14 June 2016

BK Murli 15 June 2016 Tamil

BK Murli 15 June 2016 Tamil

15.06.2016    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


இனிமையான குழந்தைகளே! தன்னை ஆத்மா என உணர்ந்து, ஆத்மாவோடு பேசுவீர்களானால் மலரிலிருந்து மணம் வந்து கொண்டே இருக்கும். தேக அபிமானத்தின் துர்நாற்றம் நீங்கிக் கொண்டே போகும்.கேள்வி :

தனது நறுமணத்தை நாலாபுறமும் பரப்பக் கூடிய மலர்களாக அல்லது விட்டில் பூச்சிகளாக இருப்பவர்கள் யார்?பதில் :

தன்னைப் போல் அநேகரை மணமுள்ள மலர்களாக மாற்றுபவர் தான் உண்மையான மலர் ஆவார். ஸ்ரீமத் படி நடந்து ஜோதியில் எரிந்து இறந்துவிடக் கூடிய, அதாவது முழு சமர்ப்பணமாகக் கூடிய, உயிருடன் இருந்து கொண்டே இறந்த நிலையை அடையக் கூடிய உண்மையான விட்டில் பூச்சிகளின் அல்லது அப்படிப்பட்ட மலர்களின் நறுமணம் தான் நாலாபுறமும் பரவும்.பாடல் :

கூட்டத்தில் ஜோதி எரிந்து எழுந்தது........ஓம் சாந்தி.

விட்டில் பூச்சிகள் பற்றிய பாடலைக் கேட்டீர்கள். விட்டில் பூச்சி எனச் சொல்லுங்கள் அல்லது மலர் எனச் சொல்லுங்கள், விஷயம் ஒன்று தான். குழந்தைகள் புரிந்து கொண்டுள்ளனர், நாம் உண்மையிலேயே விட்டில் பூச்சிகளாக ஆகியிருக்கிறோமா அல்லது சுற்றி வந்து சென்று விடுகிறோமா? ஜோதியை மறந்து போகின்றனர். ஒவ்வொருவரும் தனது மனதைக் கேட்டுக் கொள்ள வேண்டும்-நாம் எது வரை மலராக ஆகியிருக்கிறோம்? ஞானத்தின் நறுமணத்தைப் பரப்புகிறோமா? தன்னைப் போன்ற மலராக யாரையாவது ஆக்கியிருக்கிறோமா? இதையோ குழந்தைகள் அறிவார்கள்-ஞானக்கடலாக இருப்பவர் பாபா, அவரிடம் எவ்வளவு நறுமணம் உள்ளது? யார் நல்ல மலராக அல்லது விட்டில் பூச்சியாக உள்ளனரோ, அவர்களிடமிருந்து நிச்சயமாக நல்ல நறுமணம் வரும். அவர்கள் எப்போதுமே குஷியாக இருப்பார்கள். மற்றவர்களையும் தனக்குச் சமமாக மலராக அல்லது விட்டில் பூச்சியாக ஆக்குவார்கள். மலராக இல்லையென்றால் மொட்டாக ஆகிவிடுவார்கள். யார் உயிருடன் இருந்தவாறே இறந்து விடுகின்றனரோ, அவாகள் தான் முழுமையான விட்டில் பூச்சி ஆவார்கள். பலியாகின்றனர் அல்லது ஈஸ்வரிய குழந்தை ஆகின்றனர். யாரேனும் செல்வந்தர் ஒரு ஏழையின் குழந்தையை மடியில் தத்து எடுத்துக் கொள்கின்றனர், என்றால் ஆக, குழந்தைகள் அந்த செல்வந்தரின் மடியில் வருவதால் பிறகு அவர்களையே தாய்-தந்தை என்ற நினைவில் இருப்பார்கள். மேலும் ஏழையின் நினைவு என்பது மறந்து போகும். நம்முடைய தாய்-தந்தையர் ஏழைகள் என்பதை அறிந்துள்ளனர். ஆனால் பணக்காரத் தாய்- தந்தையரைத் தான் நினைவு செய்வார்கள். அவர்களிடம் இருந்து பணம் கிடைக்கிறது. சாது-சந்நியாசிகள் முதலானவர்கள் முக்திதாமம் செல்வதற்காக சாதனை செய்கின்றனர். அனைவரும் முக்திக்காகவே புருஷார்த்தம் செய்கின்றனர். ஆனால் முக்தி என்பதன் அர்த்தத்தைப் புரிந்து கொள்ளவில்லை. சிலர் ஜோதியோடு ஜோதியாக ஒன்றாகி விடுவோம் என்கின்றனர். சிலர் எல்லைக்கு அப்பாலுள்ள நிர்வாணதாமத்திற்குச் சென்று விடுவோம் என்று புரிந்து கொள்கின்றனர். நிர்வாண்தாமம் செல்வதற்கு ஜோதியோடு ஐக்கியமாவது அல்லது ஒன்றாகக் கலந்து விடுவது எனச் சொல்லப்படுவதில்லை. நீங்கள் புரிந்து கொண்டிருக்கிறீர்கள்-நாம் தூரதேசத்தில் வசிப்பவர்கள். இந்த அழுக்கு உலகத்தில் இருந்து கொண்டு என்ன செய்வது? குழந்தைகளுக்குப் புரிய வைக்கப் பட்டுள்ளது- யாரையாவது சந்திக்கும் போது இது ஏற்கனவே உருவாக்கப்பட்ட ஒரு நாடகம் என்பதைப் புரிய வையுங்கள். சத்யுக, திரேதா..... பிறகு சங்கமயுகம். இதுவும் புரிய வைக்கப்பட்டுள்ளது-சத்யுகத்திற்குப் பிறகு திரேதாவின் சங்கமம் வரும். அந்த யுகம் சுழற்சியில் திரும்பவும் வருகிறது அதே போல கல்பமும் சுற்றுகிறது. பாபா ஒவ்வொரு யுகத்திலும் வருவதில்லை. மனிதர்கள் புரிந்து கொள்வது போல் கிடையாது. பாபா சொல்கிறார், எப்போது அனைவரும் தமோபிரதானமாக ஆகி விடுகின்றனரோ, அப்போது கலியுகக் கடைசி வருகின்றது. அந்தக் கல்பத்தின் சங்கமத்தில் நான் வருகின்றேன். யுகம் முடிகின்றது என்றால் கலைகள் குறைந்து விடுகின்றன. எப்போது முழு கிரகணம் பிடிக்கிறதோ, அப்போது நான் வருகிறேன். நான் ஒவ்வொரு யுகத்திலும் வருவதில்லை. இதை பாபா அமர்ந்து விட்டில் பூச்சிகளுக்குப் புரிய வைக்கிறார். விட்டில் பூச்சிகளிலும் நம்பர்வார் உள்ளன. சில எரிந்து மடிந்துப் போகின்றன. சில சுற்றி வந்து சென்று விடுகின்றன. ஸ்ரீமத்படி நீங்கள் தான் நடக்க முடியும். எங்காவது ஸ்ரீமத்படி நடக்கவில்லை என்றால் மாயா பின் தொடர்ந்து கொண்டே இருக்கும். ஸ்ரீமத்துக்கு அதிகமான மகிமை பாடப் பட்டுள்ளது. ஸ்ரீமத் பகவத் கீதா எனச் சொல்லப்படுகின்றது. சாஸ்திரங்களையோ பிற்காலத்தில் யார் உருவாக்கினார்களோ, அச்சமயம் புத்தி ரஜோ நிலையில் உள்ள காரணத்தால் கிருஷ்ணர் துவாபர யுகத்தில் வந்ததாகப் புரிந்து கொண்டு விட்டனர். எப்போது ஆதி சநாதன தேவி-தேவதா தர்மம் மறைந்து விடுகின்றதோ, நாம் கூட தேவி-தேவதா தர்மத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தோம் என்பதை மறந்து விடுகின்றனரோ, அப்போது நான் வருகிறேன். தங்களுடையது இந்து தர்மம் எனச் சொல்லி விடுகின்றனர். இதுவும் டிராமாவில் விதிக்கப்பட்டுள்ளது. எப்போது இது போன்று மறந்து விடுகின்றனரோ, அப்போது மீண்டும் வந்து தேவி-தேவதா தர்மத்தை ஸ்தாபனை செய்வேன். இந்தத் தந்தை ஒருவர் தான் வந்து துக்கதாமத்திலிருந்து சுகதாமத்தின் எஜமானர்களாக ஆக்குகிறார். நீங்கள் சொல்வீர்கள், நாங்கள் இப்போது நரகத்தின் எஜமானர்களாக உள்ளோம் என்று உலகம் தமோபிரதானமாகவோ ஆகத் தான் வேண்டும். அனைவரும் தூய்மையற்று  இருப்பதால் தான் தூய்மையானவர்கள் முன் சென்று தலை வணங்குகின்றனர். இப்போது பாபா சொல்கிறார், ஸ்ரீமத் படி நடந்து செல்லுங்கள். ஜென்ம-ஜென்மாந்தரத்தின் சுமை தலை மீது அதிகம் உள்ளது. இல்லையென்றால் ஐயோ எனக் கூக்குரலிட வேண்டியதிருக்கும். அவர்களோ, ஆத்மா நிர்லேப் (அதில் பாவ-புண்ணியம் ஒட்டாது) என நினைக்கின்றனர். ஆனால் அப்படி இல்லை. ஆத்மா தான் சுகம்-துக்கத்தை அனுபவிக்கின்றது. இதை யாரும் புரிந்து கொள்வதில்லை. பாபா அடிக்கடி புரிய வைக்கிறார் - இலக்கு மிகவும் உயர்ந்தது. இச்சமயம் துக்கத்தில் இருக்கும் போது நீங்கள் புருஷார்த்தம் செய்கிறீர்கள். சத்யுகத்தில் நாம் மிகுந்த சுகத்தில் இருப்போம் என்பதை அறிந்திருக்கிறீர்கள். மீண்டும் நாம் துக்க உலகிற்குச் செல்லப் போகிறோம் என்று அங்கே இது தெரியாது. நாம் சுகத்தில் எப்படி வந்திருக்கிறோம், எத்தனை ஜென்மங்கள் எடுப்போம் என்பது எதுவுமே தெரியாது. இப்போது நீங்கள் அறிவீர்கள், உயர்ந்தவர் யார்? நீங்கள் ஈஸ்வரனின் குழந்தைகளாக இருக்கும் காரணத்தால் எப்படி ஈஸ்வரன் ஞானம் நிறைந்தவராக உள்ளாரோ, அது போல் நீங்களும் ஞானம் நிறைந்தவர்கள் ஆகிறீர்கள். இப்போது நீங்கள் ஈஸ்வரிய குழந்தைகள், ஆனால் வரிசைப்படிதான் இருக்கிறீர்கள். சிலரோ மிகுந்த போதையில் உள்ளனர், நாம் பாபாவின் வழிப்படி நடந்து கொண்டே இருக்கிறோம் எனப் புரிந்து கொண்டுள்ளனர். பாபாவின் வழிமுறைப்படி எந்தளவு நடக்கிறீர்களோ, அந்தளவு உயர்ந்தவர்களாக ஆவீர்கள். பாபா முன்னிலையில் அமர்ந்து குழந்தைகளுக்குப் புரிய வைக்கிறார். குழந்தைகளே, தேக அபிமானத்தை விட்டு விடுங்கள். (தேகி) ஆத்ம அபிமானி ஆகுங்கள். நிரந்தரமாக நினைவு செய்யுங்கள். பாபாவோ எப்போதுமே சுகமளிப்பவர். துக்கத்தையும் பாபா தான் கொடுக்கிறார் என்பதில்லை. தந்தை ஒரு போதும் குழந்தைகளுக்கு துக்கம் தர மாட்டார். குழந்தைகள் தங்களின் தலைகீழான நடத்தையினால் துக்கத்தை அடைகின்றனர். தந்தை துக்கம் தரக்கூடியவரல்ல. ஹே பகவானே, குழந்தை கொடுப்பீர்களானால் குலம் தளைக்கும் எனச் சொல்கின்றனர். குழந்தைகள் மீது மிகுந்த அன்பு செலுத்துகின்றனர். மற்றப்படி தங்களின் கர்மங்களினால் தான் துக்கம் அடைகின்றனர். இப்போது பாபா குழந்தைகளாகிய உங்களை மிகுந்த சுகம் நிறைந்தவர்களாக ஆக்குகிறார். ஸ்ரீமத் படி நடந்து செல்லுங்கள் எனச் சொல்கிறார். அசுர வழிப்படி நடப்பதால் நீங்கள் துக்கம் அடைகிறீர்கள். குழந்தைகளே, தந்தை அல்லது ஆசிரியர் அல்லது பெரியவர்களின் கட்டளையை ஏற்று நடக்கவில்லை என்றால் துக்கம் அடைகிறீர்கள். துக்கம் கொடுப்பவர்களாக தாங்களே ஆகின்றனர். மாயாவுடையவர்களாக ஆகி விடுகின்றனர்.ஈஸ்வரனின் வழிமுறை இப்போது தான் உங்களுக்குக் கிடைக்கின்றது. ஈஸ்வரிய வழியின் பலன் 21 பிறவிகளுக்கு நடைபெறுகின்றது. பிறகு அரைக்கல்பத்திற்கு மாயாவின் வழிப்படி நடக்கின்றனர். ஈஸ்வரன் ஒரே ஒரு முறைவந்து வழிமுறை தருகிறார். மாயாவோ அரைக் கல்பமாக தவறான வழிமுறை கொடுத்துக் கொண்டே இருக்கிறது. தந்தை கல்பத்தில் ஒரு தடவை மட்டும் ஸ்ரீமத் தருகிறார். மாயாவின் வழிப்படி நடந்து நூறு சதவிகிதம் துர்பாக்கியசாலி ஆகி விட்டனர். ஆக, யார் நல்ல-நல்ல மலர்களாக உள்ளனரோ, அவர்கள் அதே குஷியில்மகிழ்ந்திருப்பார்கள். வரிசைக்கிரமமாக உள்ளனர் இல்லையா? சில விட்டில் பூச்சிகளோ, பாபாவுடையவர்களாக ஆகி ஸ்ரீமத் படி நடக்கின்றனர். ஏழைகள் தான் தங்களின் அன்றாடக் கணக்கை எழுதுகின்றனர். பணக்காரர்களுக்கு பயம் உள்ளது-இங்கே நமது பணத்தை எடுத்துக் கொள்வார்களோ அல்லது மாட்டார்களா? பணக்காரர்களுக்கு மிகவும் கஷ்டம். பாபா சொல்கிறார்-நான் ஏழைப் பங்காளன். தானமும் எப்போதும் ஏழைகளுக்குத் தான் கொடுக்கப் படுகின்றது. சுதாமாவின் விஷயம் உள்ளது இல்லையா? கைப்பிடி அரிசி பெற்றுக் கொண்டு அவருக்கு மாளிகை கொடுத்ததாக. நீங்கள் ஏழைகள். யாரிடமாவது 25-50 ரூபாய் உள்ளது என வைத்துக் கொள்வோம், அதில் 20-25 பைசா கொடுப்பார்கள். பணக்காரர்கள் 50 ஆயிரம் கொடுத்தாலும் கூட அது சமமாக ஆகி விடும். அதனால் ஏழைப் பங்காளன் என்ற பெயர் பாடப் பட்டுள்ளது. பணக்காரர்களும் கூட சொல்கின்றனர்-எங்களுக்குநேரம் கிடைப்பதில்லை என்று. ஏனென்றால் முழு நிச்சயம் இல்லை. நீங்கள் ஏழைகள். ஏழைகளுக்குப் பணம் கிடைத்தால் குஷி ஏற்படுகின்றது. பாபா புரிய வைத்துள்ளார், இங்குள்ள ஏழைகள் அங்கே பணக்காரர்களாகஆகி விடுவார்கள். மேலும் இங்குள்ள பணக்காரர்கள் அங்கே ஏழையாக ஆகி விடுவார்கள்.அநேகர் கேட்கின்றனர்-நாங்கள் யக்ஞத்தைப் பற்றிய சிந்தனை வைப்பதா அல்லது குடும்பத்தைப் பற்றிய சிந்தனை வைப்பதா? பாபா சொல்கிறார், நீங்கள் உங்கள் குடும்பத்தை மிக நன்றாகப் பராமரியுங்கள். நீங்கள் இச்சமயம் ஏழையாக இருப்பது நல்லது. பணக்காரர்களாக இருந்தால் பாபாவிடமிருந்து முழு ஆஸ்தியைப் பெறமுடியாது. சந்நியாசிகள் இது போல் சொல்ல மாட்டார்கள். அவர்களோ பணத்தைப் பெற்றுக் கொண்டு தங்களுக்காக சொத்தை உருவாக்கிக் கொள்வார்கள். சிவபாபா அது போல் செய்ய மாட்டார். இந்தக் கட்டடங்கள் முதலியவை அனைத்தும் குழந்தைகளாகிய நீங்கள் உங்களுக்காகவே உருவாக்கியிருக்கிறீர்கள். இவை யாருடைய சொத்தும் கிடையாது. இதுவோ தற்காலிகமானது. ஏனென்றால் கடைசி நேரத்தில் குழந்தைகள் இங்கே வந்து தங்க வேண்டும். நம்முடைய நினைவுச் சின்னமும் இங்கே உள்ளது. ஆக, கடைசியில் இங்கே வந்து ஓய்வெடுப்பீர்கள். யார் யோக நிலையில் இருக்கின்றனரோ, அவர்கள் இங்கே பாபாவிடம் ஓடி வருவார்கள். அவர்களுக்கு உதவியும் கிடைக்கும். பாபாவின் உதவி அதிகம் கிடைக்கின்றது. நீங்கள் இங்கே (மதுபனில்) அமர்ந்தவாறு விநாசத்தைப் பாôப்பீர்கள். எப்படி ஆரம்பத்தில் பாபா குழந்தைகளாகிய உங்களை மகிழ்வித்தார். மீண்டும் கடைசியில் மகிழ்விப்பது ஆரம்பமாகும். மிகுந்த அன்பு காட்டுவார். எப்படி வைகுண்டத்தில் அமர்ந்துள்ளோம் என்பது போல் மிகவும் நெருக்கத்தில் சென்று கொண்டே இருப்பீர்கள். நாம் யாத்திரையில் இருக்கிறோம் என்பதையோ புரிந்து கொண்டிருக்கிறீர்கள். கொஞ்ச காலத்திற்குப் பிறகு விநாசம் நடைபெறும். நீங்கள் மிகுந்த குஷி அடைவீர்கள். அவ்வளவு தான், நாம் போய் இளவரசர் ஆகப் போகிறோம். வித-விதமான மலர்களாகஉள்ளனர். ஒவ்வொரு குழந்தையும் புரிந்து கொள்ள வேண்டும் - நான் எவ்வளவு ஞானத்தின் நறுமணம் தந்து கொண்டு இருக்கிறேன்? யாருக்காவது ஞானம் மற்றும் யோகத்தின் கல்வி கற்றுத் தருகிறேனா? யார் செய்கிறார்களோ, அவர்கள் உள்ளுக்குள் மகிழ்ந்திருப்பார்கள். இவர்கள் எந்த மன நிலையில் உள்ளனர் என்பதை பாபா அறிந்து கொள்வார். இவர்களின் நிலைப்பாடு எது வரை தாவி முன்னேற வைக்கும்? யார் விட்டில் பூச்சியாக ஆகி விட்டிருக்கிறார்களோ, அவர்களைத் தாவி முன்னே செல்ல வைக்கும். பாபா புரிய வைக்கிறார், மாயாவின் புயல்களோ அநேகம் வரும். அவற்றிடம் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இப்போது இந்த இராஜயோகத்தைப் பரமபிதா பரமாத்மா வந்து கற்றுத் தருகிறார். பரமாத்மா வந்து ஆத்மாக்களுக்குப் புரிய வைக்கிறார். ஆத்மாவுக்கு ஞானம் உள்ளது - நான் ஆத்மா என்னுடைய இந்த சகோதர ஆத்மாவுக்குப் புரிய வைக்கிறேன். எப்படி பரமாத்மா தந்தை ஆத்மாக்களாகிய நமக்குப் புரிய வைக்கிறாரோ, அது போல. நாமும் ஆத்மாக்கள். பாபா நமக்குக் கற்பிக்கிறார். நான் பிறகு இந்த ஆத்மாக்களுக்குப் புரிய வைக்கிறேன். ஆனால் இந்த ஆத்மா என்ற தன்மையின் நிச்சயம் இல்லாததால் தன்னை மனிதர் எனப் புரிந்து கொண்டு மனிதர்களுக்குத் தான் புரிய வைக்கின்றனர். நான் பரமாத்மா ஆத்மாக்களாகிய உங்களோடு உரையாடுகிறேன். நீங்கள் ஆத்மாவுக்குச் சொல்கிறீர்கள். இது போல் நீங்கள் ஆத்ம அபிமானி ஆகி யாருக்காவது சொல்வீர்களானால் உடனே அவர்களுக்குப் புரியும். தானே ஆத்ம அபிமானியாக இருக்க முடிவில்லை என்றால் தாரணை செய்விக்க முடியாது. இது மிக உயர்ந்த குறிக்கோள். புத்தியில் இது இருக்க வேண்டும்-நாம் இந்த உறுப்புகள் மூலம் கேட்கிறோம். ஆத்மாக்களாகிய நம்மோடு பேசுவதாக பாபா சொல்கிறார். பாபாவின் கட்டளையாவது-அசரீரி ஆகுங்கள். தேக அபிமானத்தை விட்டு விடுங்கள். என்னை நினைவு செய்யங்கள் - இது புத்தியில் வர வேண்டும். நான் ஆத்மாவோடு பேசுகிறேன், சரீரத்தோடல்ல. பெண்ணாக இருந்தாலும் அவருடைய ஆத்மாவோடு தான் பேசுகிறேன். குழந்தைகள் நீங்கள் புரிந்து கொண்டிருக்கிறீர்கள், நாம் பாபாவுடையவர்களாகவோ ஆகி விட்டிருக்கிறோம். ஆனால் அப்படி இல்லை. இதில் மிக சூட்சுமமாக புத்தி செல்கிறது. நான் ஆத்மா, இவர் ஆத்மாவுக்குப் புரிய வைக்கிறேன். இவர் நம்முடைய சகோதரர், இவருக்கு வழி சொல்ல வேண்டும். ஆத்மா புரிந்து கொண்டிருக்கிறது. அது போல் புரிந்து கொள்ளுங்கள். அப்போது புத்தியில் பதியும். தேகத்தைப் பார்த்துச் சொல்கிறீர்கள் என்றால் ஆத்மா கேட்பதில்லை. முதலில் இந்த எச்சரிக்கை கொடுங்கள் - நான் ஆத்மாவோடு பேசுகிறேன். ஆத்மாவை ஆண் என்றோ, பெண் என்றோ சொல்ல மாட்டார்கள். ஆத்மாவோ தனிப்பட்டது. ஆண்-பெண் என்பது சரீரத்தினால் பெயரிடப்படுகின்றது. எப்படி பிரம்மா-சரஸ்வதியை ஆண்-பெண் எனச் சொல்வார்கள், அது போல. சிவபாபாவை ஆண் என்றோ, பெண் என்றோ சொல்ல மாட்டார்கள். ஆக, பாபா ஆத்மாக்களுக்குப் புரிய வைக்கிறார். பெரிய குறிக்கோளாகும். பாயின்ட் மிகவும் கடினமானது. ஆத்மாவுக்கு இஞ்செக்ஷன் போட வேண்டும். அப்போது தேக ஆபிமானம் விடுபடும். இல்லை யென்றால் நறுமணம் வராது. சக்தி இருக்காது. விசயம் என்னவோ மிகவும் சிறியது தான். நாம் ஆத்மாவோடு பேசிக் கொண்டிருக்கிறோம். பாபா சொல்கிறார்-நீங்கள் திரும்பிச் செல்ல வேண்டும். அதனால் ஆத்ம அபிமானி ஆகுங்கள். மன்மனாபவ. பிறகு தானாகவே மத்யாஜீபவ வந்து விடுகின்றது. இப்போது மிக சூட்சுமமான புத்தி கிடைக்கின்றது. அதிகாலை அமர்ந்து விசார் சாகர் மந்தன் செய்யுங்கள். பகலிலோ சேவை செய்ய வேண்டும். ஏனென்றால் கர்மயோகிகள் நீங்கள். எழுதப் பட்டும் உள்ளது-தூக்கத்தை வென்றவர் ஆகுங்கள். இரவில் கண் விழித்து வருமானத்தைச் சம்பாதியுங்கள். பகலிலோ மாயாவின் பெரிய தொந்தரவு உள்ளது. அமிர்தவேளையில் வாயுமண்டலம் நன்றாக உள்ளது. பாபாவுக்கு இன்ன நேரத்தில் எழுந்து விசார் சாகர் மந்தன் செய்கிறோம் என்பதை எழுதுவதில்லை பெரிய முயற்சியாகும். உலகத்திற்கு நீங்கள் எஜமானர் ஆகிறீர்கள். இங்கோ எல்லைக்குட்பட்ட எஜமானர்களாக இருக்கிறீர்கள். தண்ணீரின் எல்லைக்காகவும் கூட எவ்வளவு சண்டைகள் நடந்து கொண்டிருக்கின்றன! விரோதம் ஏற்படுகின்றது. தங்களுக்குள் ஒருவருக்கொருவர் சகோதரர் என நினைப்பதில்லை. நாம் அனைவரும் ஒன்று என்று சும்மா வாய் வார்த்தை சொல்லி விடுகின்றனர். ஒன்றாகவோ ஆக முடியாது. அநேக ஆத்மாக்கள் உள்ளனர். அனைவருக்கும் அவரவர் பார்ட் உள்ளது. நீங்கள் இங்கே அமர்ந்திருக்கிறீர்கள். கல்பத்திற்கு முன்பும் கூட அமர்ந்திருப்பீர்கள். இலை அசைவது டிராமாவின் படி ஒவ்வோர் இலையையும் பரமாத்மா அசைக்கிறார் என்பதல்ல. இப்படி-இப்படி விசயங்களைப் புரிந்து கொண்டு பிறகு புரிய வையுங்கள். ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள முடியும்-நாம் விட்டில் பூச்சியாக ஆகியிருக்கிறோம். நாம் பாபாவின் வழிப்படி நடந்து கொண்டே இருக்கிறோம். தவறான விஷயங்களையோ பேசுவதில்லை. எங்காவது தன்னுடைய பணத்தைப் பாவத்தின் பக்கம் ஈடுபடுத்தாமல் இருக்கிறோமா? நல்லது.இனிமையிலும் இனிமையான தேடிக்கண்டெடுக்கப் பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவு மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே!தாரணைக்கான முக்கிய சாரம் :

1) தன்னை ஆத்மா என உணர்ந்து ஆத்மாவோடு உரையாட வேண்டும். ஆத்ம அபிமானி ஆகி கேட்பதாலும் சொல்வதாலும் தாரணை நன்றாக இருக்கும்.2) தூக்கத்தை வென்றவராக ஆக வேண்டும். இரவில் கண் விழித்து வருமானத்தைச் சம்பாதிக்க வேண்டும். விசார் சாகர் மந்தன் செய்ய வேண்டும். எந்த ஒரு தவறான பேச்சிலும் தனது நேரத்தை வீணடிக்கக் கூடாது.வரதானம் :

சாகார் தந்தைக்கு (பிரம்மா) சமமாக தனது ஒவ்வொரு கர்மத்தையும் நினைவுச் சின்னமாக ஆக்கக் கூடிய ஆதார மூர்த்தி மற்றும் முன்னேற்றக் கூடிய மூர்த்தி ஆகுக.எப்படி சாகாரத் தந்தை தமது ஒவ்வொரு கர்மத்தையும் நினைவுச் சின்னமாக ஆக்கினார். அது போல் உங்கள் அனைவருடைய ஒவ்வொரு கர்மமும் நினைவுச் சின்னமாக எப்போது ஆகும் என்றால் நீங்கள் தன்னை ஆதார மூர்த்தி மற்றும் முன்னேறச் செய்யும் மூர்த்தி என உணர்ந்து நடந்து கொள்ளும் போது. யார் தங்களை உலக மாற்றத்தின் ஆதார மூர்த்தி என உணர்கிறார்களோ, அவர்களின் ஒவ்வொரு கர்மமும் உயர்ந்ததாக இருக்கும். மற்றும் விருத்தி-திருஷ்டியில் அனைவருக்குமான நன்மையின் பாவனை இருக்குமானால் ஒவ்வொரு கர்மமும் உயர்ந்ததாக ஆகி விடும். அத்தகைய சிரேஷ்ட கர்மம் தான் நினைவுச் சின்னமாக ஆகும்.சுலோகன் :

சத்தியதாவின் சக்தியை தாரணை செய்வதற்கு சகிப்புத் தன்மை உள்ளவராக ஆகுங்கள்.***OM SHANTI***

Whatsapp Button works on Mobile Device only