BK Murli 28 February 2017 Tamil

BK Murli 28 February 2017 Tamil

28.02.2017    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


இனிமையான குழந்தைகளே - பாபா, அனாதைகள் அனைவருக்கும் பாதுகாவலராக, அனைவரையும் துக்கங்களிலிருந்து விடுவித்து சுகதாமத்திற்கு அழைத்துச் செல்ல வந்திருக்கின்றார்கேள்வி:-

கல்பம்-கல்பமாக பாபா தன்னுடைய குழந்தைளுக்கு எவ்வாறு தைரியமூட்டுகின்றார்?பதில்:-

இனிமையான குழந்தைகளே - நீங்கள் கவலையற்று இருங்கள், உலகத்தில் அமைதியை ஸ்தாபனை செய்வது, அனைவரையும் துக்கங்களிலிருந்து விடுவிப்பது என்னுடைய வேலையாகும். குழந்தைகளாகிய உங்களை இந்த இராவண இராஜ்யத்திலிருந்து விடுவித்து இராம இராஜ்யத்திற்கு அழைத்துச் செல்ல நான் தான் வந்துள்ளேன். குழந்தைகளாகிய உங்களை திரும்பி அழைத்துச் செல்வது என்னுடைய கடமையே ஆகும்.பாட்டு:-

ஆகாய சிம்மாசத்தை விட்டு வாருங்கள்...............ஓம் சாந்தி.

குழந்தைகள் பாட்டை கேட்டீர்கள். குழந்தைகள் தங்களுடைய பரமபிரியரான பரமபிதாவை மீண்டும் வாருங்கள் என்று நினைவு செய்கிறார்கள், ஏனென்றால் மாயையின் நிழல் விழுந்து விட்டது அல்லது இராவண இராஜ்யமாகி விட்டது. அனைவரும் துக்கமோ துக்கத்தில் இருக்கிறார்கள். நாங்கள் அனைவரும் தூய்மையற்றவர்களாக இருக்கிறோம் என்று சொல்கிறார்கள். பாபா கூறுகின்றார் நான் கல்பம்-கல்பமாக கல்பத்தின் சங்கமயுகத்தில் வருகின்றேன். 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் கூட வந்திருந்தேன், மீண்டும் கல்பத்தின் சங்கமயுகத்தில் வந்திருக்கின்றேன். பாபா வந்து தைரியமூட்டுகின்றார். குழந்தைகளே கவலையற்று இருங்கள், இது என்னுடைய நடிப்பாகும். பாபா வாருங்கள், வந்து மீண்டும் இராஜயோகம் கற்றுக் கொடுங்கள், தூய்மையற்ற உலகத்தை தூய்மை யாக்குங்கள் என்று பாபாவை அழைக்கிறார்கள். இந்த சமயத்தில் அனைவரும் அனாதைகளாக (பாதுகாப்பற்று) இருக்கிறார்கள். யாருக்கு தாய்-தந்தை இல்லையோ அவர்களை அனாதைகள் என்று சொல்லப்படுகிறது. தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அனைவரும் மிகுந்த துக்க முடையவர்களாக இருக்கிறார்கள். முழு உலகத்திலும் அசாந்தி இருக்கிறது ஆகையினால் தான் குழந்தைகளை துக்கத்திலிருந்து விடுவித்து அல்லது இராவண இராஜ்யத்திலிருந்து விடுவித்து இராம இராஜ்ய, சுகதாமத்திற்கு அழைத்துச் செல்ல வந்திருக்கிறார். பாபா கூறுகின்றார், இது என்னுடைய கடமையாகும். முழு உலகத்திற்கும் அதாவது அனைத்து ஆத்மாக்களுக்கும் ஒரே ஒரு தந்தை தான். எல்லையற்ற தந்தையே, தாங்கள் இப்போது மேலிருந்து ஆகாய சிம்மாசனத்தை விட்டுவிட்டு வந்துள்ளீர்கள், என்று அனைவரும் கூறுகிறார்கள். பிரம்ம மகாதத்துவத்தில் இருக்கின்றார் அல்லவா. இங்கே ஜீவாத்மாக்கள் இருக்கின்றன. அது ஆத்மாக்களின் இடமாகும், அதனை பிரம்மாண்டம் என்று சொல்லப்படுகிறது. இந்த நாடகம் சுகம்-துக்கத்தினால் ஆனது என்று பாபா குழந்தைகளுக்கு புரிய வைக்கின்றார். ஹே பரமபிதா பரமாத்மாவே என்று அழைக்கிறார்கள், ஏனென்றால் துக்கமுடையவர்களாக இருக்கிறார்கள். இந்த பாடல் கூட இதைப்பற்றி தான் பாடப்பட்டுள்ளது. குழந்தைகள் என்ன தவறு செய்தார்கள். தந்தையை மறந்து விட்டார்கள். கீதையின் பகவான் யார் சகஜ இராஜயோகம் கற்றுக் கொடுத்தாரோ, யாருமற்றவர்களை அனைவரும் (பாதுகாவலர்) உள்ளவர்களாக மாற்றினாரோ, அவரை தெரிந்திருக்கவில்லை. அனாதைகளை அனைவரும் உள்ளவர்களாக மாற்றுபவரே என்றும் பாடுகிறார்கள். பாரதத்தை தான் அனாதையிலிருந்து அனைவரும் உள்ளதாக மாற்றுகின்றார். பாரதம் தான் அனைத்தும் உள்ளதாக, சுகமுடையதாக இருந்தது. தூய்மை, அமைதி, சுகம் இருந்தது. இல்லற ஆசிரமமாக இருந்தது. பாரதம் மகான் தூய்மையாக இருந்தது. 16 கலைகள் முழுமையான, முற்றிலும் விகாரமற்ற.... என்று பாடுகிறார்கள். இங்கே அனைவரும் அனாதைகளாக ஆகி விட்டனர். அவர்களுக்கு ஹிம்சை என்றால் என்ன அஹிம்சை என்று எதைச் சொல்லப்படுகிறது என்பதே தெரியவில்லை. அவர்கள் பசு போன்றவற்றை கொல்வதை ஹிம்சை என்று புரிந்து கொள்கிறார்கள். ஒருவர் மற்றவர் மீது காமம் என்ற கோடாரியை வீசுவதும் ஹிம்சையாகும். இராவணன் பிரவேசித்ததின் காரணத்தால் அனைவரும் தூய்மையற்றவர்களாக ஆகி விட்டனர். தேக-அபிமானம் தான் முதல் எதிரியாகும். பிறகு காமம், கோபம் போன்ற 5 விகாரங்களும் உங்களுடைய எதிரியாகும், இவை தான் உங்களைப் (பாதுகாக்க) யாருமற்றவர்களாக மாற்றியது. பாரதவாசி குழந்தைகளே! சத்யுகத்தில் நாம் அனைத்தும் உடையவர்களாக, எவ்வளவு சுகமுடையவர்களாக இருந்தோம் என்பது நினைவிற்கு வருகிறதா என்று பாபா கேட்கின்றார். இங்கே யாராவது சரீரத்தை விட்டால், சொர்க்க பதவி அடைந்தார் என்று சொல்கிறார்கள். நரகத்திலிருந்து சென்று விட்டார் அல்லவா. எனவே இந்த சமயத்தில் பாரதம் நரகமாக இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இதனை மோசமான நரகம் என்று சொல்லப்படுகிறது. கருட புராண கதைகளும் இருக்கின்றன. வேறு எந்த நதியும் கிடையாது, அனைவரும் விஷக்கடலில் மூழ்கிக் கொண்டு இருக்கிறார்கள். ஒருவர் மற்றவரை வெட்டுகிறார்கள், துக்கமுடையவர்களாக்குகிறார்கள். சுகம் மற்றும் துக்கத்தின் நாடகம் உருவாக்கப்பட்டிருகிறது என்று பாபா வந்து புரிய வைக்கின்றார். மற்றபடி இப்போதே நரகம் இருக்கிறது, இப்போது சொர்க்கமும் இருக்கிறது என்பது கிடையாது. யாரிடம் அதிக பணம் இருக்கிறதோ, அவர்கள் சொர்க்கத்தில் இருக்கிறார்கள் என்பது கிடையாது. செல்வந்தர்களும் துக்கமுடையவர்களாக இருக்கிறார்கள். இந்த சமயத்தில் முழு உலகமும் துக்கமுடையதாக இருக்கிறது. உங்களுடைய செல்வம் தாய்-தந்தையர் ஆவர், அதற்காகத்தான் நீங்கள், நீங்கள் தான் தாயும் தந்தையும்............ என்று பாடுகிறீர்கள். மனிதர்களுக்கு தெரிவதே இல்லை, லஷ்மி - நாராயணனுக்கு முன்பாக சென்றும் நீங்கள் தான் தாயும் தந்தையும்........ என்று சொல்வார்கள். ராதா-கிருஷ்ணனுக்கு முன்பாகவும் நீங்கள் தான் தாயும் தந்தையும்........... என்று சொல்வார்கள் ஏனென்றால் பாபாவையே தெரிந்திருக்கவில்லை. பாபா படைப்பவர் மற்றும் அவருடைய படைப்பை தெரிந்திருக்க வில்லை. இது சிருஷ்டி சக்கரமாகும். மாயையின் சக்கரம் என்று சொல்ல முடியாது. 5 விகாரங்களைத் தான் மாயை என்று சொல்லப்படுகிறது. பணத்தை செல்வம் என்று சொல்லப்படுகிறது. செல்வமுடையவர்களாக ஆகுக, நீண்ட ஆயுளை உடையவர் ஆகுக, புத்திரர்களை உடையவர் ஆகுக. இந்த ஆசீர்வாதத்தை பாபா தான் கொடுக்கின்றார். மற்றபடி அவர்கள் அனைவரும் பக்திமார்க்கத்தின் குருமார்களாவர். ஞானக்கடல் ஒருவரே ஆவார், அவரைப்பற்றி தான் பாடுகிறார்கள். கீதையை கேட்டு விட்டு பிறகு ஸ்ரீகிருஷ்ண பகவானுடைய மகாவாக்கியம் என்று சொல்லி விடுகிறார்கள். அட கிருஷ்ணர் எப்படி பகவானாக ஆக முடியும்! மேலே இருப்பவரைத்தான் ரூபத்தை மாற்றிக் கொண்டு வாருங்கள் என்று அழைக்கிறார்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் ரூபத்தை மாற்றிக் கொண்டு இருக்கின்றீர்கள். பாபாவும் கூட மனித உடலில் தான் வருவார் அல்லவா. எருதின் மீது வர மாட்டார் அல்லவா. பாபா தாங்களும் கூட எங்களைப் போல் ரூபத்தை மாற்றிக்கொண்டு மனித உடலில் வாருங்கள் என்று நீங்கள் கூறுகிறீர்கள். நான் ஒன்றும் எருது அல்லது ஆமை மீன் போன்றவற்றில் வருவதில்லை. முதல்-முதலில் பிரஜாபிதா பிரம்மாவின் மூலம் மனித உலகம் படைக்கப்படுகிறது. எனவே இரண்டு தந்தைகளாகி விட்டனர் - ஒன்று பரமபிதா பரமாத்மா சிவன், அவரைத் தான் ஹே அனாதைகளுக்கு அனைத்தும் இருப்பவர்களாக மாற்றக் கூடிய பாபா வாருங்கள் என்று சொல்கிறார்கள், பிறகு ஞான சூரியன் உதித்தது...... என்று பாடுகிறார்கள். பாபா தான் ஞான சூரியன் ஆவார், அவர் தான் அனைத்திலும் உயர்ந்தவர் ஆவார். இந்த விளையாட்டையும் புரிந்து கொள்ள வேண்டும். பாரதத்தில் தான் இந்த விளையாட்டாகும். மற்றவை கட்டுக்கதைகளாகும். பாரதத்தின் தேவி-தேவதா தர்மம் தான் உயர்ந்தது, நம்பர் ஒன் ஆகும். தெய்வீக தர்மம், தெய்வீக கர்மம் உயர்ந்ததாக இருந்தது. இப்போது தர்மமும் கர்மமும் கீழானதாக ஆகி விட்டது.முக்கியமான தர்மம் நான்கு என்று பாபா புரிய வைக்கின்றார், அனைத்திலும் முதலாவது தேவி-தேவதா தர்மமாகும். சத்யுக ஸ்தாபனையின் காரியத்தை ஒரு பாபா தான் செய்வார் அல்லவா. அவர் சொர்க்கத்தை ஸ்தாபனை செய்யும் இறை தந்தையாவார். நான் கல்பத்தின் ஒரு சங்கமயுகத்தில் தான் வருகின்றேன் என்று பாபா கூறுகின்றார். நாம் அனைவரும் உடையவர்களாக ஆகிக் கொண்டிருக்கிறோம் என்று குழந்தைகளாகிய நீங்கள் தெரிந்துள்ளீர்கள். அனாதைகளை அனைவரும் உடையவர் களாக மாற்றுபவர் ஒரு பாபாவே ஆவார். மனிதர்கள், மனிதர்களுக்கு அல்பகால சுகம் தான் கொடுக்க முடியும். இது இருப்பதே துக்கமான உலகமாகும். காப்பாற்றுங்கள்-காப்பாற்றுங்கள் என்று சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். பாரதம் சுகதாமமாக இருந்தது, இப்போது துக்கதாமமாக இருக்கிறது. சாந்திதாமத்திலிருந்து வந்தோம், இப்போது நாடகம் முடிவடைகிறது. இந்த சரீரம் பழையதாக ஆகிவிட்டது, குடும்பத்தில் இருந்து கொண்டே தூய்மையாக ஆக வேண்டும். தூய்மையான சொர்க்கத்தை ஸ்தாபனை செய்வதற்காக உங்களுடைய தந்தையாகிய நான் வந்துள்ளேன். முதலில் தூய்மை இருந்தது, இப்போது தூய்மையற்ற தன்மை இருக்கிறது. அரைகல்பம் இராம இராஜ்யம், அரைகல்பம் இராவண இராஜ்யமாகும். இப்போது நீங்கள் ஈஸ்வரனின் மடியில் இருக்கிறீர்கள். இது ஈஸ்வரிய குடும்பமாகும். தாத்தா சிவபாபா ஆவார். பிரஜாபிதா பிரம்மா தந்தையாவார். இது உண்மையானதாகும். நிராகார தந்தை பிரவேசம் ஆகியுள்ளார் என்பதை நீங்கள் தெரிந்துள்ளீர்கள். மனித உடலில் வந்துள்ளார். அந்த தந்தை அமர்ந்து ஆத்மாக்களிடம் பேசுகின்றார். அவரை ஆன்மீக மருத்துவர் என்று சொல்லப்படுகிறது. ஆத்மாவிற்கு ஊசி போடுகின்றார். இவர்கள் ஆத்மாவை எதுவும் ஒட்டாதது என்று கூறுகிறார்கள், ஆனால் ஆத்மா எப்படி எதுவும் ஒட்டாததாக இருக்க முடியும். ஆத்மாவில் தான் சம்ஸ்காரம் இருக்கிறது, அதன்படி பிறவி எடுக்கிறது. குழந்தைகளாகிய நீங்கள் இப்போது பரமபிதா பரமாத்மாவை தெரிந்துள்ளீர்கள். ஹே தூய்மையற்றவர்களை தூய்மையாக்கும் பரமபிதா பரமாத்மா, தாங்கள் இந்த மனித சிருஷ்டியின் விதைரூபம் தந்தையாக இருக்கின்றீர்கள் என்று அனைவரும் அவரைத்தான் நினைவு செய்கிறார்கள். உயிரோட்டமுடையவராக இருக்கின்றீர்கள், ஞானத்தின் கடலாக இருக்கின்றீர்கள். அனைத்து ஞானமும் ஆத்மாவில் தான் இருக்கிறது. பிறகு சம்ஸ்காரத்திற்கேற்ப படிப்பின் மூலம் புதிய உலகம் சென்று இராஜாவாக ஆகின்றீர்கள். பாபாவினிடத்தில் கூட ஞானத்தின் சம்ஸ்காரம் இருக்கிறது அல்லவா. சிருஷ்டியின் முதல் இடை கடைசியின் ஞானம் இருக்கிறது. உங்களையும் கூட மூன்று காலத்தையும் அறிபவர்களாக மாற்றுகின்றார். ஆத்மாக்களாகிய நாம் மூலவதனத்தில் இருந்து வருகிறோம் என்பதை நீங்கள் தெரிந்துள்ளீர்கள். பிரம்மத்தை பரமாத்மா என்று சொல்ல முடியாது. பாபா வந்து சொல்லும் ஞானத்திற்கு கீதை என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. பாபா தான் வந்து இராஜ்யத்தை ஸ்தாபனை செய்கின்றார். வேறு யாரும் இராஜ்யத்தை ஸ்தாபனை செய்வதில்லை. இப்போது இராஜ்யம் ஸ்தாபனை ஆக வேண்டும் எனவே தூய்மையாக ஆக வேண்டும். இப்போது பாபா உங்களுக்கு ஞானத்தைக் கொடுத்து தூய்மையாக மாற்றி செல்வந்தர்களாக மாற்றுகின்றார். நாடகம் என்ற வார்த்தையைக் கூட யாரும் தெரிந்திருக்க வில்லை. இது ஆரம்பமும் முடிவுமற்ற அழிவற்ற நாடகமாகும். அனைத்து ஆத்மாக்களுக்கும் அழிவற்ற நடிப்பு கிடைத்திருக்கிறது. பரமாத்மாவிற்கும் கூட நடிப்பு இருக்கிறது. சிவன் ஒன்றும் இவ்வளவு பெரிய லிங்கம் கிடையாது என்று பாபா புரிய வைத்திருக்கிறார். அவரை பரமபிதா பரமாத்மா என்று சொல்லப்படுகிறது. ஆத்மாவின் ரூபம் என்ன? நட்சத்திரம், ஒளி, இரு புருவங்களுக்கு மத்தியில் ஜொலிக்கும் அதிசய நட்சத்திரம், மிகவும் சிறிய ஆத்மாவில் எவ்வளவு பெரிய நடிப்பு பதிவாகியிருக்கிறது. அதிசயமாக இருக்கிறது அல்லவா. என்னுடைய ஆத்மாவிலும் நடிப்பு பதிவாகி இருக்கிறது என்று பாபா கூறுகின்றார். பக்தி மார்க்கத்தில் கூட உங்களுக்கு எவ்வளவு சேவை செய்கிறேன். இந்த சமயத்தில் மிகவும் அதிசயமான நடிப்பாகும். கல்பம்-கல்பமாக குழந்தைகளாகிய உங்களுடைய நடிப்பு இருந்து வருகிறது. நடிகர்கள் கூட வரிசைக்கிரமமாக இருக்கிறார்கள். அனைத்திலும் முதலானவர் பாபா ஆவார். பாபாவிடம் என்ன ஞானம் இருக்கிறதோ, அதை அனைவருக்கும் கொடுக்கின்றார். குழந்தைகளே இராஜ்யம் ஸ்தாபனை ஆகிறது என்று பாபா கூறுகின்றார். இப்போது முயற்சி செய்து உயர்ந்த பதவி அடைய வேண்டும், என்ன பதவி வேண்டுமோ எடுத்துக் கொள்ளுங்கள். பலனிற்காக முயற்சி செய்ய வேண்டும். எல்லையற்ற தந்தையின் மூலம் எல்லையற்ற சுகத்தை அடைவதற்காக முயற்சி செய்ய வேண்டும். ஜகதம்பாவை ஞானத்தின் தேவதை என்று சொல்லப்படுகிறது. எங்கிருந்து ஞானம் கிடைத்தது? பிரம்மாவிடமிருந்து. பிரம்மாவிற்கு யார் கொடுத்தது? சிவபரமாத்மா. பிரம்மாவின் மூலம் பிரம்மாகுமார குமாரிகளுக்கு இந்த ஞானம் கிடைத்துக் கொண்டிருக்கிறது, அதை பிராமணர்கள் பிறகு இந்த யக்ஞத்திற்கு பொறுப்பாளர்களாக ஆகிறார்கள். இதனை ருத்ர ஞான யக்ஞம் என்று சொல்லப்படுகிறது, இதில் முழு பழைய உலகமும் முடிந்து விடும். அனைத்து பண்டிகைகளும் இந்த சங்கமயுகத்தினுடையதாகும். சிவனுக்குப் பதிலாக கிருஷ்ண ராத்திரி என்று சொல்லி, கிருஷ்ணருடைய பிறப்பு இரவில் என்று சொல்லி விட்டார்கள். சிவராத்திரியின் அர்த்தத்தை புரிந்து கொள்வதில்லை. கலியுகம் இரவாகும், சத்யுகம் பகலாகும். இரவில் வந்து பகலாக மாற்றுகின்றார், அதைத் தான் சிவஜெயந்தி என்று சொல்லப்படுகிறது. எல்லையற்ற இரவு, எல்லையற்ற பகலாக இருக்கிறது. இந்த சிவசக்தி சேனை பாரதத்தை சொர்க்கமாக மாற்றக்கூடியதாகும். பாருங்கள், எவ்வளவு மறைமுகமாக இருந்து படிக்கிறார்கள். யோகபலத்தின் மூலம் இராஜ்யத்தை அடைகிறார்கள். பழமையான இராஜயோகம் புகழ்பெற்றதாகும், அதன்மூலம் உலக இராஜ்யம் கிடைக்கிறது. அனைவரும் தூய்மையாகி விடுகிறார்கள். இந்த ஞானத்தை ஆத்மா தாரணை செய்கிறது. ஆத்மாவின் ஞானம் கூட யாரிடத்திலும் இல்லை. அங்கே ஆத்மாவின் ஞானம் இருக்கிறது. மற்றபடி பரமாத்மாவின், படைப்பின் ஞானம் கிடையாது. இந்த ஞானம் பிராமணர்களாகிய உங்களுக்குத் தான் இருக்கிறது. நீங்கள் அனைவரிலும் உயர்ந்தவர் களாவீர்கள், ஆன்மீக சேவை செய்கிறீர்கள். பிரியதர் னிகளாகிய உங்களை தூய்மையாக்க ஒரு வழிபோக்கர் வருகின்றார். ஒரு வழிபோக்க,ர் மற்றவர்கள் அனைவரும் பிரியதர் னிகள். பிரஜைகளாக ஆகக் கூடிய அல்லது முக்திதாமத்தில் இருக்கக் கூடிய பெரிய ஊர்வலம் இருக்கிறது. பிரியதர் ன் வருவதே அனைவரையும் அலங்கரித்து அழைத்துச் செல்வதற்காகும், அனைவரும் கொசுக்கூட்டம் போல் செல்வோம். நல்லது!இனிமையிலும் இனிமையான காணாமல் கண்டெடுக்கப்பட்ட செல்ல குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.தாரணைக்கான முக்கிய சாரம்:-

1) கலங்கரை விளக்காக ஆக வேண்டும். ஒரு கண்ணில் சாந்திதாமம், மற்றொரு கண்ணில் சுகதாமம் சுற்றிக் கொண்டிருக்க வேண்டும். இந்த துக்கதாமத்தை பார்த்துக் கொண்டிருந்தாலும் கூட பார்க்காமல் இருக்க வேண்டும்.2) பாபாவிற்கு சமமாக ஞானத்தில் நிறைந்தவர்களாக ஆகி எல்லையற்ற சுகத்தை அடைவதற்காக முழுமையாக முயற்சி செய்ய வேண்டும், என்ன ஞானம் கிடைத்திருக்கிறதோ அதை மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டும்.வரதானம்:-

பெரிய உள்ளம் வைத்து சேவையினுடைய வெளிப்படையான பலனை எடுக்கக் கூடிய விஷவ கல்யாண்காரி ஆகுக.எந்த குழந்தை பெரிய உள்ளம் வைத்து செய்கிறீா்கள் என்றால் சேவைனுடைய வெளிப்படைய பலன் கூட பெரியதாக வெளிப்படுகிறது. எந்த ஒருகாரியம் செய்வதற்கு முன்னாடி தான் செய்வதிலும் கூட பெரிய உள்ளம் மற்றும் மற்றவா்களையும் உதவியாளா்களாக ஆக்குவதிலும் கூட பெரிய  உள்ளம் இருக்கவேண்டும். தனக்காகவும் மற்றும்  உதவியாளா் ஆத்மாகளுக்கும் கூட சங்ஜம் உள்ளம் வைக்காதீா்கள். பெரிய உள்ளம் வைப்பதன் முலமாக மண்ணும் கூட தங்கமாக மாறி விடுகிறது. பலவீணமான உதவியாளா் கூட சக்திசாலியாக ஆகிவிடுகிறார்கள்  அசம்பவம் கூட சம்பவமாக ஆகிவிடுகிறது, இதற்காக  நான் என்பதை பலிகொடுத்து விடுங்கள். அப்போது பெரிய உள்ளம் உடையவா்கள் விஷ்வகல்யாணகரியாக ஆகிவிடுவார்கள்சுலோகன்

காரணத்தை நிவாரனமாக மாற்றம் செய்வது தான் சுபசிந்தைனயாளாராக ஆவதாகும்.


***OM SHANTI***