03 August 2016

BK Murli 4 August 2016 Tamil

BK Murli 4 August 2016 Tamil

04.08.2016    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்

இனிமையான குழந்தைகளே! நீங்கள் உண்மையிலும் உண்மையான இராஜரிஷிகள், இராஜயோகிகளாக இருக்கிறீர்கள், நீங்கள் இராஜ்யத்தை அடைவதற்காக கண்டிப்பாக தூய்மையடைய வேண்டும்.கேள்வி:

எந்த ஒரு கவனம் இராஜ்யத்திற்கு தகுதி வாய்ந்தவர்களாக ஆக்குகிறது?பதில்:

படிப்பின் மீது முழுமையிலும் முழுமையான கவனம் இருந்தது என்றால் இராஜ்யம் கிடைத்து விடும். தந்தை சொல்வதை நல்ல விதமாக கேட்டு தாரணை செய்யுங்கள். தந்தை சொன்னார், குழந்தைகள் கேட்டார்கள் என்றால் இராஜ்யம் கிடைத்து விடுகிறது. கேட்கும்போது கொட்டாவி விட்டாலோ, சோம்பல் முறித்தாலோ, புத்தி அலைந்தாலோ இராஜ்யத்தை இழந்து விடுவீர்கள். ஆகையால் படிப்பின் மீது முழுமையிலும் முழுமையான கவனத்தைக் கொடுங்கள்.பாடல்:

நாம் அந்த வழியில் நடக்க வேண்டும். . .ஓம் சாந்தி.

ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்குப் புரிய வைத்துக் கொண்டிருக்கிறார். இன்று குழந்தைகளுக்கு ஹடயோகம் மற்றும் இராஜயோகம் குறித்து புரிய வைக்கிறார். அவர்கள் சொல்லிக் கொடுப்பவை அனைத்தும் ஹடயோகம், ஏனென்றால் அவர்கள் கர்ம சன்னியாசிகள் என குழந்தைகளுக்குத் தெரியும். உண்மையில் பார்க்கப் போனால் இல்லறவாசிகளுக்கு ஹடயோகம் கர்ம சன்னியாசம் கற்பிக்கக் கூடாது. அது துறவற மார்க்கம் ஆகும். அந்த தர்மமே தனியானதாகும். உங்களுடையது தேவி தேவதா தர்மமாகும். அந்த தேவி தேவதைகள் இராஜயோகத்தின் மூலமே இராஜ்யத்தை அடைந்தனர். இப்போது நீங்கள் இராஜரிஷிகளாக இருக்கிறீர்கள். யார் தூய்மையாய் இருக்கின்றனரோ அவர்கள் ரிஷி எனப்படுகின்றனர். இப்போது நீங்கள் தூய்மையாய் இருக்கிறீர்கள். தூய்மையாய் இல்லாவிட்டால் அவர்களை ரிஷி என சொல்ல முடியாது. நீங்கள் இராஜ்யத்தை அடைவதற்காக தூய்மையடைகிறீர்கள். அவர்கள் ஒன்றும் இராஜ்யத்தை அடைவதற்காக தூய்மையடைவதில்லை. தூய்மையான உலகில் நமக்கு தூய்மையான இராஜ்யம் இருந்தது என நீங்கள் அறிவீர்கள். பாரதத்தில்தான் 5 ஆயிரம் வருடங்களுக்கு முன்பு தேவி தேவதைகளின் பூஜைக்குரிய தூய்மையான இல்லற மார்க்கம் இருந்தது. இப்போது பூஜாரிகளாக தூய்மையற்றவர்களாக ஆகி விட்டனர். தூய்மையற்றவர்களாக எப்படி ஆனார்கள்? 84 பிறவிகளின் கணக்கு அல்லவா. சகஜ இராஜயோகத்தை கற்பித்துக் கொண்டிருக்கும் தந்தைதான் உங்களுக்கு 84 பிறவிகளின் கணக்கை கூறுகிறார். மற்ற தர்மத்தைப் பற்றி சன்னியாசி தர்மத்தவர் களுக்கு என்ன தெரியும்? இது தேவி தேவதைகளின் பழமையான தர்மமாகும். அது பின்னால் வரக்கூடிய தர்மமாகும். யார் வாழ்ந்திருந்து சென்றனரோ அவர்களைப் பற்றி சன்னியாசிகள் புரிந்து கொள்ள முடியாது. யார் பின்னால் வரக் கூடியவர்களோ அவர்களுக்கு புரிய வைத்தபடி செல்கின்றனர். ஹடயோகம் பலவிதமானது என நீங்கள் அறிவீர்கள். துவாபரத்திலிருந்து பக்தி மார்க்கத்துடன் ஹடயோகமும் தொடங்குகிறது. இப்போது இராஜயோகம் உள்ளது. அந்த ஹடயோகத்தை பிறவி பிறவிகளாக கற்றபடி வந்தனர். இராஜயோகத்தை நீங்கள் ஒரு பிறவியில்தான் கற்கிறீர்கள். அவர்கள் பிறவி பிறவிகளாக மறுபிறவிகள் அடைந்து ஹடயோகம் கற்கத்தான் வேண்டும். நீங்கள் இராஜயோகம் கற்பதற்காக மறுபிறவி எடுக்க வேண்டியதில்லை. இந்த இராஜயோகத்தை நீங்கள் சங்கமயுகத்தில் மட்டும்தான் கற்கிறீர்கள். இராஜ்யம் கிடைத்து விட்டது, சொர்க்கமாகி விட்டது எனும்போது மற்ற அனைத்து தர்மங்களும் முடிந்து விடுகின்றன. நீங்கள் இராஜரிஷிகளாக இருக்கிறீர்கள். ராதா கிருஷ்ணர் கூட தூய்மையானவர்கள் அல்லவா. கிருஷ்ணரை மஹாத்மா எனவும் சொல்கின்றனர். மஹாத்மாக்கள் தூய்மையாய் இருப்பார்கள். நீங்களும் கூட இப்போது மஹாத்மா மற்றும் ராஜரிஷிகளாக இருக்கிறீர்கள். மஹாத்மா என்றால் தூய்மையானவர்கள், மஹான் ஆத்மா. இந்த விசயங்கள் எந்த சாஸ்திரங்களிலும் இல்லை. சாஸ்திரங்கள் பிற்பாடு உருவாகின்றன. கதைகளைப் போல அமர்ந்து எழுதுகின்றனர்.நடந்து முடிந்ததை அமர்ந்து விளையாட்டாக உருவாக்குகின்றனர். உண்மை எதுவும் இல்லை. இப்போது தந்தை குழந்தைகளை நடைமுறையில் படிக்க வைக்கிறார். அவருடைய வரலாறு பிறகு உருவாக்கினர். யாதவர்கள், கௌரவர்கள், பாண்டவர்கள் இருந்தனர், கண்டிப்பாக சங்கமயுகத்தில் இருப்பார்கள். சங்கமயுகத்தின் வரலாற்றை அமர்ந்து உருவாக்கினார்கள். பண்டிகைகளும் அனைத்தும் சங்கமயுகத்தினுடையவையாகும். ராக்கி கட்டுவதும் கூட தூய்மை குறித்த விசயமே ஆகும். பின்னாளில் அது நினைவார்த்தமாக ஆகிறது. இங்கே தந்தையும் கூட அனைவரையும் தூய்மையாக்கி சபதம் ஏற்கச் செய்கிறார். சீக்கியர்கள் கங்கணம் கட்டுகின்றனர், அதுவும் கூட தூய்மையின் அடையாளம் ஆகும். இந்துக்கள் பூணூல் போடுகின்றனர், அதுவும் கூட தூய்மையின் அடையாளம் ஆகும். ஆனால் தூய்மையாக இருப்பதில்லை. ராக்கி கட்டிக் கொள்கின்றனர், ஆனால் தூய்மையாய் இருப்பதில்லை. முன்னாளில் பிராமணர்கள் ராக்கி கட்டிக் கொண்டிருந்தனர். இப்போது சகோதரி சகோதரனுக்கு கட்டுகிறார், அவர் பணம் கொடுக்கிறார். இவையனைத்தும் இப்போது ஃபாஷன் (பகட்டு) ஆகியுள்ளது. உண்மையில் இது தூய்மையின் விசயமாகும். தந்தை சொல்கிறார் - குழந்தைகளே, காமம் மிகப் பெரிய எதிரி ஆகும். அந்த பிராமணர்கள் யாரும் இப்படி புரிய வைப்பதில்லை. இப்போது எல்லைக்கப்பாற்பட்ட தந்தை சொல்கிறார் - குழந்தைகளே, நாங்கள் தூய்மையாய் இருப்போம் என உறுதி மொழி கொடுங்கள். ஒரு போதும் விகாரத்தில் செல்ல மாட்டோம். வந்து தூய்மையற்றவரிலிருந்து தூய்மையாக்குங்கள் என அழைக்கவும் செய்கிறீர்கள். சத்ய, திரேதா யுகங்களில் அழைப்பதில்லை. அது இராம இராஜ்யமாக உள்ளது. இது இராவண இராஜ்யம். இராமஇராஜ்யத்தில் 5 விகாரங்கள் இருப்பதில்லை. ராஜா ராணி போல பிரஜைகள்.... நாம் பாபாவிடமிருந்து சொர்க்கத்தின் இராஜ்யத்தை எடுத்துக் கொண்டிருக்கிறோம் என குழந்தைகளாகிய நீங்கள் இப்போது அறிவீர்கள். இந்த நரகத்திலிருந்து கண்டிப்பாக போக வேண்டும். தூய்மையாக்கி சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்ல தந்தை வந்துள்ளார். பிறகு நாம் ஏன் தூய்மையாகக் கூடாது? அவர்களின் ஹடயோகம் பல விதமாக உள்ளது. ஜெய்ப்பூர் மியூசியத்தில் (அருங்காட்சியகத்தில்) சென்று எத்தனை விதமான ஹடயோகிகள் உள்ளனர் என பாருங்கள். அதன் மூலம் எதுவும் நடப்பதில்லை. ஏணியில் இறங்கியபடிதான் செல்கின்றனர்.பாரதம் தூய்மையற்றதாக ஆகும்போது, இராவண இராஜ்யம் ஏற்படும்போது பூமி ஆடத் தொடங்குகிறது என தந்தை புரிய வைத்திருக்கிறார். தங்கத்தாலான மாளிகைகள் முதலான அனைத்துமே கீழே சென்றுவிடும். மாளிகை முதலானவைகளை யாரும் திருடவில்லை. அவர்கள் கோவில்களை மட்டும் கொள்ளை அடித்தனர். கொஞ்சம் ஆபரணங்கள், தங்கம் முதலானவைகளை எடுத்துச் சென்றனர். ஆபரணங்களின் மீது அனைவரையும் விட அதிக ஆர்வம் உங்களுக்குத்தான் உள்ளது. நீங்கள் சொர்க்கத்திற்கு வரும்போதே ஆபரணங்களை அணிகிறீர்கள், இராஜ்யம் செய்கிறீர்கள். மற்ற தர்மத்தவர்கள் வரும்போதே இராஜ்யம் செய்வதில்லை. நீங்கள் எல்லைக்கப்பாற்பட்ட தந்தையிடமிருந்து சொர்க்கத்தின் இராஜ்யத்தின் ஆஸ்தி எடுக்கிறீர்கள். ஆக இதை தந்தை அமர்ந்து புரிய வைக்கிறார், கீதையைப் படித்து சொல்வதில்லை. கீதையில் எழுதப்பட்டுள்ள அனைத்தையும் நான் கூறவில்லை, மனிதர்கள் நான் சொன்ன மஹாவாக்கியங்களை பிற்பாடு அமர்ந்து சாஸ்திரங்களாக உருவாக்கி யுள்ளனர். நான் சொன்னவற்றை நீங்கள்தான் கேட்டு பிறகு சென்று இராஜ்யம் செய்தீர்கள். அங்கே இந்த ஞானம் இருக்காது. இங்கேயோ தந்தை ஆசிரியராகி கற்க வைக்கிறார். தந்தை இந்தியில்தான் புரிய வைக்கிறார். இங்கே அனைவரும் இந்தி இந்தி என்றபடி இருக்கின்றனர். அது அவர்களின் மொழியாகும். உண்மையில் பழமையான மொழி இந்திதான் ஆகும். சம்ஸ்கிருதம் அல்ல. இந்த சம்ஸ்கிருதம் சங்கராச்சாரியாருக்குப் பிறகு வெளிப்பட்டது. யார் வருகின்றனரோ அவர்கள் தங்கள் மொழியை நடத்துகின்றனர். மற்றபடி பாபா கீதையை சம்ஸ்கிருத மொழியில் சொல்லவில்லை. இல்லை. குருநானக்-கிற்கு அவரது கிரந்தம் உள்ளது. அவர் சீக்கிய தர்மம் ஸ்தாபனை செய்தார், அவரையும் கூட அவதாரம் என ஏற்கின்றனர். அந்த மதத்தில் இராஜாக்களும் இருக்கின்றனர். சன்னியாசிகளின் இராஜ்யம் கிடையாது. புத்தர், கிறிஸ்து முதலானவர்கள் முதலில் இல்லறத்தில் இருந்தனர் என பாபா புரிய வைத்திருக்கிறார். இப்போது இல்லறத்தவர், தூய்மையற்ற ஆத்மா, தர்மத்தை ஸ்தாபனை செய்ய முடியாது. அவர்களுக்குள் தூய்மையான ஆத்மா பிரவேசமாகி தர்மத்தை ஸ்தாபனை செய்தது. மற்ற வித விதமான தர்மங்கள் உள்ளன. வந்து தம்முடைய சிறிய மடங்களை, சிறு தர்மங்களை ஸ்தாபனை செய்கின்றனர். கல்ப மரத்திலும் கூட காட்டப்பட்டுள்ளது அல்லவா. ஆக, ஹடயோகம் மற்றும் இராஜயோகத்திற்கிடையில் மிகவும் வித்தியாசம் உள்ளதல்லவா. இந்த விசயங்கள் புரிந்து கொள்ள வேண்டிய வையாகும். யாருக்கு புரியவில்லையோ அவர்கள் கொட்டாவி விட்டபடி, சோம்பல் முறித்தபடி இருப்பார்கள். இங்கே உங்களுக்கு பொக்கிஷம் கிடைக்கிறது. மிகப் பெரிய வருமானமாகும். நீங்கள் இரத்தினங்களால் பையை நிரப்பிக் கொள்கிறீர்கள். ஆக, இந்த கண்களை திறந்து வைத்துக் கொண்டு கேட்க வேண்டும். தூங்கி விழுந்தீர்கள் என்றால், புத்தி வெளியில் அலைந்து கொண்டிருந்தது என்றால், அவர்கள் இராஜ்யத்தை அடைய முடியாது.நீங்கள் இராஜரிஷிகள் ஆவீர்கள். இராஜ்யத்தை அடையக் கூடியவர்கள். தந்தை இராஜ்யத்தை ஸ்தாபனை செய்கிறார். ஸ்ரீ கிருஷ்ணர் செய்வதில்லை. கிருஷ்ணர் தந்தையிடம் ஆஸ்தியைப் பெறுகிறார். இப்போது உங்களுடைய தந்தை நிராகாரராக இருக்கிறார், அவரிடமிருந்து உலக இராஜ்யத்தின் ஆஸ்தியை பெற்றுக் கொண்டிருக்கிறீர்கள். எவ்வளவு செல்வந்தர்களாக நீங்கள் ஆகிறீர்கள். இங்கே ஒரே தந்தை வந்து இராஜயோகம் கற்பிக்கிறார். எனினும் சுற்றுங்கள், திரியுங்கள், உண்ணுங்கள், குடியுங்கள், தந்தையை நினைவு மட்டும் செய்யுங்கள். செல்வந்தர்கள் கண்டிப்பாக நன்றாக அனுபவிப்பார்கள். அவர்கள் தம்முடைய வருமானத்தின் பலனை அனுபவிக்கின்றனர். பனியாரம் சாப்பிடுங்கள் அல்லது ரொட்டி சாப்பிடுங்கள். தந்தையை நினைவு செய்யுங்கள். என்ன வேண்டுமானாலும் சாப்பிடுங்கள். பணம் பிறகு எதற்குத்தான் இருக்கிறது. பாபா ஏதும் தடை விதிப்பதில்லை. தந்தையிடம் நினைவின் தொடர்பை மட்டும் ஈடுபடுத்த வேண்டும். இந்த இராஜ்யத்தை ஸ்தாபனை செய்வதில் செலவு ஏதும் கிடையாது. அந்த சண்டை முதலானவைகளில் எவ்வளவு செலவாகிறது. ஆகாய விமானத்திற்காக (போருக்காக) எவ்வளவு செலவு செய்யப்படுகிறது. அது கீழே விழுந்து விட்டால் ஒரேயடியாக அனைத்தும் அழிந்து போய் விடுகின்றது. எவ்வளவு நஷ்டம் ஏற்படுகிறது. ஆக நடந்து சுற்றியபடி தந்தையை நினைவு செய்யுங்கள் என தந்தை சொல்கிறார். சுயதரிசன சக்கரத்தை சுற்றியபடி இருங்கள். நாம் 84 பிறவிகளை முடித்துள்ளோம். இப்போது வதனத்தை நோக்கிச் செல்வோம். வீட்டுக்குச் சென்று பிறகு வந்து இராஜ்யம் செய்வோம்! நீங்கள் நடிகர்கள் அல்லவா! அந்த சினிமா 2 1/2 மணி நேரம் நடக்கிறது. இந்த எல்லைக்கப்பாற்பட்ட நாடகம் 5 ஆயிரம் வருடங்கள் நடக்கிறது, இதனை மனிதர்கள்தான் அறிந்து கொள்ள முடியும். இந்த உலகம் முள் நிறைந்த காடாக உள்ளது. பெரியதிலும் பெரியதான முள் விகாரத்தினுடையது, அது முதல், இடை, கடைசி வரை துக்கம் தருகிறது. இரண்டாம் நம்பர் முள் கோபமாகும். அதனுடைய அடையாளமாகிய இந்த மகாபாரதச் சண்டையைப் பாருங்கள். ஏதாவது விசயத்தில் கோபம் வந்தது என்றால் குண்டு போடத் தொடங்கி விடுவார்கள். இப்போது உருவாக்கக் கூடிய அணுகுண்டுகள் பற்றி கேட்கவே வேண்டாம். சத்யுகத்தில் எந்த சண்டையும் நடப்பதில்லை. சங்கமயுகத்தில்தான் இந்த மகாபாரதச் சண்டையை காட்டியுள்ளனர். ஆனால் தேவதைகள் அஹிம்சையாளர்கள். நீங்கள் யோகபலத்தின் மூலம் உலகின் எஜமானர் ஆகிறீர்கள். இது அமைதியின் சக்தியாகும், இதில் நீங்கள் பேச வேண்டிய அவசியமில்லை. நினைவின் பலத்தின் மூலம் நீங்கள் பாபாவிடமிருந்து உலகின் இராஜ்யத்தை எடுக்கிறீர்கள். வித்தியாசத்தைப் பாருங்கள் எவ்வளவு உள்ளது. அறிவியலின் பலத்தின் மூலம் வினாசம் ஆகிறது. அதே அறிவியலின் மூலம் சத்யுகத்தில் நீங்கள் சுகத்தைப் பார்ப்பீர்கள். அறிவியலின் மூலம் கண்டுபிடிப்புகள் செய்கின்றனர், அதனை சுகத்திற்காக செய்கின்றனர். இவர்களும் வந்து கொஞ்சம் ஞானத்தை எடுப்பார்கள். கண்காட்சிகளில் அனைவரும் வருகின்றனர். மேலும் செல்லச் செல்ல அனைவரும் வருவார்கள். உங்களின் இந்த அமைதி சக்தியின் ஓசை எழப் போகிறது.நீங்கள் கேள்வி கேட்கிறீர்கள் - கீதையின் பகவான் யார்? இப்படி வேறு யாரும் கேட்க முடியாது. எங்கே இந்த கேள்வியை கேட்கிறீர்களோ அங்கே அதனுடன் (சம்மந்தப்பட்ட) படத்தையும் கொடுங்கள். கீதையின் பகவான் பரமபிதா பரமாத்மாவா அல்லது 84 பிறவிகளை எடுக்கும் ஸ்ரீ கிருஷ்ணரா? தூய்மை யற்றவர்களை தூய்மையாக்குபவர் தந்தைதான் ஆவார். கிருஷ்ணரின் ஆத்மா 84 பிறவிகள் எடுத்து கருப்பாகியுள்ளது. அவருக்குப் (பிரம்மாவிற்குப்) புரிய வைக்கிறார் - நீ 84 பிறவிகள் எடுத்திருக்கிறாய். உன்னுடைய பிறவிகளைப் பற்றி உனக்கு தெரியாது. நாம் 84 பிறவிகள் எப்படி எடுக்கிறோம் என்பது நடிகர்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும் அல்லவா. சன்னியாசிகளின் தர்மமே தனியானது. பாரதவாசிகளுக்கு தம்முடைய தர்மத்தைப் பற்றி தெரியாத காரணத்தால் வேறு வேறு தர்மங்களில் சென்றபடி இருக்கின்றனர். ஏதாவது குருவின் ஆசீர்வாதத்தின் மூலம் யாருக்காவது பணம் கிடைத்தது என்றால் அவர் பின்னால் சென்று விழுவார்கள். பிறகு திவாலாகி விட்டால் தன்னுடைய தலைவிதி என புலம்புவார்கள். ஆண் குழந்தை பிறந்தால் மிகவும் குஷியடைவார்கள். நல்லது, 10-12 நாட்களுக்குப் பிறகு குழந்தை இறந்து விட்டால் ஈஸ்வரனின் செயல் என்பார்கள். இவர்களைப் பிழைக்க வைப்பது என்பது என்னுடைய கைகளில் இல்லை. பாபா இப்படிப்பட்ட பல உதாரணங்களைப் பார்த்திருக்கிறார். இப்படிப்பட்டவர்கள் நிறைய பேர் உள்ளனர். இங்கே தந்தை அமர்ந்திருக்கிறார். இனிமையிலும் இனிமையான குழந்தைகளே, இப்போது தூய்மையாகுங்கள் என தந்தை குழந்தைகளுக்குப் புரிய வைக்கிறார். மிகப் பெரிய மகாபாரதச் சண்டை ஏற்பட்ட போது திரௌபதி கூப்பிட்டார் - பாபா என்னை இந்த துச்சாதனன் துகிலுரிந்து கொண்டிருக்கிறான், என்னை இவனிடமிருந்து காப்பாற்றுங்கள். 5 ஆயிரம் வருடங்களின் விசயம் இது. இந்த விசயத்தில்தான் இந்த அபலைகள் மீது கொடுமைகள் இழைக்கப்படுகின்றன. பல பெண்களும் கூட விகாரமின்றி இருக்க முடியாதவர்களாக உள்ளனர். அவர்களுக்கும் கூட சூர்ப்பனகை, புத்னா என பெயரிடப்பட்டுள்ளது. யார் விஷத்திற்காக கஷ்டங்களைக் கொடுக்கின்றனரோ அவர்கள் தான் கம்சன், ஜராசந்தன், சிசுபாலன்... இவர்கள் அனைவரும் வினாசத்தை அடையவே வேண்டியிருக்கும். இந்த சமயம் அசுரத்தனமான இராவண இராஜ்யம் உள்ளது, பிறகு ஈஸ்வரிய இராஜ்யம் ஏற்படும். 84 பிறவிகளை எப்படி எடுக்கிறோம் என இந்த முழு சக்கரத்தையும் நீங்கள் தெரிந்து கொண்டுவிட்டீர்கள். விகாரத்தில் செல்லும்போது இது மறந்து விடுகிறது. விகாரத்தில் செல்பவர்களின் முகமே வெளிறிப் போய்விடுகிறது. தாமே உணர்கின்றனர் - நாம் என்ன காரியம் செய்து விட்டோம். தந்தை சொல்கிறார் - குழந்தைகளே, இந்த விஷமான சாக்கடையில் சென்று விடாதீர்கள். இது உங்களுக்கு முதல், இடை, கடை வரை துக்கம் தரக்கூடியதாகும். இதில் விழாதீர்கள். நாங்கள் ஒருபோதும் விகாரத்தில் செல்ல மாட்டோம் என உறுதி மொழி எடுங்கள். பகவானுடைய மகா வாக்கியம் - காமம் மிகப் பெரிய எதிரியாகும். அனைத்து படங்களிலும் முதலில் இதனை எழுதுங்கள் - ஞானக்கடல், பதித பாவனர், ஞானத்தை வழங்கும் வள்ளலாகிய சிவ பகவானுடைய மகா வாக்கியம். பிறகு கிருஷ்ணரின் பெயர் மறைந்து விடும். நமக்கு கீதையின் பகவான் அமர்ந்து இதனை தெரிவிக்கிறார். அந்த ஞானத்தைத்தான் நாம் பெறுகிறோம். பகவான்தான் வந்து புதிய உலகத்தை ஸ்தாபிக்கிறார் மற்றும் பழைய உலகம் வினாசம் ஆகிறது. ருத்ர ஞான யக்ஞம் அல்லவா. சிவபாபா என்பது அசலாகும். ருத்ரபாபா என சொல்ல மாட்டார்கள். பம்பாயில் பபூல்நாத்தின் கோவிலும் இருக்கிறது. இப்போது பபூல் என்பது முள்ளை குறிப்பிடுவதாகும். பபூல்நாத் எனும் பெயரை ஏன் வைத்தனர்? இதனை யாரும் புரிந்து கொள்வதில்லை. படம் சிவபாபாவுடையதே ஆகும். மற்றபடி பல பெயர்களை வைத்துவிட்டுள்ளனர். சிவபாபாதான் வந்து முள் நிறைந்த காட்டினை மலர்கள் நிறைந்த தோட்டமாக ஆக்குகிறார். அவர்தான் உங்களுடைய பாபா (தந்தை) ஆவார். அவருடைய பெயர் சிவன் என்பதாகும். சிவபரமாத்மாய நமஹ, பிராமண தேவி தேவதாய நமஹ: வார்த்தைகள் முற்றிலும் தெளிவாக உள்ளன. இப்போது அந்த பரமபிதா பரமாத்மா அமர்ந்து இந்த ரதத்தின் மூலம் புரிய வைத்துக் கொண்டிருக்கிறார். லௌகிக தந்தை குழந்தைகளைப் பார்த்து குழந்தைகளே நம்முடைய குலத்திற்கு களங்கம் விளைவிக்காதீர்கள், எந்த கெட்ட காரியமும் செய்யாதீர்கள் என சொல்வது போல இந்த பாபாவும் கூட சொல்கிறார் - குழந்தைகளே விகாரத்தில் ஒருபோதும் செல்லக் கூடாது. தூய்மை யடையாமல் சொர்க்கத்தில் உயர் பதவியை அடைய முடியாது. மிக உயர்ந்த வருமானத்தை நீங்கள் சம்பாதித்துக் கொண்டிருக்கிறீர்கள். மற்ற அனைவரும் இழந்து கொண்டிருக்கின்றனர். சிலரிடம் கோடிகள் இருக்கலாம். பெரிய பெரிய மாளிகைகள் கட்டிக் கொண்டிருக்கின்றனர். இலட்சக்கணக்கான பணத்தை செலவு செய்து கொண்டிருக்கின்றனர். அவையனைத்தும் நேரம், பணம், வீணடிப்பது ஆகும் என நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். இவை உதவப் போவதில்லை. அனைத்தும் அழிந்து விடும். 10-12 ஆயிரம் வருடங்கள் இருக்கும் என அவர்கள் புரிந்து கொள்கின்றனர். மரணம் முன்னால் தலை மீது அமர்ந்திருக்கிறது என குழந்தைகளாகிய நீங்கள் தெரிந்திருக்கிறீர்கள். கொஞ்ச காலத்திற்குள் இந்த நில நடுக்கம் முதலானவற்றால் அனைத்தும் மண்ணுடன் மண்ணாகப் போகின்றன. நில நடுக்கம் முதலானவற்றால் எண்ணற்றவர்கள் இறந்து போவார்கள். இப்போது வினாசம் ஆகத்தான் போகிறது. வினாசத்தின் காட்சியும், ஸ்தாபனையின் காட்சியும் பார்த்திருக்கிறீர்கள். அதனையே பிறகு இந்த கண்களால் பார்க்கப் போகிறீர்கள். பக்தி மார்க்கத்தில் எவ்வளவு ஏதேதோ செய்கின்றனர், ஆனால் யாரும் வைகுண்டத்திற்குச் செல்ல முடியாது. ஞானம் இன்றி சத்கதி ஏற்பட முடியாது. இவையனைத்தும் பக்தி மார்க்கத்தில் விளையாட்டு பொம்மைகள் ஆகும். நல்லது!இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.தாரணைக்கான முக்கிய சாரம்:

1. குலத்திற்கு களங்கம் விளைவிக்கும் எந்த கெட்ட செயலையும் செய்யக் கூடாது. தூய்மையடைவதற்கான உறுதி மொழியை தனக்குத் தானே எடுக்க வேண்டும்.2. தனது நேரம், பணம், எதையும் வீணாக்கக் கூடாது. மலர்கள் நிறைந்த தோட்டத்திற்குச் செல்வதற்காக முட்களை (தன்னிடமிருந்து) நீக்க வேண்டும்.வரதானம் :

முழுமை (சம்பூர்ண) நிலை மற்றும் அந்தஸ்தின் நினைவின் மூலம் எப்போதும் உயர்ந்த காரியங்களை செய்யக் கூடிய தந்தைக்குச் சமமானவர் ஆகுக.நான் எல்லா நேரத்திலும், ஒவ்வொரு வினாடியிலும், அனைத்து கர்மங்களை செய்தபடியும், நாடக மேடையில் இருக்கிறேன் என்ற நினைவு எப்போதும் இருந்தது என்றால் அனைத்து கர்மங்களின் மீதும் கவனம் இருக்கின்ற காரணத்தால் முழுமை நிலைக்கு அருகாமையில் வந்து விடுவீர்கள். அத்துடன் தற்போதைய மற்றும் எதிர்காலத்தின் அந்தஸ்தின் நினைவும் இருப்பதன் மூலம் அனைத்து காரியங்களும் உயர்வானதாக ஆகும். இந்த இரண்டு நினைவுகளே தந்தைக்குச் சமமாக ஆக்கக் கூடியது. சமமான தன்மையில் வருவதன் மூலம் ஒருவர் மற்றவரின் மனதின் சங்கல்பங்களை எளிதாகவே பற்றிக் கொள்வார்கள். இதற்காக சங்கல்பங்களை கட்டுப்படுத்தும் சக்தி மட்டும் தேவை. தனது எண்ணங்களின் கலப்படம் இருக்கக் கூடாது.சுலோகன் :

பொறாமை மற்றும் அப்பிராப்தி (எதையும் அடையாத தன்மை) யின் காரணம் ஆசைகள் ஆகும், எங்கே அனைத்து பிராப்திகள் உள்ளனவோ அங்கே மகிழ்ச்சி இருக்கும்.***OM SHANTI***

Whatsapp Button works on Mobile Device only