12 March 2017

BK Murli 12 March 2017 Tamil

BK Murli 12 March 2017 Tamil


12.03.2017    காலை முரளி    ஓம் சாந்தி   அவ்யக்த பாப்தாதா,     ரிவைஸ்    09.03.1982    மதுபன்


''ஹோலி கொண்டாடுவதின் மற்றும் ஹோலி ஆக்குவதின் அலௌகீக (ஆன்மீக) முறை''


இன்று மிக உயர்ந்த தந்தை தன்னுடைய புனித அன்னப்பறவைகளைச் சந்திப்பதற்காக வந்திருக்கிறார். ஒவ்வொரு புனித அன்னப்பறவையின் புத்தியிலும் எப்பொழுதும் ஞானத்தின் முத்து, மாணிக்கம், இரத்தினம் நிரம்பியிருக்கிறது. அந்த மாதிரியான புனித அன்னப்பறவைகள் பாப்தாதாவிற்கும் முழுக் கல்பத்தில் ஒரு தடவை தான் கிடைக்கிறார்கள். அந்த மாதிரி விசேஷ புனித அன்னப்பறவைகளோடு முழு சங்கமயுகத்தில் பாப்தாதா ஹோலி கொண்டாடிக் கொண்டே இருக்கிறார். உலகத்து மனிதர்கள் வருடத்தில் ஓரிரு நாள் ஹோலிகொண்டாடுகிறார்கள். ஆனால் கொண்டாடுவதின் கூடவே இழக்கவும் செய்கிறார்கள்.மேலும் புனித அன்னப்பறவைகள் நீங்கள் கொண்டாடவும் செய்கிறீர்கள் என்றால் சம்பாதிக்கவும் செய்கிறீர்கள். இழப்பதில்லை. அனைத்து குழந்தைகளும் தூர இடங்களில் அமர்ந்திருந்தாலும் பாப்தாதாவுடன் ஹோலி கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். பாப்தாதாவிடம் பாரதம் மற்றும் வெளிநாட்டுக் குழந்தைகளின் உயர்ந்த அன்பின் எண்ணம் வந்து சேர்ந்து கொண்டிருக்கிறது. அனைத்து குழந்தைகளின் கண்கள் மற்றும் நெற்றியின் மூலமாக அன்பின் நீர் மிக அன்பு நிறைந்த நறுமணம் நிறைந்து பீச்சாங்குழல் மூலம் பீச்சி அடிக்கப்பட்டு வந்து கொண்டிருக்கிறது. பதிலுக்கு பாப்தாதாவும் அனைத்து குழந்தைகளுக்கும் கண்களின் மூலமாக அஷ்ட சக்தி அதாவது அஷ்ட வண்ணங்களின் பீச்சாங்குழல் மூலமாக விளையாடிக் கொண்டிருக்கிறார். எப்படி ஸ்தூல வண்ணங்கள் மூலமாக சிகப்பு வண்ணம் சிகப்பாக ஆக்கிவிடும். விதவிதமான வண்ணங்களினால் விதவித ரூபம் உருவாக்கி விடும். அதே போல் ஒவ்வொரு சக்தியின் ஆன்மீக வண்ணத்தின் மூலம் ஒவ்வொரு சக்தியின் சொரூபம் ஆகிவிடுகிறார்கள், ஒவ்வொரு குணமும் சொரூபம் ஆகிவிடுகிறது. திருஷ்டியின் மூலமாக ரூபம் பரிவர்த்தனை ஆகிவிடுகிறது என்று பாப்தாதா பார்க்கிறார். அந்த மாதிரி ஆன்மீக ஹோலிகொண்டாடுவதற்காக வந்திருக்கிறீர்கள் தான் இல்லையா?பாப்தாதா மலர்களின் மழை பொழிந்து ஹோலி கொண்டாடுவதற்குப் பதிலாக ஒவ்வொரு குழந்தையையும் நிரந்தரமாக அன்பு மூலமாக ஆன்மீக ரோஜா மலர் ஆக்கிவிடுகிறார். அவர்களே மலர் ஆகிவிடுகிறார்கள். அந்த மாதிரி ஹோலியை தந்தை மற்றும் குழந்தைகளைத் தவிர வேறு யாரும் கொண்டாட முடியாது. ஜென்மம் எடுத்தவுடனேயே தந்தை ஹோலி கொண்டாடி ஹோலி(தூய்மை) ஆக்கிவிட்டார். அப்படி அவர்கள் கொண்டாடுபவர்கள். மேலும் நீங்களோ நிரந்தரமாக 'ஹோலி' அதாவது தூய்மை ஆகுபவர்கள். எப்பொழுதும் ஒவ்வொரு குணத்தின் வண்ணம், ஒவ்வொரு சக்தியின் வண்ணம், அன்பின் வண்ணம் பூசப்பட்டு தான்இருக்கிறது. நீங்கள் அந்த மாதிரியான புனித அன்னப்பறவை தான் இல்லையா? திலகம் இடுவதற்கும் அவசியம் இல்லை நீங்கள் நிரந்தரமாக திலகம் இடப்பட்டவர்கள் தான். அழியாத திலகம் இடப்பட்டே தான் இருக்கிறது இல்லையா? அதை அழித்தாலும் கூட அழிக்க முடியாது. அற்ப காலத்திற்குப் பதிலாக சதா காலமும் கொண்டாடிக் கொண்டே இருக்கிறீர்கள். மேலும் மற்றவர்களையும் ஆக்கிக் கொண்டிருக்கிறீர்கள். அந்த மனிதர்களோ இனிமையாக சந்திப்பதற்காக ஒருவரோடு ஒருவர் கழுத்தைக் கட்டி அணைத்துக் கொள்வார்கள். ஆனால் புனித அன்னப்பறவை நீங்கள் பாப்தாதாவின் கழுத்தின் மாலையாகவே ஆகி விட்டீர்கள். நிரந்தரமாக கழுத்தின் மாலையாகி மின்னிக் கொண்டிருக்கும் இரத்தினம் உலகின் எதிரில் ஒளியைப் பரப்பிக் கொண்டிருக்கிறீர்கள். ஒவ்வொரு இரத்தினமும், ஆயிரம் பல்புகள் கூட பிரகாசம் தர முடியாத அளவிற்கு அந்த மாதிரி பிரகாசிக்கும் லைட் சொரூபம் ஆகிவிட வேண்டும். அந்த மாதிரி பிரகாசித்துக் கொண்டிருக்கும் இரத்தினம் நீங்கள் தன்னுடைய லைட், மைட் சொரூபத்தை தெரிந்திருக்கிறீர்கள் தான் இல்லையா.? முழு உலகத்தையும் இருளிலிருந்து வெளிச்சத்திற்குக் கொண்டு வரும் பிரகாசமாக இருக்கும் இரத்தினங்கள் நீங்கள்! பாப்தாதா அந்த மாதிரி புனித அன்னப்பறவைகளோடு விசேஷமான தினத்திற்கு ஏற்றபடி ஆன்மீக ஹோலியைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்.ஹோலியை எரிக்கவும் செய்தீர்கள் மற்றும் கொண்டாடவும் செய்தீர்கள். எரிப்பது மற்றும் கொண்டாடுவது இரண்டுமே தெரியும் தான் இல்லையா? எரித்த பிறகு தான் கொண்டாடுவது இருக்கும். எண்ணத்தின் தீக்குச்சியினால் தன்னைப் பற்றியும் அல்லது சேவையைப் பற்றியும் என்னென்ன வீணான எண்ணம் அதாவது பலஹீனமான எண்ணம் கொள்வதின் சம்ஸ்காரம் இருக்கிறதோ, அவை அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து தீக்குச்சியால் எரித்து விடுங்கள். இவற்றைத் தான் காய்ந்த மரக்குச்சிகள் என்று கூறுவது. அப்படி அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து ஒரு திட எண்ணம் என்ற தீக்குச்சியால் பற்ற வையுங்கள். ஆக, எரிப்பதும் ஆகிவிட்டது. எரிப்பது தான் கொண்டாடுவது மற்றும் ஆகுவது. தீக்குச்சியால் பற்ற வைக்கத் தெரியும் தான் இல்லையா? அப்படி எரியுங்கள் மற்றும் கொண்டாடுங்கள் என்றால், தன்னை நிரந்தரமான 'ஹோலி' அதாவது தூய்மை ஆக்குங்கள். தீக்குச்சியால் பற்ற வைக்கிறீர்கள். ஆனால் அது எரிவதே இல்லை என்று அப்படி இல்லையே.! தீக்குச்சி கூட தீப்பெட்டியின் சம்மந்தமின்றி எரியாது. அப்படி தந்தையுடன் தொடர்பு சம்மந்தம் இருந்தால், பயிற்சி என்ற தீக்குச்சியில் மருந்து சரியாக இருக்கிறது என்றால் தான் ஒரு நொடியில் எண்ணத்தை வைத்தீர்கள், மேலும் ஆனீர்கள். அப்படி அனைத்து சாதனமும் சரியாக வேண்டும். சம்மந்தமும் வேண்டும். பயிற்சியும் வேண்டும். சம்மந்தம் இருக்கிறது, ஆனால் பயிற்சி குறைவாக இருக்கிறது என்றால், கடும் உழைப்பிற்குப் பிறகு தான் வெற்றி கிடைக்கும். ஒரு நொடியில் எண்ணத்தின் சொரூபம் ஆக முடியாது. அடிக்கடி எண்ணத்தை வைத்து வைத்து கடுமையான உழைப்பிற்கு பிறகு வெற்றி கிடைக்கும். உங்கள் அனைவரின் கடின உழைப்பு அதாவது பக்தியின் காலம் முடிவடைந்து விட்டது தான் இல்லையா. பக்தியின் அர்த்தமே கடின உழைப்பு. பக்தியின் காலம் முடிவடைந்தது என்றால், கடின உழைப்பு முடிவடைந்தது. இப்பொழுது பக்தியின் பலனைப் பெறுவதற்கான நேரம். பக்தியின் பலன் 'ஞானம்' அதாவது அன்பே அன்றி கடின உழைப்பு இல்லை. 63 ஜென்மங்கள் கொஞ்சமோ அல்லது அதிகமோ கடின உழைப்பு செய்தீர்கள் ஆக, கடினமாக உழைப்போ செய்தீர்கள் தான் இல்லையா? இப்பொழுது இறுதி ஒரு ஜென்மத்தில் அன்பின் நேரத்தில் கூட கடின உழைப்பை செய்தீர்களா என்ன? இப்பொழுதோ எப்பொழுதும் தந்தையின் அன்பின் மூலமாக பழத்தை அருந்துங்கள் அதாவது எப்பொழுதும் நன்றாக வளர்ந்து கொண்டிருங்கள். பழத்தை அருந்துங்கள் என்றால், எப்பொழுதும் பயனடைந்தவராக இருங்கள். பழத்தை அருந்துவது என்றால் எப்பொழுதும் ஹோலிகொண்டாடுவது மற்றும் ஹோலி ஆகிவிடுவது. இப்பொழுது கடின உழைப்பு செய்வதின், யுத்தம் செய்வதின் சம்ஸ்காரத்தை முடிவு கட்டுங்கள். இப்பொழுதோ இராஜ்ய பாக்கியத்தை அடைந்து விட்டீர்கள். பிறகு ஏன் யுத்தம் செய்ய வேண்டும்? தேவ பதவியின் பாக்கியத்தையும் விட சிரேஷ்ட பாக்கியத்தையோ இப்பொழுது அடைந்திருக்கிறீர்கள். சுவ இராஜ்யத்தின் மகிழ்ச்சி உலகின் இராஜ்யத்தில் கூட இருக்காது. எனவே இராஜ்ய பாக்கியம் நிறைந்த ஆத்மாக்களே இப்பொழுதும் ஏன் யுத்தம் செய்கிறீர்கள்? எனவே கடின உழைப்பின் சம்ஸ்காரம், யுத்தம் செய்யும் சம்ஸ்காரம் மற்றும் எண்ணம் என்ற பழைய மரக்குச்சிகளுக்கு நெருப்பு வைத்து விடுங்கள். இந்த ஹோலியை எரிய வையுங்கள். பாப்தாதாவிற்கும் கூட குழந்தைகளின் கடினமாக உழைக்கும் சம்ஸ்காரத்தைப் பார்த்து இரக்கம் வருகிறது. இதுவரையிலும் கூட கடினமாக உழைக்கிறீர்கள் என்றால் பலன் என்ற பழத்தை எப்பொழுதும் அருந்தப் போகிறீர்கள்? அதற்காக கடின உழைப்பு செய்ய வேண்டியது இல்லை, அலட்சியமானவராகவும் ஆக வேண்டாம். அலட்சியமானவராக ஆகக்கூடாது, ஆனால் எப்பொழுதும் அன்பில் மூழ்கியிருக்க வேண்டும். அன்பின் ஐக்கியமாகி இருக்க வேண்டும். நினைத்தீர்கள் மற்றும் நடந்தது. அந்த மாதிரி பயிற்சி உள்ளவராக ஆகுங்கள். நீங்கள் மாஸ்டர் சர்வ சக்திவான் என்றால் எண்ணத்தை வைத்தீர்கள் மற்றும் அனுபவம் ஆனது அந்த மாதிரி சகஜ பயிற்சி உள்ளவராக ஆகுங்கள். சிரேஷ்ட எண்ணங்களின் பொக்கிஷத்தை சொரூபத்தில் கொண்டு வாருங்கள். ஏதாவது சிரேஷ்ட காரியம் செய்கிறீர்கள் என்றால் அலங்கரிக்கிறீர்கள் தான் இல்லையா? எப்படி நேற்று கூட அலங்காரம் செய்தீர்கள் இல்லையா? (நேற்று மதுபன்னில் ஐந்து கன்னியாக்களின் சமர்ப்பண விழா நடந்தது, அதில் அவர்கள் மிகவும் அலங்கரிக்கப்பட்டு இருந்தார்கள்). அலங்கரிக்கப்பட்ட ஆபரணங்கள் அணிந்த ரூபம் கூட நல்ல அடையாளம். அப்படி நீங்கள் எப்பொழுதும் சுப காரியத்தில் ஈடுபட்டிருக்கிறீர்கள் என்றால், எப்பொழுதும் குணங்களின் நகைகளால் அலங்கரிக்கப்பட்டு இருங்கள். புத்தி என்ற இரும்புப் பெட்டியில் பூட்டி மட்டும் வைக்காதீர்கள். எப்பொழுதும் குணங்களின் நனைககளினால் அலங்கரிக்கப்பட்ட மூர்த்தி, இது தான் 16 அலங்காரம் அதாவது 16 கலை சம்பூர்ணமான, சர்வ குண சம்பன்னமானவர் ஆகுங்கள். அந்த மாதிரி உயர்ந்ததிலும் உயர்ந்த தந்தையின் குழந்தைகள் நிரந்தரமான சுமங்கலிகள், நிரந்தரமான பாக்கியவான் ஆத்மாக்கள் அலங்கரிக்கப்படாமல் எப்படி இருக்க முடியும்? மாங்கல்யத்தின் அடையாளம் கூட அலங்காரம், மேலும் இராஜகுலத்தின் அடையாளமும் அலங்காரம். அப்படியானால் நீங்கள் யார்? இராஜாக்களுக்கெல்லாம் இராஜா ஆகக்கூடிய குலத்தைச் சேர்ந்தவர்கள். மேலும் நிரந்தர சுமங்கலிகள். எனவே எப்பொழுதும் குணங்களின் நகைகளினால் அலங்கரிக்கப்பட்ட ஆன்மீக மூர்த்தியாக ஆகுங்கள். அந்த மாதிரி ஹோலியைக் கொண்டாடினீர்களா?மதுபன்னில் ஹோலி கொண்டாடினீர்கள் தான் இல்லையா? நடனம் ஆடுவது, பாடுவது இது தான் கொண்டாடுவது. அப்படி எப்பொழுதும் பாடுகிறீர்கள், எப்பொழுதும் நடனம் ஆடுகிறீர்கள். மேலும் ஸ்தூலமாகவும் பாடினீர்கள் மற்றும் ஆடினீர்கள். கொண்டாடினீர்கள் இல்லையா? பாடவும் செய்தீர்கள், உணவு அருந்தவும் செய்தீர்கள். யோகாவும் செய்தீர்கள், போக் கூட சுவீகாரம் செய்வித்தீர்கள். மனமும் எப்பொழுதும் இனிமையானதாக, வாயும் எப்பொழுதும் இனிமையானதாக ஆனது. அப்படி ஹோலி கொண்டாடி ஆகிவிட்டது இல்லையா? இது ஒவ்வொரு கல்பத்தின் ஹோலிஆகும். மற்றபடி என்ன செய்வீர்கள்? சிகப்பு வர்ணத்தை பூசுவீர்களா? ரோஜா தண்ணீரை பீச்சுவீர்களா? நீங்களே ரோஜா ஆவீர்கள். மற்றபடி ஏதாவது விருப்பம் இன்னும் நிறைவேறாமல் இருந்து விட்டது என்றால் நாளை ரோஜா தண்ணீரைப் போட்டு விடுங்கள். வண்ணத்திலோ வண்ணமயமாக்கப்பட்டு இருக்கிறீர்கள். அந்த வண்ணத்தையோ அகற்ற வேண்டியதாக இருக்கும். மேலும் இந்த வண்ணமோ எவ்வளவு பூசப்பட்டு இருக்குமோ அந்த அளவு நல்லது.அந்த மாதிரி எப்பொழுதும் ஆன்மீக ரோஜா மலராக இருக்கும், எப்பொழுதும் ஞானத்தின் வர்ணத்தில் பூசப்பட்டிருக்கும், எப்பொழுதும் பிரபுவின் சந்திப்பை செய்யக்கூடிய, எப்பொழுதும் குணங்களின் நகைகளினால் அலங்கரிக்கப்பட்ட மூர்த்திக்கு, பாப்தாதாவின் நெருக்கமான மற்றும் சமமான இரத்தினங்களுக்கு, தூர இடங்களில் இருந்தாலும் அல்லது நேரெதிரில் இருந்தாலும், அனைத்து புனித அன்னப்பறவைகளுக்கும் பாப்தாதா அழியாத ஹோலி ஆனதின் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறார். கூடவே, அன்பில் ஐக்கியமாகி இருக்கும் அனைத்து ஆத்மாக்களுக்கு மேலும் மிக உயர்ந்த ஆத்மாக்களுக்கு, அவர்களின் அன்பிற்குப் பிரதிபலனாக அன்பு நினைவுகளை கொடுப்பதுடன் நமஸ்காரம்.குஜராத் பார்ட்டியுடன் சந்திப்பு -

நீங்கள் அனைவரும் மிகப் பெரிய வியாபாரிகள் தான் இல்லையா? உலகத்தில் யாரும் இவ்வளவு பெரிய வியாபாரம் செய்ய முடியாது. யார் திறமை நிறைந்த வியாபாரியாக இருப்பார்களோ அவர்கள் வருமானத்தை அதிகரித்துக் கொண்டே இருப்பார்கள். உலகத்தில் எப்பொழுது வருமானம் அதிகரிக்கிறது என்றால், ஒவ்வொரு புள்ளி (பூஜ்யம்) வைத்துக் கொண்டே இருப்பார்கள். நீங்களும் புள்ளியிட வேண்டும். நானும் புள்ளி, தந்தையும் புள்ளி. நீங்கள் மிகப் பெரிய வியாபாரி, ஆனால் இட வேண்டும் புள்ளி. 6 அல்லது 8-ஐ எழுதுவதில் கடினம் இருக்கலாம், ஆனால் புள்ளியையோ அனைவரும் இட முடியும். இது சகஜமும் தான் மேலும் உயர்ந்ததும் கூட. முழு நாளில் எத்தனை புள்ளி இடுகிறீர்கள்? எப்பொழுது கேள்வி எழுகிறதோ அப்போது புள்ளி அகன்று விடுகிறது. புள்ளி இல்லாமல் கேள்வியும் இருப்பதில்லை. அப்படி புள்ளி இடுவதில் அனைவரும் திறமை நிறைந்தவர்கள் தான் இல்லையா? புள்ளியிடுவதில் நேரமும் எடுப்பதில்லை. நானும் புள்ளி, பாபாவும் புள்ளி. இதற்காக எனக்கு நேரமே இல்லை என்று யாரும் சொல்ல முடியாது. ஒரு நொடிக்கான விஷயம். அப்படி எவ்வளவு விநாடி கிடைத்ததோ அந்த அளவு புள்ளி இடுங்கள். பிறகு எத்தனை புள்ளி இட்டிருக்கிறேன் என்று இரவில் எண்ணுங்கள். எந்த விஷயத்தையும் யோசிக்காதீர்கள், எந்த விஷயத்தை அதிகமாக யோசிப்பீர்களோ அது அதிகமாக வளர்கிறது. அனைத்து யோசிப்பதையும் விட்டு விட்டு ஒரு தந்தையை நினைவு செய்யுங்கள், இதுவே ஆசீர்வாதம் ஆகிவிடும். நினைவில் மிகுந்த லாபம் நிரம்பியிருக்கிறது – எந்த அளவு நினைவு செய்வீர்களோ அந்த அளவு சக்தி நிரம்பிக் கொண்டே இருக்கும், சகயோகமும் கிடைக்கும், மேலும் சேவையும் ஆகிவிடும். நல்லது.வருடாந்திர கூட்டத்திற்காக பாப்தாதாவின் பிரேரணை -

கூட்டத்தில் (மீட்டிங்கில்) ஏதாவது புதுமையையோ கொண்டு வருவீர்கள் தான் இல்லையா? ஆனால் ஒரு விசேஷ கவனம் வைக்க வேண்டும். இப்பொழுது இதைப் பற்றி பாப்தாதா ஏற்கனவே சமிக்ஞையும் கொடுத்திருக்கிறார். ஒவ்வொரு மண்டலமும் தன்னுடைய சேவையில் சகயோகி, தொடர்பில் இருக்கக்கூடியவர்கள் யார் சேவைக்கு பொறுப்பாளராக ஆகுபவர்களோ, அந்த மாதிரியானவர்களின் மலர்ச்செண்டை தயார் செய்து மதுபன்னிற்கு அழைத்து வாருங்கள். எந்த துறையைச் சேர்ந்தவராக இருந்தாலும், ஆனால் அவ்வப்பொழுது சகயோகி ஆவதற்கு பொறுப்பாக இருப்பவராக, அந்த மாதிரி விசேஷ ஆத்மாவாக இருக்க வேண்டும். அந்த மாதிரி சேவை செய்விப்பதற்காக பொறுப்பாளர் ஆகியிருக்கும் ஆத்மாக்களை எதிரில் கொண்டு வாருங்கள். பாப்தாதாவின் எதிரில் இல்லை, அவர்களுடைய குரூப்பை உருவாக்கி முதலில் மதுபன்னிற்கு அழைத்து வாருங்கள். பிறகு அவர்கள் எந்த அளவு முன்னேறிச் செல்வார்களோ அந்த அளவு அருகில் வருவார்கள். எனவே இந்த விஷயத்தின் மேல் விசேஷ கவனம் கொடுத்து நாலாபுறங்களிலும் பாரதம் மற்றும் வெளிநாடு, அனைத்து தரப்பிலிருந்தும் குரூப்பை எதிரில் கொண்டு வர வேண்டும். அனைவரும் செய்து கொண்டிருப்பீர்கள். ஆனால் எதிரில் வர வேண்டும். அந்த குரூப் மூலமாக உங்களுடைய சேவை இன்னும் அதிகமாக அதிகரிக்கும். ஏனென்றால் கூட்டத்தில் வருவதினால் அவர்களுக்கு பலம் கிடைக்கும். குடும்பத்து உறுப்பினராக அனுபவம் செய்து கொண்டே இருப்பார்கள். மேலும் கூடவே மனம் மூலம் செய்யும் சேவையின் மேல் உங்களுக்குள் விசேஷமாக குரூப்பை உருவாக்கி ஒன்று அதைத் தெளிவுபடுத்துங்கள் மற்றும் இன்னொன்று அந்த குரூப் அவ்வப்பொழுது அவர்களுக்குள் சந்தித்து மனசேவையின் வளர்ச்சிக்கான திட்டத்தை உருவாக்கவேண்டும். ரிசல்ட் கொடுக்க வேண்டும். ஏனென்றால், நேரத்திற்கு ஏற்றபடி, சூழ்நிலைக்கு ஏற்றபடி இப்பொழுது மனசேவைக்கு மிக மிக அவசியம் இருக்கிறது. எப்படி நீங்கள் பலவிதமான துறைகளையோ (விங்) உருவாக்கியிருக்கிறீர்கள், ஆனால் ஒவ்வொரு துறையிலிருந்தும் அந்த மாதிரி சகயோகி குரூப் தயாராக வேண்டும். நாம் இது வரை என்னென்ன சேவை செய்திருக்கிறோம், எத்தனை பேர்களை பரிவர்த்தனையில் (மாற்றத்தில்) கொண்டு வந்திருக்கிறோம், ஒவ்வொரு துறையிலிருந்தும் (விங்ஸ்) நடைமுறையில் என்ன ரிசல்ட் கிடைத்தது என்பதை அவர்கள் அரசாங்கத்தின் முன் கொண்டு செல்ல வேண்டும். அப்பொழுது இவர்கள் அனைத்து விதமான சேவை செய்பவர்கள் என்று அரசாங்கமும் உங்களைப் புரிந்து கொள்ளும். இவர்கள் மத சம்மந்தப்பட்ட சேவைகளும் மட்டுமின்றி அனைத்து விதமான சேவை செய்பவர்கள் என்று புரிந்து கொள்ள வேண்டும். என்னென்ன சேவை செய்கிறீர்களோ அதை அரசாங்கத்திற்கு தெரியப்படுத்துங்கள். பிறகு அரசாங்கம் அதன் முடிவைப் பார்த்து நீங்கள் இந்தக் காரியத்தில் சகயோகம் செய்பவராக ஆகுங்கள் என்று அவர்களே முன்னுக்கு வந்து வாய்ப்பு அளிப்பார்கள். இப்பொழுது அரசாங்கத்தின் முன்பு நீங்கள் செய்த சேவையின் நடைமுறை வரைபடம் வரவில்லை. சேவை அதிகமாக செய்கிறீர்கள், ஆனால் அனைவரின் கண்களும் திறக்க வேண்டும், தொலைக்காட்சியில், செய்தித்தாள்களில், பிரம்மா குமாரிகள் அவர்கள் செய்த இந்த இந்த சேவைகளின் முடிவுகளை அரசாங்கத்தின் எதிரில் கொண்டு வந்திருக்கிறார்கள் என்ற செய்தி வர வேண்டும். எனவே நடைமுறை விளைவுகளை, முடிவுகளை எடுத்துக் காண்பியுங்கள். இந்த சின்ன சின்ன தடைகள் அனைத்தும் அகன்று விடும். இதுவரையிலும் மக்கள் இது ஒரு மதச்சார்பான இயக்கம் என்று நினைக்கிறார்கள். சமூக சேவை செய்பவர்களும் தான், கல்வி கற்றுக் கொடுக்கும் இயக்கமும் தான், மேலும் அனைத்து துறையினருக்கும் சேவைக்கு பொறுப்பாளர்களாகவும் இருக்கிறார்கள், முழு உலகத்தில் உள்ள அனேக விதமான துறைகளைச் சேர்ந்தவர்களையும் பரிவர்த்தனை செய்யக் கூடியவர்கள் தான், இத்தனை நபர்களை குடிப்பழக்கத்திலிருந்து விடுவித்திருக்கிறார்கள், உடல் ஆரோக்கியத்திற்கான நிகழ்ச்சிகள் செய்கிறீர்கள். அப்படி இந்த அனைத்து சேவைகளின் ரிசல்ட் அரசாங்கத்தின் எதிரில் எங்கே வந்திருக்கிறது? ஒரு செய்தியாக நிருபர்கள் செய்தித்தாளில் அச்சடிப்பார்கள். இதன் மூலம் தெரியவருவதில்லை. நடைமுறையில் மேடையில் வருவதற்கான திட்டத்தை உருவாக்குங்கள். நிகழ்ச்சிகள் செய்யுங்கள், படவிளக்கக் கண்காட்சிகள் செய்யுங்கள், மிக அதிகமாக சேவை செய்யுங்கள், ஆனால் செய்த சேவையின் ரிசல்ட் அனைவரின் பார்வையில் வர வேண்டும். எந்த அளவு நீங்கள் சேவை செய்கிறீர்களோ, மேலும் எந்த அளவு அதன் ரிசல்ட் கிடைக்கிறதோ அதன் அனுசாரம் வேறு எந்த இயக்கமும் இந்த அளவு சேவை செய்வதில்லை. பலவிதமான துறைகளில், பல கிராமங்களில், செலவின்றி உள்ளப்பூர்வமாக மிக அன்போடு சேவை செய்கிறீர்கள். ஆனால் இவை அனைத்தும் வெளியில் தெரியாமல் இருக்கிறது. புரிந்ததா? அனைத்தையும் தெரிந்தவர் தான் நீஙகள். அதனால் தான் மீட்டிங்கில் வருகிறீர்கள். நல்லது.வரதானம் :

நான், எனது என்ற அதிகாரத்தை அகற்றி கோபம் மற்றும் அபிமானத்தின் மேல் வெற்றி அடையக்கூடிய கர்ம பந்தனத்திலிருந்து விடுபட்டவர் ஆகுக !எப்பொழுது இது ஏன் செய்தீர்கள், இது என்னுடையது என்று நான், எனது என்ற அதிகாரத்தை வைக்கிறீர்கள் என்றால் கோபம், அபிமானம் அல்லது பற்றுதல் வருகிறது. ஆனால் இவர்கள் சேவையில் எனது துணைவர்கள் எனக்கு இவர்கள் மேல் எந்த அதிகாரமும் கிடையாது என்றிருக்க வேண்டும். எப்பொழுது என்னுடையது என்பது இல்லை என்றால், கோபம், பற்றுதலின் கர்ம பந்தனமும் இல்லை. எனவே கர்ம பந்தனங்களில்ருந்து விடுபடுவதற்காக ஒரு தந்தையை தன்னுடைய உலகமாக ஆக்கிக் கொள்ளுங்கள். 'ஒரு தந்தையைத் தவிர வேறு யாரும் இல்லை' என்று அப்படி ஒரு தந்தையே உலகம் ஆகிவிட்டார் என்றால் எந்த ஈர்ப்பும் இல்லை, எந்த பலஹீனமான சம்ஸ்காரங்களின் பந்தனமும் இல்லை. அனைத்து எனது, எனது என்பது எனது தந்தையில் அடங்கிவிடுகிறது.சுலோகன் :

யார் நேரத்திற்கு ஏற்றபடி ஒவ்வொரு குணத்தை, ஒவ்வொரு சக்தியை காரியத்தில் ஈடுபடுத்துகிறாரோ அவர் தான் மாஸ்டர் சர்வ சக்திவான்.


***OM SHANTI***

Whatsapp Button works on Mobile Device only