21 June 2016

BK Murli 22 June 2016 Tamil

BK Murli 22 June 2016 Tamil

22.06.2016    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


இனிமையான குழந்தைகளே! முழு ஆஸ்தி பெறுவதற்காக ஒரு தந்தை மீது முழுமையான அன்பு வையுங்கள். உங்களது அன்பு எந்த ஒரு தேகதாரியிடமும் இருக்கக் கூடாது.கேள்வி :

யார் தங்களின் தெய்விக சம்பிரதாயத்தினராக இருப்பார்களோ, அவர்களுக்கு முன்னால் எந்த ஒரு சொல் சுற்றிக் கொண்டே இருக்கும்?பதில் :

தந்தையை நினைவு செய்வதால் விகர்மங்கள் விநாசமாகும், மேலும் தேவி-தேவதா தர்மத்தின் ஸ்தாபனை நடைபெறுகிறது என்று அவர்களுக்குச் சொல்லும் போது இந்த வார்த்தைகள் அவர்கள் முன் சுற்றிக் கொண்டே இருக்கும். நாம் தேவதை ஆக வேண்டும், அதனால் நமது உணவு-பானம் முதலியன சுத்தமாக இருக்க வேண்டும் என்பது அவர்களின் புத்தியில் வரும்.பாடல் :

கள்ளம் கபடற்ற தன்மையினால் அவர் தனிப்பட்டவர்......ஓம் சாந்தி.

போலாநாத்தின் குழந்தைகள் கேட்டுக் கொண்டிருக்கின்றனர். யாரிடமிருந்து? போலாநாத்திடமிருந்து. போலா நாத் (கள்ளம் கபடற்றவர்) என்று சிவபாபா அழைக்கப்படுகின்றார். அவருடைய பெயரே சிவன் தான். போலாநாத்தின் குழந்தைகள் என்றால் சிவனுடைய குழந்தைகள். ஆத்மாக்கள் இந்தக் காதுகள் மூலம் கேட்டுக் கொண்டிருக்கின்றன. இப்போது குழந்தைகள் நீங்கள் ஆத்ம அபிமானி ஆகியிருக்கிறீர்கள். குழந்தைகள் டேப்பிலும் கூட முரளி கேட்கின்றபோது சிவபாபா நமக்கு தமது அறிமுகம் கொடுக்கிறார், நான் அனைத்து ஆத்மாக்களின் தந்தை என்று அவர் சொல்வதைப் புரிந்து கொள்கின்றனர். யாரை நீங்கள் பரமபிதா பரம ஆத்மா அல்லது பரமாத்மா எனச் சொல்கிறீர்களோ, அவரை எப்போதுமே ஃபாதர் என்று தான் சொல்கின்றனர். அவரை ஃபாதர் என்று சொல்வது யார்? ஆத்மா. ஆத்மாவுக்கு இப்போது ஞானம் கிடைத்துள்ளது. வேறு எந்த ஒரு மனிதருக்கும் இந்த ஞானம் இல்லை. ஆத்மாக்களாகிய நமக்கு இரண்டு தந்தையர் உள்ளனர். ஒருவர் சாகார் (சரீரமுள்ளவர்), இன்னொருவர் நிராகார் (சரீரமற்றவர்). அவர் பரமபிதா. இந்த ஞானத்தை யாராலும் தர முடியாது. தந்தையைத் தவிர வேறு யாரும் இதைக் கேட்க முடியாது. தந்தை தான் கேட்கிறார், நீங்கள் பரமபிதா பரமாத்மா, காட் ஃபாதர் என்று யாரைச் சொல்கிறீர்கள்? லௌகிக் தந்தையைச் சொல்கிறீர்களா? அல்லது பரலௌகிக் தந்தையைச் சொல்கிறீர்களா? லௌகிக் தந்தையை காட் ஃபாதர் எனச் சொல்வீர்களா? இந்தியில் பரமபிதா என்ற சொல்லும் உள்ளது. அவரோ ஒரே ஒரு நிராகார். ஈஸ்வரன், பிரபு, அல்லது பகவான் எனச் சொல்வதால் தந்தை என்று அறிந்து கொள்வதில்லை. காட் ஃபாதர் என்ற சொல் நன்றாக உள்ளது. அவர் நம்முடைய காட் ஃபாதர் என்று ஆத்மா சொன்னது. லௌகிக் தந்தையோ சரீரத்தின் தந்தை மட்டும் தான். உங்கள் அனைவரிடமும் கேட்கப்படுகின்றது - உங்களுக்கு எத்தனை தந்தையர் உள்ளனர்? ஒருவர் லௌகிக் தந்தை, இன்னொருவர் பரலௌகிக் தந்தை. இருவரிலும் பெரியவர் யார்? நிச்சயமாக பரலௌகிக் தந்தையைத் தான் சொல்வார்கள். அவருடைய மகிமை-பதீதர்கள் அனைவரையும் பாவனமாக்குகிற பரலௌகிக் தந்தை. இதையும் இப்போது நீங்கள் புரிந்து கொண்டிருக்கிறீர்கள். உலகத்தில் இதை யாருமே புரிந்து கொள்ளவில்லை. பாபா புரிய வைத்துள்ளார், உங்களுக்குப் பரலௌகிக் தந்தையிடம் அன்பு உள்ளது. மற்றவர்களுக்கு விநாச காலத்தில் விபரீத புத்தி. விநாசத்தின் சமயம் இது தான். அதே மகாபாரதத்தின் யுத்தம் இப்போது நடைபெறப் போகிறது. ஏரோப்ளேன், டேங்குகள் முதலியவற்றை ஒருவர் மற்றவருக்கு விநியோகம் செய்து கொண்டுள்ளனர். அனைவருக்கும் வியாபரம் செய்கின்றனர். பணத்துக்கு யாருக்கு என்ன வேண்டுமோ, அதைக் கொடுத்துக் கொண்டே செல்கின்றனர். கடனாகவும் பெறுகின்றனர். ஆக, ஏரோப்ளேன், வெடி மருந்து முதலியவற்றை வாங்குகின்றனர். இந்தப் பொருட்கள் அனைத்தும் மிகவும் விலை உயர்ந்தவை. வெளிநாட்டுக்காரர்கள் தயாரிக்கின்றனர். அவர்கள் பிறகு விற்றுக் கொண்டே இருக்கின்றனர். பாரதவாசிகள் ஏரோப்ளேன் முதலியவற்றை விற்பதில்லை.. இந்தப் பொருட்கள் அனைத்தும் வெளிநாடுகளில் இருந்து வந்துள்ளன. இப்போது எந்தப் பொருட்களை வாங்குகின்றனரோ, அவற்றை நிச்சயமாகப் பயன்படுத்து வார்கள். வீசி எறிவதற்காகப் பெற்றுக் கொள்ள மாட்டார்கள். அவர்கள் விநாச காலத்தின் விபரீத புத்தி உள்ள யாதவ சம்பிரதாயத்தினர் ஐரோப்பா முழுவதிலும் உள்ளனர். அதில் அனைவரும் வந்து விடுகின்றனர். பாரதமோ அவிநாசி கண்டம். ஏனென்றால் அவிநாசி தந்தையின் பிறப்பிடம். பாபா வருவதும் பழைய உலகம் முடிவடையும் நேரத்தில் தான். மேலும் எங்கே ஒரு போதும் அழிந்து போவதில்லையோ, அங்கே தான் ஜென்மம் (அவதாரம்) எடுக்கிறார். பாபா வந்திருந்தார். அதனால் தான் சிவஜெயந்தி கொண்டாடுகின்றனர். ஆனால் அவர்களுக்கு இது தெரியாது- சிவபாபா எப்போது வருகிறார் என்று? எப்போது விநாசத்திற்காக ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்குமோ, அப்போது தான் அவர் வருகிறார்.இப்போது பாபா சொல்கிறார், அவர்கள் ஐரோப்பிய யாதவ சம்பிரதாயத்தினர், அவர்கள் சத்யுகத்தில் இருக்க மாட்டார்கள். பௌத்தர்களோ கிறிஸ்தவர்களோ கூட இருக்க மாட்டார்கள். இப்போது பாபா சொல்கிறார், அவர்களுடையது விநாச காலத்தில் விபரீத புத்தி. ஏனென்றால் பரமாத்மா தந்தையை சர்வவியாபி எனச் சொல்லி விடுகின்றனர். நீங்கள் விநாச காலத்தில் அன்பான புத்தி உள்ளவர்கள். நீங்கள் தந்தையை அறிவீர்கள். நாம் 84 பிறவிகள் எடுத்துள்ளோம் என்பதைப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள். 84 பிறவிகளில் பாவாத்மாவாக, தமோபிரதானமாக ஆகி விட்டிருக்கிறீர்கள். பாரதவாசிகள் தான் 84 பிறவி எடுத்துள்ளனர். இப்போது நாடகம் முடிவடைகின்றது. அனைவரும் வீட்டுக்குத் திரும்பிச் சென்றாக வேண்டும். உங்களுக்கு பாபா இராஜயோகம் கற்பித்துக் கொண்டிருக்கின்றார். இது அனைவருக்கும் இறுதியான சமயம், அதாவது மரணத்தின் சமயம். ஆக, அந்த யாதவர்களுக்கும் ஈஸ்வரனிடம் அன்பு கிடையாது. அதனால் விநாச காலத்தில் விபரீத புத்தி (எதிர்மறையான) எனச் சொல்லப்படுகின்றது. எந்த ஒரு தேகதாரி மீதும் அன்பு வைக்கக் கூடாது. அவர்களோ படைப்புகள். அவர்களிடமிருந்து ஆஸ்தி கிடைக்காது. சகோதரனுக்கு சகோதரனிடம் இருந்து ஆஸ்தி கிடைப்பதில்லை. இதுவோ நல்லபடியாகப் புரிய வைக்கப் பட்டுள்ளது.குழந்தைகள் நீங்கள் இப்போது புரிந்து கொண்டிருக்கிறீர்கள்-அவர்களுடையது விநாச காலத்தில் விபரீத புத்தி, உங்களுடையது அன்பான புத்தி. இதிலும் கூட யார் தீவிர அன்புள்ளவர்களாக இருக்கின்றனரோ, அவர்கள் பாபாவிடம் முழுமையான அன்பு வைக்கின்றனர். நாம் பாபாவிடமிருந்து 21 பிறவிகளுக்கான சொர்க்கத்தின் ஆஸ்தி பெறுகிறோம். அந்த பாபா தான் சத்தியத்தைச் சொல்கிறார். வேறு யாரிடமும் அன்பு வைக்கக்கூடாது. புது வீடு கட்டுகின்றனர் என்றால் பிறகு புது வீட்டின் மீது பிரியம் (அன்பு) ஏற்பட்டு விடு கின்றது. பழைய வீடு இடிந்து விழப்போகிறது என்பது புரிய வைக்கப்படுகின்றது. ஆக, நாமும் பழைய வீட்டிலிருந்து மனதை விடுவித்துக் கொண்டே செல்கிறோம். பாபா புரிய வைக்கிறார்-நாளுக்கு நாள் வாயுமண்டலம் அசுத்தமாகிக் கொண்டே போகும். பார்க்கிறீர்கள், எவ்வளவு கலகம், குழப்பங்கள் ஏற்படுகின்றன! அதனால் புரிந்து கொள்கிறீர்கள், இப்போது இதெல்லாம் அழிந்து விடப் போகிறது. நாம் புது உலகிற்குச் செல்ல வேண்டும். ஆக, புது உலகத்தை நினைவு செய்ய வேண்டும். எல்லையற்ற தந்தையையும் ஆஸ்தியையும் நினைவு செய்ய வேண்டும். வேறு யாரையாவது நினைவு செய்வதால் எதுவும் கிடைக்காது. மனிதர்கள் பக்தி மார்க்கத்திலோ எவ்வளவு நினைவு செய்கின்றனர்! தாய்-தந்தை உற்றார் உறவினரை நினைவு செய்து கொண்டும் கூட தேவி-தேவதைகளை எவ்வளவு நினைவு செய்கின்றனர்! ஆறு, குளங்களில் குளிக்கின்றனர். அதைப் பதீத பாவனி எனச்சொல்கின்றனர். அம்பு எய்த உடன் அந்த இடத்திலிருந்து கங்கை வெளிவந்ததாகக் காட்டுகின்றனர். கங்கை நீரை வாயில் ஊற்றுகின்றனர். கொஞ்சம் கங்கை நீர் கிடைத்தாலும் முக்தி அடைந்து விடுவார்கள் என நினைக்கின்றனர். பாபா சொல்கிறார், இங்கே உள்ளது ஞானத்தின் விஷயங்கள். நீங்கள் கொஞ்சம் ஞானம் கேட்டாலும் கூட பலன் கிடைத்து விடும். இது ஞானம் கேட்பதற்கான விஷயம். அமிர்தம் அருந்துவதற்கான விஷயம் கிடையாது. இது ஞானமாகும். போக் நாளன்று அமிர்தம் அருந்தத் தருகின்றனர் எனப்புரிந்து கொள்ள வேண்டாம். அதுவோ இனிப்பான நீர். மற்றப்படி இது ஞானத்தின் விஷயம். ஞானம் என்றால் தந்தை மற்றும் சிருஷ்டியின் முதல்-இடை-கடை பற்றி அறிந்து கொள்வதாகும். இந்த சிருஷ்டிச் சக்கரம் எப்படிச் சுற்றுகிறது, யார் 84 பிறவி எடுக்கின்றனர்? அனைவருமோ எடுக்க முடியாது. முதல்-முதலில் பாரதவாசிகள் தான் வருகின்றனர். அவர்கள் தான் முழுமையாக 84 பிறவி எடுக்கின்றனர். யார் தேவதையாக இருந்தனரோ, அவர்கள் தாம் 84 பிறவி எடுத்து தூய்மையற்றவர்களாகி விடுகின்றனர். பாபா வந்து பிறகு முள்ளில் இருந்து மலராக ஆக்குகிறார். மனிதர்கள் தேக அபிமானத்தில் வந்து 5 விகாரங்களில் சிக்கிக் கொள்கின்றனர். இப்போது இராவண இராஜ்யம். சத்யுகம் தெய்வீக இராஜ்யமாக இருந்தது. சிவபாபா தான் சொர்க்கத்தை முழுமையாகப் படைக்கிறார். சூரிய வம்ச லட்சமி-நாராயணரின் இராஜ்யம் இருந்தது. இப்போது நீங்கள் அறிவீர்கள், ஸ்தாபனை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. உங்களுக்கு விநாச காலத்தில் அன்பான புத்தி. அதனால் நீங்கள் வெற்றியாளர்கள். முழு உலகத்தின் மீதும் நீங்கள் வெற்றி பெறுகிறீர்கள். இதை நல்லபடியாக நினைவில் வைக்க வேண்டும். நாம் பாரதவாசிகள் இப்போது கலியுகத்தில் இருக்கிறோம், பிறகு மாறி சொர்க்கத்திற்குச் செல்வோம். பழைய உலகத்தை விட்டுவிட வேண்டும். இது விகாரி சம்மந்தம். இது பந்தனம் எனச் சொல்லப்படுகின்றது. நீங்கள் விகாரி பந்தனத்தில் இருந்து வெளியேறி நிர்விகாரி சம்மந்தத்தில் செல்கிறீர்கள். பிறகு அடுத்த பிறவியில் நீங்கள் விகாரி பந்தனத்தில் செல்ல மாட்டீர்கள். அங்கே இருப்பதே நிர்விகாரி சம்மந்தம். இச்சமயம் அசுர பந்தனம் உள்ளது. ஆத்மா சொல்கிறது, எனக்கு சிவபாபாவிடம் அன்பு உள்ளது. பிராமணர்களாகிய உங்களுக்கு அன்பு உள்ளது. ஏனென்றால் யதார்த்த ரீதி அறிந்திருக்கிறீர்கள். தந்தையை, சிருஷ்டிச் சக்கரத்தை அறிந்து கொண்டு நீங்கள் பிறகு மற்றவர்களுக்குப் புரிய வைக்கிறீர்கள். எவ்வளவு ஒருவர் மற்றவர்களுக்குப் புரிய வைக்கிறாரோ, அந்த அளவு மற்றவர்களுக்கு நன்மை செய்கிறார். யார் அதிகம் புரிந்து கொள்கிறாரோ, அவர் தான் புத்திசாலி. அவர் தான் உயர்ந்த பதவி பெறுவார். சேவை குறைவாகச் செய்தால் பதவியும் குறைவாகப் பெறுவார்கள். முழு உலகமுமே தூய்மையற்றது தான். ஒவ்வொருவருக்கும் தூய்மையற்ற நிலையிலிருந்து தூய்மை ஆவதற்கான வழி சொல்ல வேண்டும். வேறு எந்த உபாயமும் இல்லை. நினைவினால் தான் விகர்மங்கள் விநாசமாகும். யார் தெய்விக சம்பிரதாயத்தினராக உள்ளனரோ, அவர்களின் முன் இந்த வார்த்தைகள் எதிரொலித்துக் கொண்டேயிருக்கும். இது சரியான விஷயம் தான் எனப் புரிந்து கொள்வார்கள். நிச்சயமாக நாம் தேவி-தேவதா ஆகிறோம். நமது உணவும் கூட சுத்தமாக இருக்க வேண்டும். தெய்வீக குணங்களையும் இங்கே தாரணை செய்ய வேண்டும். சர்வகுண சம்பன்னம் (முழுமை) ஆக வேண்டும். இப்போது நீங்கள் ஆகிக் கொண்டிருக்கிறீர்கள். இந்த லட்சுமி-நாராயணர் தேவதைகள். இவர்களுக்கு போக் (பிரசாதம்) வைத்தால் சிகரெட் முதலியவற்றையா வைப்பார்கள்? சிகரெட் குடிப்பவர் உயர்ந்த பதவி பெற முடியாது. இது ஒன்றும் தெய்வீகப் பொருளல்ல. சிகரெட் குடிக்கின்றனர் அல்லது வெள்ளைப்பூண்டு, வெங்காயம் முதலியவற்றை உண்ணுகின்றனர் என்றால் மேலும் கீழே விழுந்து விடுவார்கள். இதை விடுவதால் உடல்நலம் கெட்டுப்போகும் என்கின்றனர். தந்தை சொல்கிறார்-சிவபாபாவை நினைவு செய்யுங்கள். இந்தப் பழக்கங்கள் அனைத்தையும் விட்டு விடுவீர்களானால் உங்களுக்கு சத்கதி கிடைக்கும். சிகரெட் பழக்கமோ அநேகரிடம் உள்ளது. புரிய வைக்கப்படுகிறது - தேவதைகளுக்கு ஒரு போதும் இந்த மாதிரி போக் வைக்கப்படுவதில்லை. ஆக, நீங்கள் இவர்களைப் போல் (தேவதைகள்) இங்கேயே ஆக வேண்டும். நீங்கள் அசுத்தமான (தமோகுணி) பொருட்களைச் சாப்பிட்டுக் கொண்டே இருப்பீர்களானால் அந்த துர்நாற்றம் வந்து கொண்டே இருக்கும். சிகரெட் அல்லது மதுபானம் அருந்துபவர்களிடம் தூரத்திலிருந்தே துர்நாற்றம் வீசுகிறது. ஆக, குழந்தைகள் நீங்கள் தெய்வீக குணங்களைத் தாரணை செய்ய வேண்டும். வைஷ்ணவர்களாக ஆக வேண்டும். எப்படி விஷ்ணுவின் குழந்தைகள் உள்ளனர், நீங்கள் விஷ்ணுவின் அதாவது தெய்வீகக் குழந்தைகளாக ஆகிறீர்கள். இங்கே நீங்கள் ஈஸ்வரியக் குழந்தைகள். இது உங்களின் சர்வோத்தமப் (மதிப்புமிகுந்த) பிறவியாகும். நீங்கள் தேவதைகளைக் காட்டிலும் உத்தமமானவர்கள் (உயர்ந்தவர்கள்). நீங்கள் மற்றவர்களையும் கூட உத்தமமாக ஆக்கக் கூடியவர்கள். இது எல்லையற்ற தந்தையின் மிஷனரி (இயக்கம்). கிறிஸ்தவ மக்களின் மிஷனரி உள்ளது இல்லையா? தங்களின் கிறிஸ்தவ தர்மத்திற்கு அநேகரை மாற்றி விடுகின்றனர். இது ஈஸ்வரிய மிஷனரி. நீங்கள் சூத்திரரில் இருந்து பிராமண தர்மத்திற்கு கன்வர்ட் ஆகிப் (மாறிவிடுவது) பிறகு தேவதா தர்மத்தில் கன்வர்ட் ஆகி விடுகிறீர்கள். நீங்கள் அறிவீர்கள், நாம் இப்போது சூத்திரரில் இருந்து பிராமணர் ஆகியிருக்கிறோம். நீஙகள் உயிருடன் இருந்து கொண்டே இறந்தவராக ஆகியிருக்கிறீர்கள். பிறகு போய் தேவதை ஆவீர்கள். கர்ப்பத்தின் மூலம் பிறவி கிடைக்கும்.இங்கே உங்களை பாபா தர்மத்தின் குழந்தையாக ஆக்கியிருக்கிறார், தர்மாத்மாவாக ஆக்குவதற்காக. பாபா உங்களைத் தம்முடையவர்களாக ஆக்கியிருக்கிறார். குழந்தைகளுக்கு பாபா கற்பிக்கிறார், பிராமணரில் இருந்து பிறகு தேவதையாக ஆகிறீர்கள். இந்த தேவ மனிதர்கள் எவ்வளவு உயர்ந்தவர்கள்! இவர்களிடம் அனைத்து தெய்வீக குணங்களும் உள்ளன. எப்போது ஆத்மா நீங்கள் தூய்மையாகி விடுகிறீர்களோ, பிறகு சரீரமும் தூய்மையானதாக வேண்டும். பழைய சரீரம் அழிந்தாக வேண்டும். பிறகு உங்களுக்கு சரீரம் புதிய, சதோபிர தானமானதாக வேண்டும். சத்யுகத்தில் 5 தத்துவங்களும் கூட சதோபிரதானமாக ஆகிவிடும். பாபா சொல்கிறார்- நீங்கள் சூத்திர வர்ணத்தில் இருந்தீர்கள். இப்போது மீண்டும் பிராமண வர்ணத்தினராக ஆகியிருக்கிறீர்கள். பிறகு தெய்வீக வர்ணத்தில் வருவீர்கள். 84 பிறவிகள் எடுப்பீர்கள் இல்லையா? பிராமண வர்ணத்தை மறைத்து விட்டனர். இப்போது பாபா சூத்திரரில் இருந்து பிராமணர் ஆக்கிப் பிறகு தேவதை ஆக்குகிறார். இப்போது நீங்கள் பிராமணர்கள் தாம் உயர்ந்தவர்கள். குட்டிக்கரணம் உள்ளது இல்லையா? இப்போது பிராமணர், பிறகு பிராமண, சத்திரிய.......... பிறகு மீண்டும் பிராமணர் ஆவீர்கள். இப்போது நீங்கள் பிராமண வர்ணத்தில் இருக்கிறீர்கள். இந்த ஞானம் இப்போது உள்ளது. பிறகோ அதற்கான பலன் கிடைத்து விடும். இச்சமயத்தின் புருஷார்த்தத்தின் அனுசாரம் 21 பிறவிகளுக்கு அங்கே சதா சுகமாக இருப்பீர்கள். சிலர் இராஜ குடும்பத்தில், சிலர் பிரஜையில் செல்வார்கள். இராஜ குலத்தில் சுகம் அதிகம். பிறகு கலைகள் குறைகின்றன. உங்களுக்கு 84 பிறவிகளின் ஞானம் கிடைத்துள்ளது. நினைவு வந்து விட்டது. பாபா வந்து புரிய வைக்கிறார்-இனிமையிலும் இனிமையான குழந்தைகளே, உங்களுடைய 84 பிறவிகள் இப்போது முடிவடைந்தது. சிலர் 84 பிறவிகள், 80. 50, அல்லது 60 பிறவிகளும் எடுத்துள்ளனர். அனைவரைக் காட்டிலும் அதிகமாக பாரதவாசிகள் நீங்கள் சுகத்தைப் பார்க்கிறீர்கள். இந்த டிராமாவில் உங்களுடைய பெயர் புகழ் பெற்றதாகும். தேவதைகளை விடவும் நீங்கள் உயர்ந்தவர்கள். நீங்கள் அறிவீர்கள், நாம் தான் பூஜைக்குரியவர்களாக ஆகிறோம். சத்யுகத்தில் நாம் யாரையும் பூஜிப்பதில்லை. நம்மையும் யாரும் பூஜிப்பதில்லை. அங்கே நாம் பூஜைக்குரியவர்களாகவே இருப்போம். பிறகு கலைகள் குறைந்து கொண்டே போகும். நாம் பூஜைக்குரிய நிலையில் இருந்து பிறகு பூஜாரி ஆகி, தலை வணங்குகிறோம். துவாபர யுகத்தில் நாம் பூஜாரியாக ஆகத் தொடங்குகிறோம். கடைசியில் பிறகு அனைவரும் கலப்பட பக்தி செய்பவர்களாக ஆகி விடுகின்றனர். இந்த சரீரம் 5 தத்துவங்களால் ஆனது. அதற்கு யாராவது அமர்ந்து பூஜை செய்கின்றனர் என்றால் அது பூத பூஜை எனச் சொல்லப்படும். ஒவ்வொருவருக்குள்ளும் 5 பூதங்கள் உள்ளன. தேக அபிமானம் என்ற பூதம், பிறகு காம-குரோதம் என்ற பூதம். பூத சம்பிரதாயம் என்று சொன்னாலும் சரி, அல்லது அசுர சம்பரதாயம் என்று சொன்னாலும் சரி, விஷயம் ஒன்று தான். பாபா வந்து மீண்டும் தெய்வீக சம்பிரதாயத்தை (வம்சம்) உருவாக்குகிறார். பூதங்களில் இருந்து விடுவிப்பதற்காக பாபா வருகிறார், மற்றும் தன்னிடம் நினைவின் தொடர்பை வைக்குமாறு செய்து தேவதை ஆக்குகிறார். குருநானக் கூட மகிமை பாடியிருக்கிறார் - பரமபிதா பரமாத்மா மனிதரை தேவதை ஆக்கினார் என்பதாக. அவர் தான் தூய்மை இழந்தவர்களை தூய்மை ஆக்குபவர். நல்லது.இனிமையிலும் இனிமையான தேடிக்கண்டெடுக்கப் பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவு மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே!தாரணைக்கான முக்கிய சாரம் :

1) பிராமணரில் இருந்து தேவதை ஆவதற்காக, தீய (அசுத்த) பழக்கங்கள் அனைத்தையும் விட்டுவிட வேண்டும். சூத்திரர்களை பிராமண தர்மத்திற்கு மாற்றி தேவதை ஆக்குவதற்காக ஈஸ்வரிய மிஷனின் காரியத்தில் சகயோகி ஆக வேண்டும். மதுபானம், சிகரெட் அல்லது என்னென்ன அசுத்தமான பழக்கங்கள் உள்ளனவோ, அவற்றை நீக்கிவிட வேண்டும்.2) இந்த விநாச காலத்தின் சமயத்தில் ஒரு பாபாவிடம் உண்மையான அன்பு வைக்க வேண்டும். பழைய வீடு இடிந்துவிடப் போகிறது. அதனால் இதனிடமிருந்து மனதை அகற்றி, புதிய வீட்டின் மீது ஈடுபடுத்த வேண்டும்.வரதானம் :

மர்ஜீவா (வாழ்ந்து கொண்டே இறந்து - புதிய பிறவி) ஸ்திதி மூலம் தைரியம் மற்றும் உற்சாகத்தின் அவிநாசி முத்திரை பதிக்கக் கூடிய பயன்களால் நிறைவு பெற்றவர் ஆகுக.யார் பிராப்திகள் மூலம் நிரம்பப் பெற்றிருக்கிறார்களோ, அவர்களின் ஒவ்வொரு நடத்தை மற்றும் கண்களின் மூலம் ஊக்கம் உற்சாகம் காணப்படும். ஆனால் தைரியம் மற்றும் உற்சாகத்தின் என்றும் அழியாத முத்திரை இடுவதற்காக தனது கடந்த காலத்தின் அல்லது ஈஸ்வரிய மரியாதைகளுக்கு விரோதமாக என்னென்ன சம்ஸ்கார, சுபாவ,, சங்கல்பங்கள் அல்லது கர்மங்கள் உள்ளனவோ, அவற்றில் இருந்து (மர்ஜீவா) வாழ்ந்து கொண்டே இறந்து மறுபிறவி எடுத்தவராக ஆகுங்கள். உறுதிமொழி என்ற சுவிட்சை செட் செய்து நடைமுறையில் உறுதிமொழியின் படி நடந்து கொண்டே இருங்கள். தைரியத்துடன் கூடவே உற்சாகமும் இருக்குமானால் பிராப்தியின் பிரகாசம் தூரத்தில் இருந்தே தென்படும்.சுலோகன் :

மேளா அல்லது மக்கள் கூட்ட நெருக்கத்தில் டபுள் லைட்டாக இருப்பவர் தான் தாரணா மூர்த்தி ஆவார்.***OM SHANTI***

Whatsapp Button works on Mobile Device only