29 June 2016

BK Murli 30 June 2016 Tamil


BK Murli 30 June 2016 Tamil

30.06.2016    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


இனிமையான குழந்தைகளே! சூரிய வம்சத்தின் இராஜ்ய பதவியை எடுப்பதற்காக அனைத்தையும் தந்தையின் மீது ஸ்வாஹா (அர்ப்பணம்) செய்யுங்கள், சூரிய வம்சத்தின் இராஜ்ய பதவி என்றால் ஏர்-கண்டிஷன் டிக்கெட் ஆகும்.கேள்வி:

இந்த உலகில் குழந்தைகளாகிய உங்களைப் போன்ற குஷியின் அதிர்ஷ்டம் நிறைந்தவர் யாரும் இல்லை - எப்படி?பதில்:

குழந்தைகளாகிய உங்களின் முன்பாக எல்லைக்கப்பாற்பட்ட தந்தை இருக்கிறார். அவரிடமிருந்து எல்லைக்கப்பாற்பட்ட ஆஸ்தி கிடைத்துக் கொண்டிருக்கிறது. நீங்கள் இந்த சமயம் எல்லைக்கப்பாற்பட்ட தந்தை, ஆசிரியர் மற்றும் சத்குருவினுடையவர் ஆகி அவரிடமிருந்து எல்லைக்கப்பாற்பட்ட பலனை அடைகிறீர்கள். உலகினருக்கு அவரைத் தெரியவே தெரியாது எனும்போது உங்களைப் போன்ற குஷியின் அதிர்ஷ்டமிக்கவர் யாரும் இருக்க முடியாது.பாடல்:

உயர்ந்த குஷியின் அதிர்ஷ்டம் நிறைந்தவர். . . .ஓம் சாந்தி.

இப்போது நாம் பிராமண சம்பிரதாயத்தவராக இருக்கிறோம் பிறகு தெய்வீக சம்பிரதாயத்தவர் ஆகப் போகிறோம் என பிராமண குல பூஷண குழந்தைகள் அறிவீர்கள். குழந்தைகளுக்கு தந்தை அமர்ந்து புரிய வைக்கிறார் - இப்போது எல்லைக்கப்பாற்பட்ட தந்தை நம் முன்பாக இருக்கிறார் மேலும் அவரிடமிருந்து எல்லைக்கப்பாற்பட்ட ஆஸ்தி கிடைத்துக் கொண்டிருக்கிறது. வேறென்ன வேண்டும்? பக்தி மார்க்கம் எப்போதிலிருந்து நடக்கிறது என்பது யாருக்கும் தெரியாது. பக்தி மார்க்கத்தின் பக்தர்கள் பகவானை அதாவது பிரியதர்ஷினிகள் பிரியதர்ஷனை நினைவு செய்கின்றனர். ஆனால் அவரைத் தெரியாது என்பதே அதிசயமான ஒன்று. பிரியதர்ஷினிக்கு பிரியதர்ஷனை தெரியாது என எப்போதாவது பார்த்ததுண்டா? இல்லாவிட்டால் எப்படி நினைவு செய்வது? பகவான் அனைவரின் தந்தையாக இருப்பவர். குழந்தைகள் தந்தையை நினைவு செய்கின்றனர். ஆனால் அறிமுகம் இல்லாமல் நினைவு செய்வது அனைத்தும் வீணாகப் போகிறது. ஆகையால் நினைவு செய்வதால் எந்த லாபமும் கிடைப்பதில்லை. நினைவு செய்து யாரும் அந்த இலட்சியத்தை அடைவதில்லை. பகவான் யார்? அவரிடமிருந்து என்ன கிடைக்கும்? வேறு யாரும் இதனைப் புரிந்து கொள்ள வில்லை. எவ்வளவு தர்மங்கள், கிறிஸ்து, புத்தர் முதலான போதகர்கள் அதாவது தர்ம ஸ்தாபகர்களை பின்பற்றுபவர்கள் நினைவு செய்கின்றனர், ஆனால் அவர்களை நினைவு செய்வதால் நமக்கு என்ன கிடைக்கும் என்பதை அறியவில்லை. இதை விட உலகாயத கல்வியேமேல். இலட்சியம், இலக்கு புத்தியில் இருக்கும். தந்தையிடமிருந்து என்ன கிடைக்கும், ஆசிரியரிடமிருந்து என்ன கிடைக்கும், குருவிடமிருந்து என்ன கிடைக்கும்? இதை யாராலும் புரிந்து கொள்ள முடியாது. நீங்கள் இங்கே தந்தை, ஆசிரியர் மற்றும் சத்குருவினுடையவராக ஆகிறீர்கள். தந்தை மற்றும் ஆசிரியரை விட குரு உயர்ந்தவராக ஆகிறார். நாம் தந்தையுடையவர்களாக ஆகியுள்ளோம் என இப்போது குழந்தைகளாகிய உங்களுக்கு நிச்சயம் ஏற்பட்டுள்ளது பாபா நம்மை 5 ஆயிரம் வருடங்களுக்கு முன்பு போல சொர்க்கத்தின் எஜமான் ஆக்குகிறார் அல்லது சாந்தி தாமத்தின் எஜமான் ஆக்குகிறார். தந்தை கேட்கிறார் - செல்லமான குழந்தைகளே, நீங்கள் என்னிடமிருந்து உங்களின் ஆஸ்தியை எடுப்பீர்கள் அல்லவா? ஆம் பாபா ஏன் எடுக்க மாட்டோம்? என அனைவரும் சொல்கின்றனர். நல்லது, சந்திர வம்சத்தின் ராமனின் பதவியை அடைவதில் திருப்தியா? உங்களுக்கு என்ன வேண்டும்? தந்தை பரிசு கொண்டு வந்திருக்கிறார். நீங்கள் சூரிய வம்சத்தின் லட்சுமியை மணமுடிப்பீர்களா? அல்லது சந்திர வம்சத்தின் சீதையையா? நீங்கள் உங்களின் முகத்தைப் பாருங்கள். ஸ்ரீ நாராயணனை அல்லது ஸ்ரீ லட்சுமியை மணமுடிக்கத் தகுதி வாய்ந்தவர்களா? தகுதி வாய்ந்தவராய் ஆகாமல் எப்படி மணமுடிக்க முடியும்? இப்போது தந்தை அமர்ந்து புரிய வைக்கிறார் - கல்பத்திற்கு முன்பு எப்படி புரிய வைத்தாரோ அதே போல மீண்டும் இப்போதும் கூட புரிய வைத்துக் கொண்டிருக்கிறார். நீங்கள் மீண்டும் வந்து ஆஸ்தியை எடுத்துக் கொண்டிருக்கிறீர்கள். உங்கள் இலட்சியமும் குறிக்கோளுமே எல்லைக்கப்பாற்பட்ட தந்தையிடமிருந்து எல்லைக்கப்பாற்பட்ட ஆஸ்தியை எடுப்பதாகும். அது சூரிய வம்சத்தின் இராஜ்ய பதவி, இரண்டாவது நிலை சந்திர வம்சத்தினுடையது ஆகும். ஏர்-கண்டிஷன் (குளிரூட்டப்பட்ட) வகுப்பு, முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு என இருக்கிறதல்லவா. ஆக, சத்யுகத்தின் முழு இராஜ்யம் ஏர்-கண்டிஷன் என புரிந்து கொள்ளுங்கள். ஏர்-கண்டிஷனை விட உயர்ந்த வகுப்பு கிடையாது. பிறகு முதல் வகுப்பு. ஆக இப்போது தந்தை கேட்கிறார் - நீங்கள் ஏர்-கண்டிஷன் எனப்படும் சூரிய வம்சத்தின் இராஜ்யத்தை எடுப்பீர்களா அல்லது சந்திர வம்சம் எனப்படும் முதல் வகுப்பா? அதனை விடவும் குறைவாக பிறகு இரண்டாம் வகுப்பில் வரிசைக்கிரமமாக வாரிசுகளாக ஆகி பிறகு பிற்காலத்தில் கடைசியில் வந்து இராஜ்யத்தை அடைவீர்கள். இல்லாவிட்டால் மூன்றாம் வகுப்பு பிரஜைகள் பிறகு அதிலும் கூட முன் பதிவு செய்யப்படுகிறது. முதல் வகுப்புக்கான முன் பதிவு, இரண்டாம் வகுப்பின் முன் பதிவு என வரிசைக்கிரமமான வகுப்புகள் உள்ளன அல்லவா. மற்றபடி அங்கே சுகம் இருக்கவே இருக்கும். தனித்தனி கம்பார்ட்மெண்ட் (பெட்டிகள்) இருக்குமல்லவா. பணக்கார மனிதர்கள் ஏர்-கண்டிஷன் பெட்டியின் டிக்கெட் எடுப்பார்கள். உங்களில் யார் செல்வந்தர் ஆவீர்கள்? யார் அனைத்தையும் தந்தைக்குக் கொடுக்கின்றனரோ அவர்கள். பாபா இவையனைத்தும் உங்களுடையது. பாரதத்தில் தான் மகிமை பாடப்பட்டுள்ளது - வியாபாரி, ரத்தின வியாபாரி, மந்திரவாதி - இந்த மகிமை தந்தையுடையது ஆகும், கிருஷ்ணருடையது அல்ல. கிருஷ்ணரோ ஆஸ்தி எடுத்தார், சத்யுகத்தில் பலனை அடைந்தார். அவரும் பாபாவுடையவராக ஆனார். பலனை எங்கிருந்தாவது அடைந்திருக்க வேண்டும் அல்லவா. லட்சுமி-நாராயணர் சத்யுகத்தில் பலனை அனுபவிக்கின்றனர். இப்போது குழந்தைகளாகிய நீங்கள் நல்ல விதமாக அறிவீர்கள், கண்டிப்பாக இவர்கள் கடந்த காலத்தில் பலனை உருவாக்கி யிருப்பார்கள் அல்லவா. நேரு அடைந்த பலன் எவ்வளவு நன்றாக இருந்தது. கண்டிப்பாக நல்ல கர்மங்களை செய்திருந்தார். பாரதத்தின் முடி சூடா மன்னராக இருந்தார். பாரதத்தின் மகிமை நிறைய உள்ளது. பாரதத்தைப் போன்ற உயர்ந்த தேசம் வேறு இருக்க முடியாது. பாரதம் பரமபிதா பரமாத்மாவின் பிறப்பிடம் ஆகும். இந்த ரகசியம் யாருடைய புத்தியிலும் பதிவதில்லை. பரமாத்மாதான் அனைவருக்கும் சுகம் அமைதியை அரை கல்ப காலத்திற்குத் தருகிறார். பாரதம்தான் முதல் நம்பர் தீர்த்த ஸ்தானமாகும். ஆனால் நாடகத்தின்படி ஒரு தந்தையை மறந்ததன் மூலம் சிருஷ்டியின் நிலை எப்படி ஆகி விட்டது, ஆகையால் சிவபாபா மீண்டும் வருகிறார். யாராவது நிமித்தமாக (கருவியாக) ஆகின்றனர் அல்லவா.இப்போது தந்தை சொல்கிறார் - அசரீரி ஆகுங்கள், தன்னை ஆத்மா என நிச்சயப்படுத்துங்கள். ஆத்மாவாகிய நான் யாருடைய குழந்தை என்பது யாருக்கும் தெரியாது. அதிசயம் அல்லவா. ஓ இறைத் தந்தையே இரக்கம் காட்டுங்கள் என சொல்லவும் செய்கின்றனர். சிவ ஜெயந்தியும் கொண்டாடுகின்றனர், ஆனால் அவர் எப்போது வந்திருந்தார் என்பது யாருக்கும் தெரியாது. மேலும் இது 5 ஆயிரம் வருடங்களின் விசயம். தந்தைதான் வந்து சத்யுகத்தை ஸ்தாபனை செய்கிறார். சத்யுகத்தின் ஆயுள் இலட்சக்கணக்கான வருடங்கள் அல்ல. எனவே அடர்ந்த காரிருளாக உள்ளது அல்லவா. கீதையின் உபதேசத்தை எவ்வளவு பேர் வந்து கேட்கின்றனர். ஆனால் படிப்பவர்களும், படிக்க வைப்பவர்களும் எதுவும் புரிந்து கொள்ளவில்லை. தந்தை எவ்வளவு எளிதாக்கி விளக்கமாக புரிய வைக்கிறார், தந்தையை மட்டும் நினைவு செய்யுங்கள். இல்லற விஷயங்களில் இருந்தபடி தாமரை மலர் போல் ஆகுங்கள். விஷ்ணுவுக்குத்தான் அனைத்து அலங்காரங்களும் கொடுத்துள்ளனர். சங்கும் கொடுத்துள்ளனர், (தாமரை) மலரும் கொடுத்துள்ளனர். உண்மையில் தேவதைகளுக்கு கொடுக்கப்படுவதில்லை. இவை எவ்வளவு ஆழமான புரிந்துக் கொள்ளக் கூடிய விஷயங்கள் ஆகும். இவை பிராமணர்களின் அலங்காரம் ஆகும். ஆனால் பிராமணர்களுக்கு எப்படி கொடுப்பது? இன்று பிராமணர்களாக உள்ளனர், நாளை சூத்திரர் களாகின்றனர். பிரம்மா குமாரர்களே சூத்திர குமாரர்கள் ஆகி விட்டனர். மாயை தாமதிப்பதில்லை. ஏதாவது தவறு செய்தாலோ, தந்தையின் உயர்ந்த வழிப்படி நடக்காவிட்டாலோ, புத்தி கெட்டு விட்டாலோ மாயை நன்றாக அடித்து முகத்தைத் திருப்பி விடுகிறது. அடித்து முகத்தைத் திருப்பி விடுவேன் என கோபம் வந்து விட்டால் மனிதர்கள் சொல்கின்றனர் அல்லவா. ஆக மாயை கூட அப்படித்தான். தந்தையை மறந்து விட்டால் மாயை ஒரு வினாடியில் அடித்து முகத்தைத் திருப்பி விடுகிறது. ஒரு வினாடியில் ஜீவன் முக்தியை அடைகின்றனர். மாயை ஒரு வினாடியில் ஜீவன்முக்தியை அழித்து விடுகிறது. எவ்வளவு நல்ல நல்ல குழந்தைகளை மாயை பிடித்துக் கொள்கிறது. எங்காவது தவறு செய்கிறார்களா என பார்க்கிறது, உடன் அடித்து விடுகிறது. தந்தை வந்து பழைய உலகத்திலிருந்து முகத்தைத் திருப்புகிறார். லௌகிக தந்தை ஏழையாக இருப்பார், பழைய குடிசையில் வசிப்பார், பிறகு புதிய வீடு கட்டினால், இதோ புதிய வீடு தயாராகி விடும், நாம் சென்று அமர்ந்து விடுவோம் என குழந்தைகளின் புத்தியில் வந்து விடுகிறது. இந்த பழைய வீட்டை உடைத்து விடுவோம். இப்போது தந்தை உங்களுக்காக உள்ளங்கையில் மலர்த்தோட்டம் அல்லது வைகுண்டத்தைக் கொண்டு வந்துள்ளார். செல்லமான குழந்தைகளே என சொல்கிறார், ஆத்மாக்களுடன் பேசுகிறார். இந்த கண்களின் மூலம் குழந்தைகளாகிய உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். நானும் கூட நாடகத்தின் வசப்பட்டுள்ளேன் என தந்தை புரிய வைக்கிறார். நாடகத்தில் இல்லாத எதுவும் செய்ய முடியும் என்பதல்ல. இல்லை, குழந்தைகளுக்கு நோய் வந்தால் நான் சரிப்படுத்துவேன், அறுவைச் சிகிச்சையிலிருந்து விடுவிப்பேன் என்பதல்ல. இல்லை, கர்ம போகத்தை அனைவரும் அனுபவிக்கவே வேண்டும். உங்கள் மீது நிறைய சுமை உள்ளது, ஏனெனில் நீங்கள் அனைவரையும் விட பழையவர்கள். சதோபிரதானத்திலிருந்து ஒரேயடியாக தமோபிரதானமாக ஆகியுள்ளீர்கள். இப்போது குழந்தைகளாகிய உங்களுக்கு தந்தை கிடைத்திருக்கிறார் எனும்போது தந்தையிடமிருந்து ஆஸ்தியை எடுக்க வேண்டும். சூரிய வம்சத்தவர், சந்திர வம்சத்தவர்களாக இருப்பவர்கள் அவசியம் வருவார்கள். தேவதைகளாக இருந்தவர்கள், பிறகு சூத்திரர்களாக ஆனவர்கள், பிறகு அவர்களே பிராமணர்களாக ஆகி தெய்வீக சம்பிரதாயத்தவர்களாக ஆவார்கள். இந்த விஷயங்களை தந்தையைத் தவிர வேறு யாரும் புரிய வைக்க முடியாது.தந்தைக்கு, குழந்தைகளாகிய நீங்கள் எவ்வளவு இனிமையானவர்களாக தெரிகிறீர்கள். நீங்கள் அதே கல்பத்திற்கு முந்தைய என்னுடைய குழந்தைகள் என சொல்கிறார். நான் கல்பம் தோறும் வந்து உங்களைப் படிப்பிக்கிறேன். எவ்வளவு அதிசயமான விஷயங்கள். நிராகார பகவானுடைய மஹா வாக்கியங்கள். சரீரத்தின் மூலம் வாக்கியங்கள் கூறுவார் அல்லவா. சரீரத்திலிருந்து பிரிந்து விட்டால் ஆத்மா பேச முடியாது. ஆத்மா சரீரத்திலிருந்து பிரிந்து சென்று விடுகிறது. இப்போது தந்தை சொல்கிறார் - அசரீரி பவ. பிராணாயாமம் முதலியவற்றை செய்ய வேண்டும் என்பதல்ல. அல்ல, நான் ஆத்மா அழிவற்றவன் என புரிந்து கொள்ள வேண்டும். என்னுடைய ஆத்மாவில் 84 பிறவிகளின் நடிப்பு நிரம்பியுள்ளது. தந்தை தானும் சொல்கிறார் -நான் நடிக்கக் கூடிய அனைத்து நடிப்பின் பாகமும் என்னுடைய ஆத்மாவில் நிரப்பப்பட்டுள்ளது. பக்தி மார்க்கத்தில் அங்கே அதற்கான நடிப்பு நடக்கிறது, ஞான மார்க்கத்தில் இங்கே வந்து ஞானத்தைக் கொடுக்கிறேன். பக்தி மார்க்கத்தவர்களுக்கு ஞானமே தெரியாது. யாராயினும் சாராயத்தை குடிக்காவிட்டால் சுவை எப்படி தெரியும். ஞானமும் கூட அடைந்து புரிந்து கொள்ளும் போது தெரிய வரும். ஞானத்தால் சத்கதி உண்டாகும் எனும்போது ஞானக்கடல்தான் சத்கதியை வழங்க முடியும். நான் அனைவருக்கும் சத்கதி வழங்கும் வள்ளல் ஆவேன் என தந்தை சொல்கிறார். சர்வோதயா தலைவர்கள் உள்ளனர் அல்லவா. எவ்வளவு விதவிதமானவர்கள் உள்ளனர். உண்மையில் அனைவரின் மீதும் தயை (இரக்கம்) காட்டக் கூடியவர் தந்தை ஆவார். ஓ பகவானே இரக்கம் காட்டுங்கள் என தந்தையிடம் சொல்கின்றனர். ஆக அனைவரின் மீதும் அவர் இரக்கம் காட்டுகிறார், மற்ற அனைவரும் எல்லைக்குட்பட்ட இரக்கம் காட்டுபவர்கள். தந்தை முழு உலகையும் சதோபிர தானமாக ஆக்குகிறார். அதில் தத்துவங்களும் கூட சதோபிரதானமாகி விடுகின்றன. இந்த வேலையே பரமாத்மாவினுடையதாகும். ஆக, சர்வோதயாவின் அர்த்தம் எவ்வளவு பெரியது. ஒரேயடியாக அனைவரின் மீதும் இரக்கம் காட்டிவிடுகிறார். சொர்க்கத்தின் ஸ்தாபனையில் யாரும் துக்கமுள்ளவர்களாக ஆவதில்லை. அங்கே முதல் நம்பர் இருக்கைகள், வசதிகள் கிடைக்கும். துக்கம் கொடுக்கக் கூடிய விலங்குகள், பூச்சிகள் முதலானவைகள் இருப்பதில்லை. அங்கும் கூட பெரிய மனிதர்களின் வீடு எவ்வளவு சுத்தமாக இருக்கும். ஒருபோதும் நீங்கள் பூச்சிகளைப் பார்க்க முடியாது. கொசுக்கள் எதுவும் நுழைய முடியாது. சொர்க்கத்தில் வருவதற்கு எதற்கும் சக்தி கிடையாது. அழுக்காக்கக் கூடிய எந்த பொருளும் இருக்காது. மலர்கள் முதலானவற்றில் இயற்கையான நறுமணம் நிறைந்திருக்கும். சூட்சும வதனத்தில் உங்களுக்கு பாபா சோம ரசம் குடிக்க வைக்கிறார். இப்போது சூட்சும வதனத்தில் எதுவும் கிடையாது. இவையனைத்தும் காட்சிகள் ஆகும். இங்கே அமர்ந்தபடி நீங்கள் காட்சிகள் பார்க்கிறீர்கள்.பாடலும் மிகவும் முதல் தரமானது. நமக்கு தந்தை கிடைத்துள்ளார், வேறு என்ன வேண்டும் என நீங்கள் அறிவீர்கள். எல்லைக்கப்பாற்பட்ட தந்தையிடமிருந்து எல்லைக்கப்பாற்பட்ட ஆஸ்தி எடுக்கிறோம் எனும்போது தந்தையை நினைவு செய்ய வேண்டும். தந்தையின் வழி புகழ் வாய்ந்தது. ஸ்ரீமத் படி நாம் உயர்ந்தவரிலும் உயர்ந்தவர் ஆகிறோம். மற்ற அனைவருடையதும் அசுர வழி, ஆகையால் சத்யுகத்தில் எப்போதும் சுகம் இருந்தது, லட்சுமி நாராயணரின் இராஜ்யம் இருந்தது என அவர்கள் அறிவதில்லை. சிறுவயதில் அவர்கள்தான் ராதா கிருஷ்ணராக இருந்தனர், அவர்களின் சரித்திரம் முதலானது எதுவும் இல்லை. சொர்க்கத்தில் எல்லா குழந்தைகளுமே மிகவும் முதல் தரமாக இருப்பார்கள். குறும்பு (சிறுபிள்ளைத் தனம்) முதலான எந்த விஷயமும் இருக்காது. நல்லது!இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.தாரணைக்கான முக்கிய சாரம்

1. பழைய உலகத்திலிருந்து முகத்தைத் திருப்பிக் கொண்ட பின், மாயை தன் பக்கமாக முகத்தைத் திருப்பிக் கொள்ளுமாறு எந்த தவறும் செய்யக் கூடாது. ஸ்ரீமத்-ஐ மீறக் (அலட்சியப்படுத்தக்) கூடாது. தந்தையிடமிருந்து முழுமையாக ஆஸ்தி எடுக்க வேண்டும்.2. தந்தையிடம் தன்னுடைய அனைத்தையும் ஸ்வாஹா (அர்ப்பணம்) செய்து உறுதியான (நிலையான) வாரிசு ஆகி சத்யுகத்தின் ஏர்-கண்டிஷன் டிக்கெட் எடுக்க வேண்டும். லட்சியம் குறிக்கோளை புத்தியில் வைத்து முயற்சி செய்ய வேண்டும்.வரதானம் :

உயர்ந்த வழியின் ஆதாரத்தில் மாயாவியின் கெட்ட தொடர்பிலிருந்து தூரமாக இருக்கக் கூடிய சக்தி சொரூபம் ஆகுக.சம்மந்திகள் (உறவினர்) கேட்பதில்லை, தொடர்பு நன்றாக இல்லை, இதன் காரணமாக சக்திசாலி ஆக முடியவில்லை என குழந்தைகளின் ஒரு புகார் உள்ளது. ஆனால் உயர்ந்த வழியின் ஆதாரத்தின் மூலம் ஞான சொரூபம், சக்தி சொரூபத்தின் வரதானி ஆகி தனது நிலையை அசைக்க முடியாததாக ஆக்குங்கள். சாட்சியாகி அனைவரின் நடிப்பையும் பாருங்கள். தனது சதோ குணமான நடிப்பில் நிலைத்திருங்கள். சதா தந்தையின் தொடர்பில் இருங்கள். அப்போது தமோ குணமான ஆத்மாவின் தொடர்பினால் பாதகம் எதுவும் ஏற்பட முடியாது.சுலோகன் :

கர்மத்தின் கல்ப மரத்தின் கிளையில் அமர்ந்து கர்மம் செய்தபடியே விடுபட்ட நிலையில் இருப்பவர்களே கர்மயோகிகள் ஆவர்.
***OM SHANTI***

Whatsapp Button works on Mobile Device only