03 June 2016

BK Murli 4 June 2016 Tamil

BK Murli 4 June 2016 Tamil

04.06.2016    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


இனிமையான குழந்தைகளே! நீங்கள் பரலௌகீகத் (ஆன்மீக) தந்தையை உண்மையான விதத்தில் அறிந்து கொண்டீர்கள், ஆகையால் உங்களைத் தான் உண்மையான அன்பு (பிரீத்த) புத்தியுடையோர் அதாவது ஆஸ்திகர்கள் என்று அழைக்க முடியும்.கேள்வி:

தந்தையின்ன் எந்த கடமையால் அவர் பக்தர்களின் ரக்சகர் (காவலர்) என்பது நிரூபணமாகின்றது?பதில்:

அனைத்து பக்தர்களையும் இராவணனின் சிறையிலிருந்து விடுவிக்க வேண்டும், ஏழையாக இருப்ப வரை செல்வந்தராக ஆக்குவது, இதுவே தந்தையின் கடமையாகும். யார் பழைய பக்தர்களோ, அவர்களை பிராமணராக்கி தேவதை ஆக்குவது, இவை தான் அவரது பாதுகாப்பாகும். தன்னுடைய அனைத்து பக்தர்களுக்கும் முக்தி- ஜீவன் முக்தியைக் கொடுப்பதற்கு பக்தர்களின் ரக்சகர் (காவலர்) வந்துவிட்டார்.பாடல்:

போலாநாத் மிகவும் தனிப்பட்டவர்ஓம் சாந்தி-

குழந்தைகள் நீங்கள் யாருடைய மகிமையைக் கேட்டீர்கள்? புகழ் பாடப்படுகின்றது, உயர்ந்ததிலும் உயர்ந்தவர் பகவான் ! மேலும் பகவான் தான் தந்தை என்று அழைக்கப்படுகின்றார். லௌகீக தந்தை கூட தன்னுடைய படைப்புக்கு படைப்பாளர் ஆகிறார். முதலில் கன்னியாவை தன்னுடைய மனைவியாக ஆக்குகின்றார் பிறகு அவரால் படைப்புகளை படைக்கின்றார். 5-7 குழந்தைகளை, பெற்றெடுக்கின்றனர். அவர் தான் படைப்பாளர் என்று சொல்லப்படுகின்றார். தந்தை என்றாலே படைப்பாளர் என்று சொல்லப்படுகின்றது. அவர் எல்லைக்கு உட்பட்ட படைப்பாளராக இருக்கின்றார். படைப்பாளரிடமிருந்து தான் படைப்புக்கு (குழந்தைகளுக்கு) ஆஸ்தி கிடைக்கின்றது என்று குழந்தைகள் நீங்கள் அறிந்துள்ளீர்கள். மனிதர்களுக்கு இரண்டு தந்தையர் உள்ளார்கள், ஒன்று உடலுக்கு தந்தை, இன்னொன்று ஆன்மீகக் தந்தை. குழந்தைகளுக்கு ஞானம் மேலும் பக்தி தனித்தனியானது என்று புரிய வைத்து விட்டார், பிறகு வருவது வைராக்கியம் ஆகும். இந்த நேரத்தில் குழந்தைகள் நீங்கள் சங்கமயுகத்தில் அமர்ந்து உள்ளீர்கள், மேலும் மற்றவர்கள் அனைவரும் கலியுகத்தில் உள்ளார்கள். அனைவரும் குழந்தைகள் தான், ஆனால் யார் முழு உலகத்தையும் படைக்கும் படைப்பாளரோ அவர் தான் நம்முடைய எல்லையற்ற தந்தை என்பதை நீங்கள் தான் அறிந்துள்ளீர்கள். நீங்கள் உடலுக்கு தந்தை இருந்தும் ஆன்மீகத் தந்தையை நினைக்கின்றீர்கள். சத்யுகத்தில் உடலுக்கு தந்தை இருந்தும் ஆன்மீக தந்தையை யாரும் நினைப்பதில்லை. ஏனென்றால், அதுவே சுகதாமமாக உள்ளது. அந்த ஆன்மீகத் தந்தையை அனைவரும் துக்கத்தில் தான் நினைக்கின்றார்கள். இங்கே படிப்பைக் கற்றுக் கொடுத்து மனிதர்களை புத்திசாலி ஆக்குகின்றார். பக்தி மார்க்கத்தில் ஆன்மீகத் தந்தையை யாருமே அறிவதில்லை. பரமபிதா பரமாத்மா, ஹே கடவுள் தந்தையே, ஹே துக்கத்தை நீக்கி, சுகத்தை அளிப்பவரே ! என்றெல்லாம் கூறி அழைக்கின்றார்கள். கடவுள் கல்லிலும், அணு-அணுவிலும், நாய், பூனையிலும் அனைத்திலும் உள்ளார் என்று சொல்கின்றார்கள். இவ்வாறு பரமாத்மா தந்தையை நிந்தனை செய்ய ஆரம்பித்துவிடுகின்றார்கள். நீங்கள் தந்தையின் குழந்தைகள் ஆகிவிட்டீர்கள் என்றால், நீங்கள் ஆஸ்திகர்கள் ஆகிவிட்டீர்கள் என்பதாகும். நீங்கள் இப்பொழுது தந்தையிடம் அன்பான புத்தி உள்ளவராகிவிட்டீர்கள். மற்றவர்கள் அனைவரும் தந்தையிடம் விபரீத புத்தி உள்ளவராக இருக்கின்றார்கள். இப்பொழுது மகாபாரத யுத்தம் நம் முன்னால் நிற்கின்றது என்பதை நீங்கள் அறிந்து கொண்டீர்கள். பழைய உலகம் அழிவது என்றால் தந்தையின் மூலமாக, ஒவ்வொரு 5ஆயிரம் வருடத்திற்குப் பிறகும் கலியுகம் என்ற பதீத உலகம் முடிந்து பிறகு சத்திய யுகம் என்ற பாவன உலகம் ஸ்தாபனை ஆகின்றது. அதனால் தான்- ஹே பதீத, பாவனரே ! வாருங்கள், என்று அழைக்கின்றார்கள். ஹே- படகோட்டியே! எங்களை இந்த விஷக்கடலில் இருந்து நீக்கி பாற்க் கடலுக்கு அழைத்துச் செல்லுங்கள் என்று அழைக்கின்றார்கள். பதீத-பாவன சீதாராமன், ஹே இராமா ! அனைத்து சீதைகளையும் பாவனமாக்குங்கள் என்று காந்திஜி கூட பாடியுள்ளார். நீங்கள் அனைவரும் சீதைகள், பக்தர்கள் ஆக இருக்கின்றீர்கள். அவர் பகவான், நாம் அனைவரும் அவரைத் தான் அழைக்கின்றோம். அவர்தான் உங்களை பதீத நிலையிலிருந்தது பாவனமாக்குகின்றார். உங்களை அவர் அலை மோத விடுவதில்லை. தீர்த்த யாத்திரைக்கு போங்கள், கும்பமேளாவுக்கு போங்கள் என்று அவர் சொல்வதில்லை. இந்த நதிகள் எல்லாம் பதீத-பாவனம் கிடையாது. ஒரே ஒரு ஞானக்கடல் தந்தை தான் பதீத-பாவனராக உள்ளார். கடலையோ, நதிகளையோ யாரும் நினைப்பதில்லை. பதீத-பாவன தந்தையே ! எங்களை பாவனமாக்குங்கள் என்று பரம தந்தையைத் தான் அழைக்கின்றார்கள். மற்றபடி தண்ணீரான நதிகள் உலகம் முழுவதும் ஒடுகின்றன. அவைகளா பதீதர்களை பாவனமாக்குகின்றது? இல்லை. பதீத-பாவனர் என்று ஒரு தந்தையைத் தான் அழைக்க முடியும். அவர் எப்பொழுது வருகின்றரோ அப்பொழுது தான் பாவனமாக்குகின்றார். பாரதத்தின் புகழ் மிகவும் உயர்ந்தது. பாரதம் அனைத்து தர்மங்களுக்கும் தீர்த்த ஸ்தானம் ஆகும். சிவ ஜெயந்தி கூட இங்கு தான் புகழ் பாடப்படுகின்றது. சத்தியயுகம் என்பது பாவன உலகம், அதில் தேவி-தேவதைகள் தான் வசிக்கின்றார்கள். தேவதைகளுக்குக் கூட புகழ் பாடப்படுகின்றது, சர்வகுணசம்பன்ன, 16 கலை சம்பூர்ண சந்திர வம்சத்தை சேர்ந்தவர்களை 14 கலை கொண்டவர்கள் என்று சொல்லப்படுகின்றது. பின்பு ஏணிப்படியில் இறங்கி வந்துவிடுகின்றோம். தந்தை வந்து தான் ஒரு வினாடியில் நம்மை உயர்த்துகின்றார். சாந்திதாமம், சுகதாமம் அழைத்துச் செல்கின்றார். பின்பு 84 பிறவிகள் சுற்றி வந்து ஏணிப்படியில் இறங்கி வருகின்றோம். சிலர் தான் 84 பிறவிகள் எடுக்கின்றார்கள். சர்வ சாஸ்த்திர சிரோமணி ஸ்ரீமத் கீதைதான் முக்கிய சாஸ்திரம் ஆகும். ஸ்ரீமத் பகவத் கீதை என்பது பகவானால் கூறப்பட்டதாகும். ஆனால் பகவான் என்று யாரை அழைகின்றார்கள்-இது பதீத மனிதர்களுக்குத் தெரியாது. பதீத-பாவனர் என்பவர் அனைவருக்கும் சத்கதியை தரும் வள்ளல், ஒரே ஒரு நிராகாரமான தந்தை சிவன் தான் ! ஆனால் அவர் எப்பொழுது வருகின்றார்? இதை யாரும் அறிவதில்லை. தந்தை அவரே வந்து தன்னுடைய அறிமுகத்தை அளிக்கின்றார். இப்பொழுது பாருங்கள், ஆண் குழந்தை, பெண் குழந்தை இருவருமே தந்தை என்று அழைக்கின்றார்கள். நீயே தாயும், தந்தையும் என்று பாடுகின்றார்கள். நீங்கள் இந்த இராஜயோகத்தைக் கற்றுக் கொள்வதால் சுகம் என்ற பொக்கிஷம் கிடைக்கின்றது. எல்லையற்ற தந்தையிடமிருந்து 21 பிறவிகளுக்கான சொர்க்க ஆஸ்தியை அடைவதற்காக நீங்கள் இங்கே வந்துள்ளீர்கள். இப்பொழுது சிவ ஜெயந்தி கூட பாரதத்தில் தான் கொண்டாடப்படுகின்றது. இராவணனைக் கூட பாரதத்தில் தான் காட்டுகின்றார்கள். ஆனால் இதன் உட்பொருளை யாரும் அறிவதில்லை. சிவன் நம்முடைய எல்லையற்ற தந்தையாக உள்ளார், இதை எல்லாம் அறிந்து கொள்ளாமலே சிவ பூஜை செய்கின்றார்கள். எப்போது முழு கல்பக விருக்ஷ் மரமும் தமோபிரதானம் ஆகிவிடுகின்றதோ, அப்பொழுது தந்தை வருகின்றார். புதிய உலகத்தில் சொர்க்கம் இருந்தது. பாரதத்தில் தான் சொர்க்கம் இருந்தது. அதே பாரதம் இப்பொழுது கலியுகமாக இருக்கின்றது. நீங்கள் முதன் முதலில் சொர்கத்திற்கு எஜமானர்களாக இருந்தீர்கள் என்பதை தந்தை புரிய வைக்கின்றார். இப்பொழுது நீங்கள் 84 பிறவிகள் எடுத்து நரகவாசி ஆகிவிட்டீர்கள். இப்பொழுது நான் உங்களுக்கு இராஜயோகம் கற்றுக் கொடுத்து மனிதனிலிருந்து தேவதையாக, பதீதநிலைலிருந்து பாவனமாக்குகின்றேன் என்கின்றார். பக்தி என்றால், பிரம்மாவின் இரவு. ஞானம் என்றால், பிரம்மாவின் பகல் என்பதாகும். நீங்கள் பிரம்மா குமாரி, குமார்கள் பகலை நோக்கிச் செல்கின்றீர்கள். இந்த பழைய உலகில் இப்பொழுது நெருப்பு பிடிக்கப் போகின்றது. இதுவே மஹா பாரத யுத்தம் ஆகும்.. அவசியம் மஹா பாரத யுத்தத்திற்குப் பிறகு தான் பாரதம் சொர்க்கமாக மாறுகின்றது. அநேக தர்மத்தின் வினாசம், ஒரு தர்மத்தின் ஸ்தாபனை ஏற்படுகின்றது. நீங்கள் குழந்தைகள் தான் தந்தைக்கு உதவியாளர்களாகி ஆதி சனாதன தேவி தேவதா தர்மத்தை ஸ்தாபனை செய்து கொண்டு இருக்கின்றீர்கள். நீங்கள் சொர்க்கத்தில் எஜமானர் ஆகுவதற்குத் தகுதியை அடைந்து விட்டீர்கள் என்றால், இந்த உலகம் அழிய ஆரம்பித்துவிடும். இதை சிவதந்தையின் ஞான யக்ஞம் பின்பு சிவன் என்றும் சொல்லலாம், ருத்திரன் என்றும் சொல்லலாம். கிருஷ்ண ஞான யக்ஞம் என்று ஒருபோதும் சொல்வதில்லை. சத்தியயுகத்திலும், திரேதா யுகத்திலும் யக்ஞயங்கள் செய்வதே இல்லை. யக்ஞங்கள் மனிதனுக்கு எப்பொழுது தொந்தரவு ஏற்படுகின்றதோ அப்பொழுது தான் உருவாக்கப்படுகின்றது. தானியம் இல்லை அல்லது சண்டைகள் நடக்கின்றது என்றால், அமைதிக்காக யக்ஞங்கள் (வேள்விகள்) படைக்கின்றார்கள். அழிவு நடக்காமல் பாரதத்தில் சொர்க்கம் ஸ்தாபனை ஆக முடியாது என்பதை குழந்தைகள் நீங்கள் அறிந்து கொண்டீர்கள். பாரதத் தாய், சிவசக்தி சேனையாக புகழ் பாடப்படுகின்றார். துôய்மைக்குத் தான் வணக்கம் செலுத்தப்படுகின்றது. பெண்களான உங்களுக்குத் தான் வந்தே மாதரம் என்று புகழ்பாடப்படுகின்றது ஏனென்றால் நீங்கள் தான் ஸ்ரீமத் படி நடந்து பாரதத்தை சொர்க்கமாக மாற்றுகின்றீர்கள். இப்பொழுது மரணம் என்பது அனைவரின் தலைக்கு மேல் உள்ளது என்று தந்தை கூறுகின்றார். ஆகையால் இந்த ஒரு பிறவியில் துôய்மையாக இருங்கள், மேலும் தந்தையை நினைவு செய்யுங்கள் ! அப்பொழுது தான் தமோபிரதானத்தில் இருந்து சதோபிரதானம் ஆகுவீர்கள். இப்பொழுது நீங்கள் சூத்திரனிலிருந்து பிராமணர்கள் ஆகி உள்ளீர்கள், பின்பு தேவதையாக ஆகின்றீர்கள். இது ஒன்றும் புதிய விஷயம் கிடையாது. கல்ப-கல்பமாக ஒவ்வொரு 5ஆயிரம் வருடத்திற்குப் பின்பும் இந்த சக்கரம் சுற்றிக் கொண்டே தான் இருக்கின்றது. நரகத்திலிருந்து சொர்க்கம் ஆகின்றது. பதீத உலகத்தில் மனிதர்கள் என்ன காரியம் செய்தாலும் அது பாவகர்மமாகத் தான் ஆகின்றது. 5 ஆயிரம் ஆண்டிற்கு முன்னால் கூட உங்களுக்கு கர்மம், விகர்மம்-சுககர்மம் என்பதைப் பற்றி நான் புரிய வைத்தேன். இப்பொழுது மீண்டும் புரிய வைக்கின்றேன். நான் பரமபிதா பரமாத்மா நிராகாரமானவன், உங்கள் தந்தை. எந்த உடலை நான் வாடகையாக ஆதாரமாக எடுத்துள்ளேனோ அவர் பகவான் கிடையாது. மனிதரை தேவதை என்றே கூட கூற முடியாது என்றால், மனிதரை பகவான் என்று எப்படி சொல்ல முடியும். நீங்கள் 84 பிறவி எடுத்து-எடுத்து ஏணிப்படியில் இறங்கி வந்து விட்டீர்கள், மேலே யாரும் போக முடியாது. அனைவரும் பதீத நிலையை அடைவதற்கான வழி தான் சொல்லிக் கொடுக்கின்றார்கள். தானும் பதீத நிலையை அடைகின்றார்கள். அப்பொழுது தான் அவர்களையும் கூட முன்னேற்ற நான் வர வேண்டியுள்ளது என்று தந்தை சொல்கின்றார். இது தான் ,இராவண இராஜ்யமாகும். நீங்கள் இப்பொழுது இராவண இராஜ்யத்தில் இருந்து வெளியில் வந்துவிட்டீர்கள். மெல்ல-மெல்ல அனைவருக்கும் தெரிய ஆரம்பித்துவிடும். பிராமணர் ஆகாமல் சிவதந்தையிடம் ஆஸ்தி அடைய முடியாது. தந்தை என்றாலே கொடுக்கக் கூடியவர். ஒன்று நிராகார தந்தை, இன்னொன்று சாகார தந்தை. ஒரு சாகார தந்தையிடம் இருந்து சாகார குழந்தைகளுக்கு ஆஸ்தி கிடைக்கின்றது. பின்பு நிராகார எல்லையற்ற தந்தையிடமிருந்து நிராகார ஆத்மாக்களுக்கு ஆஸ்தி கிடைக்கின்றது. யோகபலத்தால் தான் உலகத்திற்கே எஜமானன் ஆகின்றீர்கள், இதில் எந்த ஆயுதமும் கிடையாது. தந்தையிடம் தொடர்பு வைத்து விகர்மங்களை அழித்து விஷ்ணுபுரிக்கு எஜமானன் ஆகின்றீர்கள். இப்பொழுது அமரலோகத்திற்குச் செல்வதற்காக அமர கதை கேட்டுக் கொண்டு இருக்கின்றீர்கள். அங்கே அகால மரணம் ஏற்படுவதேயில்லை. துக்கத்தின் அடையாளமே இருக்காது. எல்லையற்ற தந்தையிடம் ஸ்ரீமத் படி நடந்து உயர்ந்ததிலும் உயர்ந்த தேவதை ஆவதற்காக நீங்கள் இங்கே வந்துள்ளீர்கள். இது எந்த சாஸ்திர ஞானமும் கிடையாது. விஷ்ணுவின் நாபியிலிருந்து பிரம்மா வந்ததாகக் காட்டுகின்றார்கள். பிறகு அவருடைய கையில் சாஸ்திரத்தைக் காட்டுகின்றார்கள். பிரம்மா மூலமாக நான் உங்களுக்கு அனைத்து படைப்புகளையும் பற்றிய ஆதி, மத்திய, இறுதியின் ஞானத்தை உங்களுக்குச் சொல்கின்றேன். நான் தான் ஞானக்கடலாக இருக்கின்றேன். ஞான சூரியன் தோன்றியதும் அஞ்ஞான இருள் நீங்கியதாகப் பாடுகின்றார்கள்.. சத்தியயுகத்தில் அஞ்ஞானம் இருப்பதே இல்லை. அது சத்திய கண்டமாக இருக்கும் போது பாரதம் வைரம் போல் இருந்தது, வைரம் தங்கத்தால் மாளிகைகள் கட்டினார்கள். ஆனால் இப்பொழுது மனிதர்களுக்கு உண்ணக் கூட உணவு கிடைப்பதில்லை. ஏழ்மையான உலகத்தை செல்வம் நிறைந்த உலகமாக யார் ஆக்குகின்றார்? இதனை தந்தை தான் செய்கின்றார். தந்தைக்குத் தான் இரக்கம் ஏற்படுகின்றது. நான் இராஜயோகம் கற்றுக் கொடுக்க வருகின்றேன் என்று தந்தை சொல்கின்றார். ஆண்களை நாராயணராகவும், பெண்களை லட்சுமியாகவும் ஆக்குகின்றேன். தந்தைதான் பக்தர்களின் பாதுகாவலராக (ரக்ஷ்க்) இருக்கின்றார். உங்களை இராவணனின் ஜெயிலிருந்து விடுவித்து சுகதாமத்திற்கு அழைத்துச் செல்கின்றேன். முழு உலகத்திலும் யார் பிராமணன் ஆகின்றார்களோ அவர்கள் தான் தேவதை ஆகின்றார்கள். பிரம்மாவின் பெயர் கூட பிரஜா பிதா என்ற பெயரில் புகழடைந்துள்ளது. நீங்கள் பிராமணர்கள் தான் அனைவரிலும் உத்தமமானவர்கள், நீங்கள் பாரதத்திற்கு உண்மையான சேவை செய்து கொண்டு இருக்கின்றீர்கள். தந்தையின் நினைவால் தான் விகர்மம் அழிகின்றது. பதீத நிலையிலிருந்து பாவனம் ஆகுவதற்கு வேறு எந்த வழியும் இல்லை. நினைவால் தான் பாவங்கள் என்ற குப்பைகள் பஸ்மமாகும். பொற்கொல்லருக்குத் தான் தெரியும் உண்மையான தங்கம் எப்படி பொய்யான தங்கமாகிறது என்று ! அதில் வெள்ளி, தாமிரம், இரும்பு எல்லாம் போடுகின்றார்கள். நீங்கள் கூட முதலில் சதோபிரதானமாக இருந்தீர்கள், பிறகு தான் உங்கள் மேல் கறை படிகின்றது, அதனால் தமோபிரதானம் ஆகின்றீர்கள், இப்பொழுது மீண்டும் சதோபிரதானமானால் தான் சத்தியயுகத்திற்குப் போக முடியும். எந்த தேகதாரிகளையும் நினைக்காதீர்கள் என்று தந்தை சொல்கின்றார்கள். குடும்பத்தில் இருந்து கொண்டே ஒரு தந்தையைத் தவிர யாரையும் நினைக்காமல் இருந்தீர்கள் என்றால், சொர்க்கத்திற்கு எஜமானன் ஆகிவிடலாம். சொர்க்கம் என்றால், விஷ்ணுபுரியாக இருந்தது, இப்பொழுது இராவணபுரியாக இருக்கின்றது. பின்பு விஷ்ணுபுரி அவசியம் ஆகும். சாது-சன்யாசி அனைவருக்கும் முக்தி கொடுக்க வருகின்றேன். அதனால் தான் சொல்லப்படுகின்றது எப்பொழுதெல்லாம் அதர்மம் அதிகமாகின்றதோ அப்பொழுது தர்மத்தை ஸ்தாபனை செய்ய வருகின்றேன் என்று ! இது பாரதத்தின் விஷய மாகும். நான் சிவன் அனைவருக்கும் சத்கதியை கொடுக்கும் வள்ளலாக இருக்கின்றேன். சிவன், ருத்திரன் என்ற பெயர் எல்லாம் அவர் ஒருவருக்கே ! இவ்வாறு அவருக்கு அநேக பெயர்கள் உள்ளன. என்னுடைய உண்மையான பெயர் சிவன் என்று தந்தை சொல்கின்றார். நான் சிவன், நீங்கள் சாலிகிராமாக இருக்கின்றீர்கள். நீங்கள் அரை கல்பம் தேக அபிமானத்தில் இருந்து கொண்டு இருந்தீர்கள். இப்பொழுது ஆத்மா அபிமானியாக ஆகுங்கள். ஒரு தந்தையை அறிவதால் தந்தை மூலமாக அனைத்தையும் அறிந்து கொள்கின்றீர்கள். மாஸ்டர் ஞானக் கடலாகின்றீர்கள். நல்லது-இனிமையிலும்-இனிமையான செல்லமான குழந்தைகளுக்கு தாய்-தந்தை பாப்தாதாவின் அன்பு-நினைவுகள் ! மற்றும் காலை வணக்கங்கள் ! ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே.தாரனைக்கான முக்கியமான சாரம்:-

1) ஸ்ரீமத்படி நடந்து உயர்ந்ததிலும், உயர்ந்த தேவதையாக ஆக வேண்டும். முழு உலகத்திற்கும் ஆன்மீக சேவை செய்ய வேண்டும். ஆதி சனாதன தேவி-தேவதா தர்மம் ஸ்தாபனை செய்வதில் தந்தைக்கு முழு உதவியாளர் ஆக வேண்டும்.2) ஆத்மாவை சுத்தமான தங்கமாக ஆக்குவதற்காக ஒரு தந்தையைத் தவிர வேறு எந்த மனிதரையும் நினைக்கக் கூடாது. ஆன்மீக தந்தையிடம் தான் உண்மையான அன்பு வைக்க வேண்டும்.வரதானம்:

சக்திகளின் கிரணங்கள் மூலமாக குறைகள், பலஹீனங்கள் என்ற குப்பைகளை எரிக்கக் கூடிய ஞான சூரியன் ஆகுங்கள்.எந்த குழந்தைகள் ஞான சூரியனுக்கு சமமாக மாஸ்டர் ஞான சூரியன் ஆக உள்ளார்களோ அவர்கள் தன்னுடைய சக்திக் கிரணங்கள் மூலமாக எந்த குப்பைகள் அதாவது குறைகள், பலஹீனங்களை, ஒரு வினாடியில் எரித்து விடுவார்கள். சூரியனின் வேலையே குப்பைகளின் நிறம், பெயர், ரூபம் அனைத்தையும் நிரந்தரமாக எரிப்பது தான். மாஸ்டர் ஞான சூரியனின் ஒவ்வொரு சக்தியும் மிகவும் அற்புதங்கள் செய்ய முடியும். ஆனால் தக்க நேரத்தில் பயன்படுத்தத் தெரிய வேண்டும். எந்த நேரத்தில் எந்த சக்தி தேவையோ அந்த சக்தியைப் பயன்படுத்த வேண்டும் மேலும் பலஹீனங்களை பஸ்மம் செய்யுங்கள் அப்பொழுது தான் மாஸ்டர் ஞான சூரியன் என்று சொல்ல முடியும்.சுலோகன்:

குணமூர்த்தி ஆகி, தன்னுடைய வாழ்க்கை என்ற பூச்செண்டில் தெய்வீகம் என்ற வாசனையை பரப்புங்கள்.***OM SHANTI***

Whatsapp Button works on Mobile Device only