06 July 2016

BK Murli 7 July 2016 Tamil


BK Murli 7 July 2016 Tamil

07.07.2016    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


இனிமையான குழந்தைகளே! ஞானக்கடல் தந்தை உங்களுக்கு ஞானத்தின் மூன்றாம் கண்ணைக் கொடுக்க வந்துள்ளார், அதன் மூலம் ஆத்மாவின் ஜோதி ஏற்றப்படுகிறது.கேள்வி:

தந்தை செய்பவர் மற்றும் செய்விப்பவர் என ஏன் சொல்லப்படுகிறார்? அவர் என்ன செய்கிறார், எதை செய்விக்கிறார்?பதில்:

பாபா கூறுகிறார் - நான் குழந்தைகளாகிய உங்களுக்கு முரளி சொல்லக் கூடிய காரியத்தை செய்கிறேன். முரளி சொல்லி, மந்திரத்தைக் கொடுத்து, உங்களை தகுதி வாய்ந்தவர்களாக ஆக்கி மற்றும் உங்கள் மூலமாக சொர்க்கத்தின் திறப்பு விழா செய்விக்கிறேன். நீங்கள் தூதர்களாகி அனைவருக்கும் செய்தி கொடுக்கிறீர்கள். நான் குழந்தைகளாகிய உங்களுக்கு வழி கொடுக்கிறேன், இதுவே எனது கருணை மற்றும் ஆசீர்வாதம் ஆகும்.பாடல்:

அதிகாலையில் இன்று யார் வந்தது. . .ஓம் சாந்தி.

குழந்தைகள் பாடலைக் கேட்டீர்கள். குழந்தைகளாகிய நம்மை அதிகாலையில் எழுப்புவதற்காக யார் வந்தது - அதனால் நம்முடைய மூன்றாம் கண் முற்றிலுமாக திறந்து விட்டது. ஞானக்கடல், பரமபிதா பரமாத்மாவின் மூலம் நம்முடைய மூன்றாம் கண் திறந்து விட்டது. தந்தை ஜோதியை ஏற்றக் கூடியவர் என சொல்லவும் செய்கின்றனர். ஆனால் அவர் தந்தை என்பதை யாரும் அறிவதில்லை. பிரம்ம சமாஜத்தைச் சேர்ந்தவர்கள் சொல்கின்றனர் - அவர் தீபம் (ஒளி), ஜோதியாக இருப்பவர். கோவிலில் எப்போதும் அவர்கள் ஜோதியைத்தான் ஏற்றுகின்றனர், ஏனென்றால் அவர்கள் பரமாத்மா ஜோதி சொரூபம் என ஏற்றுக் கொள்கின்றனர். ஆகையால் அங்கே கோவிலில் தீபத்தை ஏற்றியபடி இருக்கின்றனர். இப்போது இந்த தந்தை தீக்குச்சியின் மூலம் தீபத்தை ஏற்றுவதில்லை. இந்த விசயமே தனிப்பட்டதாகும். ஈஸ்வரனின் கதியும் வழியும் தனியானது என பாடவும் படுகிறது. இப்போது தந்தை வந்து சத்கதிக்காக ஞானம்-யோகத்தைக் கற்பிக்கிறார் என குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். கற்பிக்கக் கூடியவர் கண்டிப்பாக தேவையல்லவா. சரீரம் கற்பிக்காது. ஆத்மாதான் அனைத்தும் செய்கிறது. ஆத்மாவில்தான் நல்ல, கெட்ட சம்ஸ்காரங்கள் இருக்கின்றன. இந்த சமயத்தில் இராவணனின் பிரவேசம் இருப்பதால் மனிதர்களின் சம்ஸ்காரங்களும் கெட்டதாக உள்ளன, அதாவது 5 விகாரங்களின் பிரவேசம் ஆகியுள்ளது. தேவதைகளிடம் இந்த 5 விகாரங்கள் இருப்பதில்லை. பாரதத்தில் தெய்வீக சுயராஜ்யம் இருந்தபோது இந்த கெட்ட சம்ஸ்காரங்கள் இருக்கவில்லை. அனைத்து குணங்களிலும் நிறைந்தவர்களாக இருந்தனர், தேவி, தேவதைகளின் சம்ஸ்காரங்கள் எவ்வளவு நன்றாக இருந்தன, அவற்றை நீங்கள் இப்போது தாரணை செய்து கொண்டிருக்கிறீர்கள். தந்தைதான் வந்து ஒரு வினாடியில் அனைவருக்கும் சத்கதியை வழங்குகிறார். மற்ற குரு, சன்னியாசி முதலானவர்கள் பக்தி மார்க்கத்தில் இருந்து வந்தவர்கள், அவர்களால் ஒருவருக்கு கூட சத்கதி கொடுக்க முடியாது. தந்தையின் வருகையின் மூலமே அனைவருக்கும் சத்கதி ஏற்படுகிறது. பரமபிதா பரமாத்மாவை வந்து தூய்மையற்ற உலகத்தை வினாசம் செய்து தூய்மையான உலகின் தொடக்க விழாவை நடத்துங்கள் அதாவது கதவைத் திறந்து வையுங்கள் என இதற்காகத்தான் அழைக்கின்றனர். தந்தை வந்து சிவ சக்தி மாதர்களின் மூலமாக கதவை திறக்க வைக்கிறார். வந்தே மாதரம் பாடப்பட்டுள்ளது. இந்த சமயத்தில் எந்த மாதரையும் வந்தனம் செய்வதில்லை, ஏனென்றால் உயர்வான மாதர் யாருமில்லை. யோகபலத்தின் மூலம் பிறப்பவர்கள் உயர்ந்தவர்கள் (சிரேஷ்டாச்சாரிகள்) எனப்படுகின்றனர். லட்சுமி நாராயணர் உயர்ந்தவர்கள் எனப்படுகின்றனர். பாரதத்தில் தேவி தேவதைகள் இருந்தபோது பாரதம் சிரேஷ்டாச்சாரியாக இருந்தது. இந்த விசயங்கள் மனிதர்களுக்குத் தெரியாது. அவர்கள் தங்களுடைய திட்டத்தை தீட்டிக் கொண்டிருக்கின்றனர். காந்தியும் கூட இராம இராஜ்யம் வேண்டும் என்றார், இதிலிருந்து இது இராவண இராஜ்யம் என நிரூபணமாகிறது. பாரதம் தூய்மையற்றதாக உள்ளது. ஆனால் இராம இராஜ்யத்தை ஸ்தாபனை செய்வதற்காக எல்லைக்கப்பாற்பட்ட பாபுஜி (தந்தை) தேவைப்படுகிறார், அவர் இராம இராஜ்யத்தின் ஸ்தாபனத்தையும் இராவண இராஜ்யத்தின் வினாசத்தையும் செய்வார். இராவண இராஜ்யத்தில் இப்போது தீ பற்றப் போகிறது என்பதை குழந்தைகள் அறிவார்கள். அனைத்து ஆத்மாக்களும் அஞ்ஞானத்தின் காரிருளில் உறக்கத்தில் உள்ளனர். நாமும் உறக்கத்தில் தான் இருந்தோம், தந்தை வந்து விழிப்பூட்டியுள்ளார் என நீங்கள் அறிவீர்கள். பக்தியின் இரவு முடிந்துள்ளது, பகல் தொடங்குகிறது. இரவு முடிந்து பகல் இப்போது வந்து கொண்டிருக்கிறது. தந்தை சங்கமத்தில் வந்து விட்டார். குழந்தைகளுக்கு தெய்வீகப் பார்வை மற்றும் ஞானத்தின் மூன்றாம் கண்ணைக் கொடுக்கிறார், அதன் மூலம் நீங்கள் முழு உலகையும் தெரிந்து கொண்டு விட்டீர்கள். இது உருவாகி உருவாக்கப்பட்ட அழிவற்ற நாடகம், இது சுற்றியபடியே இருக்கும் என்பது உங்களின் புத்தியில் பதிந்து விட்டுள்ளது. இப்போது நீங்கள் எவ்வளவு விழிப்படைந்து விட்டீர்கள், முழு உலகமும் உறங்கி விட்டது.இப்போது குழந்தைகளாகிய உங்களுக்கு முழு உலகின் முதல், இடை, கடைசி, மூலவதனம், சூட்சும வதனம், ஸ்தூல வதனம் குறித்து தெரியும். மற்றபடி உலகம் முழுவதுமே கும்பகர்ணனின் அஞ்ஞானத் தூக்கத்தில் உறங்கி விட்டது. பதீத பாவனர் யார் என யாருக்கும் தெரியாது. ஓ பதித பாவனா வாருங்கள் என கூக்குரலிடுகின்றனர். வந்து சிருஷ்டியின் முதல்-இடை-கடைசியின் இரகசியத்தைப் புரிய வையுங்கள் என சொல்வதில்லை. நீங்கள் இந்த சிருஷ்டி சக்கரத்தைப் புரிந்து கொள்வதன் மூலமே சக்கரவர்த்தி ராஜாவாக ஆகிறீர்கள். நினைவின் மூலமே தூய்மையடைகிறீர்கள். வினாசம் கண் முன் நின்றுள்ளது, சண்டையும் ஏற்பட உள்ளது என்பதையும் அறிவீர்கள். மற்றபடி கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் சண்டை எதுவும் நடக்கவில்லை. பாண்டவர்கள் யார் என்பதும் கூட யாருக்கும் தெரியாது. சேனை முதலானவற்றின் விசயமே எதுவும் கிடையாது. உங்கள் பக்கம் சாட்சாத் பரமபிதா பரமாத்மா இருக்கிறார். இப்போது தந்தையிடமிருந்துதான் ஆஸ்தி கிடைக்கிறது. கிருஷ்ணரின் ஆத்மா 84 பிறவிகள் அனுபவம் செய்து விட்டு இப்போது மீண்டும் தந்தையிடமிருந்து ஆஸ்தியை எடுத்துக் கொண்டிருக்கிறது என நீங்கள் அறிந்து கொண்டீர்கள். உலகின் வரலாறு புவியியல் மீண்டும் நடக்கிறது. இப்போது குழந்தைகளாகிய நீங்கள் வினாசத்திற்கு முன்பாக கண்டிப்பாக சதோபிரதானமாக ஆக வேண்டும். இல்லற விசயங்களில் இருந்தபடி தாமரை மலர் போல் தூய்மையாய் இருக்க வேண்டும். பகவானுடைய மஹா வாக்கியம், இல்லற விசயங்களில் இருந்தபடி இந்த ஒரு பிறவி தூய்மையடையுங்கள் என பாடவும் பட்டுள்ளது. நடந்தது நடந்து விட்டது. இது நாடகத்தில் பதிவாகியுள்ளது. புதிய சிருஷ்டி சதோபிரதானமாக ஆகவே வேண்டும், இது நாடகத்தின் விதி. ஈஸ்வரனின் விதி அல்ல, நாடகத்தின் விதி இப்படி உருவாகியுள்ளது. அதனை தந்தை வந்து புரிய வைக்கிறார். அரைக் கல்பம் முடியும்போது தந்தை வருகிறார். இரவு முடிந்து பகல் தொடங்கும் போதுதான் நான் வருகிறேன் என தந்தை கூறுகிறார். சிவராத்திரி என்றும் சொல்கின்றனர் அல்லவா. சிவனுடைய பூஜாரிகள் சிவராத்திரியை ஏற்றுக் கொள்கின்றனர். அரசாங்கம் விடுமுறை கொடுப்பதும் நிறுத்தி விட்டது. இல்லாவிட்டால் குறைந்த பட்சம் ஒரு மாதம் விடுமுறை கொடுக்க வேண்டும். சிவபாபா அனைவருக்கும் சத்கதி வழங்கக் கூடியவர் என யாருக்கும் தெரியாது. அவரே அனைவரின் துக்கத்தை நீக்கி சுகத்தைக் கொடுப்பவர். அவரின் ஜெயந்தியை மிகவும் கோலாகலமாக அனைத்து தர்மத்தவர்களும் ஒரு மாதத்திற்குக் கொண்டாட வேண்டும். குறிப்பாக பாரதத்திற்கு தந்தை நேரடியாக வந்து சத்கதியை கொடுக்கிறார். பாரதம் சொர்க்கமாக இருந்தபோது தேவி தேவதைகளின் இராஜ்யம் இருந்தது. அந்த சமயத்தில் வேறு எந்த தர்மமும் இருக்கவில்லை. தேவதைகள் உலகின் எஜமானர்களாக இருந்தனர். எந்த பிரிவினையும் இருக்கவில்லை. ஆகையால் நிலையான, சதா சுகம், அமைதி, செல்வம் நிறைந்த இராஜ்யம் என சொல்லப்படுகிறது, அதனை மீண்டும் நாம் பலனாகப் பெற்றுக் கொண்டிருக்கிறோம். எல்லைக்கப்பாற்பட்ட தந்தையிடமிருந்து எல்லைக்கப்பாற்பட்ட ஆஸ்தி 5 ஆயிரம் வருடங் களுக்கு முன்பும் கிடைத்திருந்தது. சூரிய வம்சத்தின், சந்திர வம்சத்தின் இராஜ்யங்களில் எந்த துக்கத்தின் பெயரும் இருக்கவில்லை. ராம் ராஜா, ராம் பிரஜா, ராம். . . என பாடவும் படுகிறது, அங்கே அதர்மத்தின் எந்த விசயமும் கிடையாது.பாபா உங்களுக்கு பிரம்மா மற்றும் விஷ்ணுவைப் பற்றியும் இவர்களுக்கிடையில் என்ன சம்பந்தம் என்பது குறித்துப் புரிய வைத்திருக்கிறார். பிரம்மாவின் நாபியிலிருந்து விஷ்ணு தோன்றினார். . . எப்படிப்பட்ட அதிசயமான படமாக இதை உருவாக்கியுள்ளனர். தந்தை புரிய வைக்கிறார் - இந்த லட்சுமி நாராயணர்தான் இறுதியில் வந்து பிரம்மா சரஸ்வதி, ஜகதம்பா, ஜகத்பிதாவாக ஆகின்றனர், அவர்கள் இருவரும் மீண்டும் விஷ்ணு அதாவது லட்சுமி நாராயணராக ஆகின்றனர். எந்த படத்தைப் பார்த்தாலும் அதில் பொருத்தமற்றதாக உள்ளது என தந்தை அமர்ந்து புரிய வைக்கிறார். சிவனின் படத்தை பெரியதாக உருவாக்குகின்றனர், அதுவும் சரியானதல்ல. பக்தியின் காரணமாக பெரியதாக உருவாக்கினார்கள். இல்லாவிட்டால் புள்ளிக்கு எப்படி பூஜை செய்ய முடியும்? நல்லது, பிறகு பிரம்மா, விஷ்ணு, சங்கர் குறித்தும் புரிந்து கொள்ள முடிவதில்லை. திரிமூர்த்தி பிரம்மா என சொல்லி விடுகின்றனர். பிரம்மா மூலம் ஸ்தாபனை, விஷ்ணுவின் மூலம் பாலனை . . . இப்படியும் சொல்கின்றனர், ஆனால் பிரம்மா ஸ்தாபனை செய்வதில்லை. சொர்க்கத்தை பிரம்மா ஸ்தாபனை செய்வாரா? இல்லை. சொர்க்கத்தின் ஸ்தாபனை பரமபிதா பரமாத்மாதான் செய்கிறார். இந்த ஆத்மா (பிரம்மா) பதிதமானவர் (தூய்மையற்றவர்), இவர் வியக்த (சரீரமுடைய) பிரம்மா எனப்படுகிறார். இதே ஆத்மா தூய்மையடைந்து விடுவார், பின்னர் சென்று விடுவார். பிறகு சத்யுகத்தில் சென்று நாராயணனாக ஆகிறார். ஆக பிரஜாபிதா பிரம்மா கண்டிப்பாக இங்கே தேவைப்படுவார் அல்லவா. பிறகு படத்தை அங்கே (சுட்சும வதனத்தில்) கொடுத்து விட்டனர் - எப்படி இந்த ஞானத்தின் அலங்காரம் உண்மையில் உங்களுடையது ஆனால் விஷ்ணுவுக்குக் கொடுத்து விட்டனர், அது போல. தீவிர பக்தியின் போதும் கூட காட்சிகள் தெரிகிறது. மீராவின் பெயரும் கூட பாடப்பட்டுள்ளது அல்லவா. ஆண்களில் முதல் நம்பர் பக்தர் நாரதர். மாதர்களில் மீரா பாடப்பட்டுள்ளார். நீங்கள் இப்போது நாராயணர் அல்லது லட்சுமியை மணமுடிப்பதற்காக ஞானத்தை கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள். உங்களுடைய சுயம்வரம்தான் நடக்கிறது. நாரதரைப் பற்றி காட்டுகின்றனர் - சபையில் வந்து நான் லட்சுமியை மணமுடிக்க இயலுமா என்று கேட்டார். இப்போது லட்சுமியை மணமுடிக்கத் தகுதி வாய்ந்தவர்களாக நீங்கள் ஆகிக் கொண்டிருக்கிறீர்கள். மற்றபடி அவையனைத்தும் பக்தி மார்க்கத்தின் கதைகள். தந்தை உண்மையான விஷயத்தை அமர்ந்து புரிய வைக்கிறார். லட்சுமி சத்யுகத்தில், பக்த நாரதர் துவாபர யுகத்தில் இருப்பவர்கள். சத்யுகத்தில் பிறகு நாரதர் எங்கிருந்து வந்தார். ராதா கிருஷ்ணரின் பெயர்தான் சுயம்வரத்திற்குப் பின் லட்சுமி நாராயணர் என ஆகிறது. இது கூட பாரதவாசிகளுக்குத் தெரியாது. எவ்வளவு அஞ்ஞானத்தின் காரிருளாக உள்ளது. தந்தை நன்மை செய்பவர். உங்களையும் கூட நன்மை செய்பவர்களாக ஆக்குகிறார். மற்றவர்களுக்கும் எப்படி புரிய வைக்கலாம் என இப்போது மனன சிந்தனை செய்ய வேண்டும். காந்தியின் நாபியிலிருந்து நேரு வெளிப்பட்டார், இப்போது எங்கே அந்த தேவதை விஷ்ணு, எங்கே இந்த மனிதர்கள். . . இந்த அனைத்து விசயங்களும் இப்போது குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். வரிசைக்கிரமமாக உங்களுக்கு குஷி இருக்கிறது. எல்லைக்கப்பாற்பட்ட தந்தை நமக்கு கற்பித்துக் கொண்டிருக்கிறார். கீதையில் கிருஷ்ண பகவானுடைய மகா வாக்கியம் என எழுதி விட்டனர். இதை ஒரு போதும் கேள்விப்பட்டதில்லை. பகவான் எப்போது வந்தார், எப்போது வந்து கீதையை சொன்னார்? நாள் கிழமை என எதுவுமில்லை. கல்பத்தின் ஆயுளையே லட்சக்கணக்கான வருடங்கள் என சொல்லி விடுகின்றனர். யாருடைய புத்தியிலும் வருவதில்லை. இப்போது தந்தை அமர்ந்து குழந்தைகளுக்குப் புரியவைக்கிறார். பிராமணர்களின் மரம் வளர்ச்சியடைந்தபடி இருக்கிறது. வளர்ந்து வளர்ந்து எண்ணற்றவர்களாக ஆகி விடுவார்கள். வர்ணங்கள் எப்படி சக்கரத்தின் சுழற்சியில் வருகின்றன என குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். பிராமணர்களாகிய நம்முடைய வர்ணம் (குலம்) அனைத்திலும் உயர்ந்தது. நாம் பாரதத்தின் குப்தமான உண்மையான ஆன்மீக சமூக சேவகர்கள் ஆவோம். பரமபிதா பரமாத்மா நம் மூலம் சேவை செய்வித்துக் கொண்டிருக்கிறார். நாம் ஆன்மீக சேவை செய்கிறோம், அவர்கள் ஸ்தூல சேவை செய்கின்றனர். நீங்கள் பாரதத்திற்கு என்ன சேவை செய்கிறீர்கள்? என கேட்கின்றனர். நாங்கள் ஆன்மீக சேவாதாரிகள் என சொல்லுங்கள். சொர்க்கத்தின் தொடக்க விழா செய்வித்துக் கொண்டிருக்கிறார், ஸ்தாபனை செய்வித்துக் கொண்டிருக்கிறார். சிவபாபா செய்து செய்விப்பவர், அவர் செய்வித்துக் கொண்டிருக்கிறார். அவர் செய்யவும் செய்கிறார். முரளி யார் நடத்துவது? எனவே கர்மம் செய்கிறார். இப்படி நடத்துங்கள் என உங்களுக்கும் கற்பிக்கிறார். மன்மனாபவ எனும் மகா மந்திரம் கொடுக்கிறார். கர்மம் செய்ய கற்பித்திருக்கிறார் அல்லவா. பிறகு மற்றவர்களுக்கு கற்பியுங்கள் என உங்களுக்கு சொல்கிறார், ஆகையால் அவர் செய்பவரும் செய்விப்பவரும் என சொல்லப்படுகிறார். குழந்தைகளாகிய நீங்களும் கூட இதே அறிவுரையைக் கொடுக்கிறீர்கள். தந்தையை நினைவு செய்யுங்கள் மற்றும் ஆஸ்தியை நினைவு செய்யுங்கள். இதே செய்தியை குழந்தைகளாகிய நீங்கள் சேர்ப்பிக்க வேண்டும். பிறருக்கு செய்தி கொடுத்து பிறகு தான் நினைவில் இல்லாவிட்டால் பிறகு என்ன ஆகும். அடுத்தவர் நினைவின் யாத்திரையால் உயரத்தில் ஏறி விடுவார்கள், செய்தி கொடுப்பவர் நின்று போய் விடுவார். நினைவின் முயற்சி செய்யாவிட்டால் அந்த அளவு உயர்ந்த பதவி அடைய மாட்டார்கள். பிறர் நினைவின் யாத்திரையின் மூலம் தூய்மையடைந்து விடுவார்கள். பந்தனத்தில் இருப்பவர்களின் உதாரணத்தை பாபா சொன்னது போல. அவர்கள் நினைவில் அதிகம் இருப்பார்கள், பார்க்காமலிருந்தாலும் கடிதம் எழுதுவார்கள். பாபா நாங்கள் உங்களுடையவர்களாக ஆகி விட்டோம், நாங்கள் கண்டிப்பாக தூய்மையாய் இருப்போம். குழந்தைகளாகிய உங்களுக்கு தந்தையின் மீது அன்பான புத்தி உள்ளது. உங்களுடைய மாலைதான் உருவாகி யுள்ளது. விஷ்ணுவின் மாலையிலும், ருத்ராக்ஷ மாலையிலும் மேலே இருப்பது மேரு. மாலையை எடுக்கும்போதே முதலில் மலர் மற்றும் இரண்டு மணிகள் கையில் வருகின்றன, அதனை நமஸ்காரம் செய்வார்கள். பிறகு இருப்பது மாலை. நீங்கள் பாரதத்தை சொர்க்கமாக ஆக்குகிறீர்கள், ஆகையால் இந்த மாலை உங்களுடைய நினைவுச்சின்னமாகும். தந்தை இந்த கீதா யக்ஞத்தைப் படைத்தார், இதில் முழு பழைய உலகமும் ஸ்வாஹா ஆகப் போகிறது. தந்தை மிகவும் அன்பானவர். உங்களுக்கு எதிர்காலத்திற்காக 21 பிறவிகளுக்கு சுகத்தின் ஆஸ்தியை கொடுக்கிறார். யார் கல்பத்திற்கு முன்பு ஆஸ்தியை எடுத்தனரோ அவர்கள் நாடகத்தின் திட்டப்படி கண்டிப்பாக வருவார்கள். குழந்தைகளே சுகதாமத்திற்குச் செல்ல வேண்டும் என்றால் தூய்மையடைய வேண்டும் என தந்தை சொல்கிறார். என்னை நினைவு செய்யுங்கள், இரக்கம் காட்டுங்கள், உதவி செய்யுங்கள் – எதையும் வேண்டக்கூடிய அவசியமில்லை. இல்லை. நான் அனைவருக்குமே உதவி செய்கிறேன். முயற்சி நீங்கள் செய்ய வேண்டும். ஆசீர்வாதத்தின் விசயம் இல்லை. என்னை மட்டும் நினைவு செய்யுங்கள் என தந்தை சொல்கிறார். நினைவு செய்வது உங்கள் வேலையாகும். வழி கொடுப்பதே இரக்கம் காட்டுவதாகும். மற்றபடி உண்ணுங்கள், குடியுங்கள், சுற்றுங்கள், திரியுங்கள். . . நீங்கள் தூய்மையான உணவுதான் உண்ண வேண்டும். நாம் தேவி தேவதை ஆகிறோம், அங்கே பூண்டு முதலானவை இருக்காது. இவையனைத்தையும் இங்கே விட வேண்டும். இந்தப் பொருட்கள் அங்கே இருப்பதில்லை. விதையே இருக்காது. சத்யுகத்தில் நோய் முதலானவை ஏற்படுவதில்லை என்பது போல. இப்போது பாருங்கள் எவ்வளவு நோய்கள் வெளிப்பட்டுள்ளன. அங்கே தமோகுணம் நிறைந்த எந்த பொருளும் இருக்காது. அனைத்து பொருட்களுமே சதோபிரதானமாக இருக்கும். இங்கே பாருங்கள் மனிதர்கள் என்னென்ன பொருட்களை உண்ணுகின்றனர். என்னை நினைவு செய்யுங்கள், மற்ற தொடர்புகளை விடுத்து என்னுடன் தொடர்பை இணைத்துக் கொண்டீர்கள் என்றால் நீங்கள் தூய்மையடைந்து விடுவீர்கள். நல்லது!இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.தாரணைக்கான முக்கிய சாரம்

1. நடந்தது நடந்து விட்டது, நடந்ததை மறந்து விட்டு, இல்லற விசயங்களில் இருந்தபடியே சதோபிரதானம் அடைவதற்கான முயற்சி செய்ய வேண்டும். வினாசத்திற்கு முன்பாக கண்டிப்பாக தூய்மை அடைய வேண்டும்.2. பாரதத்தை சொர்க்கமாக்குவதற்காக உண்மையிலும் உண்மையான சேவையில் மும்முரமாக ஈடுபட வேண்டும். உண்பதும் குடிப்பதும் மிகவும் சுத்தமாக இருக்க வேண்டும். தூய்மையான உணவுதான் உண்ண வேண்டும்.வரதானம் :

மாஸ்டர் ஞானம் நிறைந்தவர் ஆகி அறியாமைக்கு முடிவு கட்டக்கூடிய ஞான சொரூபம், யோக யுக்தமானவர் ஆகுக.மாஸ்டர் ஞானம் நிறைந்தவர் ஆவதில் எந்த விதமான அறியாமையும் இருக்காது, இந்த விஷயம் எனக்குத் தெரியவே தெரியாது என சொல்லி ஒதுங்கிக் கொள்ள முடியாது. ஞான சொரூபமான குழந்தைளுக்குள் எந்த விஷயத்தைக் குறித்தும் அறியாமை இருக்க முடியாது, யார் யோக யுக்தமானவர்களாக இருக்கின்றனரோ அவர்களுக்கு அனைத்தும் முன்னரே தெரியும் என்ற அனுபவம் ஏற்படும். மாயாவின் ஜாலம், ஜொலிப்பு ஏதும் குறைவானதல்ல, மாயையும் கூட மிகவும் கவர்ச்சியானது ஆகையால் அதனிடமிருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அவர்கள் அறிவார்கள், யார் அனைத்து ரூபங்களிலும் மாயையின் அறிமுகத்தைப் புரிந்து கொண்டிருக்கின்றனரோ அவர்கள் தோல்வி அடைவது என்பது முடியாத விஷயமாகும்.சுலோகன் :

எப்போதும் மகிழ்ச்சி நிறைந்தவர்களாக இருப்பவர்கள், கேள்விகள் சந்தேகம் நிறைந்தவர்களாக இருக்க முடியாது.***OM SHANTI***

Whatsapp Button works on Mobile Device only