10 March 2017

BK Murli 11 March 2017 Tamil

BK Murli 11 March 2017 Tamil

11.03.2017    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


இனிமையான குழந்தைகளே! ஏகாந்தத்தில் அமர்ந்து கல்வி பயின்றீர்கள் என்றால் மிகவும் நன்றாக தாரணை ஏற்படும், அதிகாலையில் எழுந்து ஞானத்தை ஆழ்ந்து சிந்தனை செய்யக்கூடிய (விசார் சாகர் மந்தன்) பழக்கத்தை மேற்கொள்ளுங்கள்.கேள்வி:

முழுமையாக தேர்ச்சி பெறவேண்டும் என்றால், என்ன சிந்தனை வரவேண்டும், எது வரக்கூடாது?பதில்:

முழுமையாக தேர்ச்சி பெறுவதற்காக சதா இந்த சிந்தனை வரவேண்டும் - நாம் இரவு பகலாக நன்றாக முயற்சி செய்து படிக்க வேண்டும். பாப்தாதாவினுடைய இதய சிம்மாசனத்தில் அமர முடியக்கூடிய அளவிற்கு தன்னுடைய மனோநிலையை உயர்ந்ததாக ஆக்க வேண்டும். தூக்கத்தை வென்றவர் ஆக வேண்டும். குஷியில் இருக்க வேண்டும். மற்றபடி நாடகத்தில் மற்றும் அதிர்ஷ்டத்தில் என்ன இருக்குமோ அது கிடைத்துவிடும் என்ற இந்த எண்ணம் ஒருபொழுதும் வரக்கூடாது. இந்த எண்ணம் சோம்பேறி ஆக்கிவிடுகிறது.பாடல்:

உங்களை அடைந்து நாங்கள் உலகத்தை அடைந்துவிட்டோம்ஓம்சாந்தி.

குழந்தைகள் பாடலின் அர்த்தத்தைப் புரிந்து கொண்டீர்கள். எல்லையற்ற தந்தையிடமிருந்து இப்பொழுது நமக்கு எல்லையற்ற ஆஸ்தி கிடைத்துக் கொண்டிருக்கிறது. குழந்தைகள் தந்தையிடமிருந்து விஷ்வத்தின் சுயராஜ்யத்தினுடைய ஆஸ்தியை அடைந்து கொண்டிருக்கின்றனர். அந்த விஷ்வத்தின் இராஜ்யத்தை உங்களிடமிருந்து எவரும் பறிக்க இயலாது. நீங்கள் முழு விஷ்வத்தின் எஜமானர் ஆகிறீர்கள். அங்கே எவ்வித எல்லைக்குட்பட்டவைகளும் இருக்காது. ஒரு தந்தையிடமிருந்து நீங்கள் ஒரே இராஜ்யத்தை அடைகிறீர்கள். அங்கே ஒரே மகாராஜா மகாராணி இராஜ்யம் செய்கிறார்கள். ஒரு தந்தை பின்னர் ஒரு இராஜ்யம், இதில் எந்தப் பிரிவினையும் கிடையாது. பாரதத்தில் ஒரே ஒரு மகாராஜா மகாராணி இலட்சுமி, நாராயணருடைய இராஜ்யம் இருந்தது, முழு விஷ்வத்தின் மீதும் இராஜ்யம் செய்தனர் என்பதை நீங்கள் அறிவீர்கள், அதை அத்வைத இராஜ்யம் என்று சொல்லப்படுகிறது. அதை ஒருவர் குழந்தைகளாகிய உங்கள் மூலம் ஒருவர் மட்டும் ஸ்தாபனை செய்திருக்கிறார். பின்னர் குழந்தைகளாகிய நீங்கள் தான் விஷ்வத்தின் இராஜ்யத்தை அனுபவிப்பீர்கள். ஒவ்வொரு 5 ஆயிரம் வருடங்களுக்குப் பிறகும் நாம் இந்த இராஜ்யத்தை அடைகின்றோம் என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். பின்னர், அரைக்கல்பம் முடிவடைந்ததும் நாம் இந்த இராஜ்யத்தை இழக்கின்றோம். பின்னர், பாபா வந்து இராஜ்யத்தை அடையச் செய்கின்றார். இது தோல்வி மற்றும் வெற்றியின் விளையாட்டு ஆகும். மாயையிடம் தோல்வியே தோல்வி கிடைக்கிறது, பிறகு ஸ்ரீமத் மூலம் நீங்கள் இராவணன் மீது வெற்றி அடைகிறீர்கள். உங்களில் கூட சிலர் முற்றிலும் ஒப்பற்ற நிச்சயபுத்தி உடையவர்களாக இருக்கின்றனர். அவர்களுக்கு நாம் விஷ்வத்தின் எஜமானர் ஆகிறோம் என்ற குஷி எப்பொழுதும் இருக்கிறது. கிறிஸ்தவர்கள் எவ்வளவு தான் சக்தி வாய்ந்தவர்களாக இருந்தாலும் விஷ்வத்தின் எஜமானர் ஆவது என்பது நடக்கவே முடியாது. சிறிய துண்டு துண்டான இடங்கள் மீது இராஜ்யம் நடக்கிறது. முதன்முதலில் ஒரு பாரதம் தான் முழு விஷ்வத்தின் எஜமானராக இருந்தது. தேவி தேவதைகளினுடையதைத் தவிர வேறு எந்த தர்மமும் கிடையாது. அவசியம் விஷ்வத்தின் படைப்பாளர் தான் அத்தகைய விஷ்வத்தின் எஜமானராக ஆக்குவார். பாருங்கள், பாபா எவ்வாறு வந்து புரிய வைக்கின்றார்! நீங்களும் கூட புரிய வைக்க முடியும். பாரதவாசிகள் அவசியம் விஷ்வத்தின் எஜமானர்களாக இருந்தனர். விஷ்வத்தின் படைப்பாளரிடமிருந்து தான் ஆஸ்தி கிடைத்திருக்கும். பின்னர், எப்பொழுது இராஜ்யத்தை இழக்கின்றனரோ, துக்கமானவர்கள் ஆகின்றனரோ அப்பொழுது தந்தையை நினைவு செய்கின்றனர். பக்திமார்க்கமே பகவானை நினைவு செய்வதற்கான மார்க்கம் ஆகும். எத்தனை விதமாக பக்தி தானம், புண்ணியம், ஜெபம், தவம் முதலியவை செய்கின்றனர். இந்த படிப்பின் மூலம் உங்களுக்கு என்ன இராஜ்யம் கிடைக்கிறதோ அது முடிவடைந்த பின்னர் நீங்கள் பக்தன் ஆகிறீர்கள். இலட்சுமி, நாராயணரை பகவான் பகவதி என்று கூறுகின்றனர். ஏனெனில், பகவானிடமிருந்து இராஜ்யத்தைப் பெற்றிருக்கின்றனர் அல்லவா! ஆனால் அவர்களைக்கூட நீங்கள் பகவான் பகவதி என்று கூற முடியாது என்று பகவான் கூறுகின்றார். இவர்களுக்கு இந்த இராஜ்யத்தை அவசியம் சொர்க்கத்தின் படைப்பாளர் தான் கொடுத்திருப்பார். ஆனால் எவ்வாறு கொடுத்தார்? என்பதை எவரும் அறியவில்லை. நீங்கள் அனைவரும் தந்தையினுடைய அதாவது பகவானுடைய குழந்தைகள் ஆவீர்கள். இப்பொழுது தந்தை அனைவருக்கும் இராஜ்யத்தைக் கொடுக்கமாட்டார். இது கூட நாடகத்தில் உருவாக்கப்பட்டிருக்கிறது. பாரதவாசிகள் தான் விஷ்வத்தின் எஜமானர் ஆகின்றனர். இப்பொழுதோ பிரஜைகளின் மீது பிரஜைகளின் இராஜ்யமே நடைபெறுகிறது. தன்னைத் தானே பதீதமானவர்கள், கீழானவர்கள் (பிரஷ்டாச்சாரி) என்று ஒப்புக்கொள்கின்றனர். இந்த பதீத உலகத்தைக் கடந்து செல்வதற்காக, நீங்கள் வந்து இந்த வேசியாலயத்திலிருந்து (விகாரி உலகம்) சிவாலயத்திற்கு அழைத்துச் செல்லுங்கள் என்று படகோட்டியை நினைவு செய்கின்றனர். ஒன்று நிராகாரமான சிவாலயம், நிர்வாணதாமம் என்பதாகும். இரண்டாவது சிவபாபா எந்த இராஜ்யத்தை ஸ்தாபனை செய்கின்றாரோ அதையும் சிவாலயம் என்று சொல்லப்படுகிறது. முழு சிருஷ்டியுமே சிவாலயம் ஆகிவிடுகிறது. எனவே, இந்த சத்யுகம் சாகாரி சிவாலயம் ஆகும், அந்த நிர்வாணதாமம் நிராகார சிவாலயம் ஆகும். இதை குறித்துக் கொள்ளுங்கள். புரியவைப்பதற்காக குழந்தைகளுக்கு பாயிண்ட்ஸ் (கருத்துக்கள்) கிடைக்கின்றன. பிறகு நல்ல முறையில் ஞான சிந்தனைக் கடைதலும் வேண்டும். எவ்வாறு பள்ளியில் பயிலும் குழந்தைகள் குழந்தைப் பருவத்தில் அதிகாலையில் எழுந்து மனப்பாடம் செய்கின்றனர். அதிகாலையில் ஏன் அமர்கின்றனர்? ஏனெனில், ஆத்மா ஓய்வெடுத்து புத்துணர்ச்சி அடைந்துவிடுகிறது. ஏகாந்தத்தில் அமர்ந்து பயில்வதால் நன்றாக தாரணை ஆகிறது. அதிகாலையில் எழுவதற்கான ஆர்வம் இருக்க வேண்டும். எங்களுடைய வேலைக்கு அதிகாலையில் செல்ல வேண்டியதாக உள்ளது என்று சிலர் கூறுகின்றனர். நல்லது, மாலையில் அமருங்கள். மாலை நேரத்தில் கூட தேவதைகள் வலம் வருகின்றனர் என்று கூறுகின்றனர். ராணி விக்டோரியாவின் மந்திரி இரவில் தெருவிளக்கின் கீழே அமர்ந்து படித்தார். மிகவும் ஏழையாக இருந்தார். படித்து மந்திரி ஆகிவிட்டார். படிப்புதான் அனைத்திற்கும் ஆதாரம் ஆகும். உங்களுக்கோ கற்பிக்கக்கூடியவர் பரமபிதா பரமாத்மா ஆவார். உங்களுக்கு இந்த பிரம்மா கற்பிக்கவில்லை ஸ்ரீகிருஷ்ணரும் அல்ல. நிராகாரமான ஞானக்கடல் கற்பிக்கின்றார். அவருக்குத்தான் படைப்பினுடைய முதல், இடை, கடை பற்றிய ஞானம் உள்ளது. சத்யுகம் திரேதாயுகம் ஆதி, பின்னர் திரேதாயுகத்தின் இறுதி துவாபரயுகத்தின் ஆதி இதைத்தான் மத்திய காலம் என்று சொல்லப்படுகிறது. இந்த அனைத்து விஷயங்களையும் பாபா புரியவைக்கின்றார். பிரம்மாவிலிருந்து விஷ்ணு ஆகி 84 பிறவிகளை அனுபவிக்கிறார், பிறகு பிரம்மா ஆகிறார். பிரம்மா 84 பிறவிகள் எடுத்தார் என்றாலும், இலட்சுமி, நாராயணர் 84 பிறவிகள் எடுத்தனர் என்றாலும் விஷயம் ஒன்றுதான். இந்த சமயத்தில் நீங்கள் பிராமண வம்சத்தினர் ஆவீர்கள். பின்னர் நீங்கள் விஷ்ணு வம்சத்தினர் ஆகப்போகிறீர்கள். பின்னர் கீழே விழுந்து விழுந்து சூத்திர வம்சத்தினர் ஆகிவிடுவீர்கள். இந்த அனைத்து விஷயங்களையும் தந்தைதான் வந்து புரிய வைக்கின்றார். ஸ்ரீமத்படி நடந்து, எல்லையற்ற தந்தை மூலம் விஷ்வத்தின் மகாராஜா மகாராணி ஆகுவதற்காக நாம் வந்திருக்கிறோம் என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். பிரஜை கூட விஷ்வத்தின் எஜமானர் ஆவார். இந்த படிப்பில் அதிக புத்திசாலித்தனம் தேவை. எந்தளவு கற்றுக் கொள்வீர்களோ, கற்றுக் கொடுப்பீர்களோ, அந்தளவு உயர்ந்த பதவியை அடைவீர்கள். இது எல்லையற்றபடிப்பு ஆகும். அனைவரும் படிக்க வேண்டும். அனைவரும் ஒருவரிடம் தான் பயில்கிறீர்கள். பின்னர் வரிசைக்கிரமமாக, சிலரோ நன்றாக தாரணை செய்கின்றனர், சிலருக்குக் கொஞ்சம் கூட தாரணை ஆவதில்லை. வரிசைக்கிரமமாக உள்ள அனைவருமே தேவை. இராஜாக்களுக்கு முன்பு வேலைக்காரர் வேலைக்காரிகளும் தேவை. வேலைக்காரர் வேலைக்காரிகளோ மாளிகைகளில் இருக்கின்றனர். பிரஜையோ வெளியில் இருப்பார். அங்கே மாளிகை மிகவும் பெரிது பெரிதாக இருக்கும். அதிக நிலம் இருக்கிறது, மனிதர்கள் குறைவாக இருக்கின்றனர். தானியங்களும் அதிகம் இருக்கும். அனைத்து விருப்பங்களும் பூர்த்தி ஆகிவிடுகின்றன. பணத்திற்காக ஒருபொழுதும் துக்கம் அடைய மாட்டார்கள். பாரடைஸ் (சொர்க்கம்) என்ற இந்த பெயர் எவ்வளவு உயர்ந்ததாக இருக்கிறது! ஒருவருடைய வழிப்படி நடப்பதனால் நீங்கள் விஷ்வத்தின் எஜமானர் ஆகிவிடுகிறீர்கள். அங்கே, சத்யுக சூரியவம்ச இலட்சுமி, நாராயணருடைய இராஜ்யம் என்று கூறுவார்கள். பின்னர் குழந்தைகள் சிம்மாசனத்தில் அமர்வார்கள். அதனுடைய மாலை உருவாகிறது. 8 பேர் மதிப்போடு தேர்ச்சி (பாஸ் வித் ஆனர்) பெறுகின்றனர். 9 இரத்தினங்களின் மோதிரம் கூட அணிந்து கொள்கின்றனர். நடுவில் பாபா மீதம் 8 இரத்தினங்கள் உள்ளனர். 9 இரத்தினங்களை இங்கு அனேகர் அணிந்து கொள்கின்றனர். இது தேவதைகளின் அடையாளம் என நினைக்கின்றனர். யார் அந்த 9 இரத்தினங்களாக இருந்தார்கள் என்பதைப் புரிந்து கொள்ளவில்லை. 9 இரத்தினங்களுடைய மாலை கூட உருவாகிறது. கிறிஸ்தவர்கள் கையில் மாலை போட்டுக் கொள்கின்றனர். 8 இரத்தினங்கள் மற்றும் மேலே மலர் இருக்கும். இது முக்தி அடைபவர்களின் மாலை ஆகும். மற்றபடி ஜீவன்முக்தி அடைபவர்கள் என்றால் இல்லறமார்க்கத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். அதில் மலருடன் சேர்த்து இரண்டு மணிகள் கூட அவசியம் இருக்கும். அர்த்தத்தைக் கூட புரியவைக்க வேண்டும் அல்லவா - ஒருவேளை அந்த போப்பினுடைய வரிசைக்கிரமமான மாலையை உருவாக்குகிறீர்கள். இந்த மாலையைப் பற்றி அவர்களுக்குத் தெரியவே தெரியாது. உண்மையில் மாலை என்பது இதுதான், இதையே அனைவரும் உருட்டுகிறார்கள். சிவபாபா மற்றும் குழந்தைகளாகிய நீங்கள் உழைக்கின்றீர்கள். யாருடைய மாலை உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதை ஒருவேளை நீங்கள் யாருக்காவது வந்து புரியவைத்தீர்கள் என்றால், உடனே புரிந்து கொள்வார்கள். உங்களுடைய புரொஜெக்டர் (படம் காட்டும் கருவி) அயல்நாடு வரை கூட செல்லும். பின்னர் புரிய வைக்கக்கூடிய ஜோடி தான் தேவை. இவர்கள் இல்லறமார்க்கத்தைச் சேர்ந்தவர்கள் எனப்புரிந்து கொள்வார்கள். தந்தையின் அறிமுகத்தை அனைவருக்கும் கொடுக்க வேண்டும். சிருஷ்டிச் சக்கரத்தைக் கூட அறிந்து கொள்ள வேண்டும். யார் சக்கரத்தைப் பற்றி அறிந்து கொள்ளவில்லையோ, அவர்களை என்னவென்று சொல்வது!சத்யுகத்தில் நீங்கள் சர்வகுண சம்பன்னமாக 16 கலைகள் சம்பூரணமாக இருந்தீர்கள். பின்னர் இப்பொழுது ஆகிறீர்கள். நீங்கள் இந்தப் படிப்பைப் படித்து இவ்வளவு உயர்ந்தவர்களாக ஆகிறீர்கள். இராதை, கிருஷ்ணர் தனித்தனி இராஜ்யத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். சுயம்வரத்திற்குப் பிறகு இலட்சுமி, நாராயணர் என்ற பெயர் ஏற்பட்டது. இலட்சுமி, நாராயணருடைய எந்த குழந்தைப்பருவ சித்திரமும் காண்பிக்கப்படவில்லை. சத்யுகத்தில் யாருடைய மனைவியும் அகாலமரணம் அடைவதில்லை. அனைவரும் காலம் முடிந்த பிறகே சரீரத்தை விடுகிறார்கள். அழுவதற்கான அவசியமே இல்லை. பெயரே சொர்க்கம் ஆகும். இந்த சமயத்தில் இந்த அமெரிக்கா, ரஷ்யா போன்ற என்னவெல்லாம் உள்ளனவோ, அவையனைத்திலும் மாயையின் பகட்டு உள்ளது. இந்த ஏரோபிளேன், மோட்டார்கள் போன்றவை அனைத்தும் பாபா வந்த பின்பே வெளிப்பட்டன. நூறு வருடங்களுக்குள் இவையனைத்தும் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இது கானல் நீர் போன்ற இராஜ்யம் ஆகும். இதை மாயையின் பகட்டு என்று சொல்லப்படுகிறது. விஞ்ஞானத்தின் பிற்காலத்தின் பகட்டானது அல்பகாலத்திற்காகத் தான். இவையனைத்தும் அழிந்து போய்விடும். பின்னர், சொர்க்கத்தில் பயன்படும். மாயையின் பகட்டினால் குஷியையும் கொண்டாடுவார்கள், விநாசமும் ஏற்படும். இப்பொழுது நீங்கள் ஸ்ரீமத்படி இராஜ்யத்தை அடைந்துகொண்டிருக்கிறீர்கள். அந்த இராஜ்யத்தை நம்மிடமிருந்து எவரும் பறிக்க முடியாது. அங்கே எந்தவித குழப்பமும் இருக்காது. ஏனெனில், அங்கே மாயையே இருக்காது. குழந்தைகளே நல்லமுறையில் பயிலுங்கள் என்று தந்தை புரிய வைக்கின்றார். ஆனால் கூடவே, கல்பத்திற்கு முன்பு போலவே அனைவரும் படிப்பார்கள் என்பதையும் பாபா அறிந்துள்ளார். எந்தக் காட்சி கல்பத்திற்கு முன்பு நடைபெற்றதோ, அதுவே இப்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நரகத்தை சொர்க்கம் ஆக்கக்கூடிய கல்யாணகாரி நடிப்பானது, கல்பத்திற்கு முன்பு போலவே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மற்றபடி, யார் இந்த தர்மத்தைச் சேர்ந்தவர் கிடையாதோ, அவர்களுக்கு இந்த ஞானம் புத்தியில் பதியாது. தந்தை ஆசிரியராக இருக்கிறார். எனவே, குழந்தைகள் கூட ஆசிரியர் ஆக வேண்டும். அயல்நாடு வரை இதை கற்பிப்பதற்காக குழந்தைகள் சென்றிருக்கின்றனர். அவர்களுடன் மொழி பெயர்த்துக் கூறுபவரும் புத்திசாலியாக இருக்க வேண்டும். முயற்சி செய்ய வேண்டும்.ஈஸ்வரிய குழந்தைகளாகிய உங்களுடைய நடத்தை மிகவும் உயர்ந்ததாக இருக்க வேண்டும். சத்யுகத்தில் நடத்தை உயர்ந்ததாகவும், ராயலாகவும் (கம்பீரமாகவும்) இருக்கும். இங்கே உங்களை வெள்ளாட்டில் இருந்து சிங்கமாக, குரங்கிலிருந்து தேவதையாக ஆக்கப்படுகிறது. எனவே, ஒவ்வொரு விஷயத்திலும் அகங்காரமின்மை தேவை. தன்னுடைய அகங்காரத்தை உடைக்க வேண்டும். நாம் எத்தகைய கர்மம் செய்வோமோ நம்மைப் பார்த்து பிறர் செய்வார்கள் என்பதை நினைவில் வைக்க வேண்டும். தன்னுடைய கைகளால் பாத்திரத்தை சுத்தம் செய்தீர்கள் என்றால், எவ்வளவு அகங்காரம் அற்றவர்களாக இருக்கிறார்கள் என்று அனைவரும் கூறுவார்கள். அனைத்தையும் கைகளால் செய்தீர்கள் என்றால் இன்னும் அதிக மதிப்பு கிடைக்கும். எப்பொழுதாவது அகங்காரம் வரும்பொழுது உள்ளத்திலிருந்து இறங்கிவிடுகின்றனர். எதுவரை உயர்ந்த மனோநிலை உருவாகவில்லையோ, அதுவரை உள்ளத்தில் அமரமாட்டீர்கள். பின்னர், சிம்மாசனத்தில் எவ்வாறு அமர்வீர்கள்? வரிசைக்கிரமமான பதவி உள்ளதல்லவா? யாரிடம் அதிக செல்வம் உள்ளதோ அவர்கள் முதல் தரமான மாளிகையைக் கட்டுகிறார்கள். ஏழைகள் குடிசையைக் கட்டுவார்கள். இதன் காரணத்தினால் நல்ல முறையில் படித்து முழுமையாகத் தேர்ச்சி பெறவேண்டும், நல்ல பதவியை அடைய வேண்டும். நாடகத்தில் என்ன உள்ளதோ அல்லது அதிர்ஷ்டத்தில் என்ன உள்ளதோ அது தானாகவே கிடைக்கும் என்று இருக்கக்கூடாது. இந்த எண்ணம் வந்தாலே தோல்வி (ஃபெயில்) அடைந்து விடுவீர்கள். அதிர்ஷ்டத்தை அதிகரிக்க வேண்டும். இரவு பகல் நன்றாக உழைத்துப் படிக்க வேண்டும். தூக்கத்தை வென்றவர் ஆக வேண்டும். இரவில் விசார் சாகர் மந்தன் செய்வதால் உங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி (மஜா) ஏற்படும். பாபா நாங்கள் இவ்வாறு விசார் சாகர் மந்தன் செய்கிறோம் என்று பாபாவிற்கு எவரும் கூறுவதில்லை. எனவே, எவரும் எழுந்திருப்பதேயில்லை என பாபா புரிந்து கொள்கிறார். விசார் சாகர் மந்தன் செய்வதற்கான நடிப்பு ஒருவேளை இவருடையதாக மட்டும் இருக்கும். முதல் நம்பர் குழந்தை இவர் தான் அல்லவா! பாபா அனுபவத்தைச் சொல்கின்றார், எழுந்து நினைவில் அமருங்கள். இத்தகைய சிந்தனை செய்யப்படுகிறது - இந்த சிருஷ்டிச் சக்கரம் எவ்வாறு சுழல்கிறது? உயர்ந்ததிலும் உயர்ந்தவர் பாபா, பின்னர், சூட்சுமவதனவாசிகள் பிரம்மா, விஷ்ணு, சங்கரர். பின்னர் பிரம்மா என்னவாக இருக்கிறார்! விஷ்ணு என்னவாக இருக்கிறார்! இவ்வாறு விசார் சாகர் மந்தன் செய்ய வேண்டும். நல்லது.இனிமையிலும் இனிமையான தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு தாய், தந்தை பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மிகக் குழந்தைகளுக்கு ஆன்மிகத் தந்தையின் நமஸ்காரம்.தாரணைக்காக முக்கிய சாரம்:

1. என்ன கர்மம் நாம் செய்வோமோ, நம்மைப் பார்த்து பிறர் செய்வார்கள். ஆகையினால், ஒவ்வொரு கர்மத்தின் மீதும் கவனம் வைக்க வேண்டும். மிகவும் பணிவான உள்ளம் உடையவராக, அகங்காரம் அற்றவராக ஆக வேண்டும். அகங்காரத்தை உடைத்து விட வேண்டும்.2. தன்னுடைய அதிர்ஷ்டத்தை உயர்ந்ததாக்குவதற்காக நல்ல முறையில் படிப்பு படிக்க வேண்டும். அதிகாலையில் எழுந்து தந்தையை நினைவு செய்வதற்கான ஆர்வம் கொள்ள வேண்டும்.வரதானம்:  

கட்டுப்படுத்தும் சக்தி (கன்ட்ரோலிங்பவர்) மூலம் புயலைக்கூட பரிசாக ஆக்கக்கூடிய யதார்த்தமான யோகி ஆவீர்களாக !யார் தன்னுடைய புத்தியை ஒரு விநாடியில் எங்கே மற்றும் எப்பொழுது ஈடுபடுத்த விரும்புகிறார்களோ, மேலும் அங்கே அப்பொழுது ஈடுபடுத்த முடிகிறதோ, அவர்களே யதார்த்தமான மற்றும் உண்மையான யோகி ஆவார்கள். சூழ்நிலை குழப்பமானதாக இருந்தாலும், வாயுமண்டலம் தமோகுணமாக இருந்தாலும், மாயை தன்னுடையவர் ஆக்குவதற்காக முயற்சி செய்து கொண்டிருந்தாலும் கூட, நொடியில் ஒருமுகப்பட வேண்டும். இதுவே நினைவின் சக்தியாகும். எவ்வளவு தான் வீண்எண்ணங்களின் புயல் வரட்டும் ஆனால், நொடியில் புயல் முன்னேறுவதற்கான பரிசாகிவிடும். அத்தகைய கன்ட்ரோலிங்பவர் இருக்க வேண்டும். அத்தகைய சக்திசாலி ஆத்மா, விரும்பவில்லை, ஆனால் ஏற்பட்டுவிடுகிறது என்ற எண்ணத்தை ஒருபொழுதும் கொண்டு வரமாட்டார்கள்.சுலோகன்:

யோகயுக்த் மற்றும் யுக்தியுக்த் கர்மம் செய்யக்கூடியவர்கள் தான் தடைகளுக்கு இடம் கொடுக்காதவர் ஆக முடியும்.


***OM SHANTI***

Whatsapp Button works on Mobile Device only