19 July 2016

BK Murli 20 July 2016 Tamil

BK Murli 20 July 2016 Tamil

20.07.2016    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்

இனிமையான குழந்தைகளே ! இந்தப் பழைய உலகத்தில் மனிதர்கள் எந்த விதமான ஆசைகளை வைத்திருக்கிறார்களோ, அந்த ஆசைகளை நீங்கள் வைக்கக் கூடாது. ஏனென்றால் இந்த உலகம் விநாசமாகப் போகிறது.கேள்வி :

சங்கமயுகத்தில் எந்த ஓர் ஆசை வைப்பீர்களானால் அனைத்து ஆசைகளும் சதா காலத்திற்கும் நிறைவேறி விடும்?பதில் :

நாம் பாவனமாகி, தந்தையை நினைவு செய்து அவரிடமிருந்து முழு ஆஸ்தியைப் பெற வேண்டும் - இந்த ஆசை மட்டுமே இருக்க வேண்டும். இந்த ஆசை மூலம் சதா காலத்திற்கும் அனைத்து ஆசைகளும் நிறைவேறும். ஆயுஷ்வான் பவ, புத்திரவான் பவ, தனவான் பவ........ அனைத்து வரதானங்களும் கிடைத்து விடும். சத்யுகத்தில் அனைத்து விருப்பங்களும் நிறைவேறி விடும்.பாடல் :

நீங்கள் தான் தாய், நீங்கள் தான் தந்தை.........ஓம் சாந்தி.

இனிமையிலும் இனிமையான ஆன்மிகக் குழந்தைகள், அதாவது ஆத்மாக்களிடம் பரமபிதா பரமாத்மா இதைப் புரிய வைத்துக் கொண்டிருக்கிறார். நீங்கள் அறிவீர்கள், எல்லையற்ற தந்தை நமக்கு வரதானம் தந்து கொண்டிருக்கிறார். அந்த மனிதர்கள் ஆசீர்வாதம் தருகின்றனர்-புத்திரவான் பவ, ஆயுஷ்வான் பவ, தனவான் பவ! இப்போது தந்தை உங்களுக்கு வரதானம் தருகிறார்-ஆயுஷ்வான் பவ. உங்களுடைய ஆயுள் மிக நீண்டதாக ஆகும். அங்கே புத்திரர்களும் இருப்பார்கள், அதுவும் சுகம் தருபவர்களாக இருப்பார்கள். இங்கே இருக்கும் குழந்தைகள் அனைவரும் துக்கம் தருபவர்கள். சத்யுகத்தில் இருக்கும் குழந்தைகள் சுகம் தருபவர்களாக இருப்பார்கள். இப்போது குழந்தைகள் நீங்கள் அறிவீர்கள், எல்லையற்ற தந்தை எல்லையற்ற சுகத்தின் ஆஸ்தியைத் தந்து கொண்டிருக்கிறார். நிச்சயமாக நாம் நீண்ட ஆயுள் உள்ளவர்களாகவும், செல்வந்தர்களாகவும் ஆவோம். இப்போது எந்த ஒரு விருப்பத்தையும் மனதில் வைக்கக் கூடாது. உங்கள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். இந்த நரகத்தில் எந்த ஒரு விருப்பமும் வைக்கக் கூடாது. செல்வத்திற் கான விருப்பமும் வைக்கக் கூடாது. அதிகமான செல்வம் இருக்க வேண்டும், பெரிய வேலை வேண்டும் - இந்த அதிகப்படியான விருப்பங்களையும் வைக்கக் கூடாது. வயிறோ ஒரு துண்டு ரொட்டியைச் சாப்பிடுகிறது. அதிகமான பேராசையில் இருக்கக் கூடாது. அதிக செல்வம் இருக்குமானால் அது அழிந்து போகப் போகிறது. குழந்தைகள் அறிவார்கள், பாபா நம்மை சொர்க்கத்தின் எஜமானர் ஆக்குகிறார். இப்போது பாபா சொல்கிறார் - தானம் கொடுத்தால் கிரகணம் விட்டுப் போகும். எதை தானம் கொடுக்க வேண்டும்? இந்த 5 விகாரங்களை. இவற்றை தானமாகக் கொடுத்தால் கிரகணம் விட்டுப் போகும். மேலும் நீங்கள் 16 கலை சம்பூர்ணமாக ஆகி விடுவீர்கள். நீங்கள் அறிவீர்கள், நாம் சர்வகுண சம்பன்னமாக, 16 கலை சம்பூர்ணமாக.......... இங்கே ஆக வேண்டும். 5 விகாரங்களை தானமாகக் கொடுக்க வேண்டியுள்ளது. குழந்தைகளுக்கு பாபா சொல்கிறார்-இனிமையான குழந்தைகளே, எல்லையற்ற தந்தையிடமிருந்து எல்லையற்ற ஆஸ்தி பெற வேண்டும் என்பதை தவிர வேறு எந்த ஓர் ஆசையும் வைக்கக் கூடாது. இன்னும் கொஞ்சம் சமயமே மீதி உள்ளது. பாடவும் படுகின்றது-அதிக சமயம் முடிந்து விட்டது, கொஞ்ச சமயம் மிஞ்சியுள்ளது. இன்னும் கொஞ்ச சமயம் இந்த விநாசத்திற்காக உள்ளது. அதனால் இந்தப் பழைய உலகத்தின் எந்த ஓர் ஆசையும் வைக்காதீகள். தந்தையை மட்டும் நினைவு செய்து கொண்டே இருங்கள். நினைவின் மூலம் குழந்தைகள் சதோபிரதானமாக ஆக வேண்டும். இந்த உலகத்தில் மனிதர்கள் என்ன ஆசை வைக்கிறார்களோ, அதில் எதையும் நீங்கள் வைக்காதீர்கள். ஒரு சிவபாபாவிடம் இருந்து நாம் நம்முடைய சொர்க்கத்தின் ஆஸ்தியைப் பெற வேண்டும் என்ற ஒரே ஓர் ஆசை மட்டும் வையுங்கள். யாருக்கும் ஒரு போதும் துக்கம் கொடுக்கக் கூடாது. ஒருவர் மற்றவர் மீது காமக் கட்டாரி செலுத்துவது என்பது அனைத்திலும் பெரிய துக்கமாகும். அதனால் தான் சந்நியாசிகள் பெண்களிடமிருந்து விலகி விடுகின்றனர். இவர்கள் விட்டு விட்டார்கள் என்று சொல்கிறார்கள். இச்சமயம் இராவண இராஜ்யத்தில் அனைவரும் தூய்மையற்ற பாவாத்மாக்கள்.இப்போது சமயம் மிகவும் குறைவாக உள்ளது. நீங்கள் தந்தையின் ஸ்ரீமத் படி நடக்கவில்லை என்றால் உயர்ந்தவராக ஆக மாட்டீர்கள். குழந்தைகள் உயர்ந்தவரிலும் உயர்ந்தவராக ஆக வேண்டும். அதனால் 5 விகாரங்களை தானமாகக் கொடுத்தால் கிரகணம் விட்டுப் போகும். அனைவர் மீதும் கிரகச்சாரி (கெட்ட திசைகளின் பார்வை )உள்ளது. முற்றிலும் கருப்பாகி விட்டுள்ளனர். பாபா சொல்கிறார் - என்னிடமிருந்து ஆஸ்தி பெற வேண்டுமானால் தூய்மையாகுங்கள். துவாபரயுகத்தில் ஆரம்பித்து நீங்கள் தூய்மை இழக்கத் தொடங்கி சதோபிரதானத்திலிருந்து தமோபிரதானம் ஆகி விட்டிருக்கிறீர்கள். அதனால் தான் பதீத பாவனா வாருங்கள், வந்து எங்களை தூய்மையாக்குங்கள் என்று பாடுகிறீர்கள். ஆகவே பாபா கட்டளை இடுகிறார்-குழந்தைகளே, இப்போது தூய்மையற்றவர்களாக ஆகாதீர்கள். காமம் என்ற மகா விரோதியை வெற்றி கொள்ளுங்கள். இதனால் தான் நீங்கள் முதலில் இருந்து கடைசி வரை துக்கம் அடைந்திருக்கிறீர்கள்.பாபா சொல்கிறார்-நீங்கள் சொர்க்கத்தில் முற்றிலும் தூய்மையாக இருந்தீர்கள். இப்போது இராவணனின் வழிப்படி நீங்கள் தூய்மையற்றவர்களாக ஆகியிருக்கிறீர்கள். அதனால் தான் தேவதைகளுக்கு முன் போய் அவர்களுக்கு மகிமை பாடுகிறீர்கள்-நீங்கள் சர்வகுண சம்பன்னம், சம்பூர்ண நிர்விகாரி, நாங்கள் விகாரிகளாக உள்ளோம். நிர்விகாரியாக இருப்பதால் சுகமே சுகம் தான். பாபா சொல்கிறார்- இப்போது நான் வந்திருக்கிறேன், குழந்தைகளாகிய உங்களை நிர்விகாரி ஆக்குவதற்காக. இப்போது குழந்தைகள் நீங்கள் அனைத்து ஆசைகளையும் விட்டுவிட வேண்டும். உங்கள் வேலை-தொழில் முதலியவற்றை வேண்டு மானால் செய்யுங்கள். ஒருவர் மற்றவரை ஞான அமிர்தத்தை அருந்தச் செய்யுங்கள். பாடப் படவும் செய்கிறது- அமிர்தத்தை விட்டு விஷத்தை ஏன் அருந்த வேண்டும்? பாபா சொல்கிறார், எந்த ஒரு விருப்பமும் வைக்காதீர்கள். நாம் நினைவு யாத்திரை மூலம் முழு சதோபிரதானமாக ஆகி விடுவோம். 63 பிறவிகளாக என்னென்ன பாவம் செய்திருக்கிறீர்களோ, அவை நினைவினால் தான் நீங்கும். இப்போது நிர்விகாரி ஆக வேண்டும். மாயாவின் புயல் வரலாம், ஆனால் தூய்மை இழக்கக் கூடாது. மனிதரில் இருந்து தேவதை ஆக வேண்டும். நீங்கள் தான் சதோபிரதான பூஜைக்குரிய தேவதாக்களாக இருந்தீர்கள். பிறகு நீங்கள் தான் பூஜைக்குரிய நிலையில் இருந்து பூஜாரி ஆகிறீர்கள். நாம் நோயற்றவர்களாக இருந்தோம். பிறகு நோயாளி ஆகிறோம். இப்போது மீண்டும் நோயற்றவர்களாக ஆகிக் கொண்டிருக்கிறோம். நோயற்றவர்களாக இருந்த போது ஆயுள் நீண்டதாக இருந்தது. இப்போதோ பாருங்கள், உட்கார்ந்திருக்கும் போதே திடீரென்று மனிதர்கள் இறந்து போகின்றனர். ஆக, எந்த ஓர் ஆசையும் வைக்கக் கூடாது. இவையனைத்தும் மோசமான ஆசைகள். முள்ளில் இருந்து மலராக ஆவதற்கோ ஒரே முதல் தரமான ஆசை - பாபா சொல்கிறார், என்னை நினைவு செய்வீர்களானால் புண்ணிய ஆத்மா ஆகி விடுவீர்கள். இச்சமயம் அனைவர் மீதும் ராகுவின் கிரகணம் (பார்வை) உள்ளது. முழு பாரதத்தின் மீதும் ராகுவின் கிரகணம் உள்ளது. பிறகு பிரஹஸ்பதி தசா (குரு பார்வை) வேண்டும். நீங்கள் அறிவீர்கள், இப்போது நம் மீது பிரஹஸ்பதி தசா அமர்ந்துள்ளது. பாரதம் சொர்க்கமாக இருந்தது இல்லையா? சத்யுகத்தில் உங்கள் மீது பிரஹஸ்பதி தசா இருந்தது. இச்சமயம் ராகு தசா உள்ளது. இப்போது மீண்டும் எல்லையற்ற தந்தை மூலம் பிரஹஸ்பதி தசா கிடைக்கின்றது. பிரஹஸ்பதி தசாவில் 21 பிறவிகளுக்கான சுகம் உள்ளது. திரேதாவில் உள்ளது சுக்கிர தசா. எவ்வளவு ஒருவர் நினைவு செய்கிறாரோ, அதிக நினைவு செய்வாரானால் பிரஹஸ்பதி தசா இருக்கும். இதுவும் புரிய வைக்கப் பட்டுள்ளது, இப்போது நாம் வீட்டுக்குத் திரும்பிச் செல்ல வேண்டும். அதனால் பாபாவை நினைவு செய்து கொண்டே இருங்கள். அப்போது விகர்மங்கள் விநாசமாகும். மேலும் நீங்கள் பறப்பதற்குத் தகுதி உள்ளவர்களாக ஆகி விடுவீர்கள். மாயா உங்களுடைய இறக்கையைத் துண்டித்து விட்டுள்ளது. இப்போது உங்களுக்கு ஈஸ்வரிய வழிமுறை கிடைக்கின்றது. இதன் மூலம் நீங்கள் சதா சுகமானவர் களாக ஆகிறீர்கள். ஈஸ்வரிய வழிமுறைப்படி நீங்கள் சொர்க்கத்தின் எஜமானர் ஆகிறீர்கள். உலகத்தின் ராஜபதவியை அடைந்து கொண்டிருக்கிறீர்கள். ஈஸ்வரிய வழிமுறை கிடைக்கின்றது-பாபாவை நினைவு செய்வீர்களானால் அந்த் மதி ஸோ கதி ஆகி விடும். நினைவின் மூலம் தான் விகர்மங்கள் விநாசமாகும், தூய்மையாகி விடுவீர் கள். தூய்மையான ஆத்மா தான் சொர்க்கத்திற்குத் தகுதி உள்ளவர்களாக ஆக முடியும். அங்கே உங்களுக்கு சரீரமும் நோயற்றதாக இருக்கும். ஆயுளும் நீண்டதாக இருக்கும். செல்வமும் நிறைய இருக்கும். அங்கே ஒரு போதும் தர்மத்தின் குழந்தையை உருவாக்க மாட்டார்கள். பாபா சொல்கிறார்-ஆயுஷ்வான் பவ, சம்பத்திவான் (செல்வம் நிறைந்தவர்) ஆகுக. ஒரு மகனும் அவசியம் இருப்பான். இச்சமயம் பாபா அனைவரையும் தர்மத்தின் குழந்தை ஆக்குகிறார். ஆக, பிறகு சத்யுகத்தில் தர்மத்தின் குழந்தை என்று யாரும் இருக்க மாட்டார்கள். யோக பலத்தின் மூலம் ஓர் ஆண்குழந்தை, ஒரு பெண்குழந்தை இருக்கும். குழந்தை எப்படிப் பிறக்கும் எனக் கேட்கின்றனர். அங்கே இருப்பது யோகபலம். டிராமாவில் விதிக்கப் பட்டுள்ளது. சத்யுகத்தில் அனைவரும் யோகிகள். கிருஷ்ணர் யோகேஷ்வர் எனச் சொல்லப் படுகின்றார். கிருஷ்ணர் யோகத்தில் இருக்கிறார் என்பதில்லை. அவரோ முழு தூய்மையான யோகி ஆவார். ஈஸ்வரன் அனைவரையும் யோகேஷ்வர் ஆக்கியுள்ளார் என்பதால் வருங்காலத்தில் யோகியாக இருக்கிறார்கள். பாபா தான் யோகியாக ஆக்கியிருக்கிறார். யோகிகளின் ஆயுள் நீண்டதாக இருக்கும். போகிகளின் ஆயுள் குறுகியதாக இருக்கும். ஈஸ்வரன் குழந்தைகளை தூய்மையானவர் களாக்கி, யோகம் கற்றுத் தந்து தேவதை ஆக்கியிருக்கிறார். இவர்கள் யோகிகள் எனச் சொல்லப் படுகின்றனர். யோகி என்றால் ரிஷி, தூய்மையாக இருப்பவர்கள். நீங்கள் ராஜரிஷி என்று உங்களுக்குப் புரிய வைக்கப்பட்டுள்ளது. இராஜயோகத்தைக் கற்றுக் கொண்டிருக்கிறீர்கள், இராஜ்ய பதவி பெறுவதற்காக. இச்சமயம் பாபாவை நினைவு செய்ய வேண்டும். இங்கே - குழந்தை பிறக்க வேண்டும் என்பது போன்ற எந்த ஒரு தலைகீழான ஆசையும் வைக்கக் கூடாது. மீண்டும் விகாரத்தில் செல்ல வேண்டியிருக்கும், காமக் கட்டாரி செலுத்த வேண்டியிருக்கும் இல்லையா? தேக அபிமானிகள் காமக் கட்டாரி செலுத்துவார்கள். தேகி அபிமானிகள் காமக் கட்டாரி செலுத்துவதில்லை. பாபா புரிய வைக்கிறார்-தூய்மையாகுங்கள். ஆத்மாக்களோடு பேசுகிறார்-இப்போது காமக் கட்டாரி செலுத்தாதீர்கள். தூய்மையாவீர்களானால் உங்களின் அனைத்து துக்கங்களும் விலகிப் போய்விடும். உங்களை சொர்க்கத்தின் எஜமானர் ஆக்குகிறார். பாபா எவ்வளவு சுகம் கொடுக்கிறார்! பாபாவிடமிருந்தோ முழு ஆஸ்தி பெற வேண்டும்.பாபாவோ ஏழைப்பங்காளர். பாடப் படவும் செய்கிறது-சுதாமா இரு கைப்பிடி அவல் கொடுத்ததால் மாளிகை கிடைத்தது என்பதாக. பாபா 21 பிறவிகளுக்கு ஆஸ்தி தருகிறார். இதையும் புரிந்து கொண்டிருக்கிறீர்கள்-இப்போது அனைவரும் திரும்பிச் செல்ல வேண்டும். சிவபாபாவின் ஸ்தாபனையின் காரியத்தில் எவ்வளவு உதவி செய்கிறீர்களோ, அவ்வளவு ஆஸ்தி பெறுவீர்கள். வீட்டில் பல்கலைக்கழகம் மற்றும் மருத்துவமனை திறந்து வையுங்கள். போர்டில் எழுதி வையுங்கள் - சகோதர-சகோதரிகளே, 21 பிறவிகளுக்கு சதா ஆரோக்கியமாக, சதா செல்வந்தராக ஆக வேண்டுமானால் வந்து புரிந்து கொள்ளுங்கள். நாங்கள் ஒரு விநாடியில் சதா ஆரோக்கியமாக, செல்வந்தராக ஆவதற்கான வழி சொல்கிறோம். நீங்கள் சர்ஜன் அல்லவா? சர்ஜன் என்ற போர்டையோ அவசியம் வைக்கிறார்கள். இல்லையென்றால் மனிதர்களுக்கு எப்படித் தெரிய வரும்? நீங்களும் உங்கள் வீட்டுக்கு வெளியில் போர்டு வையுங்கள். யாராவது வந்தால் அவர்களுக்கு இரண்டு தந்தையரின் இரகசியத்தைப் புரிய வையுங்கள். எல்லைக்குட்பட்ட தந்தையிடம் எல்லைக்குட் பட்ட ஆஸ்தி பெற்றே வந்திருக்கிறீர்கள். என்னை மட்டுமே நினைவு செய்வீர்களானால் எல்லையற்ற ஆஸ்தி கிடைத்து விடும். என்று எல்லையற்ற தந்தை சொல்கிறார். புரொஜெக்டர், கண்காட்சிகளில் முதலில் இதைப் புரிய வையுங்கள். இந்தப் முயற்சியை செய்வதால் நீங்கள் இவ்வாறு ஆவீர்கள். இப்போது சங்கமயுகம். கலியுகத்திலிருந்து சத்யுகம் உருவாக வேண்டும். பாரதவாசிகள் நீங்கள் சதோபிரதானமாக இருந்தீர்கள். இப்போது தமோபிரதானமாக ஆகி விட்டிருக்கிறீர்கள். இப்போது பாபா சொல்கிறார்-என்னை நினைவு செய்வீர்களானால் நீங்கள் சொர்க்கதின் எஜமானர் ஆகி விடுவீர்கள். வார்த்தைகள் இரண்டு தான். தந்தையை நினைவு செய்வீர்களானால் ஆஸ்தி (இராஜபதவி) உங்களுடையது. இந்த நினைவு மூலம் குஷியர்க இருப்பீர்கள். இந்த மோசமான உலகத்தில் எந்த ஓர் ஆசையும் வைக்காதீர்கள். இங்கே நீங்கள் முயற்சி செய்கிறீர்கள்-உயிரோடு இருந்து கொண்டே இறந்த நிலையை அடைவதற்காக. அவர்களோ இறந்த பிறகு சொர்க்கவாசி ஆகி விட்டதாகச் சொல்கின்றனர். நீங்கள் அனைவருக்கும் சொல்கிறீர்கள், நாங்கள் சொôக்கவாசி ஆவதற்காக தந்தையை நினைவு செய்கிறோம். அவரிடமிருந்து எல்லையற்ற சுகம் கிடைக்கின்றது. தந்தையை நினைவு செய்வதன் மூலம் நீங்கள் ஒரு போதும் அழுது புலம்ப மாட்டீர்கள். மாயாவின் புயல்கள் வருகின்றன, அதனைப் பற்றிச் சிந்தனை செய்ய வேண்டாம். மாயாவின் புயல்களோ வரத்தான் செய்யும். இது யுத்தமாகும். சங்கல்ப-விகல்பங்கள் வருகின்றன என்றால் நேரம் வீணாகி விடுகின்றது. புயலோ கடந்து சென்று விடும். சதா இருந்து கொண்டிருக்காது. அதிகாலை எழுந்து தந்தையை நினைவு செய்ய வேண்டும். தந்தையிடமிருந்து ஆஸ்தி பெற வேண்டும். இந்த ஈடுபாடு உள்ளுக்குள் இருந்து கொண்டே இருக்க வேண்டும். தந்தை வேறு எந்த ஒரு கஷ்டமும் தரவில்லை. தந்தையை நினைவு செய்தால் போதும். மற்ற அனைவரையும் மறந்து விடுங்கள். இவர்கள் அனைவரும் இறந்து விட்டனர். உங்களுக்குள் இதே உரையாடல் செய்து கொண்டே இருங்கள். பாபா, இப்போதோ உங்களை மட்டுமே நினைவு செய்வோம். உங்களிடம் இருந்து சொர்க்கத்தின் ஆஸ்தியைப் பெறுவோம். நேரம் ஒதுக்குங்கள்-நான் 3-4 மணிக்கு அவசியம் எழுந்து பாபாவை நினைவு செய்வேன். சக்கரத்தையும் நினைவு வைக்க வேண்டும். பாபா நமக்கு படைப்பவர் மற்றும் படைப்பு பற்றிய ஞானம் தந்துள்ளார். நாம் இந்த மனித சிருஷ்டி மரத்தைப் பற்றி அறிவோம். நாம் 21 பிறவிகளை எப்படி எடுக்கிறோம்? - இது புத்தியில் உள்ளது. இப்போது மீண்டும் நாம் செல்கிறோம். சொர்க்கத்தில் மீண்டும் வந்து பாகத்தை நடிப்போம். நாம் ஆத்மா, ஆத்மாவுக்குத் தான் இராஜ்யம் கிடைக்கின்றது. பாபாவை நினைவு செய்வதன் மூலம் ஆஸ்திக்கு உரிமை உள்ளவர்களாக ஆகிறோம். இது இராஜயோகம். தந்தையை நினைவு செய்கிறோம். எல்லையற்ற தந்தை மூலம் அநேக தடவை உலகத்தின் எஜமானர் ஆகியிருக்கிறோம். இப்போது மீண்டும் சொர்க்கவாசி ஆகிறோம் - ஒரு தந்தையின் நினைவு மூலம். தந்தையை நினைவு செய்வதன் மூலம் தான் பாவங்கள் பஸ்மமாகும். அதனால் இதை யோக அக்னி எனச் சொல்லப் படுகின்றது. பிராமணர்கள் நீங்கள் இராஜரிஷிகள். ரிஷிகள் எப்போதும் தூய்மையாக இருப்பார்கள். தந்தையை நினைவு செய்து இராஜ்யத்தின் ஆஸ்தி பெறுகிறோம். இப்போது விகாரத்திற்காக ஆசை வைக்கக் கூடாது. இது மோசமான ஆசையாகும். இப்போதோ பரலௌகிகத் தந்தையிடமிருந்து ஆஸ்தி பெற வேண்டும். நோய் இருந்தாலும் கூட நினைவு செய்ய முடியும். தந்தைக்கும் குழந்தைகள் பிரியமானவர்களாக உள்ளனர். பாபா எத்தனைக் குழந்தைகளுக்குக் கடிதம் முதலியன எழுத வேண்டி உள்ளது! சிவபாபா எழுதச் செய்கிறார். நீங்களும் கடிதம் எழுதுகிறீர்கள்-சிவபாபா கேர் ஆஃப் பிரம்மா. நாம் அனைவரும் சிவபாபாவின் குழந்தைகள், சகோதரர்கள். ஆன்மிகத் தந்தை வந்து நம்மைப் தூய்மையாக்குகிறார். அதனால் பதீத-பாவனர் எனச் சொல்லப்படுகிறார். அனைத்து ஆத்மாக்களையும் தூய்மையாக்குகிறார். யாரையும் விடுவதில்லை. இயற்கையும் கூட தூய்மையாகின்றது. நீங்கள் அறிவீர்கள், சத்யுகத்தில் இயற்கையும் கூட தூய்மையாக இருக்கும். இப்போது சரீரமும் தூய்மை இழந்து விட்டது. அதனால் தான் கங்கையில் போய் சரீரத்தை சுத்தப்படுத்துவதற்காகச் செல்கின்றனர். அதனால் ஆத்மாவோ தூய்மையாவதில்லை. இதுவோ யோக அக்னி மூலம் தான் தூய்மையாகும். நல்லது.இனிமையிலும் இனிமையான தேடிக்கண்டெடுக்கப் பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவு மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே!தாரணைக்கான முக்கிய சாரம் :

1) இந்தக் கலியுக உலகத்தில் எந்த ஒரு தலைகீழான ஆசையும் வைக்கக் கூடாது. சம்பூர்ண சதோபிரதானமாக ஆவதற்காக ஈஸ்வரிய வழிமுறைப்படி நடக்க வேண்டும்.2) தூய்மையாகி வீட்டுக்குத் திரும்பிச் செல்ல வேண்டும் - இந்த ஓர் ஆசை மட்டுமே வைக்க வேண்டும். அந்த் மதி ஸோ கதி. மாயாவின் புயல்களில் நேரத்தை வீணாக்கக் கூடாது.வரதானம் :

சோம்பலின் பலவிதமான வேடத்தில் வருவதை முடித்து விட்டு சதா உற்சாகத்தில் (மகிழ்ச்சியாக) இருக்கக் கூடிய தீவிர முயற்சியாளர் ஆகுக.தற்போதைய சமயம் மாயாவின் யுத்தம் சோம்பலின் ரூபத்தில் பலவிதமான வழிகளில் நடைபெறுகின்றது. இந்த சோம்பலும் கூட விசேஷமான ஒரு விகாரமாகும். இதை முடித்து விடுவதற்காக சதா உற்சாகத்தில் இருங்கள். எப்போது வருமானம் சம்பாதிப்பதற்கான உற்சாகம் உள்ளதோ, அப்போது சோம்பல் முடிந்து போகும். அதனால் ஒரு போதும் உற்சாகத்தைக் குறைத்துவிடக் கூடாது. யோசிக்கிறோம், செய்வோம், செய்யத் தான் போகிறோம், ஆகி விடும்......... இவையனைத்தும் சோம்பலின் அடையாளங்களாகும். அப்படிப்பட்ட சோம்பல் உள்ளவர்கள் பலவீனமான சங்கல்பங்களை முடித்து விட்டு இதையே யோசியுங்கள் - எதைச் செய்ய வேண்டுமோ, எவ்வளவு செய்ய வேண்டுமோ, அதை இப்போதே செய்ய வேண்டும் - அப்போது தான் தீவிர முயற்சியாளர் எனச் சொல்வார்கள்.சுலோகன் :

யாருக்கு எண்ணமும், சொல்வதும் சமமாக உள்ளதோ, அவர்கள் தான் உண்மையான சேவாதாரி.***OM SHANTI***

Whatsapp Button works on Mobile Device only