BK Murli 30 October 2016 Tamil

bk murli today

Posted by: BK Prerana

BK Prerana is executive editor at bkmurlis.net and covers daily updates from Brahma Kumaris Spiritual University. Prerana updates murlis in English and Hindi everyday.
Twitter: @bkprerana | Facebook: @bkkumarisprerana
Share:






    BK Murli 30 October 2016 Tamil

    29.10.2015    காலை முரளி            ஓம் சாந்தி        ''அவ்யக்த பாப்தாதா''   மதுபன்
    ரிவைஸ்     27.10.1981    மதுபன்


    '' தீபாவளி சுபவேளையில் அவ்யக்த பாப்தாதாவினால் வழங்கப்பட்ட மகாவாக்கியங்கள் ''



    இன்று தீபங்களின் தலைவன் தன்னுடைய தீபமாலையைப் பார்க்க வந்திருக்கிறார். இந்த சைத்தன்ய தீபங்களின் நினைவுச் சின்னமாக ஜட தீபங்களின் தீபாவளியை கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். பக்தர்கள் ஜடச் சித்திரங்கள் மற்றும் ஜட தீபங்களுடன் தீபாவளி கொண்டாடுவார்கள். மேலும் சைத்தன்ய தீபமான நீங்கள் எப்பொழுதும் பிரகாசித்துக் கொண்டிருக்கும் தீபங்கள், தீபங்களின் தலைவனுடன் குழந்தையாகி சந்திப்பை கொண்டாடிக் கொண்டிருக்கிறீர்கள் அதாவது தீபாவளி விழாவை கொண்டாடிக் கொண்டிருக்கிறீர்கள். ஒவ்வொரு தீபமும் எவ்வளவு அழகாக பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. பாப்தாதா ஒவ்வொரு குழந்தையின் நெற்றியில் பிரகாசித்துக் கொண்டிருக்கும் தீபத்தைத் தான் பார்க்கிறார். இவ்வளவு பெரிய தீபாவளி வேறு எங்குமே இருக்க முடியாது. எவ்வளவு தான் அனேக ஸ்தூல தீபங்களை எரிய வைத்தாலும் ஆனால் அந்த மாதிரியான தீப மாலை எது அழியாததோ, அமரஜோதி சொரூபமானதோ, அம் மாதிரி தீப மாலை வேறு எங்கு இருக்க முடியும்? அந்த மாதிரி தீபாவளி, எதில் தீபராஜன் மற்றும் தீபராணிகள் அந்த மாதிரி சந்திப்பதை அதாவது விழாவை எப்பொழுதாவது பார்த்திருக்கிறீர்களா? பார்ப்பவர்களும் நீங்கள் ! கொண்டாடுபவர்களும் நீங்கள் ! பாப்தாதா குஜராத்தைச் சேர்ந்த தீபங்களை மட்டும் பார்த்துக் கொண்டிருக்கவில்லை. பாப்தாதாவின் எதிரில் பாரதம் மற்றும் வெளிநாடுகளின் நாலாபுறங்களிலும் உள்ள சைத்தன்ய தீபங்கள் இருக்கின்றன (1000 -க்கும் மேலான சகோதர சகோதரிகள் வந்திருக்கிறார்கள் எனவே கீழே 3 -4 இடங்களில் முரளி கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்) கீழே இருப்பவர்கள், கீழே இருக்கவில்லை, பாப்தாதாவின் கண்களில் இருக்கிறார்கள். இங்கே ஸ்தூலத்தில் இடமில்லை, ஆனால் பாப்தாதாவின் கண்களில் அந்த மாதிரி தீபங்களுக்கு எப்பொழுதுமே இடம் இருக்கிறது.

     

    இன்று தீபராஜன் தன்னுடைய அனைத்து தீபராணிகளுக்கும் அமர ஜோதியின் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறார். 'எப்பொழுதும் அமரர் ஆகுக ! வெளிநாட்டைச் சேர்ந்தவர்களும் புன்முறுவல் செய்கிறார்கள். (அமெரிக்காவிலிருந்து டென்னிஸ் சகோதரி வந்திருக்கிறார்) இவர் ஒருவரில்லை, ஒருவரில் அனேகர்கள் இருக்கிறார்கள். நாலாபுறங்களிலுள்ள தேசத்தைச் சேர்ந்தவர்களும் நினைவு என்ற அன்பை வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த அன்பின் ஆதாரத்தில் தூரமாக இருந்த போதிலும் நேரெதிரிலேயே இருக்கிறார்கள். பாப்தாதா எல்லைக்கப்பாற்பட்ட தீபங்களின் தீபமாலையைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

     

    மதுபன்னின் முற்றத்தில் இன்று அனேக குழந்தைகள் பரிஷ்தாக்களின் ரூபத்தில் தென்படுகிறார்கள். சாகார ரூபத்தின் சபையோ மிகச் சிறியது. ஆனால் ஒளி வடிவத்திலிருக்கும் பரிஷ்தாக்களின் சபை மிகப் பெரியது. இந்த பெரிய ஹால் ஒன்று கட்டிக்கொண்டிருக்கிறீர்களே அதுவும் சிறியது. கடலின் குழந்தைகளின் எதிரில் எவ்வளவு தான் பெரிய ஹாலைக் கட்டினாலும் கடலுக்குச் சமமாக ஆகிவிடுவார்கள், பிறகு என்ன செய்வீர்கள். ஆகாயம் மற்றும் பூமியை இந்த எல்லைக்கப்பாற்பட்ட ஹாலில் நிரப்ப முடியுமா? எல்லைக்கப்பாற்பட்ட தந்தையின் குழந்தைகள் நான்கு சுவர்கள் என்ற எல்லைக்குள் எப்படி நிரம்ப முடியும்? அந்த மாதிரியும் நேரம் வரும் அப்பொழுது எல்லைக்கப்பாற்பட்ட ஹாலில் இந்த நான்கு தத்துவங்கள் நான்கு சுவர்களின் வேலை செய்யும். சில சீதோஷண நிலை மோசமாகும் காரணமாகக் கூட கூரை அல்லது சுவர்களின் அவசியமே இருக்காது. எதுவரை பெரிய ஹாலை கட்டுவீர்கள். இந்த இயற்கை எதிர்காலத்தின் ஒத்திகையை இங்கேயே இறுதியில் உங்களுக்கு காண்பிக்கும். நாலாபுறங்களிலும் எவ்வளவு தான் ஏதாவது தத்துவம் மூலமாக சீற்றம் ஏற்பட்டு நஷ்டம் ஏற்படுகிறது என்றாலும், இயற்கையின் தலைவர்கள் நீங்கள் எங்கே இருப்பீர்களோ அங்கு இயற்கை தாசியாகி சேவை செய்யும். நீங்கள் இயற்கையை வென்றவராக மட்டும் ஆக வேண்டும். இயற்கை, தலைவர்கள் உங்களை இப்பொழுதிலிருந்தே ஆவஹானம் (அழைத்துக் கொண்டு) செய்து கொண்டிருக்கிறது. இந்த தெய்வீக நாளில் இயற்கையானது தலைவர் களுக்கு மாலை அணிவிக்கும். எந்த மாலையை அணிவிக்கும்? சந்தன மாலையா அல்லது ரத்தினங்கள், வைரத்தின் மாலையை அணிவிக்குமா? இயற்கை சகயோகத்தின் மாலையைத் தான் அணிவிக்கும். எங்கு இயற்கையை வென்ற பிராமணர்கள் உங்களுடைய கால் இருக்குமோ, ஸ்தானம் இருக்குமோ அங்கு எந்தவிதமான நஷ்டமும் ஏற்பட முடியாது. வீட்டின் எதிரில் ஓரிரண்டு நஷ்டம் ஏற்படும். ஆனால் நீங்கள் பாதுகாப்பாக இருப்பீர்கள். இந்த மாதிரி நடந்து கொண்டிருக்கிறது என்று எதிரில் தென்படும். புயல் வந்து கொண்டிருக்கிறது, பூமி நகர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் அங்கே ஈட்டி மாதிரியான சூழ்நிலை மற்றும் இங்கே ஊசிக்குச் சமமான சூழ்நிலை. அங்கு கதறுவது இருக்கும், இங்கே ஸ்திரமானவர்களாக இருப்பீர்கள். அனைவரும் ஸ்தூல மற்றும் சூட்சும ஆதாரத்தைப் பெறுவதற்காக உங்கள் பக்கம் ஓடி வருவார்கள். உங்களுடைய ஸ்தானம் புகலிடம் ஆகிவிடும்.  அப்பொழுது தான் அனைவரின் வாயிலிருந்தும் 'ஆஹா பிரபு, உங்களுடைய லீலை அளவற்றது' என்ற வார்த்தை வெளியாகும். 'புண்ணியம் செய்த நீங்கள் அடைந்திருப்பீர்கள், நாங்கள் தெரிந்து கொள்ளவில்லை, இழந்தோம்' இந்த வார்த்தைகள் நாலாபுறங்களிலும் இருந்தும் வரும். பிறகு நீங்கள் என்ன செய்வீர்கள்? உருவாக்குபவரின் குழந்தைகள் உருவாக்குபவராக மற்றும் வரம் அளிப்பவராக ஆவீர்கள். ஆனால் இதில் கூட புகலிடம் பெறுபவர்களும் இயல்பாகவே வரிசைக்கிரமமாக இருப்பார்கள். யார் இப்பொழுதிலிருந்து இறுதி வரை அல்லது ஸ்தாபனையின் தொடக்கத்திலிருந்து இதுவரையிலும் சகயோக உணர்வில் இருந்திருக்கிறார்கள், விரோத உணர்வில் இருக்கவில்லை, ஏற்றுக்கொள்வது அல்லது ஏற்றுக்கொள்ளாதது அது வேறு விஷயம். ஆனால் ஈஸ்வரிய காரியத்தில் மற்றும் ஈஸ்வரிய குடும்பத்தின் மீது விரோத உணர்வு வைப்பதற்குப் பதிலாக சகயோகத்தின் உணர்வு, காரியம் நல்லது மற்றும் காரியம் செய்பவர்களும் நல்லவர்கள், இந்த செயல் தான் பரிவர்த்தனை செய்ய முடியும். அந்த மாதிரி விதவிதமான சகயோக உணர்வுள்ளவர்கள், அந்த மாதிரி அவசியமான நேரத்தில் இந்த பாவனையின் பலனாக அருகாமையின் முன் வரிசை எண்ணைப் பெறுவார்கள். அதாவது புகலிடத்தின் அதிகாரியாக நம்பர் ஒன் ஆவார்கள். மற்றபடி இந்த பாவனையிலும் சதவிகிதத்தில் இருப்பவர்கள், அந்த சதவிகிதத்தின் அனுசாரம் புகலிடத்தின் அஞ்சலியைப் பெற முடியும். மற்றபடி பார்த்துக் கொண்டிருப்பவர்கள் பார்த்துக் கொண்டே இருந்து விடுவார்கள். இப்பொழுது கூட பார்ப்போம், நீங்கள் செய்யும் காரியம் என்ன? அல்லது உங்களுக்கு என்ன கிடைத்திருக்கிறது என்று பார்ப்போம். அனைத்தும் நடக்கும் அந்த நேரம் பார்த்துக் கொள்வோம், அந்த மாதிரி நேரத்திற்காகக் காத்திருப்பவர்கள் புகலிடத்தின் ஏற்பாடுகளின் அதிகாரியாக ஆக முடியாது. அந்த நேரத்திலும் பார்த்துக் கொண்டே இருந்து விடுவார்கள். நம்முடைய வாய்ப்பு எப்பொழுது வருகிறது என்ற இந்த காத்திருத்தலிலேயே இருப்பார்கள். மேலும் தூரத்தில் காத்துக்கொண்டிருக்கும் ஆத்மாக்களுக்கும் மாஸ்டர் ஞான சூரியன் ஆகி சுபபாவனை, சிரேஷ்டம் ஆவதற்கான விருப்பங்களின் கிரணங்களை நாலாபுறங்களில் உள்ள ஆத்மாக்களுக்கு, உலகிற்கு நன்மை செய்பவராகி அளிப்பீர்கள். பிறகு எத்தனை விரோதி ஆத்மாக்களாக இருக்கிறார்களோ அவர்கள் தன்னுடைய வேதனை அடையும் அக்னியில், தான் எரிந்து கொண்டிருப்பதாக நிம்மதியற்ற நிலையை அனுபவம் செய்வார்கள். மேலும் நீங்கள் சீதளாதேவிகளாகி இரக்கம், தயை மற்றும் கிருபையின் சீதள நீர்த் துளிகளால் விரோதி ஆத்மாக்களையும் சீதளம் ஆக்குவீர்கள் அதாவது ஆதரவு என்ற அரவணைப்பை வழங்குவீர்கள். அந்த நேரம் அவர்கள் உங்களுடைய பக்தர்களாகி 'அம்மா, அம்மா' என்று அழைத்துக் கொண்டே விரோதியிலிருந்து மாறி பக்தன் ஆகிவிடுவார்கள். இவர்கள் உங்களுடைய கடைசி பக்தர்கள் அப்படி விரோதி ஆத்மாக்களுக்கும் இறுதியில் பக்தி நிலையின் அஞ்சலியை அவசியம் கொடுப்பீர்கள். வரம் அளிப்பவராகி 'பக்தன் ஆகுக' என்ற வரதானத்தை வழங்குவீர்கள். இருந்தாலும் அவர் உங்களுடைய சகோதரன் தான் இல்லையா? அப்படி சகோதரத்துவத்தின் உறவை வைத்து நடந்து கொள்வீர்கள், அந்த மாதிரி வரம் அளிப்பவராக ஆகியிருக்கிறீர்களா? எப்படி இயற்கை உங்களை வரவழைத்துக் கொண்டிருக்கிறது. அதே போல் நீங்கள் அனைவரும் தன்னுடைய அந்த சம்பன்ன நிலையை வரவழைத்துக் கொண்டிருக்கிறீர்களா? இந்த தீபாவளியை கொண்டாடுங்கள். அவர்கள் லட்சுமியை ஆவாஹனம் (அழைத்தல்) செய்வார்கள். மேலும் நீங்கள் என்ன ஆவாஹனம் செய்வீர்கள்? அவர்களோ செல்வத்தின் தேவியை ஆவாஹனம் செய்கிறார்கள், நீங்கள் அனைவரும் 'செல்வந்தன் ஆகுக' என்ற நிலையின் ஆவாஹனம் செய்யுங்கள். அந்த மாதிரி தீபாவளியைக் கொண்டாடுங்கள். என்ன செய்ய வேண்டும் என்று புரிந்ததா? நல்லது.

     

    அந்த மாதிரி தீபாவளியின் தீபங்களுக்கு, எப்பொழுதும் அனைத்து பொக்கிஷங்களினால் நிரம்பிய செல்வந்தன் ஆகுக என்ற குழந்தைகளுக்கு, எப்பொழுதும் அமரஜோதி ஆகுக என்ற குழந்தைகளுக்கு, எப்பொழுதும் ஒவ்வொரு ஆத்மாவிற்கும் சுபபாவனையின் பலனைக் கொடுக்கக்கூடிய, வரதானி, மகாதானி குழந்தைகளுக்கு பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்காரம்.

     

    தீதி, தாதியுடன் சந்திப்பு -

    பாப்தாதா இன்று என்ன பார்த்துக் கொண்டிருக்கிறார்? விசேஷமாக இன்று, இப்பொழுது பிரம்மா பாபா பார்த்துக் கொண்டிருக்கிறார். இன்று பிரம்மா பாபாவுடன் ஜகதம்பாவும் வந்திருக்கிறார்கள். பிரம்மா பாபா, மம்மா இருவரும் என்ன பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இன்றைய நாளில் அம்மாவையும் நினைவு செய்கிறார்கள் இல்லையா? எனவே ஜகதம்பாள் மற்றும் பிரம்மா பாபா என்ன பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்? இன்று விசேஷ ரூபத்தில் ஜகத் அம்பாள் மற்றும் சைத்தன்ய எதிர்காலத்தில் லட்சுமி ஆகுபவர், தன்னுடைய விசேஷ சகயோகிகள், தன்னைப் போன்று சகோதரி, சகயோகி துணைவர்களைச் சந்திப்பதற்காக வந்திருக்கிறார். குழந்தைப் பருவத்தின் தோழிகள் தான் இல்லையா? குழந்தைப் பருவம் நினைவிருக்கிறது தான் இல்லையா? இன்று தன்னுடைய தோழிகளை பாப்தாதாவின் காரியத்தில் சகயோகம் கொடுப்பதில் எப்பொழுதும் 'வந்தேன் ஐயா' 'கூறுங்கள் ஐயா' என்ற நடைமுறை பாடத்தின் காரியத்தை பார்த்து குஷி அடைந்து கொண்டிருக்கிறார்.

     

    இன்று தாய் தந்தை தன்னுடைய இராஜ வம்சத்தை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இராஜ சபை எதிரில் வருகிறது. எவ்வளவு அலங்கரிக்கப்பட்ட சபை. அஷ்ட தேவதைகள் அவரவர்களின் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறார்கள். நீங்கள் எங்கே அமர்ந்திருக்கிறீர்கள்? எவ்வளவு சேவையின் ஆசனத்தின் அருகில் இருக்கிறீர்களோ அந்த அளவே இராஜ சிம்மாசனத்திலும் அருகில் இருக்கிறீர்கள். இங்கே தபஸ்யா மற்றும் சேவை தான் ஆசனம் மற்றும் அங்கே இராஜ்ய பாக்கியத்தின் சிம்மாசனம். அப்படி யார் எப்பொழுதும் தபஸ்யா மற்றும் சேவையின் ஆசனத்தில் இருக்கிறாரோ அவர் எப்பொழுதும் சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பவராக ஆகிறார். இங்கே எந்தளவு சேவையின் சகயோகியாக எப்பொழுதும் இருக்கிறாரோ அந்த அளவே அங்கே இராஜ்யத்தில் எப்பொழுதும் துணைவராக கூட இருப்பார். எப்படி இங்கே ஒவ்வொரு காரியத்திலும் பாப்தாதாவின் நினைவில் துணைவனாக இருக்கிறார், அதே போல் அங்கே ஒவ்வொரு காரியத்திலும் குழந்தைப் பருவத்தில் தொடங்கி இராஜ்யம் செய்வதின் ஒவ்வொரு காரியத்திலும் உடன் இருப்பவராக இருக்கிறார்கள். ஆயுளிலும் தன்னைப் போன்றே இருப்பவர்கள். எனவே படிப்பில், விளையாட்டில், சுற்றி வருவதில், இராஜ்யத்தில், ஒவ்வொரு காரியத்திலும் தன்னைப் போன்றே உடன் இருக்கும் துணைவர்களாக இருப்பார்கள். ஒருவேளை இங்கே ஏதாவது காரியத்திலும் நினைவின் மூலம் துணைவராக ஆகிறார்கள் என்றால், அங்கேயும் அனைத்து காரியத்திலும் துணைவராக ஆவதில்லை. சில சில காரியத்தில் துணைவராக இருப்பார்கள். மேலும் சில காரியத்தில் தனியாக இருப்பார்கள். சில காரியத்தில் அருகாமையில் இருப்பார்கள், சில காரியத்தில் தூரமாக இருப்பார்கள். யார் எப்பொழுதும் அருகாமையில், எப்பொழுதும் துணைவனாக, எப்பொழுதும் சகயோகியாக, எப்பொழுதும் தபஸ்யா மற்றும் சேவையின் ஆசனத்தில் இருக்கிறாரோ, அவர்கள் அங்கேயும் எப்பொழுதும் உடன் இருக்கிறார்கள். அப்படி நினைவில் வருகிறது இல்லையா? எப்படி இங்கே ஆன்மீக வாழ்க்கையில், ஆத்யாத்மீக வாழ்க்கையில் சிறு வயது வாழ்க்கையிலிருந்து இறுதி வரை துணைவர்களாக இருக்கிறீர்கள் தான் இல்லையா? குழந்தைப் பருவத்தின் துணைவர்கள், இறுதி வரையிலும் துணைவர்கள், அதே போலவே பிரம்மா ரூபத்தில் யார் தொடக்கத்திலிருந்து இறுதி வரை ஒவ்வொரு காரியத்தில், ஒவ்வொரு சரித்திரத்தில், ஒவ்வொரு சேவையின் நேரத்தில் துணைவர்களாக இருந்தார்கள் அவர்கள் எதிர்காலத்திலும் துணைவர்களாக இருப்பார்கள். நல்லது.

     

    டீச்சர்களுடன் சந்திப்பு :

    குஜராத்தின் உண்மையான சேவாதாரிகள். உண்மையான சேவாதாரி என்று கூறுங்கள் அல்லது ஆன்மீக சேவாதாரி என்று கூறுங்கள். ஆன்மீக சேவாதாரி என்றால் உண்மையான சேவாதாரி. குஜராத்தின் ஆன்மீக சேவாதாரிகளிடம் என்ன விசேஷம் இருக்கிறது? (எவரெடி). ஸ்தூல சேவையிலோ எவரெடியாக இருக்கிறீர்கள். ஏனென்றால், சேவையின் என்னென்ன விதவிதமான சாதனங்கள் இருக்கின்றன, அதில் எங்கு அழைப்பு இருக்கிறதோ அங்கே சென்றடைபவர்கள். ஆனால் மனதின் எண்ணங்களிலும் எந்த எண்ணத்தை தாரணை செய்ய விரும்புகிறீர்களோ, அதிலேயும் எப்பொழுதும் எவரெடியாக இருக்கிறீர்களா? என்ன நினைக்கிறீர்களோ அதை அந்த நேரத்திலே செய்யுங்கள். இதைத் தான் எவரெடி என்று கூறுவது. மனதின் எண்ணங்களிலும் எவரெடி, சம்ஸ்கார மாற்றம் செய்வதிலும் எவரெடி. ஆன்மீக சம்மந்தம் மற்றும் தொடர்பு வைத்து நடந்து கொள்வதிலும் எவரெடி. அந்த மாதிரி எவரெடியாக இருக்கிறீர்களா அல்லது நேரம் எடுக்கிறதா? சம்ஸ்காரத்தை அகற்றுவதில் மற்றும் சம்ஸ்காரத்தை ஒத்துப்போக வைப்பதில் நேரம் எடுக்கிறதா? இதிலேயும் எவரெடி ஆகுங்கள். ஏனென்றால் குஜராத்தின் நடனம் மிகவும் பிரபலமானது. ஒன்று நடனம் ஆடுவது, இன்னொன்று நடனம் ஆடுவதில் இணைந்து ஒத்துப்போவது. எப்படி நடனம் ஆடுவதில் திறமை நிறைந்தவர்களாக இருக்கிறீர்கள், அதே போல் தந்தையோடு சம்ஸ்காரத்தை இணைப்பதிலும், உங்களுக்குள் உயர்ந்த சம்ஸ்காரத்தை இணைப்பதிலும் திறமை நிறைந்தவர்களாக இருக்கிறீர்களா? சம்ஸ்காரத்தை இணைத்து ஒத்துப்போக வைப்பது தான் மிகப்பெரிய நடனம் ஆகும். அந்த மாதிரி நடனம் ஆடுகிறீர்களா? இன்று நீங்கள் அனைவரும் இப்பொழுதே நாங்கள் அனைவரும் எப்பொழுதும் சம்ஸ்காரத்தை இணைத்து நடனம் ஆடிக்கொண்டே இருப்போம் என்ற எண்ணத்தை வையுங்கள்.

     

    இன்றைய தினம் லட்சுமியின் கூடவே உங்களுக்கும் பூஜை நடக்கிறது. தாயின் கூடவே குழந்தைகளுக்கும் நடக்கிறது. எந்த ரூபத்தில் நடக்கிறது? லட்சுமியுடன் சேர்த்து கணேசரின் பூஜையும் செய்கிறார்கள். கணேசர் குழந்தை தான் இல்லையா. அப்படி லட்சுமியின் பூஜை மட்டும் இல்லை, ஆனால் நீங்கள் அனைவரும் கணேசர் அதாவது புத்திவான் ஆவீர்கள். மூன்று காலங்களின் ஞானம் நிறைந்தவர். இதைத் தான் கணேசர் அதாவது புத்திவான், அறிவாளி என்று கூறுவது. மேலும் கணேசரைத்தான் விக்ன விநாஷக் (தடைகளை அழிப்பவர்) என்றும் கூறுகிறார்கள். அப்படி யார் மூன்று உலகங்கள் மற்றும் மும்மூர்த்திகளின் ஞானம் நிறைந்தவராக இருக்கிறாரோ அவர் தான் தடைகளை அழிப்பவர். எனவே நீங்கள் ஞானம் நிறைந்தவராகவும் இருக்கிறீர்கள். மேலும் தடைகளை அழிப்பவராகவும் இருக்கிறீர்கள். எனவே பூஜை நடக்கிறது. அப்படி இன்று உங்களின் பூஜையின் தினம். உங்கள் அனைவரின் தினமும் தான் இல்லையா? எனவே எப்பொழுதும் எந்தவொரு சூழ்நிலையிலும் தடை ரூபம் ஆகாமல் தடைகளை அழிப்பவர் ஆகுங்கள். ஒருவேளை வேறு யாராவது தடை ரூபம் ஆகுகிறார் என்றால், நீங்கள் தடைகளை அழிப்பவர் ஆகிவிடுங்கள். பிறகு தடைகள் அழிந்து விடும். அந்த மாதிரி சூழ்நிலை இருக்கிறது, அந்த மாதிரி பிரச்சனைகள் இருக்கிறது. எனவே இதைச் செய்ய வேண்டியதாக ஆனது என்ற இந்த வார்த்தைகள் தடைகளை அழிப்பவரினுடையதில்லை. தடைகளை அழிப்பவர் சூழ்நிலையை மற்றும் பிரச்சனைகளை மாற்றம் செய்பவர். நீங்கள் அந்த மாதிரி தடைகளை அழிப்பவரா? குஜராத் மாநிலம் ஒருவேளை விக்ன விநாஷக் ஆகிவிட்டது என்றால், பிறகு எந்தவிதமான தடையின் பேச்சே இருக்காது. பெயர், அடையாளம் கூட இருக்காது. எப்பொழுது உங்களுடைய படைப்பு, எல்லைக்குட்பட்ட சூரியன் இருளை அகற்ற முடியும் என்றால், எல்லைக்கப்பாற்பட்ட மாஸ்டர் ஞான சூரியன் நீங்கள் இதை அகற்ற முடியாதா என்ன? எப்படி குஜராத் சேவையில் நம்பர் ஒன் ஆக இருக்கிறது. அதே போல் தடைகளை அகற்றுவதிலும் நம்பர் ஒன் ஆகிவிடுங்கள். அப்பொழுது பரிசு கொடுப்போம். மிக நல்ல பரிசு கொடுப்போம். தந்தையின் பரிசாக என்ன கிடைக்கிறதோ அதை நீங்கள் குஜராத்திற்குக் கொடுங்கள்.

     

    தீபாவளி மற்றும் புது வருடத்திற்கான வாழ்த்துக்கள்

    எப்பொழுதுமே உங்களுக்கு புது வருடம் தான், ஆனால் ஒவ்வொரு நேரமும் புதியது எனவே ஒவ்வொரு நேரத்திலும் புதிய ஊக்கம், புதிய உற்சாகம், புதிய சேவைக்கான திட்டம். ஒவ்வொரு நேரமும் புதியது, புதியது. இந்த புதுமைக்காக நிரந்தரமான பாராட்டுக்கள். மக்களுக்காக புது வருடம், மேலும் உங்களுக்காக இது புது யுகம். மேலும் புது யுகத்தில் ஒவ்வொரு நேரமும் உற்சாகம் இருக்கும் காரணத்தினால் உற்சவம் இருக்கிறது. ஒவ்வொரு நேரமும் தீபாவளி, ஒவ்வொரு நேரமும் உற்சவம். ஏனென்றால் உற்சவத்தின் அர்த்தமே உற்சாகம் ஊட்டக்கூடியது. இந்த பிராமண வாழ்க்கை தான் உங்களுக்கு உற்சாகம் ஊட்டக்கூடியது. அதில் ஒவ்வொரு நேரமும் குஷியின் ஊஞ்சலில் ஆடிக்கொண்டே இருங்கள். அந்த மாதிரி புதிய நாள், புதிய வருடம், புதிய விநாடி, எண்ணம் என்று கூறினாலும் ஒவ்வொரு புதிய ரூபத்திற்கும் வாழ்த்துக்கள்.

     

    தீபாவளியையும் கொண்டாடினீர்கள், புது வருடத்தையும் கொண்டாடினீர்கள். இரண்டிற்குமான சங்கமம் ஆகிவிட்டது. குஜராத்தைச் சேர்ந்தவர்கள் அதிஷ்டம் நிறைந்தவர்கள். ஏனென்றால் சங்கமயுகத்திலும் 'சங்கமத்தை' கொண்டாடினார்கள். நல்லது - அழியாத வாழ்த்துக்கள் !

     

    வரதானம் :

    தன்னுடைய அனாதி, ஆதி சொரூபத்தின் நினைவு மூலம் பந்தனமற்றவர் ஆகும் மற்றும் ஆக்கக்கூடிய மர்ஜீவா ஆகுக.

     

    எப்படி தந்தை கடனாக எடுக்கிறார், பந்தனத்தில் வருவதில்லை, அந்த மாதிரி மர்ஜீவா ஜென்மம் எடுத்த குழந்தைகள் நீங்கள் உடலின், சம்ஸ்காரத்தின், சுபாவத்தின் பந்தனங்களிலிருந்து விடுபட்டவர் ஆகுங்கள். எப்பொழுது விரும்புகிறீர்களோ, எப்படி விரும்புகிறீர்களோ அந்த மாதிரி தன்னுடைய சம்ஸ்காரத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள். எப்படி தந்தை பந்தனமற்றவராக இருக்கிறார். அதே போல் பந்தனம் அற்றவராக ஆகுங்கள். மூல வதனத்தின் நிலையில் நிலைத்திருந்து பின்பு கீழே வாருங்கள். தன்னுடைய அனாதி, ஆதி சொரூபத்தின் நினைவில் இருங்கள். அவதரித்திருக்கும் ஆத்மா என்று உணர்ந்து காரியம் செய்தீர்கள் என்றால், மற்றவர்களும் உங்களை பின்பற்றி செய்வார்கள்.

     

    சுலோகன் :

    நினைவின் உள்உணர்வு மூலம் வாயுமண்டலத்தை சக்திசாலியாக ஆக்குவது தான் மனசேவை ஆகும்.

     

     

    ***ஒம்சாந்தி***