BK Murli 8 August 2016 Tamil

BK Murli 8 August 2016 Tamil


BK Murli 8 August 2016 Tamil

08.08.2016    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


இனிமையான குழந்தைகளே! எண்ணம், சொல், செயலில் யாருக்கும் துக்கம் அளிக்கக் கூடாது. ஒரு போதும் யார் மீதும் கோபப்படக் கூடாது. அன்பு மிகவும் இனிமையான ஒரு விஷயம் ஆகும். அன்பினால் யாரை வேண்டுமானாலும் வசப்படுத்த முடியும்.கேள்வி :

பாபா குழந்தைகளுக்கு இரட்டை கிரீடம் தரிக்கும் உலகத்திற்கே அதிபதியாக மாற அல்லது மிகவும் உயர்ந்தவர்களாக மாறுவதற்கு என்ன வழி கூறுகின்றார்?பதில் :

தெய்வீக குணங்களைக் கடைபிடித்து, மிக மிக இனிமையாக மாறுங்கள். ஒருவருக்கொருவர் சகோதரன் சகோதரன் மற்றும் சகோதரி சகோதரி என்ற பார்வையில் பாருங்கள். தங்களுடைய முயற்சியினால் தங்களுக்கு ராஜ திலகத்தை அளியுங்கள். 2. சுயம் ஈஸ்வர் பாபா உங்களுக்கு கற்பித்துக் கொண்டிருக்கின்றார் என்றால் படிப்பில் ரெகுலராக இருங்கள், எவ்வளவு படிக்கிறீர்களோ படிக்க வைக்கிறீர்களோ அவ்வளவு உங்களுடைய பழக்க வழக்கங்கள் சீராகும். அவ்வளவு உயர்ந்தவர்களாக மாறுவீர்கள்.ஓம் சாந்தி.

இனிமையிலும் இனிமையான செல்லமான குழந்தைகளே, இப்போது நாம் நரகத்தின் கரையை விட்டு விட்டு முன்னேறிப் போய்க் கொண்டிருக்கிறோம் என அறிகிறீர்கள். இடையில் இந்த புருஷோத்தம சங்கமயுகம் முற்றிலும் தனிப்பட்டது. கடலின் நடுவில் உங்களுடைய படகு இருக்கிறது. நீங்கள் சத்யுகத்திலும் இல்லை. கலியுகத்திலும் இல்லை. நீங்கள் புருஷோத்தம சங்கமயுக சர்வோத்தம பிராமணர் ஆவீர்கள். சங்கமயுகம் பிராமணர்களுடையதாகும். பிராமணர்கள் குடுமிக்குச் சமமானவர்கள். இது பிராமணர்களுடைய மிகச் சிறிய யுகம் ஆகும். இது ஒரே பிறவியின் யுகமாக இருக்கிறது. இது உங்களுடைய மகிழ்ச்சியின் யுகம் ஆகும். அதுவும் எந்த விசயத்தில்? பகவான் நம்மை கற்க வைக்கின்றார். இப்படிப்பட்ட மாணவர்களுக்கு எவ்வளவுக் கெவ்வளவு மகிழ்ச்சி இருக்கும். உங்களுக்கு இப்போது முழு சக்கரத்தின் ஞானமும் புத்தியில் இருக்கிறது. இப்போது நாம் பிராமணராகவும் பிறகு நாம் தேவதையாகவும் மாறுவோம். முதலில் நமது வீடு ஸ்வீட் ஹோமிற்குச் செல்வோம். பிறகு புது உலகில் நாம் பிராமணர்கள் தான் சுயதரிசன சக்கரதாரி. நாம் தான் இந்த குட்டிக்கரண விளையாட்டு விளையாடுகிறோம். இந்த விராட ரூபத்தையும் பிராமணர்களாகிய நீங்கள் தான் அறிகிறீர்கள். புத்தியில் முழு நாளும் இந்த விசயங்களை நினைவு செய்துக் கொண்டிருக்க வேண்டும்.இது உங்களுடைய மிக மிக அன்பு நிறைந்த குடும்பம் ஆகும். நீங்கள் ஒவ்வொருவரும் மிக மிக அன்புடையவராக இருக்க வேண்டும். பாபாவும் இனிமையாக இருக்கிறார். குழந்தைகளாகிய உங்களையும் அன்பாக மாற்றுகிறார். ஒரு போதும் யார் மீதும் கோபப்படக் கூடாது. எண்ணம், சொல், செயலில் யாருக்கும் துக்கம் கொடுக்கக் கூடாது. பாபா ஒரு போதும் யாருக்கும் துக்கம் கொடுப்பதில்லை. எவ்வளவு பாபாவை நினைக்கிறீர்களோ அவ்வளவு இனிமையாக மாறிக் கொண்டே இருப்பீர்கள். அவ்வளவு தான். இந்த நினைவினால் தான் படகு கரை சேரும். இதுவே நினைவு யாத்திரை யாகும். நினைவு செய்து செய்து சாந்திதாம் வழியாக சுக தாமத்திற்குப் போக வேண்டும். பாபா வந்திருப்பதே குழந்தைகளை சதா சுகமுடையவராக மாற்றுவதற்காக ஆகும். பூதங்களை விரட்டுவதற்கான யுக்தியை பாபா தெரிவிக்கின்றார். என்னை நினைவு செய்தால் இந்த பூதங்கள் வெளியேறிப் போய்விடும். யாரிடமாவது பூதம் இருந்தால் இங்கேயே என்னிடம் விட்டு விட்டு செல்லுங்கள். பாபா, வந்து எங்களுடைய பூதங்களை வெளியேற்றி அழுக்கிலிருந்து தூய்மையாக்குங்கள் என்று கூறுகிறீர்கள். எனவே பாபா எவ்வளவு மிருதுவாக மாற்றுகிறார். பாபா மற்றும் தாதா இருவரும் சேர்ந்து குழந்தைகளாகிய உங்களை அலங்காரம் செய்கின்றனர். அவர் எல்லைக்குட்பட்ட தந்தை ஆவார். இவர் எல்லைக்கப்பாற்பட்ட தந்தை ஆவார். எனவே குழந்தைகள் மிகவும் அன்போடு நடக்க வேண்டும். மேலும் நடத்த வேண்டும். அனைத்து விகாரங்களிலும் தானமாகக் கொடுக்க வேண்டும். தானம் அளித்தால் கிரகணம் விலகிப் போகும். இதில் எந்த சாக்கு போக்கு விசயமும் கிடையாது. அன்பினால் நீங்கள் யாரை வேண்டுமானாலும் வசப்படுத்தலாம். அன்போடு புரிய வையுங்கள். அன்பு மிகவும் இனிமையான விசயம் ஆகும். சிங்கத்தை, யானையை...... விலங்குகளைக் கூட மனிதர்கள் அன்பினால் வசப்படுத்துகிறார்கள். இருப்பினும் அவர்களோ அசுர மனிதர்கள். நீங்களோ இப்போது தேவதையாக மாறிக் கொண்டிருக்கிறீர்கள். எனவே தெய்வீக குணங்களைக் கடைப்பிடித்து மிக மிக இனிமையாக மாற வேண்டும். ஒருவருக்கொருவர் சகோதரன் சகோதரன் மற்றும் சகோதரன் சகோதரி என்ற பார்வையோடு பாருங்கள். ஆத்மா, ஆத்மாவிற்கு ஒரு போதும் துக்கம் கொடுக்க முடியாது. இனிமையான குழந்தைகளே ! நான் உங்களுக்கு சொர்க்கத்தின் இராஜ்ய பாகத்தை அளிக்க வந்திருக்கிறேன் என பாபா கூறுகின்றார். இப்போது உங்களுக்கு என்ன வேண்டுமோ அதை என்னிடமிருந்து அடையுங்கள். நான் உங்களை டபுள் கிரீடம் உடைய உலகத்திற்கே அதிபதியாக மாற்ற வந்திருக்கிறேன். ஆனால் நீங்கள் உழைக்க வேண்டும். நான் யார் மீதும் கிரீடம் வைக்க மாட்டேன். நீங்கள் உங்களுடைய முயற்சியினால் தான் தனக்கு இராஜ திலகத்தை வைத்துக் கொள்ள வேண்டும். பாபா முயற்சிக்கான வழியைத் தெரிவிக்கிறார். அதாவது இவ்வாறு உலகத்திற்கே அதிபதியாக டபுள் கிரீடம் உடையவராக தன்னை மாற்றிக் கொள்ளலாம். படிப்பின் மீது முழு கவனம் வைக்க வேண்டும். ஒரு போதும் படிப்பை விட்டு விடக் கூடாது. ஏதாவது ஒரு காரணத்தினால் கோபித்துக் கொண்டு படிப்பை விட்டு விட்டால் மிக மிக நஷ்டம் ஏற்படும். லாபம் மற்றும் நஷ்டத்தை பார்த்துக் கொண்டே இருங்கள். நீங்கள் ஈஸ்வரிய பல்கலைக் கழகத்தின் மாணவர்கள். ஈஸ்வரன், தந்தையிடம் படித்துக் கொண்டிருக்கிறீர்கள். படித்து பூஜைக்குரிய தேவதையாக மாறிக் கொண்டிருக்கிறீர்கள். எனவே மாணவர்கள் கூட இவ்வாறு ரெகுலராக மாற வேண்டும், மாணவ வாழ்க்கையே உயர்ந்த வாழ்க்கை. எவ்வளவு படிக்கிறீர்களோ, படிக்க வைக்கிறீர்களோ, பழக்க வழக்கங்களை திருத்திக் கொள்கிறீர்களோ அவ்வளவு உயர்ந்தவர் ஆவீர்கள்.இனிமையான குழந்தைகளே ! இப்போது உங்களுடையது திரும்பும் பயணம் ஆகும். எப்படி சத்யுகத்தில் இருந்து திரேதா, துவாபர், கலியுகம் வரை கீழே இறங்கி வந்தீர்களோ அவ்வாறே இப்போது நீங்கள் கலியுகத்திலிருந்து மேலே சத்யுகம் வரை போக வேண்டும். திரேதாயுகம் வரை வந்து விட்டால் இந்த கர்மேந்திரியங்களின் சஞ்சலம் முடிந்து போகும். ஆகவே எவ்வளவு பாபாவை நினைக்கிறீர்களோ அவ்வளவு ஆத்மாக்களாகிய உங்களிடமிருந்து ரஜோ தமோவின் துரு நீங்கிக் கொண்டே இருக்கும். மேலும் எவ்வளவு துரு நீங்குகிறதோ அவ்வளவு பாபா காந்தத்தின் கவர்ச்சி அதிகரிக்கும். கவர்ச்சி ஏற்படவில்லை என்றால், நிச்சயம் துரு பிடித்திருக்கிறது. ஒரேயடியாக துருவை நீக்கி உண்மையான தங்கமாக மாற வேண்டும். அதுவே கடைசி கர்மாதீத் நிலையாகும்.முக்கியமான விஷயம் ஆத்ம உணர்வு அடையுங்கள் என இனிமையான குழந்தைகளுக்கு பாபா புரிய வைக்கின்றார். தேகம் உட்பட தேகத்தின் அனைத்து உறவுகளையும் விட்டு விட்டு என்னை மட்டும் நினையுங்கள், நிச்சயம் தூய்மையாக வேண்டும். குமாரி தூய்மையாக இருக்கும் போது அனைவரும் அவர்களுக்கு தலை வணங்குகிறார்கள். திருமணம் செய்த பிறகு பூஜாரி ஆக வேண்டியிருக்கிறது. அனைவர் முன்பும் தலை குனிய வேண்டியிருக்கிறது. குமாரி முதலில் தாய் வீட்டில் இருக்கும் போது அவ்வளவு நிறைய உறவுகளை நினைப்பதில்லை. திருமணத்திற்கு பிறகு தேகத்தின் உறவுகள் கூட அதிகமாகிறது. பிறகு கணவர் குழந்தைகள் மீது மோகம் அதிகரிக்கிறது. மாமியார் மாமனார் அனைவரையும் நினைவில் வந்துக் கொண்டே இருப்பார்கள். முதலில் தாய் தந்தையின் மீது மட்டும் பற்று இருக்கிறது. இங்கேயோ அந்த உறவுகள் அனைத்தையும் மறக்க வேண்டியிருக்கிறது. ஏனென்றால், இவர் ஒருவரே உங்களுடைய உண்மையிலும் உண்மையான தாய் தந்தை அல்லவா ! இதுவே ஈஸ்வரிய உறவாகும். தாயும் நீயே, தந்தையும் நீயே..... என பாடுகிறார்கள். இந்த தாய் தந்தையோ உங்களை உலகத்திற்கே அதிபதியாக்குகின்றார். ஆகவே, எல்லையற்ற தந்தையாகிய என்னை நிரந்தரமாக நினையுங்கள். மேலும் மனிதர்கள் மீது எந்த பற்றும் வைக்காதீர்கள் என பாபா கூறுகின்றார். இந்த எல்லையற்ற தந்தை உங்களை சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்கிறார். அந்த இனிமையான தந்தையை மிகவும் அன்போடு நினைவு செய்துக் கொண்டே சுய தரிசன சக்கரத்தையும் சுழற்றுங்கள். இந்த நினைவின் பலத்தினால் உங்களுடைய ஆத்மா தங்கமாகி சொர்க்கத்திற்கு அதிபதியாகிறீர்கள். சொர்க்கத்தின் பெயரைக் கேட்டதும் மனம் மகிழ்ச்சி அடைகிறது. யார் நிரந்தரமாக நினைவு செய்கிறார்களோ மேலும் மற்றவர்களை நினைவு செய்ய வைக்கிறார்களோ அவர்களே உயர்ந்த பதவி அடைவார்கள். இந்த முயற்சி செய்து செய்து கடைசியில் உங்களுக்கு அந்த நிலை வந்து விடும். இந்த உலகமே பழையதாக இருக்கிறது. உடலும் பழையதாக இருக்கிறது. தேகம் உட்பட தேகத்தின் அனைத்து உறவுகளும் பழையதாக இருக்கின்றது. அவை அனைத்திலிருந்தும் புத்தியோகத்தை விலக்கி ஒரு பாபாவின் சங்கத்தில் இணைக்க வேண்டும். கடைசி காலத்தில் கூட அந்த ஒரு தந்தையின் நினைவிருக்க வேண்டும். வேறு எந்த உறவினரின் நினைவிருந்தால், பிறகு கடைசியில் அவர்கள் நினைவிற்கு வருவர். மேலும் பதவியும் குறைந்து போகும். கடைசி காலத்தில் யார் எல்லையற்ற தந்தையை நினைக்கிறார்களோ அவர்களே நரனிலிருந்து நாராயணன் ஆவார்கள். பாபாவின் நினைவிலிருந்தால் பிறகு சிவாலயம் தொலைவில் இல்லை.இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளே ! எல்லையற்ற தந்தையிடம் புத்துணர்வு அடைவதற்காக வருகிறீர்கள். ஏனென்றால் எல்லையற்ற தந்தையிடமிருந்து எல்லையற்ற உலகத்தின் ராஜ்ஜிய பதவி கிடைக்கிறது என குழந்தைகள் அறிகிறீர்கள். இதை ஒரு போதும் மறக்கக் கூடாது. இது எப்போதும் நினைவிருந்தால் குழந்தைகளுக்கு அளவற்ற மகிழ்ச்சி கிடைக்கும். இந்த பேட்ஜை போகும் போதும் வரும் போதும் அடிக்கடி பார்த்துக் கொண்டே இருங்கள். ஒரேயடியாக இதயத்தோடு இணைத்து விடுங்கள். ஆஹா, ஸ்ரீமத்தால் நாம் இவ்வாறு மாறிக் கொண்டிருக்கிறோம். அவ்வளவு தான் பேட்ஜை பார்த்து அவரிடம் அன்பு செய்துக் கொண்டே இருங்கள். பாபா, பாபா ! என்று சொல்லிக் கொண்டே இருங்கள். எப்போதும் நினைவிருக்கும். நாம் பாபா மூலமாக இவ்வாறு மாறிக் கொண்டே இருக்கிறோம்.இனிமையான குழந்தைகளே ! மிகவும் விசால புத்தி உடையவராக இருக்க வேண்டும். முழு நாளும் சேவையின் எண்ணங்கள் வந்துக் கொண்டே இருக்க வேண்டும். யார் சேவை இல்லாமல் இருக்க முடியாதோ அப்படிப்பட்ட குழந்தைகள் பாபாவிற்கு வேண்டும். குழந்தைகளாகிய நீங்கள் முழு உலககையும் முற்றுகை இட வேண்டும். அதாவது அழுக்கான உலகை தூய்மையாக்க வேண்டும். முழு உலகத்தையும் துக்க தாமத்திலிருந்து சுக தாமமாக மாற்ற வேண்டும். டீச்சருக்கு கூட படிக்க வைப்பதில் ஆனந்தம் வருகிறது அல்லவா ! இப்போது நீங்களோ மிக உயர்ந்த ஆசிரியராக இருக்கிறீர்கள். நல்ல ஆசிரியர் என்றால், அவர் நிறைய பேரை தனக்குச் சமமாக மாற்றுவார். ஒரு போதும் களைப்படைவதில்லை. ஈஸ்வரிய சேவையில் மிகவும் மகிழ்ச்சி இருக்கிறது. பாபாவின் உதவியும் கிடைக்கிறது. இது மிகப் பெரிய எல்லையற்ற வியாபாரம் ஆகும். வியாபாரிகள் தான் பணக்காரர்கள் ஆகிறார்கள். அவர்கள் இந்த ஞான மார்க்கத்தில் மிகவும் உற்சாகத்தில் துள்ளுகிறார்கள். பாபாவும் கூட எல்லையற்ற வியாபாரி அல்லவா? வியாபாரம் மிகவும் சிறப்பாக இருக்கிறது. ஆனால் இதில் மிகவும் துணிவைப் பின்பற்ற வேண்டும். புதுப் புது குழந்தைகள் பழையவர்களை விட முயற்சியில் முன்னேறிப் போக முடியும். ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட அதிர்ஷ்டம் இருக்கிறது என்றால், முயற்சி கூட ஒவ்வொருவரும் தனித்தனியாக செய்ய வேண்டும். தன்னை முழுமையாக சோதித்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு சோதித்துக் கொள்பவர்கள் ஒரேயடியாக இரவு பகல் முயற்சியில் ஈடுபடுவார்கள். நாங்கள் எங்கள் நேரத்தை ஏன் வீணாக்க வேண்டும் என்று கூறுவார்கள். எவ்வளவு முடியுமோ நேரத்தை பாதுகாப்பார்கள். தனக்குத் தானே உறுதியாக உறுதி மொழி எடுக்கிறார்கள். நாங்கள் பாபாவை ஒரு போதும் மறக்க மாட்டோம். ஸ்கர்லர்ஷிப் அடைந்தே தீருவோம். இப்படிப்பட்ட குழந்தைகளுக்கு உதவியும் கிடைக்கிறது. இப்படிப்பட்ட புதுப் புது முயற்சி செய்யும் குழந்தைகளை நீங்கள் பார்ப்பீர்கள். சாட்சாத்காரம் செய்துக் கொண்டே இருப்பார்கள். எப்படி ஆரம்பத்தில் நடந்ததோ அவ்வாறு கடைசியிலும் பார்ப்பார்கள். எவ்வளவு அருகாமையில் போகிறீர்களோ அவ்வளவு மகிழ்ச்சியில் ஆடிக் கொண்டே இருப்பார்கள். அங்கே ரத்த ஆற்றின் விளையாட்டு கூட நடந்துக் கொண்டே இருக்கும்.குழந்தைகளாகிய உங்களின் ஈஸ்வரிய பந்தயம் நடந்துக் கொண்டிருக்கிறது. எவ்வளவு முன்னால் ஓடிக் கொண்டிருக்கிறீர்களோ அவ்வளவு புது உலகத்தின் காட்சிகள் கூட அருகாமையில் வந்துக் கொண்டிருக்கும். மகிழ்ச்சி அதிகரித்துக் கொண்டிருக்கும். யாருக்கு காட்சிகள் நெருக்கத்தில் தெரியவில்லையோ அவர்களுக்கு மகிழ்ச்சியும் ஏற்படாது. இப்போது கலியுக உலகத்தின் மீது வைராக்கியமும் சத்யுக புது உலகத்தில் மிகவும் அன்பும் இருக்க வேண்டும். சிவபாபா நினைவிருந்தால் சொர்க்கத்தின் ஆஸ்தியும் நினைவு வரும். சொர்க்கத்தின் ஆஸ்தி நினைவு வந்தால் சிவபாபாவும் நினைவிற்கு வருவார். இப்போது சொர்க்கத்தின் பக்கம் சென்று கொண்டிருக்கிறோம் என குழந்தைகள் அறிகிறீர்கள். கால் நரகத்தின் பக்கமும் தலை சொர்க்கத்தின் பக்கமும் இருக்கிறது. இப்போது சிறியவர் பெரியவர் அனைவருக்கும் வயோதிக நிலையாகும். பாபாவிற்கு எப்போதும் இந்த பெருமிதம் இருக்கிறது. ஆஹா ! நான் சென்று இந்த பாலகன் கிருஷ்ணன் ஆவேன், அதற்காக முன்னதாகவே பரிசுகளையும் அனுப்பிக் கொண்டே இருக்கிறார்கள். யாருக்கு முழுமையாக நிச்சயம் இருக்கிறதோ அந்த கோபிகைகள் பரிசுகளை அனுப்புகிறார்கள். அவர்களுக்கு அதிந்தீரிய சுகம் கிடைக்கிறது. நாம் தான் அமர உலகத்தில் தேவதையாவோம். போன கல்பத்திலும் நாங்களே மாறினோம். பிறகு 84 பிறவிகளை எடுத்தோம். இந்த குட்டிக் கரண விளையாட்டு நினைவிருந்தால் ஆஹா, சௌபாக்கியம் ! எப்போதும் அளவற்ற குஷியில் இருங்கள். மிகப் பெரிய லாட்டரி கிடைத்திருக்கிறது. 5000 வருடங்களுக்கு முன்பு கூட நாம் இராஜ்ய பாக்கியத்தை அடைந்தோம். பிறகு நாளை பெறுவோம் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. போன கல்பத்தில் எப்படி பிறவி எடுத்தோமோ அப்படியே எடுப்போம். அவர்களே நம்முடைய தாய் தந்தையாக இருப்பார்கள். யார் கிருஷ்ணரின் தந்தையாக இருந்தாரோ அவரே மீண்டும் ஆவார். இப்படியெல்லாம் யார் முழு நாளும் சிந்தித்துக் கொண்டிருக்கிறார்களோ அவர்கள் மிகவும் ரமணீகத்தன்மையில் இருப்பார்கள். விசார சாகர மந்தனம் (ஞான சிந்தனை) செய்யவில்லை என்றால் ஆரோக்கியமற்றவராக இருப்பது போலாகும். நல்லது.இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு, தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.தாரணைக்கான முக்கிய சாரம் :

1. ஈஸ்வரிய சேவையில் ஒரு போதும் களைப்படையக் கூடாது. நல்ல டீச்சராகி, பிறரை தனக்குச் சமமாக மாற்றக் கூடிய சேவை செய்ய வேண்டும்.2. நினைவின் பலத்தால் ஆத்மாவை தங்கமாக மாற்ற வேண்டும். எந்த தேகதாரி மீதும் பற்று இருக்கக் கூடாது.வரதானம் :

குறைவான வார்த்தைகள் மூலமாக ஞானத்தின் அனைத்து ரகசியங்களையும் தெளிவுபடுத்தக் கூடிய யதார்த்த மற்றும் சக்திசாலி ஆகுக.எந்த ஒரு பொருளும் எவ்வளவு அதிகமாக சக்திசாலியாக இருக்கிறதோ அவ்வளவு அதனுடைய அளவு குறைவாக இருக்கிறது. அவ்வாறே தாங்கள் தங்களின் நிர்வாண் (தேகத்தைக் கடந்த) நிலையில் இருந்து பேசும் போது வார்த்தைகள் குறைவாகவும், ஆனால் யதார்த்தமானதாகவும் சக்திசாலியாகவும் இருக்கும். ஒரு வார்த்தையில் ஆயிரம் வார்த்தைகளின் ரகசியம் அடங்கி இருக்கும். இதனால் வீண் வார்த்தைகள் தானாகவே முடிந்து போகும். ஒரு வார்த்தையினால் ஞானத்தின் அனைத்து ரகசியங்களையும் தெளிவு படுத்த முடியும். விஸ்தாரம் முடிந்து போகும்.சுலோகன் :

மனதால் ‘பாபா’ என்று கூறுவதன் பொருள் மகிழ்ச்சி மற்றும் சக்தியை அடைவதாகும்.***OM SHANTI***