14 May 2016

BK Murli 15 May 2016 Tamil

BK Murli 15 May 2016 Tamil

15.05.2016  காலை முரளி   ஓம் சாந்தி  ''அவ்யக்த பாப்தாதா''  ரிவைஸ் 13.04.1981  மதுபன்


'' ஆன்மீக ரோஜாவின் விசேஷம் ''இன்று தோட்டத்து உரிமையாளர் தன்னுடைய ஆன்மீக ரோஜா குழந்தைகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். நாலாபுறங்களிலும் உள்ள ஆன்மீக ரோஜா குழந்தைகள் பாப்தாதாவின் எதிரில் இருக்கிறார்கள். ஸ்தூலமாக எங்கே அமர்ந்திருந்தாலும் (இன்று பாதி சகோதர சகோதரிகள் கீழே சிறிய ஹாலில் அமர்ந்து முரளி கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்) ஆனால் பாப்தாதா அவர்களையும் தன்னுடைய கண்களின் எதிரிலே தான் பார்த்துக் கொண்டிருக்கிறார். இப்பொழுது கூட பாப்தாதா குழந்தைகளின் எண்ணங்களை கேட்டுக் கொண்டிருக்கிறார். அனைவரும் நேரெதிரில் அமர்ந்து முரளி கேட்க விரும்புகிறார்கள். ஆனால் கீழே அமர்ந்திருந்தபோதிலும் குழந்தைகளை பாப்தாதா நேரெதிரில் பார்த்துக் கொண்டிருக்கிறார். ஒவ்வொரு ஆன்மீக ரோஜாவின் நறுமணம் பாப்தாதாவிடம் வந்து கொண்டிருக்கிறது. அனைவரும் வரிசைக்கிரமமாகவோ இருக்கிறார்கள். ஆனால் இந்த நேரம் அனைவரும் ஒரு தந்தையைத் தவிர வேறு யாரும் இல்லை என்ற இதே ஆன்மீக நறுமணத்தில் நம்பர் ஒன் நிலையில் இருக்கிறார்கள். எனவே ஆன்மீக நறுமணம் வதனம் வரையிலும் வந்து சேர்ந்து கொண்டிருக்கிறது. ஆன்மீக நறுமணத்தின் விசேஷங்களை தெரிந்திருக்கிறீர்களா. (பாபாவின் உறைவிடம்) எதன் ஆதாரத்தில் ஆன்மீக நறுமணம் நிரந்தரமாக ஒரே சீராக மற்றும் வெகு தொலை தூரம் வரை பரவுகிறது. அதாவது பிரபாவத்தை ஏற்படுத்துகிறது? இதற்கான மூல ஆதாரம் ஆன்மீக உள்உணர்வு. எப்பொழுதுமே ஆத்மா, ஆத்மாவைப் பார்த்துக் கொண்டிருக்கிறது, ஆத்மாவுடன் பேசிக்கொண்டிருக்கிறது என்பது உள் உணர்வில் இருக்க வேண்டும். ஆத்மா தான் தனித்தனியான தன்னுடைய பங்கை செய்து கொண்டிருக்கிறது. நான் ஆத்மா எப்பொழுதும் பரமாத்மாவின் குடை நிழலில் இருந்து கொண்டிருக்கிறேன். நான் ஆத்மா, என்னுடைய ஒவ்வொரு எண்ணமும் பரமாத்மாவின் ஸ்ரீமத்திற்குப் புறம்பாக இருக்க முடியாது. ஆத்மா என்னை செய்விப்பவர் மேலான (சுப்ரீம்) பரமாத்மா ஆவார். செய்விப்பவரின் ஆதாரத்தில் நான் கருவி, செய்பவன். நான் செய்பவன் மற்றும் அவர் செய்விப்பவர். அவர் என்னை நடத்திக் கொண்டிருக்கிறார், நான் நடந்து கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு கட்டளையின் போதும் ஆத்மா எனக்காக எண்ணம், சொல் மற்றும் செயலில் எப்பொழுதும் எஜமானன் பாபா ஆஜராக இருக்கிறார். எனவே எஜமானரின் எதிரில் எப்பொழுதும் ஆத்மா நான் ''சரி எஜமானே'' என்று இருக்கிறேன். எப்பொழுதும் ஆத்மா மற்றும் பரமாத்மாவுடன் இணைந்திருக்கிறேன். பரமாத்மா ஆத்மா நான் இன்றி இருக்க முடியாது. மேலும் நானும் பரமாத்மா இன்றி தனியாக இருக்க முடியாது. அந்த மாதிரி ஒவ்வொரு விநாடியும் எஜமானரின் கூடவே இருப்பதை அனுபவம் செய்பவர்கள் எப்பொழுதும் ஆன்மீக நறுமணத்தில் அழியாதவர்களாக மற்றும் ஒரே சீரான நிலையில் இருப்பார்கள். இது தான் மணம் நிறைந்த ஆன்மீக ரோஜாவின் நம்பர் ஒன் விசேஷம் ஆகும்.அந்த மாதிரியானவரின் பார்வையிலும் எப்பொழுதும் பரமாத்மா நிரம்பியிருப்பவராக இருப்பார். அவர் தந்தையின் பார்வையிலும் தந்தை அவருடைய பார்வையிலும் நிரம்பியிருப்பவராக இருப்பார்கள். அந்த மாதிரி ஆன்மீக ரோஜாவிற்கு உடல் மற்றும் உடலின் உலகம் மற்றும் பழைய உடலின் உலகத்தின் பொருட்கள், நபர்களைப் பார்த்துக் கொண்டிருந்தாலும் இவர்களுக்குத் தென்படாதவர்களாக இருப்பார்கள். உடல் மூலமாக பேசிக்கொண்டிருக்கிறேன், ஆனால் ஆத்மாவைப் பார்க்கிறேன், ஆத்மாவுடன் பேசுகிறேன். ஏனென்றால் அவருடைய கண்களின் உலகத்தில் எப்பொழுதும் ஆன்மீக உலகம், பரிஷ்தாக்களின் உலகம், தேவதைகளின் உலகம் இருக்கிறது. எப்பொழுதும் ஆன்மீக சேவையில் இருப்பார்கள். பகலானாலும் இரவானாலும், அவர்களை பொருத்தளவில் எப்பொழுதும் ஆன்மீக சேவை. அந்த மாதிரி ஆன்மீக ரோஜாக்களிடம் அனைத்து ஆத்மாக்களும் தன்னைப் போன்று ஆஸ்திக்கு உரியவர்களாகிவிட வேண்டும் என்ற ஆன்மீக பாவனை எப்பொழுதும் இருக்கிறது. மற்றவர்கள் / மற்றதின் வசமான ஆத்மாக்களுக்கு தந்தை மூலமாக பிராப்தியாகி யிருக்கும் சக்திகளின் சகயோகம் கொடுத்து அவர்களுக்கும் அனுபவம் செய்விக்க வேண்டும். யாருடைய பலஹீனங்களையும் மற்றும் குறைகளையும் பார்க்க மாட்டார்கள். தன்னால் தாரணை செய்யப்பட்ட குணங்களின், சக்திகளின் சகயோகம் கொடுக்கும் வள்ளலாக ஆவார்கள். பிராமண பரிவாரத்தைப் பொருத்தளவில் சகயோகி, மற்ற ஆத்மாக்களுக்காக மகாதானி. இவர் இந்த மாதிரியானவர் என்ற இந்த பாவனையின்றி இவரையும் தந்தைக்குச் சமமாக ஆக்க வேண்டும் என்ற சுபபாவனை இருக்கும். கூடவே இது தான் உயர்ந்த விருப்பமும் ஆகும். இந்த அனைத்து ஒன்றுமில்லாத, துக்கமான, அமைதியில்லாத ஆத்மாக்கள் எப்பொழுதும் அமைதியான சுக ரூபமான, அனைத்தும் நிறைந்தவராக ஆகி விட வேண்டும். அவருடைய மனதில் எப்பொழுதுமே உலக மாற்றம் மிக விரைவில் எப்படி ஏற்படும் என்ற எண்ணம் தான் இடைவிடாது ஓடிக்கொண்டிருக்கும். இவரைத் தான் ஆன்மீக ரோஜா என்று கூறுவது.இன்று மகாராஷ்ட்ராவைச் சேர்ந்தவர்களின் சேவைக்கான வாய்ப்பு ஆகும். மகாராஷ்ட்ராவைச் சேர்ந்தவர்கள் எப்பொழுதும் ஒரு மகா வார்த்தையை நினைவு வைத்தார்கள் என்றால், அனைவரும் மகான் அதாவது நம்பர் ஒன் ஆகிவிடுவார்கள். மகாராஷ்ட்ராவைச் சேர்ந்தவர்களின் லட்சியமாக என்ன இருக்கிறது? மகான் ஆக வேண்டும். தன்னையும் மகான் ஆக்க வேண்டும், உலகையும் மகான் ஆக்க வேண்டும். இது தான் எப்பொழுதும் நினைவில் இருக்கிறது தான் இல்லையா?மேலும் கர்நாடகத்தைச் சேர்ந்தவர்கள் எப்பொழுதும் நாடகத்தில் கதாநாயகனின் பங்கேற்றுச் செய்பவர்கள். ஆவதும் கதாநாயகன், ஆக்குவதும் கூட கதாநாயகனாகத்தான். ஆந்திரா என்றால் இருளை அகற்றுபவர்கள். அனைத்து விதமான இருளையும் அகற்றுபவர்கள். ஆந்திராவில் ஏழ்மையின் இருளும் அதிகம் இருக்கிறது. அப்படி ஏழ்மையை அகற்றி அனைவரையும் நிரம்பியவர்கள் ஆக்க வேண்டும். அப்படி ஆந்திராவைச் சேர்ந்தவர்கள் உலகில் எப்பொழுதும் செல்வம் நிறைந்ததாக ஆக்குபவர்கள். உடலின் ஏழ்மையும் இல்லை, பணம் செல்வத்தின் ஏழ்மையும் இல்லை மற்றும் மனதின் சக்திகளின் ஏழ்மையும் இல்லை. உடல், மனம், செல்வம் மூன்று ஏழ்மையையும் அகற்றுபவர்கள். இந்த இருளை அகற்றி எப்பொழுதும் வெளிச்சத்தை கொண்டு வருபவர்கள். அப்படி ஆந்திராவைச் சேர்ந்தவர்கள் மாஸ்டர் ஞான சூரியன் ஆகிவிட்டார்கள். மதராஸ் (சென்னை) என்றால் எப்பொழுதும் ராஸில் (நடனத்தில்) மூழ்கியிருப்பவர்கள். சம்ஸ்காரத்தை இணைக்கும் நடனம் மேலும் குஷியின் நடனமும் இருக்கிறது. மேலும் பிறகு ஸ்தூலமாகவும் நடனம் செய்பவர்கள். மத என்றால் மூழ்கியிருப்பதையும் கூறுவது. சந்திப்பு என்றால் பெறுவது. அப்படி பெற்றுவிட்டீர்கள் இல்லையா? இறுதியிலோ கண்களின் சந்திப்பு வரை சென்றடைய வேண்டும். பாப்தாதாவை பொருத்தளவில் கீழே அமர்ந்திருப்பவர்கள் மற்றும் மேலே அமர்ந்திருப்பவர்கள் அனைவருமே முக்கியமானவர்கள் (வி.ஐ.பி)டீச்சர்களுடன் சந்திப்பு –

பாப்தாதா அனைத்து பொறுப்பிலிருப்பவர்களாக ஆகியிருக்கும் சேவாதாரிகளை எந்த ரூபத்தில் பார்க்க விரும்புகிறார்? இதை தெரிந்திருக்கிறீர்களா? பாப்தாதா அனைத்து சேவாதாரிகளையும் எப்பொழுதும் தனக்குச்சமமான, எப்படி தந்தை காரியம் செய்ய வேண்டும் என்ற காரணத்தினால் அவதரித்திருக்கிறார், அதே போல் ஒவ்வொரு சேவாதாரியும் சேவைக்காக அவதரித்திருக்கும் அவதாரமாக ஆகி விட வேண்டும். நாடகத்திட்டப்படி ஒரு அவதாரம் இந்த பூமியில் வருகிறார் என்றால் எவ்வளவு மாற்றம் செய்து விடுகிறார். அவரும் ஆத்ம சக்தி உள்ளவர். மேலும் இதுவோ இந்த அளவு பரமாத்மா சக்தி சொரூபமானவர்கள் நாலாபுறங்களிலும் அவதாரமாக அவதரித்து விட்டார்கள் என்றால் என்னவாகி விடும்? சுலபமாக மாற்றம் ஆகிவிடும். எப்படி தந்தை (பிரம்மாவின் உடலை) கடனாக எடுக்கிறார், பந்தனத்தில் வருவதில்லை, எப்பொழுது விரும்புகிறாரோ வருகிறார், எப்பொழுது விரும்புகிறாரோ சென்று விடுகிறார், முற்றிலும் பந்தனமற்ற நிலை. அதே போல் அனைத்து சேவாதாரி உடலின் சம்ஸ்காரங்களின், சுபாவத்தின் பந்தனங்களிலிருந்து விடுபட்டு எப்பொழுது விரும்புகிறார்களோ எப்படி விரும்புகிறார்களோ அந்த மாதிரி சம்ஸ்காரத்தைக் கடைப்பிடிக்க முடிய வேண்டும். எப்படி உடலை நடத்த விரும்புகிறீர்களோ அப்படி நடத்த முடியும். எப்படி சுபாவத்தை உருவாக்க விரும்புகிறீர்களோ அப்படி உருவாக்க முடிய வேண்டும். என்னுடைய சுபாவமே அந்த மாதிரி, நான் என்ன செய்வது என்று அப்படி இருக்கக்கூடாது. என்னுடைய சம்ஸ்காரம், என்னுடைய பந்தனம் என்று அந்த மாதிரி எதுவும் இல்லை. ஆனால் எப்படி தந்தை முற்றிலும் பந்தனமற்றவராக இருக்கிறார். அதே போல் பந்தனமற்றவராக இருக்க வேண்டும். சிலர் நாமோ பிறப்பு இறப்பின் சக்கரத்தின் காரணமாக உடலின் பந்தனத்தில் இருக்கிறோம் என்று நினைக்கிறார்கள், ஆனால் இது பந்தனமா என்ன? இப்பொழுதோ உடல் உங்களுடையதே இல்லை. பின்பு உங்களுடைய பந்தனம் என்று எங்கிருந்து வர முடியும். எப்பொழுது உடலில் இருந்து கொண்டே இறந்தவர் ஆகிவிட்டார் என்றால் உடல் யாருடையதாக ஆனது? உடல், மனம், பணம் மூன்றையும் அர்ப்பணம் செய்திருக்கிறீர்களா அல்லது இரண்டை மட்டும்தான் அர்ப்பணம் செய்திருக்கிறீர்கள், ஒன்றைச் செய்யவில்லையா? எப்பொழுது என்னுடைய உடலே இல்லை, என்னுடைய மனமே இல்லை என்கிறபோது பந்தனம் இருக்க முடியுமா? என்ன செய்வது பல ஜென்மங்களின் சம்ஸ்காரம். உடலின் கணக்கு வழக்கு என்ற வார்த்தைகள் கூட பலஹீனத்தின் வார்த்தைகள் ஆகும். ஆனால் இப்பொழுது பழைய ஜென்மத்தின் பழைய கணக்கு சங்கமயுகத்தில் முடிவடைந்தது. புதியது தொடங்கப்பட்டது. இப்பொழுது அந்த பக்கத்தின் பழைய பதிவேடு முடிவடைந்தது. புதியது தொடங்கப்பட்டிருக்கிறது. இப்பொழுது அந்தப் பக்கத்தின் பழைய பதிவேடு முடிவடைந்து விட்டதா அல்லது இது வரையிலும் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கிறதா? முடிக்கவில்லையா என்ன? பாப்தாதா என்ன பார்க்க விரும்புகிறார் என்று புரிந்து கொண்டீர்களா?இத்தனை அனைத்து அவதாரங்களும் வெளிப்பட்டு விட்டார்கள் என்றால் உலகத்தில் குழப்பம் ஏற்பட்டு விடும் இல்லையா? அவதாரம் என்றால் மேலே இருந்து வரக்கூடிய ஆத்மா. மூலவதனத்தின் நிலையில் நிலைத்திருந்து மேலே இருந்து கீழே வந்து விடுங்கள். கீழே இருந்து மேலே செல்லாதீர்கள். நீங்கள் இருப்பதே பரந்தாமநிவாசி, ஆத்மா சதோபிரதான ஆத்மா. தன்னுடைய ஆதி அனாதி சொரூபத்தில் இருங்கள். இறுதியின் நினைவில் இருக்காதீர்கள். அனாதி, ஆதி நிலையில் இருங்கள், பின்பு என்னவாகி விடும்? தானும் பந்தனமற்றவர், மேலும் யாருக்கு சேவை செய்வதற்கு பொறுப்பாளர் ஆகியிருக்கிறீர்களோ அவர்களும் பந்தனமற்றவர்களாக ஆகிவிடுவார்கள். இல்லையென்றால் அவர்களும் ஏதாவது பந்தனத்தில் கட்டப்பட்டு விடுகிறார்கள். சுயம் தன்னை அவதரித்து இருக்கும் ஆத்மா என்று புரிந்து காரியம் செய்யுங்கள். பின்பு மற்றவர்களும் உங்களைப் பின்பற்றி நடப்பார்கள். எப்படி சாகார பாபாவை பார்த்திருக்கிறீர்கள், என்ன நினைவு இருக்கிறது. தந்தையின் கூடவே நானும் கர்மாதீத் நிலையில் இருக்கிறேன் மேலும் தேவதை நிலையில் குழந்தைப் பருவத்தில் இருப்பேன். அனாதி, ஆதி ரூபம் எப்பொழுதும் நினைவில் இருக்கிறது என்றால் தந்தையைப் பின்பற்றி நடப்பது. டீச்சர்களுடன் திருப்தியாக இருக்கிறீர்களா என்று கேட்கவே அவசியம் இல்லை. டீச்சர்களிடம் கேட்பது என்றால் அவர்களை அவமதிப்பது. எனவே பாப்தாதா அவமதிக்கவோ முடியாது இல்லையா? தந்தைக்குச் சமமாக பொறுப்பிலிருப்பவராக இருக்கிறீர்கள். பொறுப்பிலிருப்பவரின் அர்த்தமே எப்பொழுதும் செய்பவர்-செய்விப்பவரின் நினைவு சொரூபத்தில் இருப்பது. இதே நினைவு சக்திசாலியான நினைவு ஆகும். செய்பவன் ஆனால் செய்பவர் செய்விப்பவரின் ஆதாரத்தில் செய்பவன். பொறுப்பாளர் ஆகியிருக்கிறேன், ஆனால் பொறுப்பாளராக ஆக்கியிருப்பவரை மறக்கக்கூடாது. நான் என்பது இருக்க வேண்டாம், எப்பொழுதும் பாப்தாதா தான் சொல்லில், மனதில், காரியத்தில் இருக்க வேண்டும். இந்தப் பாடத்தை உறுதியாக்குங்கள்.பார்ட்டிகளுடன் சந்திப்பு -

1) அமிர்தவேளையில் தொடங்கி இரவு வரையிலும் என்னென்ன உயர்ந்த வழிகளை தந்தை கூறியிருக்கிறாரோ அதே வழிப்படி முழு நாளின் நடவடிக்கைகளை செய்கிறீர்களா? எழுவது எப்படி, நடப்பது எப்படி, உணவு அருந்துவது எப்படி, காரிய விவகாரத்தை எப்படி செய்ய வேண்டும், இந்த அனைத்திற்குமாக உயர்ந்த வழி கிடைத்திருக்கிறது. அந்த உயர்ந்த வழிப்படி ஒவ்வொரு காரியமும் செய்கிறீர்களா?ஒவ்வொரு காரியத்தையும் செய்து கொண்டே தன்னுடைய மனநிலை உயர்ந்ததாக இருப்பதற்காக எந்தவொரு வார்த்தையை எப்பொழுதும் நினைவில் வைக்க வேண்டும் - டிரஸ்டி. ஒருவேளை காரியம் செய்து கொண்டிருக்கும்போது நான் ஒரு டிரஸ்டி என்ற நினைவு இருக்கிறது என்றால் மனநிலை உயர்ந்ததாக ஆகி விடும். ஏனென்றால் டிரஸ்டியாகி நடந்து கொள்வதினால் முழு சுமையும் தந்தை மேல் வந்து விடுகிறது, நீங்கள் எப்பொழுதும் டபுள் லைட் (சுமையற்றவராக) ஆகிவிடுகிறீர்கள். டபுள் லைட் ஆக இருக்கும் காரணத்தினால் மிக உயரமாக தாண்டுதல் செய்ய முடியும். ஒருவேளை குடும்பஸ்தன் என்று நினைத்தீர்கள் என்றால் வால் வந்து விடுகிறது. முழு சுமையும் உங்கள் மேல் வந்து விடுகிறது. சுமையுள்ளவர் உயரம் தாண்டுதல் செய்ய முடியாது. இன்னும் அதிகமாக மூச்சு வாங்கிக் கொண்டே இருப்பார். டிரஸ்டி என்று புரிந்து கொள்வதினால் மனநிலை எப்பொழுதும் உயர்ந்ததாக இருக்கும். எனவே எப்பொழுதும் டிரஸ்டியாகி இருக்க வேண்டும் என்ற உயர்ந்த வழியை நினைவில் வையுங்கள்.2) பாப்தாதா மூலமாக அனைத்து குழந்தைகளுக்கும் நம்பர் ஒன் ஸ்ரீமத்தாக என்ன கிடைத்திருக்கிறது? நம்பர் ஒன் ஸ்ரீமத் தன்னை ஆத்மா என்று புரிந்து கொள்ளுங்கள். மேலும் ஆத்மா என்று புரிந்து தந்தையை நினைவு செய்யுங்கள் என்பதாகும். ஆத்மா என்று புரிந்து கொள்வதினால் மட்டும் கூட தந்தையின் சக்தி கிடைக்காது. நினைவு நிலைத்திருக்காததற்கான காரணமே ஆத்மா என்று புரிந்து தந்தையை நினைவு செய்வதில்லை. ஆத்மாவிற்கு பதிலாக தன்னை சாதாரண உடலிலிருப்பவர் என்று நினைவு செய்கிறீர்கள் எனவே நினைவு நிலைத்திருப்பதில்லை. பொதுவாகவே எப்பொழுது இரண்டு பொருட்களை இணைக்கிறார்கள் என்றால் முதலில் அவை இரண்டையும் சமமானதாக ஆக்குவார்கள். அதே போலவே ஆத்மா என்று புரிந்து நினைவு செய்தீர்கள் என்றால் நினைவு சுலபமாகிவிடும். ஏனென்றால் சமமாக ஆகிவிட்டது இல்லையா? இந்த முதல் ஸ்ரீமத்தையே நடைமுறையில் எப்பொழுதும் கொண்டு வந்து கொண்டே இருங்கள். இது தான் முக்கியமான அஸ்திவாரம். ஒருவேளை அஸ்திவாரம் பலஹீனமாக இருக்கிறது என்றால் முன்னேறும் கலை இருக்க முடியாது. இந்த நேரம் முன்னேறும் கலையில் அடுத்த நேரம் கீழே வந்து விடுவார். ஓடு வீட்டிற்குக் கூட ஒருவேளை அஸ்திவாரம் உறுதியாக இல்லை என்றால் கட்டிய வீடு இடிந்து விழுந்து விடும். அதே போலவே ஒருவேளை அஸ்திவாரம் உறுதியாக இல்லை என்றால், மாயா கீழே விழ வைத்து விடும். எனவே அஸ்திவாரத்தை எப்பொழுதும் உறுதியானதாக ஆக்குங்கள். சுலபமான விஷயத்தின் மீதும் அடிக்கடி கவனம் இருக்க வேண்டும். ஒருவேளை கவனம் கொடுக்கவில்லை என்றால் சுலபமான விஷயமும் கடினமாகி விடும்.3) எப்பொழுதும் நானே தான் ஒவ்வொரு கல்பத்திலும் அதிகாரி ஆத்மாவாக இருக்கிறேன், நானே தான் இருந்தேன், நானே தான் இருக்கிறேன். மேலும் நானே தான் ஒவ்வொரு கல்பத்திலும் இருப்பேன் என்ற இந்த போதை இருக்கிறதா? சென்ற கல்பத்தின் காட்சிகள் நினைவில் அந்த மாதிரி தெளிவாக வருகிறதா? இன்று பிராமணனாக இருக்கிறேன் நாளை தேவதை ஆவேன், நானே தான் தேவதையாக இருந்தேன் என்ற இந்த போதை இருக்கிறதா? நான் தான் அது, அது தான் நான் ! என்ற இந்த மந்திரம் எப்பொழுதும் நினைவில் இருக்கிறதா? இந்த ஒரு போதையிலேயே இருந்தீர்கள் என்றால், எப்படி போதையில் அனைத்து விஷயங்களும் மறந்து விடுகிறது, உலகமே மறந்து விடுகிறது, அதே போல் இந்த போதையில் இருப்பதினால் இந்த பழைய உலகமே சுலபமாக மறந்து விடும். அந்த மாதிரி தன்னுடைய நிலையை அனுபவம் செய்கிறீர்களா? எனவே இன்று நான் பிராமணன் நாளை தேவதை ஆவேன் என்ற இந்த போதை எவ்வளவு நேரம் இருந்தது என்று எப்பொழுதும் சோதனை செய்யுங்கள். எப்பொழுது காரிய விவகாரத்தில் செல்கிறீர்கள் என்றாலும் இந்த போதை நிலைத்திருக்கிறதா அல்லது லேசாகி விடுகிறதா? யார் எப்படி இருப்பாரோ அவருக்கு அந்த நினைவு இருக்கும். எப்படி ஜனாதிபதி இருக்கிறார் என்றால் அவர் எந்தக் காரியத்தையும் செய்து கொண்டிருந்தாலும் தான் ஜனாதிபதி என்பதை மறப்பதில்லை. எனவே நீங்களும் எப்பொழுதும் உங்களுடைய பதவியை நினைவில் வையுங்கள். இதனால் எப்பொழுதும் குஷி இருக்கும், போதை இருக்கும். எப்பொழுதும் இந்த போதை ஏறி இருக்க வேண்டும். நானே தான் தேவதை ஆவேன், இப்பொழுது கூட பிராமணன் உச்சங்குடுமி நிலையில் இருக்கிறேன். பிராமணனோ தேவதைகளையும் விட உயர்ந்தவன். இந்த போதையை மாயா எவ்வளவு தான் முறிக்க முயற்சி செய்தாலும் முறிக்க முடியாது. மாயா எப்பொழுது வருகிறது என்றால், எப்பொழுது அவரை தனிமையாக்கி விடுகிறதோ அப்பொழுது வருகிறது. தந்தையிடமிருந்து பிரித்து விடுகிறது. கொள்ளையடிப்பவர் கள் கூட தனிமையாக்கி பிறகு தாக்குவார்கள் இல்லையா? எனவே எப்பொழுதும் இணைந்தவராக இருங்கள், ஒருபொழுதும் தனிமையாக ஆகக்கூடாது. நான் மற்றும் என்னுடைய பாபா என்ற இந்த நினைவில் இணைந்திருங்கள்.4) அனைவரும் தன்னை மகான் பாக்கியசாலி என்று நினைக்கிறீர்கள் தான் இல்லையா? பாருங்கள் வரதான பூமியில் வரதானங்களினால் பையை நிரப்புவதற்காக வந்து சேர்ந்து விட்டீர்கள் என்றால் இது எவ்வளவு பெரிய பாக்கியம். அந்த மாதிரி பாக்கியம் உலகத்தில் எத்தனை ஆத்மாக்களுக்கு இருக்கிறது? கோடியில் சிலருக்கு, அந்தச் சிலரிலும் சிலருக்கு. எனவே இதுவரை கோடியிலும் சிலர் மேலும் சிலரிலும் சில ஆத்மா என்று கேட்டே வந்தோம், வர்ணனையும் செய்து வந்தோம், அது நானே தான் என்ற இந்த குஷியை எப்பொழுதும் வையுங்கள். எவ்வளவு குஷி இருக்கிறது? எப்பொழுதும் இந்த குஷியிலேயே ஆஹா என்னுடைய பாக்கியமே என்று பாடிக்கொண்டும் ஆடிக்கொண்டும் இருங்கள். இந்தப் பாடலை பாடிக்கொண்டே இருங்கள், மேலும் இந்தப் பாடலின் கூடவே குஷியில் ஆடிக்கொண்டே இருங்கள். ஆஹா என்னுடைய பாக்கியமே ! மேலும் ஆஹா என்னுடைய பாபா ! என்ற இந்த பாடலை பாடத்தெரியும் இல்லையா? ஆஹா நாடகம் ஆஹா! என்ற இந்தப் பாடலையும் பாடிக்கொண்டே இருங்கள். நீங்கள் மிகுந்த அதிர்ஷ்டசாலிகள், தந்தையோ எப்பொழுதும் ஒவ்வொரு குழந்தையையும் அன்பான குழந்தை என்று தான் கூறுகிறார். அப்படி அன்பான குழந்தையாகவும் இருக்கிறீர்கள் என்றால் அதிர்ஷ்டமான குழந்தையாகவும் இருக்கிறீர்கள். ஒருபொழுதும் தன்னை சாதாரணமாக நினைக்காதீர்கள். நீங்கள் மிக உயர்ந்தவர்கள். பகவான் உங்களுடையவர் ஆகிவிட்டார் என்றால், வேறு என்ன வேண்டும்? எப்பொழுது விதையை தன்னுடையவராக ஆக்கிவிட்டீர்கள் என்றால் மரமோ வந்தே விட்டது தான் இல்லையா? எனவே எப்பொழுதும் இந்தக் குஷியிலேயே இருங்கள். உங்களுடைய குஷியைப் பார்த்து மற்றவர்களும் குஷியில் ஆடிக்கொண்டே இருப்பார்கள். நல்லது.வரதானம்:

தன்னுடைய சுயசொரூபம் மற்றும் சுயதேசத்தின் சுயகௌரவத்தில் நிலைத்திருக்கக்கூடிய மாஸ்டர் விடுவிப்பவர் ஆகுக.இன்றைய சூழ்நிலையில் ஒவ்வொரு ஆத்மாவும் ஏதாவது ஒரு விஷயத்தின் பந்தனத்தின் (கட்டுப்பாடு) வசமாகி இருக்கிறார். சிலர் உடலின் துக்கத்தின் வசமாகி இருக்கிறார், சிலர் உறவின், சிலர் விருப்பங்களின், சிலர் தன்னுடைய துக்கம் கொடுக்கும் சுபாவம் சம்ஸ்காரத்தின், சிலர் பிரபுவை அடைவது கிடைக்காத காரணத்தின், அழைப்பது, கதறுவது துக்கத்தின் வசமாகி இருக்கிறார்கள். அந்த மாதிரி துக்கம் மற்றும் அமைதியின்மையின் வசமான ஆத்மாக்கள் தன்னை விடுவிக்க விரும்புகிறார்கள் என்றால் அவர்களை துக்கம் நிறைந்த வாழ்க்கையிலிருந்து விடுவிப்பதற்காக தன்னுடைய சுயசொரூபம் மற்றும் சுயதேசத்தின் சுயகௌரவத்தில் நிலைத்திருந்து இரக்க மனமுடையவராகி மாஸ்டர் விடுவிப்பவர் ஆகுங்கள்.சுலோகன்:

எப்பொழுதும் ஆடாமல் அசையாமல் இருப்பதற்காக ஒரே சீரான நிலை என்ற ஆசனத்தில் அமர்ந்திருங்கள்.


***OM SHANTI***

Whatsapp Button works on Mobile Device only