BK Murli 14 June 2016 Tamil

BK Murli 14 June 2016 Tamil

14.06.2016    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


இனிமையான குழந்தைகளே! தந்தையின் ஆசிகளைப் பெற வேண்டுமென்றால், சேவை செய்யக் கூடிய நல்ல குழந்தைகளாக ஆகி, அனைவருக்கும் சுகத்தைக் கொடுங்கள். யாருக்குமே துக்கம் கொடுக்காதீர்கள்.கேள்வி:

தர்மராஜரின் தண்டனைகளிலிருந்து விடுபடுவதற்காக எந்த ஈசுவரிய நியமங்கள் மீது கவனம் வைக்க வேண்டும்?பதில்:

ஒரு பொழுதும் இறைவனுக்கு முன்னால் வாக்குறுதி அளித்து அதை மீறக் கூடாது. யாருக்கும் துக்கம் கொடுக்கக் கூடாது. கோபப்படுவது, தொல்லைப்படுத்துவது அதாவது இறைவனுக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் அப்பேர்ப்பட்ட நடத்தை நடப்பது.. அவர்கள் மிகவும் தண்டனைகள் அடைய வேண்டி வரும். எனவே அப்பேர்ப்பட்ட எந்த செயலையும் செய்யக் கூடாது. மாயையினுடைய எவ்வளவு புயல்கள் வந்தாலும் சரி, நோய்கள் அதிகமாக வந்தாலும் சரி, ஆனால் சரி எது, தவறு எது என்பதை புத்தி மூலம் தீர்மானித்து தவறான செயலிலிருந்து எப்பொழுதும் தப்பித்து இருங்கள்.பாடல்:

யார் என் மனவாசலுக்கு வந்தார்.. .. ..ஓம் சாந்தி.

ஓம் சாந்தி என்று கூறியது யார்? தந்தை (பாப்) மற்றும் தாதா. நமது பரலோகத் தந்தை பரமபிதா பரமாத்மா சிவன் ஆவார். மேலும் இவர் (பிரம்மா) அனைத்து குழந்தைகளின் அலௌகீக தந்தை ஆவார் என்ற நிச்சயம் அவசியம் குழந்தைகளுக்கு இருக்கக் கூடும். இவரைத் (பிரம்மா) தான் பிரஜாபிதா பிரம்மா என்று கூறுவார்கள். பிரஜாபிதா பிரம்மாவைத் தவிர இத்தனை குழந்தைகள் வேறு யாருக்காவது இருப்பார்களா என்ன? முதலில் இருக்கவில்லை, எப்பொழுது எல்லையில்லாத தந்தை இவருக்குள் பிரவேசம் செய்கிறாரோ அப்பொழுது, இவர் தாதா (பாட்டனார்) ஆகிறார். உங்களுக்கு பரலோகத் தந்தையின் ஆஸ்தி கிடைக்கிறது என்று இந்த தாதாவே கூறுகிறார். பேரன்கள் எப்பொழுதும் பாட்டனானின் வாரிசாக இருப்பார்கள். அவர்களுடைய புத்தியோகம் பாட்டனாரிடம் செல்கிறது. ஏனெனில், பாட்டனாரின் சொத்திற்கான உரிமை கிடைக்க உள்ளது. எப்படி ராஜாக்களிடம் எந்த குழந்தைகள் பிறவி எடுத்துக் கொண்டே இருப்பார்களோ அவர்கள் மூதாதையரின் சொத்து என்று தான் கூறுவார்கள். பெரியவர்களின் சொத்து மீது அவர்களுக்கு உரிமை இருக்கவே இருக்கிறது. நாம் எல்லையில்லாத தந்தை மூலமாக சொர்க்கம் என்ற பெரியதிலும் பெரிய சொத்தை எடுத்து கொண்டிருக்கிறோம் என்பதை குழந்தைகளாகிய நீங்கள் அறிந்துள்ளீர்கள். நமக்கு அந்த தந்தை கற்பித்துக் கொண்டிருக்கிறார். நீங்கள் இப்பொழுது முன்னால் அமர்ந்துள்ளீர்கள். முன்னால் இருப்பதற்கான போதை கூட வரிசைக்கிரமமாக முயற்சிக்கேற்பவே இருக்கும். ஒரு சிலருடைய இதயத்திலோ மிகுந்த அன்பு இருக்கும். இந்த சாகார தாய் தந்தை மூலமாக நாம் உயர்ந்ததிலும் உயர்ந்த பகவானுக்கு வாரிசாக ஆகிறோம். எல்லையில்லாத தந்தை மிகவும் இனிமையானவர் ஆவார். அவர் நம்மை இராஜ்யத்திற்குத் தகுதியுடையவர்களாக ஆக்குகிறார். மாயை முற்றிலுமே லாயக்கற்றவராக ஆக்கி விட்டுள்ளது. நேற்றைக்கு பாபாவை யாரோ சந்திக்க வந்திருந்தார். ஆனால் அவர் ஏதாவது புரிந்திருப்பாரா என்ன? இவர்கள் எல்லோரும் பிரம்மாகுமாரர்கள் ஆவார்கள் என்று பாபா புரிய வைத்திருந்தார். நீங்கள் கூட பிரம்மாவின் அல்லது சிவனின் குழந்தைகள் ஆவீர்கள் அல்லவா? அவசியம் கூறி இருக்கிறார். இதை கேட்டுள்ளார் அவ்வளவே! ஆனால் மனதில் பதியவில்லை. உண்மையில் நாம் அவரின் குழந்தைகள் ஆவோம் என்று அம்பு போல பதியவில்லை. இவர்களும் அவருடைய குழந்தைகள் ஆவார்கள். ஆஸ்தி எடுத்து கொண்டிருக்கிறார்கள். அதே போல நம்மிடம் கூட மிகவும் சிறிதளவே புத்தியில் பதிந்து விட்டிருக்கும். குழந்தைகள் கூட ஒரு சிலர் இருக்கிறார்கள். அந்த குஷி அந்த பெருமிதம் தென்படுவதில்லை. உள்ளுக்குள் மிகுந்த குஷியின் அளவு ஏறி இருக்க வேண்டும். அது முழுவதும் முகத்திலும் வந்து விடுகிறது. இப்பொழுது மணமகன்களாகிய உங்களுக்கு ஞானத்தின் அலங்காரம் ஆகிக் கொண்டிருக்கிறது. அந்த மணமகனுக்கு நாம் மணமகள்கள் ஆவோம் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். ஒரு உழவர் வேலை செய்யும் ஒரு பெண்ணின் கதை இருக்கிறது அல்லவா? ஒரு ராஜா விவசாயம் செய்யும் பெண்ணைக் கூட்டி வந்தார். ஆனால் பிறகும் அவருக்கு இராஜ்யத்தில் ஆனந்தம் ஏற்படவில்லை. எனவே பெண்ணைத் திரும்பவும் கிராமத்திற்கு கொண்டு போய் விட்டு விட்டு வந்தார். நீ இராஜ்யத்திற்கு லாயக்கில்லை என்று கூறினார். இங்கு கூட தந்தை அலங்காரம் செய்கிறார். நீங்கள் வருங்காலத்தில் மகாராணி ஆகுங்கள். கிருஷ்ணருக்காகவும் பட்டத்து ராணியாக ஆக்குவதற்காக விரட்டினார் என்று கூறுகிறார்கள். ஆனால் ஒன்றும் புரிந்து கொள்வதில்லை. எல்லோருமே பக்தி உள்ளம் கொண்டவர்கள். இப்படியே உலகம் நடந்து கொண்டே இருக்கும் என்று நினைக்கிறார்கள். இயற்கை ஆகும். நிறைய பேர் கோவில்கள் குளங்களுக்கு செல்வதும் இல்லை. சாஸ்திரங்கள் ஆகியவற்றையும் ஏற்றுக் கொள்ளாமல் இருப்பார்கள். அரசாங்கம் கூட தர்மங்களை ஏற்றுக் கொள்வதில்லை. பாரதம் எந்த தர்மத்தைச் சார்ந்திருந்தது. இப்பொழுது எந்த தர்மத்தினுடையதாக இருக்கிறது என்பதை முற்றிலும் அறியாமல் உள்ளார்கள். இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் தெய்வீக குலத்தினர் ஆவீர்கள். எப்படி அவர்கள் கிறித்தவ குலத்தினரோ, அவ்வாறே நீங்கள் பிராமண குலத்தினர் ஆவீர்கள். முதன் முதலில் குழந்தைகளாகிய உங்களை பதீத சூத்திரரிலிருந்து பிராமணராக ஆக்குகிறேன் என்று தந்தை கூறுகிறார். பாவனமாக ஆகி ஆகி பின் 21 பிறவிகளுக்கு நீங்கள் தெய்வீக சம்பிரதாயத்தினராக ஆகி விடுவீர்கள். தெய்வீக மடியில் செல்வீர்கள். இதற்கு முன்பு அசுர மடியில் வந்துள்ளீர்கள். ஒரு தந்தையின் குழந்தைகள் சகோதர சகோதரிகள் ஆவீர்கள். இது ஒரு அதிசயம் ஆகும். நாம் பிராமண குலத்தினர் ஆவோம், என்று எல்லோரும் கூறுவார்கள். நாமோ ஸ்ரீமத்படி நடக்க வேண்டும். அனைவருக்கும் சுகம் கொடுக்க வேண்டும். வழி கூற வேண்டும். எல்லையில்லாத தந்தையிடம் எல்லையில்லாத ஆஸ்தியை எப்படிப் பெறுவது என்பதை வாயால் கூறக் கூடியவர்கள் உலத்தில் யாருமே கிடையாது. உங்களுக்கு எல்லையில்லாத தந்தை கிடைத்துள்ளார். நீங்கள் தான் அவருக்கு குழந்தைகளாக ஆகி உள்ளீர்கள். முந்தைய கல்பத்தில் யார் தந்தையிடமிருந்து ஆஸ்தி பெற்றிருந்தார்களோ அவர்களே வந்து பெறுவார்கள் என்பதை புத்தி மூலமாக அறிந்துள்ளீர்கள். சிறிதளவு புத்தியில் இருந்தது என்றால் எப்பொழுதாவது வந்து சேர்ந்து விடுவார்கள். ஏதாவது கொஞ்சம் பெறுவதற்காக வருவார்கள். உங்களிலும் கூட வரிசைக்கிரமமாக அறிந்துள்ளார்கள். இன்றைக்கு பாவனமாக ஆக வந்தார்கள். நாளைக்கு பின் பதீதமாக ஆகி விடுகிறார்கள். யாராவது ஒருவருடைய தீய சகவாசம் ஏற்பட்டு விடும் பொழுது தந்தையினுடையவராக ஆன பிறகு தந்தையைக் கை விட்டு விட்டு விட்டார்கள் என்றால், மிகவுமே பாவ ஆத்மா ஆகி விடுகிறார்கள் என்பதை மறந்து விடுகிறார்கள். எப்படி யாராவது ஒருவரைக் கொலை செய்தார் என்றால், பாவம் ஏற்படுகிறது. அந்த பாவம் கூட சிறியது. இங்கு யார் தந்தையினுடையவரான பிறகு கை விட்டு விடுகிறார்கள். உறுதி எடுத்த பிறகு விகாரியாகி விடுகிறார்கள் என்றால், பாவம் அதிகமாகி விடும். ஞானத்தில் ஏற்படும் அளவிற்கு, அஞ்ஞான காலத்தில் அவ்வளவு பாவம் ஆவதில்லை. அஞ்ஞான காலத்திலோ மனிதர்களுக்கு கோபம் வருவது சாதாரணமாக இருக்கும். இங்கு நீங்கள் யார் மீதாவது கோபப்பட்டீர்கள் என்றால், நூறு மடங்கு தண்டனையாகி விடுகிறது. மனநிலை முற்றிலுமே நிலை குலைந்து விடுகிறது. ஏனெனில், இறைவனின் கட்டளையை ஏற்பதில்லை. தூய்மையாக ஆக வேண்டும் என்று தர்மராஜரின் கட்டளை கிடைக்கிறது. நீங்கள் இறைவனுடையவராக ஆன பிறகு, சிறிதளவு கூட அவரது கட்டளையை மீறினீர்கள் என்றால், நூறு மடங்கு தண்டனை ஏறி விடுகிறது. படைப்பவரோ அவர் ஒருவர் ஆவார். பிரம்மா, விஷ்ணு, சங்கரன் கூட அவரது படைப்பாகும். தர்மராஜர் கூட படைப்பு ஆவார். தர்மராஜரின் ரூபத்தைக் கூட பாபா சாட்சாத்காரம் செய்விக்கிறார். பிறகு அந்த நேரத்தில் நிரூபித்து நினைவூட்டிக் கூறுவார் - பாருங்கள், நான் கோபப்பட மாட்டேன், யாருக்குமே துக்கம் கொடுக்க மாட்டேன் என்று வாக்குறுதி கொடுத்திருந்தீர்கள். பிறகும் நீங்கள் இவருக்கு துக்கம் கொடுத்தீர்கள் - துன்பப்படுத்தினீர்கள் என்று. இப்பொழுது வாங்குங்கள் தண்டனை. (சாட்சாத்காரம்) காட்சி காண்பிக்காமல் தண்டனை கொடுக்க மாட்டார். அத்தாட்சி வேண்டும் அல்லவா? உண்மையில் நான் தந்தையை விட்டு விட்டு இந்த தீய செயல் செய்தேன் என்று அவர்களும் புரிந்திருப்பார்கள். அவப்பெயர் விளைவிப்பதால் நிறைய பேர்கள் மீது ஆபத்து வந்து விடுகின்றன. எத்தனை அபலைகள் பந்தனத்தில் வந்து விடுகிறார்கள். எல்லா தண்டனைகளும் அவப்பெயர் விளைவித்தவர்கள் மீது வந்து விடுகிறது. எனவே தந்தை கூறுகிறார் - பெரியதிலும் பெரிய பாவ ஆத்மாவைப் பார்க்க வேண்டும் என்றால், இங்கே பாருங்கள் என்று தந்தை கூறுகிறார். வண்ணாரிடம் நிறைய அழுக்குபடிந்த நைந்த துணிகள் இருக்கும் பொழுது, அவற்றை துவைப்பதற்காக துவைக்கும் கல்லில் அடிக்கும் பொழுது கிழிந்து போய் விடும். அதே போல இங்கும் அடிகளை சகித்து கொள்ள முடியாமல் சென்று விடுகிறார்கள். இறைவனின் மடியில் வந்து நேரடையாக அவரது கட்டளைகளை மீறினார்கள் என்றால், தண்டனை வாங்க வேண்டி வரும். யார் தலைவி, பிராமணி, பார்ட்டி அழைத்துக் கொண்டு வருகிறாரோ அவர் மீது மிக பெரிய பொறுப்பு உள்ளது. ஒருவர் கூட கையை விட்டு விட்டார், விகாரி ஆனார் என்றால் அதனுடைய பாவம் அழைத்து வந்தவர் மீது வந்து விடும். அப்பேர்ப்பட்ட யாரையுமே, இந்திர சபையில் கூட்டி வரக் கூடாது. நீலம்பரி, புகராஜ்பரி என்பவர்களின் கதை கூட உள்ளது அல்லவா? இந்திரசபையில் யாரோ மறைத்து வைத்து கூட்டி வந்தாள். அப்பொழுது இந்திர சபையில் துர்நாற்றம் வர ஆரம்பித்தது. எனவே அழைத்து வந்தவர் மீது குற்றமாகி தண்டனை தரப்பட்டது. இதுபோல கொஞ்சம் கதை இருக்கிறது. அவர் கல்லாகி விட்டார். தந்தை பாரஸ்நாத்தாக (தங்கமாக) ஆக்குகிறார். பிறகு கட்டளையை மீறினார் என்றால் கல்லாகி விடுகிறார்கள். இராஜ்யத்தை அடைவதற்கான சௌபாக்கியத்தை இழந்து விடுகிறார்கள். உதாரணமாக யாராவது ஏழை ராஜாவால் தத்து எடுக்கப்படுகின்றார் என்று வைத்துக் கொள்வோம். ஒரு வேளை அவர் லாயக்கற்றவராக ஆகி விட்டார் மற்றும் ராஜா வெளியேற்றிவிட்டார் என்றால், என்னவாகும். பிறகு ஏழைக்கு ஏழையாகவே ஆகி விடுவார்கள். இங்கும் அதே போலத் தான். பிறகு மிகவுமே துக்கம் ஏற்படும். எனவே தந்தை கூறி விடுகிறார்- ஒரு பொழுதும் எந்த ஒரு கட்டளையை மீறும் செயலையும் செய்யக் கூடாது. தந்தை சாதாரணமாக இருக்கிறார். எனவே சிவபாபாவை மறந்து சாகாரத்தில் புத்தி வந்து விடுகிறது. இப்பொழுது குழந்தைகளாகிய உங்களுக்கு ஸ்ரீமத் கிடைக்கிறது. யார் அசுத்தமாக ஆகி விடுகிறார்களோ அவர்கள் பிறகு இந்திரசபையில் அமர முடியாது. ஒவ்வொரு சென்டர் கூட ‘இந்திர பிரஸ்தம்’ ஆகும். அங்கு ஞான மழை பொழிந்து கொண்டிருக்கிறது. நீலம்பரி, புக்ராஜ்பரி என்று பெயர்களோ உள்ளன ! நீலம் என்று இரத்தினத்திற்கு கூறுகிறார்கள். இது குழந்தைகள் மீது பெயர் வைக்கப்படுகிறது. ஒரு சிலரோ மிகவும் நல்ல இரத்தினங்கள் போல இருக்கிறார்கள். எந்த ஒரு மாசும் இல்லை. நகைகளில் ஒரு சில மிகவும் கறையுள்ளதாக இருக்கும். ஒரு சிலது முற்றிலுமே தூய்மையாக இருக்கும். இங்கு கூட வரிசைக்கிரமமாக இரத்தினங்கள் இருக்கிறார்கள். ஒரு சில இரத்தினங்கள் மிகவுமே மதிப்புடையவர்களாக இருக்கிறார்கள். மிகவும் நன்றாக சேவை செய்கிறார்கள். ஒரு சிலரோ சேவைக்குப் பதிலாக (டிஸ்-சர்வீஸ்) விளைவிக்கிறார்கள். ரோஜா மலர் மற்றும் எருக்கம் பூவிற்கிடையே கூட எவ்வளவு வித்தியாசம் உள்ளது. சிவன் மீது இரண்டையுமே படைக்கிறார்கள். நம்மிடையே யார் யாரெல்லாம் மலர்கள் ஆவார்கள் என்பதை இப்பொழுது நீங்கள் அறிந்து விட்டுள்ளீர்கள். பாபா எங்களுக்கு நல்ல நல்ல மலர்கள் கொடுங்கள் என்று அவர்களைத் தான் எல்லோரும் தங்களிடம் அனுப்புமாறு கேட்கிறார்கள். இப்பொழுது நல்ல நல்ல மலர்களை எங்கிருந்து கொண்டு வருவது. மல்லிகைப் பூவோ சாதாரணமாக இருக்கும். இது தோட்டமாகும் அல்லவா? நீங்கள் ஞானகங்கைகளும் ஆவீர்கள். பாபாவோ கடலாக இருக்கிறார் அல்லவா? இவர் (பிரம்மா) பிரம்மபுத்திரா பெரியதிலும் பெரிய நதி ஆவார். கல்கத்தாவில் பிரம்மபுத்திரா நதி மிகவும் பெரியதாகும். அங்கு கடல் மற்றும் நதியின் மிக பெரிய மேளா நடக்கிறது. உண்மையில் ஞானக் கடல் பாபா ஆவார். இவர் உயிரூட்டமுள்ள ஞானக் கடல் ஆவார். நீங்கள் கூட உயிரூட்டமுள்ள ஞான நதிகள் ஆவீர்கள். அதுவோ தண்ணீரின் கங்கைகள் ஆகும். உண்மையில் நதிகள் மீது பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அசுர சம்பிரதாயத்தினர் இதையும் மறந்து விட்டுள்ளார்கள். ஹரிதுவாரத்தில் கங்கை கரையோரத்தில் சதுர்புஜத்தின் படம் காண்பிக்கிறார்கள். அதற்கும் கங்கை என்று கூறுகிறார்கள். ஆனால் இந்த சதுர்புஜ - நான்கு புஜங்கள் உடையவர் யார் என்பதை மனிதர்கள் புரிந்து கொள்வதில்லை. உண்மையில் இச்சமயம் நீங்கள் சுயதரிசன சக்கரதாரி ஆகிறீர்கள். நீங்கள் உண்மையான ஞான நதிகள் ஆவீர்கள். அது தண்ணீரினுடைய நதி. அங்கு போய் ஸ்நானம் செய்கிறார்கள். ஒன்றுமே புரிந்து கொள்வதில்லை. நதிகளை தேவியாக நினைக்கின்றனர் அவ்வளவே ! மனிதர்களுக்கு ஒரு பொழுதும் 4-8 புஜங்கள் இருப்பதில்லை. எதுவும் புரிந்து கொள்வதில்லை. பாபா நம்மை என்னவாக ஆக்குகிறார் என்பதை குழந்தைகளாகிய நீங்கள் அறிந்துள்ளீர்கள். நாமோ 100 சதவிகிதம் அறிவில்லாமல் இருந்தோம். பாபாவின் மடியை அடைந்தால் நாம் சொர்க்கத்திற்கு அதிபதி ஆகிறோம். இங்கு ஒருவர் ராஜாவாகக் கூட இருக்கலாம். ஆனால் சொர்க்கத்தின் சுகம் மற்றும் இப்பொழுதைய சுகத்திற்கிடையே இரவு பகலுக்கான வித்தியாசம் உள்ளது. உங்களிலும் கூட ஒரு சிலர் தந்தையைப் புரியாமல் இருக்கிறார்கள். ஆக தங்களையும் புரியாமல் இருக்கிறார்கள். நான் எவ்வளவு நறுமணம் அளிக்கிறேன் என்று பார்க்க வேண்டும். தப்பும் தவறுமாக ஒன்றும் பேசுவதில்லையே? கோபப்படுவது ஒன்றுமில்லையே? இந்த குழந்தை எப்படி இருப்பார் என்று தந்தை சட்டென்று நடத்தை மூலமாகப் புரிந்து கொண்டு விடுகிறார். சேவை செய்யக் கூடிய குழந்தைகள் தந்தைக்கு மிகவும் பிரியமானவர்களாக இருக்கிறார்கள். எல்லோரும் ஒன்று போல பிரியமானவர்களாக இருக்க முடியாது. அப்பேர்ப்பட்ட குழந்தை களுக்காக உள்ளிருந்து இயல்பாகவே ஆசிகள் வெளிப்படுகின்றன. ஒரு தந்தைக்குக் கீழ்ப்படியாத குழந்தை இருந்தார் என்றால், இப்பேர்ப்பட்ட பையன் இல்லாமல் இருப்பதே நல்லது என்பார். எவ்வளவு அவப்பெயர் ஏற்படுத்துகிறார்கள். இதற்கு அதிர்ஷ்டம் என்று கூறப்படுகிறது. யாருடைய அதிர்ஷ்டத்தில் என்ன இருக்கிறது என்பது சட்டென்று தெரிய வருகிறது. இவர் நல்ல குழந்தை ஆவார். அவர் மோசமான குழந்தை ஆவார் என்று பாபா புரிய வைக்கிறார். பாப்தாதாவை அடையாளம் கண்டு கொள்ளவில்லை. அதிர்ஷ்டத்தில் ஆஸ்தி இல்லை என்றால், என்ன செய்வார்கள்? இந்த ஞான மார்க்கத்தில் நியமங்கள் மிகவும் கடுமையாக உள்ளன. தந்தை தூய்மையாக இருக்கிறார் மற்றும் குழந்தை தூய்மையாக ஆவதில்லை என்றால், அந்த குழந்தை உரிமையாளராக முடியாது. அவரை குழந்தை என்று கருதமாட்டார்கள். பிறகோ கூறுவார்கள் – நாங்களோ சிவபாபாவை வாரிசாக ஆக்கிக் கொள்வோம். பின் பாபா 21 பிறவிகளுக்கு எங்களுக்கு பதிலுக்கு கொடுப்பார். இதன் பொருள் பாபாவிடம் வந்து உட்கார்ந்து விடுவது என்பதல்ல. இல்லை. இல்லற விவகாரங்களில் இருந்தபடியே எல்லோரையும் பராமரிக்கவும் வேண்டும். ஆனால் டிரஸ்டியாகி இருக்க வேண்டும். அப்படியின்றி உங்களுடைய குழந்தைகள் ஆகியோரை தந்தை அமர்ந்து பராமரிப்பார் என்பதல்ல. இல்லை. இப்பேர்ப்பட்ட சிந்தனை உடையவர்கள் அலைய முற்படுகிறார்கள். இங்கு பாபாவிடமோ முற்றிலுமே தூய்மையானவர்கள் வேண்டும். தூய்மை இல்லாதவர்கள் யாருமே அமர முடியாது. இல்லையென்றால் கல்புத்தியாக ஆகி விடுவார்கள். பாபா ஒன்றும் சாபம் கொடுப்பதில்லை. இதுவோ ஒரு நியமம் ஆகும். பிறகு எச்சரிக்கையுடன் இருங்கள் என்று தந்தை கூறுவார். கர்ம இந்திரியங்கள் மூலமாக ஏதாவது பாவம் செய்தார்கள் என்றால், இல்லாமல் போய் விடுவார்கள். மிக உயர்ந்த குறிக்கோள் ஆகும். பாபாவின் குழந்தை ஆனார் என்றால், பிறகு நோய் முழுவதும் வெளியில் எழும்பி வெளிப்படும். பயப்படக் கூடாது. வைத்தியர்கள் கூட கூறுகிறார்கள் - குறிப்பிட்ட இந்த மருந்தை உட்கொண்டீர்கள் என்றால், உங்களுடைய வியாதி வெளியில் வரும். நீங்கள் பயப்படக்கூடாது. தந்தை கூட அவரே கூறுகிறார் - நீங்கள் தந்தையினுடையவராக ஆனீர்கள் என்றால் மாயை இராவணன் உங்களை மிகவும் குழப்பத்தில் ஆழ்த்துவான். நிறைய புயல்களை எடுத்து வருவான். இப்பொழுது உங்களுக்கு சரி எது, தவறு எது என்பது பற்றிய புத்தி கிடைத்துள்ளது. வேறு யாருக்குமே சரி எது, தவறு எது என்பது பற்றிய புத்தியில்லை. எல்லோருக்குமே விநாச காலத்தில் அன்பில்லாத புத்தி ஆகி விட்டுள்ளது. அன்பான புத்தி உங்களிலும் கூட வரிசைக்கிரமமாக முயற்சிக்கேற்ப உள்ளது. அன்பான புத்தியுடையவர்கள் தந்தையின் சேவையை மிகவும் நன்றாகச் செய்வார்கள். நல்லது.இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்து கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.தாரணைக்கான முக்கிய சாரம்:

1. இறைவனுடைய குழந்தையான பிறகு சிறிதளவு கூட அவருடைய கட்டளையை மீறும் செயலைச் செய்யக் கூடாது. இந்த கர்ம இந்திரியங்களால் எந்த ஒரு தீய செயலும் செய்யக் கூடாது. தப்பும் தவறுமான வார்த்தைகள் பேசக் கூடாது. நல்ல குழந்தையாகி தந்தையின் ஆசிகளைப் பெற வேண்டும்.2. டிரஸ்டியாகி தனது இல்லற விவகாரங்களைப் பராமரிக்க வேண்டும். ஞான மார்க்கத்தில் என்ன நியமங்கள் உள்ளனவோ அவற்றின்படி முழுமையாக நடக்க வேண்டும். சரி எது, தவறு எது என்பதைப் புரிந்து மாயையிடம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.வரதானம்:

சத்சங்கத்தின் மூலமாக ஆன்மீக சாயத்தை ஏற்றக் கூடிய சதா மகிழ்ச்சியாகவும் (டபிள் லைட்) லேசாகவும், ஒளியாகவும் இருப்பவராக ஆவீர்களாக!எந்த குழந்தைகள் தந்தையை இதயத்தின் உண்மையான துணைவராக ஆக்கிக் கொண்டு விடுகிறார்களோ அவர்களுக்கு அந்த தொடர்பின் ஆன்மீக சாயம் எப்பொழுதும் இடப்பட்டு இருக்கும். புத்தி மூலமாக சத்தியமான தந்தை, சத்தியமான ஆசிரியர் மற்றும் சத்குருவின் சகவாசம் செய்வது - இதுவே சத்சங்கம் ஆகும். யார் இந்த சத்சங்கத்தில் இருக்கிறார்களோ, அவர்கள் சதா மகிழ்ச்சியுடனும் மற்றும் டபுள் லைட்டாக (லேசாகவும் ஒளியாகவும்) இருப்பார்கள். அவர்களுக்கு எந்த ஒரு விதமான சுமையும் அனுபவம் ஆகாது. அவர்கள் நிரம்பி இருப்பவர்களாக அனுபவம் செய்வார்கள். குஷியின் களஞ்சியம் என் கூட இருக்கிறது - எதெல்லாம் தந்தையினுடையதோ அவை அனைத்தும் என்னுடையதாக ஆகி விட்டது.சுலோகன்:

தங்களுடைய இனிமையான பேச்சு மற்றும் ஊக்கம் உற்சாகத்தின் சகயோகம் மூலமாக மனமுடைந்தவர்களை சத்தியவானாக ஆக்குங்கள்!


***OM SHANTI***