BK Murli 22 March 2017 Tamil

BK Murli 22 March 2017 Tamil

22.03.2017    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


இனிமையான குழந்தைகளே! பாபா வந்திருக்கிறார், உங்களை உண்மையிலும் உண்மையான வைஷ்ணவர்களாக ஆக்குவதற்கு. நீங்கள் இப்போது மாற்றலாகி கருப்பிலிருந்து வெள்ளையாக (தூய்மையாக) ஆகிக் கொண்டிருக்கிறீர்கள்.கேள்வி:

அனைவரின் விருப்பங்களை நிறைவேற்றக் கூடிய குழந்தைகளாகிய உங்களுடைய டைட்டில் (பட்டப் பெயர்) என்ன? நீங்கள் எந்த ஓர் ஆசையை நிறைவேற்ற வேண்டும்?பதில்:

நீங்கள் அனைவருடைய மனதின் ஆசைகளைப் பூர்த்தி செய்யக் கூடிய ஜெகதம்பாவின் குழந்தைகள், காமதேனு. அனைவருடைய விருப்பமும்-நமக்கு முக்தி ஜீவன்முக்தி கிடைக்க வேண்டும் என்பதே. ஆகவே ஜெகத் அம்பா, ஜெகத் பிதாவின் குழந்தைகள் நீங்கள் அனைவருக்கும் முக்தி ஜீவன் முக்திக்கான வழியைச் சொல்லிக்கொண்டே இருங்கள். இது தான் உங்களுடைய வேலையாகும்.பாடல்:

அம்பா நீ ஜெகதம்பா􀀀ஓம் சாந்தி.

இது மம்மாவுக்காக பக்தர்களின் மகிமை. பக்தர்களைக் காப்பவர் என்று சொல்கின்றனர். இப்போது இது பக்தி மார்க்கம் ஆகி விட்டது. மம்மாவின் மகிமை சிவபாபாவுக்குப் பிறகு தான். எப்போது பரமபிதா பரமாத்மா வருகிறாரோ, அப்போது வந்து ஜெகத் அம்பாவைப் படைக்கிறார். படைப்பின் அர்த்தமே என்னவென்றால் மாற்றி அமைப்பது. கருப்பானவர்களை வெள்ளையாக (அசுத்தமானவர்களைத் தூய்மையானவர்களாக) மாற்றுகிறார். இச்சமயம் ஜெகத் அம்பாவோ ஒருவர் தான். எப்படி சிவனுடைய சித்திரமோ ஒன்று தான் என்றாலும் பிறகு அவருக்குப் பலவிதமான பெயர்களை வைத்து விதவிதமான கோவில்களைக் கட்டியுள்ளனர். அநேக விதமாக மகிமையும் செய்கின்றனர். பரமபிதா பரமாத்மா ஒருவர் தான். அப்படி ஜெகத் அம்பாவும் ஒருவர் தான். இரண்டு புஜங்கள் கொண்டவர். 8 புஜங்களை உடைய எந்த ஒரு தேவி-தேவதையும் கிடையாது. பிரஜாபிதா அல்லது ஜெகத் அம்பாவும் கூட இரண்டு புஜங்கள் உள்ளவர்கள் தான். ஜெகத்அம்பாவுக்கு மகிமை கல்கத்தாவில் உள்ளது. கல்கத்தாவின் காளி புகழ் பெற்றவர். அவருடைய உருவமும் மிகவும் பயங்கரமாக உருவாக்கப்பட்டுள்ளது. மண்டையோடுகளின் மாலையும் அணிந்துள்ளார். ஜெகத் அம்பாவோ பலியை ஏற்றுக் கொள்வதில்லை. அவரோ ஜெகத்தை (உலகம்) படைப்பவராகிறார். அவர் பலியை எப்படிப் பெற்றுக் கொள்ள முடியும்? அல்லது அவர் மாம்சாகாரியாக (மாமிசம் உண்பவராக) எப்படி இருக்க முடியும்? அவருடைய கோவில் கல்கத்தாவில் மட்டுமல்ல, அநேக இடங்களில் உள்ளன. மாதா தன்னுடைய குழந்தைகளின் பலியைப் பெற்றுக் கொள்ள மாட்டாள். பக்தி எவ்வளவு கடினமானது! இப்போது அவர்களுக்கு யாராவது அமர்ந்து புரிய வைக்க வேண்டும்-ஜெகத் அம்பாவுக்கு இத்தகைய பயங்கர உருவம் கிடையாது என்று. இந்த மாதிரி பலியையும் ஏற்பதில்லை. அவர்களிலும் ஒருவர் வைஷ்ணவ தேவி, மற்றவர் மாம்சாகாரி. இப்போது யார் மாம்சாகாரியாக உள்ளாரோ, அவர் பிறகு வைஷ்ணவர் ஆகிறார். மம்மாவோ குமாரியாக இருக்கலாம். எதையும் சாப்பிட்டிருக்கலாம். ஜெகத் அம்பா பிரம்மாவின் மகள், குமாரி ஆவார். இப்போது குமாரியை எப்படி அம்பா எனச் சொல்ல முடியும்? இது புரிந்து கொள்ள வேண்டிய விஷயமாகும். கல்கத்தாவில் அதிகப் பூஜை நடைபெறுகின்றது. மிக பயங்கர முகத் தோற்றத்தை உருவாக்கியுள்ளனர். ஜெகத் அம்பாவுக்கோ அந்த மாதிரி முகத் தோற்றம் இருக்க முடியாது. அவர் அனைவருடைய மனதின் ஆசைகளை நிறைவேற்றுபவர். அவர் உண்மையிலும் உண்மையான வைஷ்ணவ தேவி ஆவார். அவருடைய முந்தைய ஜென்மத்தில் நிச்சயமாக மாம்சாகாரியாக இருந்திருப்பார். பிறகு வைஷ்ணவ அல்லது தூய்மையான தெய்விக குணங்கள் உள்ளவராக ஆகிக் கொண்டிருக்கிறார். அனைத்தும் சங்கமயுகத்தின் விஷயங்கள் தான். ஆக, ஜெகத் அம்பாவின் கோவிலுக்குப் போய் மகிமை செய்ய வேண்டும். முதலில் சொல்ல வேண்டியது நிராகார் ஆத்மாக்களின் தந்தையும் ஒருவர் தான். பிறகு சாகார் பிரஜாபிதா பிரம்மாவும் ஒருவரே. பிரம்மாவின் மகள் சரஸ்வதியும் ஒருவர். அவர் ஒரு போதும் பலி முதலியவற்றை ஏற்றுக் கொள்வதில்லை. முதலில் அழகாக இருந்தார். இப்போது கருப்பாக உள்ளார், பிறகு மீண்டும் அழகாக ஆவார். ஆக, முழுக் குடும்பமுமே அழகாக ஆகி விடும். அநேக இடங்களில் அம்பாவை இரு புஜங்கள் கொண்டவராகவே காட்டுகின்றனர். (நல்ல விதமாக) புரிய வைப்பதால் எவரும் புரிந்து கொள்ளவும் செய்வார்கள். சிலரோ சண்டை பிடிக்கவும் செய்வார்கள். தொந்தரவு செய்வதில் தாமதப்படுத்த மாட்டார்கள். ஆக, புரிய வைப்பதில் சாமர்த்தியம் (புத்தி கூர்மை) வேண்டும்.குழந்தைகள் நீங்கள் நன்மை செய்பவர்கள். மம்மா முதலில் கல்கத்தாவுக்குச் சென்றார் என்றாலும் இது போல் முரளி வகுப்பு நடத்தவில்லை. ஜெகத் அம்பா ஒருவர். நீங்கள் குழந்தைகள் ஏராளமானோர் பெயரோ ஒருவருக்குத்தான் இருக்கும் அல்லவா? ஒருவருக்குத் தான் அநேக கோவில்கள் கட்டியுள்ளனர். இப்போது கல்கத்தாவில் பக்தர்களை இந்தப் பூஜையில் இருந்து விடுவிப்பது எப்படி? அவர்களையும் கூட பூஜைக்குரியவர்களாகவோ ஆக்க வேண்டும் இல்லையா? ஆகவே அங்கே சென்று யாராவது புரிய வைக்க வேண்டும். இச்சமயம் அந்த ஜெகத் அம்பா அனைவருடைய மனதின் ஆசைகளை நிறைவேற்றுபவராக உள்ளார். அவர் காமதேனு. எந்த ரீதியில் அவர் மன ஆசைகளை நிறைவேற்றுகிறார் என்பது யாருக்கும் தெரியாது. நீங்கள் காமதேனு ஜெகதம்பாவின் குழந்தைகள். வெறும் கௌமாதா அல்ல. ஆண்களும் இருக்கிறார்கள். அவர்களும் அநேகருடைய மனதின் ஆசைகளை நிறைவேற்றுகின்றனர். உங்களுடைய தொழிலே அனைவருடைய மனதின் ஆசைகளை நிறைவேற்றுவதாகும். எங்காவது சகோதரர்களும் கூட சென்டரை நடத்துகின்றனர். அவர்களின் புத்தியில் வருகிறது - நாமும் கூட அனைவருடைய மனதின் ஆசைகளை நிறைவேற்ற வேண்டும், அதாவது முக்தி ஜீவன்முக்திக்கான வழி சொல்ல வேண்டும் என்று. சொர்க்கத்தின் ஆஸ்தியைக் கொடுக்க வேண்டும். யார் கல்பத்திற்கு முன் பெற்றுக் கொண்டார்களோ, அவர்கள் தான் இப்போதும் பெற்றுக் கொள்வார்கள். ஆம், அங்கே அனைத்து விதமான சுகங்களும் கிடைக்கும். ஜெகத் பிதா, ஜெகத் அம்பா இந்த இருவரையும் படைப்பவர் சிவபாபா. இவர்கள் மூலமாக எவ்வளவு மனதின் ஆசைகள் நிறைவேறுகின்றன! கல்கத்தாவில் அதிகம் பூஜைகள் நடைபெறுகின்றன. ஒவ்வொருவரும் அவரவர்களுக்கு பிடித்தமானவரை ஏற்றுக் கொள்பவர்களாக இருக்கின்றனர். சிலர் வைஷ்ணவ தேவியை ஏற்றுக் கொள்பவராக இருப்பார்கள். அவர்கள் நீங்கள் சொல்லும் விஷயங்களில் உடனே திருப்தி அடைவார்கள். அவர்களுக்குச் சொல்லுங்கள் – உங்களுக்கு இந்த ஜெகதம்பா மூலம் இராஜ்ய பாக்கியம் கிடைத்திருந்தது. ஜெகத் அம்பாவுக்குப் பிறகு எங்கிருந்து கிடைத்தது? ஜெகத் பிதாவிடமிருந்து. அவருக்கு எங்கிருந்து கிடைத்தது? சிவபாபாவிடமிருந்து. அவர் முழு சிருஷ்டியையும் படைப்பவர் என்பதை நீங்கள் நல்லபடியாகப் புரிய வைக்க முடியும். ஜெகத் அம்பாவை அனைவரும் ஏற்றுக் கொள்கின்றனர். நிச்சயமாக ஜெகத் அம்பா மற்றும் ஜெகத் பிதாவுக்கும் ஆஸ்தி சிவபாபாவிடம் இருந்து கிடைக்கின்றது. பிறகு அவர் மூலமாக அனைத்துக் குழந்தைகளுக்கும் கிடைக்கிறது. ஜெகத் அம்பா ஒருவர் தான் - இரண்டு புஜங்கள் உள்ளவர். அநேக புஜங்கள் கிடையாது. சரஸ்வதி பிரம்மாவின் மகள் ஞான-ஞானேஸ்வரி. ஆனால் அவருடைய உருவத்தை மிக பயங்கரமாகக் காட்டியுள்ளனர். ஆக, அதைப் பற்றிப் புரிய வைக்க வேண்டி உள்ளது - அதாவது ஜெகதம்பாவுக்கு அது போன்ற பயங்கர உருவம் கிடையாது. சதோபிரதான மனிதரில் இருந்து பிறகு தமோபிரதானமாக ஆகின்றனர். தமோபிரதான மனிதர்கள் பிறகு சதோபிரதான மனிதர்களைப் பூஜிக்கின்றனர். ஜெகத் அம்பா மனிதராகிறார். ஏனென்றால் ஜெகம் என்பது இங்கே தான் உள்ளது. மூலவதனம், சூட்சுமவதனத்தை ஜெகம் எனச் சொல்ல மாட்டார்கள். சூட்சுமவதனத்தில் தேவதைகள், மூலவதனத்தில் ஆத்மாக்கள் உள்ளனர். ஆக, இந்த விசயங்கள் அனைத்தும் புரிய வைக்கப்பட வேண்டியவை. மற்றப்படி தந்தை மற்றும் ஆஸ்தியை நினைவு செய்ய வேண்டும். 84 பிறவிகளின் கதையை பாரதவாசிகளுக்குத் தான் சொல்ல வேண்டியுள்ளது. யார் தேவதையாக இருந்தனரோ, அவர்கள் இப்போது இல்லை. யார் தேவி-தேவதைகளின் பூஜாரியாக உள்ளனரோ, அவர்கள் தான் இந்த அனைத்து விஷயங்களையும் புரிந்து கொள்வார்கள். அவர்கள் பிறகு உயர்ந்த பதவி பெறுவதற்காக முயற்சியும் செய்வார்கள். அநேகக் குழந்தைகள் நினைக்கின்றனர் - நாமோ பாபாவின் குழந்தைகள் ஆகி விட்டோம், நிச்சயமாக உயர்ந்த பதவி பெறுவோம் என்று. ஆனால் சிந்தனை செய்து பாருங்கள், முதலேயே நிச்சயமாக நன்றாகப் படிப்பீர்களானால் நல்ல பதவி பெறுவீர்கள். படிக்கவில்லை என்றால் மேலும் மேலும் தீய காரியங்களை செய்து கொண்டே இருப்பார்கள். அதனால் ஒன்று, தண்டனை பெற வேண்டியதிருக்கும். இரண்டாவது பிறகு வந்து வேலைக்காரர்கள், தாச-தாசிகளாக ஆவார்கள். ஏனென்றால் பாவ கர்மங்களின் சுமை அதிகம். பல பிறவிகளுக்கு தாசி ஆகி விட்டு, பிறகு பதவி அடைவதால் என்ன நன்மை? இதை விட பிரஜைகளுக்கு மிகுந்த செல்வம் கிடைக்கிறது. அவர்கள் யாருக்கும் தாச-தாசி ஆவதில்லை. இவை அனைத்தும் புரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களாகும். மற்றப்படி முக்கியமான விஷயம் பாபா புரிய வைத்துக் கொண்டிருந்தார், வைஷ்ணவ தேவி தான் லட்சுமி ஆகிறார். லட்சுமியின் கோவில் பெரியதா, வைஷ்ணவதேவியின் கோவில் பெரியதா? மகிமை யாருக்குப் பெரியது? அவர் ஞான-ஞானேஸ்வரி. லட்சுமியை ஞான-ஞானேஸ்வரி எனச் சொல்ல மாட்டார்கள். அதனால் மகிமை ஜெகதம்பாவுக்குத் தான். பெரிய மேளாவும் அவருக்குத் தான் நடைபெறுகிறது. லட்சுமியை தீபாவளியின் போது அழைக்கின்றனர். இது ஆத்மாக்களுக்குப் பரமாத்மாவோடு மேளா (சந்திப்பு). இந்த விஷயங்களை மனிதர்கள் யாரும் புரிந்து கொள்ளவில்லை. புரிய வைப்பவர் மிகவும் புத்திசாலியாக இருக்க வேண்டும். அவர் யுக்தியுடன் அன்புடன் காரியமாற்ற வேண்டும். இவர் சரியாகப் புரிய வைக்கிறார் என்று யாராலும் புரிந்து கொள்ளப்பட வேண்டும். ஸ்ரீலட்சுமி எவ்வளவு அழகாக இருந்தார்! லட்சுமி-நாராயணருக்கு இவ்வளவு பூஜை நடைபெறுகிறது என்றால் அவர்களும் பக்கா வைஷ்ணவராக இருந்தனர். ஜெகத் அம்பாவும் வைஷ்ணவர். பாபா அவர்களுக்கு இராஜயோகம் கற்பித்து மனிதரில் இருந்து தேவதை ஆக்கியிருக்கிறார். உங்களுக்கு இப்போது பூஜை நடைபெற முடியாது. ஏனென்றால் சரீரமோ தூய்மையாக இல்லை. நீங்கள் சம்பூர்ணமாக ஆகி விட்டீர்களானால் உங்களுடைய சரீரம் மாறி விடும். அப்போது நீங்கள் பூஜைக்குத் தகுதியானவர்களாக ஆகி விடுவீர்கள். உண்மையில் சந்நியாசிகளுக்குப் பூஜை செய்யக் கூடாது. தற்சமயமோ சிவோஹம் (நானே சிவன்) எனச் சொல்லி அமர்ந்து கொண்டு பூஜை செய்விக்கின்றனர். அவர்களிலும் கூட ஒரு சிலருக்கு மடம் உள்ளது, அவர்கள் தங்களுக்குப் பூஜை செய்ய வைப்பதில்லை. இப்போது சிவனோ நிராகாராக உள்ளார். அவர் தமது பூஜையை எப்படிச் செய்ய வைப்பார்? பாருங்கள், சிவபாபா இவருக்குள் வருகிறார் என்றால் தமது பூஜை செய்விப்பதில்லை. பாபாவோ வந்து பூஜாரியிலிருந்து பூஜைக்குரியவராக ஆக்குகிறார். பூஜை செய்வதற்கு எப்படிக் கற்றுத் தருவார்? சிவபாபா எதையும் செய்ய வைப்பதில்லை. பாபா சொல்கிறார், ராம்-ராம் என்று கூட வாயினால் சொல்லாதீர்கள். பாபாவை மட்டும் நினைவு செய்ய வேண்டும். நினைவு செய்வது என்பது ஜெபம் கிடையாது. குழந்தைகள் தந்தையிடமிருந்து ஆஸ்தி பெறுகிறார்கள். குழந்தை தந்தையை எண்ணி ஜெபம் செய்ய மாட்டார்கள். நீங்களும் கூட ஜெபம் செய்ய வேண்டாம். ஜெபம் மற்றும் நினைவுக்கிடையில் இரவு- பகலுக்குள்ள வேறுபாடு உள்ளது. முக்கிய கருத்துகளோ ஏராளமாக, புதிது-புதிதாகக் கிடைத்துக் கொண்டே இருக்கின்றன - புரிய வைப்பதற்காக. இதுவும் அவசியம் தான், இவரும் தந்தை தான். இவரிடமிருந்து எல்லையற்ற ஆஸ்தி மற்றும் லௌகிக் தந்தையிடமிருந்து எல்லைக்குட் பட்ட ஆஸ்தி கிடைக்கின்றது. இந்தப் பரலௌகிகத் தந்தை கல்பத்திற்கு முன்பும் கூட ஆஸ்தி கொடுத்திருந்தார். இப்போது மீண்டும் கொடுப்பதற்காக வந்துள்ளார். புத்தியில் ஞானம் முழுவதையும் சிந்தனை செய்ய வேண்டும். அதன் மூலம் மனிதர்கள் தேவதை ஆகிவிட வேண்டும். பாருங்கள், ஞான மார்க்கத்தில் புரிய வைப்பதற்கு மிகுந்த முயற்சி தேவைப் படுகிறது. அதன் மூலம் மனிதர்களின் வாழ்க்கை வைரம் போல் ஆகிவிட வேண்டும். துக்கத்திலோ அநேகர் உள்ளனர். ஒருவர் மற்றவரோடு சண்டையிட்டுக் கொண்டே இருக்கின்றனர். பாபா வந்து ஈஸ்வரிய சம்பிரதாயத்தை உருவாக்கிப் பிறகு தெய்விக சம்பிரதாயத்தை உருவாக்குகிறார். அதனால் அங்கே சண்டை-சச்சரவின் விஷயமே கிடையாது. ஈஸ்வரிய தர்பாரில் அசுரர் யாரும் இருக்க முடியாது. அசுத்த ஆடைகளுடன் (விகாரி ஆத்மா) இங்கே அமர்வதற்கு அனுமதி கிடையாது. பாபா புரிய வைத்துக் கொண்டிருக்கிறார், குழந்தைகளே, ஒரு போதும் தங்களுக்குள் சண்டை-சச்சரவு செய்யக் கூடாது. சத்குருவின் பெயரைக் கெடுப்பவர்கள் நல்ல பதவி பெற முடியாது. அதாவது சத்யுகத்தில் உயர்ந்த பதவி பெற மாட்டார்கள. சத்குரு சொர்க்கத்தின் அதிபதி ஆக்குபவர், அவருக்கு நிந்தனை செய்தால் உயர்ந்த பதவி பெற முடியாது. இவை அனைத்தும் இங்கே (சங்கமயுகத்தில்) உள்ள விஷயங்களாகும். ஆனால் அவர்கள் (சந்நியாசிகள்) தங்களுக்காகச் சொல்லி விட்டனர். மேலும் மனிதர்களை பயமுறுத்திக் கொண்டே இருக்கின்றனர். இங்கோ முழுமையாகப் தூய்மையாக வேண்டும். அவர்கள் குருவை அமர்த்திக் கொள்கின்றனர். ஆனால் தூய்மை ஆவதில்லை. இல்லறவாசியை குருவாக ஆக்குவதால் எந்த ஒரு பயனும் கிடையாது. இது பிரஜைகள் மீது பிரஜைகள் செய்யும் இராஜ்யம். பிறகு தெய்விக இராஜ்யத்தை உருவாக்கக் கூடிய சக்தி வேண்டும். பாபா வந்துள்ளார், அசுர உலகத்தை தெய்விகமாக ஆக்குவதற்காக. தெய்விக தர்மத்தின் ஸ்தாபனை ஆகி விடும், மற்ற அனைத்து தர்மத்தினரும் அழிந்து போவார்கள். பகவான் வந்து பலனைக் கொடுப்பார் எனச் சொல்கின்றனர். இதிலிருந்து தெளிவாகிறது-யாருமே நிர்வாண்தாமத்திற்குச் செல்ல முடியாது. பாபா தான் வந்து இராஜயோகத்தைக் கற்பிக்கிறார். பாபா சொல்கிறார், நான் உங்களுடைய பரமபிதா பரமாத்மா. என்னிடம் தான் முழு ஞானமும் உள்ளது. என்னைத் தான் பதீத- பாவனா என அழைக்கின்றனர். நான் தான் உங்களுக்கு இராஜயோகம் கற்பிக்கிறேன். நீங்கள் பிறகு மற்றவர்களுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும். புரிய வைப்பவர்கள் அனைவரும் ஒரே மாதிரி இருப்பதில்லை. நீங்கள் முன்பாகவே குறிப்பெடுத்துக் கொள்ள வேண்டும். நன்றாக சொற்பொழிவு செய்பவர்களுக்கும் கூட அந்தச் சமயத்தில் அனைத்துப் பாயின்ட்டுகளும் நினைவில் வருவதில்லை. பின்னால் நினைவு வருகிறது - இதைச் சொல்ல விரும்பினோம் என்று. குறிப்புகள் வைத்துக் கொள்ள வேண்டும். ஆனால் குறிப்புகள் வைத்துக் கொண்டலும் பிறகு அப்படியே விட்டு விட்டோம், படிக்கவில்லை என்று ஆகிவிடக் கூடாது. எப்போது ஸ்ரீமத் படி நடக்கிறீர்களோ, அப்போது தான் தாரணை ஆகும். அதிகாலை எழுந்து பாபாவை அவசியம் நினைவு செய்ய வேண்டும். பிறகு முக்கிய கருத்துகளை ரிப்பீட் செய்யுங்கள். மற்றவர்களுக்குச் சொல்வீர்களானால் அப்போது உயர்ந்த பதவி பெறுவீர்கள். இராஜா ஆவதொன்றும் சாதாரண விஷயம் கிடையாது. புரிந்ததா? முயற்சி செய்ய வேண்டும். நல்லது.இனிமையிலும் இனிமையான தேடிக் கண்டெடுக்கப் பட்ட குழந்தைகளுக்கு தாய்-தந்தையாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மிகக் குழந்தைகளுக்கு ஆன்மிகத் தந்தையின் நமஸ்காரம்.தாரணைக்காக முக்கிய சாரம்:

1. பூஜைக்குரியவராக ஆவதற்காக முழுமையான புருஷார்த்தம் செய்ய வேண்டும். தனக்கே பூஜை செய்விக்கக் கூடாது. ஆத்மா, சரீரம் இரண்டுமே தூய்மை ஆகும் போது தான் பூஜை செய்வதற்குத் தகுதியானவராக ஆவீர்கள்.2. திறமைசாலி ஆவதுடன் புத்திசாலி ஆகி நன்மை செய்யும் எண்ணம் வைத்து சேவை செய்ய வேண்டும். தெய்விக குணங்கள் உள்ள உண்மையான வைஷ்ணவர் ஆக வேண்டும்.வரதானம்:

சர்வ சக்திகளின் மூலமாக ஒவ்வொரு புகாரையும் (கம்ப்ளைன்ட்) முழுமையாக (கம்ப்ளீட்) தீர்வு கண்டு முடிக்கக்கூடிய சக்திசாலி ஆத்மா ஆகுக.உள்ளுக்குள் ஏதேனும் குறைபாடு இருக்குமானால் அதன் காரணத்தைப் புரிந்து கொண்டு நிவாரணம் செய்யுங்கள். ஏனென்றால் மாயாவின் நியமம் உள்ளது - எந்த ஒரு பலவீனம் உங்களிடம் உள்ளதோ, அதே பலவீனத்தின் மூலம் அது உங்களை மாயாஜீத் ஆக விடாது. மாயா அதே பலவீனத்தின் லாபத்தை எடுத்துக் கொள்ளும். மேலும் கடைசி நேரத்தில் கூட அதே பலவீனம் ஏமாற்றம் தரும். அதனால் சர்வசக்திகளை சேமித்து, சக்திசாலி ஆத்மா ஆகுங்கள். மேலும் யோகத்தின் பயன்பாட்டின் மூலம் ஒவ்வொரு புகாரையும் தீர்வு கண்டு முடித்து விட்டு, முழுமை அடையுங்கள் (கம்ப்ளீட் ஆகி விடுங்கள்). - “இப்போது இல்லையேல் இனி எப்போதுமே இல்லை”. இதே சுலோகனை நினைவு வையுங்கள்.சுலோகன்:

சாந்தி மற்றும் பொறுமையின் சக்தி மூலம் விக்னங்களை முடித்துவிடுபவர் தான் விக்ன விநாசக் ஆவார்.


***OM SHANTI***