27 June 2016

BK Murli 28 June 2016 Tamil

BK Murli 28 June 2016 Tamil

28.06.2016    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


இனிமையான குழந்தைகளே! அமர பாபா உங்களுக்கு ஞானத்தின் மூன்றாவது கண் வழங்க வந்துள்ளார். இப்பொழுது நீங்கள் மூன்று காலங்களையும், மூன்று உலகங்களையும் அறிந்துள்ளீர்கள்.கேள்வி:

ஆன்மீக தந்தை ஆத்மாக்களுக்கு ஆஸ்தியை எந்த ஆதாரத்தில் அளிக்கிறார்?பதில்:

படிப்பின் ஆதாரத்தில். எந்த குழந்தைகள் நல்ல முறையில் படிக்கிறார்களோ, தேக அபிமானத்தை விடுத்து ஆத்ம உணர்வில் இருப்பதற்கான முயற்சி செய்கிறார்களோ அவர்களுக்குத் தான் தந்தையின் ஆஸ்தி கிடைக்கிறது. லௌகீக தந்தை ஆண் குழந்தைகளுக்கு மட்டுமே ஆஸ்தி அளிப்பார். ஆனால் பரலோக தந்தையின் சம்பந்தம் ஆத்மாக்களுடன் கூடியது. எனவே ஆத்மாக்களுக்கு ஆஸ்தி அளிக்கிறார்.பாடல்:

போலாநாத்தை விட தனிப்பட்டவர்.. ..ஓம் சாந்தி.

இந்த மரண உலகத்திலிருந்து அமரலோகம் செல்வதற்காக, ஆன்மீகக் குழந்தைகள் ஆன்மீகத் தந்தையிடமிருந்து, அமர கதையைக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். நிர்வாண தாமத்திற்கு அமரலோகம் என்று கூறப்படுவதில்லை. அமரலோகம் என்றால், அங்கு நீங்கள் அகால மரணம் அடைவதில்லை. எனவே அதற்கு அமரலோகம் என்று கூறப்படுகிறது. ஆன்மீகத் தந்தைக்கு அமரநாத் என்று கூறப்படுகிறது. நிச்சயம் அமரலோகத்திற்கு அழைத்துச் செல்வதற்காக, மரண உலகத்தில் தான் கதை கூறுவார். மூன்று கதைகள் பாரதத்தில் தான் பிரசித்தமாக உள்ளன. அமரகதை, சத்திய நாராயணரின் கதை, மூன்றாவது கண்ணின் கதை, பக்தி மார்க்கத்திலோ மூன்றாவது என்பதன் பொருளை யாரும் புரிந்து கொள்வதே இல்லை. ஞானத்தின் மூன்றாவது கண்ணை, ஞானக் கடலான அமர பாபாவைத் தவிர, வேறு யாருமே கொடுக்க முடியாது. இது கூட பொய்யான கதைக்காகக் கூறுகிறார்கள். நமக்கு இப்பொழுது ஞானத்தின் மூன்றாவது கண் கிடைத்துக் கொண்டிருக்கிறது என்பதை, இனிமையிலும் இனிமையான ஆன்மீகக் குழந்தைகள், தெரிந்து கொண்டு விட்டுள்ளார்கள். அந்த மூன்றாவது கண் மூலமாக மூன்று காலங்கள், மூன்று உலகங்களை நீங்கள் அறிந்து கொண்டுள்ளீர்கள். மூலவதனம், சூட்சுமவதனம், ஸ்தூல வதனத்தை நிறைய பேர் அறிந்துள்ளார்கள். ஆனால் மூன்று காலங்களின் முதல், இடை, கடையை யாருமே அறியாமல் உள்ளார்கள். இப்பொழுது, இனிமையிலும் இனிமையான ஆன்மீகக் குழந்தைகள், ஆன்மீகத் தந்தையிடம் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள். நாம் அவருடைய குழந்தைகளாக ஆகியுள்ளோம். ஒரே ஒரு முறை ஆன்மீகக் குழந்தைகளாகிய உங்களுக்கு, ஆன்மீகத் தந்தை கிடைத்துள்ளார். ஆத்மாக்களுக்குக் கற்பிக்கிறார். மற்ற எல்லோரும் தேக உணர்வுடன் இருக்கும் காரணத்தால், நான் இதை படிக்கிறேன்.... நான் அதைப் படிக்கிறேன். என்று கூறுவார்கள். தேக உணர்வு வந்து விடுகிறது. இப்பொழுது நீங்கள் நல்ல முறையில் படியுங்கள் என்று இந்த சங்கமத்தில் ஆன்மீகத் தந்தை வந்து ஆன்மீகக் குழந்தைகளுக்கு கூறுகிறார். தந்தையிடமிருந்து ஆஸ்தியைப் பெறுவதற்கு ஒவ்வொரு குழந்தையும் உரிமையுள்ளவர் ஆவார். ஏனெனில், அனைவரும் ஆன்மீக குழந்தைகள் இல்லையா? லௌகீக சம்பந்தத்தில் ஆண் குழந்தைகள் மட்டுமே ஆஸ்திக்கு உரிமையாளர் ஆகிறார்கள். இந்த பரலோக சம்பந்தத்தில், எல்லா குழந்தைகளுக்கும், எல்லா ஆத்மாக்களுக்கும், ஆஸ்தி கிடைக்கிறது. அமரநாத் பற்றிய கதை கூட கூறுகிறார். பார்வதிக்கு மலை மீது குகைகளில் கதை கூறினார் என்பார்கள். இது தவறாகும் அல்லவா? இப்பொழுது பொய் என்ன? உண்மை என்ன? என்பதை குழந்தைகளாகிய நீங்கள் அறிந்துள்ளீர்கள். உண்மையை உண்மையான பாபா தான் கூறுவார். தந்தை ஒரே ஒரு முறை உண்மையைக் கூறி, உண்மையான கண்டத்திற்கு அதிபதியாக ஆக்குகிறார். இந்த பொய்யான கண்டத்திற்கு நெருப்பு பிடிக்கப் போகிறது என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். எதெல்லாம் இப்பொழுது தென்படுகிறதோ அவை இருக்காது. நேரம் மிகவும் குறைவாக உள்ளது. இது சிவபாபாவினுடைய ஞான வேள்வியாகும். எப்படி லௌகீக சம்பந்தத்தில் கூட, தந்தை யக்ஞத்தை உருவாக்குகிறார். ஒரு சிலர் ருத்ர யக்ஞத்தை உருவாக்குகிறார்கள். ஒரு சிலர் கீதா வேள்வி. ஒரு சிலர் இராமாயண யக்ஞத்தை இயற்றுகிறார்கள். இது சிவபாபாவினுடைய அல்லது ருத்ரனினுடைய ஞான வேள்வியாகும். இது கடைசி யக்ஞமாகும்.இப்பொழுது நாம் அமரபுரிக்குச் சென்று கொண்டிருக்கிறோம் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். இனி சிறிது நிமிடங்களுக்கான வழி மட்டுமே உள்ளது. எந்தவொரு மனிதருக்கும் இது தெரியாது. அவர்களோ மரண உலகத்திலிருந்து, அமரலோகம் செல்வதற்கு இன்னுமே 40 ஆயிரம் வருடங்கள் உள்ளன என்று கூறி விடுகிறார்கள். அமரலோகம் என்று சத்யுகத்திற்குக் கூறப்படுகிறது. குழந்தைகளாகிய உங்களுக்கு இப்பொழுது பாபா நேரிடையாக வந்து அமரகதை, மூன்றாவது கதை, சத்திய நாராயணரின் கதையைக் கூறிக் கொண்டிருக்கிறார். பக்தி மார்க்கத்தில் என்னவெல்லாம் ஆகிறது என்பதை பார்த்தீர்கள். பக்தி மார்க்கத்தின் விஸ்தாரம் எவ்வளவு இருக்கிறது. எப்படி விருட்சத்தின் பெரிய விஸ்தாரம் இருக்கிறது, அதே போல பக்தியினுடையதும் பெரிய கர்ம காண்டத்தின் விருட்சம் இருக்கிறது. யக்ஞம், விரதம், நியமங்கள், ஜபம், தவம் ஆகியவை எவ்வளவு செய்கிறார்கள். இந்த பிறவியின் பக்தர்களோ நிறைய பேர் அமர்ந்துள்ளார்கள். மனிதர்களின் விருத்தி ஆகிக் கொண்டே இருக்கிறது. நீங்கள் பக்தி மார்க்கத்தில் வந்தது முதல், மற்ற தர்மங்கள் ஸ்தாபனையாகி உள்ளன. ஒவ்வொருவருக்கும் தங்களுடைய தர்மத்துடன் சம்பந்தம் உள்ளது. ஒவ்வொருவருடைய பழக்க வழக்கம் தனி. பாரதம் அமரபுரியாக இருந்தது. இப்பொழுது பாரதம் மரண உலகம் ஆகும். நீங்கள் ஆதி சனாதன தேவி தேவதா தர்மத்தினராக இருந்தீர்கள். ஆனால் இப்பொழுது பதீதமாக ஆன காரணத்தால், நீங்கள் உங்களை தேவதை என்று கூறிக் கொள்ள முடியவில்லை. நாமே தான் தேவதைகளாக இருந்தோம் என்பதை நீங்கள் மறந்து விட்டுள்ளீர்கள். எப்படி கிறிஸ்து எங்களுடைய தர்மத்தை ஸ்தாபனை செய்தார். எனவே டய கிறித்தவர்கள் வந்த வண்ணம் இருக்கிறார்கள் என்று அவர்கள் கூறுவார்கள். அப்படியின்றி ஐரோப்பிய தர்மத்தினர் என்பதல்ல. அதே போல நீங்கள் ஹிந்துஸ்தானத்தில் இருப்பவர்கள் அல்லது பாரதத்தில் இருப்பவர்கள், தேவி தேவதா தர்மத்தினர் ஆவீர்கள். ஆனால் தங்களை தேவதைகள் என்று அழைத்துக் கொள்ள முடிய வில்லை. நாங்கள் பாவிகளாக, நீசர்களாக, ஏழைகளாக, விகாரியாக உள்ளோம் என்பதை அறிவீர்கள். பக்தி மார்க்கத்தில் மனிதர்கள் துக்கமடையும் பொழுது தந்தையைத் தான் அழைக்கிறார்கள். எந்த தந்தையை நாம் கூப்பிட்டுக் கொண்டே வந்தோமோ, அவர் நமக்கு எல்லையில்லாத ஆஸ்தியை அளிப்பதற்காக, அமரகதையைக் கூறிக் கொண்டிருக்கிறார் என்பதை பிராமண குழந்தைகளாகிய நீங்கள் மட்டுமே அறிந்துள்ளீர்கள். நாம் அமரபுரிக்கு அதிபதி ஆகக் கூடியவர்கள் ஆவோம். அமரபுரி சொர்க்கம் என்று கூறப்படுகிறது. நாங்கள் சொர்க்கவாசி ஆவதற்காக முயற்சி செய்து கொண்டிருக்கிறோம் என்று நீங்கள் கூறுவீர்கள். கலியுகத்தில் மனிதர்கள் இறக்கும் பொழுது, சொர்க்கவாசியாகி விட்டார்கள் என்பார்கள். இப்பொழுது அவர் சொர்க்கத்திற்குச் செல்வதற்காக முயற்சி ஏதாவது செய்தாரா என்ன? நீங்களோ அமரபுரி வைகுண்டத்திற்கு செல்வதற்கான முயற்சி செய்து கொண்டிருக்கிறீர்கள். முயற்சி செய்விப்பவர் யார்? அமர பாபா. அவருக்கு அமரநாத் என்றும் கூறப்படுகிறது. இந்த யக்ஞத்திற்கு பாடசாலை என்றும் கூறப்படுகிறது. வேறு எந்த பாட சாலையும் யக்ஞம் என்று கூறப்படுவதில்லை. வேள்விகள் தனியாக இயற்றப்படுகிறது. அதில் பிராமணர்கள் அமர்ந்து மந்திரம் ஓதுகிறார்கள். இது உங்களுடைய கல்லூரியும் ஆகும். வேள்வியும் ஆகும். இரண்டும் சேர்ந்துள்ளது என்று தந்தை கூறுகிறார். இந்த ஞான வேள்வியிலிருந்து விநாச ஜ்வாலை பிரஜ்வலித்துள்ளது என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். இந்த முழு உலகமே ஸ்வாஹா ஆகி விடப் போகிறது. பிறகு புதிய உலகம் அமைய வேண்டி உள்ளது. இதற்குப் பெயரே மகாபாரமான மகாபாரதப் போர். இது போன்ற போர் வேறு எதுவும் ஆவதில்லை. யுத்தத்தில் உலக்கைகளால் சண்டைக்கு பயன்படுத்தப்பட்டடது என்று கூறுகிறார்கள். உங்களுடையது சண்டையோ கிடையாது. இதற்கு மகாபாரத போர் என்று ஏன் கூறுகிறார்கள்? பாரதத்திலோ ஒரு தர்மம் தான் இருக்கும் அல்லவா? மரணமோ வெளியில் இருக்கிறது. இங்கு யுத்தத்தினுடைய விஷயம் இல்லை. உங்களுக்காக புது உலகம் வேண்டும். எனவே அவசியம் பழைய உலகத்தின் விநாசமாகும் என்று தந்தை புரிய வைக்கிறார்.குழந்தைகளாகிய உங்களுடைய புத்தியில் விராட ரூபத்தைப் பற்றிய முழு ஞானம் கூட உள்ளது. யார் முந்தைய கல்பத்தில் வந்துள்ளார்களோ அவர்களே தேவதை ஆவதற்காக வருவார்கள் என்பதையும் புரிந்துள்ளீர்கள். இது புத்தியின் வேலை ! நாம் எத்தனை பேர் பிராமணர்களாக ஆகி உள்ளோமோ அவர்களே பிறகு தேவதை ஆவார்கள். பிரஜாபிதா பிரம்மா என்றும் பாடப்பட்டுள்ளது. பரமபிதா பரமாத்மா பிரம்மா மூலமாக மனித சிருஷ்டியைப் படைக்கிறார். எனவே பிரம்மாவிற்கு பிரஜாபிதா என்று கூறுகிறார்கள். ஆனால் எப்படி, எப்பொழுது படைக்கிறார், இது யாருக்கும் தெரியாது. ஏன் மனிதர்கள் ஆரம்பத்திலேயே இருப்பதில்லையா என்ன ! அவர்களைப் படைப்பதற்கு. அழைப்பதே பதீத பாவனரே வாருங்கள் என்று. எனவே மனிதர்கள் பதீதமாக ஆகும் பொழுது தான் தந்தை வருகிறார். உலகம் மாறவேண்டி உள்ளது. உங்களை தந்தை புதிய உலகத்திற்குத் தகுதியுடையவராக ஆக்குகிறார். இப்பொழுது எல்லோரும் தமோபிரதான பழைய உலகத்தில் உள்ளீர்கள். பிறகு சதோபிரதானமாக ஆக வேண்டும். ஒவ்வொரு மனிதரும், ஒவ்வொரு பொருளும் சதோ, ரஜோ, தமோவில் வர வேண்டி உள்ளது. உலகம் அவசியம் புதியதிலிருந்து பழையதாக ஆகிறது. ஆடை கூட புதியதாக அணிகிறீர்கள். பிறகு பழையதாக ஆகிறது. உங்களுக்கு ஞானம் கிடைத்துள்ளது. உண்மையான சத்திய நாராயணரின் கதையை இப்பொழுது நீங்கள் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள். கீதை அனைத்து சாஸ்திரங் களுக்கும் முதன்மையாக உள்ளது. மற்றவையெல்லாம் அதன் குழந்தை குட்டிகள். எப்படி பிரம்மாவின் முகவம்சாவளியோ, அதே போல கீதை முக்கியமானது. உயர்ந்ததிலும் உயர்ந்தவர் தாய் தந்தை, மற்றவர்கள் குழந்தைகள் ஆவார்கள். இப்பொழுது தாய் தந்தையரிடமிருந்து ஆஸ்தி கிடைக்க முடியும். மற்றபடி எவ்வளவு தான் சாஸ்திரம் படித்தாலும் சரி, என்ன செய்தாலும் சரி, ஆஸ்தி கிடைக்க முடியாது. யார் சாஸ்திரம் படிக்கிறார்களோ, அவர்களுக்கு நிறைய சம்பாத்தியம் வேண்டுமானால் ஆகலாம். அதுவோ குறுகிய காலத்திற்கானது ஆகும். இங்கு குழந்தைகளாகிய நீங்கள் கேட்கிறீர்கள் என்றால், எவ்வளவு சம்பாத்தியம் செய்கிறீர்கள் – 21 பிறவிகளுக்காக, சிந்தித்துப் பாருங்கள். அங்கு அவர் ஒருவர் கூறுவார். எல்லோரும் அவருக்குப் பைசா கொடுப்பார்கள். இங்கு தந்தை குழந்தைகளாகிய உங்களுக்குக் கூறுகிறார் - நீங்கள் 21 பிறவிகளுக்கு எவ்வளவு செல்வந்தர் ஆகிறீர்கள். அங்கு கூறுபவர்களுடைய பை நிரம்புகிறது. பக்தி ஆகியவை செய்வது இல்லற மார்க்கத்தினருடைய வேலையாகும். நீங்கள் இல்லற மார்க்கத்தினர் ஆவீர்கள். சொர்க்கலோகத்தில் நாம் பூஜைக்குரியவராக இருந்தோம் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். இல்லையென்றால், 84 பிறவிகளின் கணக்கு எங்கிருந்து வரும்? இது ஆன்மீக ஞானமாகும். சுப்ரீம் ஆத்மா ஞானக் கடலிடமிருந்து கிடைக்கிறது. பதீத பாவன் தந்தை தான் அனைவருக்கும் சத்கதி அளிக்கும் வள்ளல் ஆவார். குழந்தைகளாகிய நமக்கு அமர கதை கூறிக் கொண்டிருக்கிறார். பிறவிதோறும் பொய்யான கதைகளைக் கேட்டுக் கொண்டே வந்துள்ளீர்கள். இப்பொழுது உண்மையான கதையைக் கேட்டு நீங்கள் 16 கலை சம்பூர்ணமாக ஆகிறீர்கள். சந்திரனுக்கு 16 கலை சம்பூர்ணம் என்று கூறப்படுகிறது. சூரியனுக்கு அவ்வாறு கூறுவதில்லை.ஆத்மாக்களாகிய நாம் வருங்காலத்தில் சர்வகுணங்களில் நிறைந்தவராக, 16 கலை சம்பூர்ணமாக ஆகிடுவோம். பின்னால் அரை கல்பத்திற்கு பிறகு, அதில் துரு ஏறி விடுகிறது. நாம் மீண்டும் சர்வகுணங்களில் நிறைந்தவராக, 16 கலை சம்பூர்ணமாக ஆகிக் கொண்டிருக்கிறோம். நாமே மீண்டும் தேவதையாக ஆகிக் கொண்டிருக்கிறோம் என்பதை இப்பொழுது நீங்கள் புரிந்துள்ளீர்கள். ஆத்மாக்களாகிய நாம் முதலில் நமது வீட்டிற்குச் செல்வோம். பிறகு நாம் சரீரத்தை தாரணை செய்து நாமே தேவதை ஆகிடுவோம். பிறகு சந்திர வம்ச குடும்பத்தில் வருவோம். 84 பிறவிகளின் கணக்கு வழக்கு வேண்டும். எந்த யுகத்தில், எந்த வருடத்தில், எத்தனை பிறவிகள் ஆகின - தந்தை 84 பிறவிகளின் உண்மையிலும் உண்மையான கதையை இப்பொழுது கூறியுள்ளார். பாரதவாசிகளாகிய நீங்கள் 84 பிறவிகள் எடுக்கிறீர்கள் என்று குழந்தைகளாகிய உங்களுக்குக் கூறுவார். முதல் தன்னை பிராமணர் என்று உணர வேண்டியுள்ளது. மம்மா, பாபா என்று கூறுகிறீர்கள் அல்லவா? ஆஸ்தி பிரம்மா பாபா மூலமாக சிவபாபாவிடமிருந்து பெறுகிறீர்கள். பிரம்மா கூட அவருடையவராகி விட்டார். பிரம்மாவிடமிருந்து ஆஸ்தி கிடைக்க முடியாது. இவரும் சகோதரனாக ஆகி விட்டார். இவர் சரீரதாரி ஆவார் அல்லவா? குழந்தைகளாகிய நீங்கள் அனைவருமே அவரிடமிருந்து ஆஸ்தி பெறுகிறீர்கள். இவரிடமிருந்து (பிரம்மா) அல்ல. யாரிடமிருந்து ஆஸ்தி எடுக்க வேண்டியதில்லையோ, அவரை நினைவு செய்ய வேண்டியதில்லை. ஒரு சிவபாபாவைத் தான் நினைவு செய்ய வேண்டும். அவருக்குத் தான் தந்தையும் நீயே, தாயும் நீயே, நாங்கள் உங்களது பாலகர்கள் என்று கூறுகிறார்கள். நீங்கள் இவரிடம் வரும் பொழுது, நாம் சிவபாபாவிடம் செல்கிறோம் என்பது புத்தியில் இருக்கும். நினைவு சிவபாபாவைத் தான் செய்ய வேண்டும். ஆத்மா புள்ளி ஆகும். அதில் 84 பிறவிகளின் பாகம் பதிவாகியுள்ளது. ஆத்மா புருவமத்தியில் இருக்கிறது. பறப்பதும் ஒரு நொடியில். நான் ஆத்மா, ஒரு சரீரத்தை விட்டு மற்றொன்றை எடுக்கிறேன். புருவமத்தியில் போய் வீற்றிருக்கிறேன். நமது ஆத்மா இவ்வாறு உள்ளது என்ற அறிவு புத்தியில் உள்ளது. சத்யுகத்திலோ இப்பேர்ப்பட்ட எந்த ஒரு பொருளையும் பார்ப்பதற்கான விருப்பம் இருக்காது. ஆத்மாவை திவ்ய திருஷ்டி மூலமாகப் பார்க்க முடியும். இந்த கண்களால் பார்க்கும் விஷயம் ஒன்றும் கிடையாது. பக்தி மார்க்கத்தில் தான் சாட்சாத்காரம் (காட்சி தெரிதல்) செய்கிறார்கள். எப்படி இராமகிருஷ்ணருடைய சிஷ்யர் விவேகாநந்தர் இருந்தார். நான் முன்னால் அமர்ந்திருந்தேன், ஆக அவரது ஆத்மா (இராம கிருஷ்ணர்) வெளியேறி என்னுள் பிரவேசமாகியது என்று அவர் கூறியுள்ளார். அவ்வாறு ஆவது இல்லை. ஆத்மா எப்படி ஒரு சரீரத்தை விட்டு மற்றொன்றில் பிரவேசம் ஆகிறது - இந்த எல்லா விஷயங்களும் குழந்தைகளாகிய உங்களுக்குப் புரிய வைக்கப்படுகிறது. நாம் அமர லோகம் செல்வதற்காக முயற்சி செய்து கொண்டிருக்கிறோம் என்பதை இப்பொழுது நீங்கள் புரிந்துள்ளீர்கள். அமரலோகத்தில் நாம் பிறவி எடுப்போம். அங்கு நாம் கர்ப்ப மாளிகையில் இருப்போம். இங்கோ (கலியுகம்) கர்ப்ப சிறையில் சிக்கி, ஐயோ ! ஐயோ ! என்று கதறி கஷ்டப்படுகிறார்கள். இப்பொழுது அரை கல்பத்திற்கு பாபா உங்களை எல்லா துக்கங்களிலிருந்தும் விடுவிக்கிறார். எனவே எவ்வளவு அன்புடன் அப்பேர்ப்பட்ட தந்தையை நினைவு செய்ய வேண்டும் ! நல்லது.இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்து கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.தாரணைக்கான முக்கிய சாரம்:

1. சுயம் தங்களை ஆத்மா என்று உணர்ந்து ஆன்மீகத் தந்தையிடம் படித்து முழு ஆஸ்தியைப் பெற வேண்டும். உண்மையான கண்டத்திற்கு அதிபதியாக ஆக வேண்டுமென்றால், உண்மையான கதையைக் கேட்க வேண்டும் மற்றும் கூற வேண்டும்.2. எந்த தந்தையிடமிருந்து எல்லையில்லாத ஆஸ்தி கிடைக்கிறதோ, அவரையே தான் நினைவு செய்ய வேண்டும். எந்தவொரு தேகதாரியையும் அல்ல. இந்த பழைய உலகத்திற்கு நெருப்பு பிடிக்கப் போகிறது. எனவே இதை பார்த்தும் பார்க்கக் கூடாது.வரதானம்:

பெருமிதம் (ருஹாப்) மற்றும் கருணையின் (ரஹம்) குணத்தின் மூலமாக புது உலகப் படைப்பை நிர்மாணிக்கும் விஷ்வ கல்யாணகாரி ஆவீர்களாக!உலக நன்மை செய்பவராக வேண்டும் என்றால் முக்கியமாக இரண்டு தாரணைகள் அவசியம் – ஒன்று ஈசுவரிய பெருமிதம் மற்றும் இரண்டாவது கருணை. பெருமிதமும் கருணையும் இரண்டுமே சேர்ந்தாற் போலவும் சமமாகவும் இருந்தது என்றால், ஆத்மீகத்தின் நிலை அமைந்து விடுகிறது. எனவே எந்த ஒரு காரியம் செய்யும் பொழுதும் அல்லது வாயால் வார்த்தைகளை வர்ணிக்கும் பொழுதும், கருணையும் பெருமிதமும் இரண்டும் உள்ளதா என்று சோதனை செய்யுங்கள். சக்திகளுடைய சித்திரங்களில் இந்த இரண்டு குணங்களையும் சமமான நிலையில் காண்பிக்கிறார்கள். இந்த ஆதாரத்தில் தான் புது உலகப் படைப்பின் காரியத்தில் நீங்கள் கருவியாக ஆக முடியும்.சுலோகன்:

தந்தையின் அன்பிற்குப் பின்னால் வீண் எண்ணங்களை சமர்ப்பணம் செய்து விடுங்கள். இதுவே உண்மையான தியாகம் ஆகும்!***OM SHANTI***

Whatsapp Button works on Mobile Device only