BK Murli 7 February 2017 Tamil

BK Murli 7 February 2017 Tamil

07.02.2017    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்

இனிமையான குழந்தைகளே! ஞான கடலான தந்தை ஞானம் அளித்து நம்மை சுயதரிசன சக்கரதாரி, திரிகாலதரிசியாக ஆக்கி உள்ளார் என்ற இதே போதையில் எப்பொழுதும் இருங்கள். நாம் பிரம்மா வம்சத்தின் பிராமணர்கள் ஆவோம்.கேள்வி:

குழந்தைகளாகிய நீங்கள் பிராமணர் ஆகிய உடனேயே கோடானுகோடி பாக்கியசாலி ஆகி விடுகிறீர்கள் - எப்படி?பதில்:

பிராமணர் ஆவது என்றால் ஒரு நொடியில் ஜீவன் முக்தியை அடைவது. தந்தையின் குழந்தையான உடனேயே ஆஸ்தியின் அதிகாரம் கிடைத்தது. எனவே ஜீவன் முக்தி உங்களுடைய உரிமையாகும். எனவே நீங்கள் கோடானுகோடி பாக்கியசாலி ஆவீர்கள்.மற்றபடி இந்த மரண உலகத்தில் யாரும் சௌபாக்கியசாலி கூட கிடையாது. அகால மரணம் ஆகிக் கொண்டே இருக்கிறது. குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது காலன் மீது வெற்றி அடைகிறீர்கள். உங்களுக்கு திரிகாலதரிசி தன்மையின் ஞானம் கூட உள்ளது. சிவபாபா 21 பிறவிகளுக்கு உங்களுடைய பையை நிரப்பிக் கொண்டிருக்கிறார்.ஓம் சாந்தி.

நாம் முள்ளிலிருந்து மலராக ஆகிக் கொண்டிருக்கிறோம் என்பதை குழந்தைகள் புரிந்துள்ளார்கள். அதாவது மனிதனிலிருந்து தேவதையாகிக் கொண்டிருக்கிறோம். இது முட்களின் காடாகும் என்பதை குழந்தைகள் அறிந்துள்ளார்கள். இப்பொழுது மீண்டும் மலர்களின் தோட்டத்திற்குச் செல்ல வேண்டும். இந்த டில்லி கூட ஏதோ ஒரு நேரத்தில் பரிஸ்தான் சொர்க்கமாக இருந்தது. குழந்தைகளாகிய நீங்கள் தேவதைகளாக இருக்கும் பொழுது ஆட்சி புரிந்து கொண்டிருந்தீர்கள். பிறகு ஒருவர் ராஜா, மகாராஜாவின் ரூபத்தில் மற்றொருவர் பிரஜையின் ரூபத்தில். உண்மையில் இப்பொழுது சிருஷ்டி (கப்ரிஸ்தான்) சுடுகாடு ஆகப்போகிறது. அதன் மீது நீங்கள் (பரிஸ்தான்) சொர்க்கத்தை அமைப்பீர்கள். இந்த முழு உலகமே புதியதாக ஆகிறது என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். ஜமுனா கரையோரத்தில் இராதை கிருஷ்ணர், இலட்சுமி நாராயணர் இருந்தார்கள். அப்படியின்றி இராதை கிருஷ்ணர் ஆட்சி புரிகிறார்கள் என்பதல்ல. இல்லை, இராதை வேறு இராஜதானியினுடையவராக இருந்தார். கிருஷ்ணர் வேறு இராஜதானியினுடையவர் ஆவார். இருவருக்கும் பிறகு சுயம்வரம் ஆகியது. சுயம்வரத்திற்குப் பிறகு அவர்களே இலட்சுமி நாராயணர் ஆகிறார்கள். பிறகு இந்த பரிஸ்தானத்தில் யமுனை கரையோரத்தில் ஆட்சி புரிகிறார்கள். இந்த சிம்மாசனம் மிகவும் பழையதாகும். ஆதி சனாதன தேவி தேவதை களின் பரம்பரை அமைந்து கொண்டே வந்துள்ளது. ஆனால் இந்த விஷயங்களை குழந்தைகளாகிய நீங்கள் தான் அறிந்துள்ளீர்கள். நீங்கள் தான் உங்களுடைய பரிஸ்தானத்தை அமைத்துக் கொண்டிருக்கிறீர்கள். இராஜதானி ஸ்தாபனை செய்துக் கொண்டிருக்கிறீர்கள். எப்படி? யோக பலத்தினால். தேவி தேவதைகளின் இராஜதானி யுத்தத்தினால் ஸ்தாபிக்கப்படவில்லை. நீங்கள் இங்கு இராஜயோக பலத்தைக் கற்றுக் கொள்ள வந்துள்ளீர்கள். இதை 5 ஆயிரம் வருடங்கள் முன்பு கற்றிருந்தீர்கள். ஆம். பாபா முந்தைய கல்பத்தில் கூட இன்றைய இதே நாளில், இதே நேரத்தில் நாம் பாபாவிடமிருந்து படிப்பதைக் கற்றிருந்தோம் என்று நீங்கள் கூறுவீர்கள். இங்கு குழந்தைகள் மட்டுமே வருகிறார்கள். குழந்தைகளைத் தவிர தந்தை வேறு யாரிடமும் உரையாட முடியாது. நான் குழந்தைகளுக்குத் தான் கற்பிக்கிறேன் என்று தந்தை கூறுகிறார். உங்களுக்கு எவ்வளவு போதை இருக்க வேண்டும். ஞானத்தின் கடல் தந்தை ஆவார். அவருக்குத் தான் ஞான ஞானேஷ்வரன் என்று கூறுகிறார்கள். இதன் பொருளாவது ஞானக் கடலான இறைவன் இச்சமயத்தில் உங்களுக்கு ஞானம் அளிக்கிறார். எப்பேர்ப்பட்ட ஞானம்? சிருஷ்டியின் முதல் இடை கடை பற்றிய ஞானம். குழந்தைகளாகிய நீங்கள் சுயதரிசன சக்கரதாரி ஆகிறீர்கள். நீங்கள் பிரம்மா வம்சத்தினர் ஆவீர்கள். நீங்களே பிறகு தேவதை ஆவீர்கள். நாம் தான் சூரிய வம்சத்தினராக இருந்தோம். பிறகு சந்திர வம்சத்தில் சென்றோம். பிறகு வைசியவம்சம், சூத்திரவம்சத்தினராக ஆனீர்கள். இப்பொழுது மீண்டும் நாம் பிராமண வம்சத்தினராகி உள்ளோம். நாம் சுயதரிசன சக்கரதாரி ஆவோம் என்பதை நீங்கள் சரியாக அறிந்துள்ளீர்கள். முழு சிருஷ்டியினுடைய முதல், இடை, கடை பற்றிய ஞானம் நம்மிடம் உள்ளது. இதன் மூலம் தான் சக்கரவர்த்தி இராஜா இராணி ஆவீர்கள். இந்த ஞானம் அனைத்து தர்மத்தினருக்காக உள்ளது. சிவபாபா எல்லோருக்கும் கூறுகிறார். இந்த பிரம்மாவிற்கும் கூட கூறுகிறார். இவருடைய ஆத்மா கூட இப்பொழுது கேட்டுக் கொண்டிருக்கிறார். நீங்கள் இப்பொழுது பிராமணர்கள் ஆவீர்கள். ஒவ்வொரு மனிதர் கூட சிவபாபாவின் குழந்தையும் ஆவார். பின் பிரம்மா பாபாவின் குழந்தையும் ஆவார். பிரம்மா கிரேட் கிரேட் கிராண்டு ஃபாதர். ஸ்தூல பாட்டனார் ஆவார். மேலும் சிவபாபா அனைவருடைய ஆன்மீகத் தந்தை ஆவார். சிவபாபாவிற்கு பிரஜாபிதா என்று கூற மாட்டார்கள். சிவபாபா ஆத்மாக்களின் தந்தை ஆவார். நான் பாரதவாசிகளுக்கு இராஜ்ய பாக்கியத்தை அளிக்கிறேன் என்று தந்தை கூறுகிறார். வைரம் போல சதா சுகமுடையவர்களாக ஆக்குகிறேன். 21 பிறவிகளுக்கு ஆஸ்தி அளிக்கிறேன். பிறகு அவர்கள் பூஜைக்குரிய நிலையிலிருந்து பூசாரியாகிவிடும் பொழுது என்னை நிந்திக்க முற்படுகிறார்கள். நான் உங்களுடைய தந்தை எவ்வளவு உயர்ந்தவன், என்று தந்தை கூறுகிறார். நான் தான் பாரதத்தை (ஹெவன் பேரடைஸ்) சொர்க்கமாக ஆக்குகிறேன். நீங்கள் பின் சர்வவியாபி என்று கூறி நிந்தனை செய்கிறீர்கள். 5 ஆயிரம் வருடங்களுக்கு முன்பு பாரதம் சொர்க்கமாக இருந்தது. நேற்றைய விஷயமாகும். நீங்கள் தான் ஆட்சி புரிந்து கொண்டிருந்தீர்கள். வெளிச்சமாக இருந்தது. இன்று இருள் இருக்கிறது. ஆனால் இதுவே சொர்க்கமாகும் என்று நினைக்கிறார்கள். புதிய உலகத்தில் புதிய பாரதம் இராம இராஜ்யம் வேண்டும் என்று பாரதவாசிகள் பாடுகிறார்கள். மனிதர்கள் பிறகு இதையே புதியது என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இது நாடகமாகும். இச்சமயம் மாயையினுடைய கடைசி நேரத்தின் பகட்டாகும். இப்பொழுது இராவண இராஜ்யம் ஒழிந்து இராம இராஜ்யம் வாழ்க! என்று ஆகப்போகிறது. இராம இராஜ்யம் என்று இராமர் சீதையின் இராஜ்யத்திற்கு ஒன்றும் கூறப்படுவதில்லை. சூரியவம்ச இராஜ்யத்திற்குத் தான் இராம இராஜ்யம் என்று கூறப்படுகிறது. நீங்கள் சூரிய வம்ச இராஜா இராணி ஆவதற்காக வந்துள்ளீர்கள். இது இராஜயோகமாகும். இந்த ஞானத்தை பிரம்மாவோ அல்லது கிருஷ்ணரோ கற்பிப்பதில்லை. இது பரமபிதா பரமாத்மா தான் கற்பிக்கிறார். பதீத பாவனர் அந்த தந்தை ஆவார். முழு உலகத்தை சொர்க்கமாக ஆக்குபவர், சுகம், சாந்தி அளிப்பவர் ஆவார். இந்த பாரதம் முதலில் சுகதாமமாக இருந்தது. எல்லோரும் சாந்திதாமத்திலிருந்து தான் வருகிறார்கள். நான் ஆத்மா, முதலில் சாந்தி தாமத்தில் இருப்பவன்! ஆத்மாவே பரமாத்மா அல்ல. நான் ஆத்மா சூரிய வம்சத்தினராக இருந்தேன். பிறகு க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர் ஆனேன். இப்பொழுது மீண்டும் பிராமண வம்சத்தில் வந்துள்ளோம். இது சக்கரம் அல்லது குட்டிக் கரணத்தின் விளையாட்டாகும். முதன் முதலில் குடுமி பிராமணர்கள்.பிறகு க்ஷத்திரியர்.. மொத்தம் 84 பிறவிகள் அனுபவிக்க வேண்டி இருக்கிறது. குழந்தைகளே இதில் குழம்ப வேண்டிய எந்த விஷயமும் கூட கிடையாது. ஒரு நொடியில் ஜீவன் முக்தி. தந்தையின் குழந்தை ஆனார் மற்றும் ஆஸ்திக்கு அதிகாரி ஆகி விட்டார். தாயின் கர்ப்பத்திலிருந்து வெளிப்பட்டார் மற்றும் ஆஸ்தி எடுத்தார். இது கூட ஒரு நொடியின் விஷயம் ஆகும். ஜனகருக்கு ஒரு நொடியில் ஜீவன் முக்தி கிடைத்தது அல்லவா? நீங்கள் கூட இறைவனினுடையவர் ஆகி உள்ளீர்கள் என்றால், ஜீவன் முக்தி உங்கள் உரிமையாகும். நீங்கள் அமர லோகத்தின் அதிபதி ஆகிறீர்கள். இது மரண உலகமாகும். உங்களை விட சௌபாக்கியசாலி வேறுயாரும் கிடையாது. இங்கு அகால மரணம் ஆகி விடுகிறது. இப்பொழுது நீங்கள் காலன் மீது வெற்றி அடைகிறீர்கள். எனவே அந்த தந்தையிடமிருந்து உங்களுக்கு எவ்வளவு ஆஸ்தி கிடைக்கிறது. சந்நியாசிகள் அறிந்திருக்கிறார்களா என்ன? எல்லா தர்மங்களையும் அறிந்திருக்க வேண்டும். எனவே இந்த படங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இது பாடசாலையாகும். யார் கற்பிக்கிறார்? பகவான் கூறுகிறார் : கிருஷ்ணர் கற்பிப்பதில்லை. ஞானக் கடல் கிருஷ்ணர் கிடையாது. அவரோ பரமபிதா பரமாத்மா ஆவார். அவரே உங்களுக்கு ஞானம் அளித்துக் கொண்டிருக்கிறார். நீங்கள் ஞான கங்கைகள் ஆவீர்கள். தேவர்களிடம் இந்த ஞானம் இருப்பதே இல்ûல. பிராமணர்களாகிய உங்களிடம் தான் இந்த திரிகால தரிசி நிலையின் ஞானம் உள்ளது. நீங்கள் தான் இச்சமயத்தில் இந்த ஞானத்தை கற்றுக் கொண்டு ஆஸ்தி பெறுகிறீர்கள். இராஜயோகத்தைக் கற்றுக் கொண்டு சொர்க்கத்தின் இராஜா இராணி ஆகிறீர்கள்.நாம் பாபா மூலமாக காலன் மீது வெற்றி அடைந்திடுவோம் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். அங்கு இந்த பழைய சரீரத்தை விட்டு விட்டு போய் சிறிய குழந்தை ஆகிடுவோம் என்று உங்களுக்கு சாட்சாத்காரம் (காட்சி தெரிதல்) ஆகும். பாம்பின் உதாரணம், இந்த எல்லா உதாரணங்களும் உங்களுக்காகத் தான் உள்ளது. இதே பாரதம் முதலில் சிவாலயமாக இருந்தது. உயிரூட்டமுடைய தேவி தேவதைகளின் இராஜ்யம் இருந்தது. அவர்களுடைய கோவில்கள் அமைக்கப்பட்டுள்ளன. சிவபாபா வந்து சிவாலயத்தை அமைக்கிறார். இராவணன் பிறகு வைசியாலயத்தை அமைக்கிறான். பெரிய வித்வான் பண்டிதர்களுக்குக் கூட இராவணன் என்றால் என்ன பொருள் என்பது தெரியாது. அரைகல்பம் இராவணனுடைய இராஜ்யம் நடக்கிறது என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். டில்லியில் முதன் முதலில் தேவி தேவதைகள் இலட்சுமி நாராயணருடைய இராஜ்யம் இருந்தது. கிறிஸ்து வருவதற்கு 3 ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் பாரதம் ஹெவென் – சொர்க்கமாக இருந்தது என்றும் கூறுகிறார்கள். ஆனால் பிறகு மறந்து விட்டுள்ளார்கள். யாராவது இறந்து விட்டார் என்றால் சொர்க்கவாசி ஆனார் என்கிறார்கள். வாய் இனிக்குமாறு செய்து விடுகிறார்கள். பாரதம் சொர்க்கமாக இருக்கும் பொழுது புனர்ஜென்மம் கூட சொர்க்கத்தில் ஆகிக் கொண்டிருந்தது. இப்பொழுது பாரதம் நரகமாக உள்ளது. எனவே புனர்ஜென்மம் கூட நரகத்தில் எடுக்கிறார்கள். குழந்தைகளே கல்ப கல்பமாக நான் வந்து உங்களை சொர்க்கத்திற்கு அதிபதி ஆக்குகிறேன் என்பது உங்களுக்கு நினைவிருக்கிறது அல்லவா என்று தந்தை கூறுகிறார். இப்பொழுது நீங்கள் பதீத (தூய்மையற்ற) நிலையிலிருந்து பாவனமாக ஆகிக் கொண்டிருக்கிறீர்கள். இந்த காரியம் ஒரே ஒரு தந்தையினுடையதே ஆகும். உயர்ந்ததிலும் உயர்ந்த சிவபாபா இந்த பிரம்மாவின் மூலமாக அமர்ந்து எல்லா வேத சாஸ்திரங்களின் சாரத்தைப் புரிய வைக்கிறார் என்பது குழந்தைகளின் புத்தியில் உள்ளது. பக்தி மார்க்கத்தில் மனிதர்கள் செலவு செய்து செய்து சோழி போல ஆகி விட்டுள்ளார்கள். நான் குழந்தைகளாகிய உங்களுக்கு வைரம் வைடூரியங்களின் மாளிகைகள் அமைத்து கொடுத்திருந்தேன் என்று தந்தை கூறுகிறார். பிறகு நீங்கள் கீழே இறங்கவே வேண்டி இருந்தது. கலைகள் குறையவே வேண்டி இருந்தது. அந்த நேரத்தில் யாரும் மேலே ஏற முடியாது. ஏனெனில், அது இருப்பதே இறங்கும் கலைக்கான நேரமாகும். இச்சமயம் நீங்கள் எல்லோரையும் விட உயர்ந்த ஈசுவரிய குழந்தைகள் ஆவீர்கள். பிறகு தேவதா, க்ஷத்திரியர்... ஆக வேண்டி உள்ளது. எவ்வளவு தான் ஒருவர் தானம், புண்ணியம் செய்தாலும் சரி, பக்தி மார்க்கத்தில் செலவு செய்து செய்து இறங்கவே வேண்டி உள்ளது. நான் உங்களை எவ்வளவு செல்வந்தராக ஆக்கினேன். நீங்கள் முழு செல்வத்தை எங்கே செலவழித்தீர்கள் என்று பாபா கூட குழந்தைகளை கேட்கிறார். பாபா உங்களுக்குத் தான் கோவில் கட்டினோம் என்று குழந்தைகள் கூறுகிறார்கள். இப்பொழுது மீண்டும் சிவபோலாநாத் பாபா 21 பிறவிகளுக்கு நமது பையை நிரப்பிக் கொண்டிருக்கிறார். நான் உங்களுடைய கீழ்ப்படிதலுள்ள வேலைக்காரன்.. மிகவும் கீழ்ப்படிதலுள்ள தந்தை, மிகவும் கீழ்ப்படிதலுள்ள ஆசிரியர் ஆவேன்.. .. என்று பாபா கூறுகிறார். பரலோகத் தந்தை, பரலோக ஆசிரியர் மற்றும் பரலோகத்தில் இருக்கும் மிகவும் கீழ்ப்படிதலுள்ள சத்குருவும் ஆவேன். உங்களைக் கூட அழைத்துச் செல்வேன். வேறு எந்த குருவும் உங்களை கூடவே அழைத்துச் செல்ல மாட்டார். இதில் பயப்படுவதற்கான எந்த விஷயமும் கிடையாது. இப்பொழுது குழந்தைகளாகிய உங்களுக்கு ஞானத்தின் மூன்றாவது கண் கிடைத்துள்ளது. இந்த கண்களால் இந்த பாபாவைப் பார்க்கிறீர்கள். சிவபாபாவை புத்தியின் கண் மூலமாக அறிய வேண்டி உள்ளது. ஆஸ்தி சிவபாபாவிடமிருந்து கிடைக்கிறது. இந்த பிரம்மாவிற்கு கூடவே ஆஸ்தி சிவபாபாவிடமிருந்து கிடைத்துக் கொண்டிருக்கிறது. உயர்ந்ததிலும் உயர்ந்தவராக இருப்பதே சிவபாபா ஆவார். பிறகு பிரம்மா, விஷ்ணு, சங்கரன். பிறகு பிரம்மா சரஸ்வதி, பிறகு இலட்சுமி நாராயணர். அவ்வளவே! அவர்கள் எவ்வளவு ஏராளமான படங்களை அமைத்துள்ளார்கள். 6 அல்லது 8 புஜங்கள் உடையவர்கள் யாருமே இல்லை. இவை எல்லாமே பக்தி மார்க்கத்தின் விளையாட்டாகும். நேரமும் வீண், சக்தியும் வீண்.. உண்மையில் அனைத்து சாஸ்திரங்களுக்கும் தாயாக இருப்பது கீதையாகும். அதில் கூட தந்தைக்கு பதிலாக குழந்தையின் பெயரை போட்டு ஒரே ஒரு தவறு செய்து விட்டுள்ளார்கள். இது கூட நாடகமாகும். அனைவருக்கும் சத்கதி அளிக்கும் வள்ளல், பதீத பாவனர் ஒரே ஒரு தந்தை ஆவார். பிறகு இரண்டாவது தந்தை பிரஜாபிதா பிரம்மா, மூன்றாவது லௌகீக தந்தை. ஜன்ம ஜன்மமாக இரண்டு தந்தை கிடைக்கிறார்கள். இந்த ஒரே ஒரு நேரத்தில் மூன்று தந்தை கிடைக்கிறார்கள். இதில் குழம்ப வேண்டிய எந்த ஒரு விஷயமுமே கிடையாது. ஞானம், பக்தி மற்றும் வைராக்கியம் என்பார்கள். இப்பொழுது வைராக்கியம் கூட இரண்டு விதமானதாகும். ஒன்று எல்லைக்குட்பட்டது. இரண்டாவது எல்லையில்லாதது. சந்நியாசிகள் வீடு வாசலை விட்டு விட்டு காட்டிற்குச் சென்று விடுகிறார்கள். இங்கு நீங்கள் பழைய உலகத்தையே புத்தி மூலமாக விட்டு விடுகிறீர்கள். அது ஹடயோகமாகும். இது இராஜயோகமாகும். ஹடயோகிகள் ஒரு பொழுதும் இராஜயோகத்தைக் கற்பிக்க முடியாது. மிகவுமே நல்ல நல்ல விஷயங்களைப் புரிந்துக் கொள்ள வேண்டியவையாக இருக்கின்றன. குழந்தைகளாகிய நீங்கள் தான் இச்சமயம் முட்களிலிருந்து மலராக ஆகிறீர்கள். முதல் நம்பரில் தேக அபிமானத்தின் பெரிய முள் இருக்கிறது. அதை தந்தை தான் விடுவிக்க முடியும். வேறு யாருக்கும் பலமே இல்லை. நல்லது.இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்து கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு, தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு, ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.தாரணைக்கான முக்கிய சாரம்:

1. இந்த பழைய உலகத்தைப் புத்தி மூலமாக மறந்து எல்லையில்லாத வைராக்கியம் உடையவராக ஆக வேண்டும். தேக அபிமானத்தின் பூதத்தை நீக்கி விட வேண்டும்.2. தந்தைக்குச் சமானமாக கீழ்ப்படிதலுடையவராக ஆகி சேவை செய்ய வேண்டும். தனக்குச் சமமாக ஆக்க வேண்டும். எந்த ஒரு விஷயத்திலும் குழம்பக் கூடாது.வரதானம்:

எப்பொழுதும் ஊக்கம் உற்சாகத்தின் சிறகுகள் மூலமாகப் பறக்கும் கலையின் ஸ்திதியை அனுபவம் செய்யும் கர்மயோகி ஆவீர்களாக.ஊக்கம், உற்சாகம் பிராமணர்களாகிய உங்களுக்கு பறக்கும் கலைக்கான சிறகுகளாகும். ஒரு வேளை காரியம் செய்யும் பொருட்டு கீழே வருகிறீர்கள் என்றாலும் கூட பறக்கும் கலையின் ஸ்திதியில் இருந்து கர்மயோகி ஆகி கர்மத்தில் வருகிறீர்கள். இந்த ஊக்கம், உற்சாகம் பிராமணர்களுக்கான மிக பெரியதிலும் பெரிய சக்தியாகும். சுவையற்ற வாழ்க்கை கிடையாது. ஊக்கம், உற்சாகத்தின் சுவை உள்ளது என்றால் ஒரு பொழுதும் மனமுடைந்து போக முடியாது. எப்பொழுதுமே மனமகிழ்ச்சியுடன் இருப்பவர்கள், உற்சாகம் புயலைக் கூட வாழ்த்தாக மாற்றிவிடும். பரீட்சை அல்லது பிரச்சினையை ஒரு கேளிக்கை போல அனுபவம் செய்விக்கும்.சுலோகன்:

யார் அசரீரி நிலையின் அப்பியாசம் உடையவர்களாக இருக்கிறார்களோ, அவர்களை சரீரத்தின் கவர்ச்சி கவர முடியாது.***OM SHANTI***