23 June 2016

BK Murli 24 June 2016 Tamil

BK Murli 24 June 2016 Tamil

24.06.2016    காலை முரளி   ஓம் சாந்தி  மாதேஸ்வரி ரிவைஸ்: 15.12.1963 மதுபன்


(மாதேஸ்வரி அவர்களின் புண்ணிய நினைவு நாள் அன்று வகுப்பில் படிக்க வேண்டிய ஜெகதம்பா மம்மாவின் இனிமையான மகா வாக்கியங்கள்)சுகம் மற்றும் துக்கத்தின் ஆதாரமானது கர்மத்தில் தான் இருக்கின்றதுசுகம் மற்றும் துக்கமான வாழ்க்கையானது கர்மத்தின் ஆதாரத்தில் அனுபவம் ஆகின்றது என மனிதர்கள் புரிந்துள்ளனர். நிச்சயமாக முதலில் கர்மத்தின் ஆதாரத்தில் தான் சுகம் அல்லது துக்கமானது அனுபவிக்கப் படுகின்றது. ஆகவே சுகம் மற்றும் துக்கமானது கர்மத்தோடு சம்மந்தப்படுகின்றது. கர்மத்தை அதிர்ஷ்டம் என கூறமுடியாது. சிலர் அதிர்ஷ்டத்தில் என்ன இருக்கின்றதோ அதுவே செய்வதாக நினைக்கின்றனர், எனவே சுகம், துக்கம் ஏற்படுவது அதிர்ஷ்டத்தின் ஆதாரத்தில் ஏற்படுவதாக நினைக்கின்றனர். ஆக இந்த அதிர்ஷ்டம் பகவானால் உருவாக்கப்பட்டதா அல்லது வேறு யாராலும் உருவாக்கப்பட்டதா என்பது புரியாமல் அதிர்ஷ்டத்தில் என்ன இருக்கின்றதோ என கூறுகின்றனர். ஆனால் அதிர்ஷ்டம் என்பது யாரால் உருவாகின்றது எனப் புரிந்து கொள்வதும் அவசியமானதாகும். அதிர்ஷ்டமானது பரமாத்மாவால் உருவாக்கப்பட்டதா? அல்லது அதிர்ஷ்டமானது முன்னதாகவே உருவாகிவிடுகின்றதா? ஆக அதிர்ஷ்டமானது அவரவரால் உருவாக்கப்படுகின்றது, அதன் காரணமாகவே சுகம் அல்லது துக்கம் அனுபவம் ஆகின்றது. துக்கம் மற்றும் சுகத்தை பரமாத்மா உருவாக்குவது கிடையாது! தன்னுடைய கர்மத்தை மனிதர்கள் தானே செய்கின்றனர், எனவே இதற்கான பொறுப்பு அவரவரைச் சேர்ந்ததாகும். எதை செய்கின்றார்களோ அதையே அடைவார்கள் என்ற ஒரு பொதுவான பழமொழி இருக்கின்றது. ஜீவாத்மாவனது தனக்குத்தான் நண்பனாகவும், எதிரியாகவும் இருக்கின்றது என கீதையில் வர்ணனை செய்யப்பட்டுள்ளது. நான் உங்களுடைய நண்பனாகவும், எதிரியாகவும் இருக்கின்றேன் என பகவான் கூறவில்லை. ஜீவாத்மா தனக்குத்தான் நண்பனாகவும், எதிரியாகவும் ஆகின்றது, எனவே தனக்குத்தான் நண்பனாகவும் எதிரியாகவும் ஆவது யார்? மனிதர்கள் தனக்குத்தான் இவ்வாறு ஆகின்றனர். எனவே சுகம் மற்றும் துக்கத்தை அடைவதற்கான பொறுப்பாளராக மனிதர்கள் தானே ஆகின்றனர் என்பது தெளிவாகின்றது. ஆக யாராவது தனக்குத் துக்கம் ஏற்படவேண்டும் என விரும்புவார்களா? எந்த ரூபத்தில் துக்கம் ஏற்பட்டாலும் அதனை விரட்டுவதற்குத் தான் முயற்சி செய்கின்றனர். யாராவது சண்டை போட வந்தாலும் அதனை நிறுத்துவதற்குத் தான் முயற்சி செய்கின்றனர். யாருக்காவது திடீர் மரணம் ஏற்பட்டால் அதனால் துக்கம் ஏற்படுகின்றது, பிறகு ஏன் இவ்வாறு நடந்தது என புரிந்து கொள்வதில்லை. இந்த விசயத்தில் மனிதர்கள் பகவானைக் கூட நிந்தனை செய்துவிடுகின்றனர். ஆக உங்கள் முன் எவ்வளவு விசயங்கள் வந்தாலும், திடீர் மரணம் ஏற்பட்டாலும் இவற்றை எல்லாம் பகவான் செய்வாரா? எனக்கு துக்கத்தை ஏற்படுத்தக்கூடிய நோயைக்கூட பகவான் தான் உருவாக்கினாரா? ஆக சண்டை, சச்சரவு மற்றும் உலகத்தில் ஏற்படும் துக்கத்திற்கான காரணத்திற்கு எல்லாம் பகவான் பொறுப்பாக முடியுமா? அட! பகவானை துக்கத்தைப் போக்கி சுகத்தைத் தருபவர் என அழைக்கின்றனர். துக்கம் வரும்போது, சரீரத்தில் நோய் ஏற்படும் போது அனைவரும் பகவானை நினைக்கின்றனர். ஒருவேளை அவர் துக்கம் தருபவராக இருந்தால் அவரை ஏன் நினைவு செய்ய வேண்டும்? சொல்லுங்கள். துக்கம் தருபவரை நினைவு செய்வார்களா? துக்கம் ஏற்படும் நேரத்தில் துக்கத்தைக் கொடுப்பவரை நினைவு செய்ய முடியுமா? இவையெல்லாம் புரிந்து கொள்ள வேண்டிய விசயங்கள் ஆகும். பகவானை நினைவு செய்கின்றோம் என்றால், அதனுடைய அர்த்தம் அவருக்கும் நமக்கும் உள்ள மற்ற விசயங்கள் ஆகும், ஆகவே அவர் துக்கத்தைத் தருபவர் கிடையாது.துக்கத்திற்கான காரணம் மற்றும் அதற்கான பொறுப்பு வேறுபட்ட விசயங்களாகும். மூன்றாவது நபர் யாருமில்லை. ஒன்று நான், இன்னொன்று என்னுடைய படைப்பவர், ஆக இந்த இரண்டு விசயங்கள் மட்டுமே இருக்கின்றது. ஒன்று நான் படைப்பாக, குழந்தையாக இருக்கின்றேன் மற்றும் இரண்டாவதாக தந்தை இருக்கின்றார். ஆக தந்தை பொறுப்பாளரா? அல்லது நான் பொறுப்பாளராக இருக்கின்றேனா? ஆனால் நம்மிடம் துக்கம் வரும்போது நமக்கு பகவான் கொடுப்பது போல தென்படுகின்றது. பிறகு அவருடைய விருப்பம் போல் நடக்கட்டும் என கூறுகின்றோம். ஆனால் பகவான் நம்முடைய சுகத்தின் வள்ளலாக இருக்கின்றார் என ஆத்மா தனக்குள் உணர்கின்றது. சுகத்தை அடைவதற்காக பகவானிடம் அடைக்கலம் சென்று துக்கத்தை போக்குங்கள் என கூறுகின்றோம், பிறகு என்னுடைய ஆயுட்காலத்தை அதிகப்படுத்துங்கள் எனவும் கூறுகின்றோம். ஆயுட்காலத்திற் காக, துக்கத்தை போக்குவதற்காக உடல் நோயை நீக்குவதற்காக, சண்டை சச்சரவுகளைர் போக்குவதற்காக மேலும் அசாந்திக்கான காரணங்களை எல்லாம் நீக்குவதற்காக பகவானிடம் வேண்டுகின்றோம். யாராவது குழந்தைகள் சரியாக இல்லையெனில் பகவான் நல்ல புத்தி கொடுக்கட்டும் என்றும் கூறுகின்றோம், நல்ல வழியும் அவரிடமே கேட்கின்றோம். யாருக்கு எந்த விசயத்தில் கஷ்டம் ஏற்பட்டாலும் அந்த நேரம் பகவானை நினைவு செய்கின்றனர், வேண்டுதலும் செய்கின்றனர். யார் வேண்டுதல் செய்தாலும் அதனைக் கொடுக்கக் கூடிய வள்ளல் பகவான் அல்லவா! அவர் மட்டுமே சுகத்தைத் தருபவர். ஆகவே அவரிடம் வேண்டுதல் செய்கின்றனர். இந்த எல்லா விசயங்களில் இருந்து விடுவிப்பதற்கான மருந்து அவரிடம் மட்டுமே இருக்கின்றது, எனவே எது நடந்தாலும் அட கடவுளே! என கூறுகின்றனர்.அவர் தான் பகவானாக இருக்கின்றார், இதனுடைய அர்த்ததை சிலர் புரிந்தும், சிலர் புரியாமலும் இருக்கின்றனர். அவர் யார், எப்படி இருக்கின்றார் என தெரியாமலே மனதில் இருந்து வார்த்தை மட்டும் வருகின்றது. நாம் யாரை நினைவு செய்கின்றோம் என்பதும் புரிந்து கொள்ள வேண்டிய விசயங்கள் ஆகும். நாம் யாரை நினைவு செய்கின்றோமோ அவருக்கும் நம்முடைய துக்கத்திற்கும் என்ன சம்மந்தம் இருக்கின்றது? அவர் துக்கத்தின் வள்ளலாக இருக்கின்றாரா? அல்லது நம்முடைய சுகத்திற்கான சம்மந்தம் அவரிடம் இருக்கின்றதா? ஆகவே பகவான் துக்கம் தரும் செயலைச் செய்வதில்லை என்பது நாம் அவரை நினைவு செய்வதன் மூலமாகத் தெளிவாகின்றது. அவர் துக்கம் கொடுத்தால் ஏன் நினைவு செய்ய வேண்டும்? துக்கம் ஏற்படும் நேரத்தில் அவர் நம்முடைய உயர்ந்த நண்பனைப் போன்றவர் என்கின்ற அளவிற்கு அவர் மீது அன்பு ஏற்படுகின்றது. ஆகவே இந்த விசயங்களின் மூலம் பகவானுக்கும் நமக்கும் நிச்சயம் சுகத்திற்கான சம்மந்தம் மட்டுமே இருக்கின்றது, துக்கத்திற்கான காரணம் வேறு எங்கோ இருக்கின்றது. இப்பொழுது மூன்றாவதாக எந்த விசயமும் இல்லை. ஒன்று நான், இரண்டாவது பகவான், ஆகவே நான் தான் பொறுப்பாளராக இருக்கின்றேன். எந்த விசயங்களுக்கு நாம் நிமித்தமாக இருக்கின்றோமோ, மேலும் நாம் தான் துக்கத்திற்கான காரணமாக இருக்கின்றோம். இது எவ்வளவு பெரிய அறியாமையாக இருக்கின்றது? எந்த விசயங்களில் இருந்து தன்னை விடுவித்துக்கொள்ள விரும்புகின்றேமோ அந்த விசயத்தை நாமே உருவாக்கின்றோம், இது ஆச்சரியமான விசயமாகும். நாம் துக்கமாக இருக்க வேண்டும் என விரும்புவதில்லை. ஆனாலும் துக்கம் ஏற்படுகின்றது, எனவே ஏதோ ஒரு விசயத்தில் நான் அறியாமையில் இருக்கின்றோம், அந்த விசயத்தை முதலில் நீக்குவதற்காக நமக்கு ஞானம் தெளிவாக இருக்க வேண்டும். இதைப் புரிந்து கொள்வதற்கு முதலில் தனக்குள் ஆராய வேண்டும். ஆனாலும் இந்த விசயத்தைப் புரிந்து கொள்வதற்கு எவ்வளவு காரணங்கள் சொல்கின்றோம், நேரம் இல்லை, என்ன செய்வது, குடும்பச் சூழ்நிலை - தொழில் காரியங்களை கவனிக்க வேண்டும் என கூறுகின்றோம், இவை மிகவும் ஆச்சரியமாக இருக்கின்றது. ஆனால் நம்முடைய குடும்பச் சூழ்நிலை, நம்முடைய குடும்பம் என நாம் தான் தனது துக்கத்தினுடைய ரூபத்தை உருவாக்கின்றோம் எனவே முதலில் இதைப்பற்றி ஆராய வேண்டும். முதலில் எந்த விசயத்தினால் நாம் துக்கமாகின்றோம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும், நாம் எதை உருவாக்கின்றோமோ அதனால் துக்கம் ஏற்படுகின்றதா அல்லது சுகம் ஏற்படுகின்றதா? என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். நாம் எதை செய்கின்றோமோ அதனால் சுகம் ஏற்படுகின்றதா இல்லையா என முதலில் விடை தெரிந்து கொள்ள வேண்டும்.எந்த விசயங்கள் துக்கத்திற்குக் காரணமாக இருக்கின்றனவோ அவைகளை நீக்குவதற்கான மருந்தும் இருக்கின்றது. இதையும் புரிந்து கொள்ள வேண்டும். ஏன் துக்கம் ஏற்படுகின்றது என்பதைப் புரிந்து கொள்வது வாழ்க்கைக்கு மிகவும் அவசியமாகும். உலகில் மனிதர்கள் பாவம் எவ்வளவு அறியாமையில் இருக்கின்றனர். மேலும் யார் புரிந்திருக்கின்றார்களோ அவர்களும் என்ன செய்வது, எப்படி செய்வது, தன்னுடைய குடும்பச் சூழ்நிலையை விட்டு விடலாமா என்றும் யோசிக்கின்றனர். பிறகு பல காரணங்கள் ஏற்படுகின்றது. மனிதர்கள் புத்தியானது துக்கமடைந்தாலும் எந்த ஞானம் கிடைத்துள்ளதோ அதைப் புரிந்து கொள்வதற்கு நேரம் கொடுப்பதில்லை, இதுவும் ஆச்சரியமான விசயமாகும். நாம் அவர்களின் விசயத்தைப் புரிந்து கொண்டு, தாரணை செய்து, அனுபவம் செய்து கூறுகின்றோம், இங்கு உள்ள விசயங்கள் எல்லாம் அனுபவம் செய்ய வேண்டிய விசயங்கள் ஆகும். அனுபவம் செய்வதனால் தான் இவ்வாறு கூறுகின்றோம், ஆகவே நடைமுறையில் இந்த ஆதாரத்தில் தான் சுகத்தின் பிராப்தி ஏற்படுகின்றது. நீண்ட காலமாக எந்த ஒரு விருப்பத்தோடு இருந்தோமோ அதற்காக சுகத்தின் வள்ளல் அவரே வந்து நமக்கு தனது அறிமுகத்தை தருகின்றார். ஹே குழந்தைகளே! ஏன் துக்கம் அடைந்தீர்கள்? அதற்கான காரணத்தை என்னிடம் வந்து புரிந்து கொள்ளுங்கள் என பகவான் கூறுகின்றார், பாருங்கள் எவ்வளவு சலுகை தருகின்றார். இவ்வளவு விசயங்களைக் கேட்ட பிறகும் பாவம், இதில் ஆச்சரியம் என்னவெனில் மனிதர்கள், இப்படியேதான் இருக்க வேண்டும் (இப்படித்தான் நடக்கும்) என நினைத்து சென்றுவிடுகின்றனர், இதைத்தான் ஆஹா! மாயா என்று சொல்ல வேண்டியதாக இருக்கின்றது. ஒரே அடியாக மாயா பிடித்து விடுகின்றது. எந்த விசயத்திற்காக முழு நாளும் போராடுகின்றோமோ அந்த விசயத்தை பாபா நேரில் வந்து தெளிவுபடுத்துகின்றார். சுகத்திற்கான மற்றும் துக்கத்திற்கான காரணம் என்னவென்று அனைத்து விசயங்களையும் புரிய வைக்கின்றார். இருந்தாலும் நேரமில்லை என கூறினால் என்ன செய்ய முடியும்!தந்தை நேரடியாகக் கூறுகின்றார், நான் இப்பொழுது உங்களுடைய அனைத்து துக்கத்தையும் நீக்கி சுகத்தை அடைய வைப்பதற்காக வந்திருக்கின்றேன். ஏனென்றால், துக்கத்தைப் போக்கி சுகத்தை தருபவர் என்ற மகிமை செய்யப்படுகின்றது. சிலர் துக்கத்தை தருபவர் என்றும் கூறிவிடுகின்றனர், ஆனால் நான் துக்கத்தை நீக்குபவராக இருக்கின்றேன். நான் உங்களுடைய துக்கத்தைப் போக்குவதற்காக உங்கள் மூலம் அப்படிப்பட்ட கர்மத்தை செய்ய வைக்கின்றேன், இதன் மூலம் உங்களுடைய துக்கம் அழிந்து விடும் என தந்தை கூறுகின்றார். நான் எதை கற்பிக்கின்றேனோ, எதைப் புரிய வைக்கின்றேனோ அதைப் புரிந்து கொண்டு முயற்சி செய்யுங்கள், மேலும் அதன் மூலம் உங்களுடைய துக்கத்தை அழித்து விடுங்கள். உங்களுடைய துக்கத்தை அழிப்பதற்காக நான் போதனை தருகின்றேன், இதனை தாரணை செய்யுங்கள். இந்த முயற்சி உங்களுக்காகத்தான் செய்கின்றீர்கள். ஆனால் சிலர் ஏதோ நாங்கள் பகவானுக்காகத்தான் செய்கின்றோம் என அப்பாவித்தனமாக நினைக்கின்றனர். சிலர் நேரம் கிடைத்தால் செய்வோம் என கூறுகின்றனர். அட! சமைப்பது சாப்பிடுவது இது போன்ற காரியங்கள் செய்து கொண்டுதான் இருக்கின்றீர்கள். இப்படிபட்ட கர்மத்தின் கணக்குகளில் நீங்கள் குழப்பமாகி அதனால் துக்கமாகி விட்டீர்கள். ஒருபக்கம் துக்கத்தில் இருந்து விடுபட வேண்டும் என கூறுகின்றீர்கள், இன்னொரு பக்கம் இந்த எல்லா துக்கங்களில் இருந்தும் விடுபடுவதற்கான வழியை தந்தை நேரடியாகப் புரிய வைத்தாலும் சிலர் புத்தியில் பதியவில்லை. சிலர் செல்வம், பொருட்கள், இந்த சரீரத்தையும் மாயை என புரிந்துள்ளனர். பிறகு இவைகளிலிருந்தெல்லாம் விடுவித்துக்கொள்வதற்கு வழிகளைத் தேடுகின்றனர். உங்களுடைய துக்கத்திற்கான காரணம் 5 விகாரங்கள் ஆகும், வேறு விசயங்கள் இல்லை. என்னுடைய படைப்பு அனாதியானதாகும், அது துக்கத்திற்கான காரணம் இல்லை. உங்களிடத்தில் கூடுதலாக வந்த விசயங்கள் அதுவே 5 விகாரங்கள் ஆகும். மாயா என விகாரங்களை சொல்லப்படுகின்றது. சரீரத்தை, உலகத்தை மற்றும் செல்வத்தை விகாரங்கள் என கூற முடியாது. விகாரம் என்பது இதில் இருந்து வேறுபட்டதாகும். அவை வந்த பிறகுதான் துக்கத்திற்கான காரணம் ஏற்பட்டது. மற்றபடி எல்லா பொருட்களும் ஆத்மாவின் சுகத்திற்கான காரணமாகும். அனைத்து செல்வங்கள், பொருட்களும் சுகத்திற்கான காரணங்களாக இருக்கின்றன. ஆனாலும் அவர்களுக்கு அனைத்து விசயங்களில் முழு ஞானம் இல்லாத காரணத்தினால் அனைத்து பொருட்களும் துக்கம் கொடுப்பதாக ஆகிவிட்டன. எனவே தந்தை கூறுகின்றார் - என்னால் உருவாக்கப்பட்ட படைப்பு அனாதியானது, அவை துக்கத்திற்கான காரணங்களாக இல்லை. நீங்கள் தான் துக்கத்திற்கான ஆதாரங்களை உருவாக்கினீர்கள். உங்களிடம் மற்ற விசயங்கள் வந்துவிட்டது, அவைதான் மாயா என்னும் 5 விகாரங்கள். நீங்கள் இப்பொழுது இதனை நீக்கி விடுங்கள். இதையும் கூட பகவான் தான் கொடுத்தார் என சிலர் கூறுகின்றனர். ஆனால் சுகத்திற்கான பொருட்களை மட்டுமே பகவான் கொடுத்தார், நீங்கள் அதில் விகாரங்களைச் சேர்த்து அனைத்தையும் கெடுத்து விட்டீர்கள். எனவே துக்கத்திற்கான மற்ற விசயங்களை நீக்கிவிட்டால் உங்களுக்கு சுகத்திற்கான ஆதாரம் ஏற்படும் என தந்தை கூறுகின்றார். இவை அனைத்தும் புரிந்து கொள்ள வேண்டிய விசயங்கள் ஆகும். எனவே தந்தை கூறுகின்றார் - அடிக்கடி என்னிடம் வாருங்கள், கொஞ்சமாவது புரிந்து கொள்ளுங்கள். ஆனாலும் சிலர் இங்கு வருகின்றார்கள், கேட்கின்றார்கள் பிறகு இங்கிருந்து வெளியே சென்ற உடன் எல்லாம் மறைந்து விடுகின்றது, இதுவும் ஆச்சரியமான விசயம் அல்லவா! எனவே தன்னுடைய வாழ்க்கைக்காக எதை விரும்புகின்றீர்களோ, அதனை அடைய முடியாமல் இருப்பதற்கான காரணத்தைப் புரிந்து கொண்டு அதனை அழித்து அதற்கான விசயங்களை இங்கு வந்து புரிந்து கொள்ளுங்கள். என்ன செய்வது, எப்படி செய்வது இவ்வாறு யோசிக்க வேண்டாம். சிலர் இதெல்லாம் வயதானவர்களின் வேலையென நினைக்கின்றனர். அட! வாழ்க்கையை உருவாக்குவது வயதானவர்களுக்கு மட்டுமே அவசியம் இல்லை. வயதானவர்கள் வாழ்க்கையெனும் ஏணிப்படியில் ஏறி பிறகு இறங்குகின்றனர், நீங்கள் ஏணிப்படியில் ஏறுவதற்கு முன்பாகவே கவனம் செலுத்தி தனது வாழ்க்கையைப் எப்படி நடத்த வேண்டும் என்பது புரிந்து கொள்ள வேண்டிய விசயமல்லவா! எனவே இந்த விசயங்களை புரிந்து கொண்டு துக்கத்திற்கான ஆதாரத்தை தெரிந்து கொண்டு அதனை நீக்குவதற்கான முழு முயற்சி செய்ய வேண்டும்.தந்தை பகவானாக, அனைவருக்கும் தந்தையாக இருக்கின்றார். அவரிடமிருந்து நமது உரிமையைப் பெற வேண்டும். அவரிடமிருந்து கிடைக்கக்கூடிய பிராப்தியை அடைய வேண்டும், மற்றபடி அவரை தந்தையென்று அழைத்துக்கொண்டே இருப்பதற்கு அவசியமில்லை. ஆனாலும் கோடியில் ஒரு சிலர், அதிலும் ஒரு சிலர் மட்டுமே என்னைப் புரிந்து கொள்கின்றனர் என பகவான் நேரடியாக கூறுகின்றார், இப்பொழுது அதே நிலைதான் தொடர்கின்றது. கோடிக்கணக்கான பேரில் ஒரு சிலர் வெளிப்பட்டு இங்கு வந்து தனது சௌபாக்கியத்தை உருவாக்கட்டும். நல்லது.இனிமையான பாப்தாதா மற்றும் மம்மாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம்.வரதானம்:

இந்த பழைய உலகத்தை அயல்நாடு என புரிந்து கொண்டு இதிலிருந்து விடுபட்டு இருக்கக்கூடிய சுய தேசத்தைச் சேர்ந்தவர் ஆகுக!சில மனிதர்கள் வெளிநாட்டு பொருட்களைத் தொடக்கூட மாட்டார்கள், நாம் தனது தேசத்தின் பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என புரிந்து கொள்வார்கள். அதேபோன்று உங்களைப் பொறுத்தவரையில் இந்த பழைய உலகம் அயல்நாடு போன்றதாகும், இதில் இருந்து விடுபட்டு இருங்கள். அதாவது, பழைய உலகத்தினுடைய பொருட்கள், சுபாவம் - சம்ஸ்காரம் இவை எதுவும் உங்களை தன் பக்கம் ஈர்க்கக்கூடாது. சுவ தேசத்தை சேர்ந்தவராக ஆவதெனில் ஆத்மீக ரூபத்தில் இருந்து, தனது உயர்ந்த பரந்தாமதேசம் மற்றும் ஈஸ்வரிய பரிவாரத்தின் ஆதாரத்தில் தன்னைத்தான் மதுபன் தேச வாசியாகப் புரிந்து கொண்டு இதனுடைய நஷாவில் (போதை) இருங்கள்.சுலோகன்:

குழப்பங்களின் வசமாவதற்குப் பதிலாக எப்பொழுதும் (பாபாவுடன்) சந்திப்பினுடைய கொண்டாட்டத்தில் இருங்கள்!***OM SHANTI***

Whatsapp Button works on Mobile Device only