BK Murli 9 October 2016 Tamil

bk murli today

Posted by: BK Prerana

BK Prerana is executive editor at bkmurlis.net and covers daily updates from Brahma Kumaris Spiritual University. Prerana updates murlis in English and Hindi everyday.
Twitter: @bkprerana | Facebook: @bkkumarisprerana
Share:






    BK Murli 9 October 2016 Tamil

    09.10.2016  காலை முரளி         ஓம் சாந்தி       ''அவ்யக்த பாப்தாதா''  ரிவைஸ் 23.11.1981  மதுபன்

     '' தியாகத்தையும் தியாகம் செய்தல் ''

    இன்று பாப்தாதா யாரை சந்திக்க வந்திருக்கிறார்? அதைத் தெரிந்திருக்கிறீர்களா? இன்று அனேக புஜங்களுடைய தந்தை தன்னுடைய புஜங்களை அதாவது எப்பொழுதும் சகயோகியாக இருக்கும் குழந்தைகளை சந்திக்க வந்திருக்கிறார். எத்தனை விசேஷ சகயோகி ஆத்மாக்கள் தந்தையின் வலது கரமாகி ஒவ்வொரு காரியம் செய்வதிலும் எப்பொழுதும் தயார் நிலையில் இருப்பவர்களாக இருக்கிறார்கள். பாப்தாதா சேவைக்கான வழிகாட்டுதலின் சமிக்ஞை கொடுத்தார் மற்றும் வலது கரம் அதாவது விசேஷ புஜங்கள் அதாவது கட்டளைப்படி நடக்கும் குழந்தைகள் - 'ஆம் பாபா, நாங்கள் எப்பொழுதும் தயாராக இருக்கிறோம்' என்று எப்பொழுதும் கூறுகிறார்கள். தந்தை 'ஹே குழந்தைகளே' என்று கூறுகிறார். குழந்தைகள் 'ஆம் பாபா' என்று கூறுகிறார்கள். அந்த மாதிரி விசேஷ புஜங்களை தந்தை பார்த்துக் கொண்டிருக்கிறார். நாலாபுறங்களிலுமுள்ள விசேஷ புஜங்களிடமிருந்துடத 'சொல்லுங்கள் பாபா, இப்பொழுதே பாபா, வந்து விட்டேன் பாபா' என்று குழந்தைகளின் இந்த வார்த்தைகளைத் தான் கேட்டுக் கொண்டிருக்கிறோம். அந்த மாதிரி குழந்தைகளின் இனிமையான தாலாட்டு பாப்தாதாவிடம் வந்து சேர்ந்து கொண்டிருக்கிறது. தந்தையும் அந்தக் குழந்தைகளை 'முரபி (நெருக்கமான) குழந்தைகளே, உண்மையான குழந்தைகளே ! உலகின் அலங்காரமாக இருக்கும் குழந்தைகளே! மாஸ்டர் பாக்கியத்தை உருவாக்குபவர், மாஸ்டர் வரமளிக்கும் வள்ளல் குழந்தைகளே ! என்று கூறி எப்பொழுதும் அழைக்கிறார்'.



    இன்று பாப்தாதா அந்த மாதிரி குழந்தைகளின் பெயரை ஒவ்வொன்றாக எண்ணிக் கொண்டிருந்தார். எந்த மாதிரி மாலை உருவாகியிருக்கும் என்று கூறுங்கள்? சின்ன மாலையா அல்லது பெரிய மாலையா? மேலும் அந்த மாலையில் உங்கள் அனைவரின் வரிசை எண் எங்கே இருக்கும்? இறுதி முடிவின் மாலையைப் பற்றி கூறிக்கொண்டிருக்கவில்லை. தற்சமயம் அந்த மாதிரி வலது கரங்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்? என்கிற அந்த மாலையை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். தற்சமயத்தின் வரிசை எண்களை சுலபமாக வரிசைப்படுத்த முடியும் தான் இல்லையா? மாலையின் வரிசை எண்ணை எண்ணிக் கொண்டே பிரம்மா பாபா ஒரு விசேஷமான விஷயத்தைக் கூறினார். என்ன கூறியிருந்திருப்பார்? இன்றைய முக்கியமான விஷயம் வலது கரம் அதாவது சகயோகத்தினுடையதாக இருந்தது. இந்த சகயோகத்தின் விஷயத்தின் மேல் இல்லறத்தில் இருந்தும் இல்லற உணர்விலிருந்து விலகியிருக்கக்கூடிய, உலகீய விவகாரங்களிலிருந்தும் ஆன்மீக விசயங்களின் மீது எப்பொழுதும் கவனம் வைக்கக்கூடிய அந்த மாதிரி விலகியிருக்கும் மற்றும் தந்தையின் பிரியமான விசேஷ குழந்தைகளின் விசேஷத்தைப் பார்த்துக் கொண்டிருந்தோம். வாயுமண்டலத்தின் அக்னியின் வெப்பத்திலிருந்தும் விலகிய நிலை. அந்த மாதிரி அக்னியால் தாக்கப்படாத குழந்தைகளைப் பாப்தாதா பார்த்தார். இன்று அந்த மாதிரி இரட்டை பங்கைச் செய்யும், குடும்பத்தில் ஆன்மீகத்தின் பங்கைச் செய்யக்கூடிய குழந்தைகளின் மகிமை செய்து கொண்டிருந்தோம்.



    இரட்டை பங்கைச் செய்பவர்களின் ஒரு விசேஷம் வர்ணனையானது, அந்த மாதிரி ஆசையற்ற குழந்தைகள் அனேகர்கள் இருக்கிறார்கள். யார் சம்பாதிக்கிறார்களோ அவர்கள் சுகத்திற்கான சாதனத்தை எவ்வளவு சேர்க்க முடியுமோ அந்த அளவு சேர்க்க முடியும். ஆனால் சாதாரண உணவு அருந்துகிறார்கள், சாதாரணமாக நடந்து கொள்கிறார்கள் மற்றும் சாதாரணமாக வாழ்கிறார்கள். முதலில் ஆன்மீக சேவையின் விசேஷ பங்கை தனது சம்பாத்தியத்திலிருந்து எடுக்கிறார்கள். குடும்பத்தின் காரியம், உலகீய இல்லறம், உலகீய சம்மந்தம் தொடர்பை வைத்து நடந்து கொண்டும் தன்னுடைய விசால புத்தியின் காரணமாக கோபப்படுவதும் இல்லை. மேலும் ஈஸ்வரிய சம்பாத்தியத்தை சேமிப்பதற்கான இரகசியத்தைத் தெரிந்து கொண்டு அதற்கான விசேஷ பங்கை இரகசியம் தெரிந்து நடந்து கொள்பவராகி, எடுத்தும் விடுகிறார்கள். இந்த விசேஷத்தில் கோபியர்களும் குறைந்தவர்கள் இல்லை. குடும்பத்தில் தன்னை ஆஃப் பார்ட்னர் என்று கூறுகிறார்கள். ஆனால் தந்தையுடன் வியாபாரம் செய்வதில் ஃபுல் பார்ட்னர். அந்த மாதிரி குப்தமான கோபிகைகளும் இருக்கிறார்கள். அந்த மாதிரி உண்மையான உள்ளம் படைத்த பரந்த மனமுடைய கோபிகைகளும் இருக்கிறார்கள் என்றால் பாண்டவர்களும் இருக்கிறார்கள். இன்று அந்த மாதிரி குழந்தைகளின் பெயரை எண்ணிக்கொண்டிருந்தோம் என்று கூறினோம் இல்லையா? அந்த மாதிரி சிக்கனம் செய்து ஆன்மீக காரியத்தில் பரந்த மனதுடன் ஈடுபடுத்துகிறார்கள். தன்னுடைய ஓய்வு நேரத்தையும் தனது ஓய்வுக்காக பயன்படுத்தாமல், பணத்தின் ஒரு பங்கு இருந்த போதிலும் 75 சதவிகிதம் ஆன்மீக காரியத்தில் ஈடுபடுத்துகிறார்கள் மற்றும் ஒரு கருவியாக இருந்து குடும்ப காரியங்களைச் செய்கிறார்கள். அந்த மாதிரி தியாகம் நிறைந்த குழந்தைகள் எப்பொழுதும் அழியாத பாக்கியம் நிறைந்தவர்கள். ஆனால் அந்த மாதிரி யுக்தி நிறைந்து பங்கைச் செய்பவர்கள் அதிகமான எண்ணிக்கையில் இல்லை. விரல் விட்டு எண்ணுபவர்களாகத் தான் இருக்கிறார்கள். இருந்தாலும் இரட்டை பங்கைச் செய்யும் அந்த மாதிரி விசேஷ ஆத்மாக்களின் மகிமையும் அவசியம் வர்ணிக்கப்பட்டது.



    இரண்டாவது நம்பரின் குழந்தைகளும் இருந்தார்கள் - செய்யவும் செய்கிறார்கள் ஆனால் இரண்டாம் நம்பராக ஆகிவிடுகிறார்கள். இதே குப்த தானம் - மகாதானம், குப்த மகாதானியின் விசேஷம் – தியாகத்தினையும் தியாகம் செய்வது. உயர்ந்த காரியத்தின் பலனாக என்ன கிடைக்கிறதோ அது அனைவர் மூலமாக மகிமை செய்யப்படும் பிரத்யக்ஷ பலன், சேவாதாரிக்கு மகிமைக்குரிய உயர்ந்த ஆசனம் கிடைக்கிறது, மதிப்பு மரியாதையின் ஆசனம் கிடைக்கிறது. இந்த சித்தி அவசியம் பிராப்தி ஆகிறது. ஏனென்றால் இந்த சித்திகள் பாதையில் வரும் சின்ன சின்ன தங்கும் இடங்கள். இது இறுதி இலக்கு அல்ல. ஆகையால் இதைத் தியாகம் செய்தவராகி பாக்கியம் நிறைந்தவராக ஆகுங்கள். இதைத் தான் மகாதியாகி என்று கூறுவது.



    இப்போது தான் சேவை செய்தீர்கள், அதன் பலனை உடனே அந்த நேரமே அனுபவித்து விட்டீர்கள் என்றால் சேமிப்பு ஆவதில்லை. இந்த அற்ப காலத்தின் சித்திகள், செய்யும் காரியத்தின் பிரத்யக்ஷ (வெளிப்படையான) பலனின் ரூபத்தில் அவசியம் பிராப்தி ஆகும். ஏனென்றால் சங்கமயுகம் பிரத்யக்ஷ பலன் கொடுக்கும் யுகம். எதிர்காலத்திலோ அனாதி நியமப்படி கிடைக்கத்தான் செய்யும். ஆனால் சங்கமயுகம் வரதானி யுகம். இப்போது செய்தீர்கள், உடனே, இப்போதே கிடைக்கும். ஆனால் இந்த நேரமே சாப்பிட்டு விடாதீர்கள். இதை பிரசாதம் என்று புரிந்து அனைவருக்கும் கொடுங்கள் அல்லது தந்தையின் எதிரில் போக் வைத்து விடுங்கள். பிறகு ஒன்றிற்கு பல மடங்கு சேமிப்பு ஆகிவிடும். அப்படி வியாபாரம் செய்வதில் திறமை நிறைந்தவர்கள் ஆகுங்கள். வெகுளியாக இருக்காதீர்கள். கேட்டீர்களா இது தான் இரண்டாம் நம்பர். நல்லது. மூன்றாம் நம்பரை பற்றியும் கேட்பீர்களா? மூன்றாம் நம்பர் சேவையில் சகயோகிகளாக குறைவாகத் தான் ஆகிறார்கள். ஆனால் ஆசனத்தை முன்பு மாதிரியே பெற விரும்புகிறார்கள். அனைத்து பொக்கிஷங்களையும் தனது சௌகரியத்திற்காக அதிகமாக ஈடுபடுத்துவார்கள். முதல் நம்பர் ஒருவரின் பெயரால் செய்பவர்கள் மற்றும் சிக்கனமாக இருப்பவர்கள், இரண்டாம் நம்பர் சம்பாதித்தார்கள் மற்றும் உடனேயே சாப்பிட்டார்கள், மூன்றாவது நம்பர் சம்பாத்தியம் குறைவு மற்றும் சாப்பிடுவது அதிகம், மற்றவர்களின் சம்பாத்தியத்தையும் சாப்பிடுபவர்கள். அவர்கள் கொண்டு வாருங்கள் மற்றும் சாப்பிடுங்கள் என்று அந்த மாதிரியானவர்கள். உயர்ந்த ஆத்மாக்களின் பாக்கியத்தின் பங்கு தியாகம் நிறைந்த குழந்தைகளின் பிரத்யக்ஷ பலன் அப்படி அனைத்து பிராப்திகளையும் தியாகம் செய்பவராகி, தியாகம் செய்கிறார்கள். ஆனால் மூன்றாம் நம்பரைச் சேர்ந்தவர்கள் அவர்களுடைய பங்கையும் இவர்களே சுவீகாரம் செய்து விடுகிறார்கள். சம்பாதிப்பவர்கள் இல்லை, சாப்பிடுபவர்களாக மட்டும் இருக்கிறார்கள். இந்தக் காரணத்தினால் நம்பர் ஒன் குழந்தைகள் சுமையை இறக்கக்கூடியவர்கள், ஆனால் அவர்கள் சுமையை ஏற்றுபவர்கள் ஏனென்றால் தன்னுடைய உழைப்பின் சம்பாத்தியத்தில் சாப்பிடுவதில்லை. அந்த மாதிரி சாப்பிடும், குடிக்கும் ஆத்மாக்களையும் பார்த்தோம்.



    மூன்றாவது எண்ணிலிருப்பவர்களைப் பற்றி இப்பொழுது கேட்டீர்களா? நான் யார் என்று இப்பொழுது யோசியுங்கள். நல்லது - இருந்தாலும் இன்றைய ஆன்மீக உரையாடலில் இல்லறத்திலிருந்து கொண்டே அந்த ஒருவரின் (பாபா) பெயரால் சிக்கனமாக இருக்கும் குழந்தைகளை அடிக்கடி மகிமை செய்தோம். நல்லது.



    அந்த மாதிரி எப்பொழுதும் சரி பாபா, வந்தேன் பாபா என்று கூறுபவர்களுக்கு, எப்பொழுதும் தன்னுடைய தியாகத்தையும் தியாகம் செய்து மற்றவர்களையும் பாக்கியம் நிறைந்தவர்களாக ஆக்கக்கூடிய, எப்பொழுதும் பாப்தாதாவுடன் உயர்ந்த வியாபாரம் செய்யக்கூடிய, எப்பொழுதும் சேவையில் அனைத்து பொக்கிஷங்களையும் ஈடுபடுத்தக்கூடிய, அந்த மாதிரி குப்த தானம் செய்து பெரிய பங்கை எடுத்துக் கொள்ளும் ஆத்மாக்களுக்கு, பாப்தாதாவின் அன்பு நினைவு மற்றும் நமஸ்காரம்.



    இராஜஸ்தான் (ஜெய்ப்பூர்) குரூப்பிற்கு சேவை வளர்ச்சி அடைவதற்காக விசேஷ சமிக்ஜை மட்டும் திட்டம் :



    இராஜஸ்தானிலும் இராஜ சிம்மாசனத்தின் ஸ்தானத்தை சேர்ந்தவர்களாக இருக்கிறீர்கள் அப்படி இராஜ சிம்மாசனத்தின் ஸ்தானத்தில் என்னென்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? இந்த முழு வருடத்தில் என்னென்ன புதுமை செய்தீர்கள்? மகா தீர்த்தம் செய்வதற்காக யாத்திரிகர்களின் பார்ட்டியை கொண்டு வந்திருக்கிறீர்களா? உலகீய யாத்திரையிலும் குழுவை உருவாக்கி அழைத்துச் செல்வார்கள், முழு ரயிலையும் நிரப்பி அழைத்துச் செல்வார்கள். அப்படி ராஜ சிம்மாசனத்தில் அமர்பவர்கள் இந்த மகா தீர்த்த யாத்திரைக்கு எத்தனை யாத்திரிகர்களை அழைத்து வந்திருக்கிறீர்கள். இராஜஸ்தானின் இராஜ சிம்மாசனத்தினரின் முக்கிய ஸ்தானமான தலைநகரிலிருந்து எத்தனை பேரை அழைத்து வந்திருக்கிறீர்கள். பஸ்ஸை நிரப்பி அழைத்து வந்திருக்கிறீர்களா? அல்லது ராஜஸ்தானில் யாத்திரிகர்கள் இல்லவே இல்லையா, என்ன நினைக்கிறீர்கள்?. யாத்திரிகர்கள் இல்லையா அல்லது வழிகாட்டிகள் தயாராகவில்லையா? ஒருவேளை இவர்கள் அனைவருமே வழிகாட்டிகள் என்றால் யாத்திரிகர்கள் எத்தனை பேர் இருக்க வேண்டும். அப்படி யாத்திரிகர்களை கொண்டு வருவீர்களா அல்லது உங்களை மட்டும் தான் கொண்டு வருவீர்களா? இந்த வருடம் திட்டம் போடுவீர்களா அல்லது அடுத்த வருடமா? நல்லது. ஏதாவது புது திட்டத்தை உருவாக்கியிருக்கிறீர்களா? எப்படி ஜெய்ப்பூர் அகில உலக புகழ் வாய்ந்த ஸ்தானமாக இருக்கிறது என்றால், இதுவரையிலும் யாருமே செய்யாத ஏதாவது ஒரு விசேஷ சேவையை அவசியம் செய்யுங்கள். முக்கியமான இடத்தில் மிக அழகான நல்ல பெரிய போர்டு (விளம்பர பலகை) வையுங்கள். இதைச் செய்ய முடியும் இல்லையா? அந்த போர்டு அங்கே வந்து போகும் அனைவரின் பார்வையில் படுகிற மாதிரி மிக ஈர்க்கக்கூடியதாக இருக்க வேண்டும். அதனுடைய அலங்கரிப்பு மற்றும் அதிலிருக்கும் விஷயங்கள் அந்த மாதிரி இருக்க வேண்டும், விரும்பாவிட்டாலும் அதை அவசியம் அனைவரும் பார்க்க வேண்டும். அந்த வாசகங்களையும் அந்த மாதிரி உருவாக்குங்கள், அதைப் படித்து அனைவரும் இதைச் செய்ய வேண்டும், இங்கே செல்ல வேண்டும் என்கிற எண்ணம் வர வேண்டும். அந்த மாதிரி போவோர் வருவோர்களுக்கு செய்தி கிடைத்து கொண்டிருக்கட்டும். விலாசமும் இருக்கட்டும், மேலும் அங்கே வருவதற்காக விசேஷ அழைப்பும் இருக்கட்டும். அந்த மாதிரி குறைந்த வார்த்தைகளில் அனைவரையும் ஈர்க்கக்கூடிய வாசகத்தை உருவாக்குங்கள். மேலும் போர்டு எப்படி இருக்க வேண்டும் என்பதையும் திட்டம் போடுங்கள். அதன் மூலம் அனேகருக்கு செய்தி கிடைத்து கொண்டே இருக்கும். அந்த மாதிரி முக்கியமான இடத்தில் போர்ட்டை வையுங்கள். அதற்காக செலவானாலும் ஒன்றும் பாதகமில்லை. இதை இப்பொழுது செய்து காண்பியுங்கள். ஏதாவது புது கண்டுபிடிப்பு இருக்கட்டும். அது விரும்பாவிட்டாலும் கூட அனைவரின் அகல விரிந்த பார்வையில் செல்ல வேண்டும். அந்த மாதிரி ஏதாவது திட்டத்தை உருவாக்குங்கள். விலாசம், போன் நம்பர் அனைத்தும் எழுதப்பட்டிருக்க வேண்டும். அழைப்பிதழும் இருக்கட்டும். பிறகு ஏதாவது ஒரு விசேஷ ஆத்மா விழித்தெழுந்து விடும். எந்த இடத்தில் அனைவரும் வந்து போவார்களோ, அனைவரின் பார்வை எங்கே செல்லுமோ அந்த இடத்தில் ஏதாவது செய்யுங்கள். ஆனால் அது அந்தளவு ஈர்க்கக்கூடியதாக இருக்க வேண்டும். அதைப் பார்க்காமல் யாரும் இருக்க முடியாது என்ற அளவிற்கு இருக்க வேண்டும். நல்லது. இன்னொன்று என்ன செய்வீர்கள்? ஏதாவது விசேஷ ஆத்மாவை ஒவ்வொரு மாதமும் அவசியம் யாத்திரை செய்விக்க வேண்டும். அந்த மாதிரி லட்சியத்தை வையுங்கள். பஸ்ஸை நிரப்பி வராவிட்டாலும், ஓரிருவரையாவது அவசியம் அழைத்து வர முடியும் இல்லையா? அந்த மாதிரி அனைவருக்கும் செய்தியைக் கூறுவதற்கு பொறுப்பாளர் ஆகிற மாதிரி ஏதாவது விசேஷ ஆத்மாவை அழைத்து வாருங்கள். அனைத்து சாதனமும் இருக்கிறது. செய்யக்கூடியவர்கள் செய்தார்கள் என்றால் சுலபமாகிவிடும். ஒரு தடவை தொடர்பு வைத்து பிறகு விட்டு விடாதீர்கள். அடிக்கடி தொடர்பை வைத்துக் கொண்டே இருங்கள். அந்த மாதிரி தொடர்பை வைப்பவர்கள் சொல்வதைக் கேட்காதவர் களாக இருக்க மாட்டார்கள். எனவே என்ன செய்வீர்கள்? நான் செய்ய வேண்டும் என்று எப்பொழுதும் நினையுங்கள். மற்றவர்களைப் பார்க்காதீர்கள். இந்த விஷயத்தை யார் முதலில் செய்வார்களோ அவர்கள் அர்ஜுனன். என்னைப் பார்த்து பிறரும் செய்வார்கள் என்றால் என்ன நடக்கும். நான் செய்தேன் என்றால் அனைவரும் செய்ய ஆரம்பித்து விடுவார்கள் என்ற இந்த பாடத்தை அனைவரும் படித்து கொள்ள வேண்டும். இதில் மற்றவர்களைப் பார்க்காமல் தன்னை மைதானத்தில் கொண்டு வாருங்கள். நல்லது. உங்களைப் பொருத்தளவில் சரியாகத் தான் இருக்கிறீர்கள். ஆனால் சேவையிலும் நம்பர் ஒன்னாக ஆக வேண்டும். சேவையிலும் முழு மதிப்பெண்களைப் பெற வேண்டும். நல்லது.



    டீச்சர்களுடன் சந்திப்பு -

    டீச்சர்களுக்கு இரட்டை வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இரு மடங்கு ஏன் கிடைக்கிறது என்றால் அனேகர்களுக்கு கொடுப்பார்கள். ஏனென்றால் ஆசிரியர் என்றால் எப்பொழுதும் மற்றவர்களின் சேவைக்காக வாழ்பவர்கள். ஆசிரியரின் வாழ்க்கை எப்பொழுதும் மற்றவர்களுக்குக் கற்றுக் கொடுப்பதற்காக இருக்கிறது. அவர்களுடைய வாழ்க்கை தனக்காக இன்றி சேவைக்காக இருக்கிறது. எப்பொழுது மாஸ்டர் ஆசிரியர் மற்றும் உண்மையான சேவாதாரி, தன்னுடைய ஒவ்வொரு விநாடி மற்றும் ஒவ்வொரு எண்ணமும் மற்றவர்களுக்கு படிப்பிப்பதற்காக இருக்கிறது என்ற லட்சியத்தை வைக்கிறார்கள் என்றால், அந்த மாதிரியான மாஸ்டர் ஆசிரியர் மற்றும் சேவாதாரி எப்பொழுதும் வெற்றி அடைபவர்களாக இருப்பார்கள். வாழ்வதே சேவைக்காக, போவதும், வருவதும், பேசுவதும், நினைப்பதும் அனைத்துமே சேவைக்காக இருக்கிறது. ஒவ்வொரு நரம்பிலும் சேவையின் ஊக்கம் மற்றும் உற்சாகம் நிரம்பியிருக்கட்டும். எப்படி நரம்புகளில் ரத்தம் செல்கிறது என்றால் வாழ்க்கை இருக்கிறது. அந்த மாதிரி சேவாதாரி என்றால் ஒவ்வொரு நரம்பிலும் அதாவது ஒவ்வொரு எண்ணம், ஒவ்வொரு விநாடியில் சேவையின் ஊக்கம் உற்சாகத்தின் ரத்தம் நிரம்பியிருப்பதாக இருக்கட்டும். நீங்கள் அந்த மாதிரியான சேவாதாரிகள் தான் இல்லையா? குட் நைட் சொன்னீர்கள் என்றாலும் சேவை, குட் மார்னிங் என்று சொன்னாலும் சேவை. அதில் தன்னுடைய சேவை இயல்பாகவே நிரம்பியிருக்கிறது. இப்படிப்பட்டவரைத் தான் உண்மையான சேவாதாரி என்று கூறுவது. சேவாதாரியின் கனவு கூட எதுவாக இருக்கும்? சேவைக்கானதாக இருக்கும். கனவிலும் கூட சேவை செய்து கொண்டே இருப்பார்கள். நீங்கள் அந்த மாதிரியானவர்கள் தான் இல்லையா?



    சேவாதாரிகளுக்கு லிஃப்ட்டும் மிகப் பெரியது. நீங்கள் அனேக உலகீய பந்தனங்களிலிருந்து விடுபட்டு இருக்கிறீர்கள். இங்கேயே ஜீவன்முக்த் நிலையின் பிராப்தி இருக்கிறது. சேவாதாரியின் அர்த்தமே பந்தனமுக்த், ஜீவன்முக்த். எத்தனை எல்லைக்குட்பட்ட பொறுப்புகளிலிருந்து விடுபட்டு விட்டீர்கள். மேலும் ஆன்மீக பொறுப்பு கூட தந்தையினுடையது, இதிலிருந்தும் விடுபட்டு விட்டீர்கள். சேவை மட்டும் செய்தீர்கள் மற்றும் முன்னேறிச் செல்லுங்கள். பொறுப்பிற்கான சுமை இல்லை. யாருக்காவது எதன் சுமையாவது இருக்கிறதா? சென்டரின் சுமை இருக்கிறதா என்ன? சென்டரை நடத்துவதற்கான சுமை இல்லையா? மாணவர்கள் எப்படி அதிகரிப்பார்கள் என்ற கவலை இல்லையா? (இருக்கிறது) அப்படியானால் சுமையாகத்தான் இருக்கிறது இல்லையா? வெற்றி எப்பொழுது இருக்கும் என்றால், எப்பொழுது நீங்கள் நான் கற்பிப்பவன் இல்லை, ஆனால் தந்தையின் நினைவு மூலம் அவர்களே படிப்பார்கள் என்று எப்பொழுது புரிந்து கொள்கிறீர்களோ அப்பொழுது தான். நான் படிப்பிப்பவன் என்று நினைத்தீர்கள் என்றால் அவர்களால் படிக்க முடியாது. தந்தையிடம் சுமையைக் கொடுத்து விட்டீர்கள் என்றால் படித்துக் கொண்டே இருப்பார்கள். எனவே இதிலிருந்தும் கவலையற்றவர்களாக இருக்க வேண்டும். எந்த அளவு நீங்களே லேசாக இருப்பீர்களோ அந்த அளவு சேவை மற்றும் நீங்கள் எப்பொழுதும் மேலே ஏறிக் கொண்டே இருப்பீர்கள் அதாவது முன்னேற்றத்தை அடைந்து கொண்டே இருப்பீர்கள். நான் எனது என்று வந்து விடுகிறது என்றால் சுமை ஆகி விடுகிறது. மேலும் கீழே வந்து விடுகிறீர்கள். எனவே இந்த சுமையிலிருந்தும் கவலையற்றவராக இருக்க வேண்டும். நினைவின் போதையில் மட்டும் எப்பொழுதும் இருங்கள். தந்தையுடன் இணைந்திருப்பவராக எப்பொழுதும் இருந்தீர்கள் என்றால், எங்கு தந்தை இணைந்திருக்கிறாரோ அங்கு சேவை என்ன பெரிய விஷயம் ! சேவை கண்டிப்பாக நடக்கும் இதன் அனுபவிகள் தான் நீங்கள் இல்லையா !



    அப்படி ஆசிரியர் என்றால் சேவாதாரிக்கு இதுவும் லிஃப்ட் ஆகிவிட்டது இல்லையா? நினைவில் இருங்கள் மேலும் பறந்து கொண்டே இருங்கள். சேவை செய்வதற்கு கருவியாக இருக்கிறீர்கள். செய்விப்பவர் செய்வித்துக் கொண்டிருக்கிறார் என்றிருக்கிறது என்றால் லேசாகவும் இருப்பீர்கள், மேலும் வெற்றி அடைபவராகவும் இருப்பீர்கள். ஏனென்றால் எங்கு தந்தை இருக்கிறாரோ அங்கு வெற்றி நிச்சயம் இருக்கிறது. நல்லது.



    பாப்தாதா தன்னைப் போன்றவர்களைப் பார்த்து ஒஷி அடைகிறார். நீங்கள் மாஸ்டர் பாக்கியத்தை உருவாக்குபவர்கள். பாக்கியத்தை உருவாக்குபவரை நினைவு செய்து அனேகர்களின் பாக்கிய ரேகையைப் போடுபவர்கள். திருப்தியானவராகவோ எப்பொழுதும் இருக்கவே இருக்கிறீர்கள். அதை கேட்பதற்கான அவசியம் இருக்கிறதா என்ன? மாஸ்டர் ஆசிரியரிடம் இதைக் கேட்பது கூட அவமரியாதை ஆகிவிடும். நீங்கள் எப்பொழுதும் திருப்தியாக இருக்கிறீர்கள். மேலும் எப்பொழுதும் இருப்பீர்கள். நல்லது.



    மகாராஷ்டிரா மற்றும் இராஜஸ்தானின் மேளா முடிவடைந்ததா? இந்த நாளும் நாடகத்தில் பதிவாகிக் கொண்டே இருக்கிறது. மீண்டும் எப்பொழுது வரும் ஒவ்வொரு சமயத்திற்கும், ஒவ்வொரு விநாடிக்கும் அதன் அதன் மகத்துவம் இருக்கிறது. சங்கமயுகமே மகத்துவமான யுகம். மகான் ஆவதற்கான யுகம் மற்றும் மகானாக ஆக்குவதற்கான யுகம். எனவே சங்கமயுகத்தின் ஒவ்வொரு விநாடிக்கும் மகத்துவம் இருக்கிறது. சங்கமயுகத்தில் ஆசிரியர் அதாவது சேவாதாரி ஆவதற்கும் மகத்துவம் இருக்கிறது. இல்லறத்தில் இருந்து கொண்டு விலகியிருப் பதற்கும் மகத்துவம் இருக்கிறது. கோபியர்கள் ஆவதற்கும் மகத்துவம் இருக்கிறது மற்றும் பாண்டவர்கள் ஆவதற்கும் மகத்துவம் இருக்கிறது. அனைத்திற்கும் அதனதன் மகத்துவம் இருக்கிறது. ஆனால் பொறுப்பிலிருக்கும் ஆசிரியருக்கு மிக நல்ல வாய்ப்பு இருக்கிறது. அப்படி நீங்கள் அனைவரும் வாய்ப்பைப் பெறக் கூடியவர்கள் தான் இல்லையா? நல்லது. ஓம் சாந்தி.



    வரதானம் :

    ஞானத்தின் பாய்ண்ட்டை தினமும் மீண்டும் படித்து சமாதான (தீர்வு) சொரூபமாக ஆகக்கூடிய துக்கமற்ற ஊரின் மகாராஜா ஆகுக.



    ஞானத்தின் பாய்ண்ட்டுகள் டைரியில் மற்றும் புத்தியில் இருக்கிறது. அதை தினமும் மீண்டும் படியுங்கள். மேலும் அவற்றை அனுபவத்தில் கொண்டு வந்தீர்கள் என்றால் எந்தவிதமான பிரச்சனைக்கும் சுலபமாகவே சமாதானம் (தீர்வு) செய்ய முடியும். ஒருபொழுதும் வீணான எண்ணங்கள் என்ற சுத்தியலினால் பிரச்சனையின் கல்லை உடைப்பதில் நேரத்தை இழக்காதீர்கள். 'நாடகம்' என்ற வார்த்தையின் நினைவு மூலம் உயரம் தாண்டுதல் செய்து முன்னேறிச் செல்லுங்கள். மீண்டும் இந்த பழைய சம்ஸ்காரங்கள் உங்களுடைய தாசன் ஆகிவிடும். ஆனால் முதலில் மகாராஜா ஆகுங்கள் மற்றும் சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பவர்கள் ஆகுங்கள்.



    சுலோகன்:

    ஒவ்வொருவருக்கும் மரியாதை கொடுப்பது தான் மரியாதையைப் பெறுவதாகும்.



    ***OM SHANTI***