25 June 2016

BK Murli 26 June 2016 Tamil

BK Murli 26 June 2016 Tamil

26.06.2016  காலை முரளி ஓம் சாந்தி  ''அவ்யக்த பாப்தாதா'' bரிவைஸ் 12.10.1981  மதுபன்

'' நிகழ்காலம் தான் எதிர்காலத்திற்கான ஆதாரம் ''

இன்று விருட்சபதி தந்தை, விருட்சத்தின் (கல்ப விருட்சத்தின்) தன்னுடைய முதன்முதல் இலைகள் மற்றும் விருட்சத்தின் ஆதாரமான சிரேஷ்ட ஆத்மாக்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். பிராமண ஆத்மாக்கள் தான் புதிய விருட்சத்தின் கன்றாவார்கள். புதிய மரத்தின் ஆதாரமே கன்றின் மேல் தான் இருக்கிறது. நீங்கள் ஒவ்வொரு ஆத்மாவும் புதிய விருட்சத்தின் கன்றாவீர்கள், எனவே ஒவ்வொரு ஆத்மாவும் மிக மதிப்புள்ளவர்கள். எப்பொழுதும் தன்னை அந்த மாதிரி மிக மதிப்புள்ள ஆதாரமான விருட்சத்தின் கன்று என்று புரிந்து நடந்து கொண்டிருக்கிறீர்களா? கன்றில் என்ன பலஹீனம் இருக்குமோ அது முழு விருட்சத்தின் பலஹீனமாக ஆகும். நீங்கள் ஒவ்வொருவரும் அந்த அளவு பொறுப்பு இருக்கிறது என்று உணருகிறீர்களா? நானோ சிறியவன் மற்றும் காலம் தாழ்ந்து வந்திருப்பவன், பொறுப்பு பெரியவர்களிடம் மட்டுமே இருக்கிறது என்று அப்படி நினைக்கவில்லையே? எப்பொழுது ஆஸ்தியை பெறுவதில் புதியவர்கள், சிறியவர்களானாலும் பெரியவர்களானாலும் ஒவ்வொருவரும் தன்னை முழுமையான அதிகாரம் உள்ளவர் என்று நினைக்கிறீர்கள், ஒருவர் கூட சந்திர வம்சத்தின் ஆஸ்தியைப் பெறுவதற்கு தயார் ஆவதில்லை, சூரிய வம்சத்தினராக ஆவோம் என்று தான் நீங்கள் அனைவரும் உரிமையை வைக்கிறீர்கள். கூடவே சங்கம யுகத்தின் பிராப்தியின் மேல், தந்தையின் மேல் தன்னுடைய முழு உரிமையை செலுத்துகிறீர்கள். முதலில் சிறியவர்கள் எங்களுடைய தந்தை என்ற வார்த்தையைத் தான் கூறுகிறீர்கள். சிறியவர்கள் மேல் தந்தைக்கு அன்பு அதிகமாக இருக்கிறது, எனவே எங்களுடைய பாபா தான், முதலில் எங்களுக்கு அனைத்து அதிகாரமும் இருக்க வேண்டும். அன்புடன் தன்னுடைய அதிகாரத்தை வர்ணனை செய்கிறீர்கள். ஆக எப்படி தந்தையின் மேல், பிராப்தியின் மேல் தன்னுடைய அதிகாரம் இருக்கிறது என்று நினைக்கிறீர்களோ அதே போல் பொறுப்பிலும் சிறியவர்கள், பெரியவர்கள் அனைவரும் அதிகாரி ஆவீர்கள். அனைவரும் துணைவர்களாக இருக்கிறீர்கள். அந்த அளவு பொறுப்பின் அதிகாரி என்று புரிந்து நடந்து கொள்கிறீர்களா? சுயமாற்றம், உலகமாற்றம் இரண்டின் பொறுப்பின் கிரீடம் அணிந்திருப்பவராக இருப்பவர், உலக இராஜ்யத்தின் கிரீடம் அணிவதற்கு உரியவராக இருப்பார். சங்கமயுகத்தின் கிரீடம் அணிந்தவராக இருப்பவர் நாளை எதிர்காலத்தின் கிரீடம் அணிந்தவர். நிகழ்காலம் இல்லை என்றால் எதிர்காலம் இல்லை. நிகழ்காலம் தான் எதிர்காலத்தின் ஆதாரம். சோதனை செய்யுங்கள் மற்றும் ஞானத்தின் கண்ணாடியில் சங்கமயுகத்து பிராமணன் மற்றும் எதிர்காலத்து தேவ பதவி உடையவர் என்ற இரண்டு சொரூபத்தையும் பாருங்கள். இரண்டு ரூபங்களையும் பாருங்கள். மேலும் பிறகு பிராமண வாழ்க்கையில் இரட்டை கிரீடம் இருக்கிறதா அல்லது ஒரு கிரீடம் இருக்கிறதா என்று சோதனை செய்யுங்கள். ஒன்று தூய்மையின் கிரீடம், இன்னொன்று நடைமுறை வாழ்க்கையில் படிப்பு மற்றும் சேவையின் கிரீடம். இரண்டு கிரீடமும் சமமாக இருக்கிறதா? சம்பூர்ணமாக இருக்கிறதா? அல்லது ஏதாவது குறை இருக்கிறதா? ஒருவேளை இங்கே ஏதாவது ஒரு கிரீடம் அரைகுறையாக இருக்கிறது, அது தூய்மையின் விஷயத்திலானாலும், படிப்பு மற்றும் சேவையின் விஷயத்திலானாலும், பிறகு அங்கேயும் சிறிய கிரீடத்தின் அதிகாரியாக மற்றும் ஒரு கிரீடம் அணிந்தவராக அதாவது பிரஜை பதவி அடைபவராக ஆக வேண்டும். ஏனென்றால் பிரஜைக்கும் ஒளியின் கிரீடம் என்னவோ இருக்கும்; அதாவது தூய்மையான ஆத்மாக்களாக இருப்பார்கள். ஆனால் விஷ்வ ராஜன் மற்றும் மகாராஜாவின் கிரீடம் கிடைக்காது. சிலர் மகாராஜன், சிலர் ராஜன் அதாவது ராஜா, மகாராஜா மற்றும் உலக மகாராஜா (சக்ரவர்த்தி) அப்படி இதன் ஆதாரத்தினால் தான் வரிசைக்கிரமமான கிரீடம் அணிந்தவராக ஆவார்கள்.இதே விதமாக ஆசனத்தைப் பாருங்கள் - நிகழ்காலத்தில் பிராமண வாழ்க்கையில் எவ்வளவு காலம் அழியாத ஆசனத்தில் அமர்ந்திருப்பவர் மற்றும் இதயசிம்மாசனதாரி அப்படி இரண்டின் ஆசனதாரியாக எவ்வளவு நேரம் இருக்கிறீர்கள்? அழியாத ஆசனதாரியாக நிரந்தரமாக இருப்பது அதாவது எப்பொழுதுமே இருப்பது என்றால் இதயசிம்மாசனதாரியாகவும் நிரந்தரமாக எப்பொழுதுமே இருப்பது. இரண்டிற்கும் சம்மந்தம் இருக்கிறது. பிராமண வாழ்க்கையில் சில நேரம் மட்டும் தான் ஆசனதாரியாக இருக்கிறார் என்றால் எதிர்காலத்தில் முழுமையான அரைக் கல்பம் ஆசனதாரியாக அதாவது இராஜ குடும்பத்தில் வரமுடியாது. ஏனென்றால் ராஜ குடும்பத்தினர் தான் சிம்மாசனதாரிகள் என்று வர்ணனை செய்யப்படுகிறார்கள். அப்படி இங்கே எப்பொழுதுமே ஆசனதாரியாக இருப்பவர் தான் எதிர்காலத்தில் எப்பொழுதுமே இராஜ்ய அதிகாரி சிம்மாசனதாரியாக இருப்பார். ஆக தன்னுடைய கண்ணாடியில் நிகழ்காலம் எப்படி இருக்கிறது மற்றும் எதிர்காலம் என்னவாக இருக்கும் என்று பாருங்கள். இதே முறையில் திலகத்திலும் அழியாத மற்றும் அழிக்க முடியாத திலமிகட்டவராக இருக்கிறேனா என்று சோதனை செய்யுங்கள். சங்கமயுகத்தில் தான் தேவர்களுக்கெல்லாம் தேவனின் மாங்கல்யம் மற்றும் பரமாத்மா ஈஸ்வரனின் குழந்தையின் பாக்கியத்தின் திலகம் பிராப்தி ஆகிறது. அப்படி இந்த சுமங்கல்யம் மற்றும் பாக்கியத்தின் திலகம் அழியாதது. மாயா மாங்கல்யம் மற்றும் பாக்கியத்தின் திலகத்தை அழித்தோ விடுவதில்லையே. இங்கே இருக்கும் சுமங்கலி, பாக்கியத்தின் திலகத்தை எப்பொழுதுமே இட்டுக் கொண்டு இருப்பவர் தான் எதிர்காலத்தில் நிரந்தரமான இராஜ திலகம் இட்டுக் கொண்டவர். ஒவ்வொரு பிறவியிலும் இராஜ திலகம் இடுவதற்கான விழா இருக்கும். இராஜாவுடன் சேர்ந்து இராஜ குடும்பத்தினருக்கும் திலகமிடும் நாள் கொண்டாடப்படும். அங்கே உள்ள ஒவ்வொரு பிறவியிலும் இராஜ திலகத்தின் விழா மற்றும் இங்கே பிராமண வாழ்க்கையில் எப்பொழுதும் தந்தையுடன் சந்திப்பு செய்வதற்கான விழா, தன்னை எப்பொழுதும் முன்னேறச் செய்வதற்கான விழா, தன்னை எப்பொழுதும் முன்னேறும் கலையில், ஒவ்வொரு விதமான சேவையின் அதாவது உடல், மனம், பொருள், மக்கள் அப்படி அனைவரின் சேவையின் ஊக்கம், உற்சாகம் சதா காலத்திற்கும் இருக்கும். இப்பொழுதைய உற்சாகம் எதிர்காலத்தின் உற்சவமாக இருக்கும்.இதே விதமாக உடல், மனம், செல்வத்திற்கும் சம்மந்தம் இருக்கிறது. இங்கே தொடக்கத்திலிருந்து இதுவரை, மேலும் இப்பொழுதிலிருந்து இறுதிவரை தன்னுடைய உடலை எவ்வளவு காலம் சேவையில் சமர்ப்பணம் செய்தீர்கள். மனதை எவ்வளவு நேரம் நினைவு மற்றும் மனசேவையில் ஈடுபடுத்தினீர்கள்? மனதால் செய்யும் சேவை சுபபாவனை மற்றும் உயர்ந்த விருப்பங்கள் வைப்பது. இதிலேயும் சேவை எல்லைக் குட்பட்டிருந்ததா, எல்லைக்கப்பாற்பட்டிருந்ததா? அனைவருக்காகவும் சுபபாவனை மற்றும் உயர்ந்த விருப்பங்கள் இருந்ததா? அல்லது சிலருக்காக இருந்தது மற்றும் வேறு சிலருக்காக இருக்கவில்லை என்று அப்படி இருந்ததா? இதே விதமாக பணத்தை தனக்காக ஈடுபடுத்தினேனா? சுயநலமாக ஈடுபடுத்தினேனா அல்லது சுயநலமற்று சேவையில் ஈடுபடுத்தினேனா? நம்பிக்கையில் கொடுக்கப்பட்டிருக்கும் ஒன்றின் மேல் ஏமாற்று காரியமோ செய்வதில்லையே? எல்லைக்கப்பாற்பட்டதிற்குப் பதிலாக எல்லைக்குட்பட்டதிலேயோ ஈடுபடுத்தவில்லையே? இந்த சோதனையின் ஆதாரத்தில் அங்கேயும் பிராப்தியின் சதவிகிதத்தின் ஆதாரத்தில் வரிசைக்கிரமமான பதவி கிடைக்கிறது. அனைத்திலும் முழுமையான சதவிகிதம் என்றால் முழுமையான காலம் மற்றும் முழுமையான பிராப்தி. இல்லையென்றால் தன்னுடைய வாழ்க்கை நிலையிலும் மேலும் காலத்திலும் வித்தியாசம் ஏற்பட்டு விடும். முழு காலம் இருந்தவர்கள் மற்றும் முழுமையான பிராப்தியை அடைபவர்களுக்கு 01.01.01 என்ற ஆண்டில் முதன் முதலில் சம்பூர்ண மலராக சதோபிரதான இயற்கை மற்றும் முழு இராஜ்ய பாக்கியம் இருக்கும், ஆண்டும் ஒன்று, பிராப்தியும் ஒன்று அப்படி இயற்கையின் சுகமும் ஒன்று அதாவது முதல் தரமானதாக இருக்கும். இல்லையென்றால் இரண்டு, மூன்று என்பது தொடங்கிவிடும்.பிராமணன் மற்றும் தேவதை, இப்பொழுது இந்த இரண்டு ரூபங்கள் மூலம் சோதனை செய்யுங்கள். சங்கமயுகத்தைச் சேர்ந்தவர் மற்றும் சத்யுகத்தைச் சேர்ந்தவர் என்ற இந்த இரண்டு சொரூபங்களையும் எதிரில் வையுங்கள். சங்கமயுகத்தில் இருக்கிறது என்றால் சத்யுகத்தில் கண்டிப்பாக இருக்கும், அது நிச்சயம்! எனவே பிராமண வாழ்க்கையின் 16 ஆன்மீக அலங்காரங்களையும் பாருங்கள். 16 கலைகளையும் பாருங்கள். நீங்களே உங்களைப் பாருங்கள். மேலும் என்னென்ன குறை பார்த்தீர்களோ அதை நிரப்பி கொண்டே செல்லுங்கள். என்ன செய்ய வேண்டும் என்று புரிந்ததா? தன்னை கண்ணாடியில் பாருங்கள். நல்லது.இன்று மகாராஷ்ட்ராவின் சேவைக்கான வாய்ப்பு என்றால் மஹான் ஆவதற்கான விஷயங்கள் கூறுவோம் இல்லையா? மகாராஷ்ட்ரா என்றால் இப்பொழுதும் மஹான் மேலும் எதிர்காலத்திலும் மஹான். நல்லது.அந்த மாதிரி எல்லைக்கப்பாற்பட்ட சேவாதாரிகளுக்கு, அனைவருக்காகவும் எப்பொழுதும் நற்சிந்தனை வைத்திருக்கும், எப்பொழுதும் நினைவு மற்றும் சேவையின் உற்சாகத்தில் இருக்கக்கூடிய, எப்பொழுதும் சுமங்கல்யம் மற்றும் பாக்கியத்தின் திலகம் இட்டிருப்பவர்களுக்கு, அந்த மாதிரி நிகழ்காலத்தின் இராஜ அலங்காரம் உள்ள சிரேஷ்ட ஆத்மாக்களுக்கு பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்காரம்.இன்று மின்சாரம் இடையிடையே அதிகமாக தடை ஏற்பட்டு சென்றும் பிறகு வந்து கொண்டும் இருந்தது. மின்சாரத்தின் இடையூறினால் புத்தியின் நிலை மேலே கீழே செல்லவில்லையே என்று பாபா கூறினார். உங்களுடைய இந்த ஸ்தூல உலகத்தின் பாடலாக தந்தைக்கு கூறுகிறார்கள் 'உன்னுடைய உலகத்தின் நிலைமை என்னவாகி விட்டது என்று பார்' என்று பக்தர்கள் பாடுகிறார்கள். ஆக தந்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறார், பக்தர்களின் பாடல் ஒலியும் வந்து கொண்டிருக்கிறது. மேலும் பார்த்துக் கொண்டும் இருக்கிறோம். எப்பொழுது பெயரே சாரமற்ற உலகம் என்றிருக்கிறது என்றால் எந்தவொரு சாதனத்திலும் என்ன சாரம் இருக்கும்? நல்லது.மகாராஷ்ட்ரா மண்டலத்தின் பார்ட்டிகளுடன் அவ்யக்த பாப்தாதாவின் இனிமையான சந்திப்பு

சங்கமயுகத்தின் மிகப் பெரிய கஜானா எது? தந்தை தான் அனைத்தையும் விட மிகப்பெரிய கஜானா. தந்தை கிடைத்து விட்டார் என்றால் அனைத்தும் கிடைத்து விட்டது. தந்தை இல்லையென்றால் ஒன்றும் இல்லை. சத்யுகத்தில் கூட இந்த மிகப்பெரிய கஜானா இருக்காது. இந்த கஜானா இருக்காது, இதனால் அடைந்த பிராப்தி இருக்கும். ஆக அந்த மாதிரி யுகத்தில் எதில் அனைத்து கஜானாக்களும் கிடைக்கின்றன, சங்கமயுகத்தில் சத்யுகத்தையும் விட உயர்ந்த கஜானா கிடைக்கிறது. அந்த மாதிரி யுகத்தில் எந்த யுகத்தில் அனைத்து கஜானாக்களும் பிராப்தி ஆகின்றனவோ மேலும் பிராப்தி செய்யும் ஆத்மாக்களும் நீங்களே தான் என்றால், அந்த மாதிரி ஆத்மாக்கள் நிரம்பியவர்களாக இருப்பார்கள் இல்லையா. பிராமணர்களின் வாழ்க்கையில் பிராப்தி இல்லாத (அடையாத) பொருள் ஒன்றும் இல்லை. தேவதைகளின் வாழ்க்கையில் தந்தையின் பிராப்தியின்மை இருக்கும், ஆனால் பிராமணர்களின் வாழ்க்கையில் எந்தவொரு பிராப்தியின்மையும் இருக்காது. எனவே பிராப்தியில்லை என்ற ஒரு பொருள் கூட பிராமணர்கள் எங்களுடைய கஜானாவில் இல்லை என்ற இந்த அழியாத பாடல் மனதில் எப்பொழுதும் ஒலித்துக் கொண்டே இருக்கட்டும். கஜானாக்களின் அதிபதிகளாக இருக்கிறீர்களா அல்லது இனிமேல் தான் ஆக வேண்டுமா? குழந்தை ஆவது என்றால் அதிபதி ஆவது. அதிபதியாகவோ ஆகிவிட்டீர்கள் மற்றபடி பாதுகாப்பது எந்த அளவு வந்திருக்கிறது? இதில் ஒவ்வொருவருக்கும் வரிசைக்கிரமம் இருக்கிறது. எனவே குழந்தையாக இருக்கும் நான் நாளை அதிபதி ஆவேன் என்ற இந்த குஷியிலேயே எப்பொழுதும் நடனமாடிக்கொண்டிருங்கள்.2) அனைவரும் நிச்சயபுத்தி உடைய வெற்றி அடைபவர்கள் தான் இல்லையா. நிச்சயத்தில் ஒரு பொழுதும் மேலே கீழே ஆவதில்லையே? ஆடாத அசையாத மஹாவீரர்கள் தான் நீங்கள் இல்லையா? மஹாவீரரின் விசேஷம் என்ன? எப்பொழுதும் ஆடாத அசையாதவர், எண்ணம் மற்றும் கனவில் கூட வீணான எண்ணம் வராத நிலை. இதைத் தான் ஆடாத அசையாத மஹாவீரர் என்று கூறுவது. நீங்களும் அப்படித் தான் இருக்கிறீர்கள் இல்லையா? என்னென்ன நடக்கிறதோ அதில் நன்மை அடங்கியிருக்கிறது. எதை இப்பொழுது நீங்கள் தெரிந்து கொள்ள முடியவில்லையோ அதை இன்னும் வரும் நாட்களில் தெரிந்து கொண்டே இருப்பீர்கள். எந்தவொரு விஷயத்தையும் ஒரு காலத்தின் பார்வையோடு பார்க்காதீர்கள். மூன்று காலங்களையும் தெரிந்தவராகிப் பாருங்கள். இது என்ன இப்பொழுது? இது ஏன் இப்பொழுது? என்று அந்த மாதிரி இருக்க வேண்டாம். மூன்று காலங்களையும் தெரிந்தவராகி பார்ப்பதினால் என்ன நடந்து கொண்டிருக்கிறதோ அதில் நன்மை இருக்கிறது என்ற இந்த எண்ணம் தான் எப்பொழுதும் இருக்கும். அந்த மாதிரியே மூன்று காலங்களையும் தெரிந்தவராகி நடந்து கொள்கிறீர்கள் தான் இல்லையா? சேவைக்கு ஆதாரமானவர்கள் எந்தளவு உறுதியாக இருப்பார்களோ அந்த அளவே சேவையின் கட்டிடம் உறுதியாக இருக்கும். பாபா என்ன கூறுகிறாரோ அதைச் செய்து கொண்டே இருங்கள். பிறகு பொறுப்பு பாபாவினுடையதாகி விடுகிறது. அதைப் பற்றி பாபாவுக்குத் தெரியும், பாபாவின் காரியத்திற்கு தெரியும். எப்படி பாபா நடத்துகிறாரோ அப்படி நடந்தீர்கள் என்றால், அதில் நன்மை நிரம்பியிருக்கிறது. அந்த மாதிரி நடந்து கொள், அந்த மாதிரி இரு! என்று பாபா கூறுகிறார் என்றால், சரி பாபா! என்று கூறவேண்டுமேயன்றி அப்படி ஏன் என்பது இருக்க கூடாது. சரி ஐயா, புரிந்ததா? சரி ஐயா மற்றும் இதோ வந்து விட்டேன்! ஐயா என்றிருக்க வேண்டும். பிறகு பறக்கும் கலையில் சென்று கொண்டே இருப்பீர்கள். நிற்க மாட்டீர்கள். ஏனென்றால் லேசாகி விடுகிறீர்கள் இல்லையா?3) அனைவரும் தன்னை எப்பொழுதும் உலகத்தில் கோடியில் சிலர், அந்த சிலரிலும் சிலர் என்று அந்த மாதிரி உயர்ந்த ஆத்மாக்கள் என்று நினைக்கிறீர்களா? இது என்னுடைய வர்ணனை தான் என்று அனுபவம் ஆகிறதா? ஒன்று ஞானத்தின் ஆதாரத்தினால் தெரிந்து கொள்வது, இன்னொன்று யாருடைய அனுபவத்தையாவது கேட்டு அதன் ஆதாரத்தில் நம்புவது. மேலும் மூன்றாவது, தானே அனுபவம் செய்து உணருவது. ஆக நான் சென்ற கல்பத்தின் கோடியிலும் சிலரான, அந்த சிலரிலும் சிலரான உயர்ந்த ஆத்மா என்று உணருதல் ஏற்படுகிறதா? அந்த மாதிரி ஆத்மாக்களின் அடையாளமாக என்ன இருக்கும்? அந்த மாதிரி உயர்ந்த ஆத்மாக்கள் எப்பொழுதும் விளக்கொளி தந்தையின் மீது விட்டில்பூச்சியாகி விழுபவர்களாக இருப்பார்கள். சுற்றி வருபவர்களாக இருக்க மாட்டார்கள். வந்தார், சுற்றி வந்தார், கொஞ்சம் பிராப்தி செய்தார் என்று அந்த மாதிரி இருக்காது. ஆனால் பலியாவது என்றால் இறந்து விடுவது - அந்த மாதிரி எரிந்து இறக்கக்கூடிய விட்டில் பூச்சிகள் தான் நீங்கள் இல்லையா? எரிவது தான் தந்தையின் குழந்தை ஆவது. யார் எரிகிறாரோ அவர் தான் ஆகிறார். எரிவது என்றால் பரிவர்த்தனை ஆவது. நல்லது.எப்பொழுதும் ஒவ்வொரு சூழ்நிலையிலும் ஒரே சீரான நிலையில் இருக்க வேண்டும், அதற்கான சுலபமான வழி என்ன? ஏனென்றால் அனைவரின் லட்சியமும் ஒன்று, எப்படி ஒரு தந்தை, ஒரு வீடு, ஒரே ஒரு இராஜ்யம் இருக்குமோ அதே போல் இப்பொழுதும் ஒரே சீரான நிலை. ஆனால் ஒரே சீரான நிலையில் இருப்பதற்காக சுலபமான வழி என்ன கிடைத்திருக்கிறது. ஒரு வார்த்தையில் கூறுங்கள். அந்த ஒரு வார்த்தை டிரஸ்டி. ஒருவேளை டிரஸ்டி ஆகிவிடுகிறீர்கள் என்றால், விலகியிருப்பவராகவும் (பற்றற்ற) அதே சமயம் அன்பானவராகவும் இருப்பதினால் ஒரே சீரான நிலை ஏற்பட்டுவிடுகிறது. எப்பொழுது குடும்பஸ்தன் என்றால், அனேக விதமான என்னுடையது என்னுடையது என்பது அதிகம் ஆகிவிடுகிறது. சில நேரம் என்னுடைய வீடு, சில நேரம் என்னுடைய குடும்பம்.... குடும்பச் சூழ்நிலை என்றால், அனேக விதமான உறவு ரசனைகளில் அலைவது. டிரஸ்டி நிலை என்றால், ஒரு ரசனையில் இருப்பது. டிரஸ்டி எப்பொழுதும் லேசானவராக எப்பொழுதும் முன்னேறும் கலையிலும் செல்வார். இந்த முழு குரூப்பும் டிரஸ்டி குரூப் தான் இல்லையா. கொஞ்சமாவது என்னுடையது என்பது இருக்கிறது என்றால் என்னுடையது என்றால் குடும்பச் சூழ்நிலை. எங்கு என்னுடையது இருக்குமோ அங்கு பாசம் இருக்கும். பாசம் உள்ளவர்களை டிரஸ்டி என்றில்லாமல் குடும்பஸ்தர்கள் என்று கூறுவோம். குடும்பஸ்தினராகவோ அரைக்கல்பம் இருந்தீர்கள். மேலும் குடும்ப வாழ்க்கையில் என்ன பிராப்தி கிடைத்தது என்பதை அனுபவமும் செய்திருக்கிறீர்கள். இப்பொழுது டிரஸ்டி ஆகுங்கள். ஒருவேளை கொஞ்சமாவது குடும்பஸ்தன் என்ற நிலை இருக்கிறது என்றால் அதை மதுபன்னில் விட்டு விட்டு செல்லுங்கள். எது துக்கத்தின் உணர்வுகளை உருவாக்குமோ அதை விட்டுச் செல்ல வேண்டும். மேலும் எது சுகம் கொடுக்கக் கூடியதோ அதை எடுத்துச் செல்ல வேண்டும். நல்லது.இனிமையான தாதி அவர்கள் அம்பாலா மேளாவில் செல்வதற்காக பாப்தாதாவிடம் அனுமதி பெற்றுக் கொண்டிருந்தார்கள். பாப்தாதா கூறினார் –பாப்தாதா அனேக குழந்தைகளின் குஷின்யப் பார்த்து குஷி அடைகிறார் சேவைக்காக எங்கே சென்றாலும், அனேக கஜானாக்கள் அனேகர்களுக்கு கிடைத்து விடுகிறது. எனவே நாடகத்தில் இதுவரையிலும் செல்ல வேண்டும் என்பது தான் நடந்து கொண்டிருக்கிறது. நின்று விடும் என்றால் ஒரு நொடியில் நின்று விடும். எப்படி சாகார பாபாவை பார்த்திருக்கிறீர்கள், தயாராகியிருந்தார், அவருடைய பங்கு முடிவடைந்து தயார் ஆகியிருந்த போதிலும் செல்ல முடியவில்லை. அதே போல் இதுவும் நாடகத்தில் முடிவடைந்தது என்றால், ஒரு நொடியில் தீடீரென்று நடக்கும். அதுவரை செல்லவும் வேண்டும். புத்துணர்வு ஆக்கவும் வேண்டும். அனைவரின் இதயத்தை குஷிப் படுத்துவது, இதுவும் மிகப்பெரிய புண்ணியம். அனைவரும் அழைத்துக் கொண்டிருக்கிறார்கள் இல்லையா? அழைக்கும் போது எதிரில் பிரத்யக்ஷம் ஆகத் தான் வேண்டும். ஜட விக்கிரகங்களையும் ஆவஹானம் (அழைத்தல்) செய்கிறார்கள் என்றால், அதிலேயும் உயிரோட்டம் இருப்பதாக அனுபவம் ஆகிறது. இந்த ஆவஹானம் செய்வதும் இங்கிருந்து தான் தொடங்கியது. எனவே அனைவருக்கும் அன்பு நினைவுகளைக் கொடுத்து இப்பொழுது வாய்மொழியின் கூடவே எண்ண சக்தியின் சேவை செய்யுங்கள். இது தான் இறுதி சக்திசாலியான சேவை ஆகும். அதையும் செய்யுங்கள் என்று கூறுங்கள். எண்ணத்தின் சக்தி மற்றும் வாய்மொழியின் சக்தி, மனசேவை மற்றும் வாய்மொழி சேவை இரண்டின் இணைந்த ரூபத்தில் சேவை செய்தால், சுலபமாக வெற்றி கிடைக்கும். ஒன்றின் மூலம் ஒரு ரிசல்ட் இருக்கும், இணைந்த சேவை மூலம் இருமடங்கு ரிசல்ட் இருக்கும். முதலில் எண்ணத்தின் சக்தி பிறகு வாய்மொழியின் சக்தி அப்படி மனம் மற்றும் வாய்மொழி இரண்டின் சேவை சேர்ந்தே இருக்க வேண்டும். வாய்மொழியில் மனசேவை செய்ய முடியவில்லை என்று அப்படியும் இருக்க வேண்டாம்; மேலும் மனசேவையில் வார்த்தைகள் கூற முடியவில்லை என்று அப்படியும் இருக்க வேண்டாம். வாய்மொழியின் சேவை செய்பவர்கள் குறைவாக இருக்கிறார்கள், மற்றபடி மேற்பார்வை செய்பவர்கள், வேறு காரியத்தில் யார் இருக்கிறார்களோ அவர்கள் மனசேவை செய்ய வேண்டும். இதன் மூலம் வாயுமண்டலம் யோகம் நிறைந்ததாக ஆகிறது. கூட்டத்தில் சந்திப்பு அதிகமாக இருக்கிறது, ஆனால் சந்திப்பின் கூடவே சேவைக்கான லட்சியமும் இருக்க வேண்டும். நான் சேவை செய்ய வேண்டும் என்று ஒவ்வொருவரும் நினைக்க வேண்டும். பிறகு வாயுமண்டலம், சூழ்நிலை சக்திசாலியாக ஆகிவிடும். மேலும் சேவையும் இரண்டு மடங்கு நடந்து விடும். ஊக்கம் உற்சாகத்தோடு செய்து கொண்டிருக்கிறீர்கள். இதுவும் மிக நல்லது தான். ஆனால் ஊக்கம் உற்சாகத்தின் கூடவே இந்த லட்சியத்தை வைப்பதும் அவசியம். நல்லது. அனைவருக்கும் மிகுந்த நினைவுகளைக் கூறுங்கள்.வரதானம் :

சாதாரண தன்மை மூலமாக மஹான் தன்மையை பிரசித்தி ஆக்கக்கூடிய சிம்பிள் மற்றும் சேம்பள் ஆகுகஎப்படி ஏதாவது ஒரு சிம்பிளான (எளிமை) பொருள் ஒருவேளை சுத்தமாக இருக்கிறது என்றால், அது தன் பக்கம் அனைவரையும் ஈர்க்கும். அதே போல் மனதில் எழும் எண்ணங்களில், சம்மந்தத்தில், விவகாரத்தில், வாழும் முறையில், யார் சிம்பிளாகவும் மற்றும் சுத்தமாகவும் இருக்கிறார்களோ அவர்கள் சேம்பிள் (முன் மாதிரி) ஆகி அனைவரையும் தன் பக்கம் இயல்பாகவே ஈர்ப்பார்கள். சிம்பிள் என்றால் சாதாரணம். சாதாரண நிலை மூலம் தான் மகான் நிலை பிரசித்தி ஆகிறது. யார் சாதாரணம் அதாவது சிம்பிளாக இல்லையோ அவர்கள் பிரச்னûக்குரியோர் ஆகிவிடுகிறார்கள்.சுலோகன் :

மேரா பாபா (என்னுடைய பாபா) என்று உள்ளப்பூர்வமாகக் கூறுனீர்கள் என்றால், மாயா மூர்ச்சையடையச் செய்ததனால் மூடிய கண்கள் திறந்து விடும்.


***OM SHANTI***

Whatsapp Button works on Mobile Device only