15 July 2016

BK Murli 16 July 2016 Tamil

BK Murli 16 July 2016 Tamil

16.07.2016    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்

இனிமையான குழந்தைகளே- யோகபலத்தால் தான் ஆத்மாவின் கறை நீங்கும், ஆகையால் யோகத்தில் ஒரு போதும் தவறு செய்யக் கூடாது.கேள்வி:-

பாபா குழந்தைகளுக்கு எல்லையற்ற ஆஸ்தியை கொடுப்பதற்கு என்ன யுக்தி கூறியுள்ளார், அதில் மாயா நாலா புறமும் தடைகளைப் போடுகின்றது?பதில்:-

நீங்கள் பிரம்மா குமார், குமாரிகள் ஒரு பாபாவின் குழந்தைகள் தங்களுக்குள் சகோதரன்-சகோதரி, உங்களுக்குள் ஒருபோதும் தீய பார்வை இருக்க முடியா என்று பாபா யுக்தி கூறி இருக்கின்றார். சகோதரன், சகோதரி ஒருபோதும் விகாரத்தில் போக முடியாது, நீங்கள் சிவபாபாவின் வழிப்படி நடந்து எல்லையற்ற ஆஸ்தியை அடைய வேண்டும். ஆனால் மாயா குறைந்தது இல்லை, நாலா விதத்திலும் தடைகளை போட்டுவிடுகின்றது. நாம் சகோதரன்-சகோதரிகள், ஒரு தந்தையிடம் இருந்து ஆஸ்தியை அடைகின்றோம், இதை மறந்து விடுகின்றோம்.பாட்டு:-

உங்களை அடைந்து நாங்கள்.ஓம்சாந்தி.

இந்த பாட்டின் ஒரு வார்த்தை போதும். எல்லையற்ற தந்தையிடம் இருந்து எல்லையற்ற ஆஸ்தி கிடைக்கின்றது என்று குழந்தைகள் அறிந்துள்ளீர்கள். மேலும் கல்ப-கல்பம் கிடைக்கின்றது. எல்லையற்ற இந்த ஆஸ்தி பாரதத்திற்கு மட்டும் தான் கிடைக்கின்றது என்பதையும் நீங்கள் குழந்தைகள் தெரிந்து கொண்டீர்கள். இப்பொழுது மட்டும் இல்லை, மீண்டும் கிடைத்துக் கொண்டு இருக்கின்றது. பார்க்கின்றீர்கள்- இப்பொழுது சொர்கத்தின் ஆஸ்தி இல்லை என்பதைப் பார்க்கின்றீர்கள், இராவணன் மூலமாக நரகத்தின் சாபம் கிடைத்துக் கொண்டு இருக்கின்றது. சாபத்தால் மனிதன் துக்கம் அடைகின்றார்கள். வரம் என்றால் ஆஸ்தியால் சுகம் கிடைக்கின்றது. எல்லையற்ற நிராகார தந்தை பாபா, எல்லையற்ற சாகார தந்தை பிரஜா பிதா பிரம்மாவைத் தவிர வேறு யாரும் இல்லை என்று இப்பொழுது பிராமண குழந்தைகள் அறிந்துள்ளீர்கள். காந்தியை பாபு என்று கூறுகின்றார்கள். ஆனால் சட்டப்படி மனித சிருஷ்டிக்கு அவர் தந்தை ஆக முடியாது. முழு உலகத்திற்கும் தந்தை சிவன். நாம் சிவபாபாவின் குழந்தைகள் ஆகியுள்ளோம் என்பதை இப்பொழுது நீங்கள் குழந்தைகள் அறிந்துள்ளீர்கள். சிவபாபா நமக்கு ஆஸ்தியைக் கொடுப்பதற்காக நம்மை தன்னுடையவர் ஆக ஆக்கியுள்ளார். மதுபன் வந்துள்ளீர் எதற்காக? சிவபாபாவை சந்திப்பதற்காக, ஆனால் அவர் நிராகார். சிவபாபா என்று மட்டும் சொன்னால் புரிந்து கொள்ள முடியாது, அதனால் தான் பாப்தாதா என்று சொல்கின்றோம். சிவபாபா மேலும் பிரம்மா தாதா. தாதா பெயர் தனி, பாபா என்ற பெயர் தனி. அவர் நிராகாரர் அனைவருக்கும் தந்தையாக உள்ளார். அனைவருக்கும் தாதாவாகவும் உள்ளார். அனைத்துக் குழந்தைகளுக்கும் அவசியம் ஆஸ்தி கிடைக்கின்றது. எல்லையற்ற தந்தையிடம் இருந்து ஆஸ்தி கிடைக்கின்றது. தந்தை துக்கத்தை நீக்கி, சுகத்தைக் கொடுக்கக் கூடியவர். சத்தியயுகத்தில் எந்த மனிதரும் துக்கத்தில் இருக்க முடியாது. பெயரே சொர்க்கம், அந்த சொர்க்கத்தை ஸ்தாபனை செய்யக் கூடியவர் கடவுள் தந்தை. பாரதம் மிகவும் பழமையானது என்றால், முற்றிலும் புதியதாக இருந்தது. இப்பொழுது முற்றிலும் பழையதாகிவிட்டது. சத்தியயுகம், கலியுகம் என்று பாரதத்தில் தான் சொல்கின்றார்கள். பாரதம் தான் சொர்க்கமாக இருந்தது. இங்கே இலட்சுமி-நாராயணன் ஆட்சி செய்தார். இது உங்கள் புத்தியில் உள்ளது. இப்பொழுது நீங்கள் இலட்சுமி-நாராயணன் கோவிலுக்குச் சென்றீர்கள், என்றால் உடனே உங்கள் புத்தியில் வரும் இவர்கள் இந்த ஆஸ்தியை எப்படி அடைந்தார்கள்? இவர்கள் பூஜிக்கத் தகுதியான நிலையை எப்படி அடைந்தார்கள்? எப்பொழுது இராஜ்ஜியம் செய்தார்கள்? யார் மூலமாக இராஜ்ஜியம் அடைந்தார்கள்? இவை அனைத்தும் உங்கள் புத்தியில் வரும். இதற்கு முன்னால் இலட்சுமி-நாராயணன் கோவிலுக்கு போனால் மாலை உருட்டுவீர்கள். அவர்களின் அறிமுகம் ஒன்றுமே தெரியாது. இப்பொழுது கூட உங்கள் புத்தியில் வரிசைக்கிரமமாகத் தான் உள்ளது. இப்பொழுது நீங்கள் இலட்சுமி-நாராயணன் கோவிலுக்குப் போய் நின்றீர்கள், ஆனால் புன்சிரிப்பு வரும். புத்தியில் இவர்கள் எப்படி பலன் அடைந்தார்கள் என்பதை அறிந்துவிட்டீர்கள் சங்கமயுகத்தில் தான் அடைந்தார்கள், ஏனென்றால், சங்கமயுகத்தில் தான் பழைய உலகம் மாறுகின்றது. சங்கமயுகத்தில் தான் தந்தை வந்து இராஜயோகம் கற்றுக் கொடுகின்றார். அநேக ஜென்மத்தின் கடைசி ஜென்மத்தின் கடைசியில் தான் பிரம்மா ஆகின்றார். பிரம்மா மூலமாகத் தான் விஷ்ணுபுரி ஸ்தாபனை ஆகின்றது. இந்த லெட்சுமி- நாராயணன் தான் முன் ஜென்மத்தில் நிச்சயம் பிரம்மா, சரஸ்வதியாக இருந்தார்கள். பிரம்மா கூட பிராமணர், பிராமணிகள் இருந்திருப்பார்கள். சத்தியயுகத்தில் லட்சுமி-நாராயணன் இராஜ்ஜியம் இருந்தது அல்லவா, அப்பொழுது அவசியம் பிரஜாபிதா இருந்திருப்பாரல்லவா. நாம் முயற்சி செய்கின்றோம் என்பதை நீங்கள் புரிந்து கொண்டீர்கள், கல்பத்திற்கு முன்னால் யாரெல்லாம் முயற்சி செய்தார்கள் என்பதை நாம் சாட்சியாகி பார்க்கின்றோம். ஒன்று இராஜா குடும்பம், இன்னொன்று பிரஜா குடும்பம். அதிலும் சிலர் பணக்காரர்களாக இருப்பார்கள், சிலர் குறைவாக இருப்பார்கள். இராஜாக்களில் கூட சிலர் பணக்கார இராஜ்ஜாக்களாக இருப்பார்கள், சிலர் குறைவான பணக்காரர்களாக இருப்பார்கள். நீங்கள் லெட்சுமி-நாராயணன் கோவிலில் யாருக்கு வேண்டுமானாலும் புரியவைக்கலாம் அவர்கள் எப்படி இராஜ்ஜியம் அடைந்தார்கள் என்று. இப்பொழுது அவர்கள் மீண்டும் இராஜ்ஜிய பாக்கியத்தை அடைந்து கொண்டிருக்கின்றார்கள், இராஜதானி ஸ்தாபனை ஆகிக் கொண்டு இருக்கின்றது. எவ்வளவு எளிதாக உள்ளது, அம்பா யார்- இதைக் கூட அறிவதில்லை. இவர்தான் ஜகத்அம்பா என்று நீங்கள் சொல்ல முடியும். கல்பத்திற்கு முன்னால் கூட ஜகத் அம்பா-ஜகத்பிதா இருந்தார்கள். அவர்களின் குழந்தைகள் நாமாக இருந்தோம். சங்கமயுகத்தில் தான் பாபா ராஜயோகம் கற்றுக் கொடுக்கின்றார். ஜகத்அம்பாவின் குழந்தைகள் அநேக பேர் உள்ளார்கள். ஆனால் அனைவரையும் உட்கார வைக்க முடியாது. இப்பொழுது உங்களுக்கு மூன்றாவது கண் கிடைத்துள்ளது. பாபா ஞானக்கடலாக உள்ளார் என்றால் அவசியம் குழந்தைகளுக்கு ஞானம்தானே கொடுப்பார். அவரை மனிதன் என்றோ, தேவதை என்றோ சொல்ல முடியாது. அவரை பரமாத்மா என்று தான் சொல்ல முடியும். நீங்கள் எந்த கோவிலுக்கு போனாலும் அவர்களின் வாழ்க்கை வரலாறு சொல்ல முடியும். ராமருக்காக கூட நீங்கள் சொல்ல முடியும். சந்திரவம்ச குலம் இப்பொழுது இஸதாபனை ஆகி கொண்டு இருக்கின்றது. பிரம்மா மூலமாக பிராமணர்களின் தர்மம் கூட ஸ்தாபனை ஆகின்றது. பிரம்மாவின் பெயர் எவ்வளவு புகழ் பெற்றது. பிரம்மா மூலமாக பாபா பிராமணர்களைப் படைக்கின்றார். நீங்கள் பிரம்மாகுமார்-பிரம்மாகுமாரி ஆனதால், நாம் அனைவரும் ஒரு தந்தையின் குழந்தைகள் சகோதரன்-சகோதரிகள் என்று தெரிந்து கொண்டீர்கள். பிறகு நாம் தீய பார்வையில் பார்க்க முடியாது. சகோதரன்-சகோதரி விகாரத்தில் போக முடியாது. தந்தை தான் இந்த யுக்தியை உருவாக்கினார். டிராமா அனுசாரமாக நீங்கள் கூட பிரம்மாகுமார், நாம் கூட பிரம்மாகுமாரி ஆக உள்ளோம். உண்மையில் முழு உலகமே பி.கே தான். ஆனால் இதை அறிவதில்லை. நாம் சிவபாபாவின் வழியில் சென்று எல்லையற்ற ஆஸ்தி அடைகின்றோம். மாயா கூட குறைந்தது இல்லை. நாலா புறமும் தடைகள் போடுகின்றது. நாம் சகோதரன்-சகோதரி, ஒரு தந்தையின் குழந்தைகள் என்பதை மறந்துவிடுகின்றோம். சத்தியயுகத்தில் ஒரே தர்மம் தான் இருந்தது என்பதை நீங்கள் நல்லவிதமாகப் புரிந்து கொண்டீர்கள். மற்ற அனைத்து தர்மங்களும் அழிந்துவிடும். இது ஒன்றும் புதிய விஷயமில்லை என்பதை குழந்தைகள் நீங்கள் அறிந்து கொண்டீர்கள். ஒவ்வொரு 5 ஆயிரம் வருடத்திற்குப் பிறகு இந்த சக்கரம் இப்படியே சுற்றுகின்றது. நாள்,தேதி கூட எழுதப்பட்டுள்ளது. நாம் சிவபாபாவிடமிருந்து இந்த யுக்தியில் ஆஸ்தி அடைகின்றோம் என்பது உங்கள் புத்தியில் இருக்க வேண்டும். லட்சியம் கிடைத்துவிட்டது அல்லவா, பாபாவை நினைவு செய்து பாபாவிடமிருந்து ஆஸ்தியை அடைய வேண்டும். நினைவு என்றால் யோக பலத்தினால் தான் பாவம் நீங்கும். இதில் எந்த தவறும் செய்யக் கூடாது, இதற்காகா தான் ஞான முரளி கிடைக்கின்றது. நிச்சய புத்தி உறுதியாக இருந்தால் எங்கு வேண்டுமானாலும்போகலாம் முரளி கிடைக்கவில்லை என்றாலும் கூட புத்தியில் நாம் பாபாவின் குழந்தைகள் ஆகிவிட்டோம் என்பது உள்ளது அல்லவா ? உங்களுடைய ஆத்மா தமோ பிரதானமாக ஆகிவிட்டது என்று பாபா புரிய வைக்கின்றார். இப்பொழுது பாபாவின் நினைவில் இருங்கள் தமோபிரதானத்திலிருந்து சதோபிரதானம் ஆகிவிடுவீர்கள். இந்த மஹாமந்திரத்தை பாபாவைத் தவிர வேறு யாரும் புரிய வைக்க முடியாது. இனிமையிலும்-இனிமையான குழந்தைகளே நினைவு என்ற பலத்தால் தான் நீங்கள் தமோபிரதானத்தில் இருந்து சதோபிரதானம் ஆக வேண்டும் என்று பாபா சொல்கின்றார். ஆனால் இந்த வார்த்தை யாருடைய புத்தியிலும் வருவதில்லை. நிச்சயம் கல்பத்திற்கு முன்னால் கூட பாபா இந்த வார்த்தையைக் கூறினார் தேகம், தேக சம்மந்தப் பட்ட அனைத்து தர்மங்களையும் விட்டு தன்னை ஆத்மா என்று நினைவு செய்யுங்கள் என்று கூறினார் என்பதை நீங்கள் புரிந்து கொண்டீர்கள். இவை அனைத்தும் தேக தர்மங்கள் தானே ! அனைவருக்கும் தந்தை ஒருவர் தான். அனைத்து ஆத்மாக்களும் அந்த ஒரு தந்தையைத் தான் அழைக்கின்றார்கள். போப் கூட அந்த ஒரு தந்தையைத் தான் நினைக்கின்றார். ஹே கடவுளே! தந்தையே ! கருணை காட்டுங்கள் என்று தான் சொல்கின்றார். இந்த கோபமுள்ள புத்தியை திருத்துங்கள் அப்பொழுது தான் இவர்களுக்குள் சண்டை போடமாட்டார்கள். நினைவு என்பது பாபாவைத் தானே செய்கின்றார்கள். மற்ற யாரையும் நினைப்பதில்லை. சிவபாபாவைத் தான் அழைக்கின்றார்கள் வந்து பதீதர்களை-பாவனம் ஆக்குங்கள் என்கின்றார்கள். பாவனம் ஆகிவிட்டால் பின்பு இந்த சீ-சீ இராவணன் உலகத்தில் இருக்க மாட்டோம், பிறகு அவசியம் புதிய உலகம் தேவை. கலியுகம் மாறி சத்தியயுகம் வரும் அல்லவா? ஆனால் இதைக் கூட புரிந்து கொள்வதில்லை. ஒரு டாக்டர் வந்திருந்தார் அவர் - கலியுகத்தில் கலியுகம் தானே நடக்கும் என்று சொன்னார். அடே சதா கயுகத்திலேயே எப்படி இருப்பது ? கலியுகம் என்ன நன்றாக இருக்கின்றதா என்ன? புரிந்து கொள்வதே இல்லை, வெறும் பாவனையோடு இருப்பதால் அழைத்து வருகின்றார்கள். அவர்களுக்குப் புரியவில்லை என்றாலும், வேறு யாராவது ஞானத்தைப் புரிந்து கொள்வதால் கொஞ்சமாவது தரகு கிடைக்கும் நாம் சொர்க்கத்தில் வந்து விடுவோம். பாபாவிடம் சிறிதாவது ஞானம் கேட்டால் அவர்கள் அவசியம் சொர்க்கத்திற்கு வந்து விடுவார்கள். ஏனெனில், சொர்க்கத்தைப் படைக்கும் கடவுள் தந்தை முன்னால் வந்து அமர்ந்து விட்டார்கள் அல்லவா. நான் அனைவருக்கும் தந்தை அல்லவா? என்று பாபா புரிய வைக்கின்றார். சிவபாபா எப்படி வருகின்றார் என்பதை யாரும் ஏற்றுக் கொள்வதே இல்லை. அரே ஆத்மா வர முடியும் எனும் போது நான் ஏன் வரமுடியாது? ஆத்மா ஒரு உடலை விட்டு இன்னொரு உடலில் வர முடியும் எனும் போது நான் வர முடியாதா? இல்லை என்றால், நான் எப்படி வருவேன்? பதீத-பாவனன் வாருங்கள் எங்களை பதீத நிலையில் இருந்து பாவனம் ஆக்குங்கள் என்று அழைக்கின்றீர்கள். நான் பாரதத்தில் தான் வருகின்றேன் என்று பாபா சொல்கின்றார். கல்ப-கல்பமாய் சங்கமயுகத்தில் ஒரு முறை தான் நான் வருகின்றேன். நீங்கள் எப்பொழுது 84 ஜன்மம் எடுத்து முடிக்கின்றீர்களோ அப்பொழுது நான் வருகின்றேன். பாபா வந்து விட்டார் ஆஸ்தியைக் கொடுக்கின்றார் என்று குழந்தைகளாகிய உங்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுவிட்டது. பாபா சொல்கின்றார் என்னுடைய தொழிலே இதுதான் பழைய உலகத்தை மாற்றி புதிய உலகத்தை ஸ்தாபனை செய்வது ஆகையால் பாடப்படுகின்றது புதிய உலகம் ஸ்தாபனை, பழைய உலகம் அழிவது, பின்பு நீங்கள் இதை பாலனை செய்கின்றீர்கள். இப்பொழுது ஒளி கிடைத்து விட்டது அல்லவா? காளி கோவிலுக்குப் போய் பார்த்தீர்களென்றால் இது பொய்யான படம் என்று நினைப்பீர்கள். காளி என்பது உண்மையில் ஜெகத்தம்பா தான். ஆனால் அப்படி பயங்கரமான ரூபம் எல்லாம் இல்லை. வங்காளத்தில் காளிக்கு முன்னால் பலி எல்லாம் கொடுக்கின்றார்கள், ஆனால் ஒன்றும் புரிந்து கொள்வதே இல்லை. ஜெகத்தம்பா கோவிலுக்கு இலட்சக்கணக்கான பேர் வருகின்றார்கள். சதா திருவிழா போல் இருக்கும். சின்ன மூர்த்தி தான் வைக்கப்பட்டுள்ளது. ஜகதம்பாள் என்று பெயர் வைத்துள்ளர்கள். அப்பொழுது ஜெகதம்பா ஒருவர் இ!ருக்க வேண்டுமல்லவா? சிந்தியில் காளி கோவில் எப்படி உருவாக்கி உள்ளார்கள். ஒரு முறை கோட்டையில் அணுகுண்டு வெடித்தது, அதில் கோட்டை உடைந்தது, ஒரு ஏழை சொன்னார் காளிக்கு கோபம் வந்துவிட்டது, அதனால் உடனே அங்கே காளி கோவில் உருவாக்கினார். இப்பொழுது காளி என்பவர் யார் இதை யாரும் அறிவதில்லை. உங்களுக்கு ஞானம் கிடைத்து உள்ளது, அப்படி ஒரு விசயமே இல்லை, இதை நீங்கள் அறியவில்லை. பாபாவிடம் இருந்துதான் ஆஸ்தி கிடைக்கின்றது என்பதை அறிந்துள்ளார்கள் என்றால் முயற்சி செய்ய வேண்டுமல்லவா?எப்பொழுது குமார்-குமாரி திருமணம் செய்து கொள்கின்றார்களோ அப்பொழுது முதல் நம்பர் துக்கம் ஆரம்பம் ஆகின்றது. உங்களுக்கு திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணமே வரக் கூடாது. இப்பொழுது இராவண இராஜ்ஜியம் அழியப் போகின்றது என்று பாபா சொல்கின்றார். குடும்பத்தில் இந்த விகார செயல்கள் நடக்கின்றது. தேவி-தேவதைகளுக்காகப் பாடுகின்றார்கள். இந்த தேவி-தேவதைகளை நிர்விகாரி ஆக யார் செய்கின்றார் என்பது யாருக்கும் தெரியாது. சத்தியயுகம் என்பது சம்பூர்ண நிர்விகார உலகம். சாஸ்த்திரங்களில் அங்கேயும் விகாரிகளாக இருந்ததாகக் காட்டுகின்றார்கள். ஆனால் அதுவோ நிர்விகார உலகம், விகார உலகத்திற்கும், நிர்விகார உலகத்திற்கும் எத்தனை வித்தியாசம் உள்ளது. இந்த விசயம் யாருடைய புத்தியிலும் இருப்பதில்லை. லட்சுமி-நாராயணன் இராஜ்ஜியத்தில் கொஞ்ச மனிதர்கள் தான் இருந்தார்கள் என்பதை நீங்கள் அறிந்து கொண்டீர்கள். ஒரு தர்மம் தான் இருந்தது பின்பு தான் அதிகமாகின்றது. சக்கரம் கூட முழுமையாக சுழல வேண்டியுள்ளது, அப்பொழுது தான் முழு உலகம் சுற்றி வந்தார் என்று சொல்ல முடியும். சமுத்திரத்தைச் சுற்றி வர முடியாது. சத்தியயுகத்தில் கொஞ்ச பேர் உள்ளதால் கொஞ்ச பூமி தான் பயன்படுத்தப்படுகின்றது. இப்பொழுது மனித ஸ்ருஷ்டி முடிவு அடையப் போகின்றது. மேலே உள்ள கொஞ்ச ஆத்மாக்களும் வந்து கொண்டே இருக்கின்றார்கள். மனிதர்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றார்கள். அங்கிருந்து வரக் கூடிய ஆத்மாக்கள் பூர்த்தி ஆகிவிட்டது என்றால், நீங்கள் கர்மாதீத நிலையை அடைந்து விடுவீர்கள் பின்பு ஆத்மாக்கள் உடலை விட்டு போக வேண்டி வரும். அவர்கள் வருவது நீங்கள் போவதுமாக இருக்கும். கொஞ்சம்-கொஞ்சமாக வருகின்றார்கள். இது புரிந்து கொள்ள வேண்டிய விஷயமாகும். நாம் முதன்-முதலில் அங்கே போக வேண்டி வரும். நாம் போனதும் யாரும் இருக்க வேண்டாம். இது விரிவான விஷயம். நல்லது-நீங்கள் பாபுல்நாத்தை நினைவு செய்யுங்கள் என்று மீண்டும் பாபா குழந்தைகளுக்குச் சொல்கின்றார். உங்களுக்குத் தான் பாபாவை நினைப்பதால் இலாபம். இந்த சரித்திர-பூகோளம் மனிதர்கள் படிக்கின்றார்கள். மிகவும் தூரம்-தூரம் செல்கின்றார்கள். சந்திரனுக்குக் கூட போகின்றார்கள். இது விஞ்ஞானத்தின் கர்வம். எல்லைக்கே போகின்றார்கள். சந்திரனில் யாராவது நிற்க முடியுமா என்ன, நீங்கள் சூரியன் சந்திரனைக் கூட கடந்து செல்கின்றீர்கள். இந்த ஞானம் உங்கள் புத்தியில் இருக்கின்றது. நாடகத்தின் அனுசாரமாக பாபா இதை எல்லாம் புரிய வைக்கின்றார் என்பதை நீங்கள் புரிந்து கொண்டீர்கள். நான் உங்களை பதீத நிலையிலி ருந்து பாவன நிலைக்கு ஆக்குகின்றேன் என்று பாபா சொல்கின்றார். இது தான் என்னுடைய பார்ட். பக்திமார்க்கத்தில் கூட என்னுடைய பார்ட் உள்ளது. இது நாடம் தானே ! நீங்கள் எப்படி நடிக்கின்றீர்களோ, நானும் கூட நடிக்கின்றேன். என்னுடைய வேலை உங்களை பதீத நிலையிலிருந்து பாவனமாக்குவது. என்ன செய்தாலும் அதற்கு புகழ் கிடைக்கின்றது அல்லவா? இந்த இலட்சுமி-நாராணனுக்கு எவ்வளவு புகழ் பாடுகின்றார்கள் ! ஆனால் இந்தளவு தகுதியுடையோராக யார் ஆக்கினார்கள். அவர்கள் சுகதாமத்திற்கு எஜமானர்களாக இருந்தார்கள். இன்று எத்தனை விதம் விதமாக துக்கங்கள் உள்ளன. இன்று யாராவது இறந்தார், சண்டை நடந்தது, கோடிக்கணக்கான செல்வம் இருந்தாலும் ஏதாவது நோய் வந்துவிடுகின்றது என்றால் என்ன செய்வது? பிர்லாவிடம் எவ்வளவு பணம் உள்ளது. ஆனால் துக்கம் இல்லை என்று யாரும் சொல்ல முடியாது. ஏதாவது விதத்தில் துக்கம் அனைவருக்கும் உள்ளது. இப்பொழுது இந்த செல்வம் எல்லாம் மண்ணில் போய்விடும். நல்லது.இனிமையிலும்-இனிமையான செல்லமான குழந்தைகளுக்கு, தாய்-தந்தை பாப்தாதாவின் அன்பு நினைவுகள்! மேலும் காலை வணக்கங்கள். ஆன்மீகத் தந்தையின் ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே !தாரணைக்கான முக்கிய சாரம்:-

1) கர்மாதீத நிலை அடைந்து வீட்டிற்குத் திரும்பிச் செல்ல வேண்டும். ஆனால், எப்பொழுது அனைத்து ஆத்மாக்களும் வருவது நின்றுவிடுகின்றதோ, அப்பொழுது தான் நீங்கள் செல்ல முடியும்.2) ஞான ஒளி கிடைத்துள்ளது, ஆகையால் நிச்சயபுத்தி ஆகி பாபாவிடமிருந்து முழு ஆஸ்தியை அடைய வேண்டும். எங்கிருந்தாலும் கூட நினைவு பலத்தால் ஆத்மாவை தமோபிரதான நிலையிலிருந்து சதோபிரதான நிலையை அடைய முயற்சி செய்ய வேண்டும்.வரதானம்:

தேக-அபிமானத்தை தியாகம் (விட்டு விடுவது) செய்வதின் மூலமாக சிரேஷ்ட பாக்கியத்தை அடையக் கூடிய அனைத்து சித்தி சொரூப பவ !தேக அபிமானத்தை தியாகம் செய்து அதாவது ஆத்மா அபிமானியாக ஆவதால் பாபாவிடம் சர்வ சம்மந்தம், சர்வ சக்திகள் அனுபவம் ஏற்படும், இந்தஅனுபவம் தான் சங்கமயுகத்தில் சர்வ சிரேஷ்ட பாக்கியமாகும். விதாதா மூலமாகக் கிடைத்துள்ள இந்த விதியை தன்னுடையதாக்கிக் கொள்வதால் முன்னேற்றம் கூட கிடைக்கும். மேலும் அனைத்து சித்திகளும் கிடைக்கும். தேகதாரி சம்மந்த அன்பால் நீங்கள் கீரிடம், சிம்மாசனம் மேலும் தன்னுடைய உண்மையான சொரூபம் அனைத்தையும் விட்டுவிட்டீர்கள் என்றால், பாபாவின் அன்பிற்காக தேக அபிமானத்தை விட முடியாதா. இந்த ஒரு தியாகத்தால் அனைத்து பாக்கிய களும் அடையலாம்.சுலோகன்:

கோபத்திலிருந்து முக்தி அடைய வேண்டும் என்றால் சுயநலம் இல்லாமல் பரந்தநலம் உள்ளவர் ஆகுங்கள், ஆசைகளின் பல ரூபத்தை மாற்றுங்கள்.


***OM SHANTI***


Whatsapp Button works on Mobile Device only