13 July 2016

BK Murli 14 July 2016 Tamil

BK Murli 14 July 2016 Tamil

14.07.2016    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்

இனிமையான குழந்தைகளே! விருட்சபதி தந்தை குழந்தைகளாகிய உங்கள் மீது குரு திசையை அமர வைத்துள்ளார், இப்போது நீங்கள் அழிவற்ற சுகத்தின் உலகத்திற்குச் சென்று கொண்டிருக்கிறீர்கள்.கேள்வி:

அழிவற்ற குரு திசை (குரு பார்வை) எந்த குழந்தைகளுக்கு ஏற்படுகிறது, அவர்களின் அடையாளங்கள் என்ன?பதில்:

வாழ்ந்தபடியே தேகத்தின் அனைத்து சம்மந்தங்களையும் தியாகம் செய்து தன்னை ஆத்மா என நிச்சயப்படுத்தக்கூடிய நிச்சயம் நிறைந்த ஆன்மீக புத்தியுள்ள குழந்தைகளின் மீது குரு திசை அமர்கிறது. அவர்களுடைய சுகத்தைப் பற்றித்தான் பாடல் உள்ளது - அதீந்திரிய சுகத்தைப் பற்றி கோப கோபியரிடம் கேளுங்கள். அவர்களுடைய குஷி ஒருபோதும் மறைந்து (குறைந்து) போக முடியாது.பாடல்:

ஓம் நம: சிவாய. . .ஓம் சாந்தி.

குழந்தைகள் தந்தையின் மகிமையைக் கேட்டீர்கள். இன்றைய நாள் விருட்சபதி நாள் என்றே சொல்லப்படுகிறது. அதனை இணைத்து பிருகஸ்பதி நாள் என சொல்லப்படுகிறது. இதுவே குருவாரம் என்றும் சொல்லப்படுகிறது. வெறும் குருவாரம் அல்ல, ஆனால் சத்குருவாரம் ஆகும். வங்காளத்தில் மிகவும் மதிப்பு தருகிறார்கள். மனித சிருஷ்டியின் விதை ரூபம் என பாடப்படுகிறார், ஆகையால் விருட்சபதி என சொல்கின்றனர். விதையாக இருக்கிறார், பதியாகவும் இருக்கிறார். விருட்சத்தின் (மரத்தின்) விதையை தந்தை என்றும் சொல்வார்கள். அதிலிருந்து மரம் தோன்றி வளர்கிறது. இது மனித சிருஷ்டி என்னும் மரம். இதன் விதை மேலே உள்ளது. குழந்தைகளாகிய நம் மீது இப்போது அழிவற்ற விருட்சபதியின் திசை உள்ளது, ஏனென்றால் அழிவற்ற சுயராஜ்யம் கிடைத்துக் கொண்டிருக்கிறது என்று நீங்கள் அறிவீர்கள். சத்யுகம் அழிவற்ற சுகதாமம் என்றே சொல்லப்படுகிறது. கலியுகம் அழியும் துக்கதாமம் என சொல்லப்படுகிறது. இப்போது துக்கதாமம் வினாசம் ஆகவுள்ளது. சுகதாமம் அழிவற்றது, அரைக் கல்பம் நடக்கிறது, அதனை அழிவற்ற விருட்சபதி ஸ்தாபனை செய்துக் கொண்டிருக்கிறார். குழந்தைகள் சேவைக்காக ஞான விஷயங்களைக் குறித்துக் கொள்ள வேண்டும் - கண்காட்சிகளில் இன்ன இன்ன விஷயங்கள் புரிய வைக்க வேண்டும் என்று. ஏனென்றால் மனிதர்களுக்கு ஒன்றும் தெரியாது. இது ஞானமாகும். இப்போது தந்தை இந்த ஞானத்தை சொல்வதே புதிய மற்றும் பழைய உலகத்தின் இடையில், பிறகு இது மறைந்து விடும். தேவதைகளிடம் இந்த ஞானம் இருக்காது. ஒரு வேளை இந்த சக்கரத்தின் ஞானம் இருந்தது என்றால் பிறகு இராஜ்யத்தின் மகிழ்ச்சியே இருக்காது. இப்போதும் கூட உங்களுக்கு சிந்தனை செல்கிறது அல்லவா. இராஜ்யத்தை எடுத்தபின் நம்முடைய நிலை இப்படி ஆகி விடுமா என்ன? ஆனால் இந்த நாடகம் உருவாக்கப்பட்டுள்ளது. சக்கரம் சுழலத்தான் வேண்டும். உலகின் வரலாறு புவியியல் மீண்டும் மீண்டும் நடந்து கொண்டிருக்கிறது. எப்படி நடக்கிறது என குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். இது மனித சிருஷ்டியாகும். உங்களுடைய புத்தியில் மூலவதனத்தின் மரம் கூட உள்ளது. அனைவரின் பிரிவுகளும் தனித்தனியாக இருக்கும். இந்த விஷயங்கள் யாருடைய புத்தியிலும் எப்போதும் இருக்காது. எந்த சாஸ்திரத்திலும் இது எழுதப்படவில்லை. ஆத்மாக்களாகிய நாம் உண்மையில் சாந்திதாமத்தில் வசிப்பவர்கள், அழிவற்றவர்கள். ஒருபோதும் அழிவதில்லை. நீர்க்குமிழி நீரிலிருந்து வெளிப்பட்டு பிறகு அதிலேயே கரைந்து விடும் என அவர்கள் புரிந்து கொள்கின்றனர். உங்களுடைய புத்தியில் முழு ரகசியமும் உள்ளது. ஆத்மா அழிவற்றது, அதில் முழுமையான நடிப்பும் பதிவாகியுள்ளது. இந்த சக்கரத்தின் ஞானம் எந்த சாஸ்திரங்களிலும் இல்லை. அங்கங்கே ஸ்வஸ்திக் சின்னத்தையும் காட்டுகின்றனர். சக்கரத்தின் கோடுகளை பலவறாகப் போடுகின்றனர், அதிலிருந்து பல தர்மங்கள் இருந்தன என்பது நிரூபணம் ஆகிறது. முக்கிய தர்மங்களும் சாஸ்திரங்களும் 4 உள்ளன என தந்தை புரிய வைத்திருக்கிறார். சத்ய, திரேதா யுகங்களில் எந்த தர்மமும் ஸ்தாபனை ஆவதில்லை, அங்கே எந்த தர்ம சாஸ்திரமும் இருப்பதில்லை. இவை அனைத்தும் துவாபரத்திலிருந்து தொடங்குகின்றன. பிறகு பாருங்கள், எவ்வளவு வளர்ச்சி ஏற்படுகிறது. நல்லது, கீதை எப்போது சொல்லப்பட்டது? தந்தை சொல்கிறார் - நான் கல்பத்தில் சங்கம யுகத்தில்தான் வருகிறேன். அவர்கள் பிறகு கல்பம் என்ற வார்த்தையை நீக்கிவிட்டு ஒவ்வொரு சங்கமயுகத்திலும் (யுகே யுகே) என எழுதிவிட்டனர். உண்மையில் சங்கம யுகத்தில் வேறு யாரும் தர்ம ஸ்தாபனை செய்வதில்லை. திரேதாவின் கடைசியில், துவாபரத்தின் ஆரம்பத்தின் சங்கமத்தில் இஸ்லாம் தர்மம் ஸ்தாபிக்கப்பட்டது என்பதல்ல. இல்லை, துவாபரத்தில் ஸ்தாபனை ஆயிற்று என்பார்கள். இந்த சங்கமம் மகிழ்ச்சிக்கான சமயம், இதை கும்ப (மேளா) என்று கூறுகின்றனர். கும்பமேளா என்று சங்கமத்திற்குச் சொல்லப்படுகிறது. ஆத்மாக்களும் பரமாத்மாவும் சந்திக்கக் கூடிய சங்கமம் என சொல்வோம். இந்த ஆன்மீக சந்திப்பு சங்கமத்தில்தான் ஏற்படுகிறது. அவர்கள் நீராலான கங்கையின் பெயரை புகழடையச் செய்து விட்டனர். ஞானக் கடல், பதித பாவனரை தெரிவதே இல்லை. அவர் தூய்மையற்ற உலகை எப்படி தூய்மையக்கினார் என்பது எந்த சாஸ்திரங்களிலும் கிடையாது. இப்போது குழந்தைகளாகிய உங்களுக்கு தந்தை சொல்கிறார் - என்னை மட்டும் நினைவு செய்யுங்கள். தேகத்தின் அனைத்து தர்மங்களையும் தியாகம் செய்யுங்கள். யாருக்குச் சொல்கிறார்? ஆத்மாக்களுக்கு. இது வாழ்ந்தபடியே இறப்பது என சொல்லப்படுகிறது. மனிதர்கள் சரீரத்தை விடும்போது தேகத்தின் அனைத்து சம்மந்தங்களும் விடுபட்டு விடுகின்றன. தந்தை சொல்கிறார் - இருக்கக் கூடிய தேகத்தின் சம்பந்தங்கள் அனைத்தையும் விட்டு தன்னை ஆத்மா என நிச்சயப்படுத்துங்கள். நிச்சய ஆன்மீக புத்தியுடையவராக ஆகுங்கள். எந்த அளவு அதிகமாக நினைவு செய்கிறீர்களோ அந்த அளவு பிருஹஸ்பதி (குரு) திசை ஏற்படும். நாம் சிவபாபாவை எவ்வளவு நினைவு செய்கிறோம் என சோதியுங்கள். நினைவின் மூலமே துரு நீங்கிச் செல்லும், மேலும் உங்களுக்கு குஷி இருக்கும். நான் ஆத்மா தந்தையை எவ்வளவு நினைவு செய்கிறேன் என நீங்கள் உணர முடியும். ஒருவேளை குறைவாக நினைவு செய்தீர்கள் என்றால் துருவும் குறைவாகவே நீங்கும். குஷியும் குறைவாக இருக்கும். பதவியும் குறைவானதாக அடைவீர்கள். ஆத்மாதான் சதோ, ரஜோ, தமோ ஆகிறது. கோப கோபியரின் அதீந்திரிய சுகத்தைப் பற்றிய பாடல் இந்த சமயத்தினுடையதுதான் ஆகும். ஒரு தந்தையைத் தவிர வேறு எந்த நினைவும் இருக்கலாகாது, அப்படி இருக்கும்போதுதான் குஷியின் அளவு அதிகரிக்கும். நம் மீது பிருஹஸ்பதியின் தசை (குருபார்வை) அல்லது சத்குருவின் தசை இருக்கிறது. பிறகு எப்போதாவது குஷி மறைந்து விட்டது என்றால் பிருஹஸ்பதியின் தசை மாறி ராகுவின் தசை அமர்ந்து விட்டது என அர்த்தம். சிலர் மிகவும் செல்வந்தர்களாக ஆகின்றனர், சிலர் கை மாற்று வியாபாரம் செய்யும்போது திவால் ஆகி விடுகின்றனர். பாரதத்தில்தான் கிரஹணம் பிடிக்கும்போது தானம் கொடுத்தால் கிரஹணம் விடுபடும் என சொல்கின்றனர். உங்களுடைய தேவி தேவதா தர்மம் கூட 16 கலைகளில் நிறைந்திருந்தது, அவர்களுக்கு கிரஹணம் பிடித்துள்ளது. ராகுவின் தசை அமர்ந்து விடுகிறது. ஆகையால் தேவதைகளுக்கு முன்னால் சென்று நீங்கள் அனைத்து குணங்களில் நிறைந்தவர். . . நாங்கள் பாவிகள், கபடர்கள் என பாடுகின்றனர். ராகுவின் கிரஹணம் பிடிக்கும்போது அனைவரும் கருப்பாகி விட்டனர் என நீங்கள் இப்போது புரிந்து கொள்கிறீர்கள். சந்திரனுக்குப் பின்னால் கோடு விழுந்து விடுகிறது. தேவி தேவதைகளாகிய உங்களின் படங்களும் உள்ளன என தந்தையும் புரிய வைக்கிறார். கீதைதான் ஆதி சனாதன தேவி தேவதா தர்மத்தின் சாஸ்திரம் ஆகும். ஆனால் இவர்கள் தம்முடைய தர்மத்தை தெரிந்து கொள்ளவில்லை. மதத் தலைவர்களுடைய மாநாடு நடத்துகின்றனர். நீங்கள் அங்கும் கூட புரிய வைக்க முடியும் - இறைவன் எங்கும் நிறைந்தவர் அல்ல. அவர் எல்லைக்கப்பாற்பட்ட தந்தை. வந்து குழந்தைகளுக்கு ஆஸ்தி கொடுக்கிறார். சாது சன்னியாசி முதலானவர்களுக்கு ஆஸ்தி கிடைப்பதில்லை எனும்போது எப்படி ஒப்புக் கொள்வார்கள். குழந்தைகளாகிய உங்களுக்குத்தான் ஆஸ்தி கிடைக்கிறது. ஈஸ்வரன் எங்கும் நிறைந்தவர் அல்ல என்பதுதான் நிரூபிக்க வேண்டிய முக்கியமான வி‘யம் ஆகும். சிவ ஜெயந்தி நடக்கிறது. சிவ ஜெயந்தி என்றாலும் சரி, ருத்ர ஜெயந்தி என்றாலும் சரி - ருத்ரன் இந்த ஞான யக்ஞத்தை படைக்கிறார். அவர் சிவன் ஆவார். வினாசத்தின் ஜுவாலை மூண்டெழுந்த அதே கீதா ஞான யக்ஞமாகும். எப்படி நிராகார தந்தை இந்த ருத்ர ஞான யக்ஞத்தை படைத்தார் என்று நடைமுறையில் நீங்கள் பார்க்கிறீர்கள். சாகார தந்தை (பிரம்மா பாபா) எதுவும் செய்ய முடியாது. இது எல்லைக்கப்பாற்பட்ட யக்ஞமாகும், இதில் முழு பழைய உலகமும் ஸ்வாஹா (அர்ப்பணம்) ஆக வேண்டியுள்ளது. மற்றவையனைத்தும் ஸ்தூல யக்ஞமாகும். எவ்வளவு இரவுக்கும் பகலுக்குமான வித்தியாசம் உள்ளது. இது ருத்ர ஞான யக்ஞமாகும், வினாசமும் ஆகவேண்டியுள்ளது என தந்தை சொல்கிறார். நீங்கள் தேர்ச்சி அடையும்போது, முழுமையன யோகி, ஞானி ஆகிவிடும்போது, பிறகு உங்களுக்காக புதிய உலகம், சொர்க்கம் தேவை. நரகம் கண்டிப்பாக வினாசம் ஆக வேண்டும். ராஜஸ்வ அஸ்வமேத என்னும் வார்த்தையும் சரியாக உள்ளது. குதிரையை ஸ்வாஹா (அர்ப்பணம்) செய்கின்றனர். உண்மையில் இது உங்களுடைய ரதமாகும். ஒரு தக்ஷபிரஜாபதியின் யக்ஞத்தையும் உருவாக்குகின்றனர், அதன் கதையும் உள்ளது. நம்மை விருட்சபதியாகிய தந்தை படிப்பித்துக் கொண்டிருக்கிறார் என்று குழந்தைகளாகிய உங்களுக்கு எவ்வளவு குஷி இருக்க வேண்டும். நம் மீது இப்போது பிருஹஸ்பதியின் தசை உள்ளது, நம்முடைய நிலை மிகவும் நன்றாக உள்ளது. பிறகு போகப் போக, பாபா நாங்கள் குழம்பி விட்டோம் என எழுதுகின்றனர். முதலில் நாங்கள் மிகவும் குஷியாக இருந்தோம், ஆனால் இப்போது என்ன ஆயிற்று என தெரியவில்லை. இங்கே வந்து தந்தையுடையவராக ஆவது என்பது பெரிய யாத்திரை ஆகும். அங்கே தீர்த்த யாத்திரையில் செல்லும்போது எவ்வளவு செலவு செய்கின்றனர். இப்போது இங்கே தானம் செய்யக் கூடிய வி‘யம் எதுவுமில்லை. இதில் கொஞ்சம் கூட பணம் செலவு செய்யக்கூடாது. அது ஸ்தூலமான யாத்திரை, உங்களுடையது ஆன்மீக யாத்திரை ஆகும். ஸ்தூல யாத்திரையினால் எந்த லாபமும் கிடையாது. பாடலிலும் உள்ளது அல்லவா - நாலா புறங்களிலும் சுற்றி அலைந்த போதும் பிறவி பிறவிகளாக பிரிந்திருந்தோம். எவ்வளவு அளவற்ற யாத்திரைகள் செய்திருப்போம் என இப்போது நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். எங்காவது ஓரிடத்திற்கு மனிதர்கள் கண்டிப்பாக செல்கின்றனர். ஹரித்துவாரில் கங்கைக்கு கண்டிப்பாக செல்கின்றனர். பதித பாவனி (தூய்மையற்றவர்களை தூய்மையாக்குவது) கங்கை என புரிந்து கொள்கின்றனர் அல்லவா. இப்போது உண்மையில் நீங்கள் உண்மையிலும் உண்மையான ஞான கங்கைகளாக இருக்கிறீர்கள். உங்களிடமும் கூட பலரும் வந்து ஞான ஸ்நானம் செய்கின்றனர். பாபா புரிய வைத்திருக்கிறார் - சத்குரு ஒருவரே ஆவார். அனைவருக்கும் சத்கதி வழங்கும் வள்ளல் ஒரு சத்குருவைத் தவிர வேறு எந்த குருவும் கிடையாது. நான் உங்களை கல்பம் தோறும் சங்கம யுகத்தில் வந்து சத்கதி கொடுத்து பூஜாரியிலிருந்து பூஜைக்குரியவர்களாக ஆக்குகிறேன் என தந்தை சொல்கிறார். பிறகு நீங்கள் பூஜாரிகளாகி துக்கம் மிக்கவர்களாக ஆகி விடுவீர்கள். இதுவும் கூட இப்போது தெரிந்துள்ளது. நம்முடைய ராஜ்ஜியம் அரை கல்பம் நடக்கும், பிறகு துவாபரத்தில் தேவி தேவதைகளாகிய நாமே வாம மார்க்கத்தில் சென்று விடுவோம். ராவண ராஜ்ஜியம் தொடங்கும் போதுதான் வாம மார்க்கம் தொடங்குகிறது. அதனுடைய அடையாளங்களும் உள்ளன. ஜகன்னாதரின் கோவிலுக்குச் சென்றீர்கள் என்றால் உள்ளே கருப்பான மூர்த்தி இருக்கிறது, வெளியே தேவதைகளின் அழுக்கான சிலைகள் உள்ளன. அந்த சமயம் தனக்கும் (பிரம்மாவுக்கும்) கூட இது என்ன என்பது புரியவில்லை. விகாரம் மிக்க மனிதர்கள் விகாரம் மிக்க பார்வையில் பார்ப்பார்கள். ஆக, தேவதைகளும் விகாரிகளாக இருந்தனர் என புரிந்து கொள்கின்றனர். தேவதைகள் வாம மார்க்கத்தில் சென்றனர் என எழுதப்பட்டுள்ளது. உடையும் கூட தேவதைகளுடையதை கொடுத்துள்ளனர். இங்கும் கூட தில்வாடா கோவிலுக்குச் சென்றீர்கள் என்றால் மேலே சொர்க்கம் காட்டப்பட்டுள்ளது. கீழே தபஸ்ஸில் அமர்ந்திருக்கின்றனர். இந்த அனைத்து ரகசியங்கள் வேறு யாருக்கும் தெரியாது. பாபாவின் ரதம் அனுபவம் மிக்கவர் அல்லவா.குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொண்டிருக்கிறீர்கள் - ஆத்மாக்களும் பரமாத்மாவும் வெகு காலம் பிரிந்திருந்தனர். . . முதலில் பிரிந்த நீங்களே பிறகு வந்து முதலில் சந்திக்கிறீர்கள். சத்யுகத்தின் முதல் இளவரசர் ஸ்ரீகிருஷ்ணர். கிருஷ்ணரின் தந்தையும் இருப்பார் அல்லவா. கிருஷ்ணரின் தாய் தந்தையரை அவ்வளவாகக் காட்டுவதில்லை. தலை மீது கூடையில் வைத்து நதியைக் கடந்து அழைத்துச் சென்றதை மட்டும் காட்டுகின்றனர். ராஜ்ஜியம் முதலான எதையும் காட்டவில்லை. அவருடைய தந்தைக்கு மகிமை எதுவும் இல்லையே, ஏன்? இந்த சமயம் கிருஷ்ணரின் ஆத்மா நல்ல விதமாக படிப்பை படித்தார் என இப்போது நீங்கள் அறிகிறீர்கள். அதன் காரணமாக தாய் தந்தையை விடவும் உயர்ந்த பதவியை அடைந்தார். நாம் ஸ்ரீகிருஷ்ணரின் ராஜ்ஜியத்தில் இருந்தோம் என்று நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். சொர்க்கத்தில் இருந்தோம் அல்லவா. பிறகு நாம் சந்திர வம்சத்தவர் ஆகினோம். இப்போது மீண்டும் சூரிய வம்சத்தவர் ஆவதற்காக ஸ்ரீமத்படி நடந்து தூய்மையடைந்து தூய்மையான உலகத்தின் எஜமான் ஆகப் போகிறோம். அனைவருமே தம்முடைய நிலையை பார்க்க முடியும். ஒருவேளை நாம் இந்த சமயத்தில் சரீரத்தை விட்டோம் என்றால் எந்த கதியை அடைவோம்? ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள முடியும். எந்த அளவு தந்தையை நினைவு செய்வோமோ அந்த அளவு விகர்மங்கள் வினாசமாகும். மனிதர்களுக்கு ஏதாவது ஆபத்து விளைந்தாலோ, துக்கம் ஏற்பட்டாலோ அல்லது திவால் ஆகி விட்டாலோ சாதுக்களிடம் செல்கின்றனர். பிறகு மனிதர்கள் இவர் பக்தர், ஏமாற்று வேலைகள் எதுவும் செய்ய மாட்டார் என புரிந்து கொள்கின்றனர். இப்படி இப்படியாகவே இரண்டு - நான்கு வருடங்களில் மிகப் பெரிய செல்வந்தராக ஆகி விடுவார். அவர்களுடைய மறைக்கப்பட்ட பணம் நிறைய இருக்கும். அனைவரும் தம்முடைய புத்தியின் மூலம் புரிந்து கொள்ள முடியும். உங்களுக்குள்ளும் பலர் மிகவும் குறைவாக நினைவு செய்யக் கூடியவர்களாக இருக்கின்றனர். ஆகையால் தனக்கு நன்மை செய்து கொள்ள வேண்டும் என்றால் தன்னிடம் நோட்டுப் புத்தகம் வைத்துக் கொள்ள வேண்டும். சார்ட்டை குறித்துக் கொள்ளுங்கள். நாம் முழு நாளிலும் எவ்வளவு நேரம் நினைவில் இருந்தோம்? மனிதர்கள் முழு வாழ்க்கையின் சரித்திரத்தைக் கூட எழுதுகின்றனர். நீங்கள் நினைவின் சார்ட்டை மட்டும் எழுத வேண்டும். தன்னுடைய முன்னேற்றம்தான் இதில் உள்ளது. பாபாவை நினைவு செய்யாவிட்டால் உயர் பதவி அடைய முடியாது. விகர்மங்கள் (பாவ கர்மங்கள்) அழியவே இல்லை என்றால் உயர் பதவி எப்படி அடைவீர்கள்? பிறகு தண்டனை அடைய வேண்டியிருக்கும். தண்டனை அடையாவிட்டால் நல்ல பதவி கிடைக்கும். தண்டனையை அனுபவித்து பிறகு கொஞ்சம் சிறிய பதவியை அடைவதால் என்ன பயன்? தர்மராஜாவிடம் தண்டனையை பெறாமல், கௌரவத்தை இழக்காமல் இருக்க முயற்சி செய்ய வேண்டும். நீங்கள் பார்க்கிறீர்கள் - சிவபாபா அமர்ந்தபடி இருக்கிறார், பிறகு தர்மராஜாவும் இருக்கிறார். உங்களுக்கு அனைத்தையும் காட்சியில் காட்டுவார். நீ இதை இதை எல்லாம் செய்தாய், நினைவிருக்கிறதா? இப்போது தண்டனையை அனுபவி. பிறகு அதே நேரத்தில் பிறவி பிறவிகளாக அனுபவித்த தண்டனைகளை அனுபவிப்பார்கள். கடைசியில் ஏதோ ரொட்டித் துண்டு அளவு கிடைத்தது என்பதில் என்ன லாபம் உள்ளது? தண்டனையை அனுபவிக்கக் கூடாது. தன்னுடைய நிலையை சோதிக்க வேண்டும் - கணக்கு வழக்கு பார்ப்பதைப் போல. சிலர் 6 மாத கணக்கு, சிலர் 12 மாத கணக்கு பார்க்கின்றனர். சிலரோ தினசரி கணக்கும் கூட எடுக்கின்றனர். நீங்களும் கூட வியாபாரிகள் அல்லவா என தந்தை சொல்கிறார். அபூர்வமாக சில வியாபாரிகள் தந்தையிடம் வியாபாரம் செய்கின்றனர். பணம் இல்லாவிட்டால், உடலும் மனமும் உள்ளதல்லவா. அப்படிப்பட்டவர்களை ராஃப் என்றும் சொல்கின்றனர். முதலீடு இல்லாமலே வியாபாரம் செய்கின்றனர் அல்லவா. நீங்கள் உடல்-மனம்-பொருளைக் கொடுக்கிறீர்கள், பதிலாக 21 பிறவிகளுக்கு எவ்வளவு ஆஸ்தியை பெறுகிறீர்கள். பாபா நான் உங்களுடையவன். என்னுடைய ஆத்மா இந்த லட்சுமி நாராயணர் போல ஆகி விடக் கூடிய யுக்தியை சொல்லுங்கள். நான் உங்களை எவ்வளவு வெண்மையாக (அழகாக) ஆக்குகிறேன் என பாபா சொல்கிறார். ரூபத்தையே ஒரேயடியாக மாற்றி விடுகிறேன். அடுத்த பிறவியில் உங்களுக்கு முதல் தரமான சரீரம் கிடைக்கும். நீங்கள் வைகுண்டத்திலும் கூட பார்க்கிறீர்கள். இந்த மம்மா பாபா பிறகு லட்சுமி நாராயணர் ஆகப் போகின்றனர் என்பதை நீங்கள் அறிவீர்கள். லட்சியம், குறிக்கோளும் கூட காட்டுகிறார். இப்போது யார் எவ்வளவு முயற்சி செய்வார்களோ. . . ஒருவேளை முயற்சியை முழுமையாக செய்யாவிட்டாலோ, வீண் பேச்சு பேசித் திரிந்தாலோ தன்னுடைய பதவியைத்தான் கீழானதாக ஆக்கிக் கொள்வார்கள். நல்லது!இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.தாரணைக்கான முக்கிய சாரம்

1. தனது நிலையை தானே சோதிக்க வேண்டும். தனது நன்மைக்காக தினசரி குறிப்பேட்டை வைக்க (டைரி) வேண்டும். அதில் நினைவின் சார்ட்டை எழுத வேண்டும்.2. எல்லைக்கப்பாற்பட்ட தந்தையிடம் உண்மையிலும் உண்மையான வியாபரம் செய்ய வேண்டும். தனது உடல், மனம், பொருளை தந்தைக்கு அர்ப்பணித்து 21 பிறவிகளுக்கு பலனை எடுக்க வேண்டும். நிச்சய புத்தியாகி தனக்கு நன்மை செய்ய வேண்டும்.வரதானம் :

சகயோகத்தின் சக்தியின் மூலம் சகயோகம் செய்யாதவரையும் சகயோகியாக ஆக்கக் கூடிய தந்தைக்குச் சமமான பரோபகாரி ஆகுக.விளக்கம்: சகயோகிகளிடம் சகயோகியாக ஆவதில் பெரிய வீரம் ஏதும் இல்லை, ஆனால் தந்தை அபகாரம் செய்தவர்களுக்கு உபகாரம் செய்வது போல குழந்தைகளாகிய நீங்களும் தந்தையைப் போல ஆகுங்கள். ஒருவர் எவ்வளவுதான் சகயோகம் செய்யாதவராக இருப்பினும், நீங்கள் தன்னுடைய சகயோகத்தின் சக்தியின் மூலம் சகயோகம் செய்யாதவரையும் சகயோகியாக ஆக்கி விடுங்கள், இந்த காரணத்தினால் இவர் முன்னேற மாட்டார் என நினைக்கக் கூடாது. பலவீனமானவர்களை பலவீனர்கள் என விட்டு விடாதீர்கள், ஆனால் அவர்களுக்கு பலத்தைக் கொடுத்து பலவானாக ஆக்குங்கள். இந்த வி‘யத்தில் கவனம் கொடுத்தீர்கள் என்றால் சேவையின் திட்டங்கள் என்ற ஆபரணங்களில் வைரங்கள் ஜொலிக்கும் அதாவது சகஜமான வெளிப்பாடு ஏற்படும்.சுலோகன் :

கோபத்தின் காரணம் சுயநலம் மற்றும் பொறாமை - இதுவே சிடுசிடுப்பின் வேர் ஆகும், முதலில் இதற்கு முடிவு கட்டுங்கள்.


***OM SHANTI***

Whatsapp Button works on Mobile Device only