11 May 2016

BK Murli 12 May 2016 Tamil

BK Murli 12 May 2016 Tamil

12.05.2016    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


இனிமையான குழந்தைகளே! இந்த பழைய உலகம் மற்றும் தேகதாரிகளின் மீது ஒருபோதும் மனதை ஈடுபடுத்தக் கூடாது, மனம் ஈடுபட்டது என்றால் அதிர்ஷ்டம் இல்லாமல் போய் விடும்.கேள்வி:

தந்தை குழந்தைகளுக்கு நாடகத்தின் எந்த இரகசியத்தை சொல்லியிருக்கிறார்?பதில்:

குழந்தைகளே, இந்த நாடகம் இப்போது முடியவுள்ளது, ஆகையால் அனைத்து ஆத்மாக்களும் இங்கே ஆஜராகவே வேண்டியுள்ளது. அனைத்து தர்மங்களின் ஆத்மாக்களும் இங்கே ஆஜராகப் போகின்றனர், ஏனென்றால் அனைவரின் தந்தை இங்கே ஆஜராகியுள்ளார். அனைவரும் தந்தைக்கு வணக்கம் செலுத்துவதற்காக (மரியாதை செய்ய) வரவே வேண்டும். அனைத்து தர்மங்களின் ஆத்மாக்கள் மன்மனாபவ மந்திரத்தை எடுத்துச் செல்வார்கள். அவர்கள் மத்யாஜீபவ மந்திரத்தை தாரணை செய்து சக்கரவர்த்தியாக ஆகப் போவதில்லை.பாடல்:

மனதின் உதவிக்கரம் உடைந்து விடக் கூடாது. . . .ஓம் சாந்தி.

அனைத்து செண்டர்களின் குழந்தைகள் பாடலைக் கேட்டீர்கள். நீங்கள் இன்று கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள், மற்ற குழந்தைகள் 2-4 நாட்களுக்குப் பிறகு கேட்கப் போகிறார்கள். ஒருவேளை பழைய உலகம், பழைய சரீரத்தின் மீது மனம் ஈடுபட்டது என்றால் அதிர்ஷ்டம் இல்லாமல் போய்விடும், ஏனென்றால் இந்த சரீரம் இந்த பழைய உலகத்தினுடையதாகும். யார் தேக அபிமானிகளாக ஆகின்றனரோ அவர்களுக்கு இப்போது உருவாகிக் கொண்டிருக்கும் அவ்வளவு அதிர்ஷ்டமும் முடிந்து விடும். இப்போது துரதிருஷ்டத்திலிருந்து அதிர்ஷ்டசாலியாக ஆகிக் கொண்டிருக்கிறீர்கள், ஆகையால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு ஒரு தந்தையை நினைவு செய்யுங்கள், அவர் எல்லைக்கப்பாற்பட்ட ஆஸ்தி கொடுக்கிறார். தந்தை மற்றும் ஆஸ்தியை நினைவு செய்யுங்கள், இந்த பழைய உலகத்தில் இன்னும் கொஞ்சம் காலம்தான் உள்ளது. இதில் நீங்கள் முயற்சி செய்து கண்டிப்பாக அனைத்து குணங்களிலும் நிறைந்தவராக ஆக வேண்டும். பலர் தூய்மையாக இருக்கவும் செய்கின்றனர். பலர் அடிக்கடி தோற்று விடுகின்றனர். பாபா சொல்கிறார் - நீங்கள் தந்தையுடன் சேவையில் துணைவராக ஆக வேண்டும். மிகப்பெரிய சேவையாகும், இவ்வளவு முழு உலகையும் தூய்மையற்ற நிலையிலி ருந்து தூய்மையாக ஆக்க வேண்டும். அனைவரும் தந்தைக்கு உதவி செய்வார்கள் என்றும் சொல்ல முடியாது. யார் கல்பத்திற்கு முன்பு உதவி செய்தனரோ, பிராமண குல பூஷணர்களாக, பி.கு.களாக ஆகியுள்ளனரோ அவர்கள் தான் புத்திசாலிகளாக ஆவார்கள். பிரஜாபிதா பிரம்மாவின் பெயர் பாடப்பட்டுள்ளது. பிரம்மாவின் குழந்தைகளை கண்டிப்பாக பி.கு. என்றே சொல்வோம். கண்டிப்பாக இருந்து போயிருக்கிறார். ஆதி தேவ், ஆதி தேவியையும் கூட நினைவு செய்கின்றனர், எந்த பொருள் இருந்து சென்றதோ, அது மீண்டும் கண்டிப்பாக மீண்டும் இருக்க வேண்டும். சத்யுகம் இருந்து சென்றது, அதில் ஆதி சனாதன தேவி-தேவதைகளின் இராஜ்யம் இருந்தது, அது இப்போது இல்லை. தேவி, தேவதைகள், தூய்மையான இல்லற மார்க்கத்து இராஜ்யம் செய்து கொண்டிருந்தவர்கள் இப்போது 84 பிறவிகளின் கடைசியில் இருக்கின்றனர். இப்போது தூய்மையாகவும் இல்லை, மற்றும் அந்த இராஜ்யமும் இல்லை, தூய்மை இழந்துவிட்டனர். மீண்டும் தூய்மையாக்குவதற்காக தந்தை வந்துள்ளார். தூய்மையற்றவர்களின் மீது புத்தியின் தொடர்பை ஈடுபடுத்த வேண்டாம், ஒரு தந்தையை நினைவு செய்யுங்கள் என சொல்கிறார்.நாம் தந்தையின் வழிப்படி நடந்து தந்தையிடமிருந்து ஆஸ்தி எடுத்துக் கொண்டிருக்கிறோம் என நீங்கள் அறிவீர்கள். எப்படி ஆஸ்தியை அடைவது என்ற யுக்தியையும் கூறுகிறார். மனிதர்களோ பலவிதமான யுக்திகளை உருவாக்குகின்றனர். சிலருக்கு அறிவியலின் கர்வம் இருக்கிறது, சிலருக்கு மருத்துவத்தின் கர்வம் இருக்கிறது. மனிதர்களின் இதயம் கெட்டுப் போய்விட்டது என்றால் வேறொரு பிளாஸ்டிக் இதயத்தை செய்து வைத்து விடலாம் என சொல்கின்றனர். இயற்கையானதை நீக்கி விட்டு செயற்கையானதை பயன்படுத்தியபடி இருக்கின்றனர். இதுவும் கூட ஒருவகை கலையாக உள்ளது. இது அல்ப காலத்திற்கான சுகம். நாளை இறந்து விட்டால் உடலே அழிந்து விடப் போகிறது. பிராப்தி எதுவும் இருப்பதில்லை. அல்ப காலத்திற்காக கிடைத்தது. அறிவியல் மூலம் மிகவும் அதிசயங்கள் செய்து காட்டுகின்றனர், அதுவும் குறுகிய காலத்திற்காகத்தான். இந்த விஷயமோ முற்றிலும் தனிப்பட்டதாகும். தூய்மையான ஆத்மா 84 பிறவிகள் எடுத்து எடுத்து இப்போது தூய்மையற்றதாக ஆகிவிட்டது. அந்த தூய்மையற்ற ஆத்மாவை தூய்மைப்படுத்துவது என்பது ஒரு தந்தையைத் தவிர வேறு யாராலும் செய்ய முடியாது. அந்த ஒருவருடையதுதான் புகழ் உள்ளது. அனைவரின் பதீத பாவனர், அனைவருக்கும் சத்கதி வழங்கும் வள்ளல், அனைவரின் மீதும் தயை (இரக்கம்) நிறைந்த பார்வையை வைப்பவர், சர்வோதயா தலைவர் ஆவார். மனிதர்கள் தம்மை சர்வோதயா தலைவர் என சொல்லிக் கொள்கின்றனர். இப்போது சர்வ என்றால் அதில் அனைவரும் வந்து விடுகின்றனர். அனைவரின் மீதும் தயை காட்டக்கூடியவர் என ஒரு தந்தைதான் மகிமை பாடப்படுகிறார், அவர் இரக்க மனமுள்ளவர், ஆனந்தம் நிறைந்தவர் என சொல்கின்றனர். மற்றபடி மனிதர்கள் அனைவரின் மீது என்ன தயை காட்ட முடியும். தம் மீதே காட்ட முடியாது எனும்போது மற்றவர் மீது என்ன காட்ட முடியும். அல்ப காலத்திற்காக தயை காட்டுகின்றனர். பெயர் எவ்வளவு பெரிய பெரியதாக வைத்துக் கொண்டுள்ளனர்.எப்போதும் ஆரோக்கியம் மிக்கவராக, எப்போதும் செல்வமிக்கவராக ஆவதற்கான சகஜமான யுக்தியை சொல்கிறேன் என இப்போது தந்தை சொல்கிறார். யுக்தி முற்றிலும் எளிதானதேயாகும். என்னை மட்டும் நினைவு செய்யுங்கள், ஏனென்றால் நீங்கள் என்னையே மறந்து விட்டிருக்கிறீர்கள். சத்யுகத்தில் நீங்கள் சுகம் மிக்கவர்களாக இருக்கிறீர்கள், ஆகையால் என்னை நினைவே செய்வதில்லை. உங்களுடைய 84 பிறவிகளின் வரலாறு-புவியியலைப் பற்றி உங்களுக்கு சொல்லியிருக்கிறேன். நீங்கள் எப்போதும் சுகம் மிக்கவர்களாக இராஜ்யம் செய்து கொண்டிருந்தீர்கள், பிறகு நாளுக்கு நாள் இறங்கி இறங்கி தமோபிரதானமாக துக்கம் மிக்கவர்களாக ஆகி விட்டீர்கள். இப்போது தந்தை மீண்டும் குழந்தைகளாகிய உங்களுக்கு கல்பத்திற்கு முன்பு போல ஆஸ்தி கொடுத்துக் கொண்டிருக்கிறார், நீங்கள் ஒவ்வொரு கல்பமும் வந்து ஆஸ்தி எடுக்கிறீர்கள், ஸ்ரீமத்படி நடக்கிறீர்கள், ஸ்ரீமத் என்பதே பாப்தாதாவின் வழி. அவர்கள் அல்லாமல் ஸ்ரீமத் எங்கிருந்து கிடைக்கும்! அந்த கலை வேறு யாரிடமாவது உள்ளதா என சிந்தித்துப் பாருங்கள் என தந்தை சொல்கிறார். யாரிடமும் கிடையாது. எவரையேனும் உலகின் எஜமானாக ஆக்குவதற்கான யுக்தியை தந்தைதான் கூறுகிறார். இதனைத் தவிர வேறு எந்த உபாயமும் கிடையாது என சொல்கிறார், தூய்மையற்றவர்களை தூய்மைப்படுத்தும் தந்தைதான் உயர் பதவியடைவதற்கான ஞானத்தைக் கொடுக்கிறார். சிருஷ்டி சக்கரத்தைத் தெரிந்து கொள்வதன் மூலமே நீங்கள் தூய்மையடைந்து விடுவீர்கள் என்பது கிடையாது. என்னை நினைவு செய்யுங்கள் என தந்தை சொல்கிறார். இந்த யோக அக்னியின் மூலம் பாவத்தால் நிரம்பிய உங்களுடைய குடம் காலியாகும் என தந்தை சொல்கிறார்.நீங்கள்தான் 84 பிறவிகள் எடுத்து எடுத்து மிகவும் தூய்மையற்றவர்களாக ஆகியுள்ளீர்கள் என தந்தை சொல்கிறார். இன்றைய நாட்களில் பிறகு தன்னையே சிவோஹம் (நானே சிவன்) ததத்வம் என சொல்லி விடுகின்றனர், அல்லது நீங்கள் பரமாத்மாவின் ரூபமாக இருக்கிறீர்கள், ஆத்மாவே பரமாத்மா என சொல்கின்றனர். இப்போது தந்தை வந்திருக்கிறார், சிவபாபாவின் நினைவைக் கொடுக்க வேண்டியுள்ளது என நீங்கள் அறிவீர்கள். அனைவருக்கும் சத்கதி வழங்கும் வள்ளல் ஒரு பரமபிதா பரமாத்மாதான் ஆவார். சிவனின் கோவில்கள் தனியாக உருவாகின்றன, சங்கரனின் ரூபமே வேறு. கண்காட்சியிலும் காட்ட வேண்டும். சிவன் நிராகாரர் (உடலற்றவர்), சங்கரன் ஆகார (ஒளி உடல்) ரூபமானவர். கிருஷ்ணர் பிறகு சாகாரத்தில் (ஸ்தூலத்தில்) இருப்பவர். உடன் ராதையைக் காட்டுவது சரியாக இருக்கும். அப்போது இவர்கள்தான் பிறகு லட்சுமி-நாராயணர் ஆகின்றனர் என்பது உறுதிப்படும். கிருஷ்ணர் துவாபரத்தில் கீதை சொல்ல வருவதே இல்லை. கலியுகத்தின் கடைசியில் தூய்மையற்றவர் இருக்கின்றனர், சத்யுகத்தில் தூய்மையானவர்கள் இருப்பார்கள். ஆக கண்டிப்பாக சங்கமயுகத்தில் வருவார். இதனை தந்தைதான் அறிவார், அவர்தான் திரிகாலதரிசி ஆவார். கிருஷ்ணர் திரிகாலதரிசி என சொல்லப்படுவதில்லை. அவர் மூன்று காலத்தின் ஞானத்தை சொல்ல முடியாது. அவருக்கு சிருஷ்டியின் முதல், இடை, கடைசியின் ஞானம் கிடையாது. அவர் சிறு குழந்தை, தெய்வீக இளவரசர்-இளவரசிகளின் கல்லூரியில் படிக்கச் செல்வார். முன்னர் இங்கும் கூட இளவரசர்- இளவரசிகளுக்கான கல்லூரிகள் இருந்தன, இப்போது அனைத்தும் ஒன்றாகி விட்டது. கிருஷ்ணர் இளவரசராக இருந்தார், இன்னும் இளவரசர், இளவரசியர் இருப்பர். ஒன்றாக படிப்பவர்களாக இருப்பார்கள். அங்கிருப்பதே நிராகார உலகமாகும். ஒரு சிவபாபாதான் அனைவருக்கும் சத்கதி வழங்கும் வள்ளல் ஆவார். அனைவருக்கும் சத்கதி வழங்கும் வள்ளலாக மனிதர்கள் ஆக முடியாது. தந்தைதான் வந்து அனைவருக்கும் முக்தி-ஜீவன்முக்தி கொடுக்கிறார். தேவதைகளின் இராஜ்யத்தில் வேறு எந்த தர்மமும் இருக்கவில்லை என்பதும் புரிய வைக்கப்படுகிறது. மற்ற தர்மத்தவர்கள் பாதியில்தான் வந்தனர் எனும்போது சத்யுகத்தில் எப்படி இருக்க முடியும். அவர்கள் ஹடயோகிகளே ஆவர், துறவற மார்க்கத்தவர்கள். அவர்கள் இராஜயோகத்தைப் புரிந்து கொள்ள முடியாது. இந்த இராஜயோகம் இல்லற மார்க்கத்தவர்களுக்கானது ஆகும். பாரதம் தூய்மையான இல்லற மார்க்கத்தில் இருந்தது, இப்போது கலியுகத்தில் தூய்மையற்ற இல்லறவாசி களாக ஆகி விட்டனர். பகவானுடைய மகா வாக்கியம் - என்னை மட்டும் நினைவு செய்யுங்கள். பழைய உலகம் அல்லது தேகத்தின் சம்மந்தங்களின் மீது மனதை ஈடுபடுத்தினால் அதிர்ஷ்டம் கெட்டு விடும். பலரின் அதிர்ஷ்டம் கெட்டு விடுகிறது. ஏதாவது தவறான காரியம் செய்தால் அது இறுதிக் காலத்தில் முன்னால் வரும், காட்சி தெரியும். பல குழந்தைகள் மிகவும் மூடி மறைக்கின்றனர், இந்த பிறவியில் செய்த பாவ கர்மங்கள் குறித்து தந்தைக்குத் தெரிவித்தால் பாதி தண்டனை குறைந்து விடும், ஆனால் வெட்கப்பட்டுக் கொண்டு சொல்வதில்லை. அழுக்கான வேலைகள் நிறைய செய்கின்றனர். புத்தியில் நினைவு இருக்கும், தெரியப்படுத்துவதன் மூலம் விடுபட்டு விடும். நான் அழிவற்ற சர்ஜன் ஆவேன். வியாதியை வெட்கப்பட்டுக் கொண்டு சர்ஜனுக்கு தெரியப்படுத்தாவிட்டால் எப்படி விடுபடும்? எந்த பாவ கர்மங்கள் செய்திருந்தாலும் அதனை தெரியப்படுத்தினால் பாதி மன்னிப்பு கிடைத்து விடும். தெரியப்படுத்தாவிட்டால் அது வளர்ந்து கொண்டே போகும். அதிகமாக சிக்கலில் மாட்டிக் கொள்வார்கள். பிறகு அதிர்ஷ்டம் அழிந்து துரதிர்ஷ்டம் வந்து விடும். தந்தை சொல்கிறார் - தேகத்தின் மீதும் சம்மந்தம் வைக்காதீர்கள், எப்போதும் என்னை மட்டுமே நினைவு செய்து கொண்டிருங்கள், பிறகு எந்த அழுக்கான காரியமும் நடக்காது. இவர் தர்மராஜாவாகவும் இருக்கிறார், அவரிடம் கூட மறைத்தபடி இருந்தீர்கள் என்றால் உங்களை விட அதிக தண்டனை வேறு யாருக்கும் கிடைக்காது. எந்த அளவு நேரம் நெருங்கிக் கொண்டிருக்குமோ அந்த அளவு அனைவருக்கும் காட்சிகள் தெரிந்தபடி இருக்கும். இப்போது அனைவரின் கடைசிக் காலமாகும், அனைவரும் தூய்மையற்றவராக இருக்கின்றனர். பாவங்களுக்கு தண்டனை கண்டிப்பாக கிடைக்கும். எப்படி ஒரு வினாடியில் ஜீவன்முக்தி கிடைக்கிறதோ அப்படி ஒரு வினாடியில் தண்டனைகளின் உணர்வு பல காலங்களாக அனுபவித்தபடி இருப்பது போல இருக்கும். இது மிகவும் சூட்சுமமான இயந்திரம் ஆகும். அனைவருக்கும் கடைசிக் காலமாகும். கண்டிப்பாக தண்டனையை அனுபவிக்க வேண்டியிருக்கும். பிறகு அனைத்து ஆத்மாக்களும் தூய்மையடைந்து செல்வார்கள். தந்தைதான் வந்து தூய்மையற்ற ஆத்மாக்களை தூய்மையானவர்களாக ஆக்குகிறார். தந்தையைத் தவிர வேறு யாருக்கும் சக்தி இல்லை. 63 பிறவிகள் பாவங்கள் செய்தபடி வந்து உங்களுடைய பாவக்குடம் நிரம்பி விட்டுள்ளது. அனைவரையும் மாயையின் கிரகணம் பிடித்துக் கொண்டுள்ளது. பெரிய கிரகணம் உங்களின் மீது பிடித்துள்ளது. நீங்கள் அனைத்து குணங்களிலும் நிறைந்திருந்தீர்கள், பிறகு உங்கள் மீது கிரகணம் பிடித்தது, ஞானமும் இப்போது குழந்தைகளாகிய உங்களுக்கு கிடைத்துள்ளது. தந்தை சொல்கிறார் – நீங்கள் பாரதத்தின் எஜமானாக இருந்தீர்கள், பிறகு 84 பிறவிகள் நீங்கள் அனுபவித்தீர்கள். நீங்கள் தேவி தேவதா தர்மத்தினராக இருந்தீர்கள் பிறகு தூய்மையற்றவர்களாக ஆனதால் இந்துக்கள் என சொல்லிக் கொண்டீர்கள். இந்து தர்மம் என்ற ஒன்றை யாரும் ஸ்தாபனை செய்யவே இல்லை. மடாலயங்களை இராஜ்யம் என சொல்வதில்லை, இராஜ்யம் ராஜாக்களுடையதாகும். முதலாம் லட்சுமி நாராயணர், இரண்டாம் லட்சுமி நாராயணர், மூன்றாம். . . இப்படியாக இராஜ்யம் நடக்கிறது. தூய்மையாயிருந்து தூய்மையற்றவராக ஆவதும் கூட கண்டிப்பாக ஆகவே வேண்டும். தூய்மையற்றவராக ஆனதால் தேவி தேவதை என சொல்லிக் கொள்ள முடியாது. பூஜைக்குரியவர்களான நாம் ஆதி சனாதன தேவி தேவதா தர்மத்தவர்களாக இருந்தோம் என நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். தனது தர்மத்தவர்களின் படங்களுக்கே பூஜை செய்கின்றனர். நாம்தான் பூஜைக்குரிய தேவி தேவதைகளாக இருந்தோம், இப்போது பூஜாரிகளாகி இருக்கிறோம் என்பதை மட்டும் மறந்து விட்டார்கள். இப்போது நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள் - தந்தை ஆஸ்தி கொடுத்தார், பிறகு தூய்மையற்றவர்களாக ஆகினோம், அப்போது தன்னுடைய நினைவு சின்னமாகிய சித்திரங்களுக்கே அமர்ந்து பூஜை செய்கிறோம். நீங்களேதான் பூஜைக்குரியவர்கள், நீங்களேதான் பூஜாரிகள். பாரதத்தைத் தவிர வேறு எதற்கும் இப்படி சொல்ல மாட்டோம். பாபாவும் கூட பாரதத்தில்தான் வந்து ஞானம் கொடுக்கிறார், மீண்டும் தேவதைகளாக ஆக்குவதற்காக. மற்ற அனைவரும் கணக்கு வழக்கு முடித்துக் கொண்டு திரும்பிச் சென்று விடுவார்கள். ஆத்மாக்கள் அனைவரும் தந்தையை கூக்குரலிட்டு அழைக்கின்றனர் - ஓ இறைத் தந்தையே. இதுவும் கூட புரிந்து கொள்ள வேண்டிய விஷயமாகும். இந்த சமயம் உங்களுக்கு 3 தந்தையர் உள்ளனர். முதலாமவர் சிவபாபா, இரண்டாமவர் - லௌகிக தந்தை, மற்றும் இந்த அலௌகிக தந்தை பிரஜாபிதா பிரம்மா. மற்ற அனைவருக்கும் இரண்டு தந்தையர் உள்ளனர். லௌகிக மற்றும் பரலௌகிக தந்தையர். சத்யுகத்தில் ஒரே ஒரு லௌகிக தந்தை இருப்பார். பரலௌகிக தந்தையைத் தெரியவே தெரியாது. அங்கே இருப்பதே சுகம் மட்டுமேயாகும், பிறகு பரலௌகிக தந்தையை எதற்கு நினைவு செய்வார்கள். துக்கத்தில் அனைவரும் நினைக்கின்றனர், இங்கே பிறகு உங்களுக்கு 3 தந்தையர் ஆகி விடுகின்றனர். இதுவும் புரிந்து கொள்ள வேண்டிய விசயமாகும். அங்கே ஆத்ம அபிமானிகளாக இருக்கின்றனர், பிறகு தேக அபிமானத்தில் வந்து விடுகின்றனர். இங்கே நீங்கள் ஆத்ம அபிமானிகளாகவும் இருக்கிறீர்கள், பரமாத்ம அபிமானியாகவும் இருக்கிறீர்கள். நாம் அனைவரும் தந்தையின் குழந்தைகள், அவரிடமிருந்து ஆஸ்தியை எடுத்துக் கொண்டிருக்கிறோம் என்ற சுத்த அபிமானம் உள்ளது. அவர் தந்தை, ஆசிரியர் மற்றும் சத்குரு ஆவார். அவருடைய இந்த மகிமைகளையும் கூட புரிய வைக்க வேண்டும். அவர்தான் வந்து அனைத்து குழந்தைகளுக்கும் ஆஸ்தி கொடுக்கிறார். சத்யுகத்தில் இருந்தது, பிறகு 84 பிறவிகள் எடுத்து இழந்தீர்கள். இப்போது இதனை புரிய வைப்பது எவ்வளவு சகஜமானது. தந்தை பதித பாவனர், அனைவருக்கும் சத்கதி வழங்கும் வள்ளல் என சொல்லப்படுகிறார். இந்த உலகமே தூய்மையற்றவர்களின் உலகமாகும். யாரால் சத்கதி கொடுக்க முடியும். மற்றபடி அதிகமாக சாஸ்திரங்கள் படித்தவர்களாக இருந்தால் இறுதி நிலைக்குத் தகுந்த கதி ஏற்படுகிறது, பிறகு (அடுத்த பிறவியில்) சிறு வயதிலேயே மனப்பாடம் ஆகி விடுகிறது. ஆக, தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு எவ்வளவு நல்ல இனிமையிலும் இனிமையான விஷயங்களை சொல்கிறார். குழந்தைகளே, நீங்கள் தமோபிரதானமாகி விட்டீர்கள். இப்போது மீண்டும் தந்தையை நினைவு செய்தீர்கள் என்றால் துரு நீங்கும். இப்போது நாடகம் முடிகிறது, அனைவரும் வந்தாக வேண்டும். கிறிஸ்து முதலான அனைத்து ஆத்மாக்களும் (உலகில்) ஆஜராகி உள்ளனர். அவர்களும் தந்தையிடம் தலை வணங்கி மரியாதை செலுத்த வருவார்கள். ஆனால் சக்கரவர்த்தி ராஜாவாக ஆக முடியாது, தந்தையை நினைவு மட்டும் செய்வார்கள், மன்மனாபவ எனும் மந்திரத்தை மட்டும் எடுத்துச் செல்வார்கள். உங்களுடையது மன்மனாபவ மற்றும் மத்யாஜீபவ என்ற இரட்டை மந்திரங்களாகும். தந்தை எவ்வளவு நல்ல யுக்தியை கூறுகிறார். நல்லது!இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.தாரணைக்கான முக்கிய சாரம்

1. இந்த பழைய உலகில் இருந்து கொண்டே முயற்சி செய்து அனைத்து குணங்களிலும் நிறைந்தவராக கண்டிப்பாக ஆக வேண்டும். இந்த பழைய சரீரம் மற்றும் பழைய உலகத்தின் மீது மனதை ஈடுபடுத்தக் கூடாது. அதிர்ஷ்டசாலியாக ஆக வேண்டும்.2. ஆத்ம அபிமானியாகவும் பரமாத்ம அபிமானியாகவும் ஆகி இருக்க வேண்டும். இந்த கடைசி காலத்தில் தந்தையிடம் எதையும் மறைக்கக் கூடாது. அழிவற்ற சர்ஜனிடம் வழிகளை கேட்டுப் பெற்று அதன்படி நடக்க வேண்டும்.வரதானம் :

வியப்பூட்டும் (ஆச்சரியமளிக்கும்) காட்சியைப் பார்த்தபடி இருப்பினும் மலையை கடுகாக ஆக்கக் கூடிய சாட்சி பார்வையாளர் ஆகுக.அனைத்தும் நிறைந்தவராக ஆவதற்காக பலவிதமான எதிர்பாராத, ஆச்சரியப்பட வைக்கக் கூடிய காட்சிகளை எதிரில் வரும், ஆனால் அந்த காட்சிகள் சாட்சி பார்வையாளராக ஆக்க வேண்டுமே ஒழிய அசைந்து விடக் கூடாது. சாட்சி பார்வையாளர் என்ற நிலையின் ஆசனத்தில் அமர்ந்து பார்ப்பதன் மூலமும், தீர்மானங்கள் செய்வதன் மூலமும் மிகவும் மகிழ்ச்சி ஏற்படும். பயமாக இருக்காது. பல முறை பார்த்த காட்சியை மீண்டும் பார்த்துக் கொண்டிருப்பது போல் தோன்றும். அவர்கள் இரகசியங்களை அறிந்து, யோக யுக்தமாக ஆகி வாயு மண்டலத்தை டபுள் லைட்டாக ஆக்குவார்கள். அவர்களுக்கு மலை போன்ற சோதனை கூட கடுகு போல் அனுபவம் ஆகும்.சுலோகன் :

சூழ்நிலைகளால் ஈர்க்கப்படுவதற்குப் பதிலாக அவைகளை சாட்சியாகி விளையாட்டின் ரூபத்தில் பாருங்கள்.***OM SHANTI***

Whatsapp Button works on Mobile Device only