BK Murli 17 April 2016 In Tamil

bk murli today

Posted by: BK Prerana

BK Prerana is executive editor at bkmurlis.net and covers daily updates from Brahma Kumaris Spiritual University. Prerana updates murlis in English and Hindi everyday.
Twitter: @bkprerana | Facebook: @bkkumarisprerana
Share:






    BK Murli 17 April 2016 In Tamil


    17.04.2016  காலை முரளி         ஓம் சாந்தி       ''அவ்யக்த பாப்தாதா'' 

    ரிவைஸ் 03.04.1981  மதுபன்

     '' ஞான மார்க்கத்தின் நினைவுச் சின்னம் பக்தி மார்க்கம் ''

    இன்று மதுபன்னின் பூமியில் எந்த சந்திப்புக் கூட்டம் நடக்கிறது? இன்று அனேக நதிகள் மற்றும் கடலின் சந்திப்புக் கூட்டமாகும். ஒவ்வொரு சிறிய மற்றும் பெரிய ஞான நதிகள் பதீத பாவனர் (தூய்மையில்லாதவர்களை தூய்மைப்படுத்துபவர்) தந்தைக்குச் சமமாக பதீத பாவனிகள். தந்தை தன்னுடைய சேவையின் துணைவர்களாக இருப்பவர்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். பாரத தேசத்திலிருந்து வெளிநாடு வரை பதீத பாவனி நதிகள் சென்றடைந்துவிட்டன. பாரதம் மற்றும் வெளிநாட்டின் ஆத்மாக்கள் தூய்மையாகி மகிமையின் பாடலை எவ்வளவு பாடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த மனதின் பாடல் பிறகு துவாபரயுகத்தில் வாய் மூலம் பாடும் பாடலாக ஆகிவிடுகிறது. இப்பொழுது தந்தை சிரேஷ்ட ஆத்மாக்களின் சிரேஷ்ட காரியத்தின், சிரேஷ்ட வாழ்க்கையின் கீர்த்தனை பாடுகிறார். பிறகு பக்தி மார்க்கத்தில் கீர்த்தனை ஆகிவிடும். இப்பொழுது அதீந்திரிய சுகத்தின் பிராப்தியின் காரணமாக குஷியில் ஆத்மாக்களின் மனம் நடனமாடுகிறது. மேலும் பிறகு பக்தியில் கால்களால் நடனம் ஆடுவார்கள். இப்பொழுது சிரேஷ்ட ஆத்மாக்களின் குணங்களின் மாலையை ஜபித்துக் கொண்டிருக்கிறார்கள் மற்றும் வர்ணனை செய்கிறார்கள். பிறகு பக்தி மார்க்கத்தில் மணிகள் அடங்கிய மாலையை ஜபித்துக் கொண்டிருப்பார்கள். இப்பொழுது நீங்கள் அனைவரும் சுயம் தந்தைக்கு போக் சுவீகாரம் (பிரசாதம் படைப்பது) செய்விக்கிறீர்கள், இதன் பலனாக பக்தியில் உங்கள் அனைவருக்கும் போக் அதாவது பிரசாதம் படைப்பார்கள். எப்படி இப்பொழுது நீங்கள் அனைவரும் தந்தை ஏற்றுக் கொள்ளாத எந்தவொரு பொருளையும் ஏற்றுக் கொள்வதில்லை, 'முதலில் தந்தை' இந்த அன்பு எப்பொழுதும் இதயத்தில் இருக்கிறது, அதேபோலவே பக்தியில் தேவ ஆத்மாக்கள் நீங்கள் ஏற்றுக் கொள்ளாமல் அவர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. முதலில் தேவதை பின்பு நாம். எப்படி இப்பொழுது முதலில் தந்தை பிறகு நாம் என்று கூறுகிறீர்கள். அப்படி அனைத்தையும் காப்பி செய்திருக்கிறார்கள். நீங்கள் நினைவு சொரூபமாக ஆகிறீர்கள். அவர்கள் நினைவுச் சின்னத்தின் நினைவு சொரூபமாக இருக்கிறார்கள். எப்படி நீங்கள் அனைவரும் துண்டிக்க முடியாதபடி அந்த ஒரே ஒருவரின் நினைவில் இருக்கிறீர்கள், யாரும் அசைக்கவே முடியாது, மாற்ற முடியாது, அதே போலவே நௌதா பக்தன், உண்மையான பக்தன் முதலில் பக்தன் தன்னுடைய இஷ்ட தேவதை மேல் உள்ள நிச்சயத்தில் துண்டிக்க முடியாத மற்றும் உறுதியான நிச்சயபுத்தி உடையவராக இருப்பார். அனுமானின் பக்தனுக்கு இராம் கிடைத்துவிட்டால் கூட அவர் அனுமானின் பக்தனாகவே இருப்பார். அந்த மாதிரி உறுதியான விஸ்வாசம் உள்ளவராக இருப்பார்கள். உங்களுடைய ஒரு பலம், ஒருவர் மேல் உள்ள நம்பிக்கை என்ற இதை காப்பி செய்திருக்கிறார்கள்.



    நீங்கள் அனைவரும் இப்பொழுது ஆன்மீக யாத்திரிகர்கள் ஆகிறீர்கள். உங்களுடையது நினைவின் யாத்திரை மற்றும் அவர்களுடையது நினைவுச் சின்னத்தின் யாத்திரை. நீங்கள் தற்சமயம் ஞான ஸ்தம்பம், சாந்தி ஸ்தம்பத்தின் நாலாபுறங்களிலும் ஞானக் கல்வியின் நினைவு சொரூப மகாவாக்கியத்தின் காரணமாக சுற்றி வருகிறீர்கள் மேலும் அனைவரையும் இதில் ஈடுபடுத்துகிறீர்கள். நீங்கள் ஞானக்கல்வியின் காரணமாக சுற்றி வருகிறீர்கள். ஒரு பக்கத்தைக் கூட விடுவதில்லை. எப்பொழுது நாலாபக்கங்களிலும் சுற்றி வந்து முடிவடைகிறது என்றால், அனைத்தையும் பார்த்தோம், அனுபவம் செய்தோம் என்று அப்பொழுது தான் நினைக்கிறீர்கள். பக்தர்கள் உங்களுடைய நினைவு சொரூபத்தைச் சுற்றி வரத் தொடங்கினார்கள். எதுவரை சுற்றி வருவதில்லையோ அதுவரை பக்தி முழுமையாகவில்லை என்று நினைக்கிறார்கள். அனைவரின் அனைத்து காரியம் மற்றும் குணம் சூட்சும சொரூபத்திலிருந்து ஸ்தூல ரூபமாக பக்தியில் காப்பி செய்திருக்கிறார்கள் எனவே பாப்தாதா அனைத்து தேவ ஆத்மாக்களுக்கு எப்பொழுதும் ஒருவர் மேல் உறுதியான நிச்சய புத்தியை வையுங்கள் என்று அறிவுரை கூறுகிறார். ஒருவேளை நீங்கள் இப்பொழுது ஒருவரின் நினைவில் ஒரு சீரான இரசனையை அனுபவம் செய்யவில்லை. ஒருமித்த நிலையில் இருப்பதில்லை. உறுதியானவராக ஆவதில்லை என்றால் உங்களுடைய பக்தர் உறுதியான நிச்சயபுத்தி உடையவராக இருக்கமாட்டார். இங்கு உங்களுடைய புத்தி அலைகிறது மற்றும் பக்தர்கள் கால்களால் அலைவார்கள். சில நேரம் யாரையாவது தேவதை ஆக்குவார்கள், சில நேரம் வேறு யாரையாவது ஆக்குவார்கள். இன்று இராமின் பக்தனாக இருப்பார், நாளை கிருஷ்ணனின் பக்தன் ஆகிவிடுவார். 'அனைத்து பிராப்திகளும் ஒருவர் மூலமாக' என்ற அந்த நிலை உங்களுடையதாக இருக்கவில்லை என்றால் பக்த ஆத்மாக்களும் வெவ்வேறு பிராப்திக்காக வேறு வேறு தேவதைகளிடம் அலைவார்கள். நீங்கள் உங்களுடைய உயர்ந்த மதிப்பு மரியாதையிலிருந்து விலகிச் சென்றுவிடுகிறீர்கள் என்றால் உங்களுடைய பக்தர்களும் பிரச்சனைகளுக்கு உள்ளாகிறார்கள். எப்படி இங்கே நீங்கள் நினைவு மூலமாக ஆன்மீக அனுபவங்களை செய்வதற்குப் பதிலாக தன்னுடைய பலஹீனங்களின் காரணமாக பிராப்திகளுக்குப் பதிலாக முறையீடுகள் செய்கிறீர்கள். மனமுடைந்து போய் முறையீடு செய்கிறீர்கள் அல்லது அன்போடும் முறையீடு செய்கிறீர்கள் என்றால் உங்களுடைய பக்தர்களும் முறையீடு செய்து கொண்டே இருப்பார்கள். முறையீடுகளையோ அனைவரும் நல்ல முறையில் தெரிந்திருக்கிறீர்கள். எனவே இப்பொழுது அதை நாம் கூறுவதில்லை.



    இரக்க மனமுடையவர் ஆகுங்கள், எப்பொழுதும் இரக்கத்தின் பாவனை வையுங்கள் என்று தந்தை கூறுகிறார். ஆனால் இரக்கத்திற்குப் பதிலாக அகம்பாவம் அல்லது (வகம் பாவம்) யூகம் செய்யும் உணர்வு ஆகிவிடுகிறது. அதனால் பக்தர்களிலும் அப்படி ஆகிறது. யூகம் செய்வது என்றால் இதைச் செய்யலாமா, அந்த மாதிரி ஆகுமா, ஆகாதா, அப்படியோ ஆகிவிடாதே. இதில் தான் இரக்கத்தை மறந்துவிடுகிறார்கள். தனக்காகவும் இரக்க மனம் மற்றும் அனைவருக்காகவும் இரக்க மனம் வேண்டும். தனக்காகவும் யூகம் செய்வது இருக்கிறது. மேலும் மற்றவர்களுக்காகவும் யூகம் (அனுமானம்) செய்வது இருக்கிறது. ஒருவேளை யூகத்தின் நோய் அதிகரித்துவிட்டது என்றால் கேன்சருக்கு சமமான நோய் ஆகிவிடும். முதல் நிலையில் இருப்பவர் இருந்தாலும் பிழைத்துக் கொள்வார். ஆனால் கடைசி நிலையில் உள்ளவர் பிழைப்பது கடினம். உயிரோடும் இருக்க முடியாது, இறக்கவும் முடியாது. அதே போல் இங்கேயும் முழுமையான அஞ்ஞானி ஆக முடியாது, ஞானியாகவும் ஆக முடியாது. அவர்களுடைய அடையாளமாக - ஒரே ஒரு சுலோகனை மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருப்பார்கள் அல்லது நான் அப்படித் தானே இருக்கிறேன் என்று கூறுவார் அல்லது மற்றவர்களுக்காக இவர் இப்படித் தான் என்று கூறுவார். எவ்வளவு தான் மாறுவதற்கு முயற்சி செய்தாலும் மீண்டும் மீண்டும் இப்படி கூறுவது இருக்கும். கேன்சர் நோய் உள்ளவர் நன்றாக சாப்பிடுவார், குடிப்பார். வெளி ரூபம் நல்லதாக தென்படும், ஆனால் உள்ளே சத்து இல்லாதவராக இருப்பார். யூகத்தின் நோய் உள்ளவர் வெளிமுகமாக தன்னை நன்றாக நடத்திக் கொள்வார், வெளிப்படையாக எந்தக் குறையும் இருக்காது. வேறு யாராவது வைத்தாலும் அதை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். ஆனால் உள்ளுக்குள்ளேயே ஆத்மா அதிருப்தியாக இருக்கும் காரணத்தினால் குஷி மற்றும் சுகத்தின் பிராப்தியில் பலஹீனமானவராக ஆகிக் கொண்டே இருப்பார். அதே மாதிரி தான் இன்னும் ஒன்று - அகம்பாவம். இரக்க உணர்வின் அடையாளம் ஒவ்வொரு வார்த்தையில், ஒவ்வொரு எண்ணத்தில் ஒரு தந்தையைத் தவிர இன்னொருவர் யாரும் இல்லை. இரக்க உணர்வு உள்ளவர்களுக்கு எங்கு பார்த்தாலும் தந்தையே தந்தை தான் தென்படுவார். மேலும் அகம்பாவம் உள்ளவர்களுக்கு எங்கு சென்றாலும், எங்கே பார்த்தாலும் நானே நான் தான். அவர் நான் - நான் என்ற மாலையை ஜபிப்பவர். மேலும் அவர்கள் (இரக்க மனமுடையவர்கள்) தந்தையின் மாலையை ஜபிப்பவர்கள். நான் என்பது தந்தையில் உள்ளடங்கிவிட்டது. இதைத் தான் அன்பில் ஐக்கியமாகிவிட்டார் என்று கூறுவது. அவர் அன்பில் ஐக்கியமான ஆத்மா! மேலும் இவர் நான் - நான் என்பதில் ஐக்கியமாகியிருக்கும் ஆத்மா. இப்பொழுது புரிந்து கொண்டீர்களா? உங்களை காப்பி செய்பவர்கள் முழு கல்பத்திலும் இருக்கிறார்கள். பக்தர்களின் மாஸ்டர் பகவான் நீங்கள், சத்யுகம், திரேதாயுகத்தில் பிரஜைகளுக்கான பிரஜாபிதா நீங்கள். சங்கமயுகத்தில் பாப்தாதாவின் பெயர் மற்றும் காரியத்தை பிரத்யக்ஷ்ம் செய்வதற்கு ஆதாரமானவர்கள் நீங்கள். தன்னுடைய உயர்ந்த காரியம் மூலமாகவும், மாற்றம் மூலமாகவும் தந்தையின் பெயரை புகழடையச் செய்யுங்கள். விரும்பினால் வீணான காரியங்கள் மூலமாக, சாதாரண நடத்தை மூலமாக தந்தையின் பெயருக்கு களங்கமும் ஏற்படுத்துங்கள். இது குழந்தைகள் உங்கள் கையில் இருக்கிறது.



    விநாஷ நேரத்தில் உலகிற்காக பெரிய நன்மை செய்பவர்கள் மகாவரதானி, மகாதானி, மகான் புண்ணிய ஆத்மாக்களின் சொரூபத்தில் இருப்பார்கள். அப்படி அனைத்து காலத்திலும் எவ்வளவு மகானாக இருக்கிறீர்கள். ஒவ்வொரு காலத்திலும் ஆதாரமானவர்கள் நீங்கள். அந்த மாதிரி தன்னை நினைக்கிறீர்களா? தொடக்கத்திலும், மத்தியிலும் மேலும் இறுதியிலும் அப்படி மூன்று காலங்களின் அறிமுகம் நினைவு வந்தது. நீங்கள் ஒருவர் மட்டும் அல்ல, உங்களுக்கு பின்னால் அனேகர்கள் உங்களை காப்பி செய்பவர்கள் இருக்கிறார்கள். எனவே எப்பொழுதும் ஒவ்வொரு எண்ணத்திலும் கவனம் வேண்டும். நல்லது!



    டீச்சர்களுக்காக அவ்யக்த பாப்தாதாவின் மகாவாக்கியம்

    டீச்சர்களின் வாஸ்தவமான சொரூபமே நிரந்தர சேவாதாரி. இதை நல்ல முறையில் தெரிந்திருக்கிறீர்கள். மேலும் சேவாதாரியின் விசேஷம் என்ன? சேவாதாரி எந்த விஷயத்தினால் வெற்றி அடைபவர் ஆகிறார்? சேவையில் எப்பொழுதும் மூழ்கியிருக்கும் சேவாதாரியின் விசேஷமாக நான் என்ன சேவை செய்து கொண்டிருக்கிறேன், நான் சேவை செய்தேன் என்ற இந்த சேவை உணர்வின் தியாகமும் இருக்க வேண்டும். இதைத் தான் நீங்கள் தியாகத்தினையும் தியாகம் என்று கூறுகிறீர்கள். நான் சேவை செய்தேன் என்றால் சேவை வெற்றி அடையாது. நான் செய்யவில்லை, ஆனால் நான் செய்பவன், தந்தை செய்விப்பவர் என்றால் தந்தையின் மகிமை வரும். எங்கு நான் சேவாதாரி, நான் செய்தேன், நான் செய்வேன் என்றிருந்தால் இந்த நான் என்ற தன்மை சேவாதாரியின் கணக்குப்படியும் 'நான் என்பது' வருகிறதோ அது சேவையில் வெற்றி அடைய விடாது. ஏனென்றால் சேவையில் எப்பொழுது நான் என்பது கலந்துவிடுகிறதோ அது சுயநலம் நிரம்பிய சேவை ஆகிவிடுகிறது. தியாகம் நிரம்பிய சேவையாக இருப்பதில்லை. உலகிலும் கூட இரண்டு விதமான சேவாதாரிகள் இருக்கிறார்கள். ஒருவர் சுயநலமாக செய்யும் சேவாதாரிகள், இன்னொருவர் அன்பின் காரணமாக தியாகம் செய்து சேவை செய்பவர். அப்படி நீங்கள் எந்த மாதிரியான சேவாதாரிகள்? நான் என்பது பாபாவின் அன்பில் ஐக்கியமாகிவிட்டது என்று ஏற்கனவே கூறியிருந்தோம் இல்லையா, இவரைத் தான் உண்மையான சேவாதாரி என்று கூறுவது. நான் மற்றும் நீ என்ற பாஷை முடிவடைந்தது. செய்விப்பவர் பாபா, நான் ஒரு கருவி. யார் வேண்டும் என்றாலும் கருவி ஆகிவிடலாம். நான் என்பது எப்பொழுது வருகிறதோ, நான் என்ற தன்மை என்னவாக இருக்கும்? மே, மே (நான், நான்) என்று யார் கூறுவார்? (ஆடு). நான், நான் என்று கூறுவதினால். பற்றுதலின் கிரீடம் வந்துவிடுகிறது. எப்படி ஆட்டின் கழுத்து எப்பொழுதும் குனிந்து இருக்கும் மற்றும் சிங்கத்தின் கழுத்து எப்பொழுதும் மேல் நோக்கி இருக்கும். அப்படி எங்கு நான் என்பது வந்துவிடுகிறதோ அங்கு ஏதாவது விருப்பத்தின் காரணமாக குனிந்துவிடுவார்கள். எப்பொழுதும் போதையில் தலை உயர்ந்து இருக்காது. ஏதாவது ஒரு தடையின் காரணமாக தலை வெள்ளாட்டிற்கு சமமாக கீழே இருக்கும். குடும்ப வாழ்க்கை கூட வெள்ளாட்டிற்குச் சமமான வாழ்க்கை ஆகும். ஏனென்றால் வளைந்து கொடுக்கிறார்கள் இல்லையா? பணிவின் காரணமாக வளைந்து கொடுப்பது என்பது வேறு ஆகும். அதை மாயா தலைகுனிய வைக்கவில்லை, இதுவோ மாயா வெள்ளாடாக ஆக்கிவிடுகிறது. வலுக்கட்டாயமாக தலையைக் குனிய வைத்துவிடுகிறது. கண்களை குனிய வைத்துவிடுகிறது. சேவையில் நான் எனது என்பது கலப்பது என்றால் பற்றுதல் கிரீடம் அணிந்தவர் ஆவது. அது நபரின் பற்றுதலின் கிரீடமாகவும் இருக்கலாம், தான் செய்யும் பாகத்தின் பற்றுதலின் கிரீடமாகவும் இருக்கலாம், பொருட்களின் உடையதாகவும் இருக்கலாம் அல்லது வாயுமண்டலத்தினுடையதாகவும் இருக்கலாம். ஏதாவது ஒன்றின் பற்றுதலின் கிரீடம் அணிந்தவர் ஆகிவிடுவார். தன்னுடைய சம்ஸ்காரங்களின் பற்றுதலின் கிரீடமணிந்தவராக ஆகிவிடுகிறார்கள். பற்றுதலின் கிரீடம் என்றால் பர்வஷ் அதாவது மற்றதின்/மற்றவர்களின் வசமானவர்கள். யார் பற்றுதலின் கிரீடம் அணிந்தவராக இருப்பாரோ அவர் கண்டிப்பாக பிறரது வசமாகத் தான் இருப்பார். சேவாதாரியில் இந்த சம்ஸ்காரம் இருக்கவே முடியாது.



    சேவாதாரிகள் சவால் கொடுப்பவர்களாக இருப்பார்கள். எப்பொழுதுமே தலைநிமிர்ந்து சவால் கொடுப்பார்கள், தவறு நடந்தது என்றால் அந்த மாதிரி தலைகுனிந்து பேசுவார்கள். சேவாதாரி என்றால் சவால் விடுபவர்கள், மாயாவிற்கும் மற்றும் உலகின் ஆத்மாக்களுக்கும் தந்தையின் சவால் விடுபவர்கள். சவால் கூட யார் தன்னுடைய பழைய சம்ஸ்காரங்களுக்கு சவால் கொடுத்திருக்கிறார்களோ அவர்கள் தான் கொடுக்க முடியும். முதலில் தன்னுடைய சம்ஸ்காரங்களுக்கு சவால் கொடுக்க வேண்டும். பிறகு பொதுவாக என்ன தடை வருகிறதோ அதற்கு சவால் கொடுக்க வேண்டும். தடை ஒருபொழுதும் அந்த மாதிரி சேவாதாரியை நிறுத்த முடியாது. சவால் விடுபவர் மாயாவின் மலை போன்ற ரூபத்தை ஒரு நொடியில் கடுகாக்கி விடுவார். நீங்களும் மாயாவின் நாடகம் போடுகிறீர்கள் தான் இல்லையா, அதில் என்ன கூறுகிறீர்கள். மலையையும் கடுகாக்கி விடுவோம் என்று கூறுகிறீர்கள். அப்படி உண்மையான சேவாதாரி என்றால் தந்தைக்குச் சமமானவர். ஏனென்றால் தந்தை முதன்முதலில் தன்னை என்னவென்று கூறுகிறார்? நான் உலக சேவகன் என்று கூறுகிறார். சேவாதாரி ஆவது என்றால் தந்தைக்குச் சமமாக ஆவது. ஒரு ஜென்மத்தின் சேவை அனேக ஜென்மங்களுக்குக் கிரீடம் அணிந்த சிம்மாசனதாரி ஆக்கிவிடுகிறது. சங்கமயுகம் சேவைக்கான யுகம் தான் இல்லையா? அதுவும் எவ்வளவு காலம்? சங்கமயுகத்தின் ஆயுளே சிறியது. மேலும் அதிலேயும் ஒவ்வொருவருக்கும் சேவையின் வாய்ப்பு எவ்வளவு குறைவான நேரம் கிடைக்கிறது. நல்லது. உதாரணமாக யாராவது ஐம்பது - அறுபது வருடம் சேவை செய்தார் என்றால் 5000 வருடங்களிலிருந்து 60-ஐ கழித்துவிடுங்கள். மீதமிருக்கும் அனைத்துமே பிராப்தி தான். 60 வருடங்களின் சேவை மற்ற அனைத்தும் பலன்கள்! ஏனென்றால், சங்கமயுகத்தின் முயற்சியின் அனுசாரம் பூஜைக்குரியவர் ஆவீர்கள். பூஜைக்குரியவரின் கணக்குப்படி வரிசைக்கிரமமான பூஜாரி ஆவீர்கள். பூஜாரியாகவும் நம்பர் ஒன் ஆவீர்கள். பூஜைக்குரிய நிலையின் கணக்குப்படி வரிசைக்கிரமமான பூஜாரி ஆவீர்கள். பூஜாரியும் நம்பர் ஒன் ஆகிறீர்கள். பிறகு இறுதி ஜென்மத்தில் கூட பாருங்கள் எவ்வளவு நன்றாக இருந்தீர்கள். யார் நல்ல முயற்சியாளரோ அவருடைய கடைசி ஜென்மம் கூட இவ்வளவு நல்லதாக இருக்கிறது என்றால் வரும் காலங்களில் என்னவாக இருக்கும். இதை சுகத்தின் கணக்குப்படி துக்கம் என்று கூறுகிறோம். யாராவது ஒரு செல்வந்தர் கொஞ்சம் ஏழையாக ஆகிவிட்டார் என்றால், அதைப் பெரிதாகச் சொல்வார்கள் இல்லையா? ஏதாவது ஒரு பெரிய மனிதனுக்கு கொஞ்சம் அரை டிகிரி கூட காய்ச்சல் வந்துவிட்டது என்றால் இன்னாருக்கு காய்ச்சல் வந்து விட்டது என்று பெரிய செய்தியாகக் கூறுவார்கள். ஆனால் ஒருவேளை ஏழைக்கு ஐந்து டிகிரியையும் விட அதிகமாக காய்ச்சல் வந்துவிட்டால் கூட யாரும் கேட்கக் கூட மாட்டார்கள். அப்படி நீங்களும் அந்தளவு துக்கம் ஆவதில்லை. ஆனால் அதிகமான சுகத்தை ஒப்பிடும்பொழுது துக்கமானவர் என்றே கூறப்படும். கடைசி ஜென்மத்தில் கூட பிச்சைக்காரராக ஆகவில்லை தானே! வீடு வீடாகச் சென்று பிச்சை கேட்பவராக ஆகவில்லை தானே! எனவே முயற்சி செய்வதற்கான நேரம் மிகக் குறைவு மேலும் பிராப்திக்கான நேரம் மிக அதிகம் என்று கூறினோம். பிராப்தியும் எவ்வளவு உயர்ந்தது மேலும் எவ்வளவு காலத்திற்கானது என்ற இந்த நினைவும் இருக்கிறது என்றால் அவருடைய நிலை என்னவாகிவிடும்? சிரேஷ்டமாக ஆகிவிடும் இல்லையா? அப்படி சேவாதாரி ஆவது என்றால் முழுக் கல்பத்திலும் பிராப்தியை அடைவதற்கு அதிகாரி ஆவது. சங்கமயுகம் முழுமையாக சேவையே செய்து கொண்டிருப்போமா என்று அப்படி ஒருபொழுதும் நினைக்காதீர்கள். எப்பொழுது பலனை அனுபவிப்பீர்களோ அப்பொழுது எவ்வளவு காலம் தான் பலனை அனுபவிப்போம் என்று சொல்வீர்களா என்ன? இப்பொழுதோ கிடைக்கும் என்ற நினைவு இருக்கிறது தான் இல்லையா? ஒன்றுக்கு இலட்சம் மடங்கு என்ன ஆகிறது அப்படி கணக்கும் இருக்கும் இல்லையா? சேவாதாரி ஆவது என்றால் முழுக் கல்பத்திற்காக எப்பொழுதும் சுகமானவர் ஆவது. இது குறைந்த பாக்கியம் இல்லை. டீச்சர்கள் என்று கூறினாலும் சரி, சேவாதாரி என்று கூறினாலும் சரி, உழைப்பிற்கு ஆயிரம் மடங்கு பலன் கிடைக்கிறது. மேலும் உழைப்பு கூட என்னவாக இருக்கிறது? இங்கேயே மாணவர்களுக்காக தீதி, தாதி ஆகிவிடுகிறீர்கள். பட்டம் கிடைத்துவிடுகிறது தான் இல்லையா? பத்து வருடங்களின் மாணவன் கூட இரண்டு வருடங்களாக வருபவர் யார் டீச்சர் ஆகிவிடுகிறாரோ அவரை தீதி என்று கூறத் தொடங்கிவிடுகிறார். இங்கேயும் உயர்ந்த நிலையிலோ பார்க்கிறார்கள் இல்லையா? மரியாதை கொடுக்கிறார்கள் தான் இல்லையா? ஒருவேளை உண்மையான சேவாதாரியாக இருக்கிறார் என்றால், இங்கேயும் மரியாதை கிடைப்பதற்கு தகுதியானவர் ஆகிவிடுகிறார். ஒருவேளை கலப்படமாக இருக்கிறார் என்றால் இன்று தீதி என்று கூறுவார்கள், நாளை அவரை எதிர்த்து ஏதாவது கூறியும் விடுவார்கள். சேவை கலப்படமாக இருக்கிறது என்றால் மரியாதையும் கலப்படமே கலப்படம் தான், எனவே சேவாதாரி என்றால் தந்தைக்குச் சமமானவர். சேவாதாரி என்றால் தந்தையின் அடி மீது அடி எடுத்து வைப்பவர், கொஞ்சம் கூட முன்னுக்குப் பின்னுக்கு எடுத்து வைக்காதவர். எண்ணம், சொல், செயல், தொடர்பு அனைத்திலும் தந்தையின் அடி மேல் அடி எடுத்து வைப்பவர். முற்றிலும் காலடி மேல் காலடி வைப்பவரைத் தான் அடி மேல் அடியெடுத்து வைப்பவர் என்று கூறுவது. என்ன நினைக்கிறீர்கள்? இது அந்த மாதிரியான குரூப் தான் இல்லையா? டீச்சர்களோ எப்பொழுதும் சகஜயோகிகள் தான் இல்லையா? டீச்சர்களே கடின உழைப்பை அனுபவம் செய்கிறார்கள் என்றால் மாணவர்களின் நிலைமை என்னவாகும். நல்லது!

    வரதானம்:

    முற்றுப்புள்ளி மூலமாக சிரேஷ்ட ஸ்திதி (நிலை) என்ற பதக்கத்தைப் பெறக்கூடிய மகாவீர் ஆகுக !



    இந்த முடிவுமில்லாத தொடக்கமும் இல்லாத நாடகத்தில் ஆன்மீக சேனையின் சேனைகளுக்கு யாரும் பதக்கம் கொடுப்பதில்லை. ஆனால் நாடகப்படி அவர்களுக்கு உயர்ந்த நிலை என்ற பதக்கம் இயல்பாகவே பிராப்தி ஆகிவிடுகிறது. இந்த பதக்கம் யார் ஒவ்வொரு ஆத்மாவின் பங்கை பார்வையாளராகி பார்த்துக் கொண்டே முற்றுப்புள்ளியை சுலபமாக இட்டு விடுகிறாரோ அவர்களுக்குத் தான் கிடைக்கிறது. அந்த மாதிரி ஆத்மாக்களின் அஸ்திவாரம் அனுபவத்தின் ஆதாரத்தில் இருக்கும்.எனவே ஏதாவது பிரச்சனை என்ற மதில்சுவர் அவரை நிறுத்த முடியாது.



    சுலோகன்:

    ஒவ்வொரு சூழ்நிலை என்ற மலையைக் கடந்து தன்னுடைய இலட்சியத்தை அடையக் கூடிய பறக்கும் பறவை ஆகுங்கள்.



    ***OM SHANTI***