BK Murli 18 March 2017 Tamil

BK Murli 18 March 2017 Tamil

18.03.2017    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்

இனிமையான குழந்தைகளே ! ஞான மார்க்கத்தில் உங்களுடைய சிந்தனை மிகவும் சுத்தமாக இருக்க வேண்டும். உண்மையான வருமானத்தில் பொய் பேசினால், ஏதாவது தலைகீழான செயல் செய்தால் மிகுந்த நஷ்டம் ஏற்பட்டுவிடும்.கேள்வி:

உயர்ந்த பதவி அடையக் கூடிய அதிர்ஷ்டசாலி குழந்தைகளின் அடையாளம் என்னவாக இருக்கும்?பதில்:

1. அதிர்ஷ்டசாலி குழந்தைகள் மூலம் எந்தவொரு கெட்ட செயலும் நடக்காது. யக்ஞ சேவையில் ஒவ்வொரு எலும்பையும் ஈடுபடுத்துவார்கள். அவர்களிடம் எந்த வித பேராசை போன்றவை இருக்காது. 2. அவர்கள் மிகவும் சுகம் கொடுப்பவர்களாக இருப்பார்கள். வாயிலிருந்து எப்பொழுதும் ஞான இரத்தினங்களையே வெளிப்படுத்துவார்கள். மிகவும் இனிமையானவர்களாக இருப்பார்கள். 3. அவர்கள் இந்தப் பழைய உலகை பார்த்தாலும் பார்க்காதது போல் இருப்பார்கள். அதிர்ஷ்டத்தில் இருந்தால் பார்க்கலாம் என்ற இந்த எண்ணம் அவர்களுக்கு வராது. இத்தகைய குழந்தைகள் எதற்கும் பயன்படமாட்டார்கள் என்று பாபா கூறுகின்றார். நீங்கள் மிகவும் நன்றாக முயற்சி செய்ய வேண்டும்.பாடல் :

நம்முடைய தீர்த்த யாத்திரை தனிப்பட்டது.ஓம் சாந்தி !

இது பக்தி மார்க்கத்தின் பாடல் ஆகும். நம்முடைய மகிமை தான் பாடப்படுகிறது என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். பக்தி மார்க்கத்தில் மகிமை பாடப்படுகிறது மற்றும் பிரார்த்தனை செய்யப்படுகிறது. மேலும், ஞானம் மார்க்கத்தில் இந்தப் பிரார்த்தனை மற்றும் பக்தி செய்யப்படுவதில்லை. ஞானம் என்றால், பள்ளியில் பயில்வது போன்ற கல்வி ஆகும். நாம் இந்தக் கல்வியை முடித்து விட்டு இந்தப் பதவியை அடைவோம், இந்தத் தொழில் செய்வோம் என்ற குறிக்கோள் படிப்பில் இருக்கிறது. சிலர், இவ்வாறு ஏமாற்றலாம், பணம் சம்பாதிக்கலாம் என்று கற்றுக் கொள்கின்றனர். அதிக பணத்திற்காக ஏமாற்றுகின்றனர். இதைக் கூட இழிவான செயல் (பிரஷ்டாச்சாரம்) என்று தந்தை கூறுகின்றார். கொலை, கொள்ளையும் செய்கின்றனர். பணம் சம்பாதித்து தன்னை சுகமாக வைத்துக் கொள்வதற்காக மற்றும் தனது சந்ததிகளை சுகமாக வைத்துக் கொள்வதற்காக படிக்க வைத்து திருமணம் செய்து கொடுப்பதற்காக அரசாங்கத்தினுடையதைத் திருடுகின்றனர். இங்கேயோ, உங்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கான விசயமே கிடையாது. இது தூய்மையான கல்வி ஆகும். இல்லறத்தில் இருக்கிறீர்கள் என்றாலும் படிப்பை படிக்க மட்டும் வேண்டும். எங்களுக்கு சம்பளம் குறைவாகக் கிடைக்கிறது, ஆகையால், ஏமாற்றிக் கொள்ளையடிக்க வேண்டியதாக உள்ளது, என்ன செய்வது ! என்று சிலர் கூறுகின்றனர். ஆனால், இந்த ஞான மார்க்கத்தில் அத்தகைய எந்த எண்ணமும் வரக்கூடாது. இல்லையெனில் துர்கதி ஏற்பட்டு விடும். இங்கே மிகவும் உண்மையாக, தூய்மையான மனதோடு தந்தையை நினைவு செய்ய வேண்டும், அப்பொழுதே உயர் பதவி அடைய முடியும். மாணவருக்கு படிப்பைத் தவிர வேறு எந்த விசயமும் புத்தியில் இருக்கக் கூடாது. இல்லையெனில், நாம் எதிர்கால உயர் உதவியை எவ்வாறு அடைவோம் ! ஒருவேளை, தலைகீழான காரியம் செய்துவிட்டால் தோல்வி அடைந்துவிடுவீர்கள். உண்மையான வருமானத்தில் ஏதாவது பொய் பேசுவதால் அல்லது அதுபோன்ற செயல் ஏதாவது செய்தால் கீழான பதவி கிடைக்கும். மிகுந்த நஷ்டம் ஏற்பட்டு விடும். எதிர்காலத்தில் பதம்பதி (கோடீஸ்வரன்) ஆவதற்காகவே இங்கே நீங்கள் வந்திருக்கிறீர்கள். எனவே, இங்கே எவ்வித அசுத்தமான எண்ணமும் வரக்கூடாது. யாராவது திருட்டு போன்ற செயல்களைச் செய்கிறார்கள் என்றால் கேஸ் (வழக்கு) நடக்கிறது. அதிலிருந்து யாராவது தப்பித்துவிட்டாலும் கூட இங்கே தர்மராஜரிடமிருந்து யாரும் தப்பிக்க இயலாது. பாவ ஆத்மா மிகுந்த தண்டனை அடைய வேண்டியது இருக்கும். தண்டனை அடைய வேண்டியதில்லை எனும்படியாக எவரும் இருக்கமாட்டார்கள், மாயை விழவைத்துக் கொண்டே இருக்கிறது. உள்ளத்தில் அசுத்தமான எண்ணங்கள் வருகின்றன. இங்கிருந்து சிறிது பணம் எடுத்துக் கொள்ளலாம்.... இருப்போமோ அல்லது இருக்க மாட்டோமோ தெரியவில்லை. கொஞ்சம் சேர்த்து வைத்துக் கொள்ளலாம். இப்பொழுது இது ஈஸ்வரிய தர்பார் ஆகும். பிறகு, வலது கரமாக தர்மராஜரும் இருக்கின்றார். அவருடைய தண்டனைகளோ நூறுமடங்கு அதிகமாக இருக்கும் புதுப்புது குழந்தைகளுக்கு ஒருவேளை தெரியாமல் கூட இருக்கும். ஆகையினாலேயே, பாபா எச்சரிக்கை செய்கின்றார். குழந்தைகளாகிய உங்களுடைய எண்ணங்கள் மிகவும் தூய்மையானதாக இருக்க வேண்டும். அநேக குழந்தைகள் எழுதுகின்றனர், பாபா, இல்லறத்தில் இருந்து கொண்டு என்னை மட்டும் நினைவு செய்யுங்கள், ஸ்ரீமத் அனுசாரமாக இல்லாமல் எந்தவொரு செயலையும் செய்யாதீர்கள் என்பது உங்களுடைய கட்டளை ஆகும். ஆனால், நாங்கள் தொழிலில் கொஞ்சம் தவறு செய்ய வேண்டியதாக உள்ளது. இல்லையென்றால் நாங்கள் எவ்வாறு வாழ்க்கை நடத்துவது ! இவ்வளவு கொஞ்சம் பணத்தைக் கொண்டு இத்தனை குடும்பத்தினர் எவ்வாறு வாழ முடியும் ? பசியோடு இருக்க வேண்டிவரும். ஆகையினால் வியாபாரிகள் தர்மம் செய்வதற்காக கொஞ்சம் ஒதுக்கி வைத்துக் கொள்கின்றனர். நம் மூலமாக செய்யப்படுகின்ற பாவம் கொஞ்சம் அழிந்துவிடும். நாம் தர்மாத்மா ஆகிவிடுவோம் என்று நினைக்கின்றனர். தர்மாத்மா மனிதர் மூலம் அதிக பாவ செயல் ஏற்படுவதில்லை. ஏனெனில், தர்மாத்மா பாவச் செயல் புரிவதற்கு கொஞ்சம் அஞ்சுகின்றனர். தொழிலில் ஒருபொழுதும் பொய் பேசாதாவர்களும் அநேகர் உள்ளனர். முற்றிலும் மாறாத விலையை வைத்துக் கொள்வார்கள். கல்கத்தாவில் பாத்திரங்கள் விற்பவர் ஒருவர் இருந்தார். அனைத்து பொருட்களின் விலையை போர்டில் (பலகையில்) எழுதிவிடுவார். பின்னர் விலையை சிறிது கூட குறைத்துக் கொள்ள மாட்டார். சிலரோ, மிகவும் பொய் சொல்கின்றனர். இதுவோ ஞானக் கல்வி ஆகும். நீங்கள் எதிர்கால 21 பிறவிகளுக்காக படிக்கிறீர்கள். எனவே, பாபாவிடம் ஒவ்வொரு விசயத்திலும் சத்தியத்தைச் சொல்ல வேண்டும். பரமாத்மா அனைத்தையும் அறிவார் என்பதல்ல. தந்தை கூறுகின்றார், கல்வியைப் பயின்றீர்கள் என்றால், உயர் பதவி அடைவீர்கள். இல்லையெனில், நரகத்திற்குச் சென்றுவிடுவீர்கள். நீங்கள் என்னென்ன பாவம் செய்கிறீர்கள் என்று நாம் பார்ப்பதில்லை. நீங்கள் என்னவெல்லாம் செய்கிறீர்களோ, அதை தனக்காகவே செய்கிறீர்கள். பாவ ஆத்மா, புண்ணிய ஆத்மா என்று பெயர் இருக்கிறது. தந்தை வந்து புண்ணிய ஆத்மா ஆக்குகின்றார் என்றால், எந்தப் பாவச் செயலுக்கும் நூறு மடங்கு தண்டனை கிடைக்கும். மிகுந்த நஷ்டம் ஏற்பட்டு விடும். பிரச்சனை வரும்பொழுது பார்த்துக் கொள்ளலாம், இப்பொழுது செய்துவிடுவோம் என்ற எண்ணம் வரக்கூடாது. அத்தகைய குழந்தைகள் எதற்கும் பிரயோஜனப்படமாட்டார்கள். இந்தப் பழைய உலகத்தை முற்றிலும் மறந்து விட வேண்டும். பார்த்தாலும் பார்க்காதது போல் இருக்க வேண்டும். நாம் நடிகர்கள்! இப்பொழுது நாடகம் முடிவடையப் போகிறது. 84 பிறவிகளை முடித்துவிட்டு இப்பொழுது நாம் வீடு திரும்ப வேண்டும். எந்தளவு சேவை செய்வீர்களோ, அந்தளவு உயர்ந்த பதவி அடைவீர்கள். இப்பொழுது கண்காட்சி, மேளா போன்ற சேவை உருவாகியுள்ளது. கண்காட்சிக்குச் சென்று கேட்க வேண்டும், எவ்வாறு விதவிதமான முறையில் புரிய வைக்கிறார்கள் என்பதை கற்றுக் கொள்ள வேண்டும் என்று உயர் பதவி அடையக் கூடிய முயற்சியாளர்களுக்கு எண்ணம் வந்து கொண்டே இருக்கும். அவர்கள் சேவைக் களத்தில் சுற்றிக் கொண்டே இருப்பார்கள். இவர்கள் எவ்வாறு புரிய வைக்கிறார்கள் என்று கேட்டுக் கொண்டே இருப்பார்கள். அனேகர் எழுதுகின்றனர், கண்காட்சி மூலம் எங்களது புத்தியின் பூட்டு திறந்து விட்டது, பாபா மிகவும் உதவி புரிந்தார். பாபா இவ்வாறு மிகவும் உதவி செய்கிறார், ஆனால் அனேகருக்கு இது தெரிவதில்லை. நான் தான் மிக நன்றாகப் புரிய வைத்தேன் என்று நினைக்கின்றனர். நீங்கள் ஞானக்கடலின் குழந்தைகள். பாபாவின் நினைவிலிருப்பதன் மூலமே நீங்கள் உலக இராஜ்யத்தை எடுக்கிறீர்கள். நாம் பாபாவிடமிருந்து ஆஸ்தியைப் பெற வேண்டும் என்பது மட்டும் நினைவிலிருக்கட்டும். மேலும் ஸ்ரீமத்படியும் நடக்க வேண்டும். ஸ்ரீமத்படி நடக்கும்போதே வருமானம் ஏற்படும். மற்றபடி இந்தவுலகிலோ எந்த பொருளும் உபயோகமற்றதே! அனைத்தும் அழியக்கூடியதே! நீங்கள் ஞான நட்சத்திரங்கள், இந்த பாரதத்தை சொர்க்கமாக்கிக் கொண்டிருக்கிறோம். மேலும் சொர்க்கவாசி ஆவதற்கு நீங்கள் இங்கேயே ஆக வேண்டும். யக்ஞ சேவைக்குப் பின்னால் ஒவ்வொரு எலும்பையும் பொடியாக்கி, யக்ஞத்தில் ஈடுபடுத்த வேண்டும். அவர்களுக்குப் பிறகு வேறு எவ்வித லோபமும் இருக்காது. எவர்களது அதிர்ஷ்டத்தில் இல்லையோ பிறகு அவர்கள் மூலம் தீய காரியங்கள் நடந்து கொண்டேயிருக்கும். இங்கோ நீங்கள் சுகத்தை வழங்குபவர்களாக ஆக வேண்டும். பாபா கூறுகிறார்: நான் சுகம் வழங்குவோராக ஆக்குவதற்காகவே வந்துள்ளேன். நீங்களும் அவ்வாறே சுகம் வழங்குவோராக ஆகுங்கள். அவர்களது வாயிலிருந்து எப்பொழுதும் ஞான இரத்தினங்களே வெளிப்படும், தீய செயலுக்கான எந்த விசயமும் வெளிப்படாது. பொய் பேசுவதற்குப் பதிலாக எதுவும் பேசாமல் இருப்பது நல்லது. மிகவும் இனிமையானவர் ஆக வேண்டும். தாய், தந்தையை வெளிப்படுத்த (ஷோ) வேண்டும். சத்குருவை நிந்தனை செய்பவர்கள் உயர்ந்த பதவி அடைய முடியாது என்று பாபாவிற்காகத் தான் எழுதப்பட்டிருக்கிறது. சிறிது கூட கடுமைத் (கசப்பு) தன்மை அவகுணம் போன்றவை இருக்கக் கூடாது. வேண்டிய பொருள் கொஞ்சம் கிடைக்கவில்லை என்றால், முற்றிலும் கோபித்துக் கொள்பவர்கள் அதிகமாக உள்ளனர். ஆனால், குழந்தைகள் அதைப் பரிட்சை எனப் புரிந்து, அமைதியாக இருக்க வேண்டும். முன்னர் பெரிய பெரிய ரிஷி முனிவர்கள் இறுதிதயில் நாங்கள் ஈஸ்வரனைப் பற்றி அறியவில்லை என்றே கூறினர். ஒருவேளை இப்பொழுது இவர்கள் (சந்நியாசி போன்றோர்) இவ்வாறு கூறினால் யாரும் அதை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். யார் சுயம் ஈஸ்வரனைப் பற்றி அறியவில்லையோ, அவர் நமக்கு என்ன வழி சொல்வார்? என்று பிறர் புரிந்து கொள்வார்கள். இப்பொழுது குருக்கள் அதிகம் ஆகிவிட்டனர். இந்துப் பெண்ணின் கணவன் கூட குரு ஆவார், ஈஸ்வரன் ஆவார். குரு என்பவர் சத்கதி அளிப்பாரா? அல்லது பதீதம் ஆக்குவாரா? நாயகிகளாகிய அனைவருக்கும் குரு அதாவது நாயகன் ஒருவரே என்பதை இப்பொழுது நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். தாய், தந்தை பாப்தாதா அனைத்தும் அவரே தான்! இந்த வார்த்தையை கணவனுக்குரியதாக இந்த மக்கள் கூறிவிடுகின்றனர். இப்பொழுது இங்கே இந்த விசயமெல்லாம் கிடையாது. இங்கேயோ, ஆத்மாக்களாகிய உங்களுக்கு பரமபிதா பரமாத்மா வந்து கற்பிக்கின்றார். இத்தனை சிறிய ஆத்மாவில் 84 பிறவிகளின் நடிப்பு பதிவாகி உள்ளது. பரமாத்மாவும் சிறிய நட்சத்திரம் போன்றவர் ஆவார், அவருக்குள்ளும் முழு நடிப்பும் பதிவாகி உள்ளது. பரமாத்மா சர்வசக்திவான், அனைத்தையும் அவரால் செய்ய முடியும் என்று மனிதர்கள் புரிந்துள்ளனர். அத்தகைய எந்த விசயமும் கிடையாது. எனது நடிப்பு கூட நாடகத்தின் அனுசாரமே உள்ளது என்று பரமபிதா பரமாத்மா கூறுகின்றார்.பாபா புரிய வைக்கின்றார்- ஆத்மாக்களாகிய நீங்கள் அனைவரும் உங்களிடையே சகோதர சகோதரர்கள் ஆவீர்கள். ஆத்மா, தனது சகோதரனின் சரீரத்தை எவ்வாறு கொலை செய்யும்! ஆத்மாக்களாகிய நாம் அனைவரும் தந்தையிடமிருந்து ஆஸ்தி அடைய வேண்டும். ஆண், பெண்.... என்ற இந்த தேக அபிமானத்தை விட்டு விட வேண்டும். சிவபாபா எவ்வளவு இனிமையானவராக இருக்கின்றார். நாமும் கூட சிவபாபாவின் குழந்தைகள் ஆவோம். சகோதர சகோதரர்கள் ஆவோம் எனில், நாம் ஒருபொழுதும் தங்களுக்குள் சண்டை போடக் கூடாது. ஆத்ம அபிமானியாக இருந்தால் ஒருபொழுதும் சண்டையிடமாட்டீர்கள். பாபா என்ன கூறுவார்! தந்தையோ இவ்வளவு இனிமையானவர்! ஆனால் குழந்தைகள் சண்டை போட்டுக் கொள்கின்றனர். இந்த சமயத்தில் மனிதர்களிடம் ஆத்மாவைப் பற்றிய ஞானமும் கிடையாது. நாம் ஆத்மாக்கள், பரமாத்மாவின் குழந்தைகள் பின்னர், ஏன் சண்டை போட்டுக் கொள்ள வேண்டும்? மனிதர்கள் வார்த்தையளவில் மட்டும் சொல்லிவிடுகின்றனர். நீங்களோ நடைமுறையில் அவ்வாறு இருக்கிறீர்கள். தேக அபிமானத்தை விட்டு விடுங்கள் என்று தந்தை கூறுகின்றார். நாம் ஆத்மாக்கள் இப்பொழுது வீடு திரும்பிச் செல்ல வேண்டும்.இந்த எண்ணம் இடைவிடாது இருக்க வேண்டும். முழுமையாக முயற்சி செய்ய வேண்டும். தந்தையைப் போல் இனிமையானவர் மற்றும் அன்பானவராக அவசியம் ஆக வேண்டும். அப்பொழுதே நல்ல குழந்தை என்று தந்தை கூறுவார். எவ்வளவு அகங்காரம் அற்றவராக (நிர்அகங்காரி) இருக்கின்றார். நான் உங்களுடைய தந்தை, ஆசிரியர், குரு, அனைத்துமாக இருக்கின்றேன் என்று கூறுகின்றார். அரைக் கல்பமாக நீங்கள் என்னை, பாபா வாருக்கள்! என்று நினைவு செய்து வந்தீர்கள். எனக்கும் நாடகத்தில் நடிப்பு உள்ளது. முன்பு இந்த கடிகாரம் போன்றவை கிடையாது. மணலைக் கொண்டு நேரத்தைப் பார்த்தார்கள். இந்த விஞ்ஞானத்தின் மூலம் என்னவெல்லாம் உருவாகிக் கொண்டிருக்கிறதோ அது உங்களுக்காகவே ஆகும். இந்த விஞ்ஞானிகள் எவரும் ஞானத்தை எடுத்துக் கொள்ளமாட்டார்கள். அவர்கள் வரவேண்டியதே பிரஜை பதவியில் தான். மாளிகை போன்றவற்றை உருவாக்கக் கூடியவர்கள் பிரஜைகளாகத் தான் இருப்பார்கள் அல்லவா ! இராஜா, இராணியோ கட்டளை இடுப்பவர்களாக இருப்பார்கள். எனவே அவர்கள் காணாமல் போய்விட மாட்டார்கள். இவர்கள் மிகவும் புத்திவான் களாக ஆகிக் கொண்டிருக்கின்றனர். மற்றபடி, சந்திரனுக்குச் செல்வது போன்ற இவை அனைத்தும் மிக அதிக வளர்ச்சியின் அடையாளம் ஆகும். விஞ்ஞானம் கூட துக்கம் கொடுக்கக் கூடியதாக ஆகிவிட்டது. அங்கே (சத்யுகம்) சுகம் அளிக்கும் பொருட்கள் இருக்கும்.. மற்றபடி இங்கே உள்ளவை சிறிது காலத்திற்கு மட்டும் தான் இருக்கும். மிக அதிக அளவில் செல்லும் போது வினாசம் ஏற்பட்டுவிடுகிறது. பாக்கி, சுகத்தை அனுபவிப்பீர் கள். மம்மா, பாபா என்று கூறுகிறீர்கள் என்றால் பின்பற்ற வேண்டும். உங்களுடைய வாயிலிருந்து எப்பொழுதும் இரத்தினங்கள் வெளிப்பட வேண்டும்.கற்கள் பாடல் பாடின என்று கூறுகின்றனர். நீங்கள் முன்பு கல்புத்தி உடையவர்களாக இருந்தீர்கள். பாபா வந்து உங்களை கல்புத்தியிலிருந்து தங்க புத்தி உடையவர்களாக ஆக்கிவிட்டார். இப்பொழுது நீங்கள் கீதையின் பாடலைப் பாடிக் கொண்டிருக்கிறீர்கள். மற்றபடி, அந்தக் கல் பாடல் பாடாது. கீதையைத் தான் கீதம் (பாடல்) என்று சொல்லப்படுகிறது. நீங்கள் இப்பொழுது பரமபிதா பரமாத்மாவின் சரித்திரத்தை அறிந்திருக்கிறீர்கள். அவர்கள் எதனுடைய அர்த்தத்தையும் புரிந்து கொள்ளவில்லை. இரத்தினங்களுக்கு பதில் கல்லையே எறிகிறார்கள். வரிசைக் கிரமமாக இப்பொழுது உங்களுடைய புத்தியில் இரத்தினங்கள் உள்ளன. சிலரது வாயிலிருந்து வைரம், முத்து வெளிப்படுகின்றன. ஆகையினாலேயே, உங்களுக்கு நீலாம்பரி, மரகதம்.... போன்ற பெயர்கள் உள்ளன. நீங்கள் கற்களிலிருந்து இரத்தினங்கள் அதாவது பாரஸ் (இரும்பைத் தங்கமாக்கும்) ஆகிக் கொண்டிருக்கிறீர்கள். யார் வந்தாலும் அவர்களுக்குப் புரிய வைப்பதே இப்பொழுது உங்களுடைய வேலை ஆகும். பரமபிதா பரமாத்மாவுடன் உங்களுக்கு என்ன சம்மந்தம் உள்ளது? எதுவரை இந்த விசயத்திற்கு மிகச் சரியான பதிலை எழுதித் தரவில்லையோ, அதுவரை பாபாவை சந்திப்பது பயனற்றதாகும். முதலில் தந்தையைப் புரிந்து கொள்ள வேண்டும். அப்பொழுதே பி.கு. யாருடைய பேரக் குழந்தைகள் என்று புரிந்து கொள்வார்கள். குறிக்கோள் மிக உயர்ந்தது ஆகும். 21 பிறவிகளுக்கான இராஜ்யத்தை ஏழ்மையிலும் ஏழ்மையானவர் கூட பெற முடியும். விஷ்வத்தின் எஜமானர் ஆவது என்பது குறைவான விசயமா என்ன? ஸ்ரீமத்படி மட்டும் நடக்க வேண்டும். சுயம் பகவான் குழந்தைகளிடத்தில் பலி ஆகின்றார். 21 பிறவிகளுக்கு அர்ப்பணித்து விடுகின்றார். விஷ்வத்தின் எஜமானர் ஆவீர்களாக ! என்று கூறுகின்றார். குழந்தைகளின் வாயிலிருந்து அவசியம் இரத்தினங்கள் தான் வெளிப்படுகின்றன. ஆகையினாலே, எதிர்காலத்தில் பூஜைக்குரிய தேவதை ஆகிறீர்கள் நல்லது.இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு, தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு, ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.தாரணைக்கான முக்கிய சாரம் :

1. இனிமையானவர் ஆகி, தாய் தந்தையை வெளிப்படுத்த (ஷோ) வேண்டும். கடுமைத் தன்மை (கசப்புத் தன்மை) சிறிதளவு இருக்கிறது என்றாலும் அதை நீக்கிவிட வேண்டும். தந்தையைப் போல் இனிமையானவராக, அன்பானவராக அவசியம் ஆக வேண்டும்.2. ஸ்ரீமத் அல்லாத எந்தவொரு செயலும் செய்யக் கூடாது. ஸ்ரீமத்தில் தான் உண்மையான வருமானம் உள்ளது.வரதானம் :

சங்கமயுகத்தின் மகத்துவத்தை அறிந்து உயர்ந்த பிராப்தியை உருவாக்கக் கூடிய தீவிர முயற்சியாளர் ஆகுக !சங்கமயுகம் சிறிய யுகம் ஆகும். இந்த யுகத்தில் தான் தந்தையின் துணையின் அனுபவம் கிடைக்கிறது. சங்கமயுக நேரம் மற்றும் இந்த வாழ்க்கை ஆகிய இரண்டுமே வைரத்திற்குச் சமமானது. எனவே, இத்தகைய மகத்துவத்தைத் தெரிந்து கொண்டு ஒரு வினாடி கூட துணையை விடக் கூடாது. ஒரு வினாடியைத் தவறவிட்டோம் என்றால் ஒரு வினாடி அல்ல. ஆனால் மிக அதிகமாக இழந்துவிட்டோம் என்பதாகும். முழு கல்பத்தினுடைய உயர்ந்த பிராப்தியை சேமிப்பு செய்வதற்கான யுகம் இந்த யுகமாகும். ஒருவேளை இந்த யுகத்தின் மகத்துவத்தைக் கூட நினைவில் வைத்தீர்கள் என்றால் தீவிர முயற்சி மூலம் இராஜ்ய அதிகாரத்தை பிராப்தியாக அடைவீர்கள்.சுலோகன் :

அனைவருக்கும் அன்பு மற்றும் சகயோகம் கொடுப்பது தான் விஷ்வ சேவாதாரி ஆவதாகும்.


***OM SHANTI***