BK Murli 29 October 2016 Tamil

bk murli today

Posted by: BK Prerana

BK Prerana is executive editor at bkmurlis.net and covers daily updates from Brahma Kumaris Spiritual University. Prerana updates murlis in English and Hindi everyday.
Twitter: @bkprerana | Facebook: @bkkumarisprerana
Share:








    BK Murli 29 October 2016 Tamil

    29.10.2015    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


    இனிமையான குழந்தைகளே! இப்பொழுது விதேகி ஆவதற்கான பயிற்சி செய்யுங்கள்.தனது இந்த அழியக்கூடிய தேகத்திலிருந்து அன்பை நீக்கி ஒரு சிவபாபாவிடம் அன்பு செலுத்துங்கள்.

     

    கேள்வி:

    இந்த எல்லையற்ற பழைய உலகின் மீது யாருக்கு வைராக்கியம் வந்துவிட்டதோ, அவர்களுடைய அடையாளம் என்னவாக இருக்கும்?

     

    பதில்:

    அவர்கள் இந்தக் கண்கள் மூலம் என்னவெல்லாம் பார்க்கின்றார்களோ, அவற்றைப் பார்த்தாலும் பார்க்காதவர்கள் போல் இருப்பார்கள். இவை அனைத்தும் அழியப் போகிறது, இவர்கள் அனைவரும் இறந்துவிட்டனர்; நாம் சாந்திதாமம், சுகதாமம் செல்லவேண்டும் என்பது அவர்களுடைய புத்தியில் இருக்கும். அவர்களுடைய பற்று அழிந்துவிடும். யோகம் (நினைவு) செய்துகொண்டே யாருடன் பேசுவார்களோ, அவர்களுக்கும் கவர்ச்சி ஏற்படும். ஞானத்தின் போதை அதிகமாக இருக்கும்.

     

    பாடல்:

    ஓம் நமோ சிவாய

     

    ஓம்சாந்தி.

    இனிமையான குழந்தைகளே ! நீங்கள் சிவபாபாவை அறிந்து கொண்டீர்கள், பிறகு, இந்தப் பாடல் பாடுவது என்பது பக்தி மார்க்கம் ஆகிவிடுகிறது என்று தந்தை கூறுகின்றார். பக்தி மார்க்கத்தைச் சேர்ந்தவர்கள் சிவாய நமஹ என்றும் கூறுகிறார்கள்; தாய், தந்தை என்றும் கூறுகிறார்கள், ஆனால், அவரை அறிந்திருக்கவில்லை. சிவபாபாவிடமிருந்து சொர்க்கத்தின் ஆஸ்தி கிடைக்க வேண்டும். குழந்தைகளாகிய உங்களுக்கு தந்தை கிடைத்திருக்கின்றார். அவரிடமிருந்து ஆஸ்தி கிடைத்துக் கொண்டிருக்கிறது. ஆகையால், தந்தையை நினைவு செய்கிறீர்கள். உங்களுக்கு சிவபாபா கிடைத்திருக்கிறார், உலகத்திற்குக் கிடைக்கவில்லை. யாருக்குக் கிடைத்திருக்கின்றாரோ, அவர்களும் கூட நல்ல முறையில் பின்பற்ற முடியவில்லை. பாபாவின் உத்தரவுகள் மிக இனிமையானவைகள் ஆகும். ஆத்ம அபிமானி ஆகுக, தேகி அபிமானி ஆகுக. பேசுவதே ஆத்மாக்களோடு தான். தேகி அபிமானி தந்தை, தேகி அபிமானி குழந்தைகளுடன் பேசுகின்றார். அவரோ ஒருவர் தான். அவரும் மதுவனத்தில் குழந்தைகளாகிய உங்களுடன் அமர்ந்திருக்கின்றார். தந்தை கற்பிக்கவே வந்திருக்கின்றார் என்று குழந்தைகளாகிய நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். இந்தப் படிப்பை சிவபாபாவைத் தவிர வேறு எவரும் கற்பிக்க இயலாது. பிரம்மாவினாலும் இயலாது, விஷ்ணுவினாலும் இயலாது. தந்தை தான்வந்து பதீதமானவர்களை பாவனம் ஆக்குகின்றார், அமரகதை சொல்கின்றார். அதுவும் இங்கு தான் சொல்வார் இல்லையா ! அமர்நாத்தில் வைத்து சொல்லமாட்டார் இல்லையா ! இந்த அமரகதையே சத்திய நாராயணருடைய கதை ஆகும். நான் உங்களுக்கு இங்கு தான் சொல்கின்றேன் என்று தந்தை கூறுகின்றார். மற்ற அனைத்தும் பக்தி மார்க்கத்தின் ஏமாற்றுதல்கள் ஆகும். அனைவருக்கும் சத்கதியை கொடுக்கும் வள்ளல் இராமர் ஒரு நிராகாரமானவரே ஆவார். அவரே பதீத பாவனர், ஞானக் கடல், சாந்திக் கடல் ஆவார். எப்பொழுது வினாச நேரம் வருகிறதோ அப்பொழுதே அவர் வருகின்றார். ஒரு பரமபிதா பரமாத்மா தான் முழு உலகின் குருவாக இருக்கமுடியும். அவர் நிராகாரமானவர் இல்லையா ! தேவதைகளைக் கூட மனிதர்கள் என்று சொல்லப்படுகின்றது. ஆனால், அவர்கள் தெய்வீக குணங்கள் நிறைந்த மனிதர்கள் ஆவார்கள். ஆகையால், அவர்கள் தேவதை என்றழைக்கப்படுகின்றனர். உங்களுக்கு இப்பொழுது ஞானம் கிடைத்துள்ளது. ஞான மார்க்கத்தில் மனோ நிலையை மிக உறுதியாக வைக்க வேண்டும். எவ்வளவு முடியுமோ தந்தையை நினைவு செய்ய வேண்டும். விதேகி ஆக வேண்டும். பிறகு, தேகத்தின் மீது ஏன் அன்பு செலுத்த வேண்டும்? சிவபாபாவை நினைவு செய்யுங்கள், பின்னர், இவரிடம் வாருங்கள் என்று பாபா உங்களுக்குக் கூறுகின்றார். இவர்கள் தாதாவைச் சந்திக்கச் செல்கின்றனர் என்று மனிதர்கள் நினைக்கின்றனர். சிவபாபாவை நினைவு செய்துகொண்டே நாம் அவரைச் சந்திக்கிறோம் என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். அங்கிருப்பதோ புள்ளியான நிராகார ஆத்மாக்கள். புள்ளியோடு சந்திக்க இயலாது. எனவே, சிவபாபாவை எவ்வாறு சந்திப்பது? ஆகையால், ஹே ஆத்மாக்களே! தன்னை ஆத்மா எனப் புரிந்து, நாம் சிவபாபாவை சந்திக்கிறோம் என்பதை புத்தியில் வையுங்கள் என்று இங்கு புரிய வைக்கப்படுகிறது. இது மிக ஆழமான இரகசியம் அல்லவா! சிலருக்கு சிவபாபாவின் நினைவு இருப்பதில்லை. எப்பொழுதும் சிவபாபாவை நினைவு செய்யுங்கள் என்று பாபா புரிய வைக்கின்றார். சிவபாபா உங்களைச் சந்திக்க வந்திருக்கிறோம். உங்களுடையவர்கள் ஆகிவிட்டோம். சிவபாபா இவருக்குள் வந்து ஞானம் சொல்கின்றார். அவரும் நிராகாரமான ஆத்மா ஆவார், நீங்களும் ஆத்மா ஆவீர்கள். என்னை நினைவு செய்யுங்கள் என்று ஒரு தந்தை தான் குழந்தைகளுக்குக் கூறுகின்றார். அதுவும் புத்தியின் மூலம் நினைவு செய்ய வேண்டும். நாம் தந்தையிடம் வந்திருக்கிறோம். பாபா இந்த பதீத சரீரத்தில் வந்திருக்கின்றார். நாம் எதிரில் வந்த உடனேயே, சிவபாபா நாங்கள் உங்களுடையவர் ஆகிவிட்டோம் என்று தீர்மானம் செய்துவிடுகிறோம். முரளிகளிலும் கூட, என்னை நினைவு செய்யுங்கள், உங்களுடைய விகர்மங்கள் வினாசம் ஆகிவிடும் என்பதையே கேட்கிறீர்கள்.

     

    இவர் அதே பதீத பாவனர் தந்தை என்று நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். அவரே உண்மையிலும் உண்மையான சத்குரு ஆவார். இப்பொழுது பாண்டவர்களாகிய உங்களுக்குத் தான் பரமபிதா பரமாத்மாவோடு அன்பான புத்தி உள்ளது. பிற அனைவருக்கும் எவர் எவருடனாவது எதிரான (அன்பற்ற) புத்தி உள்ளது. சிவபாபாவினுடையவர்களாக யார் ஆகின்றார்களோ, அவர்களுக்குக் குஷி மிகவும் அதிகமாக இருக்க வேண்டும். எந்தளவு நேரம் அருகாமையில் வருகிறதோ, அந்தளவு குஷி ஏற்படுகிறது. இப்பொழுது நமது 84 பிறவிகள் முடிந்துவிட்டன. இப்பொழுது இது கடைசி பிறவி ஆகும். நாம் நமது வீட்டிற்குச் செல்கிறோம். இந்த ஏணிப்படி (படம்) மிக நன்றாக உள்ளது, இதில் தெளிவாக உள்ளது. எனவே, குழந்தைகள் முழு நாளும் புத்தியில் சிந்திக்க வேண்டும். சித்திரம் உருவாக்கக் கூடியவர்களோ அதிகமாக விசார் சாகர் மந்தன் (எண்ணங்களின் கடலைக் கடைவது) செய்ய வேண்டும். யார் தலைமை பொறுப்பு வகிக்கிறார்களோ, அவர்களுக்கும் சிந்தனை ஓட வேண்டும். சத்யுக சிரேஷ்டமான தெய்வீக இராஜ்யத்தில் 9 இலட்சம் பேர் இருப்பார்கள் என்று நீங்கள் சவால் விடுகிறீர்கள். அதற்கான ஆதாரம் என்ன? என்று சிலர் கேட்பார்கள். இது புரிந்து கொள்வதற்கான விஷயம் அல்லவா என்று சொல்லுங்கள். சத்யுகத்தில் மரம் சிறியதாகத் தான் இருக்கும், தர்மமும் ஒன்று தான் இருக்கும். எனவே, மனிதர்களும் கூட அவசியம் குறைவாகவே இருப்பார்கள். ஏணிப்படியில் முழு ஞானம் வந்துவிடுகிறது. இந்த கும்பகர்ணன் சித்திரம் உள்ளது. பி.கு ஞான அமிர்தம் பருகக் கொடுக்கிறார், அவர் விஷம் (விகாரம்) கேட்கின்றார் என்பது போன்று உருவாக்க வேண்டும். பாபா முரளியில் அனைத்து டைரக்ஷனும் (வழிகாட்டுதல்கள்) அளித்துக் கொண்டே இருக்கின்றார். ஒவ்வொரு சித்திரத்தின் விளக்கமும் மிக நன்றாக உள்ளது. இலட்சுமி, நாராயணருடைய சித்திரத்தை வைத்துச் சொல்லுங்கள், “இந்த பாரதம் சொர்க்கமாக இருந்தது. ஒரு தர்மம் இருந்தது என்றால் எத்தனை மனிதர்கள் இருப்பார்கள்? இப்பொழுது எவ்வளவு பெரிய மரம் ஆகிவிட்டது! இப்பொழுது வினாசம் ஆகவேண்டும்”. பழைய உலகை மாற்றக்கூடியவர் ஒரு தந்தை தான். 4 - 5 சித்திரங்கள் முக்கியமானவை. அவற்றின் மூலம் பிறருக்கு உடனடியாக அம்பு தைத்துவிடும். நாடகத்தின் அனுசாரம் நாளுக்கு நாள் ஞானத்தின் பாய்ண்ட்ஸ் ஆழமானதாக வந்து கொண்டிருக்கின்றன. எனவே, சித்திரங்களிலும் மாற்றம் ஏற்படும். குழந்தைகளுடைய புத்தியிலும் கூட மாற்றம் ஏற்படுகின்றது. சிவபாபா புள்ளியாக இருக்கின்றார் என்று முன்பு நீங்கள் புரிந்திருக்கவில்லை. ஏன் முதலிலேயே அவ்வாறு கூறவில்லை என்று கேட்க முடியாது. அனைத்து விஷயங்களும் முதலிலேயே புரிய வைக்கப்படுவதில்லை என்று தந்தை கூறுகின்றார். தந்தை ஞானக் கடலாக இருக்கின்றார் என்றால் ஞானம் அளித்துக் கொண்டே தான் இருப்பார். திருத்தம் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். முதலிலேயே சொல்லமாட்டார். (சொன்னால்) பிறகு செயற்கை ஆகிவிடும். திடீரென ஏதாவது தற்செயலாக நடந்ததென்றால், பிறகு, நாடகம் என்று சொல்வார்கள். இது நடந்திருக்கக் கூடாது என்று சொல்ல இயலாது. மம்மா இறுதி வரை இருக்க வேண்டியதாக இருந்தது, பிறகு, மம்மா ஏன் சென்றுவிட்டார்கள். நாடகத்தில் எது நடந்ததோ அது சரியே. பாபா கூட என்ன கூறினாரோ, அது நாடகத்தின் அனுசாரமாகக் கூறினார். நாடகத்தில் எனது நடிப்பு அத்தகையதாக உள்ளது. பாபாவும் கூட நாடகம் என்று கூறிவிடுகின்றார். ஈஸ்வரன் வகுத்த விதி என்று மனிதர்கள் கூறுகின்றனர். நாடகத்தின் விதி என்று ஈஸ்வரன் கூறுகின்றார். ஈஸ்வரன் கூறினாரோ அல்லது இவர் கூறினாரோ, அது நாடகத்தில் இருந்தது. ஏதாவது முறையற்ற காரியம் நடந்திருந்தால், அது நாடகத்தில் இருந்தது, பின்னர், அது சரியாகிவிடும். இது அவசியம் ஏறும் கலை ஆகும். ஏற்றத்தில் ஏறும்பொழுது, அவ்வபொழுது தடுமாறுகின்றனர். இவை அனைத்தும் மாயையின் புயல்கள் ஆகும். மாயை உள்ள வரை விகல்பம் அவசியம் வரும். சத்யுகத்தில் மாயையே இருக்காது என்றால் விகல்பத்திற்கான விஷயமும் இருக்காது. சத்யுகத்தில் ஒருபொழுதும் கர்மம் விகர்மம் ஆவதில்லை. மீதம் குறைந்த நாட்களே உள்ளன, குஷி உள்ளது. இது நமது இறுதிப் பிறவியாகும். இப்பொழுது அமரலோகம் செல்வதற்காக சிவபாபாவிடம் அமரகதை கேட்கிறோம். இந்த விஷயங்களை நீங்கள் தான் புரிந்து கொள்கிறீர்கள். அந்த மனிதர்கள் அமர்நாத் சென்று ஏமாற்றத்தை அடைந்து கொண்டிருக்கின்றனர். பார்வதிக்கு யார் கதை சொன்னார்கள் என்பதைப் புரிந்து கொள்ளவில்லை. அங்கேயோ சிவனுடைய சித்திரத்தைக் காண்பிக்கிறார்கள். நல்லது, சிவன் எதில் அமர்ந்திருக்கின்றார்? சிவன் மற்றும் சங்கரரை காண்பிக்கிறார்கள். சிவன் சங்கரன் மீது அமர்ந்து கதை சொன்னாரா என்ன? எதையும் புரிந்து கொள்ளவில்லை. பக்தி மார்க்கத்தைச் சேர்ந்தவர்கள் இதுவரை தீர்த்த யாத்திரை சென்று கொண்டிருக்கிறார்கள். கதை கூட உண்மையில் பெரியது அல்ல. உண்மையில் மன்மனாபவ, அவ்வளவு தான். விதையை நினைவு செய்யுங்கள். நாடகத்தின் சக்கரத்தை நினைவு செய்யுங்கள். எந்த ஞானம் பாபாவிடம் உள்ளதோ, அந்த ஞானம் நம்முடைய ஆத்மாவிலும் உள்ளது. அவரும் ஞானக் கடலானவர், நாம் ஆத்மா கூட மாஸ்டர் ஞானக் கடல் ஆகின்றோம். போதை ஏற வேண்டும் அல்லவா! அவர் சகோதரர்களாகிய (ஆத்மாக்களாகிய) நமக்குச் சொல்கின்றார். சரீரத்தின் மூலமாகத் தான் சொல்வார். இதில் சந்தேகம் எழுப்பக்கூடாது. தந்தையை நினைவு செய்ய செய்ய முழுஞானம் புத்தியில் வந்துவிடுகிறது. தந்தையின் நினைவு மூலம் தான் விகர்மம் வினாசம் ஆகும், பற்று அழிந்துபோகும். சிலருக்கு பெயரளவில் அன்பு உள்ளது. என்னுடையதும் அவ்வாறே உள்ளது. இப்பொழுது நாம் சுகதாமம் செல்கிறோம். இவர்கள் அனைவரும் இறந்துவிட்டனர், இவர்களிடத்தில் உள்ளத்தை என்ன ஈடுபடுத்துவது? சாந்திதாமம் சென்று, பிறகு சுகதாமம் வந்து இராஜ்யம் செய்வீர்கள். இதையே பழைய உலகின் மீது வைராக்கியம் கொள்வது என்று கூறப்படுகிறது. தந்தை கூறுகின்றார், “இந்தக் கண்களால் என்னவெல்லாம் பார்க்கின்றீர்களோ, அவை அனைத்தும் அழிந்து போகக்கூடியதாகும். வினாசத்திற்குப் பிறகு சொர்க்கத்தைப் பார்ப்பீர்கள். இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் மிகவும் இனிமையானவர் ஆகவேண்டும். நினைவில் இருந்து பிறரிடம் பேசினால் அவர்களுக்கு மிகுந்த கவர்ச்சி ஏற்படும். இந்த ஞானம் அத்தகையது, இதன் மூலம் மற்ற அனைத்தும் மறந்துவிடுகிறது. நல்லது.

     

    இனிமையிலும் இனிமையான தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்காக தாய், தந்தை பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மிகக் குழந்தைகளுக்கு ஆன்மிக தந்தையின் நமஸ்காரம்.

     

    தாரணைக்காக முக்கியமான சாரம்:-

    1. ஞான மார்க்கத்தில் தனது மனோநிலையை மிகவும் உறுதியானதாக ஆக்கவேண்டும். விதேகி ஆகவேண்டும். ஒரு தந்தையிடம் தான் உண்மையிலும் உண்மையான அன்பைச் செலுத்த வேண்டும்.

     

    2. நாடக விதியின் மீது ஆடாத அசையாதவராக இருக்க வேண்டும். நாடகத்தில் என்ன நடந்ததோ அது சரியே ! ஒருபொழுதும் தடுமாற்றம் அடையக்கூடாது. எந்தவொரு விஷயத்திலும் சந்தேகத்தை எழுப்பக் கூடாது.

     

    வரதானம்:

    பிறருடைய குறை, பலவீனத்தைப் பார்க்காமல் தன்னுடைய குணம் மற்றும் சக்திகளினுடைய சகயோகம் அளிக்கக்கூடிய மாஸ்டர் வள்ளல் ஆகுக !

     

    அனைத்து ஆத்மாக்களும் தனக்குச் சமமாக ஆஸ்திக்கு அதிகாரி ஆகிவிட வேண்டும் என்ற இந்த ஆன்மிக பாவனையில் யார் எப்பொழுதும் இருக்கிறார்களோ, அவர்களே மாஸ்டர் வள்ளல் ஆவார்கள். பிறருடைய குறை, பலவீனத்தைப் பார்க்காமல், அவர்கள் தன்னால் தாரணை செய்யப்பட்ட குணங்களினுடைய, சக்திகளினுடைய சகயோகம் அளிப்பார்கள். இவர்கள் இப்படித்தான் என்ற இந்த பாவனைக்குப் பதிலாக நான் இவர்களையும் தந்தைக்கு சமமாக ஆக்குவேன் என்ற இந்த சுபபாவனை இருக்க வேண்டும். கூடவே, இந்த அனைத்து ஆத்மாக்களும் ஏழ்மை, துக்கம், அசாந்தியிலிருந்து விடுபட்டு சதா சாந்தி, சுக ரூபமாக, மிகுந்த செல்வந்தர்களாக ஆகவேண்டும் என்ற இந்த சிரேஷ்டமான விருப்பம் கொள்ள வேண்டும். அப்பொழுதே மாஸ்டர் வள்ளல் என்று கூறமுடியும்.

     

    சுலோகன்:

    எண்ணம், சொல், செயல் மூலம் சேவை செய்யக் கூடியவர்கள் தான் நிரந்தர சேவாதாரிகள் ஆவார்கள், அவர்களுடைய ஒவ்வொரு சுவாசத்தில் சேவை அடங்கியிருக்கும்

     

    ***ஒம்சாந்தி***