும் இருக்காது, அதிக வெப்பமும் இருக்காது. எப்போதும் வசந்த காலமாக இருக்கும். அங்கே நீங்கள் எவ்வளவு சுகமிக்கவர்களாக இருக்கிறீர்கள். இறைவன் மலர்த்தோட்டத்தை அதாவது சொர்க்கத்தை ஸ்தாபனை செய்கிறார் என அவர்கள் சொல்கின்றனர். ஆக அதில் உயர்ந்த பதவியை அடைவதற்கான முயற்சி செய்ய வேண்டும். தாய் தந்தையைப் பின்பற்றுங்கள் என எப்போதும் பாடப்படுகிறது. தந்தையை நினைவு செய்வதன் மூலம் பாவ கர்மங்கள் அழியும். மேலும் பிறகு தந்தையுடன் ஆத்மாக்களாகிய நாம் சேர்ந்து செல்லப் போகிறோம். ஸ்ரீமத் படி நடந்து அனைவருக்கும் பாதை காட்ட வேண்டும்.


எல்லைக்கப்பாற்பட்ட தந்தை சொர்க்கத்தைப் படைப்பவர் ஆவார். இப்போது நரகமாக இருக்கிறது. கண்டிப்பாக நரகத்தில் சொர்க்கத்தின் ஆஸ்தியைக் கொடுத்திருப்பார் இப்போது 84 பிறவிகள் முடிந்து பிறகு நாம் சொர்க்கத்தில் முதல் பிறவியை எடுக்க வேண்டும். உங்களுடைய இலட்சியம் குறிக்கோள் முன்னால் இருக்கிறது. இப்படி ஆக வேண்டும் என்று. நாமே இலட்சுமி நாராயணராக ஆகிறோம், உண்மையில் இந்த படங்களின் அவசியம் எதுவும் கிடையாது. பக்குவமற்றவர்களாக, அடிக்கடி மறக்கக் கூடியவர்களாக உள்ளனர், அதனால் படங்கள் வைக்கப்படுகின்றன. சிலர் கிருஷ்ணரின் படத்தை வைக்கின்றனர். கிருஷ்ணரைப் பார்க்காமல் நினைவு செய்ய முடிவதில்லை. அனைவரின் புத்தியிலும் படங்கள் இருக்கின்றன. உங்களுக்கு சித்திரங்களின் அவசியம் எதுவும் கிடையாது. நீங்கள் தன்னை ஆத்மா என புரிந்து கொள்கிறீர்கள், நீங்கள் உங்களுடைய சித்திரத்தையும் (சரீரத்தையும்) மறக்க வேண்டும். தேகத்துடன் சேர்த்து அனைத்து சம்மந்தங்களையும் மறக்க வேண்டும். நீங்கள் ஒரு பிரியதர்ஷனின் பிரியதர்ஷினிகள் என தந்தை சொல்கிறார். என்னை நினைவு செய்தபடி இருந்தீர்கள் என்றால் பாவ கர்மங்கள் அழிந்துவிடும் என பிரியதர்ஷனாகிய தந்தை சொல்கிறார். சரீரத்தை விடும்போது, நாம் இந்த பழைய உலகை விட்டு இப்போது தந்தையிடம் செல்கிறோம் என புரிந்து கொள்ளும்படியான நிலை இருக்க வேண்டும். 84 பிறவிகள் முடிந்தன, இப்போது போக வேண்டும். என்னை நினைவு செய்யுங்கள் என பாபா கட்டளை கொடுத்திருக்கிறார். தந்தை மற்றும் இனிமையான வீட்டை மட்டும் நினைவு செய்யுங்கள். நான் ஆத்மா சரீரமின்றி இருந்தேன், பிறகு இங்கே நடிப்பை நடிப்பதற்காக சரீரத்தை தாரணை செய்தேன் என்பது புத்தியில் உள்ளது. நடிப்பை நடித்து நடித்து தூய்மையற்றவராக ஆகிவிட்டோம். இந்த சரீரம் பழைய செருப்பாக உள்ளது. ஆத்மா தூய்மையாகிக் கொண்டிருக்கிறது. தூய்மையான சரீரம் இங்கே கிடைக்க வாய்ப்பில்லை. இப்போது ஆத்மாக்களாகிய நாம் வீட்டுக்குத் திரும்பிச் செல்லப் போகிறோம். முதலில் இளவரசன் - இளவரசி ஆகப் போகிறோம், பிறகு சுயம்வரத்திற்குப் பின் இலட்சுமி நாராயணர் ஆகப் போகிறோம். இராதா-கிருஷ்ணர் யார் என்பது மனிதர்களுக்குத் தெரியாது. இருவரும் வேறு வேறு இராஜ்யத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தனர், பிறகு அவர்களின் சுயம்வரம் நடக்கிறது. குழந்தைகளாகிய நீங்கள் காட்சியில் சுயம்வரத்தைப் பார்த்திருக்கிறீர்கள். ஆரம்பத்தில் நிறைய காட்சிகள் கிடைத்துக் கொண்டிருந்தன, ஏனென்றால் பாகிஸ்தானில் உங்களை மகிழ்ச்சியுடன் வைத்துக் கொள்வதற்காக இந்த நடிப்பு அனைத்தும் நடந்து கொண்டிருந்தது. கடைசி காலத்தில் அடிதடி இருக்கவே செய்யும். நிலநடுக்கங்கள் நிறைய ஏற்படும். உங்களுக்கு காட்சிகள் கிடைத்தபடி இருக்கும். நாம் என்ன பதவியை அடைவோம் என அனைவருக்கும் தெரிந்து போய்விடும். பிறகு யார் குறைவாகப் படித்தனரோ அவர்கள் மிகவும் வருந்துவார்கள். நீங்களும் படிக்கவில்லை, பிறரை படிக்க வைக்கவும் இல்லை, நினைவிலும் இருக்கவில்லை என தந்தை சொல்வார். நினைவின் மூலம்தான் சதோபிரதானமாக ஆக முடியும். தூய்மையற்றவர்களை தூய்மைப்படுத்துபவர் தந்தைதான் ஆவார். என்னை மட்டும் நினைவு செய்தீர்கள் என்றால் துரு நீங்கிவிடும் என தந்தை சொல்கிறார். நினைவின் யாத்திரை செய்யும் முயற்சி செய்ய வேண்டும். வேலை, தொழில் முதலானவைகளைச் செய்யுங்கள். கர்மம் செய்யத்தான் வேண்டும். ஆனால் புத்தியின் தொடர்பு அங்கே இருக்க வேண்டும். தமோபிரதானத்திலிருந்து சதோபிரதானமாக இங்கே ஆக வேண்டும். இல்லற விஷயங்களில் இருந்தபடி நீங்கள் என்னை நினைவு செய்யுங்கள், அப்போதுதான் நீங்கள் புதிய உலகின் எஜமானர் ஆவீர்கள். தந்தை வேறு எந்த கஷ்டமும் கொடுப்பதில்லை. உங்களுக்கு மிகவும் சுலபமான உபாயத்தைக் கொடுக்கிறார். சுகதாமத்தின் எஜமானர் ஆவதற்காக என்னை மட்டும் நினைவு செய்யுங்கள். இப்போது நீங்கள் நினைவு செய்யுங்கள் - தந்தை கூட நட்சத்திரம் போல் இருப்பவர். மனிதர்கள், அவரை சர்வசக்திவான், மிகவும் திறன் மிக்கவர் என சொல்கின்றனர். மனித சிருஷ்டியின் விதை ரூபமாக இருக்கிறேன் என தந்தை சொல்கிறார். விதையாக இருப்பதால் சிருஷ்டியின் முதல்-இடை-கடைசியை அறிவேன். நீங்கள் விதை அல்ல, நான் விதையாக இருக்கிறேன், ஆகையால் என்னை ஞானக்கடல் என சொல்கின்றனர். மனித சிருஷ்டியின் சைதன்யமான (உயிரோட்டமிக்க) விதையாக இருக்கிறார், அவருக்கு இந்த சிருஷ்டி சக்கரம் எப்படி சுற்றுகிறது என கண்டிப்பாக தெரிந்திருக்கும். ரிஷி-முனிவர்கள் யாருக்கும் படைப்பவர் மற்றும் படைப்பின் முதல்-இடை- கடைசி பற்றி தெரியாது. ஒருவேளை குழந்தைகளுக்குத் தெரியும் என்றால் அவரிடம் (தந்தையிடம்) செல்லத் தாமதமாகாது. ஆனால் தந்தையிடம் செல்லும் வழி யாருக்கும் தெரியாது. தூய்மையான உலகத்திற்கு தூய்மையற்றவர்கள் எப்படி செல்ல முடியும், ஆகவே காமம் என்ற மிகப்பெரிய எதிரியின் மீது வெற்றி அடையுங்கள் என தந்தை சொல்கிறார். இதுவே முதல் இடை கடைசி துக்கத்தைக் கொடுப்பதாகும். குழந்தைகளாகிய உங்களுக்கு எவ்வளவு நல்ல விதமாக புரிய வைக்கிறேன். எந்த கஷ்டமும் கிடையாது. தந்தை மற்றும் ஆஸ்தியை மட்டும் நினைவு செய்ய வேண்டும். தந்தையின் நினைவு அதாவது யோகத்தின் மூலம் பாவங்கள் பஸ்மம் ஆகும். ஒரு வினாடியில் தந்தையிடமிருந்துதான் இராஜ்யம் கிடைக்கிறது. குழந்தைகள் சொர்க்கத்திற்கு வரக்கூடும், ஆனால் சொர்க்கத்திலும் கூட உயர்ந்த பதவியை அடைய வேண்டும், அதற்காக முயற்சி செய்ய வேண்டும். சொர்க்கத்திற்குச் செல்லவே வேண்டும். கொஞ்சம் கேட்டாலும் கூட தந்தை வந்துள்ளார் எனப் புரிந்து கொள்வார்கள். இது அதே மகாபாரதச் சண்டை என இப்போதும் கூட சொல்கின்றனர். கண்டிப்பாக தந்தையும் கூட இருப்பார், அவர் குழந்தைகளுக்கு இராஜயோகம் கற்பிக்கிறார். நீங்கள் அனைவரையும் எழுப்பியபடி இருக்கிறீர்கள். யார் பலரை எழுப்புகின்றனரோ, அவர்கள் உயர்ந்த பதவி அடைவார்கள். முயற்சி செய்ய வேண்டும். அனைவரும் ஒரே மாதிரியான முயற்சியாளராக இருக்க முடியாது. பாடசாலை மிகப் பெரியதாகும். இது உலகப் பல்கலைக்கழகம். முழு உலகத்தையும் சுகதாமம் மற்றும் சாந்திதாமமாக ஆக்க வேண்டும். இப்படிப்பட்ட ஆசிரியர் எப்போதாவது இருப்பாரா? உலகம் என்பது முழு உலகத்தையும் குறிக்கிறது. தந்தைதான் முழு உலகின் மனிதர்களை சதோபிரதானமாக ஆக்குகிறார் அதாவது சொர்க்கத்தை உருவாக்குகிறார்.


பக்தி மார்க்கத்தில் கொண்டாடப்படும் பண்டிகைகள் அனைத்தும் இப்போதுள்ள சங்கம யுகத்தினுடையதாகும். சத்யுகம், திரேதா யுகத்தில் எந்தப் பண்டிகையும் இருக்காது. அங்கே பலனை அனுபவிப்பார்கள். பண்டிகைகள் அனைத்தும் இங்கே கொண்டாடுகின்றனர். ஹோலி மற்றும் துரியா எனும் பண்டிகைகள் இந்த ஞானத்தின் விஷயங்களாகும். கடந்து சென்ற விஷயங்களை பண்டிகைகளாக பிற்காலத்தில் கொண்டாடியபடி வந்தனர். அனைத்தும் இந்த சமயத்தினுடையதாகும். ஹோலியும் கூட இந்த சமயத்தினுடையதாகும். இந்த 100 வருடங்களுக்குள் அனைத்து விஷயங்களும் நடந்துவிடுகின்றன. சிருஷ்டியும் கூட புதியதாக ஆகிவிடுகிறது. நாம் பல முறை சுகத்தின் ஆஸ்தியை எடுத்தோம், பிறகு இழந்தோம் என நீங்கள் அறிவீர்கள். நாம் மீண்டும் தந்தையிடமிருந்து ஆஸ்தியை எடுத்துக் கொண்டிருக்கிறோம் என்று குஷி ஏற்படுகிறது. பிறருக்கும் கூட வழி காட்ட வேண்டும். நாடகத்தின்படி சொர்க்கத்தின் ஸ்தாபனை கண்டிப்பாக ஏற்பட வேண்டும். பகலுக்குப் பின் இரவு, இரவுக்குப் பின் பகல் வருவது போல கலியுகத்திற்குப் பின் சத்யுகம் கண்டிப்பாக வர வேண்டும். இனிமையிலும் இனிமையான குழந்தைகளின் புத்தியில் குஷியின் முரசு ஒலிக்க வேண்டும். இப்போது நேரம் முடியப் போகிறது, நாம் திரும்பிச் செல்கிறோம் சாந்திதாமத்திற்கு. இது கடைசி பிறவியாகும். கர்ம போகத்தை அனுபவிப்பது கூட குஷியில் லேசாகி விடுகிறது. கணக்கு வழக்குகள், கொஞ்சம் அனுபவிப்பதன் மூலமும், கொஞ்சம் யோக பலத்தின் மூலமும் முடிய வேண்டும். தந்தை குழந்தைகளுக்கு ஆறுதல் தருகிறார் - உங்களுடைய சுகத்தின் நாட்கள் வந்து கொண்டிருக்கின்றன. தொழில் முதலானவைகளையும் செய்ய வேண்டும். சரீர நிர்வாகத்திற்காக பணம் தேவைப்படுமல்லவா. தொழில் செய்பவர்கள் தர்மத்திற்காக பணத்தை ஒதுக்குகின்றனர் என பாபா புரிய வைத்துள்ளார். அதிகமாக செல்வம் சேரும் என்றால் அதிக தானம் கொடுப்போம் என புரிந்து கொள்கின்றனர். சிலர் இரண்டு பைசா கூட கொடுக்கின்றனர், அதற்கு ஈடாக 21 பிறவிகளுக்கு நிறைய கிடைத்துவிடுகிறது. முன்னர் நீங்கள் செய்து கொண்டிருந்த தான புண்ணியத்திற்குப் பிரதிபலனாக அடுத்த பிறவியில் கிடைத்துக் கொண்டிருந்தது. இப்போதோ 21 பிறவிகளுக்கு ஈடாக கிடைக்கிறது. முன்னர் சாது சன்னியாசிகளுக்குக் கொடுத்துக் கொண்டிருந்தீர்கள். இவையனைத்தும் அழியக்கூடியது என இப்போது நீங்கள் தெரிந்து கொண்டிருக்கிறீர்கள். இப்போது நான் நேரடியாக வந்துள்ளேன், இந்த ஈஸ்வரிய காரியத்தில் ஈடுபடுத்துங்கள். அப்போது உங்களுக்கு 21 பிறவிகளுக்கு ஆஸ்தி கிடைத்துவிடும். முன்னர் நீங்கள் மறைமுகமாக கொடுத்துக் கொண்டிருந்தீர்கள். இது நேரடியாக கொடுப்பது. மற்றபடி உங்களுடையது அனைத்தும் முடிந்துவிடப் போகிறது. பணம் இருந்தால் சென்டர்களை (சேவை மையங்களை) திறந்தபடி செல்லுங்கள். உண்மையான கீதா பாடசாலை என்ற வார்த்தைகளை எழுதிப் போடுங்கள். பகவானுடைய மகா வாக்கியம் - என்னை மட்டும் நினைவு செய்யுங்கள் மற்றும் ஆஸ்தியை நினைவு செய்யுங்கள். நல்லது!


இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.


தாரணைக்கான முக்கிய சாரம்:

1. தந்தைக்குச் சமமாக மகிமைக்குத் தகுந்தவர் ஆவதற்காக தந்தையைப் பின்பற்ற வேண்டும்.


2. இது கடைசிப் பிறவியாகும். இப்போது வீடு திரும்ப வேண்டும், ஆகையால் குஷியில் உள்ளுக்குள்ளே முரசொலித்தபடி இருக்க வேண்டும். கர்ம போகத்தை கர்மயோகம் அதாவது தந்தையின் நினைவின் மூலம் குஷியுடன் முடிக்க வேண்டும்.


வரதானம்:

தொடர்பு மற்றும் சம்மந்தத்தின் மூலம் மனதின் சக்தியின் வெளிப்படையான நிரூபணத்தை பார்க்கக் கூடிய சூட்சும சேவாதாரி ஆகுக!


வார்த்தைகளின் சக்தி மற்றும் கர்மத்தின் சக்தியின் வெளிப்படையான நிரூபணம் தெரிவது போல அனைத்திலும் சக்தி வாய்ந்த அமைதி சக்தியின் வெளிப்படையான நிரூபணத்தைப் பார்ப்பதற்காக பாப்தாதாவுடன் நிரந்தரமான, தெளிவான தொடர்பும் சம்மந்தமும் இருக்க வேண்டும், இதுவே யோகபலம் எனப்படுகிறது. இப்படிப்பட்ட யோகபலமிக்க ஆத்மாக்கள் ஸ்தூலமாக தூரத்தில் இருக்கும் ஆத்மாக்களுக்கு அருகாமையின் அனுபவத்தை செய்விக்க முடியும். ஆத்மாக்களை (சூட்சுமமாக) வரவேற்று அவர்களை மாற்ற முடியும். இதுவே சூட்சுமமான சேவையாகும், இதற்காக ஒருநிலைப்படுத்தும் சக்தியை அதிகரியுங்கள்.


சுலோகன்:

தனது அனைத்து பொக்கிஷங்களையும் நற்பலனுள்ளதாக ஆக்குபவர்கள்தான் மகாதானி ஆத்மாக்கள்.


***ஓம் சாந்தி***