08 July 2016

BK Murli 9 July 2016 Tamil

BK Murli 9 July 2016 Tamil

09.07.2016    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


இனிமையான குழந்தைகளே! இந்த சபையில் வெளிநோக்கு முகத்தில் அமரக் கூடாது. பாபாவின் நினைவில் அமர வேண்டும். உற்றார், உறவினர் அல்லது தொழில் நினைவு செய்தல் அமர்ந்தால் வாயுமண்டலத்தில் தடை ஏற்படும்.கேள்வி:-

மனிதர்கள் செய்ய முடியாத, குழந்தைகள் உங்களுடைய ஆன்மீக டிரில்லின் விசேஷத்தன்மை என்ன?பதில்:-

உங்களுடைய ஆன்மீக டிரில் புத்திக்குரியது, அதனுடைய விசேஷத்தன்மை நீங்கள் நாயகிகளாகி தன்னுடைய நாயகனை நினைக்க வேண்டும். இதனைத் தான் கீதையிலும் கூறப்பட்டுள்ளது. மன்மனாபவ. ஆனால் மனிதர்கள் தன்னுடைய நாயகன் பரமாத்மாவை அறிவதேயில்லை என்றால், டிரில் எப்படி செய்ய முடியும். அவர்கள் ஒருவருக்கொருவர் உடல் ரீதியான டிரில் சொல்லிக் கொடுக்கின்றனர்.ஓம் சாந்தி.

குழந்தைகள் புரிந்து கொண்டார்கள், குழந்தைகள் என்ன செய்து கொண்டு இருக்கின்றார்கள் என்று பாபாவும் புரிந்து கொண்டார் (யோகா செய்விக்கக் கூடியவர்) நினைவு யாத்திரையின் டிரில் செய்விக்கின்றார். வாயால் ஒன்றும் உச்சரிக்க வேண்டியதில்லை. யாருடைய நினைவில் இருக்க வேண்டும்? பரமபிதா பரமாத்மா நினைவில்! அவருடைய நினைவில் இருப்பதால் நம்முடைய அனைத்து பாவகர்மங்களும் பஸ்மம் ஆகிவிடும். மேலும் யார் எந்தளவு நினைவு என்ற டிரில்லில் (பயிற்சி) இருக்கின்றார்களோ அவர்கள் விகர்மா ஜீத் ஆகிவிடு வார்கள். இது ஆன்மீக டிரில், உடலுக்கான டிரில் கிடையாது. பாரதத்தில் கற்றுத் தரும் டிரில் எல்லாம் பௌதீக டிரில் ஆகும். ஆனால் இது ஆன்மீக டிரில் ஆகும். இந்த ஆன்மீக டிரில்லை குழந்தைகளான உங்களைத் தவிர வேறு யாரும் அறியவில்லை.இந்த ஆன்மீக டிரில் பற்றி ஜாடையாக கீதையில் கூட கூறப்பட்டுள்ளது. பகவானுடைய மகாவாக்கியம் என்றால், பகவானின் குழந்தைகளுக்காக கூறும் மகாவாக்கியம். நீங்கள் இப்பொழுது பகவான் சிவபாபாவின் குழந்தைகள் ஆகியுள்ளீர்கள் அல்லவா? குழந்தைகளுக்கு தந்தையை நினைவு செய்யுங்கள், ஆஸ்தியை நினைவு செய்யுங்கள் (மாமேகம் யாத் கரோ) என்று கட்டளை இடுகின்றார். பாபா கூட டிரில் கற்றுக் கொடுக்கின்றார். குழந்தைகள் கூட இந்த டிரில் தான் கற்றுக் கொடுக்கின்றார்கள். கல்பத்திற்கு முன்னால் கூட பாபா, என்னை நினைவு செய்யுங்கள் என்று சொன்னார். இதை அடிக்கடி கூற வேண்டிய அவசியம் இல்லை, ஆனாலும் கூற வேண்டியுள்ளது. இங்கே அமர்ந்து உற்றார் உறவினர் தொழில் என்று நினைத்தால் வாயு மண்டலத்தில் தடை போடுகின்றீர்கள். இங்கே அமர்ந்து எப்படி பாபாவை நினைவு செய்கின்றீர்களோ அதே போல் நடக்கும் போதும், போகும் போதும், வரும்போதும் எந்த காரியம் செய்யும் போதும், பாபாவை நினைக்க வேண்டும். எப்படி நாயகி நாயகனை நினைக்கின்றார்கள். அவர்களின் நினைவு ஸ்துôலமானது. உங்களுடையது ஆன்மீகமான நினைவு. பக்திமார்க்கத்தில் கூட பரமாத்மாவை நாயகனாக நினைக்கும் நாயகிகள் ஆத்மாக்கள் உள்ளார்கள். ஆனால் நாயகனை அறிவதே இல்லை. தன்னுடைய ஆத்மாவை பற்றியும் அறிவதேயில்லை. நாயகன் பாபா வந்துள்ளார். பக்திமார்க்கத்தில் இருந்து ஆத்மாக்கள் நாயகிளாக உள்ளார்கள். இது ஆத்மா, பரமாத்மா விஷயமாகும். பாபா நம் முன்னால் வந்து சொல்கின்றார். நாயகிகளே நீங்கள், பாபா வாருங்கள்! என்று நாயகனை நினைவு செய்தீர்கள், நீங்கள் வந்து எங்களை துக்கத்திலிருந்து விடுதலை செய்யுங்கள் மேலும் சாந்திதாமம் அழைத்துச் செல்லுங்கள் என்றும் அழைத்தீர்கள். இப்பொழுது இந்த துக்கதாமம், மரணலோகம் வினாசம் ஆகப் போகின்றது என்று நீங்கள் அறிந்து கொண்டீர்கள். அமரலோகத்திற்கு வெற்றி, மரணலோகம் அழியப் போகின்றது. நீங்கள் இப்பொழுது பிராமணர்கள் ஆகியுள்ளீர்கள், உங்களில் கூட வரிசைக் கிரமமாகத் தான் உள்ளீர்கள், குழந்தைகளான நீங்கள் முழு நம்பிக்கையோடு இருக்க வேண்டும் நாம் இப்பொழுது நரகத்திலிருந்து, சொர்க்கவாசி ஆவதற்காக முயற்சி செய்கின்றீர்கள். இந்த நம்பிக்கை கொடுப்பது கீதையின் பகவான். அவர் ஒருவர் தான் நிராகார பகவான். நிராகாரமானவர் நிராகாரமாகவே உள்ளார் என்று மனிதர்கள் நினைக்கின்றார்கள். அவர் எப்படி இங்கு வந்து கற்பிக்க முடியும்? பாபாவை அறியாததால் நாடகத்தின் அனுசாரமாக கிருஷ்ணர் பெயரை போட்டு விட்டார்கள். கிருஷ்ணர் மேலும் சிவனின் சம்மந்தம் மிகவும் நெருக்கமாக உள்ளது. சிவஜெயந்தி சங்கமயுகத்தில் தான் நடக்கின்றது. பின்பு நாளைக்கு கிருஷ்ண ஜெயந்தி ஏற்படுகின்றது. சிவ ஜெயந்தி இரவில், கிருஷ்ண ஜெயந்தி காலையில், அதை அதிகாலை என்று சொல்கின்றோம். எப்பொழுது சிவராத்திரி பூர்த்தி ஆகின்றதோ அப்பொழுது தான் கிருஷ்ண ஜெயந்தி ஏற்படுகின்றது. இந்த விஷயங்களை குழந்தைகள் நீங்கள் தான் புரிந்து கொள்ள முடியும். இந்த சபையில் வெளி நோக்குமுகம் உள்ளவர் யாரும் உட்கார முடியாது, இது தான் சட்டம். பாபாவின் நினைவில் இருக்க வேண்டும். மனிதர்கள் ஹே பதீத பாவனனே! வாருங்கள், வந்து எங்களை பாவனம் ஆக்குங்கள் என்று அழைக்கின்றார்கள். ஆனால் நாடகத்தின் அனுசாரமாக கல் புத்தி காரணத்தால் ஒன்றும் புரிந்து கொள்வதில்லை. அறிந்திருந்தால் சொல்வார்கள் அல்லவா. இப்பொழுது கலியுகத்தின் கடைசியில் இருக்கின்றோம் என்பது கூட அறியாமல் இருக்கின்றார்கள். பின்பு பாபா எப்பொழுது வருகின்றாரோ அப்பொழுது மீண்டும் ஆரம்பம் ஆகின்றது. மனிதர்கள் முழுவதும் ஆழ்ந்த இருளில் உள்ளார்கள். இன்னும் கலியுகம் 40 ஆயிரம் வருடங்கள் உள்ளன என்று நினைக்கின்றார்கள். எல்லைக்குட்பட்ட தந்தை ஒருபோதும் பதீத-பாவனன் ஆக முடியாது என்று எல்லைக்கு அப்பாற்பட்ட தந்தை புரிய வைக்கின்றார். பாபு என்ற பெயர் அநேகருக்கு வைக்கின்றார்கள். ஆன்மீகத் தந்தை தான் பதீத-பாவனன், ஞானக்கடல் ஆக உள்ளார். குழந்தைகள் பாவனம் ஆவதற்காக ஞானம் தேவை. தண்ணீரில் குளிப்பதால் யாரும் பாவனம் ஆக முடியாது. சிவபாபா நம் முன்னால் இவர் உடலில் பிரத்யக்ஷமாகி உள்ளார் என்பதைப் புரிந்து கொண்டீர்கள். பிரம்மா மூலமாக பிராமணர்களுக்கு இராஜயோகம் கற்றுக் கொடுக்கின்றார். அங்கே அவர்கள் அர்ச்சுனனுக்குத் தான் மகாவாக்கியம் கூறியதாக சொல்லி விட்டார்கள். பிராமணர்களைப் பற்றிய அடையாளமே இல்லை. பிரம்மா மூலமாக ஸ்தாபனை, விஷ்ணு மூலமாக பரிபாலனை என்று பாடியுள்ளார்கள். பிரம்மா மூலமாகத் தான் ஸ்தாபனை செய்கின்றார் விஷ்ணு மூலமாக இல்லை, சங்கரர் மூலமாக இல்லை, நீங்கள் குழந்தைகள் இதை புரிந்து கொண்டீர்கள். பாபா இங்கே தான் வர வேண்டியதாக உள்ளது, திரும்பி யாராலும் போக முடியாது. யாரெல்லாம் இங்கே சதோபிரதானத்தில் வருகின்றார்களோ அவர்கள் ரஜோ, தமோ நிலையைக் கடந்து தான் ஆக வேண்டும். கிருஷ்ணர் முழுமையாக 84 ஜென்மம் எடுக்கின்றார். மேலும் முழுமையாக 5 ஆயிரம் வருட நடிப்பை நடிக்கின்றார். ஆத்மா வயிற்றில் இருந்தாலும் ஜென்மம் எடுத்தாகிவிட்டது என்பதாகும். கிருஷ்ணரின் ஆத்மா எப்பொழுது சத்திய யுகத்தில் கர்ப்பத்தில் பிரவேசம் ஆகின்றதோ அப்பொழுது இருந்தே 5000 வருடம் ஆரம்பம் ஆகிவிடுகின்றது. சிவஜெயந்தி கொண்டாடுகின்றோம் என்றால், இவர் உடலில் தான் அமர்ந்துள்ளார் அல்லவா? கிருஷ்ணரின் ஆத்மா கூட கர்ப்பத்தில் அதாவது கர்ர்ப குகையில் வந்ததிலிருந்து 5 ஆயிரம் வருடம் ஆரம்பம் ஆகிவிடுகின்றது. ஆனால் கூட, குறைய இருந்தால் 5 ஆயிர வருடத்திலும் குறைந்து விடுமே. இது மிவும் சூட்சமமான புரிந்து கொள்ள வேண்டிய விஷயமாகும். கிருஷ்ணருடைய ஆத்மா கூட இப்பொழுது மீண்டும் ஞானம் அடைகின்றது.. மீண்டும் ஸ்ரீகிருஷ்ண நிலையை அடைவதற்காக என்பதை குழந்தைகள் நீங்கள் புரிந்து கொண்டீர்கள். நீங்கள் கூட கம்ச புரியிலிருந்து, கிருஷ்ணபுரிக்குச் செல்கின்றீர்கள். இந்த விஷயங்களை பாபா வந்து குழந்தைகளுக்குப் புரிய வைக்கின்றார். மாயா மிகவும் குத்துச் சண்டைக்காரன் என்று பாபா சொல்கின்றார். நல்ல-நல்ல மகாரதிகளையும் கூட தோல்வி அடைய வைக்கின்றது. ஞானம் கேட்கும் போதே கிரஹச்சாரம் வந்து உட்கார்ந்து விடுகின்றது. ஆச்சிரியமான விஷயம் என்னவென்றால், பாபா குழந்தை ஆகின்றார்கள், ஞானம் கேட்கின்றார்கள், மாயாவால் பிறகு ஓடிப் போய்விடுகின்றார்கள். வருமானத்தில் கிரஹச்சாரம் வந்து விடுகின்றது. இராகு திசை இப்பொழுது அனைவருக்கும் பிடித்துள்ளது. இப்பொழுது உங்களிடம் குருதிசை வந்துள்ளது. போகப்போக பிறகு யாருக்காவது இராகுவின் கிரஹம் ஏற்பட்டுவிடுகின்றது. அப்பொழுது தான் மஹான் முட்டாளைப் பார்க்க வேண்டுமா அவர்களை இங்கு தான் பார்க்க முடியும் என்று பாபா சொல்கின்றார். நாம் பாபாவிடமிருந்து ஆஸ்தியை எடுத்துக் கொண்டிருக்கின்றோம், உங்களுடைய ஆத்மா சொல்கின்றது, பாபா உங்களிடமிருந்து கல்பத்திற்கு முன்னால் கூட ஆஸ்தியை அடைந்துள்ளோம். மீண்டும் இப்பொழுது பாபாவிடம் வந்துள்ளோம்,பாபா புரிய வைக்கின்றார். வெளியில் சென்டரில் கூட இதை புரிந்து கொள்ள நிறைய பேர் வருகின்றார்கள். இங்கு தான் (மதுபன்) இந்திர சபை உள்ளது இந்திரன் சிவபாபா தானே, அவர் தான் ஞான மழை பொழிகின்றார். அவர் ஞானக்கடல் அல்லவா. நீங்கள் நதியும் கூட, சரோவரும் கூட ஞானக்கடல் இவர் உடலில் அமர்ந்து குழந்தைகள் சொர்க்கத்திற்கு போக தகுதியாக ஆக்குகின்றார். சொர்க்கத்தில் ஸ்ரீ லட்சுமி- நாராணன் இராஜ்யம் இருக்கும். இது தான் இல்லற தர்மத்தின் இலட்சியம். நாங்கள் ஞானச் சிதையில் அமர்ந்து இலஷ்மி-நாராயணன் ஆகின்றோம் என்று சொல்கின்றீர்கள். உயர்ந்த பதவி அடைய வேண்டுமல்லவா? அரை கல்பமாக ஆத்மாக்கள் துடித்துக் கொண்டு இருந்தது. பாபா வாருங்கள், வந்து இராஜயோகம் கற்றுத் தந்து எங்களை பாவனம் ஆக்குங்கள். பாபா ஜாடையாக சொல்கின்றார் பாரதவாசிகள் தான் தேவி-தேவதைகளாக வணங்குபவர்களாக 84 ஜென்மம் அனுபவிப்பார் கள். யார் தேவி-தேவதைகளாக இருந்து பின்பு பக்தர்களாக இருக்கின்றார்களோ, முயற்சி செய்து அவர்களுக்குப் புரிய வைய்யுங்கள், பாபா வந்து எப்படி மூன்று தர்மம் ஸ்தாபனை செய்கின்றார், பிராமணன், சூரிய வம்சம், சந்திர வம்சம் மூன்று தர்மம் ஸ்தாபனை செய்கின்றார். பின்பு அரை கல்பம் எந்த தர்மமும் ஸ்தாபனை ஆகாது. பின்பு அரை கல்பம் எத்தனை மடங்கள், அநேக தர்மங்கள் ஸ்தாபனை ஆகின்றது, அரை கல்பம் ஒரே தர்மம் தான் இருக்கும் அதுவும் சங்கமயுகத்தில் தான் எதிர்காலத்திற்காக இராஜதானி ஸ்தாபனை ஆகின்றது. அதுவும் இந்த பழைய உலகத்தில் தான் தன்னுடைய தர்மத்தை ஸ்தாபனை செய்கின்றார். வேறு எந்த சக்தியும் இல்லை. பாபா எங்களை தன்னுடையவராக ஆக்கிக் கொண்டு சூரிய வம்சம், சந்திரவம்சம் குலத்தை ஸ்தாபனை செய்து மற்ற அனைத்தையும் வினாசம் செய்விக்கின்றார். அனைத்து ஆத்மாக்களும் சாந்திதாமத்திற்குச் சென்று விடுகின்றார்கள், நீங்கள் தான் சுகத்தில் வருகின்றீர்கள், அந்த நேரத்தில் எந்த துக்கமும் இல்லை, அதற்காக பாபாவை நினைப்பதற்கு உங்கள் புத்தியில் இந்த ஞானம் இருக்க வேண்டும். பாபா தான் ஞானக்கடலாக உள்ளார். அவர்தான் இந்த ஞானம் கொடுக்கின்றார் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். கடல் ஒருவர் தான். நீங்கள் உங்களை கடல் என்று சொல்ல முடியாது. நீங்கள் அவருக்கு உதவி செய்கின்றீர்கள் அதனால் உங்களை ஞானகங்கைகள் என்று சொல்கின்றார். கடலின் குழந்தைகள் காமச் சிதையில் அமர்ந்து எரிந்து விட்டீர்கள். அதனால் பதீதர்கள் ஆகிவிட்டீர்கள். இப்பொழுது நீங்கள் என்னை நினைத்து தான் பாவனம் ஆகின்றீர்கள். இந்த சிருஷ்டிச் சக்கரம் 4 பாகம் கொண்டது அதனால் தான் 4 யுகம் என்கின்றோம். இது சங்கமயுகம் கல்யாணகாரி யுகம். கும்பம் என்று சொல்கின்றோம். கும்பம் என்பதை திருவிழா என்றும் சொல்லப்படுகின்றது. நதிகள் எல்லாம் கடலில் வந்து கலக்கின்றது. ஆத்மா வந்து பரமாத்மாவை சந்திக்கின்றன. இதைத் தான் கும்பம் என்று சொல்லப்படுகின்றது. ஆத்மா, பரமாத்மாவை சந்திக்கும் விழாவைக் கூட நீங்கள் பார்க்கின்றீர்கள். நீங்கள் உங்களுக்குள் சந்திக்கும் செமினார் எல்லாம் செய்கின்றீர்கள். இதை கும்பவிழா என்று சொல்ல மாட்டார்கள். கடல் தன்னுடைய இடத்தில் அமர்ந்து உள்ளார். எங்கே இவர் உடல் இருக்கின்றதோ அங்கே தான் ஞானக்கடல் இருக்கின்றார். மற்றபடி நீங்கள் ஞான கங்கைகள் தங்களுக்குள் சந்தித்துக் கொள்கின்றீர்கள். நதிகளில் கூட சிறியது, பெரியது என்று இருக்குமல்லவா, அங்கே ஸ்நானம் செய்கின்றார்கள். கங்கை, யமுனை, சாஸ்வதி என்றெல்லாம் இருக்கின்றதல்லவா? டெல்லி யமுனை நதிக்கரையில் தான் சொர்க்கம் உருவாகின்றது. கிருஷ்ணபுரி உருவாகின்றது. டெல்லிக்குத் தான் பரிஸ்தான் என்று சொல்லப்படுகின்றது. இங்கு தான் லட்சுமி-நாராயணன் ஆட்சி ஏற்படுகின்றது. கிருஷ்ணரின் இராஜ்யம் என்று சொல்வதில்லை. இராதை கிருஷ்ணன் எப்பொழுது தம்பதிகள் ஆகின்றார்களோ அப்பொழுது தான் இராஜ்யம் செய்ய முடியும். இப்பொழுது குழந்தைகள் நீங்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கின்றீர்கள். மாயாவின் புயல் அதிகமாக வரும், இது எல்லையற்ற குத்துச்சண்டை ஒவ்வொரு வரும் ஐந்து விகாரங்களோடு யுத்தம் செய்கின்றீர்கள். நாம் நிரந்தரமாக பாபாவை நினைவு செய்ய வேண்டும் என்று விரும்புகின்றோம், ஆனால் மாயா நம்முடைய யோகத்தை பறக்கச் செய்துவிடுகின்றது. ஒரு விளையாட்டு கூட காட்டுகின்றார்கள் பரமாத்மா தன் பக்கம் இழுக்கின்றார், மாயா தன் பக்க இழுக்கின்றது. இது போல் ஒரு நாடகம் கூட தயாரித்துள்ளார்கள். சினிமாவின் ஆடம்பரம் இப்பொழுது தான் ஏற்படுகின்றது. உங்களுக்கு நாடகத்தின் அனுசாரமாகக் கூட புரிய வைக்க வேண்டியுள்ளது. நாடகத்தில் கூட மாற்றங்கள் ஏற்படுகின்றன. இது அனாதி அழியாத நாடகம் உருவாக்கப்பட்டுள்ளது. உருவானது, உருவாக்கப்பட்டது நடந்து கொண்டு இருக்கின்றது. யாராவது இறந்துவிட்டால் இவ்வளவு தான் அவர்கள் பார்ட் என்று உள்ளது, நாம் இதற்கு ஏன் கவலைப்பட வேண்டும்? நாடகம் தானே, உடலை விட்டுப் போன பின்பு வர முடியுமா என்ன? அழுவதால் என்ன பலன்? இந்த உலகத்தின் பெயரே துக்கதாமம் ஆகும். சத்திய யுகத்தில் மோகத்தை வென்ற இராஜாக்கள் இருப்பார்கள். இதைப் பற்றிய கதைகள் கூட உள்ளன. சத்தியயுகத்தில் மோகம் என்ற பெயரே இல்லை. இங்கே மனிதர்களுக்கு எவ்வளவு மோகம் உள்ளது. இறந்த வீட்டில் யாருக்காவது அழுகை வரவில்லை என்றாலும், அழுது கூட அவர்களை அழ வைத்து விடுவார்கள், மற்றவர்கள் இவர்கள் கவலைப்படுகின்றார்கள் என்று நினைக்க வேண்டும், கவலைப்படவில்லை என்றால் திட்டுவார்கள். பாரதத்தில் தான் இந்த பழக்கம் எல்லாம் உள்ளது. பாரதத்தில் தான் சுகம் இருந்தது, பாரதத்தில் அதிக துக்கம் உள்ளன. பாரதத்தில் தான் பகவான்-பகவதி இராஜ்ஜியம் செய்தார்கள். வெளிநாட்டவர்கள் பழைய படங்களை எல்லாம் மகிழ்ச்சியாக வாங்குகின்றார்கள். பழைய பொருளுக்கு மிகவும் மதிப்பு உள்ளது. அனைத்திலும் பழமையான சிவன் இங்கே வந்திருந்தார் அல்லவா, அவருக்கு எவ்வளவு பூஜை நடக்கின்றது. இப்பொழுதும் சிவபாபா வந்துள்ளார், நீங்கள் இப்பொழுது பூஜை செய்ய மாட்டீர்கள். அவர் வந்து போனதால் தான் அவருக்கு பூஜை செய்கின்றார்கள், நல்லது.இனிமையிலும் இனிமையான, தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு, தாய் தந்தையாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்தே.தாரணைக்கான முக்கியமான சாரம்:-

1) நாடகத்தின் ஞானத்தை புத்தியில் வைத்துக் கொண்டு கவலையற்றவர்களாக இருக்க வேண்டும் ஏனென்றால் அறிந்துள்ளீர்கள் உருவாக்கப்பட்ட நாடகம் இது மோக மற்றவர்களாக ஆக வேண்டும்.2) பாபா மூலமாக உங்களுக்கு குருதிசை ஏற்பட்டுள்ளது இதை கவனமாக வைத்துக் கொள்ள வேண்டும், இராகு திசை பட்டுவிடக் கூடாது. எந்த ஒரு கிரகம் பட்டாலும் அதை ஞான தானத்தால் அழித்து விட வேண்டும்.வரதானம் :

சக்தி சொரூப நினைவின் மூலமாக பதீத சம்ஸ்காரங்களை நாசம் செய்யக்கூடிய காளி ரூபம் ஆகுகநான் சர்வ சஸ்தரதாரி சக்த் ஆத்மாவாக உள்ளேன் என்று எப்பொழுதும் தன்னுடைய சொரூபத்தின் நினைவில் இருக்க வேண்டும். நான் பதீத பாவனி என் மேல் எந்த பதீத ஆத்மாவின் பார்வையின் நிழலும் கூட பட முடியாது. பதீத ஆத்மாவின் எண்ணமும் கூட வர முடியாது. அந்தளவு உங்களை நிறுத்தி  வைக்கும் சக்திசாலியாக இருக்க வேண்டும். மற்ற பதீத ஆத்மாக்களின தாக்கம் நம் மீது படுகினற்து என்றால், அதன் அர்த்தம் நாம் சக்திசாலியாக இல்லை என்பதாகும். சுயம் சம்ஹாரி ரூபத்தில் இருந்தால் யாரும் வேட்டையாட முடியாது. அப்படி காளி ரூபமாக ஆகிவிடுங்கள். யார் முன்னால் வந்து அப்படிப்பட்ட எண்ணம்செயதால் அவர்கள் மயக்கம் அடைந்து விட வேண்டும்.சுலோகன் :

இராயல் ரூப இச்சையின் (ஆசை) சொரூபம் பெயர், புகழ் மேலும் மரியாதை ஆகும்.***OM SHANTI***

Whatsapp Button works on Mobile Device only