03 August 2016

BK Murli 3 August 2016 Tamil

BK Murli 3 August 2016 Tamil

03.08.2016    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


இனிமையான குழந்தைகளே! பிறரைப் பற்றிய (வீணான) சிந்தனையை விட்டு தனக்கு நன்மை செய்யுங்கள். நீங்கள் தங்கம் போல் ஆகி மற்றவர்களுக்கு வழி சொல்லுங்கள்.கேள்வி :

அசரீரி ஆவதற்கான பயிற்சியை யார் சதா செய்து கொண்டே இருக்கின்றனரோ, அவர்களின் அடையாளங்களைச் சொல்லுங்கள்?பதில் :

அவர்கள் வலுக்கட்டாயமாகத் தங்களின் கர்மேந்திரியங்களை வசப்படுத்துவதில்லை. ஆனால் அவர்களின் கர்மேந்திரியங்கள் தாமாகவே குளிர்ந்து விடுகின்றன. நாம் ஆத்மாக்கள் சகோதர-சகோதரர்கள். இந்த நினைவு தானாகவே அமைந்து விடுகின்றது. தேக அபிமானம் விடுபட்டுக் கொண்டே செல்கின்றது. பெயர்-வடிவத்தின் நஷா முடிந்து கொண்டே செல்கின்றது. மற்றவர்களின் நினைவு வருவதில்லை.பாடல் :

நீ அன்புக் கடலாக இருக்கிறாய்........ஓம் சாந்தி.

இவர் ஒன்றும் அனபின் கடலாக மட்டும் இல்லை, ஞானக்கடலாகவும் உள்ளார். ஞானம் மற்றும் அஞ்ஞானம். ஞானம் பகல் என்றும் அஞ்ஞானம் இரவு என்றும் சொல்லப் படுகின்றது. ஞானம் என்ற சொல் தான் நல்லது. அஞ்ஞானம் என்ற சொல் கெட்டது. அரைக்கல்பம் ஞானத்தின் பிராலப்தம் (பயன்). அரைக்கல்பம் அஞ்ஞானத்தின் பிராலப்தம். அஞ்ஞானத்தின் பிராலப்தம் துக்கமாகும். ஞானத்தின் பிராலப்தம் சுகம். இதுவோ மிகவும் சுலபமாகப் புரிந்து கொள்வதற்கான விஷயங்களாகும். ஞானத்தினுடையது பகல். அஞ்ஞானம் என்பது இரவு. இதுவும் யாருக்கும் தெரியாது. ஞானம் எனச் சொல்லப் படுவது எது, அஞ்ஞானம் எனச் சொல்லப்படுவது எது - இவை எல்லையற்ற விஷயங்களாகும். ஞானம் என்பதென்ன, பக்தி என்பதென்ன என்று நீங்கள் அனைவருக்கும் புரிய வைக்கிறீர்கள். ஞானத்தினால் நீங்கள் பூஜைக்குரியவராக ஆகிக் கொண்டிருக்கிறீர்கள். பூஜைக்குரிவர்களாக ஆகி விட்டீர்கள் என்றால் என்னென்ன கோவில்கள் முதலானவை உள்ளன மற்றும் பூஜைக்கான சாதனங்கள் எவை என அறிந்து கொண்டு விடுகிறீர்கள். இவையனைத்தும் நினைவுச் சின்னங்கள் என்பதை அறிந்து கொள்கிறீர்கள். யார் பூஜை செய்வதற்குச் செல்கின்றனரோ, அவர்கள் அறிந்து கொள்ளவில்லை. பூஜை என்பது பக்தி எனச் சொல்லப்படும். பக்தியின் பலனைக் கொடுப்பதற்காக பகவான் பக்தர்களோடு சந்திக்க வேண்டியுள்ளது. அதுவும் பகவானே வந்து பூஜாரியில் இருந்து பூஜைக்குரியவர்களாக ஆக்குகிறார். பூஜைக்குரியவர்கள் சத்யுகத்திலும் பூஜாரிகள் கலியுகத்திலும் உள்ளனர். குழந்தைகள் நீங்கள் அறிவீர்கள், இன்று இருப்பது என்ன, நாளை என்னவாகும் என்று. விநாசமோ நிச்சயமாக நடக்கப் போகிறது. எந்த நேரம் வேண்டுமானாலும் நடக்கலாம். அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அநேக இயற்கை ஆபத்துகள் நடைபெறும் என்று பாடப் பட்டும் உள்ளது. இதையோ எழுதி வைக்க வேண்டும் - உள்நாட்டு யுத்தம் மற்றும் இயற்கை ஆபத்துகள் - அவற்றை ஒன்றும் ஈஸ்வரிய ஆபத்துகள் எனச் சொல்ல மாட்டார்கள். இதுவோ டிராமாவில் விதிக்கப்பட்டுள்ளது. அதில் இயற்கைச் சேதங்கள் அனைத்தும் வரவிருக்கின்றன. விநாசமாவதில் அவை உதவி செய்யும். ஏவுகணைகளால் வெடிகுண்டு மழை பொழியும். பட்டினியால் இறந்து போவார்கள். நிலநடுக்கம் முதலியன வரப் போகின்றன. இவற்றின் மூலமாகத் தான் விநாசம் நடைபெற இருக்கின்றது. இல்லையென்றால் சத்யுகத்தில் இவ்வளவு கொஞ்சம் மனிதர்கள் எப்படி இருப்பார்கள்? நிச்சயமாக அனைவரும் ஒன்றாக அழிந்து விடுவார்கள். குழந்தைகள் நன்றாக அறிவார்கள், இந்த ஆடைகள் (சரீரம்) அனைத்தும் சுத்தம் செய்யப் படும். இது எல்லையற்ற பெரிய இயக்கம். அசுத்தத் துணியை சுத்தம் செய்ததாகப் பாடப் படுகின்றது. இந்தத் துணிகளின் விசயம் கிடையாது. இது சரீரத்தின் விசயம். ஆத்மாக்களை யோக பலத்தினால் சுத்தம் செய்ய வேண்டும். இச்சமயம் 5 தத்துவங்கள் தமோபிரதானமாக உள்ளன என்றால் சரீரமும் அது போல் உருவாகின்றது. பதீத பாவனர் பாபா வந்து தூய்மைப்படுத்துகிறார். மற்ற அனைத்தும் அழிந்து போகின்றன. எப்படி தூய்மை ஆகின்றனர் என்பதை நீங்கள் அறிவீர்கள். மிகவும் சுலபமான வழி சொல்கிறார். ஆனால் மனிதர்களோ எதையும் புரிந்து கொள்ளவில்லை. எங்கெங்கே பக்தி, யக்ஞம் முதலியன நடைபெறுகின்றதோ, அங்கே சென்று புரிய வைக்க வேண்டும் - யாருக்கு நீங்கள் பக்தி செய்கிறீர்களோ, அவர்களின் வாழ்க்கை வரலாற்றை அறிந்து கொள்வதால்தான் நீங்கள் தேவதை ஆக முடியும். அவர்கள் எப்படி ஜீவன்முக்தி அடைந்தார்கள் என்பதை வந்து புரிந்துக் கொள்ளுங்கள். கோவில்களில் அமர்ந்து வாழ்க்கை வரலாற்றைப் புரிய வைப்பதால் நன்றாகப் புரிந்து கொள்வார்கள்.நீங்களும் பாபாவிடமிருந்து இப்போது வாழ்க்கை வரலாற்றைக் கேட்கிறீர்கள். குழந்தைகள் உங்களுக்கு எவ்வளவு ஞானம் கிடைக்கின்றது! பரமபிதா பரமாத்மாவின் வாழ்க்கை வரலாற்றை யாருமே அறிந்து கொள்ளவில்லை. சர்வவியாபி எனச் சொல்வதால் வாழ்க்கை வரலாறு ஆகி விடாது. குழந்தைகள் நீங்கள் இப்போது பரமபிதா பரமாத்மாவின் வாழ்க்கை வரலாற்றை அறிவீர்கள். அதாவது முதல்-இடை-கடை பற்றி அறிவீர்கள். இந்தச் சமயத்தை ஆரம்பம் எனச் சொல்வார்கள். இந்தச் சமயத்தில் தான் பாபா வந்து தூய்மை யற்றவர்களை தூய்மையாக்குகிறார். பிறகு கல்பத்தின் மத்தியில் (துவாபரயுகம்) பக்தியின் பாகம் நடைபெறுகின்றது. பாபா சொல்கிறார், இந்த சமயத்தில் தான் நான் வந்து ஸ்தாபனை செய்கிறேன், மற்றும் செய்விக்கிறேன். செய்பவர்-செய்விப்பவராக இருக்கிறேன். பிரேரணையை (தூண்டுதல்) செய்தல் எனச் சொல்ல மாட்டார்கள். பாபா வந்து அவருடைய கர்மேந்திரியங்கள் மூலமாகச் செய்கிறார். இதில் பிரேரணையின் விஷயம் கிடையாது. செய்பவர்-செய்விப்பவர் என்றால் நிச்சயமாக நேரில் இருந்து தான் செய்விப்பார். பிரேரணையினால் எதுவுமே நடைபெற முடியாது. ஆத்மா, சரீரம் இல்லாமல் எதையும் செய்ய இயலாது. அநேகர் சொல்கின்றனர், ஈஸ்வரன் தான் அனைத்தையும் செய்கிறார் என்று. பாபா, நீங்கள் பிரேரணை செய்யுங்கள், என்னுடைய கணவரின் புத்தி சரியாகிவிட வேண்டும் என்கின்றனர். பாபா சொல்கிறார் - இதில் பிரேரணையின் விஷயமோ எதுவும் கிடையாது. பிறகு சிவஜெயந்தி ஏன் கொண்டாடப்படுகின்றது? பிரேரணை மூலம் காரியம் நடைபெறும் என்றால் பிறகு அவர் வந்தது எதற்காக? ஒன்று, ஈஸ்வரன் என்பவர் என்ன பொருளாக உள்ளார்? இது அவர்களுக்குத் தெரியாது. ஈஸ்வரனின் பிரேரணையினால் அனைத்தும் நடைபெறுகின்றது என்று மட்டும் சொல்லி விடுகின்றனர். நிராகார் (சரீரமற்ற) பகவான் பிரேரணையினால் என்ன செய்வார்? அவரோ செய்பவர்- செய்விப்பவராக உள்ளார். அவர் வந்து வழி சொல்கிறார். கர்மேந்திரியங்கள் மூலம் முரளி சொல்கிறார். கர்மேந்திரியங்களின் ஆதாரத்தை எடுக்காத வரை எப்படி முரளி சொல்ல முடியும்? ஞானக்கடல் என்றால் சொல்வதற்கு வாய் வேண்டும் இல்லையா? இப்போது குழந்தைகளாகிய உங்களுக்கு முழு உலகத்தின் முதல்-இடை-கடை பற்றித் தெரியும். முழு ஞானமும் கிடைத்துள்ளது. ஞானம் இல்லாமல் கதி (முக்தி, ஜீவன் முக்தி) இல்லை எனப் புரிந்து கொண்டுள்ளனர். ஞானத்தை யார் கொடுப்பது? அஞ்ஞான மார்க்கம் மற்றும் ஞான மார்க்கத்திற்கிடையில் வேறுபாட்டையோ பார்த்திருக்கிறீர்கள் இல்லையா? விஞ்ஞானம் என்றும் சொல்கின்றனர். அஞ்ஞானம் என்பது இருள். மற்றப்படி ஞானம் மற்றும் விஞ்ஞானத்தை நாம் முக்தி-ஜீவன்முக்தி என்றும் சொல்லலாம். உங்களுக்கு இப்போது தூய்மை அடைவதற்கான ஞானம் கிடைக்கின்றது. நீங்கள் சுயதரிசனச் சக்கரதாரி ஆகிறீர்கள். யாராவது கேட்டால் வியப்படைவார்கள். ஆத்மா ஞானத்தைப் பெற்றுக் கொள்கிறது என்றால் ஆத்மா நிச்சயமாக சம்ஸ்காரத்தை எடுத்துச் செல்லும் இல்லையா எனக் கேட்பார்கள். மனிதரில் இருந்து தேவதை ஆகிறீர்கள் என்றால் ஞானம் இருக்க வேண்டும். ஆனால் பாபா புரிய வைக்கிறார், பயனை (பிராலப்தம்) அடைவதற்காகவே இந்த முயற்சி. பயன் கிடைத்து விட்டதென்றால் பிறகு ஞானத்திற்கு என்ன தேவை உள்ளது? சத்யுகம் என்பதே குழந்தைகளாகிய உங்களுக்குக் கிடைக்கின்ற பலன் இந்த விசயங்களைக் கேட்டாலே வியப்படைவார்கள். இந்த ஞானம் பரம்பரையாக ஏன் நடைபெறுவதில்லை? பாபா சொல்கிறார், இது மறைந்து விடுகின்றது. பகல் வந்து விட்டால் பிறகு அஞ்ஞானமோ (இருள்) கிடையாது. அதனால் ஞானத்தின் தேவை அங்கே கிடையாது. இவை கூட புரிந்து கொள்வதற்கும், புரிய வைப்பதற்காகவும் உள்ள விசயங்களாகும். சட்டென்று யாராலும் புரிய வைக்க முடியாது. சிவபாபா பாரதத்தில் தான் வருகிறார். குழந்தைகளுக்காகப் பரிசு கொண்டு வருகிறார், பக்தியின் பலனைக் கொடுப்பதற்காக. இந்த விநாசமும் நிச்சயமாக நடைபெறப் போகின்றது. அதற்கான அறிகுறிகள் காணப்படுகின்றன. நீங்கள் கேட்டுக் கொண்டே இருப்பீர்கள் - தீப்பொறி எழுகிறது என்றால் ஓரிரு மணிக்குள் முழுக் கட்டடமும் எரிந்து சாம்பலாகி விடும். இது ஒன்றும் புது விசயம் கிடையாது. விநாசமோ நிச்சயமாக நடைபெறப் போகிறது. சத்யுகத்தில் இருப்பவர்கள் கொஞ்சம் மனிதர்கள், உயர்ந்தவர்கள். ஆக, உயர்ந்தவராக ஆவதில் எவ்வளவு முயற்சி செய்ய வேண்டி உள்ளது! மாயா மூக்கை ஒரேயடியாகப் பிடித்து விடுகிறது. இது போல் கீழே விழுகிறவர்களுக்கு அதிகக் காயம் ஏற்பட்டு விடுகின்றது. பிறகு அதிக நேரம் பிடிக்கின்றது. பெரியதிலும் பெரிய காயம் காம விகாரத்தினுடையது. அதனால் காமம் மகாசத்ரு எனச் சொல்லப்படுகின்றது. இது தான் தூய்மையை இழக்கச் செய்வது, ஆக்குவது. விகாரத்தினால் தான் சண்டை நடைபெறுகின்றது. விகாரத்திற்காக விடுவதில்லை என்றால் இதைவிட பாத்திரங்களைத் துலக்குவது நல்லது என்று நிச்சயமாகச் சொல்வார்கள். கூட்டிப் பெருக்கும் வேலை செய்தாலும் தூய்மையாக இருப்போம். இதில் அதிக தைரியம் வேண்டும். யாராவது பாபாவிடம் அடைக்கலமாக வருகிறார்கள் என்றால் பிறகு மாயாவும் சண்டையிடத் தொடங்குகிறது. 5 விகாரங்களின் நோய் இன்னும் அதிகமாகக் கொந்தளிக்கின்றது. முதலிலோ பக்கா நிச்சய புத்தி வேண்டும். உயிருடன் இருந்து கொண்டே இறந்து விட்டனர். இங்கிருந்து நங்கூரம் எடுக்கப்பட்டு விட்டது. கலியுக விகாரங்களின் கரையிலிருந்து (கட்டுப்பாட்டிலிருந்து) நீங்கள் விடுபட்டு விட்டீர்கள். இப்போது நாம் யாத்திரையில் போய்க் கொண்டிருக்கிறோம் - நாம் அசரீரியாகி நம் வீட்டுக்குச் செல்கிறோம். ஆத்மாவுக்கு இந்த ஞானம் உள்ளது-நாம் ஒரு சரீரம் விட்டு வேறொன்றில் செல்வோம். நாம் இல்லற விவகாரங்களில் இருந்து கொண்டே தாமரை மலருக்குச் சமமாகப் தூய்மையாகி யாத்திரையில் உள்ளோம். புத்தியில் நினைவிருக்க வேண்டும- இதுவோ சுடுகாடு. பிறகு நாம் சுகதாமம் செல்வோம். நமக்கு பாபா ஆஸ்தி தருவதற்கான யுக்தி சொல்லிக் கொண்டிருக்கிறார். தூய்மையாவதற்காக நாம் யோகத்தில் இருக்கிறோம். நினைவினால் தான் விகர்மங்கள் விநாசமாகும். அப்போது ஆத்மா சரீரத்தை விடும். இந்த யாத்திரை எவ்வளவு அற்புதமானது! பாபாவை நினைவு செய்யுங்கள், தங்களின் இராஜதானியை நினைவு செய்யுங்கள், போதும். இவ்வளவு சுலபமான விஷயம் கூட நினைவிருப்பதில்லை. அலஃப்-தந்தையை நினைவு செய்யுங்கள், போதும். ஆனால் மாயா அதையும் நினைவு செய்ய விடுவதில்லை, முயற்சி செய்ய வேண்டியுள்ளது. ஆத்மாவுக்கு ஞானம் கிடைத்துள்ளது - நம்முடைய பாபா வந்து விட்டார். ஆத்மா படிக்கின்றது இல்லையா? ஆத்மா சரீரத்தின் மூலம் பிறவி எடுக்கின்றது. ஆத்மா சகோதர-சகோதரன் ஆகும். தேக அபிமானத்தில் வருவதால் பிறகு அநேக சம்மந்தங்கள் ஆகி விடுகின்றன. இங்கே நீங்கள் சகோதர-சகோதரிகளாக ஆகியிருக்கிறீர்கள். தங்களுக்குள் சகோதர- சகோதரர்களாகவும் இருக்கிறீர்கள். சகோதர-சகோதரிகளாகவும் இருக்கிறீர்கள். இல்லற மார்க்கம் இல்லையா? இருவருக்குமே ஆஸ்தி வேண்டும். ஆத்மா தான் முயற்சி செய்கிறது. தேக அபிமானம் இருக்கக் கூடாது. சரீரமே இல்லை என்றால் எதன் மூலம் விகாரத்தில் செல்வீர்கள்? நாம் ஆத்மா, பாபாவிடம் செல்ல வேண்டும். எவ்வளவு யோகி ஆகிக் கொண்டே செல்கிறோமோ, கர்மேந்திரியங்கள் சாந்தமாகிக் கொண்டே செல்லும். தேக அபிமானத்தில் வருவதால் கர்மேந்திரியங்கள் சஞ்சலமடைகின்றன. ஆத்மா அறிந்துள்ளது, நமக்குப் பிராப்தி (நன்மை) ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. சரீரத்திலிருந்து விலகிக் கொண்டே செல்வீர்களானால் கர்மேந்திரியங்கள் சாந்தமாகிக் கொண்டே செல்லும். சந்நியாசிகள் மருந்து உட்கொண்டு கர்மேந்திரியங்களை சாந்தப் படுத்துகின்றனர். அதுவோ ஹடயோகம் ஆகிறது இல்லையா? நீங்களோ நினைவு மூலம் காரியமாற்ற வேண்டும். யோகபலத்தினால் நீங்கள் கர்மேந்திரியங்களை வசப்படுத்த முடியாதா என்ன? ஆத்ம அபிமானி ஆகிக் கொண்டே செல்வீர்களானால்  அந்த அளவுக்குக் கர்மேந்திரியங்கள் சாந்தமாகிக் கொண்டே செல்லும். மிகுந்த முயற்சி செய்ய வேண்டியுள்ளது. இதனால் கிடைக்கும் பலன் மிக உயர்ந்தது இல்லையா? பாபா சொல்கிறார், யோபலத்தினால் நீங்கள் உலகின் எஜமானர் ஆகிறீர்கள். கர்மேந்திரியங்கள் மீது வெற்றி கொள்கிறீர்கள். அதனால் பாரதத்தின் யோகம் புகழ் பெற்றதாக உள்ளது. நீங்கள் மனிதரில் இருந்து தேவதையாக, தூய்மையற்றதிலிருந்து தூய்மையானவர்களாக ஆகிறீர்கள். பிரஜைகளும் கூட அங்கே சொர்க்கவாசியாகத் தானே இருக்கிறார்கள்! யோகபலத்தினால் நீங்கள் சொர்க்கவாசி ஆகிறீர்கள். தேக பலத்தால் ஆக முடியாது. முயற்சி ஒன்றும் அதிகம் இல்லை. குமாரிகளுக்கோ முயற்சியே தேவை இல்லை என்பது போலத் தான். அவர்கள் சுதந்திரமாக உள்ளனர். விகாரத்தில் சென்றால் பெரிய பஞ்சாயத்தாக ஆகி விடுகின்றது. குமாரியாக இருப்பது நல்லது. இல்லையென்றால் பிறகு அதர் குமாரி என்ற பெயர் ஆகி விடும். யுகலாகக் கூட ஏன் ஆக வேண்டும்? இதிலும் கூட பெயர் வடிவத்தின் நஷா ஏறி விடுகின்றது. இதுவும் கூட மூர்க்கத்தனம் ஆகும். யுகல் (தம்பதி) ஆன பிறகு பவித்திரமாக இருப்பதற்காக மிக நல்ல தைரியம் வேண்டும். ஞானத்தின் முதிர்ச்சி வேண்டும். அநேகர் தைரியம் வைக்கின்றனர். ஆனால் நெருப்பின் ஜுவாலை வந்து விடுமானால் விளையாட்டு முடிந்து போகும். அதனால் பாபா சொல்கிறார், குமாரிகள் பிறகும் கூட நல்லவர்கள். அதர் குமாரி ஆவதற்கான சிந்தனை கூட ஏன் வைக்க வேண்டும்? குமாரிகளுக்கு நல்ல பெயர் உள்ளது. பால பிரம்மச்சாரியாக உள்ளனர். பால பிரம்மச்சாரியாக இருப்பது நல்லது. அதனால் சக்தி இருக்கும். மற்ற யாருடைய நினைவும் வராது. மற்றப்படி தைரியம் இருந்தால் ஆகிக் காட்டுங்கள். ஆனால் முயற்சி தேவதைப் படுகின்றது. இருவராக ஆகி விடுகின்றனர் இல்லையா? குமாரி என்றால் தனியாக உள்ளனர். இருவர் என்றால் வேற்றுமை வந்து விடுகின்றது. முடிந்த வரை குமாரியாக இருப்பதே நல்லதாகும். குமாரி சேவைக்காக வெளியில் வர முடியும். பந்தனத்தில் வருவதால் பந்தனம் அதிகமாகி விடும். அந்த மாதிரி புத்தியைச் சிக்க வைக்கிற அளவுக்கு வலையை ஏன் பின்னிக் கொள்ள வேண்டும்? அத்தகைய வலையில் சிக்கிக் கொள்வது சரியல்ல. குமாரிகளுக்கோ மிக நல்லது. குமாரிகள் நல்ல பெயரையும் வெளிப்படுத்தி யுள்ளனர். கன்னையா (கிருஷ்ணன்) என்ற பெயர் பாடப்படுகின்றது இல்லையா? குமாரியாக இருப்பது மிக நல்லது. இவர்களுக்கு மிகவும் சுலபம். மாணவ வாழ்க்கை தூய்மையான வாழ்க்கையாகவும் உள்ளது. புத்தியும் புத்துணர்ச்சியுடன் இருகக்கும். குமார்கள் பீஷ்ம பிதாமகர் போல் ஆக வேண்டும். கல்பத்திற்கு முன்பும் கூட அது போல் இருந்துள்ளனர். அதனால் தான் தில்வாடா கோவிலில் நினைவுச் சின்னம் உருவாகியுள்ளது. இப்போது தந்தை குழந்தைகளுக்குக் கட்டளையிடுகிறார் - என்னை நினைவு செய்யுங்கள். மற்ற அனைத்து விசயங்களையும் விட்டுவிட்டு நீங்கள் உங்கள் நன்மையைச் செய்து கொள்ளுங்கள். மறதியால் தவறு ஏற்பட்டு விடுகிறது, குழந்தைகள் கீழே விழுந்து விடுகின்றனர். நீங்கள் வீண் சிந்தனையை விட்டு தங்களின் நன்மையைச் செய்து கொள்ளுங்கள். மற்றச் சிந்தனைகளில் செல்லவே வேண்டாம். நீங்கள் தங்கம் போல் ஆகி விடுங்கள். மற்றவர்களுக்கும் வழி சொல்லுங்கள். சதோபிரதானம் ஆவதற்கு ஒரே உபாயமே உள்ளது. தூய்மையாகாமல் முக்திதாமம் செல்ல இயலாது. உபாயம் ஒன்று மட்டுமே உள்ளது. பிறகு அந்த் மதி ஸோ கதி ஆகி விடும். மற்றவர்கள் பற்றி வீணானவற்றைப் பேசுவதை விட்டு விடுங்கள். இல்லையென்றால் தனக்குத் தான் நஷ்டம் செய்து கொள்வீர்கள். பாபா சாபம் ஒன்றும் தருவதில்லை. ஸ்ரீமத் படி நடக்கவில்லை என்றால் தனக்குத் தானே சாபம் இட்டுக் கொள்கின்றனர். நல்லது.இனிமையிலும் இனிமையான தேடிக்கண்டெடுக்கப் பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவு மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே!தாரணைக்கான முக்கிய சாரம் :

1) நிச்சயபுத்தி உள்ளவராகி உயிருடன் இருந்து கொண்டே இந்தப் பழைய உலகத்தில் இருந்து தனது நங்கூரத்தை எடுத்து விட வேண்டும். பாபாவின் ஒவ்வொரு கட்டளையையும் பின்பற்றி தனக்குத் தான் நன்மை செய்து கொள்ள வேண்டும்.2) மற்றவர்கள் பற்றிய சிந்தனையை விட்டு தனது புத்தியைத் தூய்மையான தங்கமாக ஆக்கிக் கொள்ள வேண்டும். மற்றவர் பற்றிய வீண் பேச்சுகளில் தனது நேரத்தை வீணாக்கக் கூடாது. யோகபலத்தினால் தன்னுடைய கர்மேந்திரியங்களை சாந்தமானதாக, குளிர்ந்ததாக ஆக்கிக் கொள்ள வேண்டும்.வரதானம் :

ஆன்மீக போதை மற்றும் அடைய வேண்டிய இலக்கின் நினைவு மூலம் அனைத்துக் கர்மேந்திரியங்களையும் கட்டளைப்படி நடத்தக் கூடிய கிரீடம் மற்றும் சிம்மாசனத்திற்கு உரியவர் ஆகுக.சங்கமயுகத்தில் பாப்தாதாவிடமிருந்து அனைத்துக் குழந்தைகளுக்கும் கிரீடம் மற்றும் சிம்மாசனம் கிடைத்துள்ளது. தூய்மையின் கிரீடமும் உள்ளது என்றால் பொறுப்புகளின் கிரீடமும் உள்ளது. அழியாத ஆசனமும் உள்ளதென்றால் மன சிம்மாசனதாரியாகவும் இருக்கிறீர்கள். அத்தகைய இரட்டைக் கிரீடம் மற்றும் சிம்மாசனத்திற்கு உரியவராக ஆகிறீர்கள் என்றால் நஷா மற்றும் இலக்கு தானாகவே நினைவிருக்கும். பிறகு இந்தக் கர்மேந்திரியங்கள், இதோ வந்தேன்(கட்டளையிடுங்கள்) எதிரில் நிற்கும் என்று. யார் கிரீடம் மற்றும் ஆசனத்தை விட்டு விடுகிறார்களோ, அவர்களின் கட்டளையை எந்த ஒரு வேலையாளும் (கர்மேந்திரியம்) ஏற்று நடக்காது.சுலோகன் :

பலவீனமான சங்கல்பங்கள் தான் மகிழ்ச்சி நிறைந்தவராக ஆக்குவதற்கு பதில் கேள்விகள் நிறைந்தவராக ஆக்கி விடுகின்றது.***OM SHANTI***

Whatsapp Button works on Mobile Device only