01 July 2016

BK Murli 2 July 2016 Tamil

BK Murli July 2016 Tamil

02.07.2016    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்

இனிமையான குழந்தைகளே ! நீங்கள் விகாரங்களை தானம் செய்தால் இராகு திசை நீங்கிவிடும் கிரஹங்கள் நீங்கிவிடும்.கேள்வி:

விருட்சபதி பாபா, தன்னுடைய பாரதவாசி குழந்தைகளுக்கு, குருதிசை ஏற்படுவதற்கு என்ன நினைவுபடுத்துகின்றார்?பதில்:-

ஹே பாரதவாசி குழந்தைகளே, உங்களுடைய ஆதி சனாதன தேவி-தேவதா தர்மம் மிகவும் உன்னதமானது. நீங்கள் சர்வகுண சம்பன்ன, 16 கலை சம்பூர்ணதானவர்களாக இருந்தீர்கள். நீங்கள் கடலின் குழந்தைகள் காமவிகாரத்தில் போய் கருப்பாகி விட்டீர்கள், கிரஹனம் ஏற்பட்டுவிட்டது. இப்பொழுது நான் மீண்டும் உங்களை வெள்ளையாக்க வந்துள்ளேன்.பாட்டு:-

ஓம்நமச் சிவாயஓம் சாந்தி.

இது யாருடைய மகிமையைக் கேட்டீர்கள்? எல்லையற்ற தந்தையின் மகிமையைக் கேட்டீர்கள். உயர்ந்தவர் பரமபிதா பரமாத்மா ஆவார். லௌகீக தந்தையை அவ்வாறு சொல்ல மாட்டார்கள் அனைத்து ஆத்மாக்களுக்கும் ஆன்மீக தந்தை- உயர்ந்ததிலும் உயர்ந்தவர் என்பதை நீங்கள் குழந்தைகள் அறிந்துள்ளீர்கள். அவருடைய பெயர் தான் சிவன். பெயரும், ரூபமும் இல்லாமல் எந்த ஒரு பொருளும் இருப்பதில்லை. இந்த நேரத்தில் அனைவருக்கும் இராகுதிசை ஏள்பட்டுள்ளது, ஆகையால் தான் இந்த உலகம் இரும்பு யுகம் என்று சொல்லப்படுகின்றது. திசைகள் கூட உருவாகின்றது. குருதிசை, சுக்கரதிசையன்று சொல்கின்றோம். இப்பொழுது உங்கள் மேல் குருதிசை உருவாகியுள்ளது. உயர்ந்ததிலும், உயர்ந்தவர் பகவான் சிவபாபா என்று புகழ் பாடப் படுகின்றது. அவருடைய உண்மையான பெயர் சிவன். நான் விதை ரூபமாக, சைத்தன்யமாக இருக்கின்றேன் என்று பாபாவே புரிய வைக்கின்றார். அவரை சத்-சித்-ஆனந்தம் என்றும் சொல்கின்றோம். அவர் சுகக்கடலாக இருக்கின்றார், ஆனந்தக் கடலாக இருக்கின்றார், அமைதிக்கடலாக இருக்கின்றார். இந்த அனைத்து மகிமைகளும் அந்த ஒருவருக்குத் தான். பாரதவாசிகள் மகிமை பாடுகின்றார்கள். ஆனால் அர்த்தம் ஒன்றும் புரியவில்லை. ஒரேயடியாக கல் புத்தியாக ஆகிவிட்டார்கள். கல் புத்தியாக யார் ஆக்கினார்? இராவணன்! சத்தியயுகத்தில் நீங்கள் பாரஸ் புத்தியாக இருந்தீர்கள், இன்றிலிருந்து 5 ஆயிரம் வருடத்திற்கு முன்பு இந்த பாரதம் பாரஸ்புரியாக இருந்தது. அப்பொழுது தேவி-தேவதைகள் இருந்தார்கள். பாரதம் தான் அழியாத கண்டம் என்று புகழ் பாடப்படுகின்றது. பாரதத்தில் தான் பாரஸ் புத்தி தேவதைகள் இருந்தார்கள், அவர்களே இப்பொழுது கல் புத்தி பதீதர்களாகி விட்டார்கள். பதீதர்களாக எப்படி ஆகினார்கள், என்பதனை பாபா புரிய வைக்கின்றார். துவாபரயுகத்திலிருந்து காமவிகாரத்தில் அமர்ந்து கருப்பாகி விட்டார்கள். காமவிகாரத்தில் பஸ்மம் ஆகி விட்டார்கள். அதில் முக்கியமாக பாரதவாசிகளின் விஷயமாகும். பாரதத்தில் பாரஸ் புத்தி தேவதைகள் ஆட்சி இருந்தது, அதில் தேவி-தேவதைகள் இருந்தார்கள், அதை விஷ்ணுபுரி இராமஇராஜ்ஜியம் என்று சொல்லப்படுகின்றது. இதனை பாபா தான் வந்து சொல்கின்றார். இனிமையிலும்-இனிமையான செல்லமான குழந்தைகளே ! நீங்கள் சத்தியுகத்தில் இருந்தீர்கள், சர்வகுண சம்பன்னமாக இருந்தீர்கள். இது உங்கள் மகிமை, அங்கு விகாரம் என்பதே இல்லை. துவாபர யுகத்திலிருந்து இராவணன், 5விகாரங்களின் இராஜ்யம் ஆரம்பம் ஆகின்றது. இராம இராஜ்யத்திலி ருந்து இராவண இராஜ்யம் ஆரம்பம் ஆகின்றது. இப்பொழுது கிரஹணம் ஏற்பட்டுள்ளது. முற்றிலும் பாரதம் கருப்பாகிவிட்டது. குரு திசையில் மிகவும் நன்றாக இருந்தது. பாரதத்தில் குரு திசை சத்திய யுகத்தில் இருந்தது. பின்பு த்ரேதாயுகத்தில் சுக்கர திசையில் இரண்டு கலைகள் குறைந்து விட்டது. அதற்குத் தான் வெள்ளியுகம் என்று சொல்லப்படுகின்றது. பின்பு துவாபர யுகம், கலியுகம் வருகின்றது. ஏணிப்படியில் இறங்கிக் கொண்டே வந்தீர்கள் சனிதிசை ஏற்பட்டு விட்டது. இப்பொழுது அனைவரின் மீதும் இராகு திசை உள்ளது. சூரியன் மீதும் கிரஹணம் ஏற்பட்டால் தானம் கொடுங்கள், கிரஹனம் நீங்கிவிடும் என்று கூறுவார்கள்.இப்பொழுது ஆன்மீகத் தந்தை குழந்தைகளுக்கு இது தான் ஆன்மீக ஞானம் என்று புரிய வைக்கின்றார். இது ஒன்றும் சாஸ்த்திர ஞானம் கிடையாது. சாஸ்த்திர ஞானத்தை பக்தி மார்க்கம் என்று சொல்லப்டுகின்றது. சத்தியயுகம்-த்ரேதா யுகத்தில் பக்தி இருப்பதில்லை. ஞானம் மேலும் பக்தி, பின்பு தான் வைராக்கியம் அப்படி என்றால் இந்த உலகத்தை விட வேண்டி வரும். இது சூத்திர வர்ணம், விராட ரூபத்தில் காட்டுகின்றார்கள் அல்லவா பிராமணன், தேவதை, சத்திரியன், வைஷ்யன் என்று பாரதத்தில் தான் இந்தக் கதை உள்ளது. விராட ரூபத்தை உருவாக்குகின்றார்கள். கல் புத்தியாக இருப்பதால் புரிந்து கொள்வதில்லை. கல் புத்தியாக ஏன் இருக்கின்றார்கள், ஏனெனில் பதீதமானவர்கள் ஆனதால், பாரதவாசிகள் தான் பாரஸ் புத்தியாக இருந்தார்கள். சம்பூர்ண நிர்விகாரி ஆக இருந்தார்கள். இன்றிலிருந்து 5 ஆயிரம் வருடத்திற்கு முன்னால் பாரதம் சொர்க்கமாக இருந்தது. வேறு எந்த கண்டமும் கிடையாது. இதை பாபா தான் புரிய வைக்கின்றார் இந்த இராஜயோகத்தை யார் கற்றுக் கொடுக்கின்றார்? சிவாச்சாரி. ஞானக்கடல் எந்த மனிதர்களையும் ஞானக்கடல், பதீத-பாவனன் என்று சொல்ல முடியாது. அனைவரையும் விடுவிக்கக் கூடியவர் ஒரு பாபா தான். பாபா சுயம் வருகின்றார். துக்கத்தில் இராவணனிடமிருந்து விடுவிக்கின்றார். பின்பு வழிகாட்டி ஆகி அனைவரையும் அழைத்துச் செல்கின்றார். என்னைப் போல வழிகாட்டி வேறு யாரும் ஆக முடியாது. கடவுள் தந்தை தான் விடுவிப்பவர், வழிகாட்டி ஆனந்தக்கடல் என்றும் அவருக்குச் சொல்லப்படுகின்றது. அவர்தான் அனைவர் மீதும் கருணை காட்டுகின்றார். ஏனென்றால், அனைவரும் கடலின் குழந்தைகள் காமவிகாரத்தில் அமர்ந்து எரிந்து விட்டார்கள். அதிலும் முக்கியமாக பாரதத்தின் விசயமாகும். நீங்கள் தான் 16 கலை சம்பன்ன, சம்பூர்ண நிர்விகாரி ஆக இருந்தீர்கள். இப்பொழுது காமச் சிதையில் அமர்ந்து என்ன ஆகிவிட்டீர்கள்? இப்பொழுது பாபா வந்துவிட்டார். இந்த விருக்ஷபதி பாபா வந்து மனிதர்களுக்கு குருதிசையை உருவாக்குகின்றார். முக்கியமாக பாரதம், மற்றும் முழு உலகத்திற்கும் இப்பொழுது இராகு திசை ஏற்பட்டுள்ளது. நான் வந்து தான் பாரதம், மற்றும் முழு உலத்திற்கும் அனைவருக்கும் கதி-சத்கதி கொடுக்கின்றேன் என்று பாபா சொல்கின்றார். நீங்கள் பாரஸ் புத்தியாக ஆவற்காக இங்கு வந்துள்ளீர்கள். மிகவும் அன்பானவர் பாபா- அனைத்து நாயகிகளுக்கும் அவர் ஒருவர் தான் நாயகனாக உள்ளார். அனைத்து தேசத்தையும் ஒன்று சேர்க்கின்றார், ஏனெனில் அவர் அனைவருக்கும் தந்தை அல்லவா? பாரதத்தில் சிவனுடைய கோவில்கள் அதிகமாக உள்ளன, அவர் இருக்கும் இடத்தைத் தான் சிவாலயம் என்று சொல்லப்படுகின்றது. சத்தியயுகத்தில் தேவி-தேவதா தர்மம் இருந்தது. ஆனால் அந்த தர்மம் எப்பொழுது இருந்தது, அவர்களுடைய இராஜ்ஜியம் எப்பொழுது இருந்தது இது யாருக்கும் தெரியாது. சத்தியயுகத்தின் ஆயுள் மிக நீளமாக எழுதிவிட்டார்கள். உங்கள் மேல் குரு திசை அமருகின்றது 21 ஜன்மத்திற்காக என்று பாபா புரிய வைக்கின்றார். விருக்ஷபதி, ஞானக்கடல், பதீத பாவனன் என்றெல்லாம் அவரை அழைக்கின்றார்கள். நீ தாய்-தந்தை, நாங்கள் உங்கள் குழந்தைகள் என்றெல்லாம் புகழ் பாடுகின்றார்கள். நிச்சயம் நாம் சத்திய யுகத்தில்-திரேதா யுகத்தில் சுகம் நிறைந்தவர்களாக இருந்தோம். தந்தையை சொர்க்கத்தைப் படைப்பவர் என்று புகழ்பாடுகின்றோம் அப்படியென்றால் நாம் சொர்க்கத்தில் இருந்திருப்போம் அல்லவா! நீங்கள் அனைவரும் சொர்க்கவாசிகளாக இருந்தீர்கள், இப்பொழுது நரகவாசிகளாக ஆகிவிட்டீர்கள் என்று பாபா புரிய வைக்கின்றார். பாரதத்தில் தான் ஆதி சனாதன தேவி-தேவதா தர்மம் இருந்தது. பின்பு கிறிஸ்தவ தர்மம் வரும் போது கிறிஸ்தவ தர்மத்தைச் சேர்ந்தவர்கள் வருகின்றார்கள். நீங்கள் தேவி-தேவதா தர்மத்தைச் சேர்ந்தவர்கள் தன்னுடைய தர்மத்தை ஏன் மறந்து விட்டீர்கள் என்று பாபா கேட்கின்றார். நீங்கள் தான் தேவி- தேவதா தர்மத்தில் இருந்தீர்கள்.உங்களுடையது தான் சிரேஷ்டமான தர்மம், கர்மமாக இருந்தது என்று பாபா நினைவு படுத்துகின்றார். இப்பொழுது நீங்கள் கீழான, பாவி, ஏழையாகி விட்டீர்கள், நீங்கள் தேவதைகளுக்குப் பூஜாரியாக ஆகிவிட்டீர்கள், பின்பு தன்னை இந்துக்கள் என்று ஏன் சொல்லிக் கொள்கின்றீர்கள்? பாரதத்திற்கு என்ன நிலமை ஏற்பட்டு விட்டது. தேவதை தர்மத்தில் இருந்த நீங்கள் விகாரி ஆனதால் தன்னை தேவதை என்று சொல்வதில்லை. இப்பொழுது இந்த பதீத உலகம் முடிவில் உள்ளது, மகாபாரத யுத்தம் முன்னால் நின்று கொண்டு இருக்கின்றது என்று பாபா சொல்கின்றார். பகவானுடைய மகாவாக்கியம்- நான் உங்களுக்கு சத்தியயுகத்திற்காக இராஜயோகம் கற்றுக் கொடுக்கின்றேன். பகவான் ஒருவர் தான், நாம் அவரின் குழந்தைகள் சாலிகிராம். நீங்கள் பூஜிக்கத் தகுதியானவர்களாக இருந்தீர்கள் பின்பு நீங்களே பூஜாரி பக்தர்கள் ஆகிவிட்டீர்கள் என்று பாபா சொல்கின்றார். இப்பொழுது மீண்டும் பூஜிக்கத் தகுதியானவர்கள் ஆவதற்காக ஞானம் கேட்கின்றீர்கள். பின்பு துவாபர யுகத்தில் இருந்து மீண்டும் பூஜிக்கத் தகுதியான நிலையிலிருந்து பூஜாரிகளாக ஆகிவிடுகின்றீர்கள். நீங்கள் 84 ஜென்மம் முழுமையாக எடுக்கின்றீர்கள். 84 ஜென்மம் யார் முழுமையாக எடுக்கின்றார்களோ அவர்களே இப்பொழுது வந்து பிரம்மா குமாரி, பிரம்மா குமார்கள் ஆகின்றார்கள். பிரம்மா மூலமாக ஆதி சனாதன தர்மம் ஸ்தாபனை செய்யப்பட்டுள்ளது என்று புகழ் பாடப்பட்டுள்ளது. பிரஜாபிதா உள்ளார் என்றால், அதிக குழந்தைகளும் இருப்பார்கள் தானே ! அதுவும் அவசியம் இங்குதான் இருப்பார்கள். எத்தனை பிரஜைகள் உள்ளார்கள். இந்த பிராமணர்கள் தான் மீண்டும் தேவதைகள் ஆக வேண்டும். பாபா வந்து சூத்திரனிலிருந்து மாற்றி பிராமண தர்மத்தை ஸ்தாபனை செய்கின்றார். இந்த சங்கமயுகத்தில் தான் ஆதி சனாதன தேவி-தேவதா தர்ம ஸ்தாபனை ஏற்படுகின்றது. இது தான் கல்யாணகாரி சங்கமயுகம். இந்த யுகத்தைத் தான் கல்யாணகாரி என்று சொல்லப்படுகின்றது. இந்த வினாசத்திற்குப் பிறகு தான் சொர்க்கத்தின் கதவு திறக்கப்படுகின்றது. நீங்கள் இங்கே சொர்க்கவாசியாக ஆவதற்காக அதாவது விஷ்ணுபுரி செல்வதற்காக வந்துள்ளீர்கள். குழந்தைகளான உங்களுக்கு இப்பொழுது அழிவற்ற குருதிசை ஏற்பட்டுள்ளது. 16 கலையை தான் சம்பூர்ணம் என்று சொல்லப் படுகின்றது. பின்பு இரண்டு கலைகள் குறைந்துவிடுகின்றது. இதனை சுக்கர திசை என்று சொல்லப்படுகின்றது. சத்தியுகத்தில் குருதிசை பின்பு திரேதா யுகத்தில் சுக்கரதிசை என்று சொல்லப்படுகின்றது. பல பிறவிகளாக தலைகீழான திசைகள் வந்து கொண்டே தான் இருக்கின்றது. இப்பொழுது பாபா மூலமாக குருதிசை ஏற்படுகின்றது. இவர் எல்லையற்ற தந்தை ஞானக்கடல், பதீத-பாவனன் ஆவார். அவர்தான் உங்கள் தந்தையும் கூட, சத்குருவாகவும் கூட இருக்கின்றார். மற்ற அனைவரும் பொய்யானவர்கள், யாருக்கும் சத்கதி தர முடியாது. இதை விகாரமான விஷமான உலகம் என்று சொல்லப்படுகின்றது. அது விகாரமற்ற உலகம் என்று சொல்லப் படுகின்றது. இப்பொழுது இந்த விகார உலகத்தில் அனைவரும் துக்கம் நிறைந்தவர்களாக உள்ளார்கள். சண்டை, அடிதடி என்று என்ன-என்னவெல்லாம் நடக்கின்றது, இதைத்தான் இரத்தத்தை உரியும் அநீதிகள் என்று சொல்லப்படுகின்றது. என்ன,என்ன தவறுகள் செய்கின்றார்கள். ஒரே அணுகுண்டு போட்டால் அடுத்த வினாடியே அனைவரும் அழிந்துவிடுவார்கள். இப்பொழுது அதே சங்கமயுகம் நடக்கின்றது. தேவதைகளான உங்களுக்காக புதிய உலகம் வேண்டும். அதனால் இனிமையிலும், இனிமையான குழந்தைகளே! மன்மனாபவ என்ற மந்திரத்திரத்தில் இருங்கள் என்று பாபா சொல்கின்றார். இதை எந்த அப்பா சொல்கின்றார்? சிவபாபா. அவர் நிராகாரமானவராக இருக்கின்றார். நீங்களும் நிராகானமானவர்கள் தான், ஆனால் நீங்கள் அடுத்தடுத்து ஜென்மம் எடுக்கின்றீர்கள், நான் வருவதில்லை. இந்த நேரத்தில் அனைவரும் பதீதர்கள், ஒருவர் கூட பாவனமானவர்கள் கிடையாது. பதீதம் ஆகவே வேண்டும். சதோ-ரஜோ-தமோ நிலையில் இறங்கித்தான் ஆக வேண்டும். இந்த நேரம் முழு மரமும் ஆடும் நிலைக்கு வந்துவிட்டது. உலகம் முற்றிலும் பழையதாகிவிட்டது. இப்பொழுது மீண்டும் அதனை புதியதாக்க வேண்டும். பதீத உலகில் எத்தனை மனிதர்கள் பாருங்கள். பாவன உலகத்தில் மிகவும் குறைவான பேர் தான் இராஜ்ஜியம் செய்கின்றார்கள். ஒரே ஒரு தர்மம் தான் இருந்தது. பாரதத்தைத் தான் சொர்க்கம் என்று சொல்லப்படுகின்றது. ஜாடிக்குள் தான் சந்திரன், ஜாடிக்குள் தான் சூரியன் என்று பாடப்படுகின்றது. சத்தியயுகத்தில் 9 லட்சம் பேர் இருப்பார்கள், பின்பு தான் அதிகமாகின்றார்கள். முதலில் சின்ன பூ செடியாக இருந்தது. இப்பொழுது முட்கள் நிறைந்த பெரிய காடாகிவிட்டது. டெல்லியில் மொகலாய தோட்டம் பாருங்கள் எவ்வளவு பெரியதாக உள்ளது. அதைவிட பெரிய தோட்டம் வேறு எதுவும் இல்லை. காடு கூட எவ்வளவு பெரியதாக உள்ளது. சத்தியுகத்தில் தோட்டம் கூட மிகவும் சிறியதாக இருக்கும். பிறகு வளர-வளர பெரியதாகிவிடுகின்றது. இப்பொழுது முட்கள் நிறைந்த காடாகிவிட்டது. இராவணன் வந்ததால் முள்ளாகி விட்டார்கள். இது முள்ளான காடு. தங்களுக்குள் சண்டை போட்டுக் கொண்டு கொள்கின்றார்கள். எவ்வளவு கோபம் வருகின்றது. குரங்கை விட கீழான நிலை என்று சொல்லப்படுகின்றது. என்னுடைய கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளே ! உங்கள் மீது இப்பொழுது குருதிசை ஏற்பட்டுள்ளது என்று பாபா சொல்கின்றார். இப்பொழுது தானம் செய்யுங்கள் கிரஹணம் நீங்கிவிடும். சம்பூர்ண நிர்விகாரி நீங்கள் இங்கே தான் ஆக வேண்டும். பின்பு இந்த உடலை விட்டுவிட்டு சிவாலயம் என்று சொல்லப்படுகின்றது. கலியுகத்தை வைஷ்யாலயம் என்று சொல்லப் படுகின்றது. இந்த வைஷ்யாலயத்தை இராவணன் ஸ்தாபனை செய்தார். பதீத நிலையிலிருந்து பாவன நிலையை எப்படி அடைவீர்கள் என்று பாபா கேட்கின்றார்? என்ன, த்ரிவேணி, அல்லது கங்கையில் குளிப்பதால் பாவனம் ஆகிவிடுவீர்களா? இது ஜென்ம-ஜென்மமாக செய்து வருகின்றீர்கள். கோடிக்கணக்கான மனிதர்கள் செய்து வருகின்றார்கள், ஏனென்றால் தன்னை பதீதர்கள் என்று நினைக்கின்றார்கள். இப்பொழுது பாரஸ்நாத் உங்களை பாரஸ் புத்தியாக ஆக்கிக் கொண்டு இருக்கின்றார்கள், அதனால் அப்படிப்பட்ட பாரஸ்நாத் பாபாவை நீங்கள் எவ்வளவு அன்பாக நினைக்க வேண்டும். நல்லது.இனிமையிலும் இனிமையான செல்லமான குழந்தைகளுக்கு, தாய்-தந்தை பாப்தாதாவின் அன்பான நினைவுகள் மேலும் காலை வணக்கங்கள். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே செய்கின்றார்.தாரனைக்கான முக்கிய சாரம்:-

1) இந்தமுள்ளான காட்டிலிருந்து மலரான தோட்டத்திற்குச் செல்வதற்காக விகாரம் என்ற முள்ளை விட வேண்டும். பாரஸ் ஆகுவதற்காக மிகவும் அன்பாக நினைவு செய்ய வேண்டும்.2) இந்த கல்யாணகாரி சங்கமயுகத்தில் சூத்திரனிலிருந்து பிராமணன் ஆகுவதற்கு முயற்சி செய்ய வேண்டும். திசை நீங்குவதற்காக விகாரங்களை தானம் செய்ய வேண்டும்.வரதானம்:

புருஷார்தம் என்ற சப்தத்தை உண்மையான வழியில் பயன்படுத்தி, சதா முன்னேற்றம் அடையக் கூடிய சிரேஷ்ட புருஷார்த்தி பவ !சில நேரம் புருஷார்த்தம் என்ற வார்த்தை கூட தோல்வி அடைந்து வெற்றியை இழக்கச் செய்வதற்கு தரும் சாக்கு போக்காகி விடுகின்றது. எனவே எப்பொழுதாவது தவறு செய்துவிட்டால், இப்பொழுது நாம் புருஷார்த்தி தானே, என்று சொல்லிவிடுகின்றார்கள். ஆனால் உண்மையான புருஷார்த்தி ஒருபோதும் தோல்வியை அடையமாட்டார். ஏனென்றால் புருஷார்த்தி என்றால் உண்மையான அர்த்தம் தன்னை புருஷ் அதாவது ஆத்மா என்று நினைத்து நடப்பதாகும். அப்படிப்பட்ட ஆத்மீக ஸ்த்தியில் இருக்கக் கூடிய புருஷார்த்தி சதா இலட்சியத்தை முன்னால் வைத்து செல்வார்கள். அவர்கள் ஒருபோதும் நிற்க மாட்டார்கள். ஊக்கம், உற்சாகத்தினை விடமாட்டார்கள்.சுலோகன்:

மாஸ்டர் சர்வசக்திவான் என்ற நினைவில் இருங்கள், இந்த நினைவு தான் நான் எஜமானன் என்ற நினைவு தரும்.***OM SHANTI***

Whatsapp Button works on Mobile Device only