15 March 2017

BK Murli 16 March 2017 Tamil

BK Murli 16 March 2017 Tamil

16.03.2017    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


இனிமையான குழந்தைகளே, எந்த அளவு அன்போடு யக்ஞ சேவை செய்வீர்களோ அந்த அளவு வருமானம் ஏற்படும், சேவை செய்து கொண்டே இருந்தால் நீங்கள் பந்தனங்களிலிருந்து விடுபட்டுவிடுவீர்கள், வருமானம் சேமிப்பாகி விடும்.

 

கேள்வி:

தன்னை எப்போதும் மகிழ்ச்சியாய் வைத்துக் கொள்வதற்கு எந்த யுக்தியை கையாள வேண்டும்?

 

பதில்:

தன்னை சேவையில் தொடர்ந்து (பிஸியாக) ஈடுபாடு வைத்தீர்கள் என்றால் எப்போதும் மகிழ்ச்சி இருக்கும். வருமானம் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். சேவைக்கான நேரத்தில் ஓய்வு எடுக்கும் எண்ணமே வரக்கூடாது. எந்த அளவு சேவை கிடைக்கிறதோ அந்த அளவு மகிழ்ச்சி அடைய வேண்டும். நேர்மையானவராகி அன்போடு சேவை செய்யுங்கள். சேவை செய்வதுடன் கூடவே இனிமையானவராகவும் ஆக வேண்டும். எந்த அவகுணமும் குழந்தைகளாகிய உங்களிடம் இருக்கக்கூடாது.

 

பாடல்:

நேரம் கடந்து சென்று கொண்டிருக்கிறது. . .

 

ஓம் சாந்தி.

இதை யார் சொன்னது? தந்தை குழந்தைகளிடம் சொன்னார். இது எல்லைக்கப்பாற்பட்ட விஷயமாகும். மனிதர்கள் வயதாகி விடும்போது இப்போது நிறைய காலம் போய் விட்டது, இன்னும் கொஞ்சகாலமே மிகுந்திருக்கிறது, ஏதேனும் நல்ல காரியம் செய்வோம் என நினைக்கின்றனர். ஆகையால் வானபிரஸ்த நிலையில் சத்சங்கங்களுக்குச் செல்கின்றனர். குடும்பத்தில் இருந்து நிறைய செய்து விட்டதாக புரிந்து கொள்கின்றனர். இப்போது சிறிது நல்ல காரியம் செய்வோம் என நினைக்கின்றனர். வானபிரஸ்தம் என்றாலே விகாரங்களை விட்டு விடுவதாகும். வீடு வாசல் என்ற சம்மந்தத்தை விட்டு விட வேண்டும். ஆகையால்தான் சத்சங்கங்களுக்குச் செல்கின்றனர். சத்யுகத்தில் இது போன்ற விஷயங்கள் இருப்பதில்லை. மீதம் சிறிது காலம் தான் இருக்கிறது, பிறவி பிறவிகளின் சுமை தலை மீதுள்ளது. இப்போதே தந்தையிடமிருந்து ஆஸ்தி பெற்றுக்கொள்ளுங்கள். அந்த மனிதர்கள் சாது சன்னியாசிகளிடம் போகின்றனர், ஆனால் யோகம் செய்து அடையக்கூடிய இலட்சியம் எதுவும் கிடைப்பதில்லை. மற்றபடி பாவம் குறைகிறது. விகாரங்கள் மூலம் பெரிய பாவம் நடக்கிறது. தொழில் போன்றவைகளை விட்டு விடுகின்றனர். இன்றைய காலத்தில் தமோபிரதான நிலை இருக்கிறது, ஆகையால் விகாரங்களை விடுவதில்லை. 70-80 வருடங்கள் ஆனாலும் குழங்தைகள் பெற்றுக் கொள்கின்றனர். இப்போது இந்த இராவண இராஜ்யம் முடியவுள்ளது என பாபா சொல்கிறார். நேரம் மிகக் குறைவாக உள்ளது. ஆகையால் தந்தையிடம் புத்தியின் தொடர்பை ஈடுபடுத்திக் கொண்டே இருங்கள் மற்றும் சுயதரிசன சக்கரத்தை சுற்றிக் கொண்டே இருங்கள். திரும்பிச் செல்வதற்கு கொஞ்ச நாட்களே உள்ளன. தலையின் மீது பாவங்களின் சுமை உள்ளது, ஆகையால் எவ்வளவு முடியுமோ நேரத்தை ஒதுக்கி என்னை நினைவு செய்யுங்கள். தொழில் போன்ற காரியங்களை செய்துதான் ஆக வேண்டும். ஏனென்றால் நீங்கள் கர்மயோகிகள். 8 மணி நேரத்தை இதில் ஈடுபடுத்த வேண்டும்.அந்த நிலை கூட கடைசியில் ஏற்படும். வயதானவர்கள்தான் நினைவு செய்ய வேண்டும் என நினைக்காதீர்கள். அனைவருடைய மரணமும் அருகாமையில் இருக்கிறது. இந்த கல்வி அனைவருக்கும் பொதுவானதாகும். சிறிய குழந்தைகளுக்கும் புரிய வைக்க வேண்டும். ஆத்மாக்களாகிய நாம் பரமதாமத்திலிருந்து வந்திருக்கிறோம். முற்றிலும் சகஜமான விசயம். குடும்பத்தையும் பராமரிக்க வேண்டும். குடும்ப விவகாரங்களில் இருந்தபடியே படிப்பை படிக்க வேண்டும். சேவாதாரியாக இருப்பதால் பந்தனம் தானாக விலகிவிடும். வீட்டிலிருப்பவர்கள், தாமே சொல்வார்கள் - நீங்கள் நன்றாக சேவை செய்யுங்கள். நாங்கள் குழந்தைகளைப் பார்த்துக் கொள்கிறோம் அல்லது வேலைக்கு ஆள் வைக்கிறோம் என்று. இதில் அவர்களுக்கும் லாபம் உண்டாகிறது. வீட்டில் 5, 6 குழந்தைகள் இருக்கின்றனர் என வைத்துக் கொள்வோம், நாம் ஈஸ்வரிய சேவை செய்வோம் என மனைவி விரும்புகிறார் மற்றும் நல்ல சேவாதாரியாகவும் இருக்கிறார் என்றால் குழந்தைகளுக்காக வேலைக்கு ஆள் வைத்துக் கொள்ளலாம். ஏனெனில் இதில் தனக்கும் நன்மை மற்றவர்களுக்கும் நன்மை ஏற்படும். இரண்டு பேரும் சேவையில் ஈடுபட முடியும். சேவைக்கான வழிகள் நிறைய உள்ளன. காலை மற்றும் மாலையில் சேவை செய்யலாம். பகலில் மாதர்களின் வகுப்பு கண்டிப்பாக இருக்க வேண்டும். பிரம்மா குமார் - குமாரிகள் சேவையின் நேரத்தில் தூங்கக் கூடாது. சில பெண் குழந்தைகள் யுக்தியுடன் நேரத்தை ஒதுக்குகின்றனர். பகல் யாரும் வரக் கூடாது என நினைக்கின்றனர். வியாபாரிகள் மற்றும் வேலை செய்பவர்கள் பகலில் உறங்குவதில்லை. இங்கே எந்த அளவு பாபாவின் யக்ஞத்தில் சேவை செய்கிறீர்களோ அந்த அளவு வருமானமே வருமானம் ஆகும். மிகுந்த லாபம் உள்ளது. முழு நாளும் சேவையில் பிஸியாக இருக்க வேண்டும். கண்காட்சியில் மிகவும் பிஸியாக இருக்கின்றனர். குழந்தைகள் சொல்கின்றனர் - பாபா பேசிப் பேசி தொண்டை வற்றி விட்டது (கர கரப்பு), ஏனென்றால் சேவை திடீரென்று வந்து விட்டது. எப்போதும் அவ்வளவு சேவை செய்பவர்களாக இருந்தால் தொண்டைவற்றிப் போகாது. பழக்கம் ஏற்பட்டு விட்டால் பிறகு சோர்வு ஏற்படாது. அனைவரும் ஒரே மாதிரி இருப்பதில்லை. சிலர் மிகவும் நேர்மையாக இருக்கின்றனர். எந்த அளவு சேவை கிடைக்கிறதோ அந்த அளவு மகிழ்ச்சி ஏற்படுகிறது. ஏனெனில் யார் நன்றாக சேவையில் ஈடுபட்டிருக்கின்றனரோ அவர்களுக்கு பிரதிபலனாக வருமானம் கிடைக்கிறது. நீங்கள் மிகவும் இனிமையானவர்களாக ஆக வேண்டும், அவகுணங்களை நீக்க வேண்டும். அனைத்து குணங்ளும் நிறைந்தவர் என ஸ்ரீகிருஷ்ணரின் மகிமை பாடப்படுகிறது. இங்கே அனைவருக்குள்ளும் அசுர குணங்கள் உள்ளன. எந்த ஒரு குறையும் இருக்கக் கூடாது, அந்த அளவு இனிமையானவராக ஆக வேண்டும். எப்போது சேவை செய்வார்களோ அப்போதுதான் தகுதியானவர்களாக ஆவார்கள். எங்கே வேண்டுமானாலும் சென்று சேவை செய்ய வேண்டும். இராவணனின் சங்கிலியிலிருந்து அனைவரையும் விடுவிக்க வேண்டும். முதலில் தன்னுடைய வாழ்க்கையை உருவாக்க வேண்டும். நாமே எதுவும் செய்யாமல் அமர்ந்து விட்டால் நமக்கு நஷ்டம் ஏற்படும். முதலில் இதுதான் ஆன்மீக சேவையாகும். யாருக்கேனும் நன்மை செய்வோம், நோயற்றவர்களாக, செல்வந்தர்களாக மற்றும் ஆயுள் நிறைந்தவர்களாக ஆக்குவோம் என்ற சிந்தனை முழு நாளும் ஓட வேண்டும். அந்தக் குழந்தைகள்தான் மனதில் இடம் பெறுகிறார்கள் மற்றும் சிம்மாசனதாரியாக ஆகிறார்கள். முதலில் தந்தையின் அறிமுகத்தைக் கொடுக்க வேண்டும். தந்தை சொர்க்கத்தை படைக்கக் கூடியவர், அவரைத் தெரிந்திருக்கிறீர்களா? பரமபிதா பரமாத்மாவுக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம்? தந்தையின் அறிமுகம் கொடுக்கும்போது தந்தையின் மீது அன்பு ஏற்படும். பாபா சொல்கிறார் - நான் கல்பத்தின் சங்கமயுகத்தில் வந்து நரகத்தை சொர்க்கமாக்குகிறேன். கிருஷ்ணர் இப்படி சொல்ல முடியாது. அவரோ சொர்க்கத்தின் இளவரசர் ஆவார். உருவத்தை மாற்றிக் கொண்டே செல்கிறார். மரத்தைப் பற்றி புரிய வைக்கும்போது தூய்மையற்ற உலகத்தின் மேலே பிரம்மா நின்று கொண்டிருக்கிறார் என்பதை சொல்ல வேண்டும். அவர் தூய்மையற்றவர், கீழே தபஸ் செய்து கொண்டிருக்கிறார். பிரம்மாவின் வம்சாவளியும் உள்ளது. பரமபிதா பரமாத்மாதான் வந்து தூய்மையற்றவர்களை தூய்மையாக்குகிறார். தூய்மையற்றவர்கள் பிறகு தூய்மையாகின்றனர். கிருஷ்ணரைக் கூட சியாம் சுந்தர் என சொல்கிறார்கள். ஆனால் அர்த்தத்தைப் புரிந்து கொள்வதில்லை. இவர் தூய்மையற்றவர் என நீங்கள் புரிய வைக்க முடியும். உண்மையான பெயர் பிரம்மா அல்ல - எப்படி உங்கள் அனைவரின் பெயர் எல்லாம் மாறியதோ அது போல பாபா இவரையும் கூட தத்தெடுத்திருக்கிறார். இல்லாவிட்டால் சிவபாபா பிரம்மாவை எங்கிருந்து கொண்டு வந்தார்? மனைவி கிடையாது. கண்டிப்பாக தத்தெடுத்தார். நான் இவருக்குள்தான் பிரவேசமாக வேண்டும் என தந்தை சொல்கிறார். பிரஜாபிதா மேலே இருக்க முடியாது, இங்கே தேவைப்படுகிறார். முதலில் இந்த நிச்சயம் இருக்க வேண்டும். நான் சாதாரண உடலில் வருகிறேன். கோ சாலை என்ற பெயர் இருப்பதால் காளை மற்றும் பசுக்களை காட்டுகின்றனர். இப்போது பசுவுக்கு ஞானம் கொடுத்தாரா அல்லது பசுவை மேய்த்தாரா என எழுதவில்லை. படங்களில் ஸ்ரீகிருஷ்ணரை மாடு மேய்ப்பவராக ஆக்கி விட்டனர். இது போன்ற விஷயங்கள் இந்த தர்மத்தில் இருக்கும் அளவு வேறு தர்மங்களில் இல்லை.இவை அனைத்தும் பக்தி மார்க்கத்தில் பதிவாகியுள்ளன. பழைய உலகத்தின் வினாசமும் புதிய உலகத்தின் ஸ்தாபனையும் இப்போது நடந்து கொண்டிருக்கிறது என குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். இந்த சிருஷ்டி சக்கரத்தை அறிவதன் மூலமே நீங்கள் எதிர்கால இளவரசன் - இளவரசி ஆவீர்கள் என பாபா புரிய வைக்கிறார். அமரலோகத்தில் உயர் பதவியை அடைவீர்கள். நீங்கள் படிப்பவை அனைத்தும் எதிர்கால புதிய உலகத்திற்காக ஆகும். நீங்கள் இந்த பழைய சரீரத்தை விட்டு அரச குடும்பம் அல்லது செல்வந்தர்களின் வீட்டில் பிறவி எடுப்பீர்கள். முதலில் குழந்தையாக இருப்பீர்கள், பிறகு பெரியவர்களாக ஆகும்போது முதல் தரமான மாளிகைகள் கட்டுவீர்கள். ததத்வம் (நானே அது, அதுவே நான்). எப்படி இந்த மம்மா பாபா நல்ல விதமாக படிக்கின்றனரோ அதுபோல நீங்களும் படித்தீர்கள் என்றால் உயர் பதவியை அடைவீர்கள் என சிவபாபா சொல்கிறார். இரவில் (அமிர்தவேளை) விழித்திருந்து மனன சிந்தனை செய்தீர்கள் என்றால் குஷியில் வந்து விடுவீர்கள். அந்த சமயம்தான் குஷியின் அளவு ஏறுகிறது. பகல் வேலை தொழில் முதலானவற்றின் பந்தனம் உள்ளது. இரவில் பந்தனம் எதுவும் கிடையாது. இரவில் பாபாவை நினைவு செய்து உறங்கினீர்கள் என்றால் அதிகாலை பாபா வந்து கட்டிலை அசைப்பார் (எழுப்புவதற்காக). இப்படிப்பட்ட அனுபவங்களையும் கூட எழுதுகின்றனர். தைரியம் குழந்தைகளுடையது, உதவி தந்தையுடையது இருக்கவே இருக்கிறது. தன் மீது மிகவும் கவனம் வையுங்கள். சன்னியாசிகளின் தர்மம் தனியானது. எந்த தர்மத்திற்கு எத்தனை பிரிவுகள் இருக்குமோ அவ்வளவுதான் உருவாகும். யார் மற்ற தர்மங்களுக்கு மாற்றமடைந்து சென்றிருப்பார்களோ அவர்கள் மீண்டும் தமது தர்மத்திற்கு வந்து விடுவார்கள். சன்னியாச தர்மத்தில் ஒன்று அல்லது இரண்டு கோடி நடிகர்கள் இருக்கிறார்கள் என வைத்துக் கொள்ளுங்கள், அவர்கள்தான் மீண்டும் இருப்பார்கள். இந்த நாடகம் மிகவும் துல்யமாக உருவாகியுள்ளது. சிலர் ஒரு தர்மத்திலும், ஒரு சிலர் வேறு ஒரு தர்மத்திலும் மதமாற்றம் அடைந்து சென்றுவிட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் தத்தமது தர்மங்களுக்குச் சென்று விடுவார்கள். இந்த ஞானம் புத்தியில் பதிய வேண்டும்.

 

நாம் ஆத்மாவாக இருக்கிறோம், சிவபாபாவின் வாரிசு குழந்தைகளாக இருக்கிறோம், இந்த முழு உலகமும் என்னுடையது என இப்போது நாம் சொல்கிறோம். நாம் படைப்பவராகிய சிவபாபாவின் குழந்தைகளாக ஆகியுள்ளோம். நாம் உலகின் எஜமானர்கள். இது புத்தியில் வர வேண்டும், அப்போது அளவற்ற குஷி இருக்கும். மற்றவர்களுக்கும் குஷி இருக்க வேண்டும், வழி காட்ட வேண்டும். இரக்க மனமுள்ளவராக ஆக வேண்டும். எந்த ஊரில் இருக்கிறீர்களோ அங்கும் கூட சேவை செய்ய வேண்டும். அனைவருக்கும் அழைப்பு கொடுக்க வேண்டும், தந்தையின் அறிமுகத்தைக் கொடுக்க வேண்டும். அதிகம் புரிந்து கொள்ள விரும்புகிறீர்கள் என்றால் இந்த சிருஷ்டி சக்கரம் எப்படி சுற்றுகிறது என்பதையும் உங்களுக்குப் புரிய வைக்கிறோம் என சொல்லுங்கள். சேவை நிறைய இருக்கிறது. ஆனால் நல்ல நல்ல குழந்தைகளுக்கும் அவ்வப்போது கிரகச்சாரம் வந்து விடுகிறது, புரிய வைக்க ஆர்வம் இருப்பதில்லை. இல்லாவிட்டால் பாபாவுக்கு எழுத வேண்டும் – பாபா சேவை செய்தேன், அதனுடைய விளைவாக இவர் வெளிப்பட்டார், இப்படி இப்படியெல்லாம் புரிய வைத்தேன். அப்போது, பாபாவும் கூட மகிழ்ச்சி அடைவார். இவருக்கு சேவையின் ஆர்வம் உள்ளது என புரிந்து கொள்வார். சில சமயம் கோவில்களில், சில சமயம் சுடுகாட்டில், சில சமயம் சர்ச்சில் புகுந்து விட வேண்டும். இறைத்தந்தையுடன் உங்களுக்கு என்ன உறவு? என கேட்க வேண்டும். தந்தை எனும்போது வாயின் மூலம் சொல்ல வேண்டும் - நாங்கள் குழந்தைகள். சொர்க்கத்தின் இறைத் தந்தை என சொல்கின்றனர் எனும்போது கண்டிப்பாக சொர்க்கத்தை படைப்பார். எவ்வளவு சகஜமானது. போகப் போக நிறைய ஆபத்துக்கள் ஏற்படவுள்ளன. மனிதர்களுக்கு வைராக்கியம் ஏற்படும். மயானத்தில் மனிதர்களுக்கு வைராக்கியம் உண்டாகும். அவ்வளவுதான், உலகின் நிலை இப்படி ஆகப் போகிறது. இதைவிட பகவானை அடைவதற்கான வழியை ஏன் பிடித்துக் கொள்ளக் கூடாது? பிறகு குரு முதலானவர்களிடம் சென்று இந்த பந்தனங்களிலிருந்து விடுபடுவதற்கான வழி சொல்லுங்கள் என கேட்கின்றனர்.

 

நீங்கள் உங்களின் குழந்தைகள் முதலானவர்களை பார்த்துக் கொள்ளவும் வேண்டும், சேவையும் செய்ய வேண்டும். மம்மா பாபாவைப் பாருங்கள், எவ்வளவு குழந்தைகள் இருக்கின்றனர். இது எல்லைக்குட்பட்ட இல்லற விஷயம், இந்த பாபாவோ எல்லைக்கப்பாற்பட்ட எஜமான் ஆவார். எல்லைக்கப்பாற்பட்ட சகோதர சகோதரிகளுக்குப் புரிய வைக்கிறார். இது அனைவருக்கும் கடைசி பிறவி ஆகும். தந்தை வைரத்திற்குச் சமமாக ஆக்குவதற்காக வந்துள்ளார். பிறகு நீங்கள் சோழிகளுக்குப் பின்னால் ஏன் அலைகிறீர்கள்? காலையும் மாலையும் வைரத்திற்குச் சமமாக ஆவதற்கான சேவை செய்யுங்கள். பகலில் சோழிகளின் தொழிலை செய்யுங்கள். சேவையில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு அடிக்கடி பாபா புத்தியில் நினைவுக்கு வந்து கொண்டே இருப்பார், பழக்கம் ஏற்பட்டு விடும். யாரிடம் வேலை செய்வார்களோ, அவர்களுக்கும் கூட இலட்சியத்தை கூறியபடி இருப்பார்கள். ஆனால் கோடியில் சிலர்தான் வெளிப்படுவார்கள். இன்றில்லாவிட்டால் நாளை இன்ன நண்பர் எனக்கு இந்த விஷயத்தை சொல்லியிருந்தார் என நினைத்துக் கொள்வார்கள். பதவி அடைய வேண்டும் என்றால் தைரியம் தேவை. பாரதத்தின் சகஜ யோகம் மற்றும் ஞானம் புகழ் வாய்ந்ததாகும். ஆனால் என்னவாக இருந்தோம், எப்படி இருந்தோம் என்பது தெரியாது. இந்த பண்டிகை முதலானவை அனைத்தும் சங்கமயுகத்தினுடையதாகும். சத்யுகத்திலோ இராஜ்யம் இருக்கவே செய்கிறது. வரலாறு அனைத்தும் சங்கமத் தினுடையதாகும். சத்யுகத்தின் தேவதைகளுக்கு இராஜ்யம் எங்கிருந்து கிடைத்தது என்பதும் கூட இப்போதுதான் தெரிந்துள்ளது. யார் எவ்வளவு சேவை செய்கின்றனரோ என்பதைப் பொறுத்து நாமேதான் இராஜ்யத்தை எடுக்கிறோம், நாமேதான் இராஜ்யத்தை இழக்கிறோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். இப்போது கண்காட்சி சேவை அதிகரித்தபடி இருக்கிறது. புரொஜெக்டரும் கூட கிராமம்தோறும் செல்லப் போகிறது. இந்த சேவை மிகவும் விரிவடையும். குழந்தைகளும் அதிகரித்தபடி இருப்பார்கள். பிறகு இந்த பக்தி மார்க்கத்திற்கு மதிப்பு இருக்காது. இது நாடகத்தில் இருந்தது. என்ன ஆயிற்று! என்றல்ல. இப்படி செய்யாமல் இருந்திருந்தால் இப்படி ஆகியிருக்கும் – இப்படி யெல்லாம் சொல்ல முடியாது. என்ன நடந்ததோ அது சரியே, இனிமேல் எச்சரிக்கையாய் இருங்கள். மாயை எந்த விகர்மமும் செய்ய வைக்கக் கூடாது. மனதில் புயல் காற்றுகள் வீசும், ஆனால் கர்மேந்திரியங்களின் மூலம் எந்த பாவ கர்மமும் செய்யக் கூடாது. வீணான எண்ணங்கள் நிறைய வரும், என்றாலும் கூட முயற்சி செய்து சிவபாபாவை நினைவு செய்தபடி இருங்கள். மனமுடைந்து போகக் கூடாது. பல குழந்தைகள் எழுதுகின்றனர் - பாபா 15-20 வருடங்கள் உடல் நலமில்லாததால் தூய்மையாய் இருக்கிறோம், அப்போதும் கூட மனம் மிகவும் கெட்டிருக்கிறது. பாபா எழுதுகிறார் - புயல்கள் நிறைய வரும், மாயை கஷ்டப்படுத்தும், ஆனால் விகாரத்தில் செல்லக் கூடாது. இவை உங்களின் பாவ கர்மங்களின் கணக்கு வழக்காகும். யோகபலத்தின் மூலம்தான் அழியும், பயப்படக் கூடாது.. மாயை மிகவும் பலசாலியாகும். யாரையும்விடுவதில்லை. சேவையோ நிறைய உள்ளது, யார் எவ்வளவு வேண்டுமானாலும் செய்யலாம். நல்லது!

 

இனிமையிலும் இனிமையான சேவை செய்யத் தக்க காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு வரிசைக்கிரமமான முயற்சிக்குத் தகுந்தாற்போல தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

 

தாரணைக்கான முக்கிய சாரம்:

1. பகலில் சரீர நிர்வாகத்திற்காக கர்மமும் அதிகாலையிலும் மாலையிலும் வாழ்க்கையை வைரமாக ஆக்கக் கூடிய ஆன்மீக சேவை கண்டிப்பாக செய்ய வேண்டும். அனைவரையும் இராவணனின் சங்கிலியிருந்து விடுவிக்க வேண்டும்.

 

2. மாயை எந்த பாவ கர்மமும் செய்வித்து விடாதபடி மிக மிக எச்சரிக்கையாய் இருக்க வேண்டும். கர்மேந்திரியங்களின் மூலம் ஒரு போதும் எந்த பாவ கர்மமும் செய்யக் கூடாது. அசுரத்தனமான அவகுணங்களை நீக்கி விடவேண்டும்.

 

வரதானம்:

எதுவும் புதிதல்ல என்ற பாடத்தின் மூலம் தடைகளை விளையாட்டு என புரிந்து கொண்டு கடந்து செல்லக் கூடிய அனுபவ மூர்த்தி ஆகுக.

 

தடைகளைக் கண்டு பயப்படாதீர்கள். மூர்த்தியாக ஆகிக் கொண்டிருக்கிறீர்கள் என்றால் சற்று சுத்தியல் அடி போல் படவே செய்யும். சுத்தியலைக் கொண்டுதான் உளியால் செதுக்கி செதுக்கி சரிப்படுத்துகின்றனர். ஆக, எந்த அளவு முன்னேறுவீர்களோ அந்த அளவு புயல்களை அதிகமாக கடந்து செல்ல வேண்டியிருக்கும். ஆனால் உங்களைப் பொறுத்தவரை இந்த புயல்கள் அனுபவம் மிக்கவராக ஆக்குவதற்கான பரிசுப் பொருளாகும், ஆகையால் அனைத்து தடைகளின் அனுபவமும் என்னிடம்தான் வரவேண்டுமா என யோசிக்க வேண்டாம். வருக என நல்வரவு கொடுங்கள். எதுவும் புதிதல்ல என்ற பாடம் உறுதியாக இருந்தது எனில் இந்த தடைகள் விளையாட்டாகத் தெரியும்.

 

சுலோகன்:

உண்மைத் தன்மையின் விசேஷத்தன்மை இருந்தது என்றால் ஆத்மா எனும் வைரத்தின் ஜொலிப்பு நாலா புறங்களிலும் தானாக பரவும்.

 

***OM SHANTI***


Whatsapp Button works on Mobile Device only