31 May 2016

BK Murli 1 June 2016 Tamil

BK Murli 1 June 2016 Tamil

01.06.2016    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


இனிமையான குழந்தைகளே! எப்போது இந்தப் பழைய உலகத்திலிருந்து எல்லையற்ற வைராக்கியம் ஏற்படுகிறதோ, அப்போது தான் தந்தையுடன் கூடவே செல்ல முடியும்.கேள்வி :

பகவான் சக்திசாலியாக இருந்த போதிலும் அவரால் படைக்கப்பட்ட இந்த யக்ஞத்தில் விக்னங்கள் ஏன் ஏற்படுகின்றன?பதில் :

ஏனென்றால் இராவணன் பகவானை விடவும் தீவிரமாக கடுமையாக இருப்பதால். அவனுடைய இராஜ்யம் அபகரிக்கப் படும் போது அவன் விக்னங்களை ஏற்படுத்தவே செய்வான். ஆரம்பத்தில் இருந்தேடிராமாவின் அனுசாரம் இந்த யக்ஞத்தில் விக்னங்கள் ஏற்பட்டே வந்துள்ளன. ஏற்படத் தான் செய்யும். நாம் தூய்மையில்லாத உலகில் இருந்து தூய்மையான உலகிற்கு (டிரான்ஸ்ஃபர்) மாற்றமாகி சென்று கொண்டிருக்கிறோம் என்பதால் நிச்சயமாகப் தூய்மையற்ற மனிதர்கள் விக்னங்களை ஏற்படுத்தவே செய்வார்கள்.பாடல் :

ஓ தூரதேசத்தின் பயணியே...........ஓம் சாந்தி.

இனிமையிலும் இனிமையான ஆன்மிகக் குழந்தைகள் பாடலின் ஒரு வரியைக் கேட்டீர்கள். எப்படி வேத-சாஸ்திரங்கள் முதலியன பக்தி மார்க்கத்தின் வழியைச் சொல்கின்றனவோ, அது போல் இந்தப் பாடலும் ஏதோ ஒரு வழி சொல்கிறது. அவர்களோ எதையும் புரிந்து கொள்ளவில்லை. சாஸ்திரங்களின் கதைகள் முதலியவற்றைக் கேட்பது என்பதெல்லாம் காதுக்கு இனிமையானவை. இப்போது குழந்தைகள் அறிவார்கள் - தூரதேசத்தின் பயணி எனச் சொல்லப் படுபவர் யார்? ஆத்மாவுக்குத் தெரியும், நாமும் கூட தூரதேசத்தின் பயணிகள் தான். நமது வீடு சாந்திதாமம். மனிதர்கள் இவ்விசயங்கள் பற்றி அறியவில்லை என்றால் எதையுமே அறிந்து கொள்ளவில்லை என்று தான் அர்த்தமாகிறது. தந்தையை அறிந்து கொள்ளவில்லை என்பதால் சிருஷ்டிச் சக்கரத்தைப் பற்றி யாரும் அறிந்து கொள்ளவில்லை. நான் தற்காலிகமாக ஜீவாத்மா ஆகிறேன் என்று சிவபாபா சொல்வதை இந்த ஆத்மா புரிந்து கொண்டுள்ளது. நீங்கள் உண்மையாகவே ஜீவாத்மாவாக இருக்கிறீர்கள். நான் சங்கமயுகத்தில் தான் தற்காலிக ஜீவாத்மாவாக உள்ளேன். அதுவும் உங்களைப் போல் ஆவதில்லை. நான் இந்த சரீரத்தில் பிரவேசமாகிறேன், என்னுடைய அறிமுகம் கொடுப்பதற்காக. இல்லை யென்றால் உங்களுக்கு அறிமுகம் எப்படிக் கிடைக்கும்? பாபா புரிய வைத்துள்ளார்-ஆன்மிகத் தந்தை என்பவர் ஒருவர் தான். அவரை சிவபாபா அல்லது பகவான் எனச் சொல்கின்றனர். வேறு யாருக்கும் தெரியாது. இதில் தூய்மையின் பந்தனமும் உள்ளது. பெரியதிலும் பெரிய பந்தனம் தன்னை ஆத்மா எனப் புரிந்து கொள்வது. அந்த தூர தேசத்தின் பயணியாகிய பதீத-பாவனரை பக்தி மார்க்கத்தில் நினைவு செய்கின்றனர். அந்த ஆன்மிகத் தந்தை புரிய வைக்கிறார்-நான் அனைவரையும் அழைத்துச் செல்வேன், அனைவருமோ திரும்பிச் சென்று தான் ஆக வேண்டும். பிரளயம் என்பது நடைபெறப் போவதில்லை. பாரத கண்டமோ இருக்கவே செய்கிறது. பாரத கண்டம் ஒரு போதும் விநாசமாவதில்லை. சத்யுக ஆரம்பத்தில் பாரத கண்டம் மட்டுமே இருக்கும். கல்பத்தின் சங்கமத்தில் பாபா வரும் போது ஆதி சநாதன தேவி-தேவதா தர்மத்தை ஸ்தாபனை செய்ய வேண்டியுள்ளது. மற்ற அனைத்து தர்மங்களும் விநாசமாகி விடப் போகின்றன. நீங்களும் கூட ஆதி சநாதன தேவி-தேவதா தர்மத்தை ஸ்தாபனை செய்வதில் உதவி செய்து கொண்டிருக்கிறீர்கள். ஆக, பாடலைக் கேட்டீர்கள் - பாபா, எங்களையும் உங்களுடன் அழைத்துச் செல்லுங்கள் எனச் சொல்கின்றனர். பாபா சொல்கிறார் – பழைய உலகின் மீது வைராக்கியம் வராத வரை அப்படியே யாரும் சென்றுவிட முடியாது. புது வீடு கட்டப் படுகிறது என்றால் பழைய வீட்டிலிருந்து மனம் விடுபட்டு விடுகின்றது. நீங்களும் அறிவீர்கள், இந்தப் பழைய உலகம் அழிந்துவிடப் போகிறது. இப்போது புது உலகத்திற்குச் செல்ல வேண்டும். எது வரை சதோபிரதானம் ஆகவில்லையோ, அது வரை சதோபிரதான தேவி-தேவதாவாக ஆக முடியாது. அதனால் பாபா அடிக்கடி புரிய வைக்கிறார்-தன்னை ஆத்மா என உணர்ந்து தந்தையை நினைவு செய்து கொண்டே இருங்கள். சத்கதி அளிப்பவர் தூர தேசத்தின் பயணி ஒருவர் தான் வந்துள்ளார், அவரை உலகம் அறிந்து கொள்ளவில்லை. சர்வவியாபி எனச் சொல்லி விட்டுள்ளனர். இப்போது குழந்தைகள் நீங்கள் நம்பர்வார் புருஷார்த்தத்தின் அனுசாரம் அறிவீர்கள், நாம் சிவபாபாவின் குழந்தைகள். இங்கு வருகின்றனர் என்றாலே புரிந்து கொள்கின்றனர், நாம் பாப்தாதாவிடம் செல்கிறோம். ஆக, இது ஒரு பரிவாரம் ஆகின்றது. இது ஈஸ்வரிய குடும்பம். யாருக்காவது அநேகக் குழந்தைகள் இருப்பார்களானால் பெரிய சேனை (பட்டாளம்) ஆகிவிடும். சிவபாபாவின் குழந்தைகள் இத்தனை பி.கே. சகோதர-சகோதரிகள் உள்ளனர். இதுவும் கூடப் பெரிய சேனை ஆகி விடுகின்றது. பிரம்மாகுமார்-குமாரிகள் அனைவரும் அறிவார்கள் - நாம் எல்லையற்ற தந்தையிடமிருந்து ஆஸ்தி பெறுகிறோம். பாண்டவர்களும் கௌரவர்களும் (சூதாட்டம்) விளையாடியதாகக் காட்டுகின்றனர். இராஜ்யத்தைப் பணயமாக வைத்தனர். இப்போது இராஜ்யம் கௌரவர்களுக்கும் கிடையாது, பாண்டவர்களுக்கும் கிடையாது. கிரீடம் முதலிய எதுவுமே கிடையாது. அவர்கள் நகரத்தை விட்டு வெளியேற்றப் பட்டதாகக் காட்டுகின்றனர். ஆயுதங்கள் முதலியவற்றை மறைவாக வைத்திருந்தனர். இவையனைத்தும் கட்டுக் கதைகள். பாண்டவ இராஜ்யமும் இல்லை, கௌரவ இராஜ்யமும் இல்லை. அவர்களுக்குள் சண்டையும் நடைபெறவில்லை. இராஜாக்களுக்கிடையில் சண்டை நடைபெறுகின்றது. இவர்களோ சகோதர-சகோதரர்கள். சண்டை நடைபெற்றது, கௌரவர்கள் மற்றும் பாவனவர்களுக்கிடையில் தான். மற்றப்படி சகோதரர்கள் ஒருவரை ஒருவர் எப்படி அழித்துக் கொள்வார்கள்? பாண்டவர்களும் கௌரவர்களும் சண்டையிட்டதாகக் காட்டுகின்றனர். மீதி 5 பாண்டவர்கள் மிஞ்சினார்கள், ஒரு நாயும் கூட இருந்ததாகக் காட்டுகின்றனர். அவர்களும் அனைவருமே மலை மீது போய் உருகி இறந்து போனதாகச் சொல்கின்றனர். விளையாட்டே முடிந்தது. இராஜயோகத்தின் அர்த்தமே வெளியாகவில்லை.இப்போது குழந்தைகள் நீங்கள் அறிவீர்கள், பாபா கல்ப-கல்பமாக வந்து ஒரு தர்மத்தின் ஸ்தாபனை செய்கிறார். அழைக்கவும் செய்கின்றனர், பதீத-பாவனா வாருங்கள், வந்து தூய்மை இழந்த எங்களை தூய்மையாக்குங்கள் என்று. சத்யுகத்தில் சூரியவம்சி இராஜதானி தான் இருக்கும். பிரம்மாவின் மூலம் விஷ்ணுபுரியின் ஸ்தாபனை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இப்போது பாபா வந்துள்ளார் என்றால் அவருடைய வழிகாட்டுதல் படி செல்ல வேண்டும். தாமரை மலருக்குச் சமமாகப் தூய்மையாக இருக்க வேண்டும். இல்லற விவகாரங்களில் இருந்து கொண்டு தூய்மையாக இருங்கள் என்று கன்யாக்களுக்குச் சொல்ல மாட்டார்கள். அவர்களோ தூய்மையாகவே இருக்கின்றனர். இது இல்லறவாசிகளுக்காகச் சொல்லப் படுகின்றது. குமார் மற்றும் குமாரிகளோ, திருமணம் செய்து கொள்ள வேண்டியதே இல்லை. இல்லையென்றால் அவர்களும் இல்லற வாசிகளாகவே ஆகி விடுவார்கள். ஒரு சில கந்தர்வ விவாகத்தின் பெயரும் உள்ளது. கன்யா மீது அடி விழுகிறதென்றால் வேறு வழி இல்லாத நிலையில் கந்தர்வ விவாகம் செய்து வைக்கப் படுகின்றது. உண்மையில் அடியையும் கூட சகித்துக் கொள்ள வேண்டும். ஆனால் அதர் குமாரி ஆகக் கூடாது. பால பிரம்மச்சாரிக்குப் புகழ் அதிகம் உள்ளது. திருமணம் செய்து கொண்டால் ஹாஃப் பார்ட்னர் ஆகி விடுகின்றனர். குமார்களுக்குச் சொல்லப் படுகின்றது - நீங்களோ பவித்திரமாக இருங்கள் என்று. இல்லற விவகாரங்களில் இருந்து கொண்டே தாமரை மலருக்குச் சமமாக ஆகுங்கள் என்று இல்லறவாசிகளுக்குச் சொல்லப்படுகின்றது. அவர்களுக்குத் தான் முயற்சி செய்ய வேண்டி உள்ளது. திருமணம் செய்யாதிருப்பதால் பந்தனம் (பற்று) இல்லாமல் இருக்கும். கன்யாக்களோ படிக்க வேண்டும், ஞானத்தில் வலிமை உள்ளவர்களாக இருக்க வேண்டும். சிறிய குமாரிகளையோ சிறு வயதினராகையால் நாம் சென்டருக்கு அழைத்துக் கொள்ள முடியாது. அவர்கள் தங்கள் வீட்டில் இருந்தவாறு படிக்க முடியும். தாய்-தந்தை ஞானத்தில் வந்திருப்பார்களானால் சிறிய பெண்குழந்தைகளை அழைத்து வரலாம். இதுவோ பாடசாலைக்குப் பாடசாலையாகவும், வீட்டுக்கு வீடாகவும், சத்சங்கத்துக்கு சத்சங்கமாகவும் உள்ளது. சத் என்றால் ஒரு தந்தை. அவரைத் தான் ஓ தூர தேசத்தின் பயணியே என அழைக்கின்றனர். ஆத்மா வெள்ளையாக (தூய்மை) ஆகின்றது. பாபா சொல்கிறார் - பயணி நான் எப்போதுமே தூய்மையாக உள்ளேன். நான் தூய்மையிலேயே இருக்கிறேன். நான் வந்து அனைத்து ஆத்மாக்களையும் வெள்ளையாக, தூய்மையாக ஆக்குகிறேன். வேறு யாரும் இது போன்ற பயணி கிடையாது. பாபா புரிய வைக்கிறார் - நான் வருவது இராவண இராஜ்யத்தில். இந்த சரீரமும் கூட வேறொருவருடையது. உங்கள் ஆத்மா சொல்லும் - இது எனது சரீரம். பாபா சொல்வார்-இது எனது சரீரம் கிடையாது. இது இவருடைய சரீரம். இந்த தூய்மையற்ற சரீரம் என்னுடையதல்ல. நான் வருவதே இவருடைய அநேக ஜென்மங்களின் கடைசி ஜென்மத்தில். யார் நம்பர் ஒன் தூய்மையாக இருந்தாரோ, அவர் தான் கடைசி நம்பரில், அதாவது கடைசியில் விகாரி ஆகிறார். முதல் நம்பர் 16 கலை சம்பூர்ணமாக இருந்தார். இப்போது எந்த ஒரு கலையும் மிச்சம் இல்லை. தூய்மையற்றவர்களோ அனைவருமே தான். ஆக, பாபா தூரதேசத்தின் பயணி ஆகிறார் இல்லையா? ஆத்மாக்கள் நீங்களும் கூட பயணிகள் தான். இங்கே வந்து பார்ட்டை நடிக்கிறீர்கள். இந்த சிருஷ்டிச் சக்கரத்தை யாரும் அறிந்திருக்கவில்லை. யாராவது எவ்வளவு தான் சாஸ்திரங்கள் முதலியவற்றைப் படித்திருந்தாலும் கூட இந்த ஞானத்தை யாராலும் கொடுக்க முடியாது. பாபா புரிய வைக்கிறார்-நான் இந்த உடலில் பிரவேசமாகி இந்த ஆத்மாக்களுக்கு ஞானம் தருகிறேன். அவர்களோ, மனிதர் மனிதர்களுக்கு சாஸ்திரங்களின் ஞானத்தைத் தருகின்றனர். அவர்கள் பக்தர்கள் ஆகின்றனர். சத்கதி அளிப்பவரோ ஒருவர் தான். அவர் தான் ஞானக்கடல். அவரை அறியாத காரணத்தால் தேக அபிமானம் வந்து விடுகின்றது. அவர்கள் ஒன்றும் இதைப் புரிய வைப்பதில்லை-தன்னை ஆத்மா என நிச்சயம் செய்யுங்கள். ஆத்மா படிக்கின்றது. இதை யாரும் புரிய வைப்பதில்லை. ஏனென்றால் தேக அபிமானம். இப்போது தூரதேசத்தின் பிரயாணி என்று சிவபாபாவைத் தான் சொல்வார்கள். நீங்கள் அறிவீர்கள், நாம் 84 பிறவிகளின் சக்கரத்தைச் சுற்றி முடித்து விட்டோம்.பாபா சொல்கிறார் - 5000 ஆண்டுகளுக்கு முன்பும் கூட புரிய வைத்திருந்தேன்-அதாவது குழந்தைகளே, நீங்கள் உங்கள் பிறவிகள் பற்றி அறிய மாட்டீர்கள். நான் அறிவேன் - கீதையில் மாவில் உப்பை சேர்ப்பது போல் ஏதோ கொஞ்சம் உள்ளது. அதே கீதையின் எபிஸோட், அதே மகாபாரத யுத்தம், அதே மன்மனாபவ- மத்யாஜீபவ என்ற ஞானம் உள்ளது. என்னை மட்டுமே நினைவு செய்யுங்கள். சண்டையும் கூட நிச்சயமாக நடைபெற்றுள்ளது. பாண்டவர்களுக்கு வெற்றி கிடைத்தது. விஷ்ணுவின் வெற்றிமாலை பாடப்படுகின்றது. சாஸ்திரங்களிலோ, பாண்டவர்கள் உருகி இறந்து போனதாகக் காட்டப் பட்டுள்ளது. பிறகு மாலை எங்கிருந்து உருவானது? இப்போது நீங்கள் புரிந்து கொண்டு விட்டீர்கள், நாம் விஷ்ணுவின் மாலை ஆவதற்காக இங்கே வந்துள்ளோம். மேலே பதீத பாவனர் பாபா இருக்கிறார். அவருக்கு நினைவுச் சின்னம் வேண்டும் இல்லையா? பக்தி மார்க்கத்தில் நினைவுச் சின்னம் பாடப் படுகின்றது. சிலர் 8 மணி மாலை, சிலர் 108 மணி மாலை, சிலர் 16108 மணி மாலை உருவாக்கியுள்ளனர். உங்களது உயரும் கலையினால் அனைவருக்கும் நன்மை எனப் பாடுகின்றனர். இப்போது நீங்கள் தெரிந்து கொண்டீர்கள், நமக்கு இப்போது உயர்கின்ற கலை. நாம் நம்முடைய சுகதாமத்திற்குச் சென்று விடுவோம். பிறகு அங்கிருந்து எப்படிக் கீழே இறங்குகிறோம்? 84 பிறவிகளை எப்படி எடுக்கிறோம்? இந்த ஞானம் முழுவதும் உங்கள் புத்தியில் உள்ளது. இந்த ஞானத்தை மறக்கக் கூடாது. நம்முடைய அனைத்து துக்கங்களையும் போக்குவதற்காக, சாபத்தைப் போக்கி ஆஸ்தி தருவதற்காக பாபா வந்துள்ளார். இராவணனின் சாபத்தினால் அனைவருக்கும் துக்கம் ஏற்படுகின்றது. ஆக, இப்போது தந்தையையும் ஆஸ்தியையும் நினைவு செய்ய வேண்டும். நீங்கள் அறிவீர்கள், நாம் சூரியவம்சத்தினர் பாரதத்தில் இராஜ்யம் செய்தோம். பாரதத்தில் தான் சிவபாபா வருகிறார். பாரதம் தான் சொர்க்கமாக இருந்தது. இதை அடிக்கடி புத்தியில் நினைவு செய்ய வேண்டும். யார் 84 பிறவிகளை எடுக்கவில்லையோ, அவர்கள் தாரணை செய்யவும் மாட்டார்கள், செய்விக்கவும் மாட்டார்கள். அவர்களுக்காகப் புரிய வைக்கப்படுகிறது-இவர்கள் 84 பிறவிகள் எடுக்கவில்லை. இவர்கள் தாமதமாக (பிற்காலத்தில்) வந்துள்ளனர். சொர்க்கத்தில் இவர்கள் வருவதில்லை. முதல்-முதலில் செல்வதோ நல்லது இல்லையா? புதிய வீட்டில் முதலில் தாங்கள் வசிக்கின்றனர். பிறகு வாடகைக்கு விடுகின்றனர். ஆக, அது பிறகு செகண்ட் ஹேண்ட் (பழையதாக) ஆகி விடுகின்றது இல்லையா? சத்யுகம் என்பது புது உலகம். திரேதா செகண்ட் ஹேண்ட் எனச் சொல்வார்கள். ஆக, இப்போது புத்தியில் வருகின்றது, நாம் இப்போது சொர்க்கமாகிய புது உலகிற்குச் செல்ல வேண்டும். புருஷார்த்தம் செய்ய வேண்டும். பிரஜைகளும் உருவாகிக் கொண்டே போவார்கள். உங்களுக்குப் புரிந்து கொண்டே போகும்-மாலையில் மணியாக யார்-யார் வர முடியும்? நீங்கள் வர மாட்டீர்கள் என்று யாரிடமாவது நேரடியாகச் சொல்லப் படுமானால் ஹார்ட் ஃபெயில் ஆகி விடுவார்கள். அதனால் சொல்லப் படுகிறது-புருஷார்த்தம் செய்யுங்கள், தன்னைச் சோதித்துப் பாருங்கள், நமது புத்தியோகம் அலையாமல் உள்ளதா? உங்களுக்கு சிவபாபாவிடம் எவ்வளவு அன்பு உள்ளது? நாங்கள் பாப்தாதாவிடம் செல்கிறோம் எனச் சொல்லவும் செய்கின்றனர். சிவபாபாவிடமிருந்து தாதா (பிரம்மா) மூலமாக ஆஸ்தி பெறுவதற்காகச் செல்கின்றனர். இப்படிப்பட்ட தந்தையிடமோ அநேகத் தடவைகள் செல்ல வேண்டும். ஆனால் இல்லற விவகாரங்களையும் கவனித்துக் கொள்ள வேண்டும். பெரிய செல்வந்தராக இருக்கலாம், ஆனால் இவ்வளவு நேரம் இருக்காது. முழுமையான நிச்சயம் இல்லை. இல்லையென்றால் ஓரிரு மாதங்களுக்குப் பின் வந்து புத்துணர்ச்சி பெற முடியும். அவர்கள் அடிக்கடி முயற்சி செய்வார்கள். ஊசியில் துருப் பிடித்துள்ளது என்றால் காந்தம் அந்த அளவுக்குக் கவர்ந்து இழுக்காது. யாரிடம் முழுமையாக யோகம் உள்ளதோ, அவர்களுக்கு உடனே கவர்ச்சி இருக்கும். ஓடி வருவார்கள். எவ்வளவு கறை நீங்கிக் கொண்டே போகுமோ, அவ்வளவு கவர்ச்சி இருக்கும். நாம் காந்தத்திடம் சென்று சந்திக்க வேண்டும் என்று. பாடல் உள்ளது-அடித்தாலும் சரி, என்ன செய்தாலும் சரி...... நான் இந்த வாசலை விட்டு வெளியே செல்ல மாட்டேன். ஆனால் அந்த நிலை கடைசியில் தான் ஏற்படும். கறை நீங்கி விட்டிருக்குமானால் அந்த மனநிலை இருக்கும். பாபா சொல்கிறார்-ஹே ஆத்மாக்களே, மன்மனாபவ. தங்களின் இல்லற விவகாரங்களிலேயே இருங்கள். இங்கே ஓடி வந்து அமர்ந்து கொள்ள வேண்டும் என்பதில்லை. கடலினிடம் மேகங்கள் வர வேண்டும், புத்துணர்ச்சி பெறுவதற்காக. பிறகு சேவைக்காகச் செல்ல வேண்டும். பந்தனம் எப்போது முடிவடைகின்றதோ, அப்போது சேவைக்காகச் செல்ல முடியும். தாய்-தந்தையர் தங்களின் குழந்தைகளைப் பராமரிக்க வேண்டும். தந்தையின் நினைவில் இருக்க வேண்டும். பவித்திரமாக வேண்டும்.பாபா புரிய வைத்துள்ளார்-அநேக விதமான தடைகள் ஞானயக்ஞத்தில் ஏற்படுகின்றன. ஈஸ்வரனோ சக்திசாலி, பிறகு ஏன் விக்னங்கள் ஏற்படுகின்றன எனக் கேட்கின்றனர். இராவணன் பகவானை விடவும் வேகமானவன் (கொடூரமானவன்) என்பது மனிதர்களுக்குத் தெரியாது. அவனுடைய இராஜ்யம் அபகரிக்கப் படுகிறது எனும் போது அநேக விதமான விக்னங்கள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றன. டிராமாவின் திட்டப்படி மீண்டும் கூட விக்னங்கள் ஏற்படும். ஆரம்பத்தில் இருந்து தூய்மையற்றவர்களின் விக்னங்கள் ஏற்படுகின்றன. சாஸ்திரங்களிலும் கூட எழுதப் பட்டுள்ளது-கிருஷ்ணருக்கு 16108 பட்டராணிகள் இருந்தனர் என்பதாக. பாம்பு அவரைத் தீண்டியது. இராமரின் சீதை கவர்ந்து செல்லப் பட்டார். இப்போது இராவணன் சொர்க்கத்திற்கு எங்கிருந்து வந்தான்? பொய்களோ நிறைய உள்ளன. விகாரம் இல்லாமல் குழந்தைகள் எப்படி இருக்கும் எனக் கேட்கின்றனர். அவர்களுக்குத் தெரியாது - ஆஸ்தி பெறக்கூடியவர்கள் தான் வந்து புரிந்து கொள்வார்கள். ஆக, இந்த ஞான யக்ஞத்தில் அசுரர்களின் விக்னங்கள் படுகின்றன. தூய்மையில்லாதவர்களைத்தான் அசுரர்கள் எனச் சொல்லப் படுகின்றனர். இராவண சம்பிரதாயத்தினராகவே உள்ளனர். இப்போது நீங்கள் சங்கம யுகத்தில் இருக்கிறீர்கள். இராவண இராஜ்யத்தில் இருந்து விலகி வந்திருக்கிறீர்கள். பிறகும் கூட அதில் சிறிதளவு வரத்தான் செய்கிறது. புத்தியில் இந்த ஞானம் உள்ளது - நாம் போய்க்கொண்டே இருக்கிறோம். அமர்ந்திருப்பதோ இங்கே தான். ஆனால் இராவண இராஜ்யத்தின் மீது உங்களுக்கு வைராக்கியம் உள்ளது. இந்த மோசமான உலகம் சுடுகாடாக ஆகப் போகிறது. விதவிதமான கருத்துகள் மூலம் புரிய வைக்கப்படுகின்றது. உண்மையில் ஒரே ஒரு முக்கியமான விசயம் தான்-மன்மனாபவ. எத்தனைப் பேரிடம் இருந்து கடிதங்கள் வருகின்றன! - பாபா, நாங்கள் பந்தனத்தில் உள்ளோம். ஒரு திரௌபதியோ இல்லை. ஆயிரக் கணக்கானவர்கள் ஆகி விடுவார்கள். இப்போது நீங்கள் தூய்மையற்ற உலகில் இருந்து தூய்மையான உலகிற்கு மாற்றலாகி சென்று கொண்டிருக்கிறீர்கள். யார் கல்பத்திற்கு முன் மலர்களாக ஆகியிருந்தார்களோ, அவர்கள் தாம் வெளிப்படுவார்கள். அல்லாவின் தோட்டமானது இங்கே ஸ்தாபனை ஆகும். ஒரு சிலரோ அப்படி நல்ல மலர்களாக உள்ளனர்-பார்க்கும் போதே மகிழ்ச்சி ஏற்படுகின்றது. பெயரே கிங் ஆஃப் ஃபிளவர்ஸ் என்று உள்ளது. 5 நாள் வைத்திருந்தாலும் மலர்ந்த நிலையில் இருக்கும். மணம் பரவிக் கொண்டே இருக்கும். இங்கேயும் கூட பாபாவை நினைவு செய்து கொண்டும் நினைவு படுத்திக் கொண்டும் உள்ளனர். அவர்களின் நறுமணம் பரவுகின்றது. சதா குஷியர்க உள்ளனர். அப்படிப்பட்ட இனிமையிலும் இனிமையான குழந்தைகளைப் பார்த்து பாபா மகிழ்ச்சி அடைகின்றார். அவர்களுக்கு முன் பாபாவின் ஞான நடனம் நன்றாக நடைபெறுகின்றது. நல்லது.இனிமையிலும் இனிமையான தேடிக்கண்டெடுக்கப் பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவு மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே!தாரணைக்கான முக்கிய சாரம் :

1) ஞானம் மற்றும் யோகத்தில் உறுதியாக மாறாதவராக இருக்க வேண்டும். பந்தனம் எதுவும் இல்லை என்றால் பிறகு தெரிந்தே பந்தனங்களில் போய் மாட்டிக் கொள்ளக் கூடாது. பால பிரம்மச்சாரி ஆகி இருக்க வேண்டும்.2) இப்போது நமக்கு உயர்கின்ற கலை. பாபா நம்முடைய அனைத்து துக்கங்களையும் போக்குவதற்காக, சாபத்தைப் போக்கி ஆஸ்தி தருவதற்காக வந்துள்ளார். பாபா மற்றும் ஆஸ்தியை நினைவு செய்து அளவற்ற குஷியில் இருக்க வேண்டும். சோதித்துப் பார்க்க வேண்டும்-நமது புத்தியோகம் எங்காவது அலையாமல் உள்ளதா?வரதானம் :

ஏகாக்ரதாவின் (ஒருநிலைப்பாட்டின்) அப்பியாசத்தின் மூலம் அநேக ஆத்மாக்களின் விருப்பங்களை நிறைவேற்றக் கூடிய விஷ்வ கல்யாண்காரி ஆகுக.அனைத்து ஆத்மாக்களின் விருப்பம் - அலைந்து கொண்டிருக்கும் புத்தி மற்றும் மனதை சஞ்சலத்தில் இருந்து ஒருமுகப் பட்டதாக ஆக்க வேண்டும். ஆக, அவர்களின் இந்த விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக நீங்கள் தங்களின் சங்கல்பங்களை ஒருமுகப் படுத்துவதற்கான அப்பியாசத்தை அதிகப் படுத்துங்கள். நிரந்தரமாக ஒரே சீரான நிலையில் (ஏக்ரஸ் ஸ்திதி) மற்றும் ஒரு பாபா தவிர வேறு யாரும் இல்லை...... இந்த ஸ்திதியில் நிலைத்திருங்கள். வீண் சங்கல்பங்களை சுத்த சங்கல்பங்களாக மாற்றுங்கள். அப்போது விஷ்வகல்யாண்காரி பவ என்ற வரதானம் கிடைத்து விடும்.சுலோகன் :

பிரம்மா பாபாவுக்கு சமமாக குண சொரூபம், சக்தி சொரூபம் மற்றும் நினைவு சொரூபம் ஆகிறவர் தான் உண்மையான பிராமணர்.
***OM SHANTI***

Whatsapp Button works on Mobile Device only