01 August 2016

BK Murli 2 August 2016 Tamil

BK Murli 2 August 2016 Tamil

02.08.2016    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்

இனிமையான குழந்தைகளே! தந்தை மற்றும் ஆஸ்தியை நினைவு செய்வதில் உங்களுடைய சம்பாத்தியமும் இருக்கிறது. ஆரோக்கியமும் இருக்கிறது. நீங்கள் அமரராக ஆகி விடுகிறீர்கள்.கேள்வி:

இதயத்தைத் தூய்மையாக ஆக்குவதற்கான சுலபமான யுக்தி யாது?பதில்:

எங்கு இருந்தாலும் டிரஸ்டியாகி இருங்கள். நாம் சிவபாபாவின் பண்டக சாலையிலிருந்து உணவு உட்கொள்கிறோம் என்று எப்பொழுதும் நினையுங்கள். சிவபாபாவின் பண்டாராவிலிருந்து உணவு உட்கொள்பவர் களின் இதயம் தூய்மை ஆகிக் கொண்டே போகிறது. இல்லறத்தில் இருக்கையிலும் ஸ்ரீமத்படி, டைரக்ஷன் படி டிரஸ்டியாகி வாழ்கிறார்கள் என்றால், அதுவும் சிவபாபாவின் பண்டாரா ஆகும். மனதினால் சமர்ப்பணம் ஆனவர்கள்.ஓம் சாந்தி.

ஜன்ம ஜன்மாந்திரமாக, அரைகல்பமாக குழந்தைகள் சத்சங்கம் சென்றுள்ளீர்கள். சாது சந்நியாசி, பண்டிதர்கள் ஆகிய எல்லா மனிதர்களின் சத்சங்கம் நடக்கிறது. ஆனால் இது எந்த ஒரு மனிதனுடைய சத்சங்கம் கிடையாது. இதற்கு ஆன்மீக சத்சங்கம் என்று கூறப்படுகிறது. சுப்ரீம் ஆத்மா, ஆத்மாக்களுடன் ஆன்மீக உரையாடல், அதாவது சத்சங்கம் நிகழ்த்துகிறார். இங்கு நீங்கள் எந்த ஒரு மனிதரிடமும் கேட்பதில்லை. தேவதைகளிடமும் கேட்பதில்லை. நீங்கள் பகவானின் மகா வாக்கியங்களை கேட்கிறீர்கள். பகவானுக்கு இப்பொழுதும் நிராகாரமானவர் என்று கூறப்படுகிறது. மேலும், பகவான் வருவதே குழந்தைகளை பகவான் பகவதியாக ஆக்குவதற்கான கல்வியை கற்பிப்பதற்காக ஆகும். பகவான் மற்றும் பகவதியின் பதவியை பகவானைத் தவிர வேறு யாரும் அளிக்க முடியாது. ஒவ்வொரு கல்பத்திலும் சங்கமயுகம் வரும் பொழுது நிராகார பகவான் வந்து நமக்கு ஞானம் அளிக்கிறார் என்பதை குழந்தைகளாகிய நீங்கள் அறிந்துள்ளீர்கள். இது கூட நீங்கள் மட்டுமே புரிந்துள்ளீர்கள். வேறு யாரும் புரிந்து கொள்வது கடினம். சிவபாபா அவசியம் வருகிறார். ஆனால் அவருக்குப் பதிலாக கிருஷ்ணரை கீதையின் பகவான் என்று கூறி விட்டுள்ளார்கள். எனவே அவசியம் அவர்கள் புத்தியில் மனித உடல் தான் வரக் கூடும். நீங்கள் தான் தெய்வீக குணங்கள் உடையவர்களாக இருந்தீர்கள் மற்றும் இப்பொழுது அசுர குணங்கள் உடையவர்களாக ஆகி உள்ளீர்கள். மீண்டும் இப்பொழுது தெய்வீக குணங்கள் உடையவர்களாக ஆகிக் கொண்டிருக்கிறீர்கள். தெய்வீக குணங்கள் உடையவர்களுக்கு ஈஸ்வரிய சம்பிரதாயம் என்றும் அசுர குணங்கள் உடையவர்களுக்கு அசுர சம்பிரதாயம் என்றும் கூறப்படுகிறது. இப்பொழுது நிராகார தந்தை நிராகார சம்பிரதாயம் அதாவது ஆத்மாக்களுக்கு கற்பிக்கிறார். எனவே ஈஸ்வரிய சம்பிரதாயம் அல்லது ஆன்மீக சம்பிரதாயம் என்று கூறப்படுகிறது. அவர்களுக்கு ஆன்மீகத் தந்தை வந்து கற்பிக்கிறார். இப்பொழுது நீங்கள் ஆத்ம உணர்வுடையவர்களாக ஆகிறீர்கள். நாம் ஆத்மா ஆவோம். தந்தை நமக்கு கற்பிக்கிறார். என்னை நினைவு செய்தீர்கள் என்றால், உங்களுடைய விகர்மங்கள் (பாவம்) விநாசம் ஆகும் என்று கூறுகிறார். ஆத்மாக்களுக்குத் தான் கற்பிக்கிறார். அவர் தான் ஞானம் நிறைந்தவர் ஆவார். மேலும் ரிஷி முனிவர்கள் ஆகியோரோ எல்லோருமே தெரியவில்லை, அறியவில்லை (நேதி நேதி) என்று கூறிச் சென்று விட்டார்கள். அதாவது எங்களுக்கு ஆத்மா பற்றித் தெரியாது. ஞானக் கடல் நேரிடையாக வராதவரை ஞானத்தை எவ்வாறு புரிய வைக்க முடியும். இது நல்ல முறையில் புரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும். நமக்கு எந்த ஒரு மனிதரும் கற்பிப்பதில்லை. நமக்கு தந்தை வந்து கற்பிக்கிறார். அவர் எல்லையில்லாத தந்தை, நிராகாரமானவர் ஆவார். ஒவ்வொருவருக்கும் சாகார தந்தை மற்றும் நிராகார தந்தை இருவரும் இருக்கிறார்கள் என்பதும் குழந்தைகளுக்குப் புரிய வைக்கப்பட்டுள்ளது. ஒருவர் ஆன்மீக தந்தை மற்றும் மற்றொருவர் சரீரத்தின் தந்தை. ஆன்மீகத் தந்தை தான் வந்து ஆத்மாக்களை பாவனமாக ஆக்குகிறார். நாம் பாவனமாக இருந்தோம். பதீதமாக ஆனோம். மீண்டும் பதீத நிலையிலிருந்து பாவனமாக எப்படி ஆகிறோம் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். படம் கூட முன்னால் உள்ளது. அடிக்கடி சக்கரப் படத்திற்கு முன்னால் சென்று அமர்ந்தீர்கள் என்றால், நாம் இப்பொழுது சங்கமயுகத்தில் அமர்ந்துள்ளோம் மற்றும் பிற அனைவரும் தங்களை கலியுகத்தில் இருப்பதாக நினைக்கிறார்கள் என்று புத்தியில் முழு ஞானம் வந்து விடும் என்று பாபா ஆலோசனை அளிக்கிறார். கலியுகத்திற்கு கோரமான இருள் என்று கூறப்படுகிறது. இப்பொழுது நீங்கள் சங்கமத்தில் உள்ளீர்கள். இப்பொழுது உங்களுக்கு வெளிச்சம் (ஞானம்) உள்ளது. சத்யுகத்தில் பின் உங்களுக்கு இந்த ஞானம் கிடைப்பதில்லை. தந்தை வரும் பொழுது தான் பட்ட பகல் போன்று வெளிச்சம் ஆகி விடுகிறது. இந்த சங்கமயுகமே கல்யாணகாரி யுகம் ஆகும். இது போன்ற யுகம் வேறு எதுவும் இருப்பதே இல்லை. இப்பொழுது தான் தந்தை வருகிறார். சத்யுகத்தை கல்யாணகாரி நன்மை உடையது என்று கூறமாட்டார்கள். அங்கு யாருக்கும் நன்மை ஆவதில்லை. நன்மை சங்கமத்தில் தான் ஏற்படுகிறது. சத்யுகத்திலோ நன்மையாகவே இருக்கும். சங்கமத்தில் கலியுகத்தை சத்யுகமாக, கல்யாணகாரியாக ஆக்குகிறார். எனவே இப்பொழுது உங்களுக்கு எவ்வளவு நன்மை ஆகிறது என்பதைப் பாருங்கள். தந்தை மற்றும் ஆஸ்தியை நினைவு செய்வதால் மட்டுமே எவ்வளவு உங்களுக்கு சம்பாத்தியம் ஆகிறது. சம்பாத்தியத்திற்கு சம்பாத்தியமும் இருக்கிறது மற்றும் ஆரோக்கியத்திற்கு ஆரோக்கியமும் இருக்கிறது. உங்கள் வாழ்க்கை அமர வாழ்க்கையாகி விடுகிறது. உங்களுக்கு ஒரு பொழுதும் அகால மரணம் ஏற்படுவதில்லை. எனவே குழந்தைகளுக்கு எவ்வளவு குஷி இருக்க வேண்டும். ஏனெனில் உங்கள் புத்தியில் முழு ஞானம் உள்ளது. இங்கு குழந்தைகளாகிய நீங்கள் வருகிறீர்கள் என்றால் முயற்சி செய்து மியூசியத்தில் படங்கள் மீது புரிய வைப்பதற்கான தகுதி உடையவர்களாக ஆக வேண்டும். தங்களை லாயக்காக ஆக்குவதற்கு 7-8 நாட்கள் அமர்ந்து கற்றுக் கொள்ளுங்கள். அப்பியாசம் ஆகி விட்டது என்றால் சேவையில் ஓட வேண்டும். சேவை செய்து பிறகு திரும்பி வர வேண்டும். இதை கற்றுக் கொள்வது மிகவுமே சுலபமாகும். படங்களை முன்னால் பார்க்கும் பொழுதே நாம் சங்கமத்தில் அமர்ந்துள்ளோம் என்பது புத்தியில் வந்து விடுகிறது. இன்றைய உலகத்தில் நிறைய மனிதர்கள் இருக்கிறார்கள். நாளைக்கு மிகவும் குறைவாக இருப்பார்கள். இத்தனை பேர் அனைவரும் திரும்பிப் போக வேண்டி உள்ளது. இப்பொழுது தந்தை தானும் வந்துள்ளார். குழந்தைகள் மீது எவ்வளவு மதிப்பு வைக்கிறார். தூர தேசத்தில் இருப்பவர் அந்நிய தேசத்தில் வந்துள்ளார்.. இராவணனினுடைய தேசம் அந்நிய தேசம் ஆகும் அல்லவா? இராமரின் தேசத்திலோ ஒரு பொழுதும் இராவணன் வர முடியாது. இது பற்றி ஒரு கதை அல்லது கட்டுக்கதை கூட கூறுகிறார்கள். என்னவெல்லாம் கட்டுக் கதைகள் கூறுகிறார்களோ அவை எல்லாமே கதைகள் ஆகும். கதைகளில் எந்த ஒரு சாரமும் கிடையாது. கட்டுக்கதைகளில் (நாவல்கள்) கூட எந்த ஒரு சாரமும் கிடையாது. நாவல்கள் கூட எவ்வளவு ஏராளமாக விற்கப்படுகின்றன. நாவல்கள் மட்டுமே விற்பவர்கள் கூட இலட்சாதிபதி ஆகி விடுகிறார்கள். இப்பொழுது குழந்தைகளாகிய உங்களுடைய பரிபாலனை தந்தையின் கையில் உள்ளது. உங்களிடமே உண்பேன், அதாவது உங்களுடைய பண்டாராவிலிருந்து உண்பேன்.. அவ்வளவே. உங்களுடைய முழு பாலனையும் இங்கிருந்து தான் ஆகிறது. யார் சமர்ப்பணமாகி விடுகிறார்களோ அவர்களுடைய பரிபாலனையோ ஆகி விடுகிறது.ஆனால் யார் மனதால் கூட இவை எல்லாமே இறைவனுடையது, (தந்தையினுடையது) நான் டிரஸ்டி அக இருக்கிறேன், நாங்கள் ஸ்ரீமத் படி தான் நடந்து எல்லா செலவும் செய்கிறோம் என்று இப்படி யார் நினைக்கிறார்களோ அவர்களும் சிவபாபாவின் பண்டாராவிலிருந்து சாப்பிடு கிறார்கள். சிவபாபாவின் பண்டாராவிலிருந்து சாப்பிடுவதால் இதயம் தூய்மை ஆகிறது. அப்படியின்றி அவர்கள் சிவபாபாவின் பண்டாராவிலிருந்து சாப்பிடுவதில்லை என்பதல்ல. தந்தையின் கட்டளைப் படி நடப்பவர்கள் தந்தையின் பண்டாராவிலிருந்து சாப்பிடுவது போலவே ஆகும். எந்த பண்டாராவிலிருந்து சாப்பிட்டார்களோ அந்த பண்டாரா நிரம்பியதாக இருக்கும். கஷ்டம், துக்கம் நீங்கிப் போய் விடும். அதற்கு பிறகு நீங்கள் ஒரு பொழுதும் அகால மரணம் அடைய மாட்டீர்கள். இச்சமயத்தில் தான் சிவபாபா வருகிறார். அவருடைய மகிமையும் பாடப்பட்டுள்ளது. சிவஜெயந்தி கூட கொண்டாடுகிறார்கள். ஆனால் அவரது பண்டாரா எப்படி இருக்கும் என்பது யாருக்குமே தெரியாது. பாபா கூட உண்மையில் வருகிறார் அல்லவா? குழந்தைகள் யாரெல்லாம் வருகிறார்களோ அவர்களுக்கு சிவபாபாவின் பண்டாராவிலிருந்து உணவு கிடைக்கிறது. நல்லது. ஆண்கள் சமர்ப்பணம் ஆகிறார்கள் என்றால் சரி தான். ஒரு வேளை அவர்கள் சமர்ப்பணம் ஆவதில்லை என்றால் தாய்மார்கள் என்ன செய்வது? ஏனெனில் சம்பாத்தியம் கணவனினுடையது. அவரோ சமர்ப்பணம் ஆவதில்லை. அவர் சம்பாதித்தால் தானே மனைவி சாப்பிட முடியும்? ஆம். ஜோடியாக சமர்ப்பணம் ஆனார்கள் என்றால் பின் சிவபாபாவின் பண்டாராவிலிருந்து பாலனை கிடைக்க முடியும். இதை தந்தை குழந்தைகளுக்கு நல்ல முறையில் புரிய வைக்கிறார். கர்மாதீத் நிலை ஆகும் வரையும் நாம் தந்தையிடம் அமர்ந்துள்ளோம் என்பதை புத்தியிலிருத்த வேண்டும். நாளுக்கு நாள் நாம் நமது சுயராஜ்யத்திற்கு நெருங்கி வந்து கொண்டே போகிறோம். காலம் கழிந்து கொண்டே போகிறது. நீங்கள் நெருங்கி வந்துக் கொண்டே இருக்கிறீர்கள். சத்யுகத்தின் முதல் வருடம் வருவதற்கு இப்பொழுது எத்தனை வருடங்கள் உள்ளன என்று கூறுவீர்கள்? இப்பொழுது எவ்வளவு நெருக்கத்தில் வந்து விட்டுள்ளீர்கள்? குழந்தைகளே இப்பொழுது உங்களுடைய 84ன் சக்கரம் முடிவடைகிறது என்று தந்தை கூறுகிறார். நீங்கள் இப்பொழுது 84 பிறவிகளின் சக்கரத்தை அறிந்துள்ளீர்கள். சக்கரத்தைப் பார்த்த உடனேயே நாம் இப்பொழுது சங்கமத்தில் உள்ளோம் என்று கூறுவீர்கள். இந்த பக்கம் இருப்பது கலியுகம். அந்த பக்கம் இருப்பது சத்யுகம். நாளைக்கு நாம் நமது சுகதாமத்தில் இருப்போம். உலகத்திற்குத் தெரியாது. அவர்களோ முற்றிலும் காரிருளில் இருக்கிறார்கள். குழந்தைகளாகிய உங்களுக்கு மிகுந்த குஷி இருக்க வேண்டும். எல்லையில்லாத தந்தையிடமிருந்து நாம் 21 பிறவிகளுக்கு சம்பாத்தியம் பெறுகிறோம். சதா சுகத்தின் ஆஸ்தியைப் பெற்றுக் கொண்டிருக்கிறோம் என்ற இந்த குஷி இருக்கிறது. சொர்க்கவாசி ஆவது என்பது உங்களுடைய அதிர்ஷ்டத்தில் தான் இருக்கிறது. சொர்க்கம் ஒரு அதிசயமான பொருளாகும். எப்படி உலகில் 7 அதிசயங்களைக் காண்பிக்கிறார்கள் ! இதுவோ எல்லாவற்றையும் விட பெரிய அதிசயம் ஆகும். அதிசயமான சொர்க்கத்தின் படங்கள் கூட உள்ளன. இந்த இலட்சுமி நாராயணர் சொர்க்கத்தின் அதிபதியாக இருந்தார்கள். எனவே பாபா எழுதியிருந்தார் - மேலே சூர்ய வம்சத்தினருடையதை எழுதுங்கள். கீழே சந்திர வம்சத்தினருடையதை எழுதுங்கள். அப்பொழுது அரைகல்பம் முடிந்து போய் விடும். சூரிய வம்சம் சந்திர வம்சம் 1250 வருடங்கள். பின் இலட்சக்கணக்கான வருடங்களின் விஷயமே இல்லாமல் போய் விடும். அங்கு புஜ பல சண்டைகளில் எவ்வளவு செலவு ஆகிறது. இங்கு ஆரம்ப முதல் கடைசி வரை எந்த செலவும் ஆவதில்லை. இதுவோ தந்தை மற்றும் குழந்தைகளின் கணக்கு ஆகும். செலவின் விஷயமே கிடையாது. இங்கு குழந்தைகள் வந்து புத்துணர்வு (ரிஃப்ரெஷ்) பெற வேண்டும். அதற்காக வீடுகள் ஆகியவை கட்டுகிறார்கள். குழந்தைகளினுடையதே பைசா ஆகும். அது கூட எவ்வளவோ நாட்கள் கடந்து போய் விட்டன. இனி மீதம் கொஞ்சம் நாட்கள் தான் உள்ளன. செலவு எதுவும் கிடையாது. நீங்கள் ஒரு பைசா செலவின்றி ஜீவன் முக்தி அடைகிறீர்கள். இதில் உழைப்பின் விஷயம் மட்டுமே உள்ளது. பகவானையோ எல்லா பக்தர்களும் நினைவு செய்கிறார்கள். ஆனால் பகவான் யார் என்பதை அறியாமல் உள்ளார்கள். பகவானைத் தெரியாத காரணத்தினால் நிறைய பேரை பகவான் என்று ஏற்றுக் கொண்டு விடுகிறார்கள். இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் உண்மையான தந்தையின் அறிமுகம் கொடுக்க வேண்டும். பெரியப் பெரிய படங்களை முக்கியமான இடங்களில் வையுங்கள் என்று பாபா எவ்வளவு முறை புரிய வைத்துள்ளார். எப்படி விமான நிலையம் உள்ளது. அவர்கள் நம்மிடம் என்ன வாங்குவார்கள்? இவை எல்லாமே மனிதர்களின் நன்மைக்காக உள்ளது என்பதை அவர்களுக்குப் புரிய வையுங்கள். இவற்றைப் புரிந்து கொள்வதால் தான் மனிதர்கள் தந்தையிடமிருந்து ஆஸ்தி பெற்று உலகத்தின் அதிபதி ஆக முடியும். டில்லி முக்கியமானது. டில்லி தலைநகரம் ஆகும் அல்லவா? அங்கு எல்லோரும் ஒன்று சேருகிறார்கள். அங்கு, தலைநகரத்தில் அது போன்ற பெரிய பெரிய படங்கள் இருக்க வேண்டும். முக்கியமாக இருப்பதே திரிமூர்த்தி, காலச்சக்கரம் மற்றும் கல்ப விருட்சம். இந்த ஏணிப்படியோ அற்புதமானது. இதில் விநாசம் ஆகியவை பற்றிக் கூட நல்ல முறையில் எழுதப்பட்டுள்ளது. மேலும் பதீத பாவனர் பரமபிதா பரமாத்மா ஆவாரா இல்லை தண்ணீரின் கங்கையா? நீங்கள் முடிவெடுங்கள். இறைவன் எங்கும் நிறைந்தவரா? இல்லை ஒரே ஒரு நிராகார பரமபிதா பரமாத்மாவா என்று பிரம்மா குமார் குமாரிகள் கேட்கிறார்கள். தந்தையிடமிருந்தோ குழந்தைகளுக்கு ஆஸ்தி கிடைக்கிறது. இந்த படங்கள் தான் முக்கியமானவை. திரிமூர்த்தியின் படம் கூட மிக மிக மதிப்பு வாய்ந்ததாகும். பிரம்மா மூலமாக விஷ்ணுபுரியின் ஸ்தாபனை ஆகிறது. பிறகு அவரே பாலனையும் செய்வார். எல்லையில்லாத பாபா சொர்க்கத்திற்கு அதிபதியாக ஆக்குவதற்காக நமக்கு கற்பிக்கிறார் என்ற அளவற்ற குஷி குழந்தைகளுக்கு இருக்க வேண்டும். பாபா வந்து சொர்க்கத்தின் ஸ்தாபனை மற்றும் நரகத்தின் விநாசம் செய்விக்கிறார். எனவே மகா பாரத போர் கூட கூடவே இருக்கிறது. ஒவ்வொரு 5 ஆயிரம் வருடங்களுக்குப் பிறகும் இந்த சக்கரம் சுற்றுகிறது. தந்தை கூட கல்ப கல்பமாக கல்பத்தின் சங்கமயுகத்தில் வருகிறார். கீதையில் அவர்கள் பிறகு யுகே - யுகே என்று எழுதி விட்டுள்ளார்கள். அது கூட 5 யுகங்கள் ஆகும். அப்படியானால் 5 முறை வரட்டுமே ! பிறகு 24 அவதாரங்கள், இன்னின்ன அவதாரம் என்று ஏன் எழுதி விட்டுள்ளார்கள்? மனிதர்கள் எவ்வளவு யக்ஞம், தவம், தீர்த்த யாத்திரை ஆகியவைகளை மேற்கொள்கிறார்கள். இவை எல்லாமே பகவானை அடைவதற்கான வழிகள் என்று நினைக்கிறார்கள். ஆனால் பகவானிடமோ யாருமே போக முடியாது. அரைகல்பம் எவ்வளவு தலையிலடித்துக் கொண்டார்கள். ஜன்ம ஜன்மாந்திரமாக சுற்றி வந்தார்கள். இது இது செய்தார்கள் .... பிறகும் தந்தை கிடைக்கவில்லை. இப்பொழுது தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு எவ்வளவு நெருக்கத்தில் இருக்கிறார். உங்களிடம் உரையாடுகிறார். உங்களுக்குப் புரிய வைத்துக் கொண்டிருக்கிறார். கல்ப கல்பமாக மிகச் சரியாக நாம் இவ்வாறே சந்திக்கிறோம் என்று நீங்கள் புரிந்துள்ளீர்கள். எது நடந்து முடிந்ததோ கல்ப கல்பமாக அவ்வாறே ஆகும். அதே தாதா வைர வியாபாரி இருப்பார். பின் அவருக்குள் தான் பாபா பிரவேசம் செய்வார். பிறகு அதே குழந்தைகள் வந்து தந்தையினுடையவராக ஆவார்கள். மேலும் மீண்டும் சொர்க்கத்தின் ஆஸ்தி பெறுவார்கள். இது குழந்தைகளாகிய உங்களுடன் தந்தையினுடைய அனாதி அவினாஷி பாகம் கல்ப கல்பமாக இப்படியே திரும்பத் திரும்ப நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது. நல்லது.இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்து கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு, தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு, ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

தாரணைக்கான முக்கிய சாரம்:

1. இது கல்யாணகாரி சங்கமயுகம் ஆகும். இதில் ஒவ்வொரு விஷயத்திலும் நன்மை உள்ளது. சம்பாத்தியமே சம்பாத்தியம் ஆகும். தந்தை மற்றும் ஆஸ்தியை நினைவு செய்து 21 பிறவிகளுக்கு வாழ்க்கையை அமர வாழ்க்கையாக ஆக்கிக் கொள்ள வேண்டும்.2. இல்லறத்தில் இருந்தபடியே மனம் புத்தியினால் சமர்ப்பணமாக வேண்டும். ஸ்ரீமத் படி செலவு செய்ய வேண்டும். முழுமையாக டிரஸ்டியாகி இருக்க வேண்டும். சிவபாபாவின் பண்டாரா நிரம்பியுள்ளது. கஷ்டம் துக்கம் தூர போய் விடும்.வரதானம்:

துண்டிப்பது, வளைப்பது மற்றும் இணைப்பது (தோட்னா, மோட்னா, ஜோட்னா) - இந்த 3 வார்த்தைகளின் நினைவு மூலமாக எப்பொழுதும் வெற்றி அடைபவர் ஆவீராக.முழு படிப்பு மற்றும் அறிவுரைகளின் சாரம் இந்த 3 வார்த்தைகளாகும். (1) கர்ம பந்தனத்தை துண்டிக்க வேண்டும் (2) தங்களுடைய சுபாவம் சம்ஸ்காரத்தை வளைக்க வேண்டும் (3) ஒரு தந்தையிடம் சர்வ சம்பந்தத்தை இணைக்க வேண்டும். இதே மூன்று வார்த்தைகள் முழுமையான வெற்றியை அடைபவராக ஆக்கி விடும். இதற்காக எதெல்லாம் அழியக் கூடிய பொருட்களை இந்த கண்களால் பார்க்கிறீர்களோ அவை எல்லாமே அழிந்து போய் விட்டுள்ளது என்ற இதே நினைவு எப்பொழுதும் இருக்கட்டும். அவற்றை பார்க்கையிலும் தங்களது புதிய சம்பந்தம், புதிய படைப்பை பார்த்துக் கொண்டே இருந்தீர்கள் என்றால் ஒரு பொழுதும் தோல்வி ஏற்பட முடியாது.சுலோகன்:

எப்பொழுதும் தூய்மையாகவும் தெளிவாகவும் (க்ளீன் மற்றும் க்ளியர்) இருப்பதே யோகியின் அடையாளம் ஆகும்.***OM SHANTI***

Whatsapp Button works on Mobile Device only