28 July 2016

BK Murli 28 July 2016 Tamil

BK Murli 28 July 2016 Tamil

28.07.2016    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்

இனிமையான குழந்தைகளே! நீங்கள் இங்கே தன்னுடன் சேர்த்து முழு உலகத்தினரையும் (கல்ப தருவாக) புதியதாக ஆக்குவதற்காக வந்துள்ளீர்கள். நினைவின் மூலம் தான் காய கல்பம் (எப்போதும் ஆரோக்கியம் நிறைந்த உடல்) உருவாகும்.கேள்வி:

நரகவாசியிலிருந்து சொர்க்கவாசி ஆவதற்கான விதி எது? இப்போது குழந்தைகளாகிய உங்களுக்கு ஜீவதானம் (வாழ்க்கை தானம்) கிடைக்கிறது, எப்படி?பதில்:

நரகவாசியிலிருந்து சொர்க்கவாசியாக ஆவதற்காக கண்டிப்பாக இறக்க வேண்டும். நான் உங்கள் அனைவருக்கும் மரணத்தைக் கொடுப்பதற்காக வந்துள்ளேன் என பாபா சொல்கிறார். உங்களுடைய இந்த தேகத்தை அழித்து மற்ற அனைத்து ஆத்மாக்களையும் அழைத்துச் செல்வேன். இதுவே உண்மையான வாழ்க்கை தானமாகும் (உயிர் பிச்சை). இதற்காகவே இந்த மகாபாரதச் சண்டையாகும். அதில் அனைத்தும் வினாசம் ஆகும். பிறகு ஆத்மாக்கள் தூய்மையடைந்து வீடு திரும்பிச் செல்வார்கள். பிறகு சொர்க்கத்திற்கு வருவார்கள்.பாடல்:

மாதா ஓ மாதா. . .ஓம் சாந்தி.

இனிமையிலும் இனிமையான ஆன்மீகக் குழந்தைகள் பாடலின் வரிகளைக் கேட்டீர்கள். ஜகதம்பாவின் மகிமையைக் கேட்டீர்கள். ஜகதம்பா இங்கே பாரதத்தில்தான் பாடப்படுகிறார். ஜகதம்பா இருக்கிறார் என்றால் ஜகத்பிதாவும் கண்டிப்பாக இருப்பார். ஜகதம்பா என சரஸ்வதியைத்தான் சொல்கின்றனர். உண்மையில் அவருடைய பெயர் ஒன்றுதான் இருக்க வேண்டும். உங்களுடைய பெயரும் ஒன்றுதான் இருக்கிறது அல்லவா. இரண்டு மூன்று பெயர்கள் இல்லை. இப்போது ஜகதம்பாவை சாகாரத்தில் காட்டுகின்றனர், சரீரதாரியாக உள்ளார். ஜகத்பிதாவும் இருக்கிறார், அவர் பிரஜாபிதா என அழைக்கப்படுகிறார். முழு உலகிற்கும் அம்பா இருப்பது போல் முழு உலகின் பிதாவாக இருக்கிறார். கண்டிப்பாக இருவருமே இங்கே இருப்பார்கள். இருவரின் பெயர் களும் சொல்லியிருக்கிறேன். இருவரும் பிரஜாபிதா மற்றும் பிரஜாமாதா ஆவர். இப்போது சிவபாபா இன்னொரு ஜகத்பிதா என சொல்லப்படுகிறார். அவர் அனைவரின் ஆத்மாக்களின் பிதாவாக இருப்பவர், அவர் பெயரே பரமபிதா பரம ஆத்மா, சிவன் என்பது. வெறும் ஈஸ்வரன் அல்லது பரமாத்மா என சொல்லக்கூடாது. அவருடைய பெயர், உருவம் என்பது உண்டல்லவா. அவர் இறைத்தந்தை என சொல்லப்படுகிறார். ஒருவர் ஆத்மாக்களின் தந்தை, மற்றவர் சாகார மனித ஆத்மாக்களின் தந்தை மற்றும் மம்மா. சிவன் ஆத்மாக்களின் பிதா ஆவார். அவர் என்னுடைய தந்தை என ஆத்மா சொல்கிறது. பிறகு ஆத்மாவுக்கு இந்த சாகார சரீரம் கிடைக்கும்போது பிரம்மா பாபா என சொல்கிறோம், அப்போது இரண்டு தந்தையர் என ஆகிவிட்டனர். பதித பாவனா வாருங்கள் என அனைவருமே கூக்குரலிடுகின்றனர் எனும்போது இரண்டு தந்தையர்கள் ஆகி விடுகின்றனர். சிவபாபா படைப்பவர் ஆவார். புதிய உலகை படைக்கிறார். ஆக முதலில் பிரம்மாவைப் படைக்க வேண்டும். விஷ்ணுவையோ அல்லது சங்கரனையோ ஒருபோதும் பிரஜாபிதா என சொல்வதில்லை. பிரம்மாவைதான் பிரஜாபிதா என சொல்கிறோம். ஆக சிவபாபா பிரஜாபிதா பிரம்மாவின் மூலம் தத்தெடுக்கிறார். நாங்கள் சிவபாபாவின் குழந்தைகள் என சொல்கின்றனர். சிவபாபா இவருக்குள் பிரவேசமாகி தத்தெடுத்துள்ளார். அவர்தான் ஆத்மாக்களை தூய்மைப்படுத்துகிறார், ஆத்மாதான் தூய்மையற்றிருக்கிறது. இதன் காரணமாக சரீரமும் தூய்மையற்றதாக கிடைக்கிறது. தங்கத்தில் வெள்ளி, தாமிரம், இரும்பு ஆகியவற்றைக் கலக்கின்றனர், அதுபோல் ஆத்மாவுக்குள்ளும் கலப்படம் ஏற்படுகிறது. உண்மையில் ஆத்மா தூய்மையாக முக்தி தாமத்தில் வசிப்பதாகும், அங்கே சிவபாபாவும் வசிக்கிறார். இப்போது சிவபாபா, பிரஜாபிதா பிரம்மா - ஒருவரை தந்தை, இன்னொருவரை தாதா என சொல்கிறோம். அனைத்து மனிதர்களும் சிவபாபாவின் குழந்தைகள் என நீங்கள் அறிவீர்கள். சிவ வம்சத்தவர், பின்னர் பிரம்மாகுமார், குமாரிகள். சிவபாபா மற்றும் பிரம்மா ஒன்றாக இருக்கின்றனர். சிவபாபா இவருக்குள் வீற்றிருக்கிறார், நம்மை பிராமணர் ஆக்கி மனிதரை தேவதை ஆக்குவதற்காக இராஜயோகம் கற்பிக்கிறார். தேவதைகள் சத்யுகத்தில் இருக்கின்றனர். தேவதைகள் பதித பாவனர், ஞானக் கடல் என சொல்லப்படுவதில்லை. அவர்களை பாபா எனவும் சொல்ல முடியாது. இப்போது நீங்கள் விஷ்ணுபுரியின் எஜமானர்களாக ஆகிக் கொண்டிருக்கிறீர்கள். விஷ்ணுவின் (இரண்டு இணைந்த) ரூபமே லட்சுமி நாராயணர், இதனை மனிதர்கள் அறிவதில்லை. பக்தி செய்பவர்களுக்கு இரண்டு தந்தையர் கண்டிப்பாக உண்டு. சத்யுகத்தில் ஒரு தந்தை இருப்பார். அங்கே ஓ பரமபிதா பரமாத்மா, துக்கத்தை நீக்கி சுகத்தைக் கொடுப்பவரே வாருங்கள் என சொல்வதில்லை. அங்கே தேவி தேவதைகளின் இராஜ்யம் இருந்தது. அவர்கள் ஓ இறைத்தந்தையே, விடுவிப்பவரே என சொல்ல மாட்டார்கள். அங்கே பதித பாவனரை அழைக்கும்படியாக யாரும் தூய்மையற்றவர்களாக, துக்கம் மிக்கவர்களாக இருக்க மாட்டார்கள், பாரதத்தில் இன்றிலிருந்து 5 ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் தேவி தேவதைகளின் இராஜ்யம் இருந்தது என நீங்கள் அறிவீர்கள். பின்னர் 1250 வருடங்களுக்குப் பிறகு ராமன் சீதையின் இராஜ்யம் ஏற்படும். தந்தை உறுதிப்படுத்தி சொல்கிறார் - சத்யுகம், திரேதா யுகங்களில் நீங்கள் 21 பிறவிகள் எடுத்தீர்கள். பிராமணர், தேவதைகள், சத்திரியர்கள் . . . என பாரதத்தில்தான் ஆகின்றனர். தந்தை வந்து பழைய உலகை புதிய உலகமாக ஆக்குகிறார். புதுப்பிக்கிறார். காயா கல்பதரு ஆக்குகிறார். அமரர்களாக ஆக்குகிறார். தந்தை வந்து குழந்தைகளாகிய உங்களை அமரலோகத்தின் எஜமானர்களாக ஆக்குகிறார். பாரதம் அமரலோகமாக இருந்தபோது தேவதைகளின் இராஜ்யம் இருந்தது. ஏணியில் இறங்கி இறங்கி வந்து மரணலோகத்தின் எஜமானர்களாக ஆகியுள்ளனர். எங்கள் பாரதம் என சொல்கின்றனர் அல்லவா. ஆக பிரஜைகளும் கூட எஜமானர் என ஆகிவிட்டனர் அல்லவா. நீங்களும் எங்கள் பாரதம் என சொல்வீர்கள். நாம் பாரதத்தின் எஜமானாக இருந்தோம், ஆனால் நரகவாசி. தேவதைகள் நாங்கள் சொர்க்கவாசிகள் என சொல்வார்கள். நீங்களும் கூட சொர்க்கவாசியாக இருந்தீர்கள், பிறகு 84 பிறவிகள் அனுபவித்து நரகவாசி ஆகியுள்ளீர்கள். இங்கே பாரதத்தில்தான் சிவபாபா ஜென்மம் எடுக்கிறார். சிவராத்திரியும் சிவஜெயந்தியும் பாடப்படுகிறது. கிருஷ்ண ஜெயந்தியும் கொண்டாடுகின்றனர், அவருடைய காலத்தைப் பற்றியும் சொல்கின்றனர். இன்ன சமயத்தில் தாயின் கர்ப்பத்தில் பிறவி ஏற்பட்டது என்று. சத்யுகத்தில் கண்டிப்பாக தாயின் கர்ப்பத்தில் பிறவி எடுத்திருப்பார். கிருஷ்ண ஜெயந்தி சத்யுகத்தின் புதிய உலகத்தில் ஏற்படுகிறது, பிறகு மறுபிறவிகளில் வரத் தொடங்கினார். பாபா வெறும் ஒருவருடைய விஷயத்தை மட்டும் கூறவில்லை. கிருஷ்ணபுரியே விஷ்ணுபுரி. இராஜாக்கள் கீழே இறங்கும்போது இராஜ்யமும் இறங்குகிறது. அதில் ராஜா, ராணி, பிரஜைகள் என அனைவரும் வந்து விடுகின்றனர். சந்திரவம்சத்தின் இராஜ்யம் இருக்கும்போது சூரிய வம்சத்தின் இராஜ்யம் கடந்து முடிந்து விட்டது. மாற்றம் அடைந்து சந்திரவம்சத்தினருக்கு கிடைக்கிறது, பிறகு வைஸ்ய வம்சத்தவருக்கு கிடைக்கிறது.நாம் பிராமண குலத்தவர், உச்சிக் குடுமி போன்றவர்கள் என இப்போது நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். குடுமிக்கு மேலே (உச்சியில்) இருப்பவர் தந்தை. நாம் முதலில் பிராமணராக இருந்தோம், பிறகு சூத்திரர்களாக அதாவது பாதமாக (காலடி) ஆகினோம். பாதத்திலிருந்து ஒரேயடியாக குடுமியாக ஆகிறோம். முதலில் சிவபாபா, பிறகு குடுமி. பாபா உங்களை பிராமணராக ஆக்கினார். இப்போது நீங்கள் சிவபாபாவை பாபா பாபா என சொல்கிறீர்கள். இந்த கணக்கில் பேரன் பேத்திகளாகி விட்டீர்கள். நாம் அனைவரும் பிரம்மாவின் குழந்தைகள் பிராமண பிராமணிகள் என நீங்கள் அறிவீர்கள். நாம் அனைவரும் ஒரு தந்தையின் குழந்தைகள். சகோதரன் - சகோதரியருடையே குற்றப் பார்வை (தீய நோக்கம்) இருக்க முடியாது. எவ்வளவு அளவற்ற குழந்தைகள் அனைவரும் பாபா . . . என சொல்கின்றனர். ஆக இவ்வளவு பேர் பொய்யானவர்களாக ஆக முடியாது. அனைவரின் தந்தை அதே நிராகார சிவன் மற்றும் சாகாரமானவர் பிரஜாபிதா பிரம்மா ஆவார், அவ்வளவுதான். ஒரு தந்தையின் குழந்தைகள் சகோதரன் - சகோதரியாக உள்ளனர். நீங்கள் கண்டிப்பாக தூய்மையானவராக ஆக வேண்டும். கணவன்-மனைவி எப்படி தூய்மையாக ஆவது? அதற்காக இந்த யுக்தி நாடகத்தில் பதிவாகியுள்ளது. இங்கே பிரம்மா குமார் - குமாரிகள் மட்டுமே உள்ளனர். சூத்திர குமார் - குமாரி யாரும் இல்லை. அவர்கள் பதிதர்கள், சூத்திரர்கள், கீழான புத்தியுள்ளவர்கள், ஏனெனில் பாபாவை தெரியாது. ஓ இறைத் தந்தையே என சொல்கின்றனர். நல்லது. அவருடைய தொழிலைப் பற்றி தெரியுமா? பெயர், ரூபம், தேசம், காலத்தைப் பற்றி கூறுங்கள். அவரது வாழ்க்கை வரலாறு பற்றிச் சொல்லுங்கள். தெரியாது என்றால் நாஸ்திகர்களாகி விட்டனர். படைப்பவர் மற்றும் படைப்பின் முதல், இடை, கடைசியைப் பற்றி தெரியாது. அது தூய்மையற்ற உலகமாகும். சத்யுகம் தூய்மையான உலகம், கலியுகம் தூய்மையற்ற உலகம் என சொல்லப்படுகிறது. இந்த சமயம் முற்றிலும் தமோபிரதானமாக உள்ளது, இது கொடுமையான நரகம் எனப்படுகிறது. இதனுடைய நிலைகளும் மாறுகின்றன. துவாபரத்திலிருந்து நரகமாக ஆகத் தொடங்குகிறது, பிறகு வளர்ச்சியடைகிறது. பக்தியும் கூட முதலில் சதோபிரதானமாக கலப்படமற்றதாக இருந்தது, பிறகு சதோ, ரஜோ, தமோ ஆகிறது. நீங்கள் பார்த்திருக்கலாம், மூன்று சாலைகள் சந்திக்குமிடத்தை முச்சந்தி என்பார்கள், அங்கே எண்ணெய் முதலானதை ஊற்றி தலை வணங்குவார்கள். இப்போது சிவபாபாவின் பூஜை எங்கே, முச்சந்தி பூஜை எங்கே. இது தமோபிரதான பக்தி என சொல்லப்படுகிறது. நீருக்கும் கூட பூஜை செய்கின்றனர், பதித பாவனி கங்கை என நிறைய பாடுகின்றனர். இப்போது பதீத பாவனர் யார்? நீரோட்டமுள்ள கங்கை எப்படி பதித பாவனி ஆக முடியும்? அது நீரல்லவா. தந்தை பதித பாவனர் ஆவார். சிவஜெயந்தியும் பாரதத்தில் கொண்டாடுகின்றனர் எனும்போது கண்டிப்பாக பாரதத்தில்தான் வந்திருப்பார் - தூய்மையற்றவர்களை தூய்மையான தேவதையாக ஆக்குவதற்காக. பிரம்மாவின் தேகத்தில் வந்து மனிதர்களை தேவதைகளாக்குகிறார். இங்கே நீங்கள் வருவதே தூய்மையற்றவரிலிருந்து தூய்மையானவராக ஆவதற்கு. உங்களுக்கு எப்படி இரண்டு புஜங்கள் உள்ளனவோ அது போல அவர்களுக்கும் இரண்டு புஜங்கள்தான் இருக்கும். 4-8 புஜங்கள் உள்ள மனிதர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அதனை அலங்காரமாகக் காட்டி விட்டுள்ளனர். இல்லறத்தைக் காட்டுவதற்காக சதுர்புஜங்களைக் காட்டியுள்ளனர். விஷ்ணுபுரி என்பது லட்சுமி நாராயணபுரிக்கு சொல்லப்படுகிறது. வைஷ்ணவர் எனும் வார்த்தை விஷ்ணுவிலிருந்து வெளிப்பட்டதாகும். தேவதைகள் வைஷ்ணவர்களாக இருந்தனர். வல்லபாச்சாரி வைஷ்ணவர்கள் சைவ உணவு உண்பவர்கள் ஆவர், அவர்கள் நிர்விகாரிகளாக ஏதும் இருப்பதில்லை. அவர்களுடைய மாளிகைகள் பெரிது பெரிதாக இருக்கும். வைஷ்ணவர்கள் என்பதன் அர்த்தத்தையே புரிந்து கொள்வதில்லை. விஷ்ணுபுரியில் வசிப்பவர்கள் வைஷ்ணவர்கள் எனப்படுகின்றனர். தூய்மையானவர்கள் வைஷ்ணவர்கள் எனப்படுவார்கள். ராதா-கிருஷ்ணருக்கு தனி கோவிலும் லட்சுமி-நாராயணருக்கு தனி கோவிலும் கட்டி விட்டார்கள். அவர்களுக்குள் என்ன வித்தியாசம் உள்ளது என பாரதவாசிகளுக்கு தெரியவே தெரியாது. ராதா-கிருஷ்ணரே லட்சுமி-நாராயணர் ஆகின்றனர், இது யாருக்கும் தெரியாது. அது குழந்தைப் பருவத்தின் ரூபம். இது பெரியவர்களின் ரூபம். லட்சுமி-நாராயணரின் சிறு வயதின் படங்கள் ஏதும் இல்லை. லட்சுமி-நாராயணரை சத்யுகத்திலும், ராதா-கிருஷ்ணரை துவாபரத்திலும் எடுத்துச் சென்று விட்டனர். இப்போது நீங்கள் படைப்பவராகிய தந்தை மற்றும் படைப்பின் முதல்-இடை-கடைசி பற்றி தெரிந்து கொண்டு விட்டீர்கள். பாபா மரத்தின் (கல்ப விருக்ஷம்) இரகசியத்தையும் கூட புரிய வைக்கிறார். நாடகத்தின் இரகசியத்தையும் புரிய வைக்கிறார். சங்கராச்சாரியார் கலியுகத்தில் வருகிறார் என மரத்தைப் பார்க்கும்போது புரிந்து கொள்வார்கள். சன்னியாசிகளின் இராஜ்யம் சத்யுகத்தில் இருக்க முடியாது. அனைவருமே பகவானின் குழந்தைகள் என்றால் சொர்க்கவாசிகளாக இருக்க வேண்டும். ஆனால் அனைவருமே சொர்க்கவாசிகள் ஆவதில்லை தேவதைகள் மட்டுமே ஆவார்கள். இப்போது நீங்கள் பிராமண வம்சத்தவர் ஆகியுள்ளீர்கள், பிறகு தேவதைகள் ஆகப் போகிறீர்கள். கண்டிப்பாக தூய்மையடைய வேண்டும்.சிறியவர்கள், பெரியவர்கள் என அனைவருமே பிரம்மாகுமார்-குமாரிகள் என நீங்கள் அறிவீர்கள். பாபா நாங்கள் உங்களுடைய குழந்தைகள், பிராமணர்கள் என இரு பாலருமே சொல்கின்றனர். இவர்கள் பாப்தாதா - ஆதி தேவன் பிரம்மா மற்றும் சிவபாபா. நாம் பிரம்மா பாபா மற்றும் சிவபாபாவின் முன்னால் அமர்ந்திருக்கிறோம் என நீங்கள் அறிவீர்கள். என்னை நினைவு செய்தீர்கள் என்றால் தூய்மையற்றவரிலிருந்து தூய்மையானவராக ஆகி விடுவீர்கள். நாம் சிவபாபாவிடமிருந்து ஆஸ்தியைப் பெறுகிறோம். சிவபாபா நம்முடைய தந்தையுமாக உள்ளார், பதித பாவனராகவும் உள்ளார், குருவாகவும் உள்ளார். இப்போது இது சங்கமயுகம். தூய்மை யற்றதிலிருந்து தூய்மை ஆவதற்கான சந்திப்பு. பதித பாவனரின் மூலமே தூய்மையடைகின்றனர். சங்கமயுகத்தில் நதிகள் மற்றும் கடலின் சந்திப்பு ஏற்படுகிறது. நதிகளின் சந்திப்பு ஏற்படுவதில்லை. இப்போது ஞானக்கடல் மற்றும் ஆத்மாக்களாகிய உங்களின் சந்திப்பு நடக்கிறது. நீங்கள் ஞானக்கடலிடம் வந்துள்ளீர்கள். ஞான கங்கையராகிய நீங்கள் ஞானக் கடலிடமிருந்து வெளிப்பட்டுள்ளீர்கள். நீங்கள் ஞான ஸ்நானம் செய்வித்து தூய்மையாக்குகிறீர்கள், யோகம் கற்றுத்தருகிறீர்கள். சாகரத்தின் (கடலின்) அறிமுகத்தை கொடுத்து நீங்கள் இங்கே சந்திப்பதற்காக அழைத்து வருகிறீர்கள். இந்த சமயத்தில் நீங்கள் பிராமணர்கள் ஆகும்போது உங்களுக்கு 3 தந்தையர் இருக்கின்றனர். லௌகிக தந்தையும் இருக்கிறார், பிரஜாபிதாவும் இருக்கிறார், பிறகு சிவபாபாவும் இருக்கிறார். பக்தி மார்க்கத்தில் இரு தந்தையர் இருப்பார்கள். சத்யுகத்தில் ஒரு தந்தை இருப்பார். இவை புரிந்து கொள்ளக் கூடிய விசயங்களாகும். இப்போது உங்களுடைய ஆத்மா சொல்கிறது - என்னுடையவர் ஒரு சிவபாபா, வேறு யாருமில்லை. நண்பர்கள் உறவினர்கள் இருந்தாலும் என்னுடையவர் ஒரு சிவபாபா என்கின்றனர். அவருடைய நினைவின் மூலமே தூய்மையற்றவரிலிருந்து தூய்மையானவராக ஆகவேண்டும். அவர் நம்முடைய தந்தையும், ஆசிரியரும், சத்குருவுமாக இருக்கிறார் என ஆத்மாவுக்குத் தெரியும். நம்முடைய ஆத்மாவை தந்தை அழைத்துச் செல்ல வந்துள்ளார். பிரம்மாவின் உடலில் பிரவேசமாகி தூய்மையாக்குகிறார். உங்களை அழைத்துச் செல்வதற்காக தந்தை வந்துள்ளார். உங்கள் அனைவருக்கும் மரணத்தைக் கொடுப்பதற்காக வந்துள்ளேன். நரகவாசியிலிருந்து சொர்க்கவாசியாவதற்கு கண்டிப்பாக இறந்து போக வேண்டியுள்ளது அல்லவா. உங்களுடைய இந்த தேகத்தை அழிக்க வைத்து மற்ற ஆத்மாக்களை அழைத்துச் செல்வேன். உங்களுக்கு வாழ்க்கை தானம் (உயிர் பிச்சை) கொடுக்கிறேன் என தந்தை சொல்கிறார். இது மகாபாரதச் சண்டை அல்லவா. அனைவரின் வினாசமும் ஆகப் போகிறது. இல்லாவிட்டால் எப்படி அழைத்துச் செல்வேன். ஆத்மாக்களை தூய்மையாக்கி வீட்டிற்கு அழைத்துச் செல்கிறேன். அது சாந்தி தாமம் ஆகும். சத்யுகம் வரும்போது கலியுகம் கண்டிப்பாக வினாசம் ஆகும். அதற்கான மகாபாரதச் சண்டை புகழ் வாய்ந்ததாகும். அது மூள்வதும் சங்கமயுகத்தில், அப்போது நீங்கள் மனிதரிலிருந்து தேவதை ஆகிறீர்கள். நல்லது!இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.தாரணைக்கான முக்கிய சாரம்:

1. ஞானக் கடலில் நீராடி தன்னை தூய்மையாக்கிக் கொள்ள வேண்டும். நண்பர்கள் உறவினர்களுடைன் இருந்தபடி, என்னுடையவர் ஒரு சிவபாபாவைத் தவிர வேறு யாரும் இல்லை என்பது புத்தியில் இருக்க வேண்டும்.2. விஷ்ணுபுரிக்குச் செல்வதற்காக உறுதியான வைஷ்ணவர்களாக அதாவது தூய்மையானவராக ஆக வேண்டும். நரகத்தில் வாழ்ந்து கொண்டே இறந்து புத்தியின் தொடர்பை சொர்க்கத்தில் ஈடுபடுத்த வேண்டும்.வரதானம் :

எப்போதும் (ஈஸ்வரிய) மரியாதைகளின் கோட்டிற்குள் இருப்பதில் கவனம் செலுத்தக் கூடிய மரியாதா புருஷோத்தமர் ஆகுக.எந்த குழந்தைகள் தம்மைத் தாமே தந்தை அதாவது இராமனின் உண்மையான சீதை என புரிந்து கொண்டு எப்போதும் மரியாதைகளின் கோட்டிற்கு உள்ளே இருக்கின்றனரோ அதாவது இந்த ஒரு கவனத்தை வைக்கின்றனரோ அவர்கள் கவனமிக்கவராகி, தாமாகவே மகிழ்ச்சி மிக்கவராக இருப்பார்கள். ஆக, அதிகாலையிலிருந்து இரவு வரையிலுமாக கிடைத்திருக்கும் மரியாதைகளின் ஞானத்தை புத்தியில் தெளிவாக வைத்து தன்னை உண்மையான சீதை என புரிந்து கொண்டு மரியாதைகளின் கோட்டின் உள்ளே இருங்கள், அப்போது மரியாதா புருஷோத்தமர் என சொல்லப்படுவீர்கள்.சுலோகன் :

மிக அதிகமாக சேவையில் செல்லாதீர்கள், சேவை மற்றும் சுய புருஷார்த்தத்தின் சமநிலையை வையுங்கள்.***OM SHANTI***

Whatsapp Button works on Mobile Device only