15 June 2016

BK Murli 16 June 2016 Tamil


BK Murli 16 June 2016 Tamil

16.06.2016    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


இனிமையான குழந்தைகளே! நீங்கள் தான் ஆன்மீக வழிகாட்டிகள். நீங்கள் இல்லற விஷயங்களை பராமரித்தபடியே தாமரை மலர் போல் ஆகி நினைவின் யாத்திரை செய்ய வேண்டும் மற்றும் செய்விக்க வேண்டும்.கேள்வி:

தந்தை குழந்தைகளுக்கு என்ன அலங்காரம் செய்கிறார்? எந்த அலங்காரத்திற்கு தடை செய்கிறார்?பதில்:

பாபா சொல்கிறார் - இனிமையான குழந்தைகளே, நான் உங்களுக்கு ஆன்மீக அலங்காரம் செய்வதற்காக வந்துள்ளேன், நீங்கள் எப்போதும் ஸ்தூலமான அலங்காரம் செய்துக் கொள்ளக் கூடாது. நீங்கள் பிச்சைக்காரர்கள். உங்களுக்கு நாகரீக அலங்காரத்தின் (ஃபேஷன்) மீது ஆர்வம் இருக்கக் கூடாது. உலகம் மிகவும் கெட்டதாக உள்ளது, ஆகையால் கொஞ்சம் கூட சரீரத்திற்கு ஃபேஷன் செய்துக் கொள்ளக் கூடாது.பாடல்:

இறுதியில் அந்த நாளும் வந்தது இன்று. . . .ஓம் சாந்தி.

எல்லைக்கப்பாற்பட்ட தந்தை வந்து எல்லைக்கப்பாற்பட்ட குழந்தைகளுக்குப் புரிய வைக்கிறார். எல்லைக்கப்பாற்பட்டவர் என்றால் எந்த எல்லையும் இல்லாதவர். எவ்வளவு அளவற்ற குழந்தைகள் உள்ளனர். இவ்வளவு எண்ணிக்கையில் உள்ள குழந்தைகளுக்கு ஒருவர்தான் தந்தை, அவர் படைப்பவர் என சொல்லப்படுகிறார். அவர்கள் எல்லைக்குட்பட்ட தந்தைமார்கள், இவர் எல்லைக்கப்பாற்பட்ட ஆத்மாக்களின் தந்தை. அவர்கள் எல்லைக்குட்பட்ட ஸ்தூலமான தந்தையர், இவர் எல்லைக்கப்பாற்பட்ட ஆத்மாக்களின் ஒரே தந்தை. அவரை பக்தி மார்க்கத்தில் அனைத்து ஆத்மாக்களும் நினைவு செய்கின்றனர். பக்தி மார்க்கமும் உள்ளது, கூடவே இராவண இராஜ்யமும் உள்ளது என குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். எங்களை இராவண இராஜ்யத்திலிருந்து ராம இராஜ்யத்திற்கு அழைத்துச் செல்லுங்கள் என இப்போது மனிதர்கள் கூக்குரலிடுகின்றனர். தந்தை புரிய வைக்கிறார் - பாருங்கள், பாரதத்தின் எஜமானர்களாக இருந்த தேவி தேவதைகள் இப்போது இல்லை. அவர்கள் யார் என்பதையும் இப்போது நீங்கள் அறிவீர்கள். நாம்தான் சத்யுகத்தின் சூரிய வம்ச குலத்தின் எஜமானாக இருந்தோம். ராஜா, ராணி இருக்கின்றனர் அல்லவா. குழந்தைகளாகிய உங்களுக்கு இப்போது நினைவு வந்துள்ளது. குழந்தைகளாகிய நமக்கு இராஜ்ய பாக்கியத்தின் ஆஸ்தியை கொடுக்க, உலகின் எஜமானாக ஆக்க தந்தை வந்து விட்டார். இப்போது அனைவரும் பக்தி மார்க்கத்தில் உள்ளனர், பக்தி மார்க்கம்தான் இராவண இராஜ்யம் எனப்படுகிறது. ஞான மார்க்கத்தை ஒரு தந்தை மட்டுமே குழந்தை களாகிய உங்களுக்கு கற்பிக்கிறார். அந்த எல்லைக்கப்பாற்பட்ட தந்தையை பக்தி மார்க்கத்தில் அனைவருமே நினைவு செய்கின்றனர். இப்போது உங்களுக்கு 21 பிறவிகளுக்கு ஞானத்தின் இராஜ்யம் கிடைக்கிறது. பிறகு அரைக் கல்ப காலம் நீங்கள் கூப்பிடவே போவதில்லை. ஐயோ ராமா. . . ஐயோ பிரபு . . . என சொல்ல வேண்டிய அவசியமே இருக்காது. துக்கம் மிக்கவர்களாக ஆகும்போது ஐயோ ராமா என அழைக்கின்றனர். உங்களுக்கு அங்கே துக்கமே ஏற்படாது. இதுவும் ஒரு விளையாட்டாக உருவாகியுள்ளது என இப்போது நீங்கள் அறிவீர்கள். அரைக் கல்ப காலத்திற்கு ஞானத்தின் பகல், அரை கல்ப காலம் பக்தியின் இரவு இருக்கும். பக்தி நம்மை கீழே இறங்க வைக்கும். குழந்தைகளாகிய உங்கள் புத்தியில் ஏணிப்படிகளின் ஞானம் கண்டிப்பாக இருக்க வேண்டும். இது 84 பிறவிகளின் சக்கரமாகும் என தந்தை புரிய வைக்கிறார். இந்த சக்கரத்தை அறிவதன் மூலம் நீங்கள் சக்கரவர்த்தி ராஜாவாக ஆகப் போகிறீர்கள், ஆகையால் பாபா படங்ளையும் உருவாக்க வைத்துக் கொண்டிருக்கிறார். இதிலிருந்து நிரூபணம் ஆகும் - நாம் இந்த சக்கரத்தை அறிவதன் மூலம் 21 பிறவிகளுக்கு இராஜ்ய பாக்கியத்தை எடுக்கிறோம்.இப்போது நீங்கள் அதிக எண்ணிக்கை ஆகியுள்ளீர்கள். பெரிய ஆன்மீக சக்தி சேனை உருவாகியுள்ளது. நீங்கள் அனைவரும் வழிகாட்டிகள். பாபாவும் கூட வழிகாட்டி தான். அவர் கைடு (வழிகாட்டி) எனப்படுகிறார். வழிகாட்டி எனும் பெயர் நன்றாக உள்ளது. யாத்திரைக்கு அழைத்துச் செல்பவர் வழிகாட்டி எனப்படுகிறார். யாத்திரீகர்கள் சென்றார்கள் என்றால் அவர்களுக்கு அனைத்தையும் காட்டுவதற்கென ஒரு வழிகாட்டி கிடைக்கிறார். தீர்த்த யாத்திரையிலும் கூட வழிகாட்டிகள் கிடைக்கின்றனர். தந்தை சொல்கிறார் - பிறவி பிறவிகளாக தீர்த்த யாத்திரை செய்தபடி வந்தீர்கள். அமர்நாத்திற்குச் செல்கின்றனர், தீர்த்தங்களுக்குச் செல்கின்றனர். ஊர்வலம் செல்கின்றனர். அங்கே போகும் நேரத்தில் பிறகு அந்த நினைவே இருக்கும். வீடு வாசல், வேலை, தொழில் என அனைத்திலிருந்தும் மனம் விடுபட்டு விடுகிறது. தனது வீடு இல்லறத்தில் இருந்தபடி வேலை தொழில் செய்தபடி இருங்கள், மேலும் பிறகு குப்தமான (மறைமுகமான) யாத்திரையில் இருங்கள் என்று இங்கே உங்களுக்குப் புரிய வைக்கப்படுகிறது. இது எவ்வளவு நன்றாக உள்ளது. எவ்வளவு பெரிய வியாபாரம் செய்ய வேண்டுமோ செய்யுங்கள். யாருக்கும் தடை கிடையாது. தம்முடைய இராஜ்யத்தையும் பராமரியுங்கள். ஜனகராஜாவுக்கும் கூட ஒரு வினாடியில் ஜீவன் முக்தி கிடைத்தது. உங்களுக்கு வெளியில் செய்யக்கூடிய யாத்திரையில் சென்று ஏமாற வேண்டிய அவசியமில்லை. தனது வீடு வாசலையும் கூட முழுமையாக பராமரிக்கவே வேண்டும். யார் புத்திசாலிகளாக நல்ல குழந்தைகளாக இருப்பார்களோ, அவர்கள் நாம் இல்லறத்தில் இருந்தபடியே தாமரை மலர் போல் ஆகவேண்டும் என புரிந்து கொள்வார்கள். இல்லற விஷயங்களில் கஷ்டப்படக் கூடாது. குமார், குமாரிகள் சன்னியாசிகளைப் போல, அவர்களுக்குள் விகாரங்கள் இல்லை. 5 விகாரங்களிலிருந்து தூரமாக உள்ளனர். நம்முடைய அலங்காரமே வேறு விதமானது, அவர்களுடையதே வேறு என இப்போது குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். அவர்களுடையது தமோபிரதானமான அலங்காரம், உங்களுடையது சதோபிரதானமான அலங்காரம், அதன் மூலம் நீங்கள் சதோபிரதானமாக சூரிய வம்சத்தின் இராஜ்யத்தில் வரவேண்டும். தந்தை குழந்தைகளாகிய உங்களுக்குப் புரிய வைக்கிறார் - தமோபிரதானமான ஸ்தூலமான அலங்காரம் கொஞ்சம் கூட செய்யாதீர்கள். உலகம் மிகவும் பொல்லாதது. இல்லறத்தில் இருந்தபடி அலங்காரப் பிரியர்களாக (ஃபேஷனபிள்) ஆகாதீர்கள். ஃபேஷன் கவர்ந்து ஈர்க்கும். இந்த சமயத்தின் அழகு நன்றாக இல்லை. கருப்பாக இருந்தீர்கள் என்றால் நல்லது. யாரும் தீண்ட மாட்டார்கள். அழகானவர்களின் பின்னால் அலைந்தபடி இருப்பார்கள். கிருஷ்ணரையும் கூட கருப்பாக காட்டுகின்றனர். நீங்கள் சிவபாபாவின் மூலம் வெள்ளையாக (அழகாக) ஆக வேண்டும். அவர்கள் பவுடர் முதலானவற்றின் மூலம் வெள்ளையாக ஆகின்றனர். எவ்வளவு ஃபேஷன், கேட்கவே வேண்டாம். பணக்காரர்களுடையது சத்ய நாசம் ஆகப் போகிறது. ஏழைகள் நல்லவர்கள். கிராமங்களில் சென்று ஏழைகளுக்கு நன்மை செய்ய வேண்டும். ஆனால் சப்தத்தை எழுப்பக்கூடிய மனிதர்கள் பெரிய மனிதர்களாக இருக்க வேண்டும். நீங்கள் அனைவரும் ஏழைகள்தானே. யாராவது பணக்காரர்கள் இருக்கிறார்களா என்ன? உங்களைப் பாருங்கள் எவ்வளவு சாதாரணமாக அமர்ந்திருக்கிறீர்கள். பம்பாயில் பார்த்தால் எவ்வளவு ஃபேஷன் ஏற்பட்டிருக்கிறது! பாபாவை யாராவது சந்திக்க வந்தால் அவர்களுக்குச் சொல்கிறேன் - ஸ்தூல அலங்காரம் செய்திருக்கிறீர்கள், இப்போது வந்தீர்கள் என்றால் ஞானத்தின் அலங்காரம் செய்விப்போம், அதன் மூலம் நீங்கள் சொர்க்கத்தின் தேவதையாக 21 பிறவிகளுக்கு ஆகி விடுவீர்கள். எப்போதும் சுகம் மிக்கவர்களாக ஆகி விடுவீர்கள். ஒரு போதும் அழ மாட்டீர்கள், துக்கம் ஏற்படாது. இப்போது இந்த ஸ்தூல அலங்காரத்தை நீங்கள் விட்டு விடுங்கள். உங்களுக்கு நாங்கள் ஞான ரத்தினங்களால் அப்படி முதல் தரமாக அலங்கரிப்போம், அதைப் பற்றி கேட்கவே வேண்டாம். ஒருவேளை என் வழிப்படி நடந்தீர்கள் என்றால் உங்களை பட்டத்து ராணியாக்குவேன். இது நன்றாக உள்ளது அல்லவா. அனைத்து பாரதவாசிகளாகிய உங்களை இந்த தமோபிரதானமான அசுரத்தனமான உலகமாகிய நரகத்திலிருந்து அழைத்துச் இழுத்துச் சென்று சொர்க்கத்தின் மஹாராணி ஆக்குகிறேன்.இன்று நாம் வெள்ளை உடையில் இருக்கிறோம், அடுத்த பிறவியில் தங்கக் கரண்டியால் பால் குடிப்போம் என குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். இதுவோ மிகவும் சீச்சீ (கீழான) உலகம் ஆகும். சொர்க்கம் என்றால் சொர்க்கம், கேட்கவே வேண்டாம். இங்கே நீங்கள் பிச்சைக்காரர்களாக இருக்கிறீர்கள். பாரதம் பிச்சைக்கார தேசமாக உள்ளது. பிச்சைக்காரரிலிருந்து இளவரசன் என பாடப்பட்டுள்ளது. இந்த பாரதத்தில்தான் மீண்டும் பிறவி எடுப்போம். தந்தை நம்மை சொர்க்கத்தின் எஜமானாக ஆக்கியிருந்தார், இரவு பகலுக்கான வித்தியாசம் உள்ளது. மகா ஏழை, உண்ணவும் ஏதுமற்றவர்களுக்குத்தான் தானம் கொடுக்கப்படுகிறது. பாரதம்தான் மகா ஏழையாக உள்ளது. இந்த சமயம் அனைவரும் தமோபிரதானமாக உள்ளனர் என்பது பாவம் அவர்களுக்குத் தெரியவில்லை. நாளுக்கு நாள் ஏணியில் கீழேதான் இறங்கியபடி உள்ளனர். இப்போது யாரும் ஏணியில் ஏற முடியாது. 16 கலைகளிலிருந்து 14 கலைகள், பிறகு 12 கலைகள். . . கீழே இறங்கியபடிதான் வருகின்றனர். இந்த லட்சுமி நாராயணரும் கூட முதலில் 16 கலைகளில் நிறைந்திருந்தனர், பிறகு 14 கலைகளில் இறங்கி வருகின்றனர் அல்லவா. இதையும் கூட நல்ல விதமாக நினைவு செய்ய வேண்டும். ஏணியில் இறங்கி இறங்கி முற்றிலுமே தூய்மையற்றவர்களாக ஆகியுள்ளனர். பிறகு சொர்க்கத்தின் எஜமானாக யார் ஆக்குவார்கள்? உலகின் இந்த வரலாறு புவியியல் மீண்டும் நடக்கும், இதைக் கூட அனைவரும் சொல்கின்றனர், ஆனால் இப்போது எந்த வரலாறு மீண்டும் நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது. சத்யுகத்தின் ஆயுள் லட்சக்கணக்கான, கோடிக்கணக்கான வருடங்கள் என சாஸ்திரங்களில் எழுதி விட்டனர். சத்யுகம் எப்போது வரும்? என கேளுங்கள். இன்னும் 40 ஆயிரம் வருடங்கள் இருக்கின்றன என சொல்வார்கள். கல்பத்தின் ஆயுளே 5 ஆயிரம் வருடங்கள் தான் என நீங்கள் அடித்துச் சொல்கிறீர்கள். அவர்கள் பிறகு சத்யுகத்திற்கே லட்சக்கணக்கான வருடங்கள் கொடுத்து விட்டனர். பயங்கர காரிருளாக உள்ளது அல்லவா. ஆகவே பகவான் வந்து விட்டிருப்பார் என்பதை எப்படி ஏற்பார்கள்? கலியுகத்தின் இறுதி ஏற்படும்போது பகவான் வருவார் என புரிந்து கொள்கின்றனர். இப்போது குழந்தைகளாகிய நீங்கள் இந்த விஷயங்களைப் புரிந்து கொள்கிறீர்கள். வினாசம் கண் முன்னால் நின்றிருக்கிறது. வினாசத்திற்கு முன்பு தந்தையிடமிருந்து ஆஸ்தி எடுத்துக் கொள்ளுங்கள் என குழந்தைகளுக்குப் புரிய வைக்கப்படுகிறது. ஆனால் கும்பகர்ணனின் தூக்கத்தில் ஆழ்ந்திருக்கின்றனர். ஆக பாவப்பட்டவர்கள் ஐயோ ஐயோ என்றபடி இறந்து போவார்கள். உங்களுடைய வெற்றியின் கோஷம் எழும்பும். வினாசத்தில் ஐயோ ஐயோ என்பதுதான் நடக்கும். விபரீத (அன்பற்ற) புத்தி ஐயோ ஐயோ என்றுதான் கதறுவார்கள். இப்போது நீங்கள் உண்மையானவரின் உண்மையான வாரிசுகள். நரகம் வினாசம் ஆகாமல் சொர்க்கம் எப்படி உருவாகும்? இது மகாபாரதப் போர் என நீங்கள் சொல்கிறீர்கள். அதன் மூலமே சொர்க்கத்தின் வாசல் திறக்க வேண்டும். மனிதர்களுக்கு எதுவும் தெரியாது. நமக்கு இப்போது தெய்வீக சுயராஜ்யத்தின் வெண்ணெய் கிடைக்கிறது என்பது உங்களுடைய புத்தியில் உள்ளது. அவர்கள் தங்களுக்குள் சண்டையிட்டபடி இருப்பார்கள். அவர்களும் மனிதர்களே, நீங்களும் மனிதர்களே, ஆனால் அவர்கள் அசுர சம்பிரதாயத்தவர்கள், நீங்கள் தெய்வீக சம்பிரதாயத்தவர்கள். தந்தை குழந்தைகளுக்கு நேரில் புரிய வைக்கிறார். குழந்தைகளாகிய உங்களுக்கு உள்ளுக்குள் குஷி இருக்கிறது. பல முறை நீங்கள் இப்போது போல இராஜ்யத்தை எடுத்தீர்கள், அந்த இரண்டு பூனைகள் தங்களுக்குள் சண்டையிடுகின்றன. முழு உலகின் இராஜ்யத்தின் வெண்ணை உங்களுக்கு கிடைக்கிறது. நீங்கள் இங்கு வருவதே உலகின் எஜமானர் ஆவதற்காக. நாம் பாபாவிடமிருந்து நினைவின் தொடர்பு வைத்து கர்மங்களை வென்ற (கர்மாதீத) நிலையை அடைவோம் என்று உங்களுக்குத் தெரியும். அவர்கள் தங்களுக்குள் சண்டை போடுவார்கள், நாம் உலகின் இராஜ்யத்தை அடைந்தே தீருவோம். இது பொதுவான விஷயமாகும். தோள் (உடல்) பலம் கொண்டவர்கள் உலகின் இராஜ்யத்தை அடைய முடியாது. நீங்கள் யோக பலத்தின் மூலம் உலகின் எஜமானாக ஆகிறீர்கள். உங்களுடையதே அஹிம்சா பரமோ தெய்வீக தர்மம் ஆகும். இரண்டு இம்சைகளும் (வன்முறைகளும்) அங்கே இருக்காது. காமக் கோடரியின் வன்முறை அனைத்திலும் கெட்டதாகும், அது உங்களுக்கு முதல், இடை, கடைசியும் துக்கம் கொடுப்பதாகும். இராவண இராஜ்யம் எப்போது ஏற்படும் என்பது யாருக்கும் தெரியாது. இப்போது கூக்குரலிடுகின்றனர் - வந்து எங்களை தூய்மையாக்குங்கள். எனில், கண்டிப்பாக எப்போதாவது தூய்மையாக இருந்திருப்பார்கள் அல்லவா. பாரதவாசி குழந்தைகள்தான் கூப்பிடுகின்றனர் - துக்கத்திலிருந்து விடுவியுங்கள், சாந்தி தாமத்திற்கு அழைத்துச் செல்லுங்கள். துக்கத்தை நீக்கி சுகத்தைக் கொடுங்கள். கிருஷ்ணரை ஹரி எனவும் சொல்கின்றனர். பாபா எங்களை ஹரியின் துவாரத்திற்கு (வாசலுக்கு) அழைத்துச் செல்லுங்கள். ஹரியின் துவாரம் என்பது கிருஷ்ணபுரியாகும். இது கம்சபுரி. இந்த கம்சபுரி எங்களுக்குப் பிடிக்கவில்லை. மாயா மச்சீந்திரனின் விளையாட்டைக் காட்டுகின்றனர். இராவணனின் இராஜ்யம் துவாபரத் திலிருந்து தொடங்குகிறது என நீங்கள் அறிவீர்கள். தூய்மையாக இருந்த தேவதைகள் தூய்மையை இழக்கத் தொடங்குகின்றனர். இதனுடைய அடையாளங்கள் கூட ஜகநாதபுரியில் உள்ளது. உலகில் மிகவும் அழுக்கு ஏற்பட்டுள்ளது. இப்போது நாம் அந்த அனைத்து விசயங்களிலிருந்தும் வெளியேறி பரிஸ்தானத்திற்கு (சொர்க்கத்திற்குச்) செல்கிறோம். இதில் மிகவும் தைரியமும், மஹாவீர துணிவும் தேவை. பாபாவுடையவராகி பதிதராக (தூய்மையற்றவராக) ஆகக் கூடாது. கணவன் - மனைவி ஒன்றாக இருந்தபடி தீ பற்றாமல் இருப்பது என்பது முடியாத விசயம் என அவர்கள் புரிந்து கொள்கின்றனர், ஆகையால் இங்கே கணவன் - மனைவி, சகோதரன் - சகோதரியாக ஆக்கப்படுகிறார்கள், இப்படி எங்கும் எழுதப்படவில்லை. இங்கே என்ன மாயாஜாலம் உள்ளது என தெரியவில்லையே என குழப்பமடைகின்றனர். அட, நீங்கள் பிரம்மாகுமாரிகளிடம் சென்றீர்கள் என்றால் அவ்வளவுதான், அவர்கள் உங்களை அங்கே கட்டிப் போட்டு விடுவார்கள். இப்படி இப்படியாக அங்கே தவறான தகவல் கூறியபடி இருப்பார்கள். இதுவும் கூட நாடகத்தில் பதிவாகியுள்ளது. யாருடைய நடிப்பு உள்ளதோ அவர்கள் கண்டிப்பாக வந்து விடுவார்கள், இதில் பயப்படுவதற்கான விஷயமே இல்லை. சிவபாபா ஞானக்கடலாக இருப்பவர், பதித பாவனர், அனைவருக்கும் சத்கதி வழங்கும் வள்ளல் ஆவார். பிரம்மாவின் மூலம் தூய்மையற்றவரிலிருந்து தூய்மையானவராக ஆக்குகிறார். இந்த வார்த்தைகளை யார் வேண்டுமானாலும் படிக்கும்படியாக பெரிய பெரிய எழுத்துக்களில் எழுதுங்கள். தூய்மையின் விஷயத்தில்தான் எவ்வளவு தடைகளை ஏற்படுத்துகிறார்கள்!பாபா கூறுகிறார் - குழந்தைகளே எந்த தேகதாரியின் மீதும் கொஞ்சமும் மோகத்தின் ஈர்ப்பு இருக்கக் கூடாது. ஒருவேளை எங்காவது மோகத்தின் ஈர்ப்பு இருந்தது என்றால் மாட்டிக் கொள்வீர்கள். இங்கேயோ அம்மா இறந்தாலும் அல்வா உண்ண வேண்டும் (துக்கப் படாமல் இருக்க வேண்டும்). . . . நாளை யாராவது உங்களுடையவர்கள் இறந்து விட்டால் அழமாட்டீர்கள்தானே என பாபா முன்னால் அமரவைத்து கேட்கிறார். கண்ணீர் வந்தால் தோற்று விட்டீர்கள். ஒரு சரீரத்தை விட்டு இன்னொன்றை எடுத்தார், இதில் அழ வேண்டிய அவசியம் என்ன? வேறு யாராவது கேட்டால் சொல்ல வேண்டும், நன்றாக உள்ளது என்று சொல்லுங்களேன். அட, நல்லதுதான் பேசுகின்றனர். சத்யுகத்தில் அழுகை என்பதே இருக்காது, இந்த உங்களுடைய வாழ்க்கை அதனை விடவும் உயர்வானதாகும். நீங்கள் பிறரை அழுகையிலிருந்து விடுவிக்கக் கூடியவர்கள், பிறகு நீங்கள் எப்படி அழுவீர்கள்? நமக்கு பதிகளுக்கெல்லாம் பதி கிடைத்திருக்கிறார், அவர் நம்மை சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்கிறார். பிறகு நரகத்தில் விழவைக்கக் கூடியவர்களுக்காக நாம் ஏன் அழ வேண்டும்? ஆஸ்தியை எடுப்பதற்காக பாபா எவ்வளவு இனிமையிலும் இனிமையான விசயங்களைப் புரிய வைக்கிறார். இந்த சமயத்தில் பாரதத்திற்கு எவ்வளவு துக்கமான நிலை ஏற்பட்டுவிட்டுள்ளது. தந்தை வந்து நன்மை செய்கிறார். பாரதம் மகத தேசம் எனப்படுகிறது. சிந்திகளைப் போன்ற ஃபேஷனபிள் (அலங்காரப் பிரியர்கள்) வேறு யாரும் கிடையாது. வெளி நாட்டிலிருந்து ஃபேஷன் கற்றுக் கொண்டு வருகின்றனர். கூந்தலை அலங்கரிப்பதற்கு இன்றைய நாட்களின் பெண் பிள்ளைகள் எவ்வளவு செலவு செய்கின்றனர். அவர்கள் நரகத்தின் பரிகள் (தேவதைகள்) எனப்படுகின்றனர். தந்தை உங்களை சொர்க்கத்தின் பரிகளாக ஆக்குகிறார். எங்களைப் பொறுத்தவரையில் இதுவே சொர்க்கம், இந்த சுகத்தை அனுபவிப்போமே, நாளை என்ன நடக்கும் என்பது நமக்கென்ன தெரியும்? என சொல்கின்றனர். இப்படி பலவிதமாக யோசிப்பவர்கள் வருகின்றனர். நல்லது!இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.தாரணைக்கான முக்கிய சாரம்

1. உண்மையிலும் உண்மையான ஆன்மீக வழிகாட்டியாகி அனைவருக்கும் வீட்டிற்கான வழியைக் காட்ட வேண்டும். சரீர நிர்வாகத்திற்கான தொழிலை செய்தபடியே நினைவின் யாத்திரையில் இருக்க வேண்டும். காரிய விவகாரங்களில் கஷ்டத்தை அடையக் கூடாது.2. ஞானத்தின் அலங்காரம் செய்துகொண்டு தன்னை சொர்க்கத்தின் பரியாக (தேவதையாக) ஆக்க வேண்டும். இந்த தமோபிரதானமான உலகத்தில் ஸ்தூலமான அலங்காரம் செய்யக் கூடாது. கலியுகத்தின் ஃபேஷனை விட்டு விட வேண்டும்.வரதானம் :

தியாகம், தவத்தின் மூலம் சேவையில் வெற்றியடையக்கூடிய அனைவருக்கும் நன்மை செய்யக் கூடியவராகுக !எப்படி ஸ்தூலமான அக்னி தூரத்திலிருந்தே தன்னுடைய அனுபவத்தை செய்விக்கிறதோ அப்படி உங்களுடைய தவம் மற்றும் தியாகத்தின் ஜொலிப்பு தூரத்திலிருந்தே அனைவரையும் கவர்ந்து ஈர்க்க வேண்டும். சேவாதாரி என்பதுடன் கூடவே தியாகி, தபஸ்வி மூர்த்தி ஆகுங்கள். அப்போது சேவையின் உடனடி பலன் தென்படும். தியாகி என்றால் எந்த ஒரு பழைய சங்கல்பமோ அல்லது சம்ஸ்காரமோ தென்படாத நிலை. எந்த சங்கல்பம் எழுந்தாலும் அதன் மூலம் அனைத்து ஆத்மாக்களுக்கு நன்மை அடங்கியிருக்க வேண்டும், அப்போது அனைவருக்கும் நன்மை செய்பவர் என சொல்லப்படுவர்.சுலோகன் :

தேக உணர்விலிருந்து கடந்து செல்வதற்காக சித்திரத்தை (உடலை) பார்க்காமல், சைதன்யத்தை (உயிரோட்டமிக்க ஆத்மாவை) மற்றும் சரித்திரத்தை (அதன் மகிமைகளை) பாருங்கள்.***OM SHANTI***

Whatsapp Button works on Mobile Device only