BK Murli 10 March 2017 Tamil

BK Murli 10 March 2017 Tamil

10.03.2017    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


இனிமையான குழந்தைகளே! எந்த காரியமும் விகர்மமாக ஆகிவிடக் கூடாது. இதில் கவனம் செலுத்த வேண்டும். ஒவ்வொரு அடியிலும் தந்தையிடமிருந்து ஸ்ரீமத்தை பெற்று செயலில் வர வேண்டும்.கேள்வி:

விகர்மத்திலிருந்து யார் பாதுகாப்பாக இருக்க முடியும்? தந்தையின் உதவி யாருக்குக் கிடைக்கும்?பதில்:

யார் தந்தையிடத்தில் சதா சத்யமாக இருக்கின்றார்களோ, உறுதிமொழி எடுத்துக் கொண்டு விகாரங்களை தானம் கொடுத்த பின்பு மீண்டும் தானத்தை ( திரும்ப பெறும் ) எண்ணங்களின்றி இருக்கின்றார்களோ, அவர்கள் விகர்மங்களிலிருந்து பாதுகாப்பாகி விடுகின்றனர். தந்தையின் உதவி யாருக்கு கிடைக்குமென்றால் யார் கர்மம் விகர்மம் ஆவதற்கு முன்பாகவே வழி கேட்டு விடுகின்றார்களோ, சாகாரத்தில் தனது உண்மையிலும் உண்மையான செய்திகளை கூறுகின்றார்களோ! பாபா கூறுகின்றார் - குழந்தைகளே! டாக்டரிடத்தில் ஒருபொழுதும் தனது வியாதியை மறைக்கக் கூடாது. பாவங்களை மறைத்தால் விருத்தியடைந்து கொண்டே இருக்கும். பதவியும் குறைந்து விடும், தண்டனைகளும் அடைய வேண்டியிருக்கும்.பாட்டு:

குழந்தைப்பருவத்தை மறந்து விடாதீர்கள் ......ஓம்சாந்தி.

குழந்தைகள் பாட்டு கேட்டீர்கள், குழந்தைகளுக்கு தந்தை எச்சரிக்கை கொடுக்கின்றார் குழந்தைகளே! நீங்கள் வந்து ஈஸ்வரனுடையவர்களாக ஆகியிருக்கின்றீர்கள், மேலும் நான் ஈஸ்வரனின் குழந்தை என்பதை அறிவீர்கள். அவர் இறை தந்தை என்பதை முழு உலகமும் ஏற்றுக் கொள்கின்றது. தந்தை என்றால் நாம் அவரது குழந்தைகள். பரம்பிதா என்று குழந்தைகள் தான் கூறுவர். நீங்கள் லௌகீகத்தின் குழந்தைகளாகவும் இருக்கின்றீர்கள். இப்பொழுது பரலௌகீக தந்தையினுடையவர்களாகவும் ஆகியிருக்கின்றீர்கள். எதற்காக? எல்லையற்ற தந்தையிடமிருந்து எல்லையற்ற சுகத்தின் ஆஸ்தியை அடைவதற்காக. தந்தை சொர்க்கத்தைப் படைக்கக் கூடியவர், சொர்க்கத்தில் கண்டிப்பாக தேவதைகளின் இராஜ்யம் இருக்கும். இதனை அறிந்து நீங்கள் குழந்தைகளாக ஆகியிருக்கின்றீர்கள். இராஜாவிற்கு குழந்தை இல்லையெனில் தத்தெடுப்பார். செல்வந்தர்கள் தான் தத்தெடுப்பர், ஏழைகள் தத்தெடுக்கமாட்டார்கள். சிறிது லாபம் ஏற்படுகின்ற பொழுது தான் தத்தெடுப்பர். இப்பொழுது நாம் ஈஸ்வரனுடையவர்களாக ஆகியிருக்கின்றோம், அவர் மூலமாக சொர்க்கத்தின் ஆஸ்தி கிடைக்கும் என்பதை நீங்கள் அறிவீர்கள். இப்பொழுது இப்படிப்பட்ட தந்தையை ஒருபொழுதும் மறக்கக் கூடாது. அவரது வழிப்படி நடக்க வேண்டும். இராவணின் வழிப்படி விகர்மங்கள் செய்து கொண்டே இருப்பீர்கள். இந்த 5 விகாரங்களுக்கு வசம் ஆகக் கூடாது. எங்காவது ஏமாற்றம் அடைவதாகத் தோன்றினால் உடனேயே பாபாவிடத்தில் வழி பெற வேண்டும். கர்மம் விகர்மம் ஆவதற்கு முன்பாகவே கேட்டுக் கொள்ள வேண்டும், பாபா இதை நான் செய்யட்டுமா? ஒருபொழுதும் தேக அபிமானத்தில் வரக் கூடாது என்று புரிய வைக்கப்படுகின்றீர்கள். தன்னை ஆத்மா என்று உணர்ந்து பரம்பிதா பரமாத்மாவின் வழிப்படி ஒவ்வொரு அடியிலும் நடந்து கொண்டே இருக்க வேண்டும். ஏதாவது ஒரு விசயம் புரியவில்லையெனில், பாபா, நான் இன்னாரிடத்தில் பலியாகிவிட்டேன் என்று கேட்க வேண்டும். என்னை காம பூதம் முற்றுகையிட்டிருக்கின்றது. அதிக புயல்கள் வரும், ஆனால் தன்னை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். சாக்கடையில் விழுந்து விட்டால் எல்லையற்ற தந்தையை மறந்து முகத்தை கருப்பாக்கிக் கொண்டீர்கள். பாபா உங்களை வெள்ளையாக்குவதற்காக வந்திருக்கின்றார். ஆகையால் 5 விகாரங்கள் என்ற புதை குழியில் ஒருபொழுதும் மாட்டிக் கொள்ளக் கூடாது. எப்பொழுது தேக அபிமானத்தில் வருகின்றீர்களோ அப்பொழுது தான் மாட்டிக் கொள்வீர்கள். ஆத்ம அபிமானியாக இருக்கும் பொழுது பாபாவின் பயம் இருக்கும். விகாரத்தில் செல்வதன் மூலம் மிகப் பெரிய விகர்மம் ஆகிவிடும். ஏனெனில், நீங்கள் விகாரங்களை தானம் செய்திருக்கின்றீர்கள். ஒருவேளை தானம் செய்து திரும்பவும் பெற்றீர்கள் எனில், ஹரிச்சந்திரனைப் போன்று ஆகிவிடுவீர்கள். இங்கு பணத்திற்கான விசயம் ஏதுமில்லை. இங்கு 5 விகாரங்களை தானம் செய்ய வேண்டும். உங்களிடத்தில் என்ன முட்கள் இருக்கின்றதோ அதனை தானமாகக் கொடுத்து விடுங்கள். பிறகு ஒருபொழுதும் செயலில் வரக் கூடாது. திரும்பவும் அடைந்தீர்கள் எனில் கணக்கு கொடுக்க வேண்டும். சொல்லாமல் இருப்பதன் மூலம் பாவம் அதிகரித்துக் கொண்டே செல்லும். மீண்டும் மீண்டும் விகாரத்தில் சென்று கொண்டே இருப்பீர்கள். கூறுவதன் மூலம் உதவி கிடைக்கும். நாம் சிவபாபாவின் குழந்தைகள். தந்தையிடத்தில் உறுதிமொழி செய்திருக்கின்றோம், ஒருபொழுதும் தோல்வி அடையமாட்டோம். இது 5 விகாரங்கள் என்ற எதிரியை வெல்வதற்கான குத்துச் சண்டையாகும். அதில் ஒருபொழுதும் தோல்வி அடையக் கூடாது. ஒருவேளை கீழே விழுந்து விட்டால் சிவபாபா உடனேயே அறிந்து விடுவார். பிறகு சாகாரத்திற்கு எழுத வேண்டும் என்ற கட்டளை கிடைத்திருக்கின்றது. எழுதவில்லையெனில் விகர்மம் அதிகரித்துக் கொண்டே செல்லும்.மேலும் நூறு மடங்கு தண்டனை அடைய வேண்டியிருக்கும். பாபாவிடம் கூறுவதன் மூலம் பாதி நீங்கிவிடும். இவ்வாறு பல குழந்தைகள் வெட்கத்தின் காரணத்தினால் செய்தி கொடுப்பது கிடையாது. ஏதாவது அழுக்கான வியாதி இருக்கின்றது எனில் டாக்டரிடம் கூறுவதற்கு உள்ளம் உருத்துகின்றது. ஆக டாக்டர் என்ன கூறுவார்? பிறகு என்ன பலன் கிடைக்கும்? வியாதி அதிகரித்துக் கொண்டே செல்லும். தந்தை புரிய வைக்கின்றார் - குழந்தைகளே! ஏதாவது பாவம் ஏற்பட்டால் மறைக்க வேண்டாம். இல்லையெனில் பதவி முற்றிலுமாக குறைந்து விடும் மற்றும் கல்ப கல்பத்திற்கும் இவ்வாறு தான் பதவி கிடைக்கும், பிறகு ஞானத்தை எடுத்துக் கொள்ள முடியாது. பாபா, அவரது கதி என்னவாகும்? என்று கேட்கின்றனர். அவர்கள் அதிக தண்டனை அடைவர். கடைசி நேரத்தில் தண்டனைகளின் கணக்கு வழக்கு முடிவடையும் அல்லவா! காசியில் பலி கொடுப்பது போன்று. உண்மையிலும் உண்மையாக சிவனிடத்தில் நீங்கள் இப்பொழுது பலியாகின்றீர்கள். ஆஸ்தி அடைவதற்காக சிவனுடையவர்களாக ஆகியிருக்கின்றீர்கள். மற்றபடி அவர்கள் காசியில் பலியாகின்றனர். அது தற்கொலை செய்து கொள்வதாகும். ஆனால் தீவிர பக்தியுடன் பலியாகின்றனர் எனில், என்ன பாவங்கள் செய்திருந்தார்களோ அதன் தண்டனைகளை அந்த நேரத்தில் அனுபவித்து பாவங்கள் அழிந்து விடும். பிறகு பாவம் செய்வதிலிருந்து விடுபட முடியாது. யோக அக்னியின் மூலம் பாவங்கள் அழிந்து போய் விடும். மாயையின் இராஜ்யத்தில் காரியங்கள் விகர்மங்களாகவே ஆகின்றன. சத்யுகத்தில் விகர்மம் ஆவது கிடையாது. ஏனெனில், மாயையின் இராஜ்யமே கிடையாது. இப்பொழுது முழு உலகமும் பிரஷ்டமானதாகும். முதல் நம்பர் பிரஷ்டாச்சாரம் (கீழ் செயல்) விகாரத்தில் செல்வது. பிரஷ்டாச்சார் (கீழான) மூலம் பிறக்கின்றனர் எனில், அவர்கள் பாவங்களைத் தான் செய்வர். இருப்பது இராவண இராஜ்யமாகும். இராவணனை எரிக்கின்றனர், ஆனால் இராவணன் என்றால் யார்? என்பது முற்றிலுமாக அறிந்து கொள்ளவில்லை. 5 விகாரங்கள் தான் இராவணன் என்று கூறப்படுகின்றது. சொர்க்கத்தில் இந்த விகாரங்கள் இருக்காது. அதனால் தான் அது விகாரமற்ற உலகம் என்று கூறப்படுகின்றது. அங்கு மற்ற இராஜ்யம் அதாவது கண்டம் இருக்கவே இருக்காது. இஸ்லாமியர்கள், பௌத்தர்கள் போன்றவர்கள் அனைவரும் பின்னாளில் வருகின்றனர். அவர்களும் கூட முதலில் சதோ பிரதானமாக இருப்பர், பின்பு ரஜோ, தமோவில் வருகின்றனர். சத்யுகம், திரேதாவில் சம்பூர்ண நிர்விகாரிகளாக இருந்தனர். இப்பொழுது சிறிது சிறிதாக சம்பூர்ண விகாரிகளாக ஆகி வந்திருக்கின்றீர்கள். முழு விகாரிகளாக ஆவதற்கும் கூட நேரம் தேவைப்படுகின்றது. சத்யுகத்தில் 16 கலைகள், பிறகு 14 கலைகள், பிறகு கலைகள் குறைந்து கொண்டே வருகின்றன. ஏனெனில் கீழிறங்கும் கலையாகும். இப்பொழுது உங்களுக்கு முன்னேறும் கலையாகும். முன்னேறும் கலையை இராமர் உருவாக்குகின்றார், கீழிறங்கும் கலையை இராவணன் உருவாக்குகின்றான்.. எவ்வாறு சந்திரனுக்கு சிறிது சிறிதாக கலைகள் குறைகின்றதோ. உலகமும் அவ்வாறு இருக்கின்றது. இப்பொழுது எந்த கலைகளும் கிடையாது. இப்படிப்பட்ட நேரத்தில் தந்தை வந்து மீண்டும் 16 கலைகள் நிறைந்தவர்களாக ஆக்குகின்றார். இந்த விளையாட்டு அனைத்துமே பாரதத்தில் தான் உருவாக்கப்பட்டிருக்கின்றது. வர்ணனைகளும் பாரதத்தில் தான் ஏற்படுகின்றது. இல்லையெனில் 84 பிறவிகளின் கணக்கு எப்படி ஏற்படும்? தந்தை புரிய வைக்கின்றார் - இந்த உலகம் இரும்பு யுகமாக இருக்கின்றது. கலியுகத்தின் இறுதி, பிறகு சத்யுகத்தின் ஆரம்பம் ஏற்படும். எந்த தேவி தேவதா தர்மத்தைச் சார்ந்தவர்கள் தர்மம் பிரஷ்டமாக, கர்மம் பிரஷ்டமாக ஆக்கி விட்டார்களோ அவர்கள் மீண்டும் வருவார்கள். நீங்கள் வந்திருக்கின்றீர்கள் அல்லவா! மரத்தின் கடைசியில் பிரம்மா நிற்பதைப் பாருங்கள். அவர் தமோ பிரதானமானவர் கீழே தபஸ்யா செய்து கொண்டிருக்கின்றனர் - சதோ பிரதானம் ஆவதற்காக! ஆக பிரம்மா தபஸ்யா செய்து கொண்டிருப்பது போன்று பிரம்மா குமாரர்கள் மற்றும் குமாரிகளும் தவம் செய்கின்றனர். இப்பொழுது எந்த பிரம்மா சதோ பிரதானம் ஆகிக் கொண்டிருக்கின்றாரோ, அவரிடத்தில் பரமாத்மா வந்து தனது அறிமுகத்தைக் கொடுக்கின்றார். இவருக்கு கூறுகின்றார் எனில், குழந்தைகளுக்கும் கூறுகின்றார். பாபா மற்றும் குழந்தைகளாகிய நீங்கள் கல்ப விருட்சத்தின் கீழ் தபஸ்யா செய்து கொண்டிருக்கின்றீர்கள் தேவதை ஆவதற்காக. இந்த கோயில் முற்றிலுமாக உங்களது நினைவுச் சின்னமாகும். இப்பொழுது அப்படிப்பட்ட புத்திசாலி குழந்தைகள் இருக்க வேண்டும் அதாவது இந்த கோயிலின் முழு சரித்திர பூகோளத்தைக் கூற வேண்டும், இது உயர்ந்ததிலும் உயர்ந்த கோயிலாகும். இதில் மம்மாவும் இருக்கின்றார், குழந்தைகளும் தபஸ்யா செய்து கொண்டிருக்கின்றனர். யார் பாரதத்தை சொர்க்கமாக ஆக்கினார்களோ அவர்களது சரித்திர பூகோளம் அயல்நாட்டினர் கேட்டால் இது பாரதத்தை சொர்க்கமாக ஆக்கிய நமது தந்தையின் கோயிலாகும் என்று கூறுவர். இந்த நேரத்தில் நடைமுறையில் அமர்ந்திருக்கின்றார்கள். இதனை யாரும் அறியவில்லை. இவையனைத்து சிலைகளும் குருட்டு நம்பிக்கையில் உருவாக்கப்பட்டவைகளாகும். இது பூத பூஜை என்று கூறப்படுகின்றது. பொம்மை பூஜையாகும். சீக்கிய தர்மத்தை ஸ்தாபனை செய்த குருநானக்கின் ஆத்மா, அது புது ஆத்மாவாகும், விகாரமற்றதாக இருந்தது. அது எங்கு வந்தது? கண்டிப்பாக ஏதாவது சரீரத்தில் பிரவேசமாகியிருக்கும். ஆக தூய்மையான ஆத்மா ஒருபொழுதும் துக்கத்தை அனுபவிக்க முடியாது. முதலில் அது சுகத்தை அனுபவிக்கும், பிறகு துக்கம். விகர்மமே செய்யவில்லையெனில், ஏன் துக்கத்தை அனுபவிக்க வேண்டும்.நாமும் கூட முதலில் சம்பூர்ணமாக இருந்தோம், பிறகு சிறிது சிறிதாக கலைகள் குறைந்து கொண்டே வந்தன. ஒவ்வொரு மனிதனுக்கும் இவ்வாறு ஏற்படவே செய்கின்றது. பதீத பாவனனே வாருங்கள் என்று அழைக்கின்றனர். ஆக கண்டிப்பாக வந்து பாவன உலகை ஸ்தாபனை செய்வார் மற்றும் பதீத உலகை விநாசம் செய்வார். பிரம்மாவின் மூலம் ஸ்தாபனை மற்றும் சங்கர் மூலம் விநாசம், எவ்வளவு நல்ல முறையில் புரிய வைக்கின்றார்! யார் தேவி தேவதா தர்மத்தைச் சார்ந்தவர்களாக இருக்கின்றார்களோ அவர்களது புத்தியில் தான் இது அமரும். அதனால் தான் பக்தர்களுக்கு இந்த ஞானம் கொடுங்கள் என்று பாபா கூறுகின்றார். நாம் முதலில் தேவி தேவதா தர்மத்தைச் சார்ந்தவர்களாக இருந்தோம், பிறகு அசுரர்களாக ஆகி விட்டோம் என்பது யாருக்கும் தெரியாது. லெட்சுமி நாராயணன் முழு 84 பிறவிகள் எடுத்திருக்கின்றனர். இப்பொழுது நீங்கள் சூத்திரனிலிருந்து பிராமணர்களாக ஆகியிருக்கின்றீர்கள். தாமதமாக வருபவர்கள் பிராமணர்களாக ஆகமாட்டார்கள். கல்பத்திற்கு முன் யாருடைய புத்தியில் ஏறியதோ அவர்களது புத்தியில் தான் இந்த விசயம் ஏறும். இல்லை யெனில், வெளியில் சென்றவுடன் அவ்வளவு தான் மறந்து விடும். இதில் முயற்சி இருக்கின்றது, மற்ற இடங்களில் கதைகள் மட்டுமே கேட்டு விட்டு வீட்டிற்குச் சென்றதும் விகாரத்தில் விழுந்து விடுவர். குருவை முற்றிலுமாக பின்பற்றுவது கிடையாது. பிறகு பின்பற்றுபவர்கள் (எர்ப்ப்ர்ஜ்ங்ழ்ள்) என்று எப்படிக் கூற முடியும்? குருக்களும் அவர்களை ஒன்றும் கூறுவது கிடையாது. ஒருவேளை கூறி விட்டால், பிறகு ஒருவரும் (குருவிடம்) இருக்கமாட்டார்கள், பிறகு எப்படி சாப்பிட முடியும்? கிரஹஸ்திகளுடையதைத் தான் சாப்பிடுகின்றனர். பிறகு விகாரிகளிடத்தில் பிறப்பு எடுக்க வேண்டியிருக்கின்றது. தேவதைகள் சந்நியாசம் செய்வது கிடையாது. இது இல்லற மார்க்கத்தின் சந்நியாசமாகும். அது துறவற மார்க்கத்தின் சந்நியாசமாகும். தந்தை வந்து கணவன் மனைவி இருவருக்கும் புரிய வைக்கின்றார். குழந்தைகளே சம்பூர்ண தூய்மையாகும் பொழுது சம்பூர்ண இராஜ்ய பதவி அடைவீர்கள். குறைவாக தூய்மையானால், குறைவான பதவியே அடைவீர்கள். தாய் தந்தையைப் பின்பற்ற வேண்டும். தந்தை கூறுகின்றார் - தாய் தந்தையைப் போன்று முயற்சி செய்தால் சிம்மாசனதாரிகளாக ஆவீர்கள். முக்கிய விசயம் தூய்மையாகும். இப்பொழுது தேக அபிமானத்தை விட்டு விடுங்கள். நான் ஆத்மா, பாபா அழைத்துச் செல்ல வந்திருக்கின்றார், தூய்மையாகும் பொழுது தான் தூய உலகிற்கு எஜமானர்களாக ஆக முடியும். கும்ப மேளா என்று கூறுகின்றனர். அந்த திரிவேணி என்பது நதிகளுடையது, அதனை சங்கமம் என்று கூறுகின்றனர். உண்மையில் இது பல நதிகள் மற்றும் கடலின் சங்கமமாகும். நீங்கள் அனைவரும் ஞான நதிகள், தந்தை ஞானக் கடலாக இருக்கின்றார். என்னிடத்தில் யோகா வைத்துக் கொண்டால் நீங்கள் பதீதத்திலிருந்து பாவனமாக ஆகிவிடுவீர்கள் என்று தந்தை கூறுகின்றார். இறந்தே ஆக வேண்டும். தந்தையிடமிருந்து ஆஸ்தி அடைய வேண்டும், ஆக இப்பொழுது தான் பக்தியின் பலனை பகவானிடமிருந்து அடைய முடியும். இல்லையெனில் நீங்கள் பக்தி செய்யவே இல்லை என்று புரிந்து கொள்ளலாம். பக்தி செய்பவர்கள் தான் வந்து ராஜ்ஜிய பாக்கியத்தை அடைவார்கள். தந்தை எவ்வளவு நல்ல முறையில் புரிய வைக்கின்றார்! மற்ற அனைவரின் புத்தியிலும் சாஸ்திரங்கள் தான் இருக்கும். இங்கு ஞானக் கடல் தந்தை புரிய வைக்கின்றார் எனில், நீங்கள் சிரேஷ்டமாக ஆகிக் கொண்டிருக்கின்றீர்கள். இராஜ்ஜியம் ஸ்தாபனை செய்வதில் எவ்வளவு முயற்சி தேவைப்படுகின்றது! ருத்ர ஞான யக்ஞத்தில் அதிக தடைகள் ஏற்படுகின்றன. நல்லது.இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.தாரணைக்கான முக்கிய சாரம்:

1) தேக அபிமானத்தில் வந்து ஒருபொழுதும் விகாரங்கள் என்ற புதை குழியில் மாட்டிக் கொள்ளக் கூடாது. காரியம் விகர்மமாக ஆகிவிடக் கூடாது, ஆகையால் காரியம் செய்வதற்கு முன்பு தந்தையிடத்தில் வழி கேட்டுக் கொள்ள வேண்டும்.2) தாய் தந்தையைப் பின்பற்ற வேண்டும். உயர்ந்த பதவி அடைவதற்கு கண்டிப்பாக முழு தூய்மையாக ஆக வேண்டும்.வரதானம்:

சதா குஷி என்ற சத்தான உணவு சாப்பிடக் கூடிய மற்றும் குஷியைப் பகிர்ந்து கொடுக்கக் கூடிய அதிஷ்டசாலி, கவலையற்றவர் ஆகுக.பிராமண வாழ்க்கையின் சத்தான உணவு குஷி ஆகும். யார் சதா குஷி என்ற சத்தான உணவு சாப்பிடுபவர்களாக இருக்கிறார்களோ மற்றும் குஷியைப் பகிர்ந்து கொடுப்பார்களோ அவர்கள் தான் அதிஷ்டசாலி கள் ஆவர். என்னைப் போன்ற அதிஷ்டசாலிகள் வேறு யாரும் கிடையாது என்று அவர்களது உள்ளத்தில் வெளிப்படும். கடல் அலைகள் மூழ்கடிக்க வந்தாலும் கவலை இருக்காது. ஏனெனில் யார் யோகயுக்த் ஆக இருப்பார்களோ அவர்கள் சதா பாதுகாப்பாக இருப்பார்கள், ஆகையால் முழு கல்பத்திலேயே இந்த நேரத்தில் தான் நீங்கள் கவலையற்ற வாழ்க்கையின் அனுபவம் செய்கிறீர்கள். சத்யுகத்திலும் கவலையற்று இருப்பீர்கள், ஆனால் ஞானம் இருக்காது.சுலோகன்:

எளிய (கஷ்டப்படாது) முயற்சியாளர்களாக ஆக வேண்டுமெனில், அனைவரின் ஆசீர்வாதத்தினால் தன்னை நிறைத்துக் கொள்ளுங்கள்.


***OM SHANTI***