17 August 2016

BK Murli 18 August 2016 Tamil

BK Murli 18 August 2016 Tamil

16.08.2016    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்

இனிமையான குழந்தைகளே! விசால புத்தி உடையவராக ஆகி, பெரியவர்களின் அபிப்ராயங்களைப் பெற்று, அநேக ஆத்மாக்களுக்கு நன்மை செய்யுங்கள். அவர்களிடம் மண்டபம் ஆகியவை வாங்கி, நிறைய கண்காட்சிகளை ஏற்பாடு செய்யுங்கள்.

 

கேள்வி:

இப்பொழுது உங்களுக்கு வந்துள்ள எந்த ஒரு ஸ்மிருதியை (எண்ணம்) நினைவு செய்து கொண்டே இருந்தீர்கள் என்றால் ஒரு பொழுதும் துக்கம் அடைய மாட்டீர்கள்?

 

பதில்:

நாம் பூஜைக்குரிய இராஜாவாக இருந்தோம். பிறகு ஏழையாக ஆனோம் என்பது இப்பொழுது நினைவிற்கு வந்துள்ளது. இப்பொழுது மீண்டும் பாபா நம்மை இராஜாவாக ஆக்கிக் கொண்டிருக்கிறார். பாபா இப்பொழுது நமக்கு முழு உலகத்தின் செய்தியைக் கூறுகிறார். நாம் உலகத்தின் சரித்திரம் மற்றும் பூகோளத்தை அறிந்து விட்டுள்ளோம். இதே ஸ்மிருதிகளை நினைவு செய்துக் கொண்டே இருந்தீர்கள் என்றால், ஒரு பொழுதும் தங்களை துக்கமானவர்களாக நினைக்க மாட்டீர்கள். எப்பொழுதும் குஷியர்க இருப்பீர்கள்.

 

பாடல்:

கண்ணில்லாதவர்க்கு வழி கூறுங்கள் பிரபுவே..

 

ஓம் சாந்தி.

இனிமையிலும் இனிமையான அருமையான ஆன்மீகக் குழந்தைகள் பாட்டைக் கேட்டீர்கள். தந்தையை சந்திப்பது அல்லது தந்தையிடமிருந்து ஆஸ்தியைப் பெறுவது மிகவும் சுலபம் என்பதை குழந்தைகள் புரிந்துள்ளார்கள். தந்தையிடமிருந்து ஒரு நொடியில் ஜீவன் முக்தியின் ஆஸ்தி கிடைக்கிறது. ஜீவன் முக்தி என்றால் சுகம், சாந்தி, செல்வம் ஆகியவற்றின் ஆஸ்தி. இப்பொழுது ஜீவன் முக்தி மற்றும் ஜீவன் பந்தனம் என்ற இரு வார்த்தைகள் உள்ளன. இச்சமயம் பக்தி மார்க்கம் மற்றும் இராவண இராஜ்யத்தின் காரணமாக எல்லோரும் ஜீவன் பந்தனத்தில் உள்ளார்கள் என்பதை குழந்தைகள் அறிந்துள்ளார்கள். தந்தை வந்து பந்தனத்திலிருந்து விடுவிக்கிறார். ஆஸ்தி அளிக்கிறார். எப்படி பையன் பிறந்த உடனேயே வாரிசு பிறந்து விட்டான் என்று தாய், தந்தை, நண்பர்கள், உறவினர்கள் ஆகியோர் புரிந்து கொண்டு விடுகிறார்கள். எப்படி இது புரிந்து கொள்வது சுலபமோ, அதே போல அதுவும் சுலபம் ஆகும். பாபா முந்தைய கல்பத்தைப் போல நீங்கள் எங்களுக்கு வந்து கிடைத்துள்ளீர்கள் என்று குழந்தைகள் கூறுகிறார்கள். உங்கள் மூலமாகத் தான் சுலபமாக ஆஸ்தி பெறுவதற்கான வழி கிடைத்துள்ளது. புதிய சிருஷ்டியின் படைப்புக்கர்த்தா பகவான் தான் ஆவார் என்பதையோ ஒவ்வொவரும் அறிந்துள்ளார்கள். அவர் நம்மை அலைவதிலிருந்து காப்பாற்றுகிறார். நேற்றைக்கு பக்தி செய்து கொண்டிருந்தோம். இன்றைக்கு தந்தையிடமிருந்து எளிய ஞானம் மற்றும் இராஜயோகத்தின் வழி கிடைத்துள்ளது. இரண்டு தந்தை இருக்கிறார்கள் என்று நாங்கள் பி.கே. மூலமாக கேட்டோம் என்று குழந்தைகள் தங்கள் அனுபவத்தைக் கூறுகிறார்கள். இரண்டு தந்தை இருக்கிறார்கள் என்பதை உங்களைத் தவிர வேறு யாரும் வாயால் கூற முடியாது. உங்களுடைய ஒவ்வொரு விஷயமும் அதிசயமானதாகும். யார் இந்த இடத்தைச் சேர்ந்தவர்களோ அவர்களுக்கு சட்டென்று நினைவிற்கு வந்து விடும். இப்பொழுது நினைவிற்கு வருகிறது. ஆம், நினைவிற்கு கொண்டு வந்தவர்களைக் கூட மாயை ஏதாவதொரு நேரத்தில் பலமாக ஓங்கி அறைந்து மறக்க வைத்து விடுகிறது. இதில் குழந்தைகள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தந்தை நினைவூட்டியே இருக்கிறார். தூய்மையின் கங்கணம் கூட முழுமையாக கட்ட வேண்டும். ரட்சாபந்தன் பற்றிய இரகசியம் என்ன என்பதையும் இப்பொழுது நீங்கள் அறிந்துள்ளீர்கள். யார் இந்த உறுதியை எடுக்குமாறு செய்வித்தது? காமமோ மகா எதிரி ஆகும். நான் ஒரு பொழுதும் பதீதமாக ஆக மாட்டேன் என்று என்னிடம் உறுதி எடுங்கள். மேலும் என்னை நினைவு செய்துக் கொண்டே இருந்தீர்கள் என்றால், அரை கல்பத்தின் பாவங்கள் எரிந்து முடிந்து போய் விடும். தந்தை உத்தரவாதம் அளிக்கிறார். ஆனால் இதுவோ குழந்தைகள் புரிந்து கொண்டும் இருக்கிறார்கள் - தந்தை உத்திரவாதம் அளிக்கிறார். இந்த விஷயம் சரி தானே? பொற்கொல்லன் கூட நான் பழைய நகையை புதியதாக ஆக்குவேன் என்று உத்தவரவாதம் என்ன கொடுப்பார்? அவருடைய வேலையே இது தான். நெருப்பில் போடுவதால் அவசியம் அது உண்மையான தங்கமாக ஆகியே விடும். எனவே ஆத்மாவில் கூட துரு படிந்துள்ளது என்று தந்தை புரிய வைக்கிறார். எப்படி சதோ ரஜோ தமோவில் வருகிறீர்கள்? இது மிகவும் சுலபமானதாகும். படங்கள் கூட எதற்காக அமைக்கப்பட்டுள்ளன என்றால், அதன் மூலம் சுலபமாகப் புரிய வைக்க முடியும். பல்கலைக்கழகம் கல்லூரிகள் ஆகிய இடங்களில் கூட அநேக விதமான வரைபடங்கள் இருக்கும் அல்லவா? உங்களுடையதும் இது வரைபடம் ஆகும். நீங்கள் நல்ல முறையில் எவரொருவருக்கும் புரிய வைக்கலாம். ஞானக் கடல் பதீத பாவன தந்தை தான் வந்து இந்த வழியைக் கூறுகிறார். வேறு யாருமே பதீதர்களை பாவனமாக ஆக்க முடியாது. கண்ணில்லாத துக்கமுடைய மனிதர்களாக இருக்கிறார்கள். முதல் இரண்டு யுகங்களில் துக்கம் இருப்பதில்லை என்பதை குழந்தைகளாகிய நீங்கள் அறிந்துள்ளீர்கள். பக்தியும் இருப்பதில்லை. அது இருப்பதே சொர்க்கமாக ! பாரதத்தினுடைய இந்த நேரத்தின் மனிதர்கள் மற்றும் பாரதத்தினுடைய பழைமையான மனிதர்களுக்கிடையே வேற்றுமை உள்ளது அல்லவா? ஆனால் இதை வேறு யாரும் புரிந்து கொள்வதில்லை. எவ்வளவு பூஜை நடக்கிறது. எவ்வளவுக் கெவ்வளவு யார் செல்வந்தராக இருக்கிறார்களோ அந்த அளவிற்கு தேவி தேவதைகளுக்கு நல்ல நகைகள் அணிவிக்கிறார்கள். பாபா சுயம் அனுபவம் உடையவர் ஆவார். மும்பையில் இருக்கும் இலட்சுமி நாராயணரின் கோவிலின் டிரஸ்டி இலட்சுமி நாராயணருக்காக வைரங்களின் மாலை தயார் செய்வித்திருந்தார். பாபாவிற்கு அந்த டிரஸ்டியின் பெயர் கூட நினைவிருக்கிறது. முதலில் சிவ பாபாவின் கோவில் கட்டினார். பின் நன்றாக அலங்காரம் செய்தார். பிறகு தேவதைகளினுடையதை அமைத்தார். ஆக, இலட்சுமி நாராயணர் ஆகியோருக்கும் எவ்வளவு நகைகள் அணிவித்தார். அச்சமயம் எவ்வளவு செல்வம் இருந்திருக்கக் கூடும். கஜினி முகம்மது எவ்வளவு ஒட்டகங்களில் நிரப்பிக் கொண்டு சென்று விட்டார் . பாரதத்தில் எவ்வளவு ஏராளமான செல்வம் இருந்தது. இப்பொழுது நீங்கள் சரியான முறையில் புரிந்துள்ளீர்கள். நமது பாரதம் என்னவாக இருந்தது. நமது பாரதத்தில் குபேரரின் கஜானா இருந்தது. வைரம் வைடூரியங்களின் கோவில்கள் அமைத்துக் கொண்டிருந்தனர். இப்பொழுது அந்த பொருட்கள் இல்லை. எல்லாமே கொள்ளையடித்துக் கொண்டு போய் விட்டார்கள். இப்பொழுதோ என்ன நிலைமை ஆகிவிட்டது.

 

நீங்கள் தான் பூஜிக்கத்தக்க செல்வந்தர்களாக இருந்தீர்கள். பிறகு நீங்களே 84 பிறவிகள் எடுத்து முழுமையாக ஏழையாகி உள்ளீர்கள். இப்பேர்ப்பட்ட விஷயங்களை அடிக்கடி நினைவு செய்ய வேண்டும். அப்பொழுது ஒரு பொழுதும் நீங்கள் தங்களை துக்கமுடையவர்களாக நினைக்க மாட்டீர்கள். நாம் பாபாவிடம் என்ன எடுத்துக் கொண்டிருக்கிறோம் என்று மனதில் நினைத்துக் கொண்டே இருப்பீர்கள். பாபா வந்து நமக்கு முழு உலகத்தின் சமாச்சாரத்தைக் கூறுகிறார். இந்த உலகத்தின் சரித்திரம் பூகோளம் பற்றி யாருக்குமே தெரியாது. முதலில் ஒரு தர்மம், ஒரு இராஜ்யம், ஒரே வழி, ஒரு பாஷை இருந்தன என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். எல்லோரும் சுகமுடையவர்களாக இருந்தார்கள். பின்னால் இது போல தங்களுக்குள் சண்டையிட முற்பட்டார்கள் மற்றும் பாரதம் துண்டு துண்டாக ஆகியது. முதலில் அவ்வாறு இருக்கவில்லை. அங்கு எந்த ஒரு துக்கமும் இருக்க வில்லை. நோய் நொடியின் பெயர் அடையாளமே இருக்கவில்லை. அதன் பெயரே சொர்க்கம் என்பதாகும். உங்களுக்கு தங்களது நினைவு வந்து விட்டுள்ளது. உண்மையில் கல்ப கல்பமாக நமக்கு மறதி ஆகிறது. பிறகு ஸ்மிருதியில் வருகிறது. படைப்பவர் மற்றும் படைப்பை மறந்து விட்டது தான் முதலில் ஏற்பட்ட ஒரே தவறாகும். இப்பொழுது நீங்கள் முதல், இடை, கடையை அறிந்துள்ளீர்கள். சத்யுகத்தில் கூட இந்த ஞானம் இருக்காது. பின் பரம்பரையாக எப்படி நடக்க முடியும். இச்சமயத்தில் முக்கியமாக ராஜாக்கள் தான் இருப்பார்கள். ரிஷி முனிவர்கள் இருப்பார்களா என்ன? அவர்கள் துவாபரத்திலிருந்து வருகிறார்கள். அவர்கள் இராஜாக்களின் ஆதாரத்தில் நடக்கிறார்கள். எங்களுக்கு படைப்பவர் மற்றும் படைப்பு பற்றி தெரியாது என்று கூறுகிறார்கள். சுயம் இந்த இராஜாக்களுக்குக் கூட தெரியாது. இந்த உலகத்தில் யாருக்குமே இந்த ஞானம் பற்றித் தெரியாது. இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் அறிவாளியாகி உள்ளீர்கள். இலட்சுமி நாராயணரின் கோவிலை அமைப்பவர் களுக்கு நீங்கள் எழுதலாம். இத்தனை இலட்சக்கணக்கான ரூபாய்கள் செலவு செய்து கோவில் கட்டியுள்ளீர்கள். ஆனால் அவர்களது வாழ்க்கைச் சரித்திரம் பற்றி உங்களுக்குத் தெரியுமா? இவர்கள் இராஜ்யத்தை எப்படி அடைந்தார்கள்? பிறகு எங்கு சென்று விட்டார்கள்? இப்பொழுது எங்கே இருக்கிறார்கள்? நாங்கள் உங்களுக்கு எல்லா இரகசியங்களையும் கூற முடியும், இது போல அவர்களுக்கு நீங்கள் எழுதலாம். குழந்தைகளாகிய நீங்களோ ஒவ்வொருவருடைய வாழ்க்கை சரித்திரத்தையும் அறிந்துள்ளீர்கள். எனவே ஏன் எழுதக் கூடாது? பனாரஸில் சிவனின் கோவில் எவ்வளவு பெரியதாக உள்ளது. அங்கு கூட (டிரஸ்டிகள்) தர்மகர்த்தாக்கள் இருப்பார்கள். அது போல பெரியவர்களுக்குப் புரிய வைப்பதற்கான முயற்சி செய்ய வேண்டும். பெரிய மனிதர்கள் புரிந்து கொண்டு விட்டார்கள் என்றால், அவர்களுடைய சப்தம் நிறைய ஆகி விடும். ஏழைகள் சட்டென்று கேட்டுக் கொண்டு விடுகிறார்கள். பெரியவர்களினுடைய உதவியைப் பெற வேண்டும். அபிப்பிராயங்கள் கூட பெரியவர்களினுடையதை எழுதுமாறு செய்விக்க வேண்டும். ஏனெனில், அவர்களுடைய குரல் கூட உதவி செய்யும். உண்மையில் அவர்கள் எவ்வளவு வேண்டுமோ, அந்த அளவிற்கு சப்தம் செய்வதில்லை (விளம்பரப்படுத்துவது இல்லை). நீங்கள் ஜனாதிபதிக்குக் கூட புரிய வைக்கிறீர்கள். நன்றாக உள்ளது என்று கூறவும் செய்கிறார்கள். முதல் மந்திரி, ஆளுனர் ஆகியோர் திறந்து வைக்கிறார்கள். இந்த பி.கே.க்களோ இறைவனை சந்திப்பதற்கான மிகவும் நல்ல சுலபமான வழியைக் கூறுகிறார்கள் என்று எழுதுகிறார்கள். ஆனால் இறைவன் என்றால் என்ன பொருள் - இது எதுவுமே புரியாமல் இருக்கிறார்கள். அந்த நேரத்தில் மட்டும் வழி மிகவும் நன்றாக உள்ளது என்று கூறுகிறார்கள். அமைதி கிடைப்பதற்கான வழி நன்றாக உள்ளது. ஆனால் அவர்களோ புரியாமல் உள்ளார்கள்.

 

பாபா மிக பெரியவர்களுக்கு புரிய வைப்பதற்காகக் கூட கூறுகிறார். மிகப் பெரிய மனிதர்களிடமிருந்து பெரியப் பெரிய பிரசித்தமான மண்டபங்களை வாங்கிக் கொள்ளுங்கள். நாங்கள் அனைத்து மனிதர்களின் நன்மைக்காக இந்த கண்காட்சியை எப்பொழுதிற்குமாக வைக்க விரும்புகிறோம் என்று கூறுங்கள். விளம்பரம் மட்டுமே செய்தால் போதும். இது போல 50 அல்லது 100 மண்டபங்கள் எடுக்க வேண்டும். பாரதமோ மிகப் பெரியதாகும் அல்லவா? ஒவ்வொரு நகரத்திலும் 10-12 மண்டபங்கள் எடுத்துக் கொள்ளுங்கள். இத்தனை மண்டபங்களில் கண்காட்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன என்று பத்திரிக்கைகளில் வெளிப்பட வேண்டும். யாருக்குப் புரிந்து கொள்ள வேண்டும் என்று இருக்கிறதோ அவர்கள் வந்து புரிந்து கொள்ளட்டும். பின் எத்தனை பேருக்கு நன்மை ஆகி விடும். குழந்தைகள் மிகவுமே பரந்த புத்தி உடையவர்களாக ஆக வேண்டும். குழந்தைகள் சேவை செய்ய வேண்டும் அல்லவா? கண்காட்சிகளை மிகவும் விமரிசையாக செய்யுங்கள் என்று தந்தை எல்லா குழந்தைகளுக்கும் கூறுகிறார். பாபா ஏற்பாடு செய்வித்துக் கொண்டிருக்கிறார். குழந்தைகள் முயற்சி செய்ய வேண்டும். இவை எல்லாம் புரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும். பகவான் வருகிறார். பிரஜாபிதா பிரம்மா மூலமாக பிரஜைகளைப் படைக்கிறார். எனவே அவசியம் எவ்வளவு பிராமணர்களைப் படைத்திருக்கக் கூடும். இப்பொழுது மீண்டும் படைத்துக் கொண்டிருக்கிறார். எத்தனை பிராமணர்கள், பிராமணிகள் இருக்கிறார்கள். பாபா இந்த பிராமண தர்மத்தை சங்கமத்தில் படைக்கிறார். நீங்கள் நடைமுறையில் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் மற்றும் புரிந்து கொண்டிருக்கிறீர்கள். இந்த விஷயங்கள் எந்த சாஸ்திரங்களிலும் இல்லை. பதீத உலகத்தை பாவனமாக ஆக்க வேண்டி வரும் பொழுதே தந்தை வருகிறார் என்பதை குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துள்ளீர்கள். பரமாத்மா பிரஜாபிதா பிரம்மா மூலமாகத் தான் படைப்பை படைக்கிறார் என்பதையும் அறிந்துள்ளீர்கள். ஆனால் எப்பொழுது படைக்கிறார் என்பதை புரியாமல் உள்ளார்கள். ஏதோ புது படைப்பை படைத்திருக்கக் கூடும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். பிரம்மாவையோ சூட்சுமவதனத்தில் இருப்பதாக நினைக்கிறார்கள். பிரஜாபிதா பிரம்மாவோ இங்கே இருக்கிறார் என்பதை இப்பொழுது நீங்கள் புரிந்துள்ளீர்கள். நீங்கள் சூட்சுமவதனத்தில் செல்கிறீர்கள். தூய்மையாக ஆகி பின்னர் ஃபரிஷ்தா ஆகி விடுகிறீர்கள். சாட்சாத்காரம் (காட்சி பார்த்தல்) செய்கிறார்கள். அங்கு (மூவி) அசைவுகளின் செயல்கள் நடக்கிறது என்று குழந்தைகள் வந்து கூறுகிறார்கள். அது இருப்பதே மூவி வர்ல்ட் (சலனங்களின் உலகம்). நீங்கள் ஊமை திரைப்படம் கூட பார்த்திருக்கிறீர்கள். இப்பொழுது நடைமுறையில் எல்லா விஷயங்களையும் நீங்கள் அறிந்து விட்டுள்ளீர்கள். மூலவதனம் என்பது அமைதியான உலகம். அங்கு ஆத்மாக்கள் இருப்பார்கள். சூட்சுமவதனத்தில் சூட்சும சரீரம் கூட இருக்கிறது. எனவே அவசியம் ஏதோ பாஷை கூட இருக்கும். ஆத்மாக்களாகிய நம்முடைய இடம் சாந்திதாமம் ஆகும் என்பது குழந்தைகளாகிய உங்களுடைய புத்தியில் உள்ளது. பிறகு இருப்பது சூட்சுமவதனம். அங்கு பிரம்மா, விஷ்ணு, சங்கரன் இருக்கிறார்கள். மேலும் இது கலியுகம் மற்றும் சத்யுகத்தின் சங்கமம் ஆகும். இங்கு தந்தை வருகிறார். இங்கிருந்து பிராமணர்களாகிய நீங்கள் செல்கிறீர்கள். பிறந்த வீடு மற்றும் புகுந்த வீடு உள்ளது அல்லவா? இங்கு இருவருமே உங்களுடைய பிறந்த வீட்டினர் ஆவார்கள். பாப்தாதா இருவரும் குழந்தைகளை மலராக ஆக்குவதற்காக உழைக்கிறார்கள். முகம்மதியர்கள் கூட கார்டன் ஆஃப் அல்லா என்று கூறுகிறார்கள். கராச்சியில் ஒரு பயில்வான் இருந்தார். அவர் வந்து முன்னால் நிற்பார். பார்த்தபடியே விழுந்து விடுவார். விசாரிக்கும் பொழுது நான் குதாவின் தோட்டத்திற்கு சென்றேன். குதா மலர் கொடுத்தார் என்று கூறுவார். இப்பொழுது அவருக்கு ஞானமோ இருக்கவில்லை. தோட்டம் என்று எதற்குக் கூறப்படுகிறது என்பதை இப்பொழுது நீங்கள் புரிந்துள்ளீர்கள். இது முட்களின் வீடு மற்றும் அது மலர்களின் தோட்டமாகும். உங்கள் புத்தியில் முழு இரகசியம் உள்ளது. சத்யுகம் என்றால் என்ன? கலியுகம் என்றால் என்ன? உங்களுக்கு மிகுந்த குஷி இருக்க வேண்டும். முழு சக்கரம் உங்கள் புத்தியில் உள்ளது. இது பற்றிய விஸ்தாரமோ நிறைய உள்ளது. உங்கள் புத்தியில் எவ்வளவு சுருக்கமாகப் பதிந்துள்ளது. குழந்தைகளாகிய நீங்கள் படைப்பவரான தந்தை மூலமாக படைப்பவர் மற்றும் படைப்பை அறிந்துள்ளீர்கள். பிரம்மாவைப் படைப்பவர் என்று கூற மாட்டார்கள். படைப்பவர் ஒருவர் தான். பலியாவது கூட ஒருவரிடம் தான்.. முதன் முதல் படைப்பு பிரம்மாவினுடையது. பிறகு கிருஷ்ணரினுடையது என்று கூறுவார்கள். பிரம்மாவோ இருக்கிறார். பிராமணர்கள் கூட அவசியம் வேண்டும். பாண்டவர்களை பிராமணர் என்று நினைக்க மாட்டார்கள். பிரம்மா மூலமாக பிராமணர் வேண்டும். இது ஆன்மீக வேள்வி ஆகும். இதற்கு ஸ்பிரிச்சுவல் நாலேஜ் (ஆன்மீக ஞானம்) என்று கூறப்படுகிறது. ஆத்மாவிற்கு அதே தந்தை ஞானம் அளிப்பார். நமக்கு மனிதர்கள் கற்பிப்பதில்லை என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். அனைத்து ஆத்மாக்களுக்கும் தந்தை கற்பிக்கிறார். பிரம்மா மூலமாக ஸ்தாபனை என்றும் கூறுகிறார்கள். கிருஷ்ணர் என்று கூறுவார்களா என்ன? அவரோ இருக்கவும் முடியாது. பிரம்மா மூலமாக ஸ்தாபனை யார் செய்விக்கிறார்? கிருஷ்ணரா? இல்லை பரமபிதா பரமாத்மா. விஷ்ணு மூலமாக பாலனை. பிரம்மா மற்றும் விஷ்ணுவின் பாகம் எவ்வளவு இருக்கிறது. பிரம்மா முக வம்சாவளி தான் பிறகு போய் விஷ்ணுபுரியின் தேவதை ஆகிறார்கள். பிரம்மாவே விஷ்ணு, விஷ்ணுவே பிரம்மா. இதுவும் குழந்தைகளுக்குப் புரிய வைக்கப்பட்டுள்ளது. பிரம்மாவே விஷ்ணு ஆவதற்கு ஒரு நொடி. விஷ்ணுவே பிரம்மா ஆவதில் 84 பிறவிகள். எவ்வளவு அதிசயமான விஷயங்கள்! யாருமே புரிந்துக் கொள்ள முடியாமல் இருக்கிறார்கள். இது எல்லையில்லாத விஷயங்கள் ஆகும். எல்லையில்லாத தந்தையிடமிருந்து எல்லையில்லாத படிப்பை படித்து, எல்லையில்லாத இராஜ்யத்தைப் பெற வேண்டும். சிருஷ்டிச் சக்கரத்தை அறிந்து கொள்ள வேண்டும். ஆத்மா தான் சரீரத்தின் மூலமாக அறிந்து கொள்கிறது. அப்படியின்றி சரீரம் ஆத்மா மூலமாக ஞானம் எடுக்கிறது என்பதல்ல. இல்லை. ஆத்மா ஞானம் எடுக்கிறது. உங்களுக்கு எவ்வளவு குஷி இருக்கிறது. இது உள்ளூர மறைமுகமான குஷி இருக்க வேண்டும். படைப்பினுடைய சம்ஸ்காரம் ஆத்மாவில் உள்ளது. துக்கம் கூட ஆத்மாவிற்குத்தான் ஏற்படுகிறது. எனது ஆத்மாவை துக்கப்படுத்தாதீர்கள் என்று கூறுகிறார்கள். குழந்தைகளுக்கு இப்பொழுது எவ்வளவு தெளிவு கிடைத்துக் கொண்டிருக்கிறது. உங்களுக்கு குஷி இருக்கிறது. கடலிலிருந்து புத்துணர்வு பெற்று மேகங்கள் ஒன்று சேர்ந்து மழை பொழிய வேண்டும். தங்களுக்குள் ஒன்று சேர்ந்து கண்காட்சி ஆகியவற்றை தயார் செய்வதில் உதவி செய்யுங்கள். ஆர்வம் இருக்க வேண்டும். சேவை, சேவை மற்றும் சேவை. நல்லது.

 

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்து கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு, தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

 

தாரணைக்கான முக்கிய சாரம்:

1. தந்தை மூலமாகக் கிடைத்திருக்கும் ஞானத்தை நினைவு செய்து அளவற்ற குஷியில் இருக்க வேண்டும். பரந்த புத்தியுடையவராக ஆகி அமர்க்களமாக சேவை செய்ய வேண்டும்.

 

2. தந்தை மூலமாக கிடைத்திருக்கும் ஸ்மிருதிகளை (நினைவு) மறக்கக் கூடாது. தந்தையிடம் தூய்மையாக இருப்பதற்காக கொடுத்திருக்கும் வாக்குறுதியை முழுமையாகக் கடைப்பிடிக்க வேண்டும்.

 

வரதானம்:

செய்வது மற்றும் சொல்வது - இந்த இரண்டையும் சமானமாக ஆக்கி தரமான சேவை செய்யக் கூடிய உண்மையான சேவாதாரி ஆவீர்களாக.

 

முதலில் செய்ய வேண்டும். பிறகு சொல்ல வேண்டும் என்பது எப்பொழுதும் கவனத்தில் இருக்க வேண்டும். கூறுவது சுலபமாக இருக்கும். செய்வதில் உழைப்பு உள்ளது. உழைப்பினுடைய பலன் நல்லதாக இருக்கும். ஆனால் மற்றவர்களுக்குக் கூறுகிறீர்கள் சுயம் செய்வது இல்லை என்றால் சேவையுடன் கூடவே டிஸ்சர்வீஸ் கூட பிரத்யட்சம் ஆகிறது. எப்படி அமிர்தத்தில் விஷத்தின் ஒரு துளி பட்டவுடன் முழு அமிருதமுமே விஷமாகி விடுகிறது. அதே போல எவ்வளவு தான் சேவை செய்தாலும் கூட ஒரு சிறிய தவறு, சேவையை முடித்து விடுகிறது. எனவே முதலில் தங்கள் மீது கவனம் கொடுத்தீர்கள் என்றால், அப்பொழுது தான் உண்மையான சேவாதாரி என்று கூறுவார்கள்.

 

சுலோகன்:

வேற்றுமையில் ஒற்றுமையைக் கொண்டு வருவது, கெட்டுப் போனதை சரி செய்வது - இவை அனைத்தையும் விட பெரிய விசேஷத் தன்மையாகும்.

 

***ஓம் சாந்தி***

Whatsapp Button works on Mobile Device only