06 August 2016

BK Murli 6 August 2016 Tamil

BK Murli 6 August 2016 Tamil

06.08.2016    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


இனிமையான குழந்தைகளே! நீங்கள் தங்கள் யோக பலத்தால்இந்த பழைய உலகத்தை மாற்றி புதிய உலகமாக ஆக்குகிறீர்கள், நீங்கள் இந்த ஆன்மீக சேவைக்காக எழுந்தருளியுள்ளீர்கள்.கேள்வி:

நேர்மையான, உண்மையான புருஷார்த்தி குழந்தைகளின் அடையாளம் என்ன?பதில்:

நேர்மையான குழந்தைகள் ஒருபோதும் தன்னுடைய தவறை மறைக்க மாட்டார்கள். உடனடியாக பாபாவிற்குக் கூறிவிடுவார்கள் .அவர்கள் மிகவும் அகங்காரம் (நிரகங்காரி) இல்லாதிருப்பார்கள். நான் என்ன கர்மம் செய்கின்றேனோ என்ற சுலோகம் அவர்கள் புத்தியில் இருக்கும். 2) அவர்கள் மற்றவர்கள் சேவையில் கலங்கப்படுத்துவதை வர்ணிக்க மாட்டார்கள். அவர்கள் மற்றவர்களின் அவகுணங்களைப் பார்த்து தன்னுடைய புத்தியை கெடுத்துக் கொள்ள மாட்டார்கள்.பாட்டு:-

பொறுமையாக இரு மனிதா....ஓம்சாந்தி.

இனிமையிலும் இனிமையான குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தை பொறுமையாக இருங்கள் என்கின்றார். லௌகீக தந்தை கூட தைரியம் கொடுக்கின்றார் அல்லவா? யாருக்காவது நோய் வந்து விட்டால் நாம் ஆறுதல் கூறுகின்றோம். உங்களுடைய நோயின், இந்த துக்கமான நாட்கள் மாறி சுகமான நாட்கள் வரும். அது ஸ்தூல தந்தை ஸ்தூலத்தில் தைரியம் தருகின்றார். இப்பொழுது இவர் எல்லையற்ற தந்தை, குழந்தைகளுக்கு எல்லையற்ற தைரியம் கொடுக்கின்றார். குழந்தைகளே! உங்களுடைய சுகமயமான நாட்கள் வந்து கொண்டிருக்கின்றன. இன்னும் சிறிது நாட்கள் தான் இருக்கின்றது என்கின்றார். இப்பொழுது நீங்கள் பாபாவின் மடியில் இருந்து கொண்டு மற்றவர்களுக்கும் கற்றுக் கொடுக்க வேண்டும். நீங்கள் கூட சிவ சக்திகள் தானே! சிவபாபாவின் சிவசக்திகள் மீண்டும் வெளிப்பட்டுவிட்டார்கள். இவர்கள் (கோபியர்கள்) கூட ஆத்மாகக்கள் தான். இவர்கள் அனைவரும் சிவனிடம் இருந்து சக்திகளைப் பெறுகின்றார்கள். நீங்களும் கூட சக்தியை அடைகின்றீர்கள். இதில் கிருபை, ஆசீர்வாதம் என்ற விஷயமே இல்லை என்று பாபா புரிய வைக்கின்றார். நினைவில் இருந்து சக்திகளை எடுத்துக் கொண்டே இருங்கள். நினைவால் தான் பாவ கர்மங்கள் வினாசம் ஆகும் மற்றும் நீங்கள் சக்திசாலி ஆகிக் கொண்டே இருப்பீர்கள். பழைய உலகத்தைத் திருப்பி புதிய உலகமாக ஆக்கும் நீங்கள் சிவனின் சக்தி சேனைகள் உங்களிடம் அந்தளவு சர்வ சக்திகள் இருக்கின்றது. யோக பலத்தால் நீங்கள் இந்த பழைய உலகத்தை மாற்றுகின்றீர்கள் என்பதைப் புரிந்து கொண்டீர்கள். மனிதர்கள் ஒரு விரலை தூக்கி காட்டி சைகையால் அல்லவான இறைவனை நினையுங்கள் என்கின்றார்கள். இப்பொழுது குழந்தைகள் நீங்கள் புரிந்து கொண்டீர்கள்- பாபாவின் நினைவால் கல்லால் ஆன இந்த மலை, அதாவது பழைய உலகம் மாறி விடுகின்றது. இப்பொழுது நாம் பரிஸ்தான் (சொர்க்கம்) ஸ்தாபனை செய்து கொண்டு இருக்கின்றோம். பாபா குழந்தைகளுக்குப் புரிய வைக்கின்றார்- கண்காட்சிகளில் நன்றாக சேவை செய்யுங்கள், முயற்சி செய்யுங்கள், நேரம் கிடைக்கும் போதெல்லாம் அமர்ந்து கற்றுக் கொள்ளுங்கள். மிகவும் எளிதான விஷயம். குழந்தைகளுக்கு ஒவ்வொரு விதமான கல்வி கிடைத்துக் கொண்டிருக்கின்றது. ஒவ்வொருவருக்கும் கர்ம கணக்கு உள்ளது. கன்னியாக்களின் கணக்கு நன்றாக உள்ளது. யாருக்கு திருமணம் ஆகியுள்ளதோ அவர்கள் கூறுகின்றார்கள்- இந்த நேரத்தில் நாங்கள் கன்னியர்களாக இருந்திருந்தால் இந்த வலைகளில் இருந்தெல்லாம் விடுபட்டு இருப்போம், சுதந்திரப் பறவைகளாக இருப்போம் என்கின்றார்கள். கன்னியர்கள் என்றாலே சுதந்திரப் பறவைகள். ஆனால் தீயவர்களின் தொடர்பால் நஷ்டம் ஏற்பட்டு விடுகின்றது. பெண்களுக்கு கணவன், குழந்தைகள் என்று எவ்வளவு பந்தன வலைகள் உள்ளன, இதில் பழக்க-வழக்கங்கள் என்ற வலைகள் எவ்வளவு உள்ளன. கன்னியர்களுக்கு எந்த பந்தனமும் இல்லை. இப்பொழுது பம்பாயில் கூட கன்யர்கள் தயார் ஆகின்றார்கள். நாங்கள் எங்கள் பகுதியை நாங்களே கவனித்துக் கொள்கின்றோம் என்று கூறுகின்றார்கள். அனைவரும் தன்னுடைய தொகுதிக்காக எத்தனை முயற்சி செய்கின்றார்கள். எங்களுடையது குஜராத், எங்களுடையது உ,பி. என்று கூறுகின்றார்கள். நீங்கள் இப்பொழுது தன்னுடைய சுயராஜ்யத்தை அடைந்து கொண்டு இருக்கின்றீர்கள், இதில் நான் இந்த தொகுதியைச் சேர்ந்தவன், நான் இந்த தொகுதியைச் சேர்ந்தவன் என்பதும் இருக்கக் கூடாது. நீங்கள் யாரிடமும் பொறாமை படக்கூடாது. மற்றவர்களின் அவ குணங்களைப் பார்த்து உங்கள் புத்தியை கெடுத்துக் கொள்ளக் கூடாது. நான் எத்தனை ஆத்மாக்களுக்கு, சகோதர-சகோதரிகளுக்கு சுகமான பாதை காட்டியுள்ளேன் என்று தன்னைத் தான் பாருங்கள். பாப்தாதாவின் மனதில் அமரவில்லை என்றால் சிம்மாசனத்தில் அமர முடியாது. சில குழந்தைகளுக்கு சேவையில் நல்ல ஆர்வம் உள்ளது என்று பாப்தாதா அறிவார். கொஞ்சம் கூட தேக அபிமானம் இருக்கக் கூடாது. சிலர் மிகவும் அகங்காரத்துடனிருக்கின்றார்கள். எப்பொழுதும் மற்றவர்களுடைய அவகுணங்களையே பார்க்கின்றார்கள். இவர்கள் இப்படிச் செய்கின்றார்கள், இப்படிப் பட்டவர்கள் என்று கூறாமல் நீங்கள் உங்கள் சேவையை செய்யுங்கள். பிராமண குழந்தைகளின் கடமை, சேவையில் ஈடுபடுவது. பாபா உட்கார்ந்து இருக்கின்றார், பாபாவிடம் அனைத்து செய்திகளும் வருகின்றன. ஒவ்வொருவரின் நிலயையும் பாபா அறிவார். சேவை செய்வதைப் பார்த்து மகிமையும் கூட செய்கின்றார். குழந்தைகளுக்கு சேவையில் ஆர்வம் வர வேண்டும். ஒவ்வொருவருக்கும் இந்த ஆன்மீக சேவையால்- நன்மை செய்ய வேண்டும். உலகியல் தொழில் ஜென்ம-ஜென்மமாக செய்து விட்டீர்கள். இந்தத் தொழிலை அபூர்வகமாக யாராவது தான் செய்ய முடியம். பாபா சேவையின் விதியை மிகவும் சுலபமான முறையில் புரிய வைக்கின்றார். ஒருபோதும் மற்றவர்களை நிந்தனை செய்யக் கூடாது. அவ்வாறு நிறைய பேர் செய்கின்றார்கள். நல்ல-நல்ல மகாரதிகளைக் கூட மாயா மூக்கைப் பிடிக்கின்றது. பாபாவை நினைக்கவில்லை என்றால் மாயா மூக்கைப் பிடித்து விடும். பாபா கூட கூறுகின்றார் அல்லவா- நான் சாதாரண உடலில் வந்ததைப் பார்த்து என்னை யாரும் அறிந்து கொள்வதில்லை. இப்படி-இப்படி செய்ய வேண்டும் என்று பாபாவுக்கே வழி கூறுகின்றார்கள். நிலமை அப்படி உள்ளது, பாபா சிறிது மாற்றி செய்தாலும் விரோதி ஆகி விடுகின்றார்கள். பாபாவுக்கே தன்னுடைய வழியை எழுதி அனுப்பு கின்றார்கள். பழமொழி உள்ளது அல்லவா- எலிகள் சிறைக் கூண்டில் (எலிகளுக்கு ஒரு மஞ்சள் துண்டு கிடைத்து விட்டால் அந்த மளிகைக் கடைக்கே தானே முதலாளி என்று நினைக்குமாம்) நாம் சேவையில் களங்கம் செய்து கொண்டு இருக்கின்றோம் என்று புரிந்து கொள்வதில்லை. தவறுகள் என்பதை அநேகம் பேர் செய்கின்றனர். சில நேரம் ஸ்திதி மேலும்-கீழும் ஆகிக் கொண்டு தான் வருகின்றது. ஒவ்வொரு வரும் தன்டைய நிலையைப் பாருங்கள். நாணயமான குழந்தைகள் தன்னுடைய நிலையை உடனே கூறுகின்றார்கள். சிலர் தன்னுடைய தவறுகளை மறைத்து விடுகின்றார்கள், இதில் அகங்காரம் இல்லாத நிலை வேண்டும். சேவையை அதிகரிப்பதில் ஈடுபட வேண்டும். நாம் என்ன கர்மம் செய்கின்றோமோ அதைப் பார்த்து மற்றவர்களும் செய்வார்கள்- இதை சதா நாம் கவனம் வைக்க வேண்டும். நான் யாரையாவது நிந்தனை செய்தால் மற்றவர்களும் செய்வார்கள். இது நிறைய பேருக்கு தெரிவதில்லை. நீங்கள் உங்கள் சேவையில் ஈடுபடுங்கள் என்று பாபா புரிய வைக்கின்றார். இல்லை என்றால் வருத்தப்படுவீர்கள். எதிரிகள் கூட அதிகம் ஆகின்றார்கள்.நீங்கள் இப்பொழுது சூத்திரனிலிருந்து மாறி பிரம்மா கமலவாய் மூலமாக வந்த பிராமணனாக ஆகியுள்ளீர்கள். யாரிடம் ஐந்து விகாரங்கள் இருக்கின்றதோ, அவர்கள் அசுர சம்பிரதாயம், நீங்கள் இப்பொழுது தெய்வீக சம்பரதாயத்தைச் சேர்ந்தவர்கள் ஆகிவிட்டீர்கள். நீங்கள் தேவதை ஆவதற்காக விகாரங்களின் மீது வெற்றி அடைந்து கொண்டிருக்கின்றீர்கள். இங்கு தேவதைகள் இல்லை. சத்திய யுகத்தில் தான் தேவதைகள் இருப்பார்கள். நீங்கள் இப்பொழுது தெய்வீக சம்பிரதாயத்தினராக ஆகிக் கொண்டு இருக்கின்றீர்கள்.குழந்தைகளான உங்களுக்கு இப்பொழுது புரிய வைப்பதற்காக வாய்ப்பு கிடைத்துள்ளது. கண்காட்சிகளில் புரிய வைய்யுங்கள். கண்காட்சிகளில், விழாவில் ஒவ்வொருவரின் நாடி தெரிந்து விடுகின்றது. ப்ரொஜக்டரில் யாருக்கும் புரிய வைக்க முடியாது. நேரில் புரிய வைத்தால் தான் புரிய வைக்க முடியும். கண்காட்சி வைப்பது என்பது நல்ல விஷயம், அதில் எழுதக் கூட முடியும். கண்காட்சியில் சேவை செய்ய ஆர்வம் இருக்க வேண்டும். தினந்தோறும் படித்தால் தான் போதை ஏறும். பந்தனத்தில் இருக்கக் கூடியவர்கள் என்றால், வீட்டில் இருந்து கொண்டே பாபாவை நினைத்தீர்களானால் பாவகர்மம் வினாசம் ஆகும். வீட்டில் உட்கார்ந்து கூட நினைவு செய்வது நல்லது. ஆனால் நினைவு செய்வது என்பது - குழந்தைகளுக்காக மிகவும் கடினமான விஷயம் ஆகி விட்டது. பாபாவிடமிருந்து 21 ஜென்மத்திற்கு ஆஸ்தி கிடைக்கின்றது ஆனால் அவரை நினைப்பதில்லை. நல்ல-நல்ல சொற்பொழிவு செய்யக் கூடிய மகாரதிகள் கூட பாபாவை நினைப்பதில்லை. அதிகாலையில் எழுந்திருப்பதில்லை, எழுந்தாலும் உட்கார்ந்து தூங்கி விழுகின்றார்கள். நினைப்பதற்காக காலை நேரம் தான் மிகவும் நல்லது. பக்தி மார்க்கத்தில் கூட அதிகாலை எழுந்து நினைக்கின்றார்கள். இருப்பினும் அவர்களுக்கு அது இறங்கும் கலை ஆகும். இங்கே என்னவோ ஏறும் விஷயமாக உள்ளது. மாயா எத்தனை தடைகள் போடுகின்றன. அதிகாலையில் எழுந்து பாபாவை நினைக்கவில்லை என்றால், தாரனை எப்படி ஏற்படும், பாவ கர்மங்கள் எப்படி அழியும். மற்றபடி முரளி படிப்பது- என்பது சிறிய குழந்தை கூட கற்றுக் கொண்டு புரிய வைக்க முடியும். இந்த படிப்பு பெரியவர்களுக்கானது. இது எத்தனை பெரிய பல்கலைக்கழகம். நமக்கு கற்பிக்கக் கூடியவர் யார்? இந்த போதை குழந்தைகளுக்கு இருப்பதில்லை. மாயா யாரையாவது ஏமாற்றி விட்டது என்றால், நாம் அதை பார்க்காமல் சேவையில் ஈடுபட வேண்டும். பாபாவிடம் அனைத்து செய்திகளும் வந்து கொண்டே தான் இருக்கின்றது. சிலர் தேக அபிமானத்தில் வந்து இவர்கள் இப்படி செய்கின்றார்கள், அவர்கள் இப்படி செய்கின்றார்கள் என்று மற்றவர்களை நிந்தனை செய்து கொண்டு நேரத்தை வீணாக்குகின்றார்கள். உங்களுக்கு இரவு, பகல் ஈடுபாடு இருக்க வேண்டும். உங்களுடைய தொழிலே இது தான். இது சிவபாபா, இது பிரம்மா பாபா என்று தினந்தோறும் கண்காட்சியில் புரிய வைய்யுங்கள். கல்பத்திற்கு முன்னால் கூட பிரஜா பிதா பிரம்மாவின் புகழ் பாடப்பட்டுள்ளது. பிரஜாபிதா பிரம்மா மூலமாகத் தான் மனித சிருஷ்டி படைக்கபடுகின்றது. மனிதர்களே இல்லை என்று கூற முடியாது, மனித சிருஷ்டியை படைக்கின்றார்கள் என்றால், முள்ளை மலராக ஆக்குகின்றார். பிரம்மா மூலமாக சிருஷ்டியை படைக்கின்றார் என்றால், மேலே சிருஷ்டியைப் படைப்பாரா? இங்கு தான் பிரம்மா இருக்க வேண்டும் அல்லவா? எவ்வளவு தெளிவாகப் புரிய வைக்கின்றார்.பாபா கூறுகின்றார்- நான் அநேக ஜென்மங்களின் கடைசி ஜென்மத்தில் பிரவேசம் செய்து மனிதனை தேவதை ஆக்குகின்றேன். தொழில் ஆகிய காரியங்களிலிருந்து சிறிது நேரம் ஒதுக்கி இதில் ஈடுபட வேண்டும். நேரம் கிடைக்கவில்லை என்று கூறக் கூடாது. நோய் வந்து விட்டால் பின்பு எனக்கு நேரம் இல்லை என்று சொல்ல முடியுமா? முயற்சி செய்ய வேண்டும். பிரேரணையால் ஒன்றும் செய்ய முடியாது. பகவானுக்கே பிரேரணை மூலமாக காரியம் செய்ய முடியாது எனும் போது மற்றவர்களால் எப்படி முடியும்? பகவானால் என்ன செய்ய முடியாது என்று நினைக்கின்றார்கள். இறந்தவர்களையும் உயிர்பிக்க முடியும் என்று நினைக்கின்றார்கள். அட! பகவானுக்கு நீங்கள் கூறுகின்றீர்கள் - ஹே! பதீத-பாவனரே, வந்து எங்களை பதீத நிலையிலிருந்து பாவனம் ஆக்குங்கள், மற்றபடி வேறு ஒன்றும் தேவை இல்லை என்று அழைக்கின்றீர்கள். நீங்கள் வந்து இறந்தவர்களை உயிர்ப்பியுங்கள் என்றா அழைக்கின்றீர்கள்? அவர் இருப்பதே பதீத-பாவனராக பாரதம் பாவனமாக இருந்தது. பாபா கூறுகின்றார்- நான் கல்ப-கல்பம் வந்து உங்களை பாவனம் ஆக்குகின்றேன். மாயா வந்து மீண்டும் பதீதமாக ஆக்குகின்றது. இப்பொழுது நான் மீண்டும் வந்து பாவனம் ஆக்குகின்றேன். எவ்வளவு சகஜமான விஷயங்களைக் கூறுகின்றார். யுனானி மருத்துவர்கள் பெரிய-பெரிய நோயைக் கூட வேர்-இலைகள் மூலமாக சரி செய்து விடுகின்றார், பின்பு அவர்கள் மகிமை கூட ஏற்படுகின்றது. யாருக்காவது குழந்தையோ அல்லது செல்வமோ கிடைத்தால் குருவின் கருணையால் கிடைத்தது என்கின்றார்கள். நல்லது குழந்தை இறந்து விட்டால் தலைவிதி என்கின்றார்கள். இந்த அனைத்து விஷயங்களும் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். சன்னியாசிகள் தூய்மையாக இருக்கின்றார்கள் என்றால், அவர்களுக்கு மதிப்பு ஏற்படுகின்றது. ஆனால் அவர்கள் ஹடயோகிகள், அவர்களால் இராஜயோகம் கற்பிக்க முடியாது. அவர்கள் சன்யாசிகள், நாம் இல்லறத்தைச் சேர்ந்தவர்கள், பிறகு நாம் தன்னை பின்பற்றுபவர்கள் என்று எப்படி கூற முடியும்? பாபா கூறுகின்றார்- குழந்தைகள் முழுமையாகப் பின்பற்ற வேண்டும் - மன்மனாபவ! என்னை நினைத்தீர்கள் என்றால் நீங்கள் தூய்மை அடைந்து விடுவீர்கள் மற்றும் என்னுடன் செல்லலாம். நான் முழு தூய்மையாக இருக்கின்றேன். மனிதர்கள் பதீதர்களாக ஆக்குகின்றார்கள், பாபா வந்து பாவனம் ஆக்குகின்றார். அவர் தூய்மை, சாந்தி, சுகக் கடலாக இருக்கின்றார். உங்களையும் அவ்வாறு ஆக்கிக் கொண்டு இருக்கின்றார். நீங்கள் யோக பலத்தால் ஆத்மாவை தூய்மை ஆக்குகின்றீர்கள். நமக்கு முதல் தரமான உடல் கிடைக்கும் என்று நீங்கள் அறிவீர்கள். மனிதர்களுக்கு நடைமுறையில் தேவதை ஆக்க வேண்டும். தேவதைகளைப் போல் ஆடைகளை அணிந்து கொண்டால் போதாது, முழுமையாக தன் மீது கவனம் செலுத்த வேண்டும். தேக-அபிமானம் வரக் கூடாது. பாபா நாங்கள் உங்களிடம் ஆஸ்தியை அடைந்தே தான் தீருவோம். நீங்கள் கூட நாங்கள் பாரதத்தை சிரேஷ்டாச்சாரியாக ஆக்கியே தீருவோம் என்று கூறுகின்றீர்கள். நம்பிக்கை உள்ளவர்கள் தானே கூறுவார்கள் அல்லவா? சிலர் இவ்வளவு குறைந்த காலத்தில் எப்படி செய்ய முடியும் என்று கேட்கின்றார்கள். உண்மையில் ஒருபோதும் இவ்வாறு சந்தேகம் வரக் கூடாது. சந்தேகம் வந்தால் சேவையில் பின்தங்கி விடுவார்கள். நேரம் மிகவும் குறைவாக உள்ளது. எவ்வளவு முடிகின்றதோ நன்றாக புருஷார்த்தம் செய்ய வேண்டும். சிறிது யுத்தம் மற்றும் எங்கேயாவது போராட்டம் நடந்தால் பின்பு பாருங்கள் எவ்வளவு முயற்சி செய்ய வேண்டியுள்ளது. புரிந்து கொள்வீர்கள் இல்லையா? நாம் நினைவில் முழுமையாக இருக்கவில்லை என்றால், அந்த நேரம் கூட்டத்தில் ஒன்றும் செய்ய முடியாது. அந்த நேரத்தில் மிகவும் ஆபத்துகள் வரும் ஆகையால் பாபா கூறுகின்றார் முடிந்தளவு விடுபட்டதை நிரப்புங்கள். ஏனென்றால் இது ஆத்மாக்களின் பந்தயம் ஆகும். பாபா எவ்வளவு நல்லவிதமாகப் புரிய வைக்கின்றார். அடையாளக்குறி வரை செல்வது என்றால், பாபாவின் வீட்டிற்கு சென்று பின்பு புதிய உலகத்திற்கு வர வேண்டும். மிகவும் சிறந்த பந்தயம் இது. பாபா கூறுகின்றார்- என்னை தொட்டுவிட்டு அதாவது பரந்தாமத்திற்குச் சென்று பின்பு வர வேண்டும். யோகத்தில் யார் மூழ்கி இருக்கின்றார்களோ அவர்கள் முதன்-முதலில் வருவார்கள். முக்திதாமத்திற்குச் செல்ல வேண்டும் என்று விரும்புகின்றார்கள். அதனால் பாபா கூறுகின்றார்- என்னை நினைத்தால் சென்று விடலாம். முக்திதாமம் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும் மீண்டும் நடிப்பதற்காக வருவீர்கள். மோட்சம் யாருக்கும் கிடைக்காது. ஈஸ்வரிய பூளோக-சரித்திரத்தில் மோட்சம் என்ற வார்த்தையே இல்லை. ஒரு வினாடியில் உங்களுக்கு ஜீவன் முக்தி கிடைக்கின்றது, மற்ற அனைவரும் முக்திக்குப் போய் விடுவார்கள். இராவண இராஜ்யத்திலிருந்து முக்தி அவசியம் கிடைக்க வேண்டும், யார் புருஷார்த்தம் செய்கின்றார்களோ அவர்கள் உயர்ந்த பதவி அடைவார்கள். குழந்தைகள் மிகவும் இனிமையாக இருக்க வேண்டும். சுபாவம் மிகவும் இனிமையாக இருக்க வேண்டும். கோபம் கொள்ளக் கூடாது, துர்வாச முனிவரின் பெயர் தெரியுமல்லவா? இந்த இராஜ ரிஷிகளிலிலும் சிலர் இப்படி உள்ளார்கள். சதா தன்னுடைய மனதில் கையை வைத்து பார்க்க வேண்டும் நான் என்ன செய்கின்றேன்! இந்த நிலையில் இருந்தால், எனக்கு என்ன பதவி கிடைக்கும்! சேவை செய்யவில்லை என்றால், தனக்குச் சமம் ஆக்கவில்லை என்றால், என்ன பதவி கிடைக்கும். சிறிது கிடைத்தவுடனேயே மகிழ்ச்சி அடையக் கூடாது. பாபா கூறுகின்றார்- குழந்தைகளுக்கு முழு இராஜ்யத்தைக் கொடுப்பதற்கு நான் வந்துள்ளேன் என்கின்றார். அதனால் நம்பிக்கை வைத்து செய்து காட்ட வேண்டும். சொல்வதால் மட்டும் ஒன்றும் செய்ய முடியாது. பாபா சேவையில் எலும்பு தேய சேவை செய்ய வேண்டும். செய்யவும் செய்கின்றார்கள். ஆனால் சிலநேரம் தேக அபிமானம் வந்தவுடன் போதையில் வந்து விழுந்து விடுகின்றார்கள். மாயா கூட பயில்வான் குறைந்தவனல்ல. பாபாவின் ஸ்ரீமத்படி நடக்கவில்லை என்றால் மாயா யுத்தம் செய்கின்றது, அதனால் பாபாவிடம் இருந்து விடுதலைப் பத்திரம் கொடுக்கச் செய்து விடுகின்றது. பாபா சுகதாமத்திற்கு எஜமானன் ஆக்குகின்றார் என்றால், தன் மீது இரக்கப்பட வேண்டும். பாபாவின் வழி மிகவும் எளிதாக உள்ளது. மாயாவின் புயல் மிகவும் வரும், ஆனால் மஹாவீர் ஆக வேண்டும். நல்லது!இனிமையிலும் இனிமையான செல்லமான குழந்தைகளுக்கு தாய் தந்தையின் அன்பு வணக்கங்கள், மேலும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீக தந்தையின் நமஸ்தே.தாரணைக்கான முக்கிய சாரம்:-

1) சேவையில் ஆர்வம் வைத்து தனக்கும் மற்றும் மற்றவர்களுக்கும் நன்மை செய்ய வேண்டும். மற்றவர்கள் சேவையில் களங்கம் செய்தால் வர்ணனை செய்யக் கூடாது. மற்றவர்களின் சிந்தனையில் தன்னுடைய நேரத்தை வீணாக்கக் கூடாது.2) நாணயமாக மற்றும் அகங்காரமற்றவராகி சேவையில் முன்னேற வேண்டும். அதிகாலையில் எழுந்து பாபாவை மிகவும் அன்போடு நினைவவு செய்ய வேண்டும். சொல்வதும்,செய்வதும் சமமாக இருக்க வேண்டும்.வரதானம்:-

ஞானம்-யோகத்தின் சக்திசாலி கிரணங்கள் மூலமாக பழைய சம்ஸ்காரம் என்ற பூச்சிகளை எரிக்கக் கூடியமாஸ்டர் ஞான சூரியன் ஆகுக.எப்படிப்பட்ட பதீதமான சூழ்நிலையையும் மாற்றுவதற்காகவும்,அதாவது பழைய சம்ஸ்காரம் என்ற பூச்சிகளை எரிப்பதற்காகவும் நான் மாஸ்டர் ஞானசூரியன் என்ற நினைவு இருக்க வேண்டும். சூரியனின் கடமை ஒளியைக் கொடுப்பது மற்றும் பூச்சிகளை அழிப்பதாகும். அதனால் ஞான-யோக சக்தியின் மூலமாக அதாவது சிரேஷ்ட செயல் மூலமாக இந்தக் கடமையை செய்து கொண்டிருங்கள். சக்தி குறைவாக இருந்தால் ஞானம் ஒளியை மட்டும் கொடுக்கும். ஆனால் பழைய சம்ஸ்காரம் என்ற பூச்சிகளை அழிக்க முடியாது ஆகையால் யோக தபஸ்யா மூலமாக சக்திசாலி ஆகுங்கள்.சுலேகன்:

சுபபாவனை, சுபஆசை என்ற சிரேஷ்ட எண்ணம் தான் சேமிப்புக் கணக்கை அதிகரிக்கின்றது.***OM SHANTI***

Whatsapp Button works on Mobile Device only