BK Murli 29 January 2017 Tamil

BK Murli 29 January 2017 Tamil29.01.2017   காலை முரளி  ஓம் சாந்தி   அவ்யக்த பாப்தாதா    ரிவைஸ் 16.01.1982 மதுபன்


என்னுடைய தந்தை வந்து விட்டார் - என்ற இந்த ஓசை நாலாபுறங்களிலும் சப்தமாக ஒலிப்பதற்காக நாலாபுறங்களிலும் ஃபரிஷ்தா ரூபத்தில் பரவி விடுங்கள்இன்று பாப்தாதா எங்கே வந்திருக்கிறார், மேலும் யாருடன் சந்திப்பதற்காக வந்திருக்கிறார்? இதைத் தெரிந்திருக்கிறீர்களா? இன்று இறைவன், இறை நண்பனாகி வந்திருக்கிறார் என்றால் நண்பர்கள் அவர்களுக்குள் என்ன செய்கிறார்கள்? பாடுவார்கள், ரித்துக் கொள்வார்கள், சாப்பிடுவார்கள். மேலும் கலகலப்பாக இருப்பார்கள். அப்படி இன்று பாப்தாதா கூறுவதற்காக வரவில்லை. ஆனால் சந்திப்பதற்காக வந்திருக்கிறார். எவ்வளவு தூர தூரங்களிலிருந்து எத்தனை விதமான இறை நண்பர்கள் வந்து சேர்ந்து விட்டார்கள் என்று பாப்தாதா பார்க்கிறார். நிரந்தர நட்பில் இதயத்தில் என்னென்ன எண்ணம் வருகிறதோ அவை அனைத்தையும் நண்பனுக்குக் கூறுவார்கள், நீங்களும் இறைவனை அந்த மாதிரி யான நண்பனாக ஆக்கியிருக்கிறீர்கள் தான் இல்லையா? அழியாதவருடன் உறவை இணைத்திருக்கிறீர்கள் தான் இல்லையா? இந்த நேரம் இணைத்தீர்கள், அடுத்த நேரம் துண்டிக்கிறீர்கள் என்ற அந்த மாதிரி இல்லையே? என்ன நினைக்கிறீர்கள்? அழியாத நட்பு இருக்கிறதா? முழுக் கல்பத்திற்குள் அந்த மாதிரி தந்தை என்று கூறினாலும், நண்பன் என்று கூறினாலும், என்ன சொன்னாலும், அனைத்து உறவுகளை வைத்துக் கொள்பவர் என்று சொன்னாலும் இந்த மாதிரியானவர் கிடைப்பாரா? முழுக் கல்பத்தின் சக்கரத்தைச் சுற்றி வந்தாலும் கிடைப்பாரா? மேலும் தன்னுடைய நண்பர்களை மற்றும் அனைத்து உறவினர்களையும் தந்தை வந்து தான் தேடினாரே அன்றி உங்களால் தேட முடியவில்லை. அழியாத அனைத்து உறவுகளையும் இணைத்துக் கொள்வதற்கான ஆதாரம் மற்றும் விதியை நல்ல முறையில் தெரிந்திருக்கிறீர்களா? எப்பொழுதும் மேரா பாபா (என்னுடைய தந்தை) என்ற ஒரு விஷயம் மட்டும் நினைவிருக்க வேண்டும். என்னுடையவர், என்னுடையவர் என்று கூறுவதினால் அதிகாரி ஆத்மா ஆகிவிடுவீர்கள். இது கடினமா என்ன? எப்பொழுது மேரா பாபா என்று தந்தை கூறினார் என்றால் குழந்தைகளுக்கு மேரா பாபா என்று புரிந்து கொள்வதில் என்ன கடினம் இருக்கிறது. இந்த என்னுடைய என்ற வார்த்தை 21 ஜென்மங்களுக்காக அழியாத சம்மந்தத்தை இணைப்பதற்கான ஆதாரம். அந்த மாதிரி சுலபமான வழியைக் கடைபிடித்தீர்களா? அனுபவியாக ஆகிவிட்டீர்கள் தான் இல்லையா?இன்று எத்தனை புதுப்புது குழந்தைகள் தன்னுடைய ஒவ்வொரு கல்பத்தின் அதிகாரத்தை அடைவதற்காக வந்து சேர்ந்து விட்டார்கள். மேலும் தங்களுடைய அதிகாரத்தை அடைந்து கொண்டும் இருக்கிறார்கள். அப்படி அதிகாரி குழந்தைகளைப் பார்த்து பாப்தாதா மகிழ்ச்சி அடைகிறார்.ஜப்பானின் பொம்மைகள் நன்றாக இருக்கிறீர்கள் தான் இல்லையா? மிக அன்புடன் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். பாருங்கள் தேசம் மற்றும் மதத்தின் முந்தானைக்குள் இருந்த போதிலும் பாப்தாதா தன்னுடைய குழந்தைகளை தன்னுடையவர்களாக ஆக்கியிருக்கிறார். எனவே ஜப்பானின் பொம்மைகள் என்ன பாடல் பாடுகிறீர்கள்? மை பாபா. ஒவ்வொருவரும் இன்னொருவரை விட அன்பானவர்கள். அதே போலவே பிரான்ஸ் தேசத்தின் குழந்தைகளும் எவ்வளவு பிரியமானவர்கள் என்பதையும் பாருங்கள். மொழியைப் புரிந்து கொள்ளாத போதிலும் தந்தையைப் புரிந்து கொள்கிறார்கள். பிரேசில், மெக்சிகோ... வின் அனைத்து குரூப்களும் மிக நல்ல குரூப்கள். இந்த தடவை தூர தேசத்து குரூப் நன்றாக முயற்சி செய்து வந்து சேர்ந்து விட்டார்கள். லண்டன், அமெரிக்கா, ஜெர்மனியோ, தொடக்கத்திலிருந்தே இருக்கிறார்கள். புதுப்புது ஸ்தானங்களின் மிக அழகான பூச்செண்டுகளைப் பார்த்து பாப்தாதா மிகவும் மகிழ்ச்சி அடைகிறார். அனைத்தையும் விட தொலை தூரமான ஸ்தானம் எது? (பரந்தாமம்). சரியாகக் கூறினீர்கள். ஆனால் எவ்வளவு தான் தூரமான ஸ்தானமாக இருந்தாலும் அந்த அளவே வந்து சேர்வதில் ஒரு நொடியில், காலதாமதமின்றி வந்து சேர்ந்து விடுகிறீர்களா அல்லது நேரமாகிறதா?ஹாங்காங்கின் (சீன மொழி பேசுபவர்கள்) குழந்தைகள் வந்து சேர்ந்து விட்டார்கள். இறை பூச்செண்டின் மிக அழகான மலர் நீங்கள். தன்னை இந்த பூச்செண்டின் மலர் என்று அனுபவம் செய்கிறீர்கள் தான் இல்லையா? நல்லது. ஒவ்வொரு தேசத்தின் அவரவர்களின் பெயரால், அனைவரின் பெயரையோ பாப்தாதா சொல்ல மாட்டார் இல்லையா? அப்படி ஒவ்வொரு தேசத்திலிருந்து வந்திருக்கும் அனைத்து குழந்தைகளும் மிகப் பிரியமானவர்கள். பாப்தாதாவை சந்திப்பதற்காக வந்திருக்கிறீர்கள். மேலும் பாப்தாதாவும் அனைத்து குழந்தைகளைப் பார்த்து, குழந்தைகளின் விசேஷத்தின் பாடலைப் பாடுகிறார். பார்படோஸை சேர்ந்தவர்களும் மிகவும் ஆன்மிக குஷி அடைகிறார்கள். டிரினிடாட்-ன் மாதர்களோ மிக நல்லவர்கள். அவர்கள் மிகவும் போதையில் சுற்றுபவர்களாகவும், குஷியில் ஆடுபவர்களாகவும் தென்படுகிறார்கள். மொரிசீயஸின் குமாரிகள் அடங்கிய பார்ட்டியும் மிக நல்லது. ஒவ்வொரு குமாரியும் 100 பிராமணர்களை விட உத்தமமானவர்கள். ஒருவேளை 4 குமாரிகள் கூட வந்திருக்கிறார்கள் என்றால் 400 பிராமணர்கள் வந்து விட்டார்கள். நீங்கள் நம்முடைய குரூப் மிக சிறியது என்று நினைக்கிறீர்கள். ஆனால் உங்களில் 400 பேர்கள் அடங்கியிருக்கிறார்கள். சிறிய குரூப் அல்ல. மற்றபடி ஆஸ்திரேலியா மற்றும் லண்டனோ அவர்களுக்குள் பந்தயம் செய்கிறார்கள் மற்றும் ஜெர்மனி இடையில் கண்டெடுக்கப்பட்டவர்களாக ஆகிவிட்டார்கள். துபாயும் ஒரு லட்சத்திற்குச் சமமானவர்கள். நைரோபி மிக அதிக அதிசயம் செய்திருக்கிறார்கள். யாருமே இதுவரை கட்டாத மினி பாண்டவ பவனை நைரோபியைச் சேர்ந்தவர்கள் கட்டியிருக்கிறார்கள். நல்ல வெள்ளை மாளிகையை உருவாக்கியிருக்கிறீர்கள். ஜெர்மனிக்கும் மிகுந்த கிளைகள் இருக்கின்றன. அமெரிக்காவிற்கும் மிகுந்த கிளைகள் இருக்கின்றன. முழு ஐரோப்பாவும் நல்ல முயற்சி செய்து லண்டன் மற்றும் ஆஸ்திரேலியா விற்குச் சமமாக வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கிறார்கள்.அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள். அமெரிக்கா அனேக மூலைகளில் சேவை நிலையங்களை திறந்திருக்கிறார்கள். இந்த சாதுர்யத்தை மிக நன்றாகச் செய்திருக்கிறார்கள். இப்பொழுது நாலாபுறங்களிலும் சேவையின் நல்ல முற்றுகை இட்டிருக்கிறீர்கள். இதன் மூலமாகத் தான் நேரம் வரும்பொழுது ஒயிட் ஹவுஸின் (வெள்ளை மாளிகையின்) மேலே லைட் ஹவுசின் (கலங்கரை விளக்கத்தின்) வெற்றி ஏற்படும். ஏனென்றால் விநாச ஜுவாலையும் அமெரிக்காவிலிருந்து உருவாகும் என்றால் ஸ்தாபனையின் விசேஷ காரியத்திலும் அமெரிக்காவின் பாண்டவ அரசாங்கம் என்று கூறினாலும், பாண்டவ சேனை என்று கூறினாலும் அவர்கள் தான் பொறுப்பாளர் ஆவார்கள். அந்த மாதிரி தயாராக இருக்கிறீர்கள் தான் இல்லையா? (ஆம்). கட்டளை பிறக்கலாமா?ஜப்பானைச் சேர்ந்த பொம்மைகள் என்ன செய்வார்கள்? அனைத்தையும் விட பெரிய, அனைத்தையும் விட அழகான பூச்செண்டை பாப்தாதாவிற்கு அளிப்பீர்கள் தான் இல்லையா? ஜெர்மனி என்ன செய்யும்? ஜெர்மனி கண்ணில்லாதவர்களுக்கும் கண் கிடைக்கும் அளவிற்கு அந்த மாதிரி ஆத்மீக குண்டு மற்றும் அமைதியின் சக்தியின் குண்டுகள் மூலமாக ஒளியைப் பரப்புவார்கள்.துபாயைச் சேர்ந்தவர்கள் என்ன செய்வீர்கள்? அங்கே மறைந்திருக்கும் பிராமணர்கள் தன்னுடைய சிறப்புக்களை அவசியம் காண்பிப்பார்கள். மற்ற மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் பிராமண ஆத்மாக்கள் மறைந்திருக்க முடியாது. எனவே அவர்களும் பெரிய குரூப்பை உருவாக்கி வருவார்கள். உள்ளுக்குள்ளேயே தயாராகிக் கொண்டிருக்கிறார்கள், வெளியில் வந்து விடுவார்கள். இந்த தூர தேசத்தைச் சேர்ந்தவர்கள் (பிரேசில் மற்றும் மெக்சிகோவைச் சேர்ந்தவர்கள்) குழந்தைகளே, என்ன யோசித்துக் கொண்டிருக்கிறீர்கள். தூரத்திலிருந்தே அந்த மாதிரி வலுவான ஓசையைப் பரப்புவார்கள். அது தூரத்திலிருந்தே நேராக பாரதத்தின் கும்பகர்ணர்கள் வரை வந்து சேர்ந்து விடும்.கயானாவோ அமெரிக்காவின் (நியூயார்க்) அஸ்திவாரம். கயானா என்ன செய்ததோ, அதை இதுவரையிலும் வேறு யாரும் செய்யவில்லை. வி.ஐ.பி-க்களாக இருந்த போதிலும் கயானாவின் ஆத்மாக்களிடம் இந்த விசேஷம் இருந்தது. முழுமையான வாரிசு தரம் உள்ளவர்களாக இருக்கிறார்கள் என்று ஏற்கனவே கூறியிருந்தோம் இல்லையா.கனடாவிலிருந்தும் திருமூர்த்தி வந்திருக்கிறார்கள். திருமூர்த்தியில் தான் முழு உலகமும் அடங்கியிருக்கிறது. கனடா இப்பொழுது குப்தமாக பிரத்யக்ஷத்தின் பந்தயத்தில் முன்னேறிச் செல்லும், நல்ல நம்பரைப் பெறும்.மலேசியாவும் நன்றாக உழைத்திருக்கிறார்கள். நான் தனியாக வந்திருக்கிறேன் என்று அப்படி நினைக்காதீர்கள். ஆனால் உங்களுக்குள் அனைத்து ஆத்மாக்களும் நிரம்பியிருக்கிறார்கள். பாப்தாதா ஒருவரைப் பார்த்துக் கொண்டிருக்கவில்லை. ஆனால் உங்களில் நிரம்பியிருக்கும் நெருக்கமான மற்றும் அன்பான ஆத்மாக்களின் காட்சியை தூரத்திலிருந்தே பார்த்துக் கொண்டிருக்கிறோம்.அந்த ஆத்மாக்களின் ஓசை உங்களுக்கும் வந்து கொண்டிருக்கிறது தான் இல்லையா?நியுசிலாந்தின் பொறுப்பாளராக ஆகியிருக்கும் ஆத்மாக்கள் சக்திசாலியானவர்கள். எனவே பாப்தாதாவின் மலர்த்தோட்டம் எப்பொழுதும் மலர்ந்திருக்கும். இடம் சிறிய தான், ஆனால் சேவை பெரியது.ஆஸ்திரேலியா மற்றும் லண்டனின் கிளைகளோ அதிகம் இருக்கின்றன. போலந்திலும் வளர்ச்சி ஏற்பட்டு விடும். எரிந்திருக்கும் ஒரு தீபம் மூலமாக தீபாவளி ஆகிவிடும்.இப்பொழுதோ பாருங்கள், உங்கள் ஒவ்வொருவரின் பெயரைக் கூறுகிறோம். அடுத்த வருடம் வருவீர்கள் என்றால், ஒவ்வொருவரின் பெயரை கூறுவதற்கே கடினமாகும் அந்த அளவிற்கு வளர்ச்சியை செய்யுங்கள்.இப்பொழுது எப்படி மசூதிகளின் மேல், கிறிஸ்தவ தேவாலயங்களின் மீது ஏறி, அவரவர்களின் பாடலை பாடுகிறார்கள். மசூதிகளில் அல்லாவின் பெயர் கூறி கத்துவார்கள், தேவாலயங்களில் கடவுளின் பெயரை கூறுவார்கள்.... கோயில்களில் வாருங்கள், வாருங்கள் என்று கூறுவார்கள். ஆனால் இப்பொழுது அந்த மாதிரி நேரமும் வரும் அதில் அனைத்து கோயில்கள், மசூதிகள் குருத்துவாராக்கள், தேவாலயங்கள் ஆகிய அனைத்தையும் சேர்த்து ஒரே ஒரு ஓசை தான் ஒலிக்கும் - நமது தந்தை வந்து விட்டார் என்று ! பிறகு ஃபரிஷ்தாக் கள் உங்களை எங்கே சென்று விட்டார்கள் என்று தேடுவார்கள். நாலாபுறங்களிலும் ஃபரிஷ்தாக்கள் ஃபரிதாக்களே அவர்களுக்குத் தென்படுவார்கள். முழு உலகத்திலும் ஃபரிஷ்தாக்கள் மேகங்கள் மூடுவது மாதிரி பறந்து மூடி விடுவார்கள். மேலும் அனைவரின் பார்வை ஏஞ்சல்கள் உங்களின் பக்கம் மற்றும் தந்தையின் பக்கம் இருக்கும். அப்படியானால் ஃபரிஷ்தாக்களின் காட்சியை அளிக்கும் அந்த நிலை வரை வந்து சேர்ந்து விட்டீர்களா? இப்பொழுது ஒருவேளை கொஞ்சம் கொஞ்சம் ஆடுகிறீர்கள் என்றாலும் கூட நேரம் வரும்பொழுது இவை அனைத்தும் முடிவடைந்து விடும். ஏனென்றால் ஒவ்வொரு கல்பத்திலும் நீங்களே தான் நிச்சயிக்கப்பட்ட ஃபரிஷ்தாக்கள். உங்களைத் தவிர வேறு யார் இருக்கிறார்கள். எனவே கொஞ்சம் கொஞ்சம் ஆடுவதற்கும் அசைவ தற்குமான காட்சிகளை என்ன இப்பொழுது காண்பிக்கிறீர்களோ இவை அனைத்தும் விரைவிலேயே முடிவடைந்து விடும். பிறகு அனைவரின் வாயிலிருந்தும் மாயா சென்று விட்டது, மேலும் நாங்கள் மாயாவை வென்றவர்களாக ஆகிவிட்டோம் என்ற வார்த்தைகள் தான் வாயிலிருந்து வெளியாகும். அந்த நேரம் வந்து கொண்டிருக்கிறது. நல்லது.இன்று அனைவருக்கும் பிக்னிக். பாப்தாதா இன்றைய பிக்னிக்கில் அனைத்து குழந்தைகளிடமிருந்து பரிசை பெறுவார். கொடுப்பதற்காக தயாராக இருக்கிறீர்களா? இரண்டு வார்த்தைகள் அடங்கிய பரிசு தான். எப்பொழுதும் கிளியர் (தெளிவாக) மற்றும் கேர்ஃபுல் ஆக (கவனமாக) இருப்பது. இதன் ரிசல்ட்டாக சியர்ஃபுல் (மலர்ந்த முகமுடையவராக) ஆகியே விடுவீர்கள். கிளியராக இருப்பதில்லை. எனவே எப்பொழுதும் ஒரே சீராக இருப்பதில்லை. மேலும் டிப்ரஷன் டிப்ரஷன் (மன அழுத்தம்) என்ற வார்த்தையை அடிக்கடி கூறுகிறீர்கள். அதுவும் இந்த நிலையில் தான் உருவாகும். எனவே என்ன விஷயம் வந்தாலும் அதை கிளியர் செய்து விடுங்கள். அது பாப்தாதா மூலமாகவும், தன் மூலமாகவும் அல்லது பொறுப்பாளர் ஆகியிருக்கும் ஆத்மாக்கள் மூலமாகவும் இருக்கலாம். ஆனால் அவற்றை மனதில் வைத்துக் கொள்ளாதீர்கள், அகற்றிவிடுங்கள். ஏன்? என்ன? என்பதில் செல்லாதீர்கள். ஆனால் நீங்கள் இரண்டு வார்த்தைகளின் பரிசைக் கொடுங்கள். மேலும் பாப்தாதாவிடமிருந்து திருமூர்த்தி புள்ளியின் பரிசை பெற்றுக் கொள்ளுங்கள். பரிசைத் தொலைத்து விடாதீர்கள். பரிசை புத்தி என்ற இரும்பு பெட்டியில் எப்பொழுதும் பாதுகாப்பாக வையுங்கள். கொடுப்பதற்கும், பெறுவதற்கும் சம்மதமா? நல்லது. எப்பொழுதாவது ஏதாவது நடக்கிறது என்றால், திலகம் இட்டுக் கொள்ளுங்கள். பிறகு எப்பொழுதும் பாதுகாப்பாக இருப்பீர்கள். திலகம் இடத் தெரியும் தான் இல்லையா?சான்பிராசிஸ்கோ குரூப்புடன் சந்திப்பு –

அனைத்து பிரம்மா குமார் மற்றும் குமாரிகளின் விசேஷ கடமை எது? பிரம்மா பாபாவின் விசேஷ காரியமாக என்ன இருந்தது? புது உலக ஸ்தாபனை தான் பிரம்மாவின் காரியமாக இருந்தது. எனவே பிரம்மா குமார் மற்றும் குமாரிகளின் விசேஷமான காரியமாக என்ன ஆனது? ஸ்தாபனையின் காரியத்தில் சகயோகியாக இருப்பது. எனவே எப்படி அமெரிக்காவில் விநாஷம் செய்பவர்களின் விநாஷத்தின் வேகம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அதே போல் ஸ்தாபனைக்கு பொறுப்பாளரான குழந்தைகளின் வேகமும் தீவிரமாக இருக்கிறதா? அவர்களோ மிக அதிக வேகத்துடன் விநாஷம் செய்வதற்காக தயாராக இருக்கிறார்கள். அதே போல் நீங்கள் அனைவரும் ஸ்தாபனையின் காரியத்தில் இவ்வளவு எவரெடியாக அதிவேகத்தில் சென்று கொண்டிருக்கிறீர்களா? அவர்களுடைய வேகம் அதிகமா அல்லது உங்களுடைய வேகமா? அவர்கள் 15 விநாடிகளில் விநாஷம் செய்வதற்காக தயாராக இருக்கிறார்கள், மேலும் நீங்கள் 1 விநாடியில் தயாரா? என்ன வேகமாக இருக்கிறது? ஒரு நொடியில் ஸ்தாபனையின் காரியம் என்றால் ஒரு நொடியில் திருஷ்டி கொடுத்தீர்கள் மற்றும் உலகம் உவாகி விட்டது என்று அந்த மாதிரி வேகம் இருக்கிறதா? எனவே ஸ்தாபனைக்கு பொறுப்பாளராக இருக்கும் ஆத்மாக்களுக்கு நம்முடைய வேகம் விநாஷம் செய்பவர்களின் வேகத்தை விட அதிகமாக இருக்க வேண்டும் என்று எப்பொழுதும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் பழைய உலகத்தின் விநாஷத்தின் தொடர்பு புது உலகத்தின் ஸ்தாபனையுடன் இருக்கிறது. முதலில் ஸ்தாபனை ஆக வேண்டுமா அல்லது விநாஷமா? ஸ்தாபனையின் வேகத்தை அதிகப்படுத்துவதற்கான விசேஷ ஆதாரம் எப்பொழுதும் தன்னை சக்திசாலியான நிலையில் வையுங்கள். ஞானம் நிறைந்ததின் கூடவே சக்தி நிறைந்த நிலையில் வையுங்கள். ஞானம் நிறைந்ததின் கூடவே சக்தி நிறைந்த நிலையும் இணைந்திருக்கிறது என்றால் தான் ஸ்தாபனையின் காரியம் அதிவேகத்தில் நடக்கும். அப்படியானால் அதிவேகத்திற்கான பவுண்டேஷன் எங்கிருந்து ஏற்படும். அமெரிக்காவிருந்தா? அமெரிக்காவிலும் அனேக சேவை நிலையங்கள் இருக்கின்றன. எனவே நம்பர் ஒன்-ல் நாம் தான் செல்வோம் என்று அனைவரும் இந்த லட்சியத்தை வைக்க வேண்டும். எனவே உங்களுடைய சேவை நிலையம் மூலமாக முதன் முதல் ஆத்மீக குண்டு செல்லும் இல்லையா? அதன் மூலம் என்ன ஆகும். அனைவரும் தந்தையின் அறிமுகத்தை தெரிந்து கொள்வார்கள். எப்படி அந்த குண்டு மூலம் விநாஷம் ஏற்படுகிறது தான் இல்லையா. இந்த ஆத்மீக குண்டு மூலம் இருளின் விநாஷம் ஆகிவிடும். எனவே இந்த குண்டை வீசுவதற்கான முறை எது? அந்த அரசாங்கமும் இந்த மாதிரி ஒத்திகை நடக்கும் என்று தேதியை அறிவிக்கிறார்கள் இல்லையா. உங்களுடைய ஒத்திகைக்கான நாள் எப்பொழுது இருக்கும். நல்லது.வரதானம் :

பாக்கியத்தை உருவாக்கும் தந்தை மூலமாக கிடைத்திருக்கும் பாக்கியத்தை அனைவருக்கும் வழங்கும் மற்றும் அதிகரிக்கும் அதிர்ஷ்டம் நிறைந்தவர்கள் ஆகுக !பாக்கியத்தை உருவாக்கும் தந்தை தன்னுடையவர் ஆக்கிவிட்டார் என்ற இது தான் அனைத்தையும் விட மிகப்பெரிய அதிர்ஷ்டம். உலகத்தினரோ பகவானின் ஒரு நொடியின் காட்சி கிடைக்க வேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கிறார்கள். மேலும் நீங்கள் எப்பொழுதும் அவருடைய கண்களில் நிரம்பியிருக்கிறீர்கள். இதைத் தான் அதிர்ஷ்டம் என்று சொல்வது. பாக்கியம் உங்களுடைய ஆஸ்தி. முழுக் கல்பத்திலும் இந்த மாதிரியான பாக்கியம் இப்பொழுது தான் கிடைக்கிறது. எனவே பாக்கியத்தை அதிகரித்துக் கொண்டே இருங்கள். அதிகரிப்பதற்கான வழி அனைவருக்கும் கொடுப்பது. எந்த அளவு மற்றவர்களுக்கு கொடுப்பீர்களோ அதாவது பாக்கியவானாக ஆக்குவீர்களோ அந்த அளவு பாக்கியம் அதிகரித்துக் கொண்டே இருக்கும்.சுலோகன் :

தடையற்ற மற்றும் ஒரே சீரான நிலையின் அனுபவம் செய்ய வேண்டும் என்றால் ஒருமுகப்பட்ட நிலையின் பயிற்சியை அதிகரியுங்கள்.தபஸ்வி மூர்த்தி ஆகுங்கள்:

எப்படி தந்தை அவ்யக்த வதனத்தில், ஒரு ஸ்தானத்தில் அமர்ந்து கொண்டு உலகின் நாலாபுறங்களிலும் உள்ள குழந்தைகளை பாலனை செய்து கொண்டிருக்கிறார். அதே போல் நீங்களும் ஒரு ஸ்தானத்தில் அமர்ந்து தன்னுடைய தபஸ்வி சொரூபம் மூலமாக தந்தைக்கு சமமாக எல்லைக்கப் பாற்பட்ட சேவை செய்யுங்கள். எல்லைக்கப்பாற்பட்டவர்களுக்கு சக்தி கொடுங்கள். எல்லைக்கப்பாற்பட்ட சேவையில் தன்னை பிஸியாக்கி கொள்ளுங்கள்.


***OM SHANTI***