09 June 2016

BK Murli 10 June 2016 Tamil

BK Murli 10 June 2016 Tamil

10.06.2016    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


இனிமையான குழந்தைகளே! நினைவின் மூலம் ஆத்மாவிலிருக்கும் அசுத்தங்களை நீக்கிக் கொண்டே செல்லுங்கள், ஆத்மா முற்றிலும் தூய்மை ஆகும் பொழுது தான் வீட்டிற்குச் செல்ல முடியும்.கேள்வி:

இந்த கடைசிப் பிறவியில் தந்தையின் எந்த கட்டளையை கடைபிடிப்பதில் தான் குழந்தை களுக்கு நன்மை இருக்கிறது?பதில்:

பாபா கூறுகின்றார் - இனிய குழந்தைகளே! இந்த கடைசிப் பிறவியில் தந்தையிடமிருந்து முழு ஆஸ்தியை எடுத்துக் கொள்ளுங்கள். புத்தியை வெளியில் அலைய விடாதீர்கள், விஷத்தை விடுத்து அமிர்தம் பருகுங்கள். இந்த கடைசிப் பிறவியிலேயே நீங்கள் 63 பிறவிகளின் பழக்கங்களை அழிக்க வேண்டும், ஆகையால் இரவு பகல் முயற்சி செய்து ஆத்ம அபிமானியாக ஆகுங்கள்.ஓம்சாந்தி.

சாந்தி தாமம் ஓய்வெடுக்கும் இடமாகும். இந்த உலகில் அனைவரும் களைப்படைந்து இருக்கின்றனர். நாம் நமது சுகதாமத்திற்குச் செல்ல வேண்டும் என்று விரும்புகின்றனர். இவ்வுலகை விரும்புவது கிடையாது. சொர்க்கத்தைப் பார்க்கின்ற பொழுது நரகத்தில் உள்ளம் எப்படி ஈடுபடும்! பாபா, சீக்கிரம் செய்யுங்கள், இந்த துக்கதாமத்திலிருந்து அழைத்துச் செல்லுங்கள் என்று கூறுகின்றனர். இது சீ சீ உலகமாகும், இதன் பெயரே அசுர உலகமாகும், நரகமாகும் என்று தந்தையும் கூட புரிய வைக்கின்றார். இது நல்ல வார்த்தையா என்ன? தெய்வீக உலகம் எப்படி இருக்கிறது! அசுர உலகம் எப்படி இருக்கிறது! இந்த அசுர உலகில் அனைவரும் களைப்படைந்து விட்டனர். ஆனால் யாரும் திரும்பிச் செல்ல முடியாது. தமோ பிரதானத்தின் கறை படிந்திருக்கிறது. அந்த கறை ஆத்மாவிலிருந்து நீங்க வேண்டும், அதற்கான முயற்சி செய்து கொண்டிருக்கிறீர்கள். யார் நல்ல முயற்சியாளர்களோ அவர்களது மனநிலை கடைசியில் நல்லதாக ஆகிவிடும். இந்த பழைய உலகம் அழிந்து விடும், இப்போது பாக்கி சிறிது காலம் தான் இருக்கிறது. எதுவரை தந்தை வந்து திரும்பி அழைத்துச் செல்லவில்லையோ அதுவரை யாரும் திரும்பிச் செல்ல முடியாது. உலகில் துக்கம் இருக்கிறது அல்லவா! வீட்டிலும் ஏதாவது துக்கம் இருக்கவே செய்கிறது. பாபா இப்போது நம்மை துக்கத்திலி ருந்து விடுவிக்க வந்திருக்கிறார் என்பது குழந்தைகளாகிய உங்களது உள்ளத்தில் இருக்கிறது. யார் நல்ல நிச்சயபுத்தி உடையவர்களோ அவர்கள் தந்தையின் நினைவை ஒருபொழுதும் மறக்க மாட்டார்கள். அனைவரின் துக்கத்தையும் நீக்கக் கூடியவர் என்று அவர் கூறப்படுகின்றார். குழந்தைகள் தான் அறிந்து கொள்கின்றனர். ஒருவேளை அனைவரும் அறிந்து கொண்டால் பிறகு இவ்வளவு மனிதர்கள் எங்கு வந்து அமர்வார்கள்? இவ்வாறு நடக்கவே முடியாது, ஆகையால் யார் ஸ்ரீமத் படி நடக்கிறார்களோ அவர்கள் தான் உயர்ந்த பதவி அடைய முடியும், நாடகத்தில் இப்படி ஒரு யுக்தி படைக்கப்பட்டிருக்கிறது. இது தான் சரியான முறையாகும். தண்டனை அடைந்தும் கூட சாந்திதாமம் அதாவது தூய உலகிற்குச் செல்வார்கள். ஆனால் உயர்ந்த பதவி அடைவதற்கு முயற்சி செய்ய வேண்டியிருக்கும் அல்லவா! மற்றொன்று, தூய்மை ஆகாமல் யாரும் தூய்மையான உலகிற்குச் செல்ல முடியாது. இன்னாரின் ஜோதி ஜோதியுடன் கலந்து விட்டது, திரும்பிச் சென்று விட்டது என்று கூறுவது நடக்காத காரியமாகும். யார் முதன் முதலில் சிருஷ்டிக்கு வந்தார்களோ, லெட்சுமி நாராயணன், அவர்களே இடையில் திரும்பிச் செல்ல முடியாது எனில் மற்றவர்கள் எப்படி செல்ல முடியும்? இவர்களும் இப்போது 84 பிறவிகள் முடித்து விட்டனர். இப்போது திரும்பிச் செல்வதற்கு தபஸ்யா செய்து கொண்டிருக்கின்றனர். அனைவரும் ஒரே ஒரு தந்தையைத் தான் அழைக்கின்றனர். ஓ பரம்பிதா, ஓ விடுவிப்பவரே! என்று அந்த பரம்பிதா தான் துக்கத்தை நீக்கி சுகம் கொடுப்பவர் ஆவார். கிருஷ்ணர் போன்ற யாரையும் அழைப்பது கிடையாது. கிறிஸ்தவர்களாக இருந்தாலும், முஸ்லீம்களாக இருந்தாலும் அனைவரும் ஓ பரம்பிதா என்று கூறி அழைக்கின்றனர். ஆத்மா தனது தந்தையை அழைக்கிறது. எப்போது தன்னை ஆத்மா என்று புரிந்து கொள்கிறோமோ அப்போது தான் தந்தை என்று கூற முடியும். ஆத்மாவும் ஒரு பொருள் அல்லவா! ஆத்மா ஒரு மிகப் பெரிய பொருள் (வடிவம்) கிடையாது. அது ஒரு நட்சத்திரம் போன்றது மற்றும் மிக சூட்சுமமானது. பாபா எப்படி இருக்கிறாரோ அதே போன்று தான் ஆத்மாவின் சொரூபமும் இருக்கிறது. இப்போது நீங்கள் தந்தையின் மகிமை செய்கிறீர்கள் - அவர் சத்-சித் ஆனவர், ஞானக் கடலானவர், ஆனந்தக் கடலானவர். என்றெல்லாம் உங்களது ஆத்மாவும் அவருக்குச் சமமாக ஆகிறது. உங்களது புத்தியில் இப்போது முழு சிருஷ்டியின் முதல், இடை, கடையின் ஞானம் வந்து விட்டது. வேறு எந்த மனிதனிடத்திலும் இந்த ஞானம் கிடையாது. முழு பாரதம், முழு அயல்நாட்டிலும் தேடிப் பாருங்கள், யாருக்கும் தெரியாது. ஆத்மா 84 பிறவிக்கான நடிப்பு நடிக்கிறது. 84 லட்சம் என்பது முடியாத காரியமாகும். 84 லட்சம் பிறவிகளைப் பற்றி யாரும் வர்ணிக்கவே முடியாது. நீங்கள் உங்களது பிறப்புகளைப் பற்றி அறியவில்லை, நான் கூறுகிறேன் என்று தந்தை கூறுகின்றார். அவர்கள் அனைத்தையும் கேட்டாலும் கூட 84 லட்சம் பிறவிகளைப் பற்றி யாராலும் கூற முடியாது என்பதை கல்புத்தியுடையவர்களால் புரிந்து கொள்ள முடியாது.நாம் பிராமணர்களாக இருக்கிறோம், நாம் 84 பிறவிகள் எடுத்திருக்கிறோம் என்பதை இப்போது நீங்கள் அறிவீர்கள். பிரம்மாவும் 84 பிறவிகள் எடுத்திருக்கின்றார், விஷ்ணுவும் 84 பிறவிகள் எடுத்திருக்கின்றார். பிரம்மா தான் விஷ்ணு ஆகிறார், விஷ்ணு தான் பிரம்மா ஆகிறார். லெட்சுமி நாராயணன் தான் 84 பிறவிகள் எடுத்து பிரம்மா, சரஸ்வதியாக ஆகின்றனர். இதுவும் புரிந்து கொள்ள வேண்டிய விசயம் அல்லவா! ஒவ்வொரு 5 ஆயிரம் ஆண்டிற்குப் பிறகு வந்து புரிய வைக்கின்றேன் என்று தந்தை கூறுகின்றார். 5 ஆயிரம் ஆண்டிற்கான சக்கரமாகும். இப்போது நீங்கள் வர்ணங்களின் ரகசியத்தையும் புரிந்து கொண்டீர்கள். நாம் தான் (ஹம் ஸோ) ..... என்பதன் அர்த்தத்தையும் புரிந்து கொண்டீர்கள். ஆத்மாவாகிய நான் தான் தேவதையாக ஆகிறேன், பிறகு நான் தான் சத்ரியனாக, நான் தான் வைஷ்யனாக, சூத்ரனாக ஆகிறேன். இவ்வளவு பிறவிகள் எடுக்கிறேன், பிறகு நானே பிராமணனாக ஆகிறேன். பிராமணர்களுக்கு இது ஒரே ஒரு பிறவியாகும். இது உங்களது வைரம் போன்ற பிறவியாகும்.தந்தை கூறுகின்றார் - இது உங்களது உத்தமமான சரீரமாகும். இதன் மூலம் நீங்கள் சொர்க்கத்தின் ஆஸ்தியை அடைந்து விட முடியும். ஆகையால் இப்போது வேறு எதற்கும், எங்கும் அலையாதீர்கள். ஞான அமிர்தம் பருகுங்கள். உண்மையில் 84 பிறவிகள் எடுக்கிறோம் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. நீங்கள் முதலில் சத்யுகத்தில் சதோபிரதானமாக இருந்தீர்கள். பிறகு சதோ ஆனீர்கள். பிறகு வெள்ளியின் கலப்படம் ஏற்பட்டது. முழு கணக்கையும் கூறுகின்றார். தங்கத்தில் கலப்படம் செய்யுங்கள் என்று இப்போது அரசாங்கமே கூறுகிறது. 14 கேரட் தங்கத்தை அணிந்து கொள்ளுங்கள். தங்கத்தில் கலப்படம் செய்வதை பாரதவாசிகள் அபசகுணம் என்று நினைக்கின்றனர். திருமணம் செய்விக்கின்றனர் எனில் முற்றிலும் உண்மையான தங்கத்தை அணிந்து கொள்கின்றனர். பாரதவாசிகளுக்கு தங்கத்தின் மீதும் அதிக அன்பு இருக்கிறது. ஏன்? பாரதத்தின் விசயத்தை கேட்காதீர்கள். சத்யுகத்தில் தங்க மாளிகை இருந்தது, தங்க செங்கற்கள் இருந்தன. எவ்வாறு இங்கு செங்கற்களினால் கட்டுகின்றனர்! அதே போன்று அங்கு தங்கம், வெள்ளி கற்களினால் கட்டுவர். மாயா மச்சேந்தர் கதை காண்பிக்கின்றனர். அவர் தங்க கற்கள் இருப்பதை பார்க்கின்றார், எடுத்துச் செல்ல வேண்டும் என்று நினைத்தார். கீழே இறங்கி பார்க்கின்ற பொழுது எதுவும் இல்லை. அதில் ஏதாவது விசயம் இருக்கும். நாம் இப்போது மீண்டும் சொர்க்கத்திற்குச் செல்வோம் என்பதை தாய்மார்கள் புரிந்திருக்கின்றனர், கணவன் தொந்தரவு செய்கிறார் எனும் போது பாவம் உள்ளுக்குள் அழுகின்றனர். நான் எப்போது சுகதாமத்திற்குச் செல்வேன்? பாபா சீக்கிரமாக செய்யுங்கள். பாபா கூறுகின்றார் - குழந்தைகளே! எப்படி சீக்கிரம் செய்ய முடியும்? முதலில் நீங்கள் யோக பலத்தின் மூலம் தனக்குள் இருக்கும் அசுத்தங்களை நீக்குங்கள். நினைவு யாத்திரையில் பொறுமையாக இருக்க கூறுகின்றார். தந்தை பொறுமை ஏற்படுத்துகின்றார். ஹே பதீத பாவனனே வாருங்கள் என்று அழைக்கவும் செய்கின்றனர். அனைவருக்கும் சத்கதி கொடுக்கும் வள்ளல் ஒருவர் தான் என்று மகிமை பாடவும் செய்கின்றனர். இங்கு நடக்கும் விசயம் அல்லவா! அகாசுரன், பகாசுரன் போன்ற விசயங்கள் அனைத்தும் இந்த சங்கமயுகத்தின் விசயங்கள் ஆகும். இது அசுர உலகமாகும். ஆக எப்போது முழு மரமும் இற்றுப் போய் விடுகிறதோ அப்போது நான் கல்ப கல்பம் சங்கமத்தில் வருகிறேன் என்று தந்தை புரிய வைக்கின்றார்.சத்யுகத்தில் ஒவ்வொரு பொருளும் சதோபிரதானமாக இருக்கும் என்பதை நீங்கள் அறிவீர்கள். இங்கு எவ்வளவு பறவைகள், மிருகங்கள் உள்ளன! இவையனைத்தும் அங்கு இருக்காது. பெரிய மனிதர்கள் மிகவும் சுத்தமாக இருப்பார்கள். அவர்கள் இருக்கும் இருப்பிடம், பர்னீச்சர் போன்றவைகள் மிகவும் நன்றாக இருக்கும். நீங்களும் அந்த அளவிற்கு உயர்வான தேவதைகளாக ஆகிறீர்கள். அங்கு இந்த மாதிரியான சீ சீ பொருட்கள் இருக்க முடியாது. இங்கு கொசு பல விதமான வியாதிகளை உருவாக்குகிறது, எவ்வளவு அசுத்தமாக இருக்கிறது! ஊர்புறங்களில் அந்த அளவிற்கு அசுத்தம் இருப்பது கிடையாது. பெரிய பெரிய நகரங்களில் அதிக அசுத்தங்கள் இருக்கின்றன. ஏனெனில் மனிதர்கள் அதிகம் ஆகிவிட்டனர். இருப்பதற்கு இடம் கிடையாது. நீங்கள் முழு உலகிற்கு எஜமானர்களாக ஆகிறீர்கள். சரீரத்துடன் தான் பிரம்மா இருக்கிறார், சரீரத்துடன் தான் விஷ்ணு இருக்கிறார் ....... சரீரத்துடன் 9 லட்சம் நட்சத்திரங்கள் உள்ளன என்று மனிதர்கள் பாடுகின்றனர். பிரம்மாவே விஷ்ணுவாக ஆகிவிடுகிறார். விஷ்ணுவின் கூடவே நட்சத்திரங்களும் உள்ளன. சத்யுகத்தில் இவர் தேவதையாக ஆகின்ற பொழுது மிகக் குறைவானவர்கள் தான் இருப்பர். மரம் முதலில் சிறியதாக இருக்கும், பிறகு வளர்ச்சி அடையும். சத்யுகத்தில் மிகக் குறைவானவர்கள் இருப்பர். இனிக்கும் நீர் ஓட்டமுள்ள நதிக்கரையில் வசிப்பர். இங்கு நதிகளில் பல கால்வாய்கள் உருவாக்குகின்றனர், அங்கு கால்வாய்கள் இருக்காது. ஒரு பிடி அளவு மனிதர்கள் இருப்பர். அவர்களுக்காகவே கங்கை, யமுனை இருக்கும். அந்த நதிக்கரைகளில் தான் வசிப்பர். 5 தத்துவங்களும் தேவதைகளுக்கு அடிமையாகி விடும். ஒருபொழுதும் நியமத்திற்கு மாறாக மழை பொழியாது. ஒருபொழுதும் நதியில் வெள்ளம் ஏற்படாது. பெயரே சொர்க்கம் எனில் பிறகு வேறு எப்படி இருக்கும்? சொர்க்கத்தின் ஆயுள் லட்சம் ஆண்டுகள் என்று இப்போது கூறுகின்றனர். நல்லது, அங்கு யார் இராஜ்யம் செய்தனர்? என்று கூறுங்கள். எவ்வளவு கட்டுக்கதைகளை கூறிக் கொண்டிருக்கின்றனர்.நாம் கல்பத்திற்கு முன் போலவே நாம் இந்த நடிப்பு நடித்துக் கொண்டிருக்கிறோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். ருத்ர ஞான வேள்வியில் பல வகைளில் அசுரர்களின் தடைகள் ஏற்படத் தான் செய்யும். இதையே அசுரர்கள் மேலிருந்து அசுத்தங்களை, மாட்டுச்சாணம் போன்றவைகளையும் போட்டதாக மனிதர்கள் புரிந்திருக்கின்றனர். ஆனால் அவ்வாறு கிடையாது. எவ்வளவு தடைகள் ஏற்படுகிறது என்பதை நீங்கள் பார்க்கிறீர்கள். அபலைகளின் மீது தீங்கு ஏற்படும் போது தான் பாவக் குடங்கள் நிறையும். சிறிது பொறுத்துக் கொள்ள வேண்டியிருக்கும் என்று தந்தை கூறுகின்றார். நீங்கள் தனது தந்தை மற்றும் ஆஸ்தியை நினைவு செய்து கொண்டே இருங்கள். அடி வாங்கும் போதும் புத்தியில் சிவபாபாவை நினைவு செய்யுங்கள். உங்களுக்கு புத்தியில் ஞானம் இருக்கிறது. யாருக்காவது தூக்கு தண்டனை கொடுக்கும் போது பரமபிதாவை நினைவு செய்யுங்கள் என்று தான் பாதிரிமார்கள் கூறுவார்களே தவிர கிறிஸ்துவை நினையுங்கள் என்று கூறமாட்டார்கள். இறைவனை நோக்கி தான் சைகை காண்பிப்பர். அவர் அந்த அளவிற்கு அன்பானவராக இருப்பதால் தான் அனைவரும் அவரை அழைக்கின்றனர். ஆத்மா தான் அழைக்கிறது. இப்போது ஆத்ம அபிமானி ஆவதில் தான் முயற்சி இருக்கிறது. 63 பிறவிகளாக நீங்கள் தேக அபிமானத்தில் இருந்து விட்டீர்கள். இப்போது இந்த ஒரே ஒரு பிறப்பில் அந்த அரைக் கல்பத்திற்கான பழக்கத்தை நீக்க வேண்டும். ஆத்ம அபிமானி ஆவதன் மூலம் நாம் சொர்க்கத்திற்கு எஜமானர்களாக ஆகிவிடுவோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். எவ்வளவு உயர்ந்த பிராப்தியாகும்! ஆக இரவு, பகல் இதே முயற்சியில் இருக்க வேண்டும். மனிதர்கள் தொழில் போன்றவைகளுக்கு முயற்சி செய்கின்றனர். இலாபம் ஏற்படும் போது மனிதர்களுக்கு ஒருபொழுதும் கொட்டாவி, தூக்கம் வரவே வராது. ஏனெனில் லாபம் இருக்கிறது. பைசாவிற்கான குஷி இருக்கிறது. களைப்படைவதற்கான விசயமே கிடையாது. பாபாவும் அனுபவி அல்லவா! இரவில் படகு வரும் போது வந்து சரக்குகளை வாங்குவார். எதுவரை வாடிக்கையாளர்களின் கை காலியாகவில்லையோ அதுவரை அவர்களை விடமாட்டார். பாபாவும் முழு அனுபவியான ரதத்தைத் தான் எடுத்திருக்கின்றார். இவர் அனைத்தையும் அனுபவம் செய்திருக்கின்றார். கிராமத்து சிறுவனாக இருந்தார். 10 அணாவிற்கு மணிகளையும், தானியங்களையும் அனுப்பி வைத்தார். இப்போது பாருங்கள், உலகிற்கு எஜமானராக ஆகிவிட்டார். முற்றிலும் கிராம பழக்க வழக்கமுள்ளவராக இருந்தார். பிறகு வளர்ந்ததும் வைர வியாபாரத்தில் ஈடுபட்டு விட்டார். வைரத்திற்கான வியாபார விசயம், அவ்வளவு தான். இங்கு உண்மையான வைரம் இருக்கிறது. இது ராயலான வியாபாரமாகும். பாபா மிகுந்த அனுபவியாக இருக்கின்றார். வைஷ்ராய் வீட்டிற்கும் பாபா தனது வீடு போன்று சென்று விடுவார். இது அழிவற்ற ஞான ரத்தினம் என்று கூறப்படுகிறது. எந்த அளவிற்கு இதை புத்தியில் தாரணை செய்வீர்களோ, இதன் மூலம் நீங்கள் பல மடங்கு செல்வந்தர்களாக ஆவீர்கள். சிவபாபா ரத்தின வியாபாரி என்றும் கூறப்படுகின்றார். அவருக்கு மகிமையும் செய்கின்றனர், பிறகு சர்வவியாபி என்று கூறிவிடுகின்றனர். மகிமையின் கூடவே நிந்தனையும் செய்கின்றனர். பக்தி மார்க்கத்தின் நிலை எப்படி ஆகிவிட்டது! எப்போது பக்தி முடிவடைகிறதோ அப்போது பக்தர்களை ரட்சிக்கக் கூடிய தந்தை வருகின்றார் என்று பாபா கூறுகின்றார். யார் அதிக பக்தி செய்கின்றனர்? என்பதும் நிரூபணம் ஆகிவிடுகிறது. அனைவரையும் விட அதிக பக்தி நீங்கள் செய்திருக்கிறீர்கள். அவர்கள் தான் இங்கு வந்து முதன் முதலில் பிராமணர்களாக ஆகின்றனர், மீண்டும் பூஜைக்குரியவருக்கான ஆஸ்தி தந்தையிடமிருந்து அடைகின்றனர். இராவணன் பூஜாரிகளாக ஆக்குகிறது, தந்தை பூஜைக்குரியவர்களாக ஆக்குகின்றார். இது பகவானின் மகாவாக்கியமாகும். பகவான் ஒரே ஒருவர் தான். 2-3 பகவான்கள் இருக்க முடியாது. பகவானால் கூறப்பட்டது கீதையாகும். சிவ பகவானிற்குப் பதிலாக கிருஷ்ணரின் பெயர் வைத்ததால் எவ்வளவு வித்தியாசம் ஏற்பட்டு விட்டது! நாடகப்படி கீதையின் பெயர் மீண்டும் இவ்வாறு மாறியே ஆக வேண்டும். பிறகு ஹே பதீத பாவனனே! வாருங்கள் என்று அழைக்கின்றனர். தந்தை தூய்மை ஆக்குகின்றார், இராவணன் தூய்மை இழக்க வைக்கிறான். ஆக புரிந்து கொள்வதற்கு எவ்வளவு புத்தி தேவைப்படுகிறது! ஸ்ரீமத், சிரேஷ்டத்திலும் சிரேஷ்ட வழி ஒரே ஒரு தந்தையினுடையது ஆகும். தந்தையின் வழியின் மூலம் தான் இந்த லெட்சுமி நாராயணன் சொர்க்கத்திற்கு எஜமானர்களாக ஆகியிருக்கின்றனர். நல்லது.இனிமையிலும் இனிமையான, தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு, தாய் தந்தையாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீக குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்தே.1) இந்த ஒரு பிறவியில் 63 பிறவிகளின் பழைய தேக அபிமானத்திற்கான பழக்கத்தை நீக்கக் கூடிய முயற்சி செய்ய வேண்டும். ஆத்ம அபிமானியாகி சொர்கத்திற்கு எஜமானர்களாக ஆக வேண்டும்.2) வைரத்திற்கு சமமான இந்த உத்தமமான பிறவியில் புத்தியை அலைய விடக் கூடாது, சதோ பிரதானமாக ஆக வேண்டும். தீங்குகளை (கொடுமைகளை) சகித்துக் கொண்டு தந்தையிட மிருந்து முழு ஆஸ்தி அடைய வேண்டும்.தாரணைக்கான முக்கிய சாரம்:
வரதானம்:

ஒரு தந்தையின் நினைவின் மூலம் உண்மையான சுமங்கலியின் அனுபவம் செய்யக் கூடிய பாக்கியவான் ஆத்மா ஆகுக.யார் மற்ற ஆத்மாக்களின் வார்த்தைகளைக் கேட்டாலும் கேட்கவேயில்லையோ, மற்ற ஆத்மாக்களைப் பற்றிய நினைவுகள் மனம் அல்லது கனவிலும் கொண்டு வரவில்லையோ, அதாவது எந்த தேகதாரிகளுக்கும் வசமாகவில்லையோ, ஒரு தந்தையைத் தவிர வேறு யாருமில்லை என்ற நினைவில் இருக்கிறார்களோ அவர்களுக்கு அழிவற்ற சுமங்கலி என்ற திலகம் இடப்பட்டு விடுகிறது. இப்படிப்பட்ட உண்மையான சுமங்கதான் பாக்கியவான்கள் ஆவர்.சுலோகன்:

தனது நிலைமையை உயர்வானதாக ஆக்கிக் கொள்ள வேண்டுமெனில் முதலில் உள்நோக்கு முகமுடையவராகி பிறகு வெளிநோக்கு முகத்தில் வாருங்கள்.***OM SHANTI***

Whatsapp Button works on Mobile Device only