10 August 2016

BK Murli 11 August 2016 Tamil

BK Murli 11 August 2016 Tamil


11.08.2016    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்

இனிமையான குழந்தைகளே! நாங்கள் எங்களுடைய யோக பலத்தின் மூலமாகவே பாரதத்தை சொர்க்கமாக ஆக்குவோம், அங்கே ஒரு தர்மம், ஒரு இராஜ்யம் இருக்கும் என நீங்கள் உத்திரவாதம் கொடுக்கின்றீர்கள்.


கேள்வி:

மாயையின் எந்த தடையிலிருந்து பாதுகாப்பாக இருக்கும் குழந்தைகள் மிக நல்ல அதிசயத்தை செய்ய முடியும்?


பதில்:

மாயையின் மிகப் பெரிய தடை என்னவென்றால் தேக அபிமானத்தில் கொண்டு வந்து ஒருவர் மற்றவரின் பெயர் உருவத்தில் சிக்க வைப்பது ஆகும். எந்த குழந்தைகள் இந்த தடையில் இருந்து பாதுகாப்பாக இருக்கின்றனரோ, மாயையின் (ஜாலவலையில்) பிடியில் இருந்து தப்பிக்கின்றனரோ அவர்கள் மிகவும் அதிசயம் செய்து காட்டுகின்றனர். அவர்களின் புத்தியில் சேவைக்கான புதிய புதிய சிந்தனைகள் ஓடிக் கொண்டே இருக்கும். ஆத்ம-அபிமானி ஆகும்போது சேவையில் முன்னேற்றம் ஏற்படும்.


ஓம் சாந்தி.

தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஸ்ரீமத் (உயர்ந்த வழி) கொடுப்பதற்காக வந்திருக்கிறார். மிகக் குறைந்த சமயத்திற்குள் நாடகத்தின் திட்டப்படி அனைத்து காரியங்களும் நடந்தாக வேண்டும் என்பதை குழந்தைகள் அறிவார்கள். நாம் இராவணபுரியை கிருஷ்ணபுரியாக ஆக்குகிறோம். இப்போது தந்தையும் குப்தமாக (மறைமுகமாக) இருக்கிறார் எனும்போது படிப்பும் கூட குப்தமாக உள்ளது. செண்டர்கள் நிறைய உள்ளன. சிறிய பெரிய கிராமங்களில் செண்டர்கள் உள்ளன மற்றும் குழந்தைகளும் நிறைய பேர் உள்ளனர். மேலும் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே இருப்பார்கள். நாங்கள் இந்த பாரத பூமியை சொர்க்கமாக்கி விட்டுத்தான் ஓய்வோம் என புத்தகங்களிலும் எழுதுகின்றனர். உங்களுக்கு இந்த பாரத பூமி மிகவும் பிடித்தமானது ஏனென்றால் இந்த பாரதமே சொர்க்கமாக இருந்தது. அதற்கு 5000 ஆயிரம் வருடங்கள் ஆகின்றன. பாரதம் மிகவும் கௌரவம் (புகழ்) மிக்கதாக இருந்தது. பிரம்மா முக வம்சாவளி குழந்தைகளாகிய உங்களுக்குத்தான் இந்த ஞானம் உள்ளது. இந்த பாரதத்தை ஸ்ரீமத்படி சொர்க்கமாக ஆக்க வேண்டியுள்ளது. அனைவருக்கும் வழி காட்ட வேண்டும், வேறு எந்த பிரச்னைக்குரிய விசயமும் இங்கே கிடையாது. இந்த படங்களைப் போடுவதன் மூலம் செய்தித்தாள்களில் என்ன விளம்பரத்தை கொடுக்கலாம் என தங்களுக்குள் அமர்ந்து ஆலோசிக்க வேண்டும். தங்களுக்குள் இது குறித்து கலந்துரையாடல் செய்ய வேண்டும் - அந்த மனிதர்கள் தங்களுக்குள் அமர்ந்து பாரதத்தை எப்படி முன்னேற்றலாம் என ஆலோசனை செய்வது போல. இந்த கொள்கை வேறுபாடுகள் அதிகமாகிவிட்டது மற்றும் பாரதத்தில் எப்படி சுகம் அமைதியின் ஸ்தாபனை ஏற்படுவது அதனை நமக்குள் கலந்தாலோசித்து சரிப்படுத்த வேண்டும். அப்படி நீங்களும் கூட ஆன்மீக பாண்டவ அரசாங்கமாக இருக்கிறீர்கள், இது பெரிய ஈஸ்வரிய அரசாங்கமாகும். பதித பாவன தந்தைதான் தூய்மையான குழந்தைகளை தூய்மையாக்கி தூய்மையான உலகின் எஜமானாக ஆக்குகிறார். இந்த ரகசியத்தை குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். ஆதி சனாதன தேவி தேவதா தர்மமே முக்கியமானதாகும். இது ருத்ர ஞான யக்ஞமாகும். ருத்ரன் என சிவபாபா சொல்லப்படுகிறார். இப்போது தந்தை உங்களை விழிப்படைய செய்திருக்கிறார், நீங்கள் மற்றவர்களை விழிப்படையச் செய்ய வேண்டும். நாடகத்தின் திட்டப்படி நீங்கள் விழிப்புணர்வூட்டிக் கொண்டிருக்கிறீர்கள். இதுவரை யார் யார் எப்படி எப்படி முயற்சி செய்திருக்கின்றனரோ அவ்வளவுதான் கல்பத்திற்கு முன்பும் கூட செய்திருக்கின்றனர். உங்களுடையது ஆன்மீக யுத்தமாகும். சில சமயம் மாயையின் தாக்கம், சில சமயம் ஈஸ்வரனுடையது. சில சமயம் சேவை நன்றாக வேகத்துடன் நடக்கிறது. சில சமயம் பல குழந்தைகளுக்குள் மாயையின் தடைகள் உண்டாகிறது. மாயை ஒரேயடியாக மயக்கமடையச் செய்து விடுகிறது. சண்டைக்கான மைதானமாக உள்ளது அல்லவா. மாயை ராமனின் குழந்தைகளை மயக்கமடையச் செய்து விடுகிறது. லவ-குசாவின் கதையும் உள்ளது அல்லவா. ராமனின் இரண்டு குழந்தைகளைக் காட்டியுள்ளனர். இங்கேயோ பாபாவுக்கு அளவற்ற குழந்தைகள் உள்ளனர். இந்த சமயத்தில் அனைத்து மனிதர்களும் கும்பகர்ணனின் தூக்கத்தில் ஆழ்ந்திருக்கின்றனர். பரமபிதா பரமாத்மா குழந்தைகளுக்கு ஆஸ்தியைக் கொடுப்பதற்காக வந்துள்ளார் என்பதும் கூட அவர்களுக்குத் தெரியாது. தந்தை பாரதத்தில்தான் வருகிறார். இந்த விசயத்தை முற்றிலுமாக மறந்து விட்டுள்ளனர். பாரதவாசிகள்தான் சொர்க்கத்தின் எஜமானர்களாக இருந்தனர். இதில் எந்த சந்தேகமும் கிடையாது. பரமபிதா பரமாத்மாவின் பிறப்பும் இங்கேதான் ஏற்படுகிறது, ஆகையால் சிவஜெயந்தியை பாரதத்தில் கொண்டாடுகின்றனர். எனவே கண்டிப்பாக அவர் வந்து ஏதாவது செய்திருப்பார். கண்டிப்பாக தந்தை வந்து சொர்க்கத்தை ஸ்தாபனை செய்திருப்பார் என புத்தியும் சொல்கிறது. தூண்டுதலின் மூலம் ஸ்தாபனை செய்ய மாட்டார். இங்கே குழந்தைகளாகிய உங்களுக்கு இராஜயோகம் கற்பிக்கப்படுகிறது. நினைவின் யாத்திரை கற்பிக்கப்படுகிறது. சங்கரன் சூட்சும வதனத்தில் இருக்கிறார். நாடகத்தின்படி வினாசம் ஆகவே வேண்டும். மகாபாரதச் சண்டையில் ஆயுதங்கள் முதலானவை பயன்படுத்தப்பட்டன என பாடப்பட்டுள்ளது. நடந்து முடிந்தவை அனைத்தும் பிறகு மீண்டும் நடக்கும். நாங்கள் யோகபலத்தின் மூலம் சொர்க்கத்தின் ஸ்தாபனை செய்வோம், அங்கே ஒரு தர்மம் இருக்கும் என நீங்கள் உத்திரவாதம் கொடுக்கிறீர்கள். எனில் மற்ற அனைத்து தர்மங்களும் எங்கே இருக்கும்? கண்டிப்பாக வினாசமாகிவிடும். இது புரிந்து கொள்ளக்கூடிய விசயமாகும். பிரம்மாவின் மூலம் ஸ்தாபனை, விஷ்ணுவின் மூலம் பாலனை என பாடப்பட்டுள்ளது சரியே. ஆனால் சங்கரனை சிவனுடன் சேர்த்துவிட்டனர், இது தவறாகும். சிவ-சங்கரன் என கூறி விடுகின்றனர், ஏனென்றால் சங்கரனுக்கு எந்த வேலையும் கிடையாது என்பதால் சிவனுடன் சேர்த்துவிட்டனர். ஆனால் எனக்கு நிறைய வேலைகள் செய்ய வேண்டியுள்ளது என சிவபாபா சொல்கிறார். அனைவரையும் தூய்மையாக்க வேண்டும். நான் இந்த பிரம்மாவின் உடலில் பிரவேசம் செய்து இந்த சரீரமுடையவர் மூலம் ஸ்தாபனையின் காரியம் செய்விக்கிறேன். சங்கரனின் நடிப்பு எதுவும் கிடையாது. சிவனின் பூஜை நடக்கிறது. சிவன்தான் நன்மை செய்பவர், பையை நிரப்பக்கூடியவர். சிவ பரமாத்மாய நமஹ என சொல்கின்றனர் அல்லவா. இந்த பிரம்மாவும் பிரஜாபிதாவாக இருக்கிறார். பிரம்மாவே விஷ்ணு, விஷ்ணுவே பிரம்மா - இவை மிகவும் ஆழமான விசயங்களாகும். இதனை குழந்தைகளாகிய நீங்கள் மட்டுமே அறிவீர்கள். புத்திசாலி குழந்தைகளின் புத்தியில் ஞானம் சட்டென புரிந்து விடுகிறது. பதித பாவன தந்தை எப்போது வருவார் என்பது மனிதர்களுக்கு கொஞ்சமும் புரிவதில்லை. இப்போது கலியுகத்தின் முடிவுக்காலமாக இருக்கிறது. ஒருவேளை கலியுகம் முடிய இன்னும் 40 ஆயிரம் வருடங்கள் உள்ளன என்றால் இன்னும் எவ்வளவுதான் தூய்மையற்றவர்களாகிக் கொண்டே செல்வார்கள். எவ்வளவு துக்கத்தைப் பொறுத்துக் கொள்வது? கலியுகத்தில் சுகம் இருக்காது. எதுவும் தெரியாததால், பாவம் அவர்கள் அடர்ந்த காரிருளில் மூழ்கியுள்ளனர்.


சேவையை எப்படி விருத்தியடைய வைக்கலாம் என குழந்தைகளாகிய நீங்கள் தங்களுக்குள் கலந்து ஆலோசனை செய்ய வேண்டும். தந்தை திட்டங்களை சொன்னபடி இருக்கிறார், பிறகு குழந்தைகள் தங்களுக்குள் சந்திக்க வேண்டும். படங்களை வைத்து நல்ல விதமாகப் புரிய வைக்க வேண்டும். இந்த படங்களும் நாடகத்தின்படி உருவாகியபடி இருக்கின்றன. என்னென்ன சமயம் கடந்து சென்று கொண்டிருக்கிறதோ அது மீண்டும் மீண்டும் அதே போல நாடகமாக நடந்தபடி இருக்கிறது. குழந்தைகளின் நிலையோ சில நேரம் மேலே, சில நேரம் கீழே என மாறியபடி இருக்கிறது. பாபாவும் சாட்சியாகிப் பார்க்கிறார். அவ்வப்போது குழந்தைகளின் மீது கிரகச்சாரம் ஏற்பட்டு விடுகிறது, அதனை நீக்குவதற்கான முயற்சிகளை செய்வித்தபடி இருக்கிறார். தந்தையை நினைவு செய்யுங்கள் என அடிக்கடி கூறுகிறார். ஆனால் தேக அபிமானத்தில் வந்து விடுகின்றனர், ஆகையால் கீழான நிலையை அடைகின்றனர். இதில் ஆத்ம அபிமானி ஆக வேண்டும். ஆனால் குழந்தைகளுக்குள் தேக அபிமானம் நிறைய உள்ளது. நீங்கள் ஆத்ம அபிமானியாக இருந்தீர்கள் என்றால் தந்தையின் நினைவும் இருக்கும், சேவையும் முன்னேறியபடி இருக்கும். யார் உயர்பதவி பெற வேண்டியவர்களோ அவர்கள் எப்போதும் சேவையில் ஈடுபட்டிருப்பார்கள். அதிர்ஷ்டத்தில் இல்லை என்றால் முயற்சியும் செய்ய மாட்டார்கள். பாபா எனக்கு தாரணையே ஏற்படவில்லை, புத்தியில் பதியவில்லை என தாங்களே சொல்கின்றனர். தாரணை ஆகவில்லை என்றால் குஷியும் இருக்காது. தாரணை செய்பவர்களுக்கு குஷியும் இருக்கும். சிவபாபா வந்து விட்டுள்ளார் என புரிந்து கொள்வார்கள். குழந்தைகளே நீங்கள் நல்ல விதமாகப் புரிந்துக் கொண்டு பிறகு மற்றவர்களுக்கும் புரிய வையுங்கள். சிலர் சேவையில் ஈடுபட்டு இருக்கின்றனர். முயற்சி செய்தபடி இருக்கின்றனர். கடந்து முடிந்த வினாடிகள் அனைத்தும் அப்படியே நாடகத்தில் பதிவாகியுள்ளன, அவை அப்படியே மீண்டும் மீண்டும் நடக்கும் என குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். வெளியில் சொற்பொழிவு செய்யும்போது பலவிதமான மனிதர்கள் வருகின்றனர் என குழந்தைகளுக்குத்தான் புரிய வைக்கப்படுகிறது. அனைவரும் வேத சாஸ்திரங்கள், கீதை முதலானவை குறித்துதான் சொற்பொழிவாற்று கின்றனர் என குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள், அவர்களுக்கு இங்கே ஈஸ்வரன் வந்து தன்னுடைய மற்றும் படைப்பின் முதல், இடை, கடைசியின் ரகசியத்தைப் புரிய வைக்கிறார் என தெரியாது. பரமாத்மா யார் என படங்களில் எவ்வளவு நல்ல விதமாக காட்டப்பட்டுள்ளது. இந்த விசயங்களை புரொஜக்டரின் மூலம் புரிய வைக்க முடியாது. கண்காட்சிகளில் படங்களும் முன்னால் வைக்கப்பட்டுள்ளன, நீங்கள் புரிய வைத்து விட்டு கேட்கலாம் - இப்போது சொல்லுங்கள், கீதையின் பகவான் யார்? ஞானக்கடல் யார்? தூய்மை, சுகம், அமைதியின் கடல், விடுவிப்பவர், வழிகாட்டி யார்? என்று. கிருஷ்ணரைச் சொல்ல முடியாது. பரமாத்மாவின் மகிமை தனிப்பட்டதாகும். முதலில் எழுத வைக்க வேண்டும், விசாரிக்க வேண்டும், அனைவரிடமும் கையொப்பமும் பெற வேண்டும்.


(ஹாலில் பறவைகள் சண்டையிட்டுக் கொள்கின்றன) இந்த சமயத்தில் முழு உலகிலும் வெறும் சண்டை சச்சரவுகள்தான் நடக்கின்றன. மனிதர்களிடமிருக்கும் 5 விகாரங்கள் பாடப்படுகின்றன. விலங்குகளின் விசயம் இல்லை. விஷமான உலகம், நிர்விகார உலகம் என்பது மனிதர்கள் குறித்து பாடப்பட்டுள்ளது. கலியுகத்தில் இருப்பது அசுர சம்பிரதாயம், சத்யுகத்தில் இருப்பது தெய்வீக சம்பிரதாயம். நாம்தான் அசுர சம்பிரதாயம் என கொஞ்சமும் புரிந்து கொள்ள முடியாத அளவு மனிதர்களின் புத்தி தமோபிரதானமாக இருக்கிறது. தேவதைகளுக்கு முன்பாகச் சென்று பாடவும் செய்கின்றனர் - நாங்கள்தான் கீழான பாவிகள், குணங்களற்ற எங்களிடம் எந்த குணமும் இல்லை. நீங்கள் அவர்களுக்கு நிரூபித்து புரிய வைக்க முடியும். ஏணிப்படத்தில் மிகவும் தெளிவாக உள்ளது. எப்படி ஏறும் கலை மற்றும் இறங்கும் கலை ஏற்படும் என காட்டப்பட்டுள்ளது. பாரதவாசிகளுக்கு ஏணிப்படிகளின் படம் மிக முக்கியமானதாகும். இது அனைத்தையும் விட நல்ல சாதனம். இந்த படத்தை வைத்து நன்றாகப் புரிய வைக்க முடியும். 84 பிறவிகளை முடித்துக் கொண்டு பிறகு முதல் பிறவி எடுக்க வேண்டும், பிறகு இறங்கும் கலையிலிருந்து மீண்டும் ஏறும் கலையில் செல்ல வேண்டும். அனைவருக்கும் எப்படி வழி காட்டலாம் என அனைவருக்குள்ளும் சிந்தனை ஓட வேண்டும். சிந்தனை செய்யாவிட்டால் எப்படி சேவை செய்ய முடியும்? படங்களை வைத்து புரிய வைப்பது மிகவும் சகஜமாக இருக்கும். சத்யுகத்திற்குப் பிறகு ஏணியில் இறங்கத்தான் வேண்டும். நாம் இப்போது இட மாற்றல் (டிரான்ஸ்ஃபர்) ஆகிக் கொண்டிருக்கிறோம் என குழந்தைகளுக்குத் தெரியும். ஆனால் நேராக சத்யுகத்திற்குச் செல்வதில்லை. முதலில் சாந்தி தாமத்திற்குச் செல்ல வேண்டும். நாம் நடிகர்கள் என நீங்கள் அறிவீர்கள். மற்றபடி உங்களிலும் கூட தன்னை இந்த நாடகத்தின் நடிகர் என புரிந்து கொள்வதில் வரிசைக்கிரமமாக உள்ளனர். நாம் எழுதவும் செய்கிறோம் - அனைத்து மனிதர்களுமே இந்த எல்லைக்கப்பாற்பட்ட நாடகத்தின் நடிகர்களாக இருந்தும் நாடகத்தின் முக்கிய நடிகர்கள், இயக்குநர் மற்றும் நாடகத்தின் முதல், இடை, கடைசி பற்றி அறிவதில்லை. ஆக அவர்கள் புரியாதவர்களாக உள்ளனர். இதை எழுதுவதில் ஏதும் பிரச்சினை இல்லை. ஒரு காதில் கேட்டு இன்னொரு காதில் விட்டு விடக்கூடாது. சேவை, சேவை மற்றும் சேவை. குழந்தைகளின் மீது சில சமயங்களில் கிரகச்சாரம் ஏற்பட்டு விடுகிறது என பாபாவுக்குத் தெரியும். கிரகச்சாரம் ஏற்படும் போது எவ்வளவு நஷ்டம் ஏற்பட்டு விடுகிறது, அதை தந்தை அறிவார். செல்வந்தர்கள் ஏழைகளாகி விடுகின்றனர். காரணம் இருக்கிறது அல்லவா. பலருக்கு பாபா புரியவும் வைக்கிறார் - குழந்தைகளே, பெயர் உருவத்தில் ஒருபோதும் மாட்டக் கூடாது. இல்லை என்றால் மாயை மூக்கைப் பிடித்து படுகுழியில் விழ வைக்கக் கூடியதாக உள்ளது. மாயை மிகவும் அடி கொடுத்து விடும். இங்கே பிரியதர்ஷன் - பிரியதர்ஷினியாக ஆகி விடக் கூடாது. சிலர் விகாரத்திற்காக பிரியதர்ஷன் - பிரியதர்ஷினியாக ஆகின்றனர், சிலர் வெறும் உருவத்தின் மீது பலியாகின்றனர். செண்டர்களில் கூட இப்படி மாயையின் தடைகள் உண்டாகின்றன என நீங்கள் அறிவீர்கள், ஒருவர் மற்றவரின் பெயர் உருவத்தில் மாட்டிக் கொள்கின்றனர். மாதர்கள் மாதர்களின் பெயர் உருவத்தில், கன்யாக்கள் கன்யாக்களின் பெயர் உருவத்தில் மாட்டிக் கொள்ளும் அளவு மாயை பலம் வாய்ந்ததாக உள்ளது. முயற்சி செய்தபடியே இருந்தபோதும், மாயை ஒரேயடியாக பிடித்துக் கொள்கிறது, ஆகையால் பாபா எச்சரிக்கை கொடுக்கிறார் - குழந்தைகளே, மாயை மிகவும் சிக்க வைக்கப் பார்க்கும், ஆனால் நீங்கள் சிக்கிக் கொள்ளக் கூடாது. தேக அபிமானத்தில் வரக்கூடாது. தன்னை ஆத்மா என புரிந்து தந்தையை நினைவு செய்ய வேண்டும். மாயையின் ஏமாற்ற வலையிலிருந்து தப்பிக்க வேண்டும். குழந்தைகளாகிய உங்களை மணம் வீசும் மலர்களாக ஆக்க வந்துள்ளார், உங்களுக்கு எந்த விசயத்திலும் சந்தேகம் எழக் கூடாது. மனதில் சந்தேகம் வந்தது என்றால் நல்ல விதமாக சேவை செய்ய முடியாது. உள்ளுக்குள் ஏமாற்றம் அடைந்தபடி இருப்பீர்கள். தைரியம் வைக்க வேண்டும். நேரம் மிகவும் குறைவாக உள்ளது. பாபாவின் முரளியைக் கேட்டீர்கள் என்றால் உற்சாகத்தில் வருவீர்கள். ஆத்மபிரகாஷ் குழந்தை சரியான முறையில் படங்களின் மீது கவனம் கொடுத்துக் கொண்டிருக்கிறார். பம்பாய்காரர்களுக்கும் கூட புத்தியில் வர வேண்டும். முக்கியமான படத்தை முதலில் உருவாக்க வேண்டும். சோதனை செய்ய வேண்டும், பாபா எப்படி படங்களால் முன்னேற்றம் காண வேண்டும் என வழி கொடுத்தபடி இருக்கிறார். ஏணிப்படிகளின் படத்தை விமான நிலையத்தில் வைப்பதற்காக ஏதாவது யுக்தியை உருவாக்க வேண்டும். இந்தப் படத்தைப் பார்த்து அனைவரும் குஷியுடையவர்கள். கடைசியில் நமக்கு வழி கொடுப்பவர் யார் என புரிந்து கொள்வார்கள். ஆக, குழந்தைகளுக்கு மிகவும் போதை ஏற வேண்டும். நல்லது!


இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.


தாரணைக்கான முக்கிய சாரம் :

1. குழந்தைகளாகிய நீங்கள் யுத்த மைதானத்தில் இருக்கிறீர்கள், மாயை இராவணனோடு உங்களுடைய யுத்தம் நடக்கிறது. மாயை மிகவும் தடைகளை ஏற்படுத்துகிறது. குழந்தைகள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.


2. அனைவரும் தம்முடைய முன்னேற்றத்தைக் குறித்து சிந்திக்க வேண்டும். படங்களை வைத்து எப்படி புரிய வைப்பது, சேவையை எப்படி அதிகரிப்பது, படங்களில் மனிதர்கள் சகஜமாக புரிந்து கொள்ளும்படியாக என்ன போடலாம் (வரையலாம்) என சிந்திக்க வேண்டும்.


வரதானம் :

புத்தியின் அன்பை ஒரு பிரியதர்ஷனிடம் ஈடுபடுத்தி எப்போதும் அவருக்கு முன்பாக இருக்கும் அனுபவம் செய்யக் கூடிய வெற்றி ரத்தினம் ஆகுக.


அன்பான புத்தி அதாவது புத்தியின் ஈடுபாட்டை ஒரு பிரியதர்ஷனிடம் வைத்திருக்க வேண்டும். யாருக்கு ஒருவரிடம் அன்பு உள்ளதோ அவர்களின் அன்பு வேறு எந்த மனிதர்களுடனோ அல்லது வசதி வாய்ப்புகளுடனோ ஏற்பட முடியாது. யார் எப்போதும் பாப்தாதாவை தன் எதிரில் இருக்கும் அனுபவத்தைச் செய்வார்களோ, அவர்களுக்கு மனதால் கூட உயர்ந்த வழி(ஸ்ரீமத்)க்கு விரோதமான வீண் எண்ணங்கள் அல்லது தீய எண்ணங்கள் வர வாய்ப்பில்லை. உங்களிடம்தான் உண்பேன், உங்களுடன்தான் அமர்வேன். . . உங்களுடன்தான் அனைத்து சம்மந்தங்களையும் வைப்பேன். . . இந்த வார்த்தைகள்தான் அவர்களின் வாயிலிருந்தும் மனதிலிருந்தும் வெளிப்படும். இப்படிப்பட்ட அன்பான புத்தியாக உள்ளவர்கள்தான் வெற்றி ரத்தினம் ஆகின்றனர்.


சுலோகன் :

வேண்டும்-வேண்டும் என்ற எண்ணம் வருவதும் கூட ராயல் ரூபத்தின் வேண்டுதல் ஆகும்.


***ஓம் சாந்தி***

Whatsapp Button works on Mobile Device only