08 August 2016

BK Murli 9 August 2016 Tamil


BK Murli 9 August 2016 Tamil

09.08.2016    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்

இனிமையான குழந்தைகளே! இதுவரை படித்த அனைத்தையும் மறந்து ஒரு தந்தையை நினைவு செய்யுங்கள்.கேள்வி:

பாரதத்தில் சத்யுக சுயராஜ்யத்தின் ஸ்தாபனை செய்ய வேண்டும் என்றால் எந்த ஒரு பலம் வேண்டும்?பதில்:

தூய்மையின் பலம். நீங்கள் சர்வ சக்திவான் தந்தையுடன் யோகம் செய்து தூய்மை ஆகிறீர்கள். இந்த தூய்மையின் பலத்தினால் தான் சத்யுக சுயராஜ்யத்தின் ஸ்தாபனை ஆகிறது. இதில் சண்டை ஆகிய எந்த விஷயமும் கிடையாது. ஞானம் மற்றும் யோக பலமே பாவன உலகத்தின் அதிபதியாக ஆக்கி விடுகிறது. இதே பலத்தினால் ஒரு வழியின் (சத்யுக) ஸ்தாபனை ஆகி விடுகிறது.


பாடல்:

கடைசியில் அந்த நாளும் வந்தது இன்று ...

ஓம் சாந்தி.

குழந்தைகள் பாட்டு கேட்டீர்கள். இந்த பாடல் ஒன்றும் நம்மால் அமைக்கப்பட்டது கிடையாது. எப்படி மற்ற வேதங்கள் மற்றும் சாஸ்திரங்களின் சாரம் புரிய வைக்கப்படுகிறதோ. அதே போல ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள இப்பாடல்களின் சாரத்தையும் புரிய வைக்கிறார் படகோட்டி அல்லது தோட்டக்காரன் அல்லது சத்கதி அளிக்கும் வள்ளல் ஒரே ஒரு தந்தை, என்பதை குழந்தைகள் அறிந்துள்ளார்கள். ஜீவன் முக்திக்காக பக்தி செய்கிறார்கள். ஆனால் ஜீவன் முக்தி அல்லது சத்கதி அளிக்கும் வள்ளல் ஒரு பகவான் ஆவார். அதன் பொருளை குழந்தைகள் தான் புரிந்து கொள்ள முடியும். மனிதர்கள் புரியாமல் உள்ளார்கள். சத்கதி என்றால், துக்கத்திலிருந்து விடுவித்து சாந்தியின் பிராப்தி செய்விக்கப்படுவது. இங்கு இலட்சுமி நாராயணரின் இராஜ்யம் இருக்கும் பொழுது, இங்கு தூய்மை, சுகம், சாந்தி இருந்தது என்பதை பாரதவாசி குழந்தைகள் அறிந்துள்ளார்கள். இராதை கிருஷ்ணரின் இராஜ்யம் என்று கூற முடியாது. உண்மையில் இராதை தாய்மார்களின் இனத்தவர் ஆவார். அவரை அதிகமாக அன்பு செய்ய வேண்டும். பிறகும் கிருஷ்ணரை மிகவும் அன்பு செய்கிறார்கள். ஊஞ்சலில் ஊஞ்சலாட்டுகிறார்கள். கிருஷ்ணரின் ஜன்மாஷ்டமி கூட கொண்டாடுகிறார்கள். இராதைக்கு ஜெயந்தி கொண்டாடுவதில்லை. உண்மையில் இருவருக்குமே கொண்டாட வேண்டும். ஒன்றுமே புரிந்து கொள்வதில்லை. அவர்களுடைய வாழ்க்கை சரித்திரமோ யாருக்குமே தெரியாது. தந்தை வந்து தன்னுடைய மற்றும் அனைவரின் வாழ்க்கை சரித்திரத்தைக் கூறுகிறார். சிவ பரமாத்மா நமஹ என்று மனிதர்கள் கூறவும் செய்கிறார்கள். ஆனால் அவரது வாழ்க்கை சரித்திரம் பற்றி தெரியாது. மனிதனுடைய வாழ்க்கை சரித்திரத்திற்கு சரித்திரம், பூகோளம் என்று கூறப்படுகிறது. உலகத்தின் சரித்திரம், பூகோளம் பாடப்படுகிறது அல்லவா? எத்தனை தாலுக்காக்களில் ஆட்சி புரிந்து கொண்டிருந்தார்கள். எவ்வளவு பூமி மீது ஆட்சி புரிந்து கொண்டிருந்தார்கள். எப்படி ஆட்சி புரிந்தார்கள், பின் அவர்கள் எங்கு சென்றார்கள்.. இந்த விஷயங்கள் யாருக்குமே தெரியாது. குழந்தைகளாகிய உங்களுக்கு நல்ல முறையில் புரிய வைக்கப்படுகிறது. படைப்பவர் மற்றும் படைப்பினுடைய ஞானத்தை குழந்தைகளுக்குப் புரிய வைக்கிறார். உண்மையில் இது கலியுகத்தின் கடைசி மற்றும் சத்யுகத்தின் ஆரம்பம் ஆகும் என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரிந்து விட்டுள்ளது. சங்கமத்தில் தான் பரமபிதா பரமாத்மா வந்து மனிதர்களை பதீத நிலையிலிருந்து பாவன தேவதையாக ஆக்குகிறார். உத்தம புருஷர்கள் அல்லது புருஷோத்தமராக ஆக்குகிறார். ஏனெனில், இச்சமயத்தில் மனிதர்கள் உத்தமமாக இல்லை. தாழ்ந்தவர்களாக இருக்கிறார்கள். உயர்ந்த தரம், நடுத்தரம் தாழ்ந்த தரம் - சதோ, ரஜோ, தமோ ஆகிறார்கள். யார் நல்ல முறையில் ஞானம் கேட்கிறார்களோ அவர்களை சதோ குணம் உடையவர்கள் என்று கூறுவார்கள். யார் கொஞ்சமாக கேட்கிறார்களோ அவர்களை ரஜோ குணமுடையவர்கள் என்று கூறுவார்கள். யார் கேட்பதே இல்லையோ, அவர்களை தமோ குணமுடையவர்கள் என்று கூறுவார்கள். படிப்பில் கூட அவ்வாறே ஆகிறது. குழந்தைகளாகிய உங்களுக்கு சதோபிரதான படிப்பு வேண்டும். எனவே சதோபிரதானமான இலட்சுமி நாராயணர் ஆவதற்கான ஞானம் உங்களுக்கு அளிக்கப்படுகிறது. நரனிலிருந்து நாராயணர், நாரியிலிருந்து இலட்சுமி ஆக வேண்டும். கீதைக்காகக் கூட நீங்கள் இது உண்மையான கீதை என்று கூறுகிறீர்கள். இது உண்மையான கீதா பாடசாலை, அதாவது சத்திய நாராயணர் ஆவதற்கான கதை, அல்லது உண்மையான அமர கதை, உண்மையான மூன்றாவது கண்ணின் கதை என்று நீங்கள் எழுதலாம். படங்களோ எல்லாமே உங்களிடம் உள்ளது. இவற்றில் முழு ஞானம் உள்ளது. பிரஜாபிதா பிரம்மா குமார் குமாரிகளாகிய நாங்கள் பாரதத்தை சதோபிரதானமான சொர்க்கமாக ஆக்கியே விடுவோம் என்று குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது உறுதி எடுக்கிறீர்கள். நீங்கள் இந்த செய்தியைத் தெரியப்படுத்த வேண்டும். காந்தியடிகள் கூட பாவன இராஜ்யத்தை விரும்பினார். எனவே அவசியம் இப்பொழுது பதீத இராஜ்யம் ஆகும். சுயம் நாம் பதீதமாக இருக்கிறோம் என்பதை யாராலும் புரிந்து கொள்ள முடியவில்லை. இராவணன் என்பது 5 விகாரமாகும். இராம இராஜ்யம் வேண்டும் என்று கூறுகிறார்கள் என்றால், அவசியம் அசுர சம்பிரதாயம் ஆகிறார்கள் அல்லவா? ஆனால் இது யாருடைய புத்தியிலும் வருவதில்லை. எவ்வளவு பெரிய பெரிய குருமார்கள் கூட இந்த அளவிற்குப் புரிந்து கொள்வதில்லை. நாங்கள் ஸ்ரீமத் படி பிரம்மா மூலமாக 5 வருடங்களுக்கு முன்னது போலவே தெய்வீக இராஜ்யத்தை ஸ்தாபனை செய்வோம் என்று குழந்தைகளாகிய நீங்கள் அறிவிப்பு விடுக்கிறீர்கள். இது புருஷோத்தம சங்கம யுகமாகும். இப்பொழுது தாழ்ந்த புருஷர்களிலிருந்து சதோபிரதான புருஷோத்தமராக ஆகிறீர்கள். மரியாதா புருஷோத்தமர், ஆதி சனாதன தேவி தேவதா தர்மத்தினர் தான் ஆவார்கள். இப்பொழுது ஒரே ஒரு தேவி தேவதா தர்மத்தின் ஸ்தாபனை ஆகிறது. பிறகு வேறு தர்மங்கள் இருக்கவே இருக்காது. சத்யுகத்தில் ஒரு தர்மம், ஒரே ஒரு இராஜ்யம் இருந்தது என்பதை குழந்தைகளாகிய நீங்கள் நிரூபித்து புரிய வைக்கிறீர்கள். திரேதாவில் சூரிய வம்சத்திலிருந்து மாறி, சந்திர வம்சத்திற்குச் செல்கிறார்கள் என்றாலும் கூட, மொழி ஒன்றாகத் தான் இருக்கும். இப்பொழுதோ பாரதத்தில் அநேக மொழிகள் உள்ளன. நம்முடைய இராஜ்யத்தில் ஒரே ஒரு மொழி இருந்தது என்பதை குழந்தைகள் அறிந்துள்ளார்கள். தற்சமயத்திலோ நிறைய பார்த்துக் கொண்டே இருப்பீர்கள். எப்படி பிரயாணம் செய்து பக்கத்தில் வந்துக் கொண்டே இருக்கும் பொழுது இப்பொழுது நம்முடைய வீடு வந்து விட்டது என்று தங்களது தேசத்தின் பக்கம் பார்த்து குஷி அடைகிறார்கள். அவ்வளவு தான் ! இப்பொழுதே போய் சந்திக்கப் போகிறோம் என ஆனந்தப்படுவர். அதுபோன்று உங்களுக்குக் கூட உங்களது இராஜதானியின் காட்சி (சாட்சாத்காரம்) தெரிந்துக் கொண்டே இருக்கும். தங்களுடைய முயற்சியினுடைய சாட்சாத்காரம் கூட ஆகும். பாபா முயற்சி செய்யுங்கள் என்று நமக்கு எவ்வளவு சொல்கிறார் என்பதைப் பார்ப்பார்கள். இல்லையென்றால், ஐயோ ! ஐயோ ! என்பார்கள் மற்றும் பதவியும் குறைந்து போய் விடும். யோகத்தின் யாத்திரைப் பற்றி எல்லோருக்கும் கூறிக் கொண்டே இருங்கள். புரிய வைப்பதோ மிகவும் சுலபமாகும். ஏணிப்படி எவ்வளவு சுலபமானதாக உள்ளது. யார் தாமதமாக வருகிறார்களோ அவர்களுக்கு நாளுக்கு நாள் சுலபமான ஞானம் கிடைக்கிறது. ஒரு வாரம் புரிந்து கொண்ட உடனேயே சுலபமாகப் புரிந்து கொண்டு விடுவார்கள். படங்கள் அது போல தயாரிக்கப்பட்டுள்ளது. அதில் மிகச் சரியான விளக்க உரை உள்ளது. 84 பிறவிகளின் சக்கரம் முற்றிலும் சரியாக உள்ளது. இது பாரதவாசிகளுக்காக உள்ளது. குழந்தைகளாகிய உங்கள் புத்தியில் முழு ஞானம் உள்ளது. பதீத பாவனர், சத்கதி தாதா, சிவபாபாவின் வழிப் படி நாம் மீண்டும் சகஜ ராஜயோக பலத்தினாலே நம்முடைய உடல், மனம் பொருளாலே பாரதத்தை சொர்க்கமாக ஆக்குகிறோம் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். மற்றவர்களுடைய எதையும் நாம் பயன்படுத்துவது இல்லை. தங்களுடைய உடல், மனம், பொருளால் சேவை செய்கிறோம். யார் எவ்வளவு செய்கிறார்களோ அவர்கள் தங்களது வருங்காலத்திற்காக அமைக்கிறார்கள். நீங்கள் தான் வீட்டின் உறுப்பினர்கள் ஆவீர்கள். உங்கள் மூலமாகத் தான் பாபா சத்யுக சுயராஜ்யத்தை ஸ்தாபனை செய்வித்துக் கொண்டிருக்கிறார். செலவு கூட நீங்கள் தான் செய்வீர்கள். உங்களது செலவு ஒன்றும் அதிகமாக இல்லை. நீங்கள் சிவபாபாவை நினைவு மட்டும் செய்ய வேண்டும். கன்னியர்கள் என்ன செலவு செய்ய வேண்டியுள்ளது. அவர்களிடம் ஏதாவது இருக்கிறதா என்ன? பாபா குழந்தைகளிடம் என்ன கட்டணம் வாங்குவார்? எதுவும் கிடையாது. பள்ளிக் கூடங்களிலோ முதலில் கட்டணத்தின் விஷயம் பேசுகிறார்கள். அங்கு கல்விக்காக எவ்வளவு செலவாகிறது. இங்கோ சிவபாபா குழந்தைகளிடம் எப்படி பைசா வாங்குவார். சிவபாபா பைசா வாங்குவதற்கு தனக்கென்று வீடு அமைக்க வேண்டி இருக்கிறதா என்ன? குழந்தைகளாகிய நீங்கள் வருங்காலத்தில் சொர்க்கத்திற்குச் சென்று வைரம் வைடூரியங்களின் அரண்மனை அமைக்க வேண்டியுள்ளது. எனவே நீங்கள் இங்கு என்ன செய்கிறீர்களோ அதற்கான பலன் வருங்காலத்தில் உங்களுக்கு மாளிகையாக கிடைத்து விடுகிறது. இது மிகவுமே புரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும். எந்த அளவு யார் உடல், மனம், பொருளால் சேவை செய்வார்களோ அவர்கள் அங்கு அதற்கேற்றபடி அடைவார்கள். கல்லூரி அல்லது ஆஸ்பத்திரி கட்டுகிறார்கள். 10 இலட்சம், 20 இலட்சம் செலவிட வேண்டி வருகிறது. இங்கோ அவ்வளவு செலவு ஏற்படுவதில்லை. சிறிய வீட்டில் ஆன்மீகக் கல்லூரி அல்லது ஆஸ்பத்திரி அமைக்கிறார்கள். பாண்டவர்களின் ஆதி தலைவன் யாராக இருந்தார்? அவர்களோ கிருஷ்ணரின் பெயரை எழுதி விட்டுள்ளார்கள். உண்மையில் நிராகார பகவான் ஆவார். உங்களுக்கு ஸ்ரீமத் அளிப்பவர் பகவான் ஆவார். மற்றபடி எல்லோரும் இராவண இராஜ்யத்தில் இராவணனின் வழிப்படி உள்ளார்கள். இராவணினுடைய வழிப்படி எவ்வளவு அசுத்தமாக ஆகி விட்டுள்ளார்கள். இப்பொழுது இதே படைப்பு பழையதாக, பின்னர் அதுவே புதியதாக ஆகிறது. சிருஷ்டியில் பாரதம் தான் இருந்தது. பாரதம் புதியது, பாரதம் பழையது என்று கூறுவார்கள். புதிய பாரதமோ சொர்க்கமாக இருந்தது. பிறகு பாரதம் பழையதாக ஆகும் பொழுது நரகமாகும். இதற்கு பயங்கரமான நரகம் என்று கூறப்படுகிறது. மனிதர்களினுடையதே விஷயமாகும். இங்கு சுகத்தின் பெயர் அடையாளமே இல்லை. இது ஏதாவது சுகமா என்ன? சந்நியாசிகள் கூட இச்சமயத்தின் சுகத்தை காக்கை எச்சிலுக்கு சமம் என்கிறார்கள். எனவே அவர்கள் இல்லறத்தை விட்டு விடுகிறார்கள். அவர்கள் சொர்க்கம் அல்லது சத்யுகத்தின் ஸ்தாபனை செய்ய முடியாது. கிருஷ்ணபுரியோ பரமாத்மா தான் ஸ்தாபனை செய்கிறார். ஸ்ரீகிருஷ்ணரின் ஆத்மா மற்றும் சரீரம் இரண்டும் சதோபிரதானமாக இருந்தது. எனவே கிருஷ்ணரை மிகவும் அன்பு செய்கிறார்கள். ஏனெனில் தூய்மையானவர் அல்லவா? சிறிய குழந்தை பிரம்ம ஞானிக்கு சமம் என்று பாடவும் படுகிறது. சிறிய குழந்தைகளுக்கு விகாரங்கள் பற்றி தெரிந்திருப்பதில்லை. சந்நியாசிகளுக்கோ பிறகும் தெரியும். குழந்தையோ பிறவியிலேயே மகாத்மா ஆகும். குழந்தைகளுக்கோ தூய்மையான மலர் என்று கூறப்படுகிறது. ஸ்ரீகிருஷ்ணர் முதல் நம்பர் மலராவார். சொர்க்கமான புது உலகத்தின் முதல் இளவரசராவார். ஜன்மம் எடுத்த உடன் முதல் இளவரசர் என்று கூறுவார்கள். ஸ்ரீகிருஷ்ணர் போன்ற குழந்தை கிடைக்க வேண்டும் என்று கிருஷ்ணரை எல்லோரும் நினைவு செய்கிறார்கள். எப்படி ஆக வேண்டுமோ, அப்படியே ஆகுங்கள் என்று இப்பொழுது தந்தை கூறுகிறார். ஒரே ஒரு கிருஷ்ணர் மட்டும் ஆகிறாரா என்ன? பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ் எத்தனை பேர் ஆகிறார்கள்? இரண்டாவது, மூன்றாவது என்று ஆகிறார்கள் அல்லவா? எனவே இங்கு கூட பரம்பரை உள்ளது. தந்தைக்குப் பின்னால் மற்றவர் சிம்மாசனத்தில் அமருவார். எப்படி வம்சம் இருக்கிறது, அதேப் போல இது வம்சமாகும். உங்களுடைய தொடர்பே கிறிஸ்த்தவர்களுடன் உள்ளது. கிருஷ்ணர் மற்றும் கிறித்தவர் - இருவருடையதும் ஒரே ராசி ஆகும். கொடுக்கல் வாங்கல் கூட தங்களுக்குள் நிறைய நடக்கிறது. பாரதத்திலிருந்து அவர்கள் எவ்வளவு செல்வத்தை எடுத்துச் சென்றுள்ளார்கள். இப்பொழுது மீண்டும் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ரிடர்ன் சர்விஸ் செய்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த ஐரோப்பியவாசிகள் தங்களுக்குள் சண்டையிட்டு முடிந்து போய் விடுவார்கள். இதுப் பற்றிக் கதை கூட உள்ளது. இரண்டு பூனைகள் சண்டையிட்டன, நடுவில் குரங்கு வெண்ணெயை சாப்பிட்டுச் சென்று விட்டது. இந்த விஷயம் தற்போதையதாகும். அவர்கள் தங்களுக்குள் சண்டையிடுவார்கள். மேலும் இராஜ்ய பாக்கியம் உங்களுக்கு கிடைக்கப் போகிறது. இப்பொழுது குழந்தைகளாகிய உங்களுக்கு மிக ஆழமான ஞானம் உள்ளது. நாம் அனைவரும் பிரம்மா குமார் குமாரிகள் ஆவோம் என்பது குழந்தைகளாகிய உங்கள் புத்தியில் உள்ளது. அப்படியின்றி நாம் குஜராத்தி ஆவோம், நாம் வங்காளத்தினர் ஆவோம் என்பதல்ல. அப்படி கிடையாது. இந்த கருத்து வேற்றுமை கூட நீங்கிப் போய் விடவேண்டும். நாம் ஒரு தந்தையின் குழந்தைகள் ஆவோம். பிரம்மா மூலமாக சிவபாபாவின் ஸ்ரீமத்படி ஞானம் மற்றும் யோக பலத்தினாலே மீண்டும் நாம் நமது சுய ராஜ்யத்தை ஸ்தாபனை செய்து கொண்டிருக்கிறோம். யோக பலத்தினால் தான் நாம் பாவனம் ஆகிறோம். தந்தை சர்வ சக்திவான் ஆவார். அவரிடமிருந்து பலம் கிடைக்கிறது. நீங்கள் உலக அரசாட்சி பெறுகிறீர்கள். இதில் சண்டை ஆகிய எதுவுமே நீங்கள் செய்வதில்லை. முழுமையாக தூய்மையின் பலம் ஆகும். வந்து பதீத நிலையிலிருந்து பாவனமாக ஆக்குங்கள் என்று கூறவும் செய்கிறார்கள். எனவே நினைவினுடையதே பலம் ஆகும். அப்படியின்றி அங்கு சிக்கலான வேலைகளில் போய் விட்டு எல்லாவற்றையும் மறந்து விடுவதல்ல. இங்கு நேரிடையாக ஞானக்கடலின் அலைகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். நதிகளிலோ அந்த அலைகள் இருப்பதில்லை. கடலினுடைய ஒரே ஒரு அலை கூட எவ்வளவு தீமையை ஏற்படுத்தி விடுகிறது. பூகம்பம் ஏற்படும் பொழுது கடல் கூட பொங்கி எழும். கடலை வறண்டதாக ஆக்கி நிலங்கள் வாங்கி உள்ளார்கள். அந்த பூமியை பிறகு எவ்வளவு விலைக்கு விற்கிறார்கள் ! இந்த மும்பையே இருக்காது என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். இதற்கு முன்பு இந்த பாம்பே இருந்ததா என்ன? சிறிய ஒரு கிராமமாக இருந்தது. இந்த தாய்மார்கள் கள்ளம் கபடமற்றவர்கள் ஆவார்கள். அந்த அளவிற்கு எழுத படிக்கத் தெரியாது. இங்கோ படித்தது அனைத்தையும் மறக்க வேண்டும். நீங்கள் எதுவுமே படிக்கவில்லை என்றால் நல்லது. படித்திருக்கும் மனிதர்கள் புரிந்து கொள்ளும் நேரத்தில் எவ்வளவு கேள்விகள் கேட்கிறார்கள். இங்கோ தந்தையை நினைவு மட்டும் செய்ய வேண்டும். அவ்வளவே ! எந்த ஒரு தேகதாரி மனிதனை நினைவு செய்ய வேண்டிய விஷயம் கிடையாது. ஒரே ஒரு எல்லையில்லாத தந்தைக்குக் தான் மகிமை உள்ளது. உயர்ந்ததிலும் உயர்ந்தவர் ஒரு பகவான் ஆவார். பிறகு இரண்டாவது நம்பரில் பிரம்மா இருக்கிறார். அவரை விட உயர்ந்தவர் வேறு யாரும் இருப்பதில்லை. இவரை விட உயர்ந்தவர் வேறு யாரும் இருப்பதில்லை. இவரை விட பெரியவர் வேறு யாருமே கிடையாது. ஆனால் எவ்வளவு சாதாரணமாக நடக்கிறார் பாருங்கள். எப்படி சாதாரண முறையில் குழந்தைகளுடன் அமருகிறார். டிரெயினில் போகிறார். இவர் யார் என்பது யாருக்குத் தெரிகிறது. பகவான் வந்து ஞானம் அளிக்கிறார் என்றால், அவசியம் பிரவேசம் செய்து ஞானம் அளிப்பார் அல்லவா? ஒரு வேளை கிருஷ்ணராக இருந்தார் என்றால் ஒரே கூட்டம் கூடிப் போய் விட்டிருக்கும். பின் படிப்பிக்கக் கூட முடியாது. தரிசனம் மட்டுமே செய்து கொண்டிருப்பார்கள். இங்கோ தந்தை மறைமுகமாக சாதாரண வேடத்தில் வந்து குழந்தைகளுக்கு கற்பிக்கிறார்.நீங்கள் யாருக்குமே தெரியாத (மறைவான) சேனை ஆவீர்கள். ஆத்மாக்களாகிய நாம் மீண்டும் நமது இராஜ்யத்தை ஸ்தாபனை செய்து கொண்டிருக்கிறோம் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். இந்த பழைய சரீரத்தை விட்டு விட்டு புதிய தூய்மையான உடலைத் தரிப்பீர்கள். இப்பொழுது அசுர சம்பிரதாயமாக உள்ளது. பிறகு தெய்வீக சம்பிரதாயமாக ஆகி விடும். நாம் புது உலகத்தில் தெய்வீக உடலைத் தரித்து ஆட்சி புரிவேன் என்று ஆத்மா கூறுகிறது. ஆத்மா ஆண் ஆகும். உடல் இயற்கை ஆகும். ஆத்மா எப்பொழுதும் ஆண் ஆகும். மற்றபடி சரீர கணக்கு வழக்குப் படி ஆண் உடல் அல்லது பெண் உடல் கிடைக்கிறது. ஆனால் நான் அவினர்ஷி ஆத்மா ஆவேன். இந்த சக்கரம் சுற்றிக் கொண்டே இருக்கிறது. கலியுகத்தின் விநாசம் கூட அவசியம் ஆகும். விநாசத்தின் அறிகுறிகள் கூட முன்னால் பார்க்கிறீர்கள். அதே மகாபாரதப் போர் ஆகும். எனவே அவசியம் பகவான் கூட இருப்பார். எந்த ரூபத்தில், எந்த உடலில் என்பது குழந்தைகளாகிய உங்களைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. நான் முற்றிலும் சாதாரண உடலில் வருகிறேன் என்றும் கூறுகிறார். நான் கிருஷ்ணரின் உடலில் வருவது இல்லை. இவரே முழுமையாக 84 பிறவிகள் எடுக்கிறார். நான் இவருடைய அநேக பிறவிகளின் கடைசி பிறவியிலும் கடைசியில் வருகிறேன் என்று கூறவும் செய்கிறார். 84 பிறவிகள் சூரிய வம்சத்தின் குடும்பத்தார் தான் எடுக்கிறார்கள். அவர்களே முதல் நம்பரில் வருவார்கள். சாகாரி விருட்சம் மற்றும் நிராகாரி விருட்சம் - இரண்டு பற்றிய முழு ஞானம் உங்களுக்கு உள்ளது. மூலவதனத்திலிருந்து வரிசைக்கிரமமாக ஆத்மாக்கள் வருகிறார்கள். முதன் முதலில் தேவி தேவதா தர்மத்தின் ஆத்மாக்கள் வருகிறார்கள். பிறகு வரிசைக்கிரமமாக மற்ற தர்மத்தினர் வருகிறார்கள். படங்களின் விளக்கமோ மிகவும் உயர்ந்ததாக உள்ளது. குழந்தைகள் புரிய வைக்க வேண்டும். குமாரிகள் முன்னிலையில் இருக்க வேண்டும். ஒரு சில பெண் குழந்தைகள் இப்பேர்ப்பட்ட விஷயங்களைப் புரிய வைத்தார்கள் என்றால் அற்புதமாகி விடும் அல்லவா? எவ்வளவு பெயரை வெளிப்படுத்துவார்கள். லௌகீக பெயர் மற்றும் அலௌகீக பெயர் இரண்டையும் புகழடையச் செய்து விடுவார்கள். நல்லது.இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்து கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு, ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.தாரணைக்கான முக்கிய சாரம்:

1. சங்கம யுகத்தில் சிறந்த செயல்கள் செய்து புருஷோத்தமர் ஆக வேண்டும். தாழ்ந்தவராக ஆகி விடும் வகையில் அப்பேர்ப்பட்ட எந்த செயலையும் செய்யக் கூடாது.2. மறைமுகமான ரூபத்தில் தந்தைக்கு உதவி செய்பவராக ஆகி பாரதத்தை சொர்க்கமாக ஆக்கும் சேவை செய்ய வேண்டும். தங்களுடையதே உடல், மனம், பொருள் மூலமாக பாரதத்தை சொர்க்கமாக ஆக்க வேண்டும். நினைவு மற்றும் தூய்மையின் பலத்தை சேமிப்பு செய்ய வேண்டும்.வரதானம்:

சிறந்த உள்ளுணர்வு மூலமாக இல்லறத்தை முன்னேற்றத்திற்கான சாதனமாக ஆக்கிக் கொள்ளக் கூடிய சதா சக்திசாலி ஆவீர்களாக.(பிரவிருத்தி) இல்லறத்தில் முதலில் (விருத்தி) உள்ளுணர்வு மூலமாக தூய்மையாகவோ அல்லது தூய்மையற்றவராகவோ ஆகிறீர்கள். உள்ளுணர்வை எப்பொழுதும் ஒரு தந்தையுடன் இணைத்து விட்டீர்கள் என்றால், ஒரு தந்தையைத் தவிர வேறு யாருமில்லை என்ற அப்பேர்ப்பட்ட உயர்ந்த உள்ளுணர்வு இருந்தது என்றால் இல்லறம் முன்னேற்றத்திற்கான சாதனமாக ஆகி விடும். உள்ளுணர்வு உயர்ந்ததாகவும் மற்றும் சிறந்ததாகவும் இருந்தது என்றால் சஞ்சலப்பட முடியாது. இப்பேர்ப்பட்ட சிறந்த உள்ளுணர்வு மூலமாக முன்னேற்றம் செய்தபடியே கதி, சத்கதியை சுலபமாகவே அடைந்து விடுவீர்கள். பிறகு எல்லா (கம்ப்ளெயின்ட்) புகார்களும் (கம்ப்ளீட்) முடிந்து போய் விடும்.சுலோகன்:

ஒரு வேளை தூய்மை கனவு அளவிலும் கூட ஆடிப் போகிறது என்றால், நிச்சயத்தின் அஸ்திவாரம் பக்குவமாக இல்லை என்பதாகும் !***OM SHANTI***

Whatsapp Button works on Mobile Device only