BK Murli 12 January 2017 Tamil

BK Murli 12 January 2017 Tamil

12.01.2017    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்

இனிமையான குழந்தைகளே! இது உங்களுடைய வானபிரஸ்த நிலையாகும், ஆகையால் ஒரு தந்தையை நினைவு செய்ய வேண்டும். நிர்வாண தாமத்திற்குச் செல்வதற்கான ஏற்பாடு செய்ய வேண்டும்.

 

கேள்வி:

தந்தையிடம் எந்த விஷயத்தில் வித்தியாசம் கிடையாது?

 

பதில்:

ஏழை மற்றும் செல்வந்தர்களிடம். அனைவருக்குமே முயற்சியின் மூலம் தனது உயர் பதவியை அடைய அதிகாரம் உள்ளது. முன்னே போகப் போக அனைவருக்குமே தம்முடைய பதவியின் காட்சிகள் தெரியும். நான் ஏழைப் பங்காளன் என பாபா சொல்கிறார். ஆகையால் இப்போது ஏழைக் குழந்தைகளின் விருப்பங்கள் நிறைவேறுகின்றன. இது கடைசி காலமாகும். சிலருடையது மண்ணோடு மண்ணாகும். . . யார் தந்தையிடம் இன்ஷியூர் (காப்பீடு) செய்கின்றனரோ அவர்களுடையது நற்பலனை அடையும்.

 

பாடல்:

இறுதியில் அந்த நாளும் வந்தது இன்று. . . .


ஓம் சாந்தி.

இதன் அர்த்தம் முற்றிலும் சகஜமானது. அனைத்து விஷயங்களுமே ஒரு வினாடியில் புரிந்து கொள்ளக் கூடியவை ஆகும். ஒரு வினாடியில் தந்தையிடம் ஆஸ்தியை எடுக்க வேண்டும். எல்லைக்கப்பாற்பட்ட தந்தை வந்து விட்டார் என குழந்தைகள் அறிவார்கள். ஆனால் இந்த ஒரு நம்பிக்கையும் கூட ஒரு சிலருக்கு நிலைப்பதில்லை. லௌகிக சம்மந்தந்தத்திலும் கூட தாய்க்கு குழந்தை பிறந்ததென்றால் இவர் பிறவி கொடுத்து வளர்க்கக் கூடியவர் என அது உடன் புரிந்து கொள்ளும். அதுபோல் இங்கும் உடன் புரிந்து கொள்ள வேண்டும் அல்லவா. பக்திக்குப் பிறகுதான் பகவான் வருகிறார் என இப்போது குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். இப்போது பக்தி எவ்வளவு காலம் நடக்கிறது, எப்போது தொடங்குகிறது என்பது குழந்தைகளாகிய உங்களைத் தவிர உலகில் வேறு யாருக்கும் தெரியாது. பக்தி எப்போது தொடங்கியது என நீங்கள் தெரியப்படுத்த முடியும். பரம்பரை பரம்பரையாய் நடந்து வருகிறது என மனிதர்கள் சொல்வார்கள். ஞானம் மற்றும் பக்தி என இரண்டு விஷயங்கள் கண்டிப்பாக உண்டு. இது அனாதியாக (ஆரம்பம்-முடிவில்லாது) நடந்து வருகிறது என சொல்கின்றனர். ஆனால் அனாதி என்பதன் அர்த்தத்தையும் புரிந்து கொள்வதில்லை. இந்த நாடகத்தின் சக்கரம் அனாதி (ஆரம்ப) காலத்திலிருந்து சுற்றியபடி இருக்கிறது. அதற்கு முதலும் முடிவும் கிடையாது. மனிதர்கள் கட்டுக் கதைகளை கூறிக் கொண்டே இருக்கின்றனர். இவ்வளவு வருடங்கள் ஆனது என ஒரு முறை சொல்வார்கள், இவ்வளவு வருடங்கள் ஆனது என மற்றொரு முறை சொல்வார்கள். தந்தை வந்து அனைத்தையும் தெளிவுபடுத்திச் சொல்கிறார். சாஸ்திரங்கள் முதலானவைகளை படிப்பதன் மூலம் தந்தையின் பிராப்தி எதுவும் கிடைக்காது. தந்தையின் பிராப்தி ஒரு வினாடியில் ஏற்படுகிறது. ஒரு வினாடியில் ஜீவன்முக்தி. தந்தை எப்போது வருகிறார் என்பதும் கூட யாருக்கும் தெரியாது. கல்பத்தின் ஆயுளை நீண்டதாக ஆக்கி விட்டனர். இப்போது தந்தை அறிவார் மற்றும் குழந்தைகளும் அனைத்தும் அறிவார்கள், ஆனால் 10 - 20 வருடங்களில் கூட முழுமையான நிச்சயம் ஏற்படுவதில்லை என்பதே ஆச்சரியமாகும். நிச்சயம் ஆனபிறகு இவர் நம்முடைய தந்தை இல்லை என ஒருபோதும் சொல்ல முடியாது. மிகவும் சுலபமும் கூட. உங்களுக்கு குழந்தையாக ஆவதில் கூட நிறைய கால அவகாசம் தேவைப்படுகிறது. 10-20 வருடங்களில் கூட முழுமையான நம்பிக்கை ஏற்படவில்லை. இப்போது நீங்கள் யாருக்காவது அறிமுகம் கொடுக்கும்போது ஒரு வினாடியில் நிச்சயம் ஏற்பட்டு விடுகிறது. ஜனகரின் விஷயமும் கூட பிற்காலத்தினுடையது, ஏனெனில் நாளுக்கு நாள் மிகவும் சகஜமாக ஆகிக்கொண்டு போகிறது. சட்டென நிச்சயம் ஏற்படுமாறு நல்ல நல்ல விஷயங்கள் வெளிப்படுகின்றன.

 

குழந்தைகளே அசரீரி ஆகுங்கள் என தந்தை சொல்கிறார். தேகங்களின் சம்மந்தப்பட்ட பல தர்மங்களை விடுங்கள். உண்மையான ஒரு தர்மம் இருந்தது அல்லவா. ஒன்றிலிருந்து பல விருத்தி (வளர்ச்சி) அடையும் அல்லவா. இது பலவிதமான மனித சிருஷ்டியின் மரமாகும், மனிதர்களின் விஷயமாகும். பல விதமான தர்மங்களின் மரத்தைப் பற்றியும் அறிய வேண்டும். தர்மங்களின் மாநாடு நடக்கிறது. ஆனால் முதன் முதலான பூஜைக்குரியவர்களின் தர்மம் எது என்பது அவர்களுக்கு தெரியவே தெரியாது. புத்தியில் வர வேண்டும். பாரதம் பழமையான தர்மத்தைச் சார்ந்தது எனும்போது கண்டிப்பாக பழமையான தர்மத்தை பரமபிதா பரமாத்மாதான் படைத்திருப்பார். பாரதத்தில் சிவஜெயந்தி கொண்டாடப்படுகிறது. கோவில்களும் அளவற்றவை உள்ளன. . . அனைத்தையும் விட பெரியதிலும் பெரியதான கோவில் தந்தையுடையதாகும் - நிர்வாணதாமம். அங்கே ஆத்மாக்களாகிய நாமும் கூட தந்தையுடன் இருக்கிறோம். கோவில் வசிக்கக் கூடிய இடமாக இருக்கும் அல்லவா. ஆக இந்த மகா தத்துவம் எவ்வளவு பெரிய கோவில். பிரம்ம தத்துவம், அது உயர்ந்ததிலும் உயர்ந்த கோவில், நாம் அனைவரும் அங்கே வசிப்பவர்கள் ஆவோம் என்பது உங்கள் புத்தியில் வர வேண்டும். அங்கே சூரிய சந்திரர்கள் இருப்பதில்லை ஏனென்றால் இரவு பகல் உண்டாவதில்லை. உண்மையில் நம்முடைய ஆன்மீக கோவில் நிர்வாணதாமம் ஆகும். அதுவே சிவாலயமாகும், அங்கே நாம் சிவபாபாவுடன் இருக்கிறோம். நான் அந்த சிவாலயத்தில் வசிக்கிறேன் என சிவபாபா சொல்கிறார். அது எல்லைக்கப்பாற்பட்ட சிவாலயம் ஆகும். சிவனுடைய குழந்தைகளாகிய நீங்களும் அங்கே வசிக்கிறீர்கள். அது நிராகாரமான சிவாலயம். பிறகு சாகாரத்தில் வரும்போது இங்கே வசிப்பதற்கான இடம் உருவாகும். இப்போது சிவபாபா இங்கே இருக்கிறார், இந்த சரீரத்தில் அமர்ந்திருக்கிறார். இது சைதன்யமான சிவாலாயமாகும். இவரோடு நீங்கள் பேச முடியும். அந்த நிர்வாண தாமம் கூட சிவபாபாவின் சிவாலயமாகும், அங்கே ஆத்மாக்களாகிய நாம் இருக்கிறோம். அந்த வீடு அனைவருக்குமே நினைவில் வருகிறது. அங்கிருந்து நாம் நடிப்பை நடிப்பதற்காக வருகிறோம் - சதோ ரஜோ தமோவில், அதில் அனைவருமே வரவேண்டும். இந்த விஷயம் உலகில் யாருடைய புத்தியிலும் இல்லை, ஆத்மாக்கள் அனைவருக்குமே அவரவர்களுடைய நடிப்பு கிடைத்திருக்கிறது, அதற்கு முதலும் கிடையாது, முடிவும் கிடையாது. நாம் உண்மையில் அந்த சிவாலயத்தில் வசிப்பவர்கள் என்பதை குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். சிவபாபா ஸ்தாபனை செய்யக் கூடிய சொர்க்கமும் கூட சிவாலயம் என சொல்லப்படுகிறது. சிவபாபாவால் ஸ்தாபனை செய்யப்பட்ட சொர்க்கம். அங்கும் கூட குழந்தைகள்தான் வசிக்கின்றனர். அவர்களுக்கு இந்த இராஜ்ய பாக்கியம் எப்படி கிடைத்தது? அது சத்யுகத்தின் ஆரம்பம், இது கலியுகத்தின் முடிவு. ஆக சத்யுகத்தில் தேவி தேவதைகளை சொர்க்கத்தின் எஜமானாக ஆக்கியது யார்? இங்கும் கூட எவ்வளவு நல்ல நல்ல கண்டங்கள் உள்ளன. அமெரிக்கா அனைத்தையும் விட முதல் தரமான கண்டமாகும். மிகவும் செல்வந்தர்கள் மற்றும் சக்தி மிக்கவர்களும் கூட. இந்த சமயத்தில் அனைவரை விடவும் உயர்ந்தவர்கள். பிருஹஸ்பதி (குருவின்) தசை அமர்ந்து விட்டுள்ளது. ஆனால் அத்துடன் கூட ராகுவின் தசையும் அமர்ந்து விட்டுள்ளது. இந்த சமயத்தில் ராகுவின் தசை அனைவரின் மீதும் அமர்ந்துள்ளது. அனைத்துமே வினாசம் ஆக வேண்டியுள்ளது. அனைத்தையும் விட செல்வம் மிக்க நாடாக இருந்த பாரதம் இப்போது ஏழையாக உள்ளது. இவையனைத்தும் மாயையின் பகட்டாகும். மாயையின் வேகம் மிக அதிகமாக உள்ளது. ஆகையால் மனிதர்கள் இதனை சொர்க்கம் என புரிந்து கொள்கின்றனர். அமெரிக்காவில் பாருங்கள் என்னென்னவெல்லாம் இருக்கிறது. மனிதர்கள் ஈர்க்கப்பட்டு விடுகின்றனர். பாம்பே (மும்பை) கூட பாருங்கள் எவ்வளவு ஃபேஷன் நிறைந்ததாக ஆகி விட்டது. முன்னர் இப்படி இருக்கவில்லை. மாயையின் முழுமையான பகட்டாக இருக்கிறது. 8-10 மாடிகள் உள்ள மாளிகைகள் எவ்வளவு கட்டுகின்றனர். சொர்க்கத்தில் இத்தனை மாடிகள் இருக்காது. அங்கே இரண்டு மாடி கூட இருக்காது. இங்கேதான் கட்டுகின்றனர், ஏனென்றால் நிலமே இல்லை. நிலத்தின் விலை மிகவும் அதிகரித்து விட்டது. ஆகவே மனிதர்கள் இதுவே சொர்க்கம் என புரிந்து கொள்கின்றனர். திட்டங்கள் தீட்டியபடி இருக்கின்றனர். ஆனால் மனிதன் நினைப்பது ஒன்று இறைவன் நினைப்பது வேறொன்று. . . என சொல்கின்றனர். மனிதர்கள் எவ்வளவு கவலைகளில் இருக்கின்றனர். மரணம் அனைவருக்குமே உள்ளது. அனைவரின் கழுத்திலும் மரணத்தின் தூக்குக் கயிறு உள்ளது. நீங்களும் கூட இப்போது தூக்கு மேடையில் இருக்கிறீர்கள். உங்களுடைய புத்தி அங்கே புதிய உலகத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. இப்போது அனைவருமே வானபிரஸ்த நிலையில் செல்லக் கூடிய நேரமாகும். ஆகையால் இப்போது என்னை நினைவு செய்யுங்கள் என தந்தை சொல்கிறார். உங்கள் அனைவரின் வானபிரஸ்த நிலை இது, நான் அனைவரையும் அழைத்துச் செல்ல வந்துள்ளேன் என நானே உங்களுக்கு வழி கொடுக்கிறேன். கொசுக்கூட்டம் போல நீங்கள் அனைவரும் செல்ல வேண்டியிருக்கும். 84 பிறவிகளின் சக்கரம் சுற்றி முடிந்து விட்டது, இப்போது என்னை வாழ்ந்து கொண்டே நினைவு செய்யுங்கள். நாம் வாழ்ந்து கொண்டிருந்தாலும் சொர்க்கத்திற்குச் செல்வதற்காக தயாராக அமர்ந்திருக்கிறோம். வேறு யாரும் சொர்க்கத்திற்குச் செல்வதற்காக ஏற்படுகள் செய்யவில்லை. சொர்க்கத்திற்குச் செல்லும் குஷியில் இருந்தால் பிறகு நோய்க்கான மருத்துவத்தைக் கூட எடுத்துக் கொள்ள மாட்டார்கள். அவர்கள் (மற்றவர்) சொர்க்கத்திற்குச் செல்வதில்லை என நீங்கள் அறிவீர்கள். இப்போது நாம் இனிமையான வீட்டிற்குச் சென்று கொண்டிருக்கிறோம். அது இறைத் தந்தையின் வீடு அல்லது ஆன்மீக சிவாலயம். பிறகு சத்யுகம் ஸ்தூலமான சிவாலயம் எனப்படுகிறது. அந்த சொர்க்கத்திற்குச் செல்வதற்காக நாம் முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். பிரம்மாவின் பகல், பிரம்மாவின் இரவு புகழ் வாய்ந்தது என பாபா புரிய வைத்திருக்கிறார். இரவு முடியும்போது நான் வருகிறேன். லட்சுமி நாராயணரின் பகல், இரவு என சொல்வதில்லை. அவர்களேதான் இருக்கின்றனர், ஆனாலும் பிரம்மாவுக்கு பகல் மற்றும் இரவின் ஞானம் உள்ளது. அங்கே லட்சுமி நாராயணருக்கு இந்த ஞானம் இருக்காது, ஆகையால் பிரம்மா மற்றும் பிராமண பிராமணியர் சிவனின் ராத்திரி எப்போது வரும் என புரிந்து கொள்கின்றனர். உலகத்திற்கு இந்த விஷயங்கள் தெரியாது. சிவன் நிராகாரமானவர், அவர் எப்படி வருவார் என கேட்க வேண்டும் அல்லவா. சிவஜெயந்தி குறித்து நீங்கள் நிறைய சேவை செய்ய முடியும். இராஜ்யம் ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது. இப்போது மிகவும் சிறிய மரமாக உள்ளது, இந்த மரத்திற்கு புயல்கள் வருகின்றன, மற்ற மரங்களுக்கு இவ்வளவு புயல்கள் வருவதில்லை. அதில் ஒன்றுக்குப் பின் ஒன்றாக வந்தபடி இருக்கும். இங்கே உங்களுடையது புதிய பிறவியாகும். மாயையின் புயல்களும் முன்னால் நின்றிருக்கின்றன வேறு யாருக்கும் புயலை எதிர்கொள்ள வேண்டியதில்லை. இங்கே தர்மத்தை ஸ்தாபனை செய்வதில் மாயையின் புயல்கள் வீசுகின்றன. மிகவும் உயர்ந்த குறிக்கோள் ஆகும். உலகின் சக்ரவர்த்தி ஆவது ஏதும் புதிய விஷயம் இல்லை. பல முறை நீங்கள் இந்த புயல்களைக் கடந்து சென்று தனது இராஜ்ய பாக்கியத்தை எடுத்திருக்கிறீர்கள். யார் என்ன விதமாக முயற்சி செய்கின்றனரோ அது காட்சியில் தெரிந்தபடி இருக்கும். எந்த அளவு முன்னே செல்கின்றீர்களோ அந்த அளவு உங்களுக்கு இன்னார் என்ன பதவியை அடைவார்கள் என காட்சி தெரியும். இவர் என்ன முயற்சி செய்கிறார் என தெரிந்து போகிறது அல்லவா. ஏழை அல்லது பணக்காரர்களின் விஷயம் அல்ல. இறுதியில் அந்த நாளும் இன்று வந்தது. . . என்ற பாடலும் கேட்டீர்கள். ஏழைப்பங்காளர் பாபா வந்தார். நான் ஏதும் பணக்காரர்களுக்கு செல்வம் கொடுக்க வேண்டியதில்லை. அவர்கள் செல்வந்தர்களாகத்தான் இருக்கின்றனர். அவர்களைப் பொறுத்த வரை சொர்க்கம் இங்கே இருக்கிறது. கோடீஸ்வரர்கள் இருக்கின்றனர். முன்னர் கோடீஸ்வரர்கள் இருப்பது கடினமாக இருந்தது. இப்போதோ கோடிகள் மனிதர்களிடம் சுவர்களில் பதுக்கப்பட்டு கிடக்கிறது. ஆனால் இதெல்லாம் யாருக்கும் பயன்படப் போவதில்லை. வயிறு அதிகமாக எதுவும் சாப்பிடப் போவதில்லை. ஏமாற்றி பணம் சேர்ப்பவர்களுக்கு தூக்கம் வரப் போவதில்லை. அரசாங்கம் ஏதாவது கண்டுபிடித்து சீல் வைத்து விடப் போகிறது.. . . இது கடைசி காலம், இதை நினைவு வைக்க வேண்டும் என தந்தை சொல்கிறார். இப்போது சிலருடையது மண்ணோடு மண்ணாகப் போகிறது. . . சிவனின் பெயரால் செய்யப்படும் செலவு நற்பலனுள்ளதாக ஆகும். சிவன் இப்போது சொர்க்கத்தின் எஜமானாக ஆக்குகிறார். இப்போது நீங்கள் தந்தையிடம் இன்ஷியூரன்ஸ் (காப்பீடு) செய்யுங்கள். மரணம் முன்னால் நின்றிருக்கிறது. உங்களுடைய அனைத்து விருப்பங்களும் இப்போது நிறைவேறுகிறது. தந்தை ஏழைகளை உயர்த்துகிறார். செல்வந்தர்களின் ஆயிரம் ரூபாய், ஏழைகளின் ஒரு ரூபாய்க்குச் சமமாகும். ஏழைகள்தான் நிறைய பேர் வருகின்றனர். சிலருக்கு 100 ரூபாய் சம்பளம், சிலருக்கு 150 ரூபாய். . . உலகில் மனிதர்களிடம் கோடிகள் இருக்கின்றன, அவர்களுக்கு இது சொர்க்கம். அவர்கள் ஒருபோதும் வரமாட்டார்கள். பாபாவுக்கும் அவசியமில்லை. பாபா சொல்வார் - நீங்கள் தனக்காக வீடு முதலானவைகளை கட்டுங்கள். செண்டர்களை திறந்து வையுங்கள், நான் பணத்தை என்ன செய்யப் போகிறேன். சன்னியாசிகள் நிறைய அடுக்கு மாடி கட்டடங்கள் முதலானவைகளைக் கட்டுகின்றனர், அவர்களிடம் செல்வங்கள் நிறைய இருக்கின்றன. இந்த ரதமும் (பிரம்மா) அனுபவம் மிக்கவர். இப்போது நான் ஏழைகளை செல்வந்தர்களாக ஆக்குவதற்காக வந்துள்ளேன், இப்போது தைரியம் வையுங்கள். கோடீஸ்வரர்களின் பணம் இப்போது பயன்படப் போவதில்லை. இங்கே பணம் முதலானவற்றின் விசயம் கிடையாது. தந்தை மன்மனாபவ என்பதை மட்டும் சொல்கிறார். செலவின் விசயம் கிடையாது. இந்த வீடு கட்டப்பட்டுள்ளது - அதுவும் மிகவும் எளிமையாக, இறுதிக் காலத்தில் நீங்கள் தங்குவதற்காக. உங்களுடைய நினைவுச் சின்னம் இங்கே நின்றுள்ளது. இப்போது மீண்டும் சைதன்யத்தில் (உயிரோட்டமாக) ஸ்தாபனை செய்து கொண்டிருக்கிறீர்கள். பிறகு இந்த ஜடமான நினைவுச் சின்னம் அழிந்து விடும். அபுவில் வந்து இந்த கோவிலை யார் பார்க்கவில்லையோ, அவர்களின் தொழிலைப் பற்றி தெரிந்து கொள்ளவில்லை என்றாலோ அவர்கள் எதுவும் பார்க்கவில்லை என அர்த்தம் என நீங்கள் எழுத வேண்டும். அவர்கள்தான் நாங்கள், இப்போது சைதன்யத்தில் (உயிரோட்டமாக) அமர்ந்திருக்கிறோம் என நீங்கள் சொல்வீர்கள். இந்த ஜட சிற்பங்களின் ரகசியத்தை நாங்கள் புரிய வைக்க முடியும். எங்களுடைய ஜடமான நினைவுச் சின்னமாக உருவாகியுள்ளது. அதிசயமான கோவில் இது. அதிசயம் அல்லவா. மம்மா, பாபா மற்றும் குழந்தைகள் இங்கே சைதன்யத்தில் அமர்ந்திருக்கின்றனர். அங்கே ஜட சிற்பங்கள் நின்றிருக்கின்றன. முக்கியமானவர் சிவன். பிரம்மா, ஜகதம்பா மற்றும் லட்சுமி நாராயணர். எவ்வளவு நல்ல விதமாக புரிய வைக்கிறார். அப்போதும் கூட தந்தையுடையவராக ஆகி தந்தைக்கு டிவோர்ஸ் கொடுத்து விடுகின்றனர். இதுவும் கூட எதுவும் புதிய விசயம் அல்ல. தந்தையுடையவர் ஆகி பின் ஓடிப்போய் விடுகின்றனர். ஓடிப்போனவர்களின் படங்களைக் கூட நாம் வைக்கலாம். உறுதியான நம்பிக்கை இருந்தது என்றால் தனது இராஜ்யத்தின் படத்தை வரைந்து கொண்டால் எதிர்காலத்தில் இரட்டை கிரீடதாரியாக சொர்க்கத்தின் எஜமானாக ஆவோம் என்ற நினைவு இருக்கும். தந்தையை விட்டு விட்டால் கிரீடம் விழுந்து விடும். இது மிகவும் அதிசமயமான புரிந்து கொள்ள வேண்டிய விஷயம் ஆகும். தந்தையை நினைவு செய்யுங்கள். அவரிடமிருந்துதான் ஆஸ்தி கிடைக்கிறது. அதுதான் ஒரு வினாடியில் ஜீவன்முக்தி எனப்படுகிறது. எதிர்காலத்திற்காக பாபா உங்களை தகுதி மிக்கவர்களாக ஆக்கிக் கொண்டிருக்கிறார். மனிதர்கள் அடுத்த பிறவிக்காக தான புண்ணியங்கள் செய்கின்றனர். அது அல்ப காலத்தின் பிராப்தியாகும். இந்த படிப்பின் மூலம் எதிர்காலத்தின் 21 பிறவிகளுக்காக உங்களுடைய பலன் உருவாகிறது. இந்த தாய் தந்தையின் கட்டளைப்படி நடப்பவர்கள் ஒரேயடியாக உயர்ந்து விடுவார்கள். தாய் தந்தையரும் மகிழ்ச்சி அடைவார்கள். நடைமுறைப் படுத்தாவிட்டால் பதவியும் குறைந்து போய் விடும். நான் சுயநலமற்ற, அபோக்தா (அனுபவிக்காதவர்) என சிவபாபா சொல்கிறார். நான் இந்த டோலி முதலான எதையும் சாப்பிடுவதில்லை. உலகின் இராஜ்யமும் கூட உங்களுக்காகத்தான். இந்த உணவு - பானம் எல்லாம் கூட உங்களுக்காக உள்ளது, நான் சேவகனாக இருக்கிறேன். நான் வரக்கூடிய நேரம் கூட குறிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கல்பமும் தன்னுடைய குழந்தைகளுக்கு இராஜ்ய பாக்கியத்தை கொடுத்துவிட்டு நான் நிர்வாணதாமத்தில் அமர்ந்து விடுகிறேன். தந்தையை யாரும் மறந்து விடக்கூடாது. தந்தை உங்களுக்கு சொர்க்கத்தின் இராஜ்யத்தை கொடுக்க வந்திருக்கிறார் என்றாலும் கூட அவரை நீங்கள் மறந்து விடுகிறீர்களே! தந்தையின் அறிமுகத்தை யாருக்கு வேண்டுமானாலும் கொடுப்பதற்கான மிக சகஜமான யுக்தியை கூறியிருக்கிறார் - பரமபிதா பரமாத்மாவுடன் உங்களுக்கு என்ன சம்மந்தம் (உறவு)? என கேளுங்கள். பிரஜாபிதா பிரம்மாவுடன் உங்களுக்கு என்ன சம்மந்தம்? இருவருமே தந்தையர் ஆவர். அவர் நிராகாரமானவர், இவர் சாகாரமானவர். தந்தையை எங்கும் நிறைந்தவர் என்று சொன்னால் ஆஸ்தி எப்படி கிடைக்கும்? பகவானுடைய ஸ்ரீமத் (உயர்ந்த வழி) கிடைக்கிறது. ஸ்ரீமத் மூலமே நீங்கள் உயர்ந்தவரிலும் உயர்ந்தவர்கள் ஆகிறீர்கள். நல்லது!

 

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

 

தாரணைக்கான முக்கிய சாரம் :

1. மாயையின் புயல் காற்றுகளைக் கடந்து சென்றபடி தந்தையிடமிருந்து முழுமையிலும் முழுமையான ஆஸ்தியை எடுக்க வேண்டும். தாய் தந்தையரின் கட்டளைகளை நடைமுறைப் படுத்த வேண்டும்.

 

2. பழைய உலகை மறந்து புதிய உலகை நினைவு செய்ய வேண்டும். மரணத்திற்கு முன்பு தந்தையிடம் தன்னை இன்ஷியூர் செய்து விட வேண்டும்.

 

வரதானம் :

சமர்ப்பண உணர்வுடன் சேவை செய்தபடி வெற்றியை பிராப்தி செய்யக் கூடிய உண்மையான சேவாதாரி ஆகுக.

 

யார் சமர்ப்பண உணர்வுடன் சேவை செய்கின்றனரோ அவர்களே உண்மையான சேவாதாரிகள் ஆவர். சேவையில் கொஞ்சம் கூட நான் என்ற உணர்வு இருக்கக் கூடாது. எங்கே என்னுடையது என்பது இருக்குமோ அங்கே வெற்றி இருக்காது. என்னுடைய வேலை இது, என்னுடைய சிந்தனை, இது என்னுடைய கடமை என இப்படி யாராவது புரிந்து கொண்டால் இந்த என்னுடையது என்பது வருகிறது என்றாலே மோகம் உற்பத்தி ஆகிறது என அர்த்தம். ஆனால் எங்கே இருந்தாலும் நான் நிமித்தமாக இருக்கிறேன், இது என்னுடைய வீடு அல்ல, சேவையின் ஸ்தலம் ஆகும் என்ற நினைவு எப்போதும் இருந்தது என்றால் சமர்ப்பண உணர்வுடன் பணிவாகவும், பற்றற்றவராகவும் ஆகி வெற்றியை பிராப்தியாக அடைவார்கள்.

 

சுலோகன் :

எப்போதும் தன்னுடைய சுவமானத்தின் ஆசனத்தில் இருந்தீர்கள் என்றால் அனைத்து சக்திகளும் கட்டளைகளை ஏஓம் சாந்தி.

 

தபஸ்வி மூர்த்தி ஆகுங்கள்:

தபஸ்வி மூர்த்தி என்பதன் அர்த்தம் - தபஸ்யாவின் மூலம் அமைதி சக்தியின் கிரணங்களை நாலாபுறங்களிலும் பரப்பிக்கொண்டிருக்கும் அனுபவத்தில் வரவேண்டும். இந்த தபஸ்வி சொரூபம் மற்றவர்களுக்கு கொடுக்கக் கூடிய சொரூபமாகும். சூரியன் உலகத்திற்கு வெளிச்சத்தின் மற்றும் பல அழியக் கூடிய பிராப்திகளின் அனுபவத்தை செய்விப்பது போல மஹான் தபஸ்வி ஆத்மாக்கள் மாஸ்டர் ஞான சூரியன் ஆகி சக்திசாகி ரணங்களின் அனுபவத்தை செய்வியுங்கள்.

  

ஒம்சாந்தி