06 June 2016

BK Murli 7 June 2016 Tamil


BK Murli 7 June 2016 Tamil

07.06.2016    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


இனிமையான குழந்தைகளே! நீங்கள் மகான் சௌபாக்கியசாலி ஆவீர்கள். ஏனெனில், இதுவரையும் எந்த ஒரு ரிஷி முனிவரும் கூட படிக்காத படிப்பை உங்களுக்கு பகவான் கற்பிக்கிறார்.கேள்வி:

உலகத்தின் மனிதர்களுக்குத் தெரியாத நாடகத்தின் எந்த ஒரு விதி, (நிர்ணயிக்கப்பட்ட) செயல் பற்றி குழந்தைகளாகிய நீங்கள் அறிந்துள்ளீர்கள்?பதில்:

இந்த ருத்ர ஞான வேள்வியிலிருந்து விநாச ஜ்வாலை எழும்பி உள்ளது என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். இப்பொழுது முழு பழைய உலகமே இதில் ஸ்வாஹா ஆகி விடும். இந்த (தலை) விதியை யாருமே தடுக்க முடியாது. இது எப்பேர்ப்பட்ட அஷ்வமேத அவினர்ஷி ருத்ர யக்ஞம் என்றால், இதில் அனைத்துப் பொருட்களும் ஸ்வாஹா ஆகி விடும். பிறகு நாம் இந்த பதீதமான உலகத்தில் வர மாட்டோம். இதை இறைவனின் செயல் என்று கூற முடியாது. இது நாடகத்தின் (தலைவிதி) ஆகும்.பாடல்:

மனிதா உனது முகத்தை பார்த்துக் கொள்.. .. ..ஓம் சாந்தி.

குழந்தைகளாகிய நீங்களும் மனிதர்கள் ஆவீர்கள். இது மனிதர்களின் படைப்பு ஆகும். இச்சமயம் நீங்கள் பிராமண தர்மத்தின் மனிதர்களாக ஆகி உள்ளீர்கள். தந்தை ஆத்மாக்களுக்கு அறிவுரை அளிக்கிறார். ஆத்மாவிற்கு இப்பொழுது தனது சுயதர்மம் பற்றித் தெரிய வந்துள்ளது. நான் ஆத்மா இந்த சரீரத்தை இயக்கக் கூடியவன் ஆவேன். இது ஆத்மாவின் ரதம் ஆகும். எப்படி தந்தை இந்த ரதத்தில் வந்து வீற்றிருக்கிறார். உங்களுடைய ஆத்மா கூட இந்த ரதத்தில் சவாரி ஆகி உள்ளது. நானாகிய ஆத்மா சாந்த சொரூபம் ஆவேன் என்ற ஞானம் ஆத்மாவிற்கு மறந்து விட்டுள்ளது. நாம் இருக்கும் இடமே மூலவதனம் ஆகும். இந்த உடல் நமக்கு இங்கு கிடைக்கிறது. இது போல நம்மிடமே நாம் உரையாட வேண்டும். ஆத்மாவாகிய நீங்கள் அமைதி சொரூபம் ஆவீர்கள் என்று தந்தை கூறுவார். நாம் அமைதியாக அமர வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், தங்களை ஆத்மா என்று உணர்ந்து சாந்தி தாமத்தில் வசிப்பவர்கள் என்று புரிந்து இருங்கள். சிறிது நேரம் அமைதியாக அமர முடியும். மனிதர்கள் அமைதியைத் தான் வேண்டுகிறார்கள். மன அமைதி வேண்டும் என்று கூறியது ஆத்மாவாகும். ஆனால் நான் ஆத்மா ஆவேன் என்பது மனிதர்களுக்கு தெரியாது. இதை மறந்து விட்டுள்ளார்கள். ஒரு கதையும் இருக்கிறது அல்லவா? ராணியின் கழுத்தில் மாலை போடப்பட்டிருந்தது மற்றும் அவர் வெளியில் தேடிக் கொண்டிருந்தார் என்று. எனவே அமைதியோ உங்களுடைய சுய தர்மம் ஆகும் என்று தந்தையும் புரிய வைக்கிறார். ஆத்மாக்களாகிய நாம் சாந்த சொரூபம் ஆவோம் என்பதை குழந்தைகள் புரிந்துள்ளார்கள். இங்கு பாகம் ஏற்று நடிக்க வந்துள்ளோம். இந்த உறுப்புக்களிலிருந்து விடுபட்டவராக ஆகி விடும் பொழுது ஆத்மா அமைதியாக இருக்கிறது. ஆத்மா தனது சுயதர்மமாகிய அமைதியில் எவ்வளவு நேரம் வேண்டுமோ அவ்வளவு நேரம் அமர முடியும். இந்த உடல் மூலமாக வேலை செய்ய வேண்டாம் என்று நினைத்தால் அமைதியாக அமர்ந்து விடுங்கள். இது தான் உண்மையான அமைதியாகும். இதை நீங்கள் தேடுவது இல்லை. உங்களுடைய சுயதர்மம் சாந்திஆகும். இப்பொழுது இங்கு பாகத்தை ஏற்று நடித்துக் கொண்டிருக்கிறோம். தந்தை மூலமாக தெரியவந்துள்ளது, நாம் 84 பிறவிகளின் பாகத்தை ஏற்று நடித்தோம் என்று. இந்த 84 பிறவிகளின் சக்கரம் பற்றி யாருக்குமே தெரியாது. குழந்தைகளாகிய நீங்கள் மட்டும் புரிந்துள்ளீர்கள். முதலில் நாம் சூரிய வம்சத்தின் ராஜா அல்லது பிரஜைகளாக இருந்தோம். பிறகு சந்திர வம்சத்தினர், அவர்களே வைசிய வம்சத்தினர், பின் அவர்களே சூத்திர வம்சத்தினர் ஆனோம். இப்பொழுது மீண்டும் நாம் சூரிய வம்சத்தினர் ஆக வேண்டும்.குழந்தைகளாகிய நீங்கள் படைப்பினுடைய முதல், இடை, கடை பற்றி அறிந்துள்ளீர்கள். நீங்கள் எவ்வளவு சௌபாக்கியசாலிகள் ! தந்தையோ சரியான விஷயத்தைப் புரிய வைக்கிறார். இது இருப்பதே சத்கதிக்கான மார்க்கம் ஆகும். அனைவருக்கும் சத்கதி அளிக்கும் வள்ளல் ஒருவர் ஆவார் என்பதைப் புரிய வைக்க வேண்டும். பாபா வந்து நமக்கு 21 பிறவிகளுக்கு சத்கதியை அளித்துக் கொண்டிருக்கிறார் என்பதை இப்பொழுது தெரிந்து கொண்டு விட்டுள்ளீர்கள். வெளியிலிருக்கும் மனிதர்களுக்கு இந்த விஷயங்கள் தெரியவே தெரியாது. பிரம்மா குமார் குமாரிகளாகிய நீங்கள் தான் அறிந்துள்ளீர்கள். பி.கே. ஆகிய நீங்கள் என்ன தெரிந்திருக்கிறீர்கள் என்று ஒரு சிலர் கேட்கிறார்கள். இவர் பிராமணர் அல்லது பிராமணிதானா இல்லையா? என்ற பரீட்சை நடக்க வேண்டி உள்ளது. நீங்கள் பிரம்மாவின் குழந்தைகள் என்றால் அவசியம் சிருஷ்டி சக்கரத்தை அறிந்திருக்கக் கூடும் படைப்பவராகிய தந்தையை அறிந்துள்ளீர்களா? ரிஷி முனிவர்கள் ஆகியோரோ படைப்பவர் மற்றும் படைப்பை அறியாமலே இருக்கிறார்கள். எனவே நாஸ்திகர்களாக இருக்கிறார்கள் என்பதாகிறது. நீங்கள் கூட நாஸ்திகர்களாக இருந்தீர்கள். நீங்கள் கூட படைப்பவரான தந்தை மற்றும் படைப்பின் முதல், இடை, கடையை பற்றி அறியாமல் இருந்தீர்கள். பள்ளிக் கூடத்தில் முதலில் கற்காதவர்கள் தான் வருகிறார்கள். பிறகு பள்ளிக் கூடத்தில் இதை இதை படித்தோம் என்பார்கள். இப்பொழுது நீங்கள் ஈசுவரிய படிப்பில் இருக்கிறீர்கள். பரமபிதா பரமாத்மா உங்களுக்கு கற்பித்துக் கொண்டிருக்கிறார். இதை புத்தியில் உணர வேண்டும். படைப்பவரோ ஒரு சிவபாபா தான் ஆவார். ருத்ரன் வந்து ஞான யக்ஞத்தை படைத்தார் என்பது சாஸ்திரங்களிலும் உள்ளது. இப்பொழுது ருத்ரர் மற்றும் சிவ பரமாத்மாவிற்கிடையே வித்தியாசமோ ஒன்றுமில்லை. ருத்ரஞான யக்ஞத்திலிருந்து விநாச ஜ்வாலை வெளிப்பட்டது என்றும் இருக்கிறது. ருத்ர சிவனுக்குப் பதிலாக கிருஷ்ணரின் பெயரைப் போட்டு விட்டார்கள், அவ்வளவே ! இருப்பது அதே கீதை தான். இந்த ஞான வேள்வியிலிருந்து விநாச ஜ்வாலை வெளிப்பட்டது என்று கூறுகிறார்கள். எனவே சுய ராஜ்யத்திற்காக இந்த ஞான யக்ஞம் ஆகும். இதில் பழைய உலகம் ஸ்வாஹா ஆக வேண்டி உள்ளது. யக்ஞத்தில் எல்லா ஆஹூதி அதாவது பொருட்களைப் போடுகிறார்கள். எல்லாவற்றையும் ஸ்வாஹா செய்து விடுகிறார்கள். எனவே இந்த ருத்ர ஞான வேள்வியில் முழு பழைய உலகம் ஸ்வாஹா ஆகி விடும். நீங்கள் இப்பொழுது ராஜயோகம் கற்றுக் கொண்டிருக்கிறீர்கள். இந்த பதீத உலகத்தில் மீண்டும் வரமாட்டீர்கள். இந்த உலகம் பின் முடிந்து விடப் போகிறது. இயற்கையின் சேதங்கள் ஆகியவை எல்லாமே நடக்கும் என்பதை நீங்கள்அறிந்துள்ளீர்கள். இந்த முழு ஞானமும் உங்கள் புத்தியில் பதிந்து விட வேண்டும். என்னுடைய புத்தியில் தான் முழு ஞானம் உள்ளது என்று சிவபாபா கூறுகிறார். தந்தை சத்தியமானவர் உயிரூட்டமுடையவர், ஞானக் கடல் ஆவார். படைப்பின் முதல், இடை, இறுதியை அறிந்துள்ளார். ரிஷி முனிவர்களோ நாங்கள் படைப்பவர் மற்றும் படைப்பை அறியாமல் உள்ளோம் என்று கூறுகிறார்கள். உங்களுக்கு என்ன கிடைக்கிறது என்று உங்களிடம் யாராவது கேட்டார்கள் என்றால் கூறுங்கள் - படைப்பவர் மற்றும் படைப்பின் முதல், இடை, கடை பற்றி அறியவில்லை என்று எது பற்றி பெரிய பெரிய ரிஷி முனிவர்கள் ஆகியோர் கூறிக் கொண்டிருந்தார்களோ, அவற்றை நாங்கள் அறிந்துள்ளோம். படைப்பவரான தந்தையைத் தவிர படைப்பினுடைய முதல், இடை, கடை பற்றிய இரகசியத்தை யாருமே புரிய வைக்க முடியாது. படைப்பவர் தான் புரிய வைப்பார். தேனீக்களுக்கு கூட ஒரு ராணி தேனீ உள்ளது என்பது உங்களுக்குத் தெரியும். ராணியுடன் கூடவே பின்னால் எல்லா தேனீக்களும் போகின்றன. ராணி அதாவது தாயுடன் அவைகளுக்கு எவ்வளவு சம்பந்தம் உள்ளது. எல்லையில்லாத தந்தையும் வரும் பொழுது எல்லா குழந்தைகளையும் கூட அழைத்துச் செல்கிறார். பாபா வந்து விட்டுள்ளார், ஆத்மாக்களாகிய நம்மை சாந்தி தாமத்திற்குக் கூடவே அழைத்துச் செல்வார் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். மீண்டும் நம்முடைய சத்யுகத்தின் பாகம் ஆரம்பமாகும். அந்த பாகத்தை ஏற்று நடிப்பதற்காக நீங்கள் இந்த தேவி தேவதா பதவியை அடைந்து கொண்டிருக்கிறீர்கள். இங்கு நீங்கள் வருவதே மனிதனிலிருந்து தேவதா பதவியை அடைவதற்காக. எல்லா குணங்களையும் இங்கு தாரணை செய்ய வேண்டும். இந்த இலட்சுமி நாராயணரைப் போல ஆக வேண்டும். இவர்களை திவ்ய திருஷ்டியின்றி யாரும் பார்க்க முடியாது. நாம் சூரிய வம்சத்தின் தேவதை ஆகிடுவோம். சொர்க்கத்தின் ராஜாங்கம் எப்படி ஸ்தாபனை ஆகிறது? என்பது உங்களது புத்தியில் உள்ளது. சத்யுகத்தில் தேவதைகளின் இராஜ்யம் தான் இருந்தது. ஆனால் தேவதைகளின் இராஜ்யத்தில் கூட பிறகு அரக்கர்கள் ஆகியோரை காண்பித்துள்ளார்கள். இது யாருக்குமே தெரியாது. பாரதம் எவ்வளவு தூய்மையாக இருந்தது. சர்வகுண சம்பன்ன.. .. .. என்று மகிமையும் பாடுகிறார்கள். அவர்களுக்கு முன்னால் தலையும் வணங்குகிறார்கள். கோவில்கள் கூட நிறைய அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் சத்யுகத்தினுடைய ஆதி சனாதன தேவி தேவதா தர்மம் எப்பொழுது மற்றும் எப்படி ஸ்தாபனை ஆகியது என்பது தெரியாது. இவ்வளவு உயர்ந்ததாக இருந்த பாரதம் எப்படி தாழ்வடைந்தது? இது யாருக்குமே தெரியாது. இது அமைந்த அமைக்கப்பட்ட செயல் என்று கூறுகிறார்கள். யாருடைய செயல்? அதுவும் புரியாமல் உள்ளார்கள். நாடகத்தினுடைய செயல் என்று புரிந்திருந்தால் தான் புரிய வரும். நாடகத்தின் படைப்பவர், கிரியேட்டர், டைரக்டர் யார்? இறைவனின் செயல் என்று மட்டும் கூறி விடுகிறார்கள். நாடகம் என்று கூறும் பொழுது நாடகத்தின் முதல், இடை கடையை அறிந்திருக்க வேண்டும். புத்தகத்தை மட்டும் படிப்பதால் நாடகத்தை யாராவது போய் பார்க்காதவரையும், நாடகத்தைப் பற்றி தெர்ந்து கொள்ள முடியாது. எப்படி ஒரு கிருஷ்ணரின் லீலை பற்றிய நாடகம் அமைக்கப்பட்டுள்ளது என்று பத்திரிக்கைகளிலும் வந்திருந்தது. ஆனால் பார்க்காமல் யாராவது புரிந்து கொள்ள முடியுமா என்ன? பார்த்தால் தான் நாடகத்தில் இவை எல்லாம் நடக்கப் போகிறது என்பதைப் புரிந்து கொள்வார்கள். குழந்தைகளாகிய நீங்கள் கூட நாடகத்தை இப்பொழுது புரிந்துள்ளீர்கள். உலகத்தின் சரித்திரம், பூகோளத்தினுடைய இந்த சக்கரம் சுற்றிக் கொண்டே இருக்கிறது என்று மனிதர்கள் கூறுகிறார்கள். ஆனால் எப்படிச் சுற்றுகிறது என்பது யாருக்கும் தெரியவே தெரியாது. பெயர் கூட சத்யுகம், திரேதா, துவாபரம், கலியுகம் மற்றும் சங்கமயுகம். ஆனால் ஒவ்வொரு யுகத்திலும் (யுகே யுகே) வருகிறார் என்று மனிதர்கள் (தவறாக) நினைத்துக் கொள்கின்றனர். சத்யுக, திரேதாவினுடையதும் சங்கமம் ஆகிறது. ஆனால் அந்த சங்கமத்திற்கு எந்த மகத்துவமும் இல்8லை. அதிலோ எதுவும் நடப்பதில்லை. இந்த விஷயங்களை நீங்கள் அறிந்துள்ளீர்கள். சத்யுக சூரிய வம்சத்தினர் பின் சந்திர வம்சத்தினருக்கு எப்படி ராஜ்யத்தைக் கொடுத்தார்கள்? அப்படியின்றி சந்திர வம்சத்தினர் சூரிய வம்சத்தினர் மீது வெற்றி அடைந்தார்கள் என்பதல்ல, இல்லை. யார் சந்திர வம்ச ராஜாவாகப் போகிறாரோ அவருக்கு சூரிய வம்சத்து ராஜா ராணி இராஜ்ய பாக்கியத்தின் திலகத்தை இட்டு சிம்மாசனத்தில் அமர்த்துவார்கள். ராஜா இராமர், ராணி சீதையின் பட்டம் கிடைக்கிறது. யார் கொடுத்தது? சூரிய வம்சத்தினர். இப்பொழுது நீங்கள் ஆட்சி புரியுங்கள் என்று பதவி பிரமாணம் செய்தார்கள் என்று கூறப்படும். அந்த காட்சியை குழந்தைகளாகிய நீங்கள் சாட்சாத்காரத்தில் பார்த்துள்ளீர்கள். மற்றபடி சண்டைகள் ஆகியவை எதுவும் நிகழ்வதில்லை. எப்படி ஒருவருக்கு இராஜ்யம் அளிக்கப்படுகிறதோ அவ்வாறே அளிப்பார்கள். அவர்களுடைய கால்களைக் கழுவி அவர்களுக்கு இராஜ்ய திலகம் அளிப்பார்கள். அங்கு எந்த ஒரு குருமார்களும் இருக்க மாட்டார்கள். நாம் தெய்வீக சுபாவம் உடையவர்களாக ஆகிறோம் என்பது குழந்தைகளாகிய உங்களுடைய புத்தியில் உள்ளது. சூரியவம்சம் மற்றும் சந்திரவம்சத்தின் இராஜ்யத்தில் நாம் எவ்வளவு சுகமுடையவர்களாக இருப்போம். பாபா நம்மை துக்கத்திலிருந்து வெளியேற்றி சுகத்திற்கு அழைத்துச் செல்கிறார். வேறு யாருமே சுகமுடையவர்களாக ஆக்க முடியாது. சாதுக்கள் கூட தாங்களும் சாந்தி தாமம் செல்ல வேண்டும் என்றே விரும்புகிறார்கள். நான் இந்த சாதுக்கள் ஆகியோருக்கும் உத்தாரம் செய்து அனைவரையும் சாந்திதாமத்திற்கு அழைத்துச் செல்கிறேன். சந்நியாசிகளோ வருவதே துவாபரத்தில். சொர்க்கத்தில் தேவதைகளாகிய நாம் தான் இருக்கிறோம். அங்கு கூட பிரிவுகள் தனித் தனியாக இருக்கும். சூரிய வம்சத்தினருடையது தனி, சந்திர வம்சத்தினருடையது தனி. பின்னால் இஸ்லாமியர், பௌத்தியர், சந்நியாசிகள் ஆகியோர் வருகின்றார்கள். அனைவருடைய பிரிவுகள் தனித் தனியாக அமைக்கப்பட்டுள்ளது. நாம் ஆட்சி புரிந்து கொண்டிருக்கும் பொழுது, வேறு எந்த தர்மமும் இருக்கவில்லை. மூலவதனத்தில் கூட இது போல மாலை வரிசைக்கிரமமாக அமைக்கப்பட்டுள்ளது. ஆதி சனாதன தேவி தேவதா தர்மத்தினருடையது முதல் பரம்பரை ஆகும். பின்னர் மற்ற பரம்பரைகள் வெளிப்படுகின்றன. இந்த பரம்பரை பெரியதிலும் பெரியதாகும் மற்றபடி, யாரெல்லாம் தர்ம ஸ்தாபகர்கள் வருகிறார்களோ எல்லாமே அதிலிருந்து வெளிப்பட்டது ஆகும். இஸ்லாமியர்களினுடையது இரண்டாம் நம்பர் பரம்பரை என்பார்கள். பிறகு மூன்றாவது நம்பரில் இருப்பது பௌத்தர்களின் பரம்பரை. நாம் முதலாவது நம்பர் ஆவோம். மற்றது எல்லைக்குட்பட்டது மற்றும் சிறு சிறு கிளைகளோ இலட்சக்கணக்கில் இருக்கக் கூடும். இங்கோ முக்கியமானது 4 பரம்பரைகள். முதன்முதலில் நாம் வருகிறோம். பிறகு இஸ்லாமியர், பௌத்தர்கள், கிறித்தவர்கள் வருகிறார்கள். இப்பொழுது நாம் கீழே விழுந்து விட்டுள்ளோம். நாம் தான் 84 பிறவிகள் எடுத்து பாகத்தை ஏற்று நடிக்க வேண்டியுள்ளது. யார் இப்பொழுது கடைசியில் இருக்கிறார்களோ அவர்களே பிறகு முதலில் இருப்பார்கள். தேவி தேவதைகள் இப்பொழுது பதீதமாக இருக்கும் காரணத்தினால் தங்களை தேவி தேவதை என்று அழைத்துக் கொள்ள முடியாது. தேவதைகளைப் பூஜிக்கிறார்கள். எனவே அவர்களுடைய பரம்பரையை சேர்ந்தவர்கள் என்பது நிரூபணமாகிறது. சீக்கியர்கள் குருநானக்கை ஏற்றுக் கொள்கிறார்கள். அவருடைய பரம்பரையினர் ஆவார்கள். சத்யுகத்தில் முதல் நம்பர் நம்முடைய பரம்பரையாகும். அதை விட உயர்ந்த பரம்பரை எதுவும் இருக்காது. நாம் உயர்ந்ததிலும் உயர்ந்த பரம்பரையினர் ஆவோம். நாம் எல்லோரையும் விட அதிகமாக சுகம் அனுபவிக்கிறோம். பிறகு அவர்களே ஏழையாகி விடுகிறார்கள். எல்லோரையும் விட அதிகமாக துக்கமுற்றிருப்பவர்கள் இவர்கள் தான். கடன் கூட இவர்கள் வாங்கிக் கொண்டே இருக்கிறார்கள். எவ்வளவு செல்வந்தராக இருந்தார்கள். இப்பொழுது எவ்வளவு ஏழை ஆகி விட்டுள்ளார்கள். எல்லாவற்றையும் இழந்து அமர்ந்துள்ளார்கள். இது இருப்பதே துக்கதாமமாக. இப்பொழுது தந்தை மீண்டும் உங்களை சுகதாமத்திற்கு அதிபதியாக ஆக்குகிறார். மற்ற எல்லோரும் சாந்திதாமம் சென்று விடுவார்கள். அரைகல்பம் நீங்கள் சுகம் அனுபவிக்கிறீர்கள். மற்ற எல்லோரும் அமைதியில் இருப்பார்கள். நாங்கள் முக்தியில் செல்ல வேண்டும் என்றே விரும்புகிறார்கள். சுகத்தை காக்கை எச்சிலுக்கு சமம் என்று நினைக்கிறார்கள். அவர்களுக்கு சுக தாமத்தின் அனுபவமே இல்லை. உங்களுக்கு அனுபவம் இருக்கிறது. மகிமையும் பாடுகிறார்கள். ஆனால் பதீதமாக ஆன காரணத்தினால் மறந்து விட்டுள்ளார்கள். இப்பொழுது தந்தை நினைவூட்டுகிறார் - ஹே, பாரதவாசிகளே நீங்கள் தேவி தேவதா தர்மத்தினர் ஆவீர்கள். துவாபரத்திலிருந்து பெயரை மாற்றி விட்டுள்ளார்கள். தேவதா தர்மத்தினர் தான் பதீதமாக ஆகி விட்டுள்ளார்கள். ஹே, பதீத பாவனரே ! வாருங்கள், என்று பாடிக் கொண்டும் இருக்கிறார்கள். நீங்கள் எவ்வளவு பிறவிகள் பாவன உலகத்தில் இருந்தீர்கள், எத்தனை பிறவிகள் பதீத உலகத்தில் இருக்கிறீர்கள் என்பதை தந்தை கூறி உள்ளார். இப்பொழுது மீண்டும் பாவன உலகத்திற்குச் செல்ல வேண்டும். இது பாடசாலைகளுக்கு பாடசாலையாகவும் உள்ளது, வேள்விகளுக்கு வேள்வியாகவும் உள்ளது. முழு பழைய உலகம் இதில் முடிந்து விடப் போகிறது. ஹோலி தினத்தன்று எரிக்கிறார்கள். இந்த எல்லா பண்டிகைகளும் தற்பொழுதினுடைய ஞாபகார்த்தங்களாகும். ஆத்மா போய் விடும். மற்றபடி சரீரம் முடிந்து போய் விடும். இந்த ஞானத்தை எந்த ஒரு சந்நியாசியும் அளிக்க முடியாது. கீதையில் கொஞ்சம் இருக்கிறது. ஆனால் மாவில் உப்பு அளவிற்குத் தான். ஞானம் பெரும்பாலும் மறைந்து விடுகிறது. நான் இந்த வேள்வியை இயற்றியுள்ளேன். இதில் உடல், மனம், பொருள் எல்லாமே ஸ்வாஹா செய்கிறீர்கள். உயிருடன் இருந்தே இறக்கிறீர்கள். இந்த ஞானம் உங்களுக்கு இப்பொழுது கிடைத்துக் கொண்டிருக்கிறது. நல்லது.இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்துக் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.தாரணைக்கான முக்கிய சாரம்:

1. சுகதாமத்திற்குச் செல்வதற்காக தங்களுடைய சுபாவத்தை தெய்வீகமானதாக ஆக்க வேண்டும். நாடகத்தின் முதல், இடை, கடையின் இரகசியத்தை புத்தியில் வைத்து, மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். அனைவருக்கும் இதே இரகசியத்தைப் புரிய வைக்க வேண்டும்.2. சுயராஜ்யத்தை பெறுவதற்காக இந்த எல்லையில்லாத வேள்வியில் உயிருடனிருந்தே தங்களுடைய உடல், மனம், பொருளை ஸ்வாஹா செய்ய வேண்டும். அனைத்தையும் புதிய உலகத்திற்காக மாற்றம் (டிரான்ஸ்ஃபர்) செய்து விட வேண்டும்.வரதானம்:

தங்களது சொரூபத்தின் மூலமாக பக்தர்களுக்கு ஒளியின் கிரீடத்தின் சாட்சாத்காரம் செய்விக்கும் இஷ்ட தேவிகள் ஆகுக!எப்பொழுது முதல் நீங்கள் தந்தையின் குழந்தைகள் ஆனீர்களோ, தூய்மையின் உறுதி எடுத்தீர்களோ அதற்குப் பதிலாக உங்களுக்கு ஒளிக் கிரீடம் பிராப்தி ஆகக் கிடைத்து விட்டது. இந்த ஒளி கிரீடத்திற்கு முன்னால் ரத்தினங்கள் பதிக்கப்பட்ட கிரீடம் ஒன்றுமே இல்லை. எந்த அளவிற்கு எண்ணம், சொல் மற்றும் செயலில் தூய்மையை தாரணை செய்துக் கொண்டே செல்வீர்களோ, அந்த அளவிற்கு இந்த ஒளிக் கிரீடம் தெளிவாகிக் கொண்டே போகும். மேலும் இஷ்ட தேவிகளின் ரூபத்தில் பக்தர்களுக்கு முன்னால் பிரத்யட்சம் ஆகிக் கொண்டே செல்வீர்கள்.சுலோகன்:

எப்பொழுதுமே பாப்தாதாவின் குடை நிழலுக்குள் இருந்தீர்கள் என்றால், விக்கின விநாசகராக ஆகி விடுவீர்கள்.***OM SHANTI***

Whatsapp Button works on Mobile Device only