20 March 2017

BK Murli 21 March 2017 Tamil

BK Murli 21 March 2017 Tamil

21.03.2017    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


இனிமையான குழந்தைகளே! நாம் சங்கமத்தில் வருங்கால சம்பாத்தியத்திற்காக படிக்கிறோம் என்ற நிச்சயம் உங்களுக்கு உள்ளது. தந்தை நமக்கு கற்பித்து 21 பிறவிகளுக்கான ஆஸ்தியை அளிக்கிறார்.கேள்வி:

தங்கள் மீது தாங்களே கிருபை அல்லது ஆசீர்வாதம் செய்வதற்கான விதி என்ன?பதில்:

தங்கள் மீது தாங்களே கிருபை அல்லது ஆசீர்வாதம் செய்து கொள்ள வேண்டும் என்றால், தந்தையின் படிப்பை தினமும் படித்துக் கொண்டே இருங்கள். ஒரு பொழுதும் சகவாச தோஷத்தில் வந்து படிப்பில் கவனக்குறைவாக இருக்காதீர்கள். யார் எப்பொழுதும் ஸ்ரீமத்படி நடக்கிறார்களோ அவர்கள் தங்கள் மீது தாங்களே கிருபை புரிகிறார்கள். அவர்களுக்கு தந்தையினுடையது கூட ஆசீர்வாதம் கிடைத்துக் கொண்டே இருக்கிறது.பாடல்:

நான் ஒரு சிறு குழந்தை ஆவேன்.. .. ..ஓம் சாந்தி.

(சிவ பகவானுவாச்) சிவபகவான் கூறுகிறார். மனிதர்கள் கீதை வாசிக்கும் பொழுது எப்பொழுதுமே சாகார கிருஷ்ண பகவானுவாச் என்று கூறுகிறார்கள். நான் உங்களுக்கு இந்த இராஜயோகம் மற்றும் ஞானத்தின் மூலமாக இராஜ்யத்தை அடையச் செய்கிறேன் என்று தந்தை வந்து புரிய வைக்கிறார். கிருஷ்ணர் சத்யுகத்தில் இளவரசராகத்தான் இருந்தார். கீதையில் இது முக்கியமான தவறாகும். சிவபகவான் இந்த சரீரத்தின் மூலமாக நமக்கு கற்பிக்கிறார் என்பதை குழந்தைகளாகிய நீங்கள் அறிந்துள்ளீர்கள். சிவஜெயந்தியும் பாடப்படுகிறது. அப்படியும் பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. ஆத்மாவிற்கு ஒரே ஒரு பெயர் வந்து கொண்டிருக்கிறது. நான் கர்ப்பத்தின் மூலமாக ஜென்மம் எடுப்பதில்லை என்று தந்தை கூறுகிறார். நான் சாதாரண சரீரத்தில் பிரவேசம் செய்கிறேன். ஆத்மா சரீரத்தில் பிரவேசம் செய்யும் பொழுது உள்ளுக்குள் அசைவுகள் ஏற்படுகின்றன. உள்ளே ஆத்மா பிரவேசம் செய்துள்ளது என்று தெரிய வருகிறது., குழந்தையினுடைய உறுப்புக்கள் இயங்க முற்படுகின்றன. இந்த விஷயத்தை நல்ல முறையில் புரிந்து கொள்ள வேண்டும். மேலும் யாரெல்லாம் மனிதர்கள் கூறுகிறார்களோ அவர்கள் ஒரு பொழுதும் ஆத்மாவாகிய நான் உங்களுக்குப் புரிய வைக்கிறேன் என்று கூற மாட்டார்கள். அவர்கள் சரீரத்தினால் பிரசித்தமாக இருப்பார்கள். இந்த பாபா விசித்திரமானவர் (உடல் இல்லாதவர்). இவருக்கு தனக்கென்று உடல் கிடையாது. சரீரதாரிகளை ஒரு பொழுதும் பகவான் என்று கூறக் கூடாது. ஸ்தூல உடலாக இருந்தாலும் சரி, சூட்சும உடலாக இருந்தாலும் சரி, ஆத்மா இந்த உறுப்புக்கள் மூலமாக பரமபிதாவை நினைவு செய்கிறது. அவர்கள் அமர்ந்து மனிதர்களால் அமைக்கப்பட்ட சாஸ்திரங்களைக் கூறுகிறார்கள். இங்கு இது புதிய விஷயமாகும். பகவானுவாச் - பகவான் யார்? யாரை எல்லா பக்தர்களும் பகவான் என்று கூறி நினைவு செய்கிறார்கள்? பிரம்மா, விஷ்ணு சங்கரனின் பெயரை அறிந்துள்ளார்கள். ஹே பிரம்மா, ஹே விஷ்ணு என்று கூறி அழைக்கிறார்கள். அவர்கள் தேவதைகள் ஆவார்கள். பகவான் என்று கூறும் பொழுது நிராகாரமானவர் தான் நினைவிற்கு வருகிறார். நிராகார பரமாத்மாவிற்குத் தான் தொழுகை செய்கிறார்கள். நானும் ஆத்மா ஆவேன், ஆனால் சுப்ரீம் (உயர்ந்தவன்) ஆவேன் என்று அவர் கூறுகிறார். எனக்கும் உருவம் அமைக்கிறார்கள். ஆத்மாக்களாகிய உங்களுக்கும் (சித்திரம்) உருவம் அமைக்கிறார்கள். கோவில்களில் பெரிய சிவலிங்கம் கூட வைக்கிறார்கள். பிறகு சிறிய சாலிகிராமங்கள் கூட வைக்கிறார்கள். இதிலிருந்து அந்த ஆத்மாக்கள் ஒரு பரமாத்மாவின் குழந்தைகள் ஆவார்கள் என்பது நிரூபணமாகிறது. தந்தை எப்பொழுதும் குழந்தைகளை விட பெரியவராக இருப்பார். எனவே பெரிய லிங்கம் அமைக்கிறார்கள். உண்மையில் நான் ஒன்றும் பெரிய சாலிகிராமமாக இல்லை. ஆத்மா அளவில் சிறியது பெரியதாக இருப்பதில்லை. மனிதர்கள் சிறியவர்கள் பெரியவர்களாக ஆகிறார்கள். மற்றபடி ஆத்மா எப்படி உங்களுடையதோ அவ்வாறே என்னுடையதும் ஆகும். ஆனால் என்னுடைய ஆத்மா பரம ஆவார். பரே (அப்பாற்பட்டு) வாக இருக்கும் பரந்தாமத்தில் இருப்பவர் ஆவார். உயர்ந்ததிலும் உயர்ந்த பரமபிதா பரமாத்மா மனித சிருஷ்டியின் விதை ரூபம் ஆவார். விதை என்று படைப்பவருக்குக் கூறப்படுகிறது. எப்படி ஜடவிதை போடப்படும் பொழுது அதிலிருந்து முதலில் செடி வெளிவருகிறது. அதே போல ஆத்மாவின் ரூபம் பாருங்கள் எப்படி உள்ளது. சரீரம் எவ்வளவு விஸ்தாரமாக உள்ளது. எனவே இங்கு பரமாத்மா தந்தை கற்பிக்கிறார் என்பது முதலில் இருக்கும் புதிய விஷயம் ஆகும். உயர்ந்ததிலும் உயர்ந்த பகவான் கூறுகிறார். எனவே அவசியம் பரிட்சை கூட உயர்ந்ததிலும் உயர்ந்ததாக இருக்கும். நான் உங்களுக்கு இராஜயோகம் கற்பிக்கிறேன் என்று பகவான் கூறுகிறார். அதன் மூலம் வருங்கால 21 பிறவிகளுக்கு உங்களை தேவதை ஆக்குகிறேன். பிறகு அதில் நீங்கள் சூரிய வம்சத்தினர் ஆகுங்கள் அல்லது சந்திர வம்சத்தினர் ஆகுங்கள். பதவிகள் நிறைய உள்ளன. இந்த முழு இராஜதானி ஸ்தாபனை ஆகிறது. இது சங்கமயுகம் ஆகும். நீங்கள் இந்த பிறவிக்காக படிப்பதில்லை என்று தந்தை புரிய வைக்கிறார். இது வருங்காலத்திற்கான சம்பாத்தியம் ஆகும். பிற எவையெல்லாம் செய்கிறார்களோ அவை அனைத்தும் இந்த பிறவிக்கானது ஆகும். முன்னால் வருவதைப் பற்றி இப்பொழுது ஏன் யோசிக்க வேண்டும். எது நடக்கப் போகிறதோ அப்பொழுது பார்த்துக் கொள்ளலாம் என்று மனிதர்கள் நினைக்கிறார்கள். நாம் வருங்கால பல பிறவிகளுக்காகப் ஜன்மாந்திரத்திற்காக படிக்கிறோம் என்று குழந்தைகளாகிய நீங்கள் நிச்சயம் செய்கிறீர்கள். தந்தை வரப்போகிற 21 பிறவிகளுக்கான ஆஸ்தியை அளிக்கிறார். இந்த நிச்சயத்துடன் நீங்கள் படிக்கிறீர்கள். நிச்சயமின்றி யாரும் இங்கு அமர முடியாது. இங்கு எந்த ஒரு பண்டிதர் முதலியோர் கற்பிப்பதில்லை. ஆனால் நிராகார பகவான் கற்பிக்கிறார். நமக்கு எல்லையில்லாத தந்தை கற்பிக்கிறார் என்று ஆத்மாவிற்கு குஷி ஏற்படுகிறது. இவருக்கு தனக்கென்று மனித உடல் இல்லை. நிராகாரமானவராக நான் இந்த பிரம்மா உடலில் தான் வர வேண்டி உள்ளது என்று சுயம் அவரே கூறுகிறார். இது அனாதி அமைந்த அமைக்கப்பட்ட நாடகம் ஆகும். உங்களுடைய புத்தியில் முழு நினைவு வருகிறது. மூலவதனத்தில் ஆத்மாக்களாகிய நாம் இருக்கிறோம். நம்முடைய ஆத்மாக்கள் பிரம்மாண்டம் என்று கூறப்படக் கூடிய பரந்தாமத்தில் தந்தையுடன் கூட இருப்பவர்கள் ஆவோம் என்பது வேறு எந்த ஒரு மனிதனுடைய புத்தியில் வந்திருக்க முடியாது. ஆத்மாக்களாகிய நாம் முற்றிலுமே சிறிய நட்சத்திரங்கள் ஆவோம். பூஜைக்காக பெரியதாக அமைத்துள்ளார்கள். மற்றபடி இவ்வளவு பெரிய ஆத்மா இங்கு புருவமத்தியில் அமர முடியாது. புருவ மத்தியில் பிரகாசிக்கும் அதிசயமான நட்சத்திரம்.... என்று கூறுகிறார்கள். நட்சத்திரம் எவ்பவளவு சிறியதாக உள்ளது. இது ஏற்கனவே அமைந்துள்ள அமைக்கப்பட்ட, அழியாத நாடகம் ஆகும். ஒவ்வொரு ஆத்மாவிற்குள்ளும் அதனதன் அழியாத பாகம் (பார்ட்) பொருந்தி உள்ளது. ஒவ்வொருவரும் அவரவர் பாகத்தை மீண்டும் திரும்ப நடிக்க வேண்டி உள்ளது. இதில் சிறிதளவு கூட வித்தியாசம் ஏற்பட முடியாது. திரைப்படத்தில் ஒரு முறை எந்த பாகம் நடந்ததோ அது மீண்டும் திரும்ப நடைபெறும். இதில் தவறுகள் ஏற்பட முடியாது. இந்த விஷயங்கள் முற்றிலுமே புதியதாகும். கோடியில் ஒருவர் தான் புரிந்து கொள்கிறார். 8- 0 வருடங்களாக இருந்தவர்கள் கூட படிப்பை விட்டு விடுகிறார்கள். சகவாசதோஷம் ஏற்பட்டு விடுகிறது. ஞான அமிர்தம் பருகிக் கொண்டே இருங்கள். கடைசிவரையும் இந்த ஞானக் கல்வி நடந்து கொண்டே இருக்கும். இக்கல்வியை நாம் வரப்போகிற 21 பிறவிகளுக்காகப் படிக்கிறோம். நமக்கு பகவான் கற்பிக்கிறார் என்ற இந்த போதை குழந்தைகளுக்கு ஏறுகிறது. ஒருவர் இராஜாவின் குழந்தையாக இருக்கிறார். மேலும் இராஜாவே அமர்ந்து அவருக்கு படிப்பித்தார் என்றால் என்னுடைய தந்தை மகாராஜா எனக்கு படிப்பிக்கிறார் என்று கூறுவார். இங்கு பதீத பாவனரான தந்தை நமக்கு படிப்பிக்கிறார். இராஜயோகம் கற்பிக்கிறார். உள்ளுக்குள் எப்பொழுதும் மிகுந்த குஷி இருக்க வேண்டும். நாங்கள் காட்ஸ்டூடண்ட் (இறை மாணவர்கள்) காட் ஃபாதர் (இறை தந்தை) பரமபிதா பரமாத்மாவிடமிருந்து சொர்க்கத்தின் சுயராஜ்யத்தை அடைந்து கொண்டிருக்கிறோம். எவ்வளவு சுலபமான விஷயம் ஆகும். ஆனால் இந்த படிப்பில் மாயையின் தடைகள் கூட நிறைய ஏற்படுகின்றன. போகப் போக படிப்பை விட்டும் விடுகிறார்கள். இந்த ஆன்மீகக் கல்வியை தினமும் படிக்க வேண்டும். இதற்காக இந்த ஒலிப்பதிவு நாடா ஆகியவற்றின் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மனிதர்கள் படிப்பதற்காக அமெரிக்கா, லண்டனுக்குக் கூட செல்கிறார்கள். இங்கு வீட்டில் இருப்பவர்கள் கூட முழுமையாகப் படிப்பதில்லை. பரமாத்மா நமக்கு இராஜயோகம் கற்பித்துக் கொண்டிருக்கிறார் என்பதை புரியாமல் உள்ளார்கள். பகவான் திரிலோக நாதன் -வோர்ல்ட்டு ஆல்மைட்டி (சர்வ சக்திவான்) ஆவார். லிபரேட்டர் (விடுவிப்பவர்) கைடு (வழிகாட்டி) ஆவார். அவரது மகிமைகளைப் பாருங்கள் ! எவ்வளவு இருக்கிறது ! ஆனால் தந்தையை உங்களிலும் கூட யாரோ சிலர் தான் அறிந்திருக்கிறார்கள்.இச்சமயத்தில் நீங்கள் மறைமுகமாக உள்ளீர்கள். நாம் மூலவதனத்தில் இருப்பவர்கள் ஆவோம் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். பின் சூட்சுமவதனம் கூட இருக்கிறது. அந்த சூட்சுமவதனத்தில் பெண் குழந்தைகள் செல்கிறார்கள். மனிதர்கள் (சாட்சாத்காரம்) தரிசனம் செய்கிறார்கள். நீங்கள் (பிராக்டிகலாக) நடைமுறையில் செல்கிறீர்கள். சூட்சும வதனத்தில் பிராமணர்களாகிய உங்களுடைய மற்றும் தேவதைகளினுடைய சந்திப்பு நிகழ்கிறது. அது பிராமணர்கள் மற்றும் தேவதைகளினுடைய சங்கமம் ஆகும். இது பிராமணர்கள் மற்றும் க்ஷத்திரியர்களுடைய சங்கமம் ஆகும். அங்கு போக் (படையல்) எடுத்துக் கொண்டு செல்கிறீர்கள். கடைசியில் நிறைய சாட்சாத்காரம் (காட்சிகள் தெரிதல்) ஆகும். ஆரம்பத்தில் நீங்கள் நிறையவே பார்த்தீர்கள். பின் கடைசியிலும் கூட நிறையவே பார்ப்பீர்கள். படித்துக் கொண்டே இருந்தீர்கள் என்றால் தான் பார்ப்பீர்கள். ஒரு வேளை யாருடைய கர்ம பந்தனமும் இல்லை என்றால், படிப்பின் மீது முழு கவனம் வைக்க வேண்டும். ஒருவருடையவர் யாராவது இறந்து விட்டார் என்றால், இப்பொழுது இவரால் நல்ல முறையில் படிக்க முடியும் என்று புரியப்படுகிறது. ஏனென்றால், பந்தனம் விடுபட்டு விட்டது. இப்பொழுது மிகவுமே நன்றாக முயற்சி செய்யுங்கள் நல்ல பதவி அடையுங்கள். இந்த ஞானம் மிகவுமே அதிசயமானது ஆகும். தந்தை வந்து குழந்தைகளுக்குப் புரிய வைக்கிறார் - குழந்தைகளே ! இப்பொழுது கவனக்குறைவாக இருக்காதீர்கள். மாயை உங்களுடைய தீபத்தை சட்டென்று அணைத்து விடும். எனவே தந்தையை நல்ல முறையில் நினைவு செய்ய வேண்டும். மற்றும் படிக்க வேண்டும். இங்கு உட்கார்ந்திருக்கும் வரையிலும், நேரிடையாக கேட்கும் பொழுதும் போதை ஏறுகிறது. வெளியில் சென்ற உடனேயே போதை மறைந்து போய் விடுகிறது. எப்படி தொடர்போ (சங்) அப்படியே நிறம் (ரங்) ஏற்பட்டு விடுகிறது. பந்தனம் இல்லை என்றால் அமர்ந்து கற்கலாம் மற்றும் கற்பிக்கவும் செய்யலாம்.படங்கள் மிகவும் நன்றாக அமைக்கப்பட்டுள்ளன. பாபா யுக்திகளை (வழிமுறைகளை) இயற்றிக் கொண்டிருக்கிறார். கிராமத்தார் எப்படி கற்றுக் கொள்வார்கள். இதனை ஸ்லைடுகள் மூலமாக கூட கற்றுக் கொண்டு விடலாம். நாளுக்கு நாள் சீர்திருத்தம் ஆகிக் கொண்டே இருக்கிறது. உங்களுடைய புத்தியில் நாள் முழுவதும் சுயதரிசன சக்கரம் சுற்ற வேண்டும். புத்தியில் இருந்தால் தானே யாருக்காவது புரிய வைப்பீர்கள். இல்லை என்றால், இவருக்கு படிப்பின் மீது கவனம் இல்லை என்று ஆசிரியர் புரிந்து கொண்டு விடுவார். தேக அபிமானம் நிறைய உள்ளது. நண்பர்கள், உறவினர்கள், சரீர உணர்வு ஆகியவை நினைவில் இருக்கும். அதனால் தான் தாரணை ஆவதில்லை. பிறகு அதிர்ஷ்டத்தில் இல்லை என்று நாம் கூறுவோம். எவ்வளவு தலையிலடித்து கொண்டாலும் கூட, ஸ்ரீமத் படி நடப்பதில்லை. பாபா என்ன ஆகிறது என்று குழந்தைகள் கேட்கிறார்கள். நீங்கள் சரியாக படிப்பதில்லை என்று பாபா கூறுவார். இதில் ஆசீர்வாதத்தின் விஷயம் கிடையவே கிடையாது. நான் கற்பிக்கிறேன். நீங்கள் உங்கள் மீது நீங்களே படிப்பதற்கான கருணை காட்டுங்கள். ஸ்ரீமத் படி நடப்பது. இதுவே கிருபை ஆகும். ஸ்ரீமத்படி நடப்பதில்லை என்றால் தங்கள் மீது தாங்களே கருணையற்றவராகி சபித்துக் கொள்கிறார்கள். தந்தையிடமிருந்து ஆஸ்தி பெறாமல் இராவணனின் வழிப்படி நடந்து தங்களை சபித்துக் கொள்கிறார்கள். தந்தை ஆஸ்தி அளிக்க வந்துள்ளார். சிரஞ்சீவீ பவ - நீடூழி வாழ்க ! என்று ஆசீர்வதிக்கிறார். அதாவது சொர்க்கவாசி ஆவீர்களாக ! சொர்க்கத்திற்குத் தான் அமரபுரி என்று கூறப்படுகிறது. அமரநாத் தான் இது போல ஆசீர்வாதம் அளிக்கிறார். அமரபுரியின் தேவதைகள் தூய்மையாக இருந்தார்கள் அல்லவா? எல்லைக்குட்பட்ட சம்பந்தங்கள் ஆகியவற்றிலிருந்து மோகத்தை தியாகம் செய்யவே வேண்டும். இப்பொழுது பாபாவிடம் செல்ல வேண்டும். தேகத்தின் மோகத்தின் காரணமாக உங்களுக்கு இங்கு இருப்பவை நினைவிற்கு வருகின்றன என்று பாபா கூறுகிறார். எனவே ஆத்ம உணர்வுடையவர் (தேஹீ அபிமானி) ஆகுங்கள். அப்பொழுது உங்களுக்கு கடைசியில் முக்திதாமம் அல்லது சுக தாமத்தின் நினைவு வரும். சாந்திதாமம் மற்றும் சுகதாமம். இது துக்கதாமம் ஆகும். முதல், இடை, கடை, புதிய உலகம், நடு உலகம் மற்றும் பழைய உலகம். பாதி காலம் முடிவடையும் பொழுது பிறகு பழைய உலகத்தின் பெயர் ஆரம்பமாகிறது. இந்த பழைய உலகம் இப்பொழுது புதியதாக ஆகிக் கொண்டிருக்கிறது. மீண்டும் எப்படி புதியதாக ஆகிக் கொண்டிருக்கிறது என்பதை வந்து பாருங்கள். புரிந்து கொள்ளுங்கள். ஒரு கண்காட்சி மூலம் 2-4 பேர் நிலைத்து விட்டார்கள் என்றால் கூட, ஆஹா சௌபாக்கியம்! நாளுக்கு நாள் இந்த கண்காட்சிகள் கூட விருத்தி அடைந்து கொண்டே போகும். போகப்போக தினமும் பிறகு 10 ஆயிரம் பேர் கூட வருவார்கள். பெரிய பெரிய மண்டபம் பெரிய பெரிய படங்கள் கூட, இருக்கும். புரிய வைப்பவர்களும் கூட கூர்மையானவர்களாக இருப்பார்கள். கடைசியில் மகிமை வெளிப்படவே வேண்டி உள்ளது. ஹே பிரபு, பதீதமான உலகத்தை பாவனமாக ஆக்கக் கூடிய உங்களுடைய வழி எல்லாவற்றையும் விட தனிப்பட்டது என்பார்கள். பக்தியின் நிறைய பழக்கம் ஏற்பட்டுள்ளது. திவால் ஆகி விட்டார் அல்லது யாராவது இறந்து விட்டார் என்றால், குருமார்கள், பார்த்தீர்களா, பக்தியை விட்டு விட்டார்கள் இல்லையா, அதனால் தான் இப்படி ஆகியது என்பார்கள். மாயாவி தடைகள் ஏற்படுகின்றன. ஸ்ரீமத்தை விடக் கூடாது. மாயை மிகவுமே மோகினி ஆகும். எவ்வளவு நாகரீகமானவர்களாக, ஆடம்பரமாகி விட்டுள்ளார்கள். எங்களைப் பொருத்தவரை இது சொர்க்கமாக ஆகி விட்டுள்ளது என்று நினைக்கிறார்கள். மாயையின் பகட்டு இராவண இராஜ்யத்தின் வீழ்ச்சி ஆகும். விஞ்ஞானத்தின் காரணமாக மாயையின் பகட்டு நிறைய உள்ளது. காந்தி சொர்க்கத்தை அமைத்தார் என்று நினைக்கிறார்கள். உங்களுக்கு இப்பொழுது சொர்க்கத்தின் ஞானம் கிடைத்துள்ளது. அதனால் தான் இது நரகம் என்பதைப் புரிந்துள்ளீர்கள். இந்த இராஜ்யம் கானல் நீரைப் போன்றதாகும் (துரியோதனனின் உதாரணம்). இந்த இராஜ்யம் இப்பொழுது போய் விட்டது போலவே தான். கல்பத்தின் விஷயம் ஆகும். கல்ப கல்பமாக புதிய உலகம் ஆகிக் கொண்டே இருக்கிறது. மேலும் பழைய உலகம் முடிவடைகிறது. திரி மூர்த்தி சிவன் கூட இருக்கிறார். பிரம்மா மூலமாக ஸ்தாபனை செய்து கொண்டிருக்கிறார். சங்கரன் மூலமாக அழிவு ஏற்படப் போகிறது. பின்னர் யார் இராஜயோகம் கற்கிறார்களோ அவர்களே ஆட்சி புரிவார்கள். தெய்வீக இராஜ்யத்தை ஸ்தாபனை செய்து அதை ஜன்ம ஜன்மாந்திரமாக பாலனை செய்கிறார்கள். இதை புத்தியில் தாரணை செய்ய வேண்டும். பிறகு சேவை செய்ய வேண்டும். உண்மையான கீதையைப் படிப்பவர்கள் நீங்கள் ஆவீர்கள். கேட்க வேண்டும் மற்றும் கூற வேண்டும். முட்களை மலராக ஆக்க வேண்டும். நீங்கள் அரைகல்பத்திற்கு துக்கத்திலிருந்து விடுபடுகிறீர்கள். எப்படி ஞாயிற்றுக் கிழமை அன்று எல்லோருக்கும் விடுமுறை இருக்கும் அல்லவா? அதே போல அரைகல்பம் நீங்கள் துக்கத்திலிருந்து அழுது புலம்புவதிலிருந்து விடுபட்டு விடுகிறீர்கள். நல்லது.இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்து கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு, ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.தாரணைக்கான முக்கிய சாரம்:

1. கர்ம பந்தனத்திலிருந்து விடுபட்டு ஆன்மீக படிப்பை தினமும் படிக்க வேண்டும். உயிருள்ள வரையும் அவசியம் இக்கல்வியைக் கற்க வேண்டும்.2. எல்லைக்குட்பட்ட சம்பந்தங்கள் மற்றும் தேகத்தின் மீதுள்ள மோகத்தை தியாகம் செய்து தங்களது சாந்திதாமம் மற்றும் சுக தாமத்தை நினைவு செய்ய வேண்டும். சகவாச தோஷத்திலிருந்து தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும்.வரதானம்:

ஒவ்வொரு நேரமும் தனது இதயத்தில் தந்தையின் வெளிப்பாடு (பிரத்யட்சதா) என்ற கொடியைப் பறக்க விடக் கூடிய திட சங்கல்பம் உடையவர்களாக ஆவீர்களாக.எப்படி சிநேகத்தின் காரணமாக நாம் தந்தையை பிரத்யட்சம் செய்தே தீர வேண்டும் என்று ஒவ்வொரு வருடைய மனதிலும் தோன்றுகிறது. அதே போல தனது சங்கல்பம் பேச்சு மற்றும் செயல் மூலமாக இதயத்தில் பிரத்யட்சதா என்ற கொடியை பறக்க விடுங்கள். எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருப்பதற்கான நடனம் புரியுங்கள். சில சமயம் மகிழ்ச்சி, சில சமயம் மன சோர்வு - அப்படி அல்ல! உயிருள்ள வரையும் குஷியாக இருக்க வேண்டும் என்ற அப்பேர்ப்பட்ட திடசங்கல்பம் அல்லது விரதத்தை தாரணை செய்யுங்கள். இனிமையான பாபா, பிரியமான பாபா, என்னுடைய பாபா - இதே கீதம் தானாகவே ஒத்துக்கொண்டே இருக்க வேண்டும். அப்பொழுது பிரத்யட்சதாவின் கொடி பறக்க ஆரம்பிக்கும்.சுலோகன்:

விக்ன விநாசகர் ஆக வேண்டும் என்றால் சர்வ சக்திகளில் நிறைந்தவர் ஆகுங்கள்***OM SHANTI***

Whatsapp Button works on Mobile Device only