24 March 2017

BK Murli 25 March 2017 Tamil

BK Murli 25 March 2017 Tamil

25.03.2017    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


இனிமையான குழந்தைகளே! நினைத்து நினைத்து சுகத்தை அடையுங்கள். தந்தையை நினைவு செய்தீர்கள் என்றால், உடலின் பிரச்சனைகள் அழிந்துவிடும், நீங்கள் நோயற்றவர் ஆகிவிடுவீர்கள்.கேள்வி:

இந்த சமயத்தில் குழந்தைகளாகிய நீங்கள் யுத்த களத்தில் இருக்கிறீர்கள், வெற்றி அல்லது தோல்விக்கான ஆதாரம் என்ன?புதில்:

ஸ்ரீமத்படி நடப்பதன் மூலம் வெற்றியும், தன் மன வழி அல்லது பிறர் சொல்லும் வழிப்படி நடப்பதன் மூலம் தோல்வியும் கிடைக்கிறது. ஒருபுறம் இராவணன் வழிப்படி நடப்பவர்கள், மறுபுறம் இராமர் வழிப்படி நடப்பவர்கள் உள்ளனர். குழந்தைகளே! இராவணன் உங்களை மிகவும் துன்புறுத்திவிட்டான். இப்பொழுது நீங்கள் என்னிடத்தில் புத்தியின் தொடர்பை ஈடுபடுத்தினீர்கள் என்றால் விஷ்வத்தின் எஜமானர் ஆகிவிடுவீர்கள், ஒருவேளை, ஏதாவது ஒரு காரணத்தினால் தன்னுடைய வழிப்படி நடந்தீர்கள் என்றால், அல்லது மனஸ்தாபத்தில் வந்தீர்கள் என்றால் படிப்பை விட்டுவிட்டீர்கள் என்றால் மாயை முகத்தைத் திருப்பிவிடும், தோல்வியை அடைந்துவிடுவீர்கள். ஆகையினால், மிக மிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று தந்தை கூறுகின்றார்.பாடல்:-

உங்களுடைய உலகத்தின் நிலைமையைப் பாருங்கள்......ஓம் சாந்தி.

மனிதன் எவ்வளவு மாற வேண்டியுள்ளது! இதை பிராமணக் குழந்தைகளாகிய நீங்கள் மட்டும் தான் அறிந்து கொள்ளமுடியும். மனிதர்கள் எவ்வளவு உயர்ந்ததிலும் உயர்ந்த நிலைக்குச் செல்ல முடிகிறது, பிறகு அதே மனிதர்கள் எவ்வளவு கீழானதிலும் கீழான நிலையை அடைகிறார்கள். மனிதர்கள் சத்யுக சதோபிரதான உலகின் எஜமானர் ஆக முடியும் மற்றும் மனிதர்களே தமோபிரதான ஒரு காசுக்கு பெறுமானம் இல்லாதவர்கள் ஆகின்றனர். இவை அனைத்தையும் எல்லையற்ற தந்தை மூலம் நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். ஒருவர் தான் தூய்மையற்றவரை தூய்மை ஆக்கக்கூடியவர் (பதீதபாவனர்), சத்கதியை வழங்கும் வள்ளல் ஆவார். அவரே தூய்மையானவர் ஆக்குகின்றார். இராவணன் பிறகு தூய்மையற்றவர் ஆக்குகின்றார். பின்னர், பரமபிதா பரமாத்மா வந்து எவ்வளவு உயர்ந்தவர் ஆக்குகின்றார்! ஆகையினாலேயே, ஈஸ்வரனுடைய கதி, வழி தனிப்பட்டது என்று புகழப்பட்டுள்ளது. அவரது மகிமையும் கூட அனைவருடையதையும் விட தனிப்பட்டது ஆகும். தந்தையின் மகிமை எல்லையற்றதாகும். ஏனெனில், வேறு எவருடைய வழியும் அவருடைய வழிகாட்டுதல் போல் இல்லை. அதுவே ஸ்ரீமத் பகவத் என்று கூறப்படுகிறது. கொள்கை (மத் -வழி) என்பது அனைவருக்கும் உள்ளது. வக்கீலின் கொள்கை, மருத்துவர்களின் கொள்கை, வண்ணானது கொள்கை, சந்நியாசி போன்றோரின் கொள்கை உள்ளது. ஆனாலும், ஈஸ்வரனே உமது கதி, கொள்கை(வழி) அனைத்தையும் விட தனிப்பட்டது என்று பாடப்படுகிறது. பரமபிதா பரமாத்மா தான் உயர்ந்ததிலும் உயர்ந்தவர், சிரேஷ்டத்திலும் சிரேஷ்;டமானவர் ஆவார். உங்களில் கூட உறுதியான நிச்சயபுத்தி உடையவர்கள் தான் இந்த விசயத்தைப் புரிந்து, புரியவைக்க முடியும். பாபாவின் ஸ்ரீமத் மூலம் நாம் எவ்வளவு சிரேஷ்டமானவர்கள் ஆகின்றோம் என்பதை அவர்கள் அறிவார்கள். பாபா அன்புக் கடல் (லவ்ஃ;;;புல்), அமைதிக்கடல் (பீஸ்ஃபுல்) ஆவார். ஒவ்வொரு விசயத்திலும் நிறைந்து (ஃபுல்) இருக்கின்றார் எனில், நீங்களும் கூட முழு (ஃபுல்) ஆஸ்தியையும் தந்தையிடமிருந்து பெற வேண்டும். முழு ஆஸ்தி எது? முதல் எண்ணில் விஷ்வத்தின் எஜமானர் ஆவது. குறைந்ததிலும் குறைந்த பட்சம் சூரிய வம்ச மாலையிலாவது மணியாக வேண்டும். நாமே பூஜைக்குரியவர்களாக இருந்தோம் பின்னர், நாமோ பூஜாரி ஆகிவிட்டோம். முழு உலகமும் அவர்களுடைய மாலையை உருட்டுகிறது. அவர்களோ அவசியம் நினைவு செய்கிறது. ஆனால் ,நினைவு செய்வதன் அர்த்தம் எதையும் அறியவில்லை. நினைத்து நினைத்து சுகத்தை அடையுங்கள் என்று கூறுகின்றனர். அதாவது ஒருவரை மட்டும் நினைவு செய்ய வேண்டும். பிறகு இந்த மனிதர்கள், அனைவரையும் ஏன் நினைவு செய்கின்றனர்? அனைவரையும் நினைவு செய்யாதீர்கள், ஒருவராகிய என்னை மட்டும் நினைவு செய்யுங்கள் என்று தந்தை கூறுகின்றார். தந்தையாகிய என்னை நன்றாக நினைவு செய்யுங்கள். என்னை நினைவு செய்யச் செய்ய நீங்கள் என்னை வந்தடைவீர்கள். இல்லறத்தில் இருந்து கொண்டு தந்தையாகிய என்னை மட்டும் நினைவு செய்யுங்கள் என்று நான் கட்டளை இடுகின்றேன். இது எவ்வளவு எளிய உபாயம்! நினைத்து நினைத்து சுகத்தை அடையுங்கள் அதாவது ஜீவன்முக்தி பதவியை அடையுங்கள் என்று கூறுகின்றார். உடலிலிருந்து பிரச்சனைகள் அனைத்தும் அழிந்துவிடும். அங்கே உங்களுடைய சரீரத்தில் எந்த நோயும் இருக்காது. இப்பொழுது தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு முன்னால் இருந்து கூறிக் கொண்டு இருக்கின்றார், நீங்கள் கேட்டு பிறருக்குக் கூறுகிறீர்கள். இந்த டேப் ரிக்கார்டு அனைவரையும் விட நன்றாக சொல்கிறது. சிறிது கூட தவறவிடுவதில்லை. மற்றபடி, முக பாவனையைக் காண முடியாது. பாபா இவ்வாறெல்லாம் புரிய வைத்திருப்பார் என்று புத்தி மூலம் புரிந்து கொள்ள முடியும். இந்த டேப் இயந்திரம் பொக்கிஷத்தின் சுரங்கம் ஆகும். மனிதர்கள், சாஸ்திரங்களை தானம் செய்கின்றனர். கீதையை அச்சடித்து தானம் செய்கின்றனர். இந்த டேப் எவ்வளவு அதிசயமான (ஒன்டர்ஃபுல்) பொருள்! கொஞ்சம் மென்மையானது, ஆகையால், கவனமாக இயக்க வேண்டியதாக உள்ளது. இது மருத்துவமனை மற்றும் பல்கலைக்கழகம் ஆகும். அனைவருக்கும் ஆரோக்கியம், செல்வத்தின் ஆஸ்தியை அளிக்க முடிகிறது. முரளி மூலம் தான் அனைத்தும் கிடைக்கிறது. ஆனால், மோகினி மாயை அத்தகையது, அனைத்தையும் மறக்க வைத்துவிடுகிறது அல்லது இராவணன் கவர்ந்திழுக்கிறாரா? அல்லது இராமர் கவர்ந்து இழுக்கின்றாரா? இராமர் ஒரு முறை ஈர்க்கின்றார், இராவணனோ அரைக்கல்பமாக ஈர்த்து ஈர்த்து முற்றிலும் மண்ணாக அழுக்காக ஆக்கிவிட்டது. இங்கு ஒவ்வொரு பொருளும் தமோபிரதானமாக உள்ளது. 5 தத்துவங்களும் கூட தமோபிரதானமாக உள்ளன! சத்யுகத்தில் 5 தத்துவங்கள் கூட சதோபிரதானமாக இருக்கும். எவ்வளவு உயர்ந்த வருமானம் இது! பெறுவது யார்? கோடியில் ஒருவர். குரங்கு புத்தியிலிருந்து தேவதைகளின் புத்தி உடையவர் ஆக்குவதற்கு எவ்வளவு உழைப்பு தேவைப்படுகிறது! முழு உலகமும் விகாரம் நிறைந்ததாக ஆகிவிட்டது. பிறகு, நான் தான் வந்து சிவாலயம் ஆக்குகின்றேன். பாரதம் சிவாலயமாக இருந்தது, இப்பொழுது இராவணன் விகாரம் நிறைந்ததாக ஆக்கிவிட்டது. அரைக்கல்பம் சிவாலயம், அரைக்கல்பம் விகார உலகம். குழந்தைகளே! இப்பொழுது நன்றாக சேவை செய்யுங்கள் என்று தந்தை கூறுகின்றார். பதீத பாவனரே வாருங்கள் ! என்று அவர்கள் பேச்சளவில் கூறுகின்றனர், ஆனால், அவரை அறியவில்லை. அனேக வழிகள், கொள்கைகள் உள்ளன. இது கீழான(பிரஷ்டாச்சார) உலகம் ஆகும் என்று சுயம் பகவான் கூறுகின்றார். மனிதர்கள் விஷத்தினால் (விகாரத்தினால்) கீழான நிலையை அடைகின்றனர். காமம் அனைத்தையும் விட மகா எதிரில் ஆகும். அங்கே இந்த விகாரம் இருப்பதில்லை. இந்த பாரதம் மிகவும் அன்பான தந்தையின் ஜென்மபூமி ஆகும். எதிரியான இராவணனை எரிக்கின்றனர். எவ்வாறு தேவிகளின் சித்திரத்தை உருவாக்கி, பூஜை செய்து பின்னர் மூழ்கடித்து விடுகின்றனர்! இவை அனைத்தும் மூட நம்பிக்கை ஆகும். பாதிரியார்கள் கூட இத்தகைய விசயங்களைக் கூறி அனேகரை மாற்றுகிறார்கள். இது நாடகத்தின் விதி ஆகும். ஆனால், அவர்கள் அதிகம் உழைக்கிறார்கள். இந்த சமயத்தில் முழு உலகத்திலும் இராவண இராஜ்யம் நடக்கிறது. இந்த சமயம் அனைவரும் இராவணனுடைய சீ, சீ வழிப்படி நடக்கின்றனர். பரமபிதா பரமாத்மா பதீத பாவனர் ஆவார். அவருக்கு அனைவரையும் விட அதிக மகிமை உள்ளது. அவரை சர்வவியாபி (அனைத்து இடங்களிலும் நிறைந்திருப்பவர்) என்று கூறிவிட்டனர். மனிதர்களின் எதிரில் வேறு யாரும் அல்ல. மாயையினாலேயே மனிதர்கள் துன்பத்திற்கு ஆளாகின்றனர். அதனிடமிருந்து ஒரு தந்தை தான் வந்து விடுவிக்கின்றார், வேறு எவரும் விடுவிக்க இயலாது. நான் உங்களிடம் அடைக்கலம் வந்துவிட்டேன், பிரபு என்னுடைய கௌரவத்தைக் காத்தருளுங்கள் இவ்வாறு பாடல் உள்ளது. இப்பொழுது உங்களை இராவணனிடமிருந்து காப்பாற்றுகின்றார். இராவணன் எவ்வளவு துன்புறுத்தினான்? பாபா ஒன்று கூறுகின்றார், இராவணன் வேறு பக்கம் அழைத்துச் செல்கிறான். எனது வழிப்படி நடங்கள் என்று தந்தை கூறுகின்றார், பிறகு இராவணன் மறக்க வைத்துவிடுகிறது. விஷ்வத்தின் எஜமானர் ஆக்குவதற்காகவே தந்தை வருகின்றார். இரத்தத்தினால் கூட எழுதிக் கொடுக்கின்றனர். ஆனாலும், மாயை மறக்க வைத்து முகத்தைத் திருப்பிவிடுகிறது. இது அனைத்தும் புத்திக்கான விசயம் ஆகும். குழந்தைகளே! இப்பொழுது வீடு திரும்ப வேண்டும், ஆகையால், என்னை நினைவு செய்தீர்கள் என்றால் உயர் பதவி அடைவீர்கள் என்று தந்தை கூறுகின்றார்.குழந்தைகளே! ஸ்ரீமத்தை ஒருபொழுதும் மறக்காதீர்கள் என்று பாபா கூறுகின்றார். ஆனால், ஏதாவதொரு காரணத்தினால், தன்னுடைய வழிப்படி அல்லது ஏதாவது பிரச்சனையினால் தந்தையை விட்டுவிடுகின்றனர். இது யுத்தகளம் என்று கூறப்படுகிறது. ஒருபுறம் இராவணன் வழிப்படி நடப்பவர்கள் உள்ளனர், மறுபுறம் இராமர் வழிப்படி நடப்பவர்கள் உள்ளனர். நீங்கள் பகவானிடமிருந்து சொர்க்கத்தின் ஆஸ்தியைப் பெறுங்கள். இவர்கள் அனைவரும் ஆஸ்தி பெற்றுக் கொண்டு இருக்கின்றனர், இவர்கள் மூர்க்கர்களா என்ன! நீங்களும் பகவானுடைய குழந்தைகள், நீ;ங்களும் கூட ஆஸ்தியைப் பெறுங்கள். பரமபிதா பரமாத்மா பிரம்மா மூலம் புதிய சிருஷ்டியைப் படைக்கின்றார். விஷ்ணு மூலம் தேவதைகளைப் படைத்தார் என்பது கிடையாது. பிரம்மா மூலம் விஷ்ணு புரியைப் படைத்தார். இது சரி தான், விஷ்ணுவின் இராஜ்யத்தில் நாங்கள் இராஜ்யத்தைப் பெறுவோம் என்று கூறவும் செய்கின்றனர். போகப் போகப் பின்னர் காணாமல் போய் விடுகின்றனர். ஏதாவது காரணத்தினால் கருத்து வேறுபாட்டில் வந்து விடுகின்றனர். ஏதாவது பந்தனம் ஏற்பட்டது அல்லது யாராவது ஏதாவது கூறிவிட்டார்கள் என்றால் தந்தையை மறந்துவிடுகின்றனர். பாருங்கள், இங்கே அனேக பிரம்மா குமாரிகள் இருக்கின்றனர், பரம்பிதா பரமாத்மாவிடமிருந்து ஆஸ்தியை அடைந்து கொண்டிருக்கின்றனர். நல்ல முறையில் கற்றுக் கொண்டு இருக்கின்றனர். ஆனால், வெளியில் சென்றதும் மறந்துவிடுகின்றனர். மாயை கீழான புத்தி உடையவர் ஆக்கிவிடுகிறது. புரிய வைப்பதற்காக எவ்வளவு உழைக்க வேண்டியுள்ளது. குழந்தைகள் அடிக்கடி விடுமுறை எடுத்துக் கொண்டு சேவைக்குச் செல்கின்றனர். அனைவரின் மீதும் இரக்கம் காண்பிக்க விரும்புகின்றார். ஏனெனில், இவர்களைப் போல் துக்கம் நிறைந்தவர்கள் ஒரு காசுக்கும் பெறாதவர்கள் எவரும் இல்லை. அனைவருடைய பணம், செல்வம் மண்ணோடு மண்ணாகக் கலந்துவிடும். மற்றபடி, உங்களுடையது உண்மையான வருமானம் ஆகும். நீங்கள் கை நிறைத்துக் கொண்டு செல்வீர்கள். மற்ற அனைவரும் காலியான கையுடன் செல்வார்கள். வினாசம் அவசியம் ஏற்படப் போகிறது என்பதை அனைவரும் அறிவார்கள். இது அதே மகாபாரத மிகப்பெரிய போருக்கான சமயம் ஆகும், அனைவரையும் காலன் ஆட்கொண்டுவிடும் என்று அனைவரும் கூறுகின்றனர். ஆனால், நடக்கப் போவது என்ன என்பதை புரிந்திருக்கவில்லை. நான் உங்கள் அனைவரையும் திரும்பி அழைத்துச் செல்வதற்காக வந்திருக்கிறேன் என்னைத் தான் காலன், மகாக்காலன் என்றழைக்கின்றனர், மரணம் எதிரிலேயே உள்ளது. ஆகையால், இப்பொழுது நீங்கள் எனது வழிப்படி செயல்படுங்கள் மற்றும் பதவி கூட உயர்ந்ததாகப் பெற்றுக் கொள்ளுங்கள் என்று தந்தை சுயம் கூறுகின்றார். ஜீவன் முக்தியில் கூட பதவி உள்ளது. முக்தியில் அனைத்து தர்ம ஸ்தாபகர்கள் அமர்ந்துவிடுவார்கள். அவர்கள் கூட முதலில் வரும்பொழுது சதோபிரதானமாக வருவார்கள். பின்னர், சதோ, ரஜோ, தமோ நிலைக்கு வந்துவிடுவார்கள். உயர்ந்த நிலை மற்றும் தாழ்ந்த நிலை, பிச்சைக்காரன் மற்றும் இளவரசன். பாரதம் இந்த சமயத்தில் அனைத்தையும் விட கீழானதாக தூய்மையற்றதாக உள்ளது. நாளை பிறகு தூய்மையானதாக இளவரசராக ஆகும். தேவி தேவதை தர்மம் மிகவும் சுகம் தரக்கூடியது ஆகும். இவ்வளவு சுகம் வேறு எந்த தர்மத்திலும் கிடைக்க இயலாது. குழந்தைகளாகிய நீங்கள் சத்யுகத்தின் எஜமானர்களாக இருந்தீர்கள், இப்பொழுது நரகத்தின் எஜமானர்கள் ஆகியிருக்கிறீர்கள். பிறகு, நீங்கள்; சத்யுகத்தில் முதல் பிறவி எடுப்பீர்கள். நானே அது (ஹம் சோ) என்பதன் அர்த்தத்தைக் கூடப் புரிந்து கொள்ளவில்லை. ஜீவ ஆத்மாக்களாகிய நாம் இந்த சமயத்தில் பிராமணர்களாக இருக்கிறோம், இதற்கு முன்பு சூத்திரர்களாக இருந்தோம். நாளை நாமே தேவதை பிறகு, சத்திரியர் ஆகப்போகிறோம். பிறகு வைஷ்யர், சூத்திர குலத்தில் வருவோம். இப்பொழுது நம்முடையது ஏறும் கலை ஆகும். சத்யுகத்தில் இந்த ஞானம் இருக்காது, இதற்கு முன் நாம் இறங்கும் கலையில் இருந்தோம். பாபா ஏறும் கலையில் அழைத்துச் செல்கின்றார். ஆனால், யாருடைய புத்தியிலும் இந்த ஞானம் தங்குவதில்லை. ஏனெனில், என்னுடன் புத்தியின் தொடர்பு (யோகம்) இல்லை, ஆகையினால், தங்கப் பாத்திரம் ஆவதே இல்லை.பாபா, பாபா என்று வாயினால் மட்டும் சொல்லக்கூடாது, ஆனால், இறுதி நேரம் பாபா நினைவு மூலம் அடுத்த பிறவியில் உயர் பதவி கிடைக்கும் அளவிற்கு பாபாவின் நினைவு மனதில் இருக்க வேண்டும் என்று தந்தை கூறுகின்றார். தேக உணர்வை விடுத்து தன்னை ஆத்மா எனப் புரிந்து கொள்ளுங்கள். எந்தளவு தன்னை ஆத்மா எனப் புரிந்து கொள்வீர்களோ, தந்தையை நினைவு செய்வீர்களோ அந்தளவு உங்களுடைய விகர்மங்கள் விநாசம் ஆகும். இதைத் தவிர வேறு எந்த உபாயமும் இல்லை. நீங்கள் அனைவருக்கும் புரிய வைக்க வேண்டும் - பகவானின் மகாவாக்கியம் என்னவென்றால், நீங்கள் யக்ஞம், தவம், தானம் ஆகிய என்னென்ன செய்கிறீர்களோ, அதன் மூலம் என்னை அடைய இயலாது. இப்பொழுது நீங்கள் முற்றிலும் தூய்மை அற்றவர்களாக ஆகிவிட்டீர்கள். ஒருவர் கூட என்னிடம் வரவில்லை. நாடகத்தில் இறுதி வரை அனைத்து நடிகர்களும் இருக்க வேண்டும். எப்பொழுது நாடகம் முடிவடையுமோ அப்பொழுது அனைவரும் திரும்பிச் செல்ல வேண்டும். ஆத்மாக்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. இடையில் திரும்பிச் செல்ல முடியாது. ஸ்தாபனை செய்பவர்கள்தான் இங்கே உள்ளனர். 84 பிறவிகள் எடுக்க வேண்டும். மரம் இற்றுப்போன நிலையை அடைய வேண்டும். இவை புரிந்து கொள்வதற்கான மிக நல்ல விசயங்கள் ஆகும் மாயை ஏமாற்றிவிடக் கூடாது என்பதில் மிகுந்த கவனத்துடனும் இருக்க வேண்டும். தனது முகத்தை மேலே பார்த்து வைத்துக் கொள்ள வேண்டும், குஷியோடு செல்ல வேண்டும் (பிணத்தின் முகத்தைத் திருப்புகின்றனர்). தனது முகத்தை சொர்க்கத்தை நோக்கியும், காலை நரகத்தை நோக்கியும் வைத்துக் கொள்ளுங்கள் என்று பாபா கூறுகின்றார். ஆகையினாலே, கிருஷ்ணரின் சித்திரம் அவ்வாறு உருவாக்கப்பட்டுள்ளது. ஷயாம் (கருப்பு) சுந்தர் (அழகு) ஆகிறார். நீங்கள் கூட வரிசைக்கிரமமாக தூய்மை ஆகிறீர்கள். ஆகையினால், மனிதரிலிருந்து தேவதை ஆக்குகின்றார் என்று கூறுகின்றனர். அதாவது, கலியுகத்தை சத்யுகம் ஆக்குவது தந்தையினுடைய வேலை ஆகும். நாம் ஸ்ரீமத்படி விஷ்வ இராஜ்யத்தை ஸ்தாபனை செய்கிறோம், அதில் வந்து இராஜ்யம் செய்வோம் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். இதில் யக்ஞம், தவம் செய்வதற்கான அவசியம் இல்லை. என்னை நினைவு செய்யுங்கள் என்று பாபா இவர் மூலம் வழிகாட்டுகின்றார். இப்பொழுது இராஜ்யம் ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது. அதில் என்ன பதவி வேண்டுமோ அதைப் பெற்றுக் கொள்ளுங்கள். எவ்வாறு இந்த மம்மா இப்பொழுது ஞான ஞானேஷ்வரியாக இருக்கிறார், சத்யுகம் சென்று இராஜ இராஜேஷ்வாரியாக ஆகப் போகிறார். இந்த ஞானமே இராஜயோகத்தைப் பற்றியதாகும். எனவே, இத்தகைய கல்லூரியில் எவ்வளவு நல்ல முறையில் படிக்க வேண்டும்! இன்று மிக நல்ல நல்ல கருத்துக்களைக் கூறுகின்றேன். ஆகையினால், முழு கவனம் கொடுங்கள் என்று தந்தை கூறுகின்றார். உற்றார் உறவினர்களுக்கும் நன்மை செய்யுங்கள். யாருக்கு அதிர்ஷ்டம் உள்ளதோ அவர்கள் எழுந்துவிடுவார்கள். சிவனுடைய கோவிலுக்குச் சென்று சொற்பொழிவு ஆற்றுங்கள். சிவபாபா நரகத்தை சொர்க்கமாக ஆக்குவதற்காக வந்திருக்கின்றார். அனேகர் நல்ல நிலை பெற வருவார்கள். உங்களுக்கு மாயையுடன் பலத்த யுத்தம் நடக்கிறது. நல்ல நல்ல குழந்தைகளுக்கு இன்று போதை ஏறியிருக்கிறது, நாளை காணாமல் போய்விடுகின்றனர். பழைய உலகம் முடியப் போகிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். நாம் இந்த பழைய சரீரத்தை விடுத்து புது உலகத்திற்குச் சென்று கால் பதிப்போம். இந்த தில் சொர்க்கமாக இருக்கும். இப்பொழுது சொர்க்கத்திற்குச் செல்வதற்காக மலர் ஆகுங்கள். நல்லது.இனிமையிலும் இனிமையான வெகு காலத்திற்குப் பிறகு தேடிக் கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு, தாய், தந்தை பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மிகக் குழந்தைகளுக்கு ஆன்மிகத் தந்தையின் நமஸ்காரம்.தாரணைக்காக முக்கிய சாரம்:-

1. தேக அபிமானத்தை விடுத்து, இறுதி நேர நினைவின் ஆதாரத்தில் அடுத்த பிறவியை உயர்ந்ததாக ஆக்கும் அளவிற்கு (அந்த் மதி சோ கதி) பாபாவை உள்ளத்தில் நினைவு செய்ய வேண்டும். புத்தியை நினைவு மூலம் தங்கம் போல் ஆக்க வேண்டும்.2. ஒருபொழுதும் கூட மனவழி அல்லது கருத்து வேற்றுமையில் வந்து படிப்பை விட்டுவிட வேண்டாம். தனது முகத்தை சொர்க்கம் நோக்கி வைக்க வேண்டும். நரகத்தை மறந்துவிட வேண்டும்.வரதானம்:-

மாயை மற்றும் இயற்கையினுடைய விதவிதமான கார்டூன் ஷோவை சாட்சியாகிப் பார்க்கக் கூடிய திருப்தியான ஆத்மா ஆவீர்களாக.திருப்தி என்பது சங்கமயுகத்தில் பாப்தாதாவின் விசேஷ பரிசு ஆகும். திருப்தியான ஆத்மாவின் முன் வரக்கூடிய, எத்தகைய மனோ நிலையை அசைக்கக்கூடிய சூழ்நிலை கூட பொம்மலாட்டம் போல் அனுபவம் ஆகும். தற்காலத்தில் கார்டூன் ஷோவினுடைய நாகரீகம் (ஃபேஷன்) உள்ளது. எனவே, எந்த விதமான சூழ்நிலை வந்தாலும் எல்லையற்ற திரையில் கார்டூன் ஷோவை அல்லது பொம்மலாட்டம் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது என்றே புரிந்து கொள்ளுங்கள். இது மாயை அல்லது இயற்கையினுடைய ஒரு சாட்சி ஆகும். இதை சாட்சி நிலையில் நிலைத்திருந்து, தனது பெருமையில் இருந்து கொண்டு, திருப்தி சொரூபத்தில் பார்த்துக் கொண்டே இருங்கள். அப்பொழுதே திருப்தியான ஆத்மா என்று கூற முடியும்.சுலோகன்:-

எந்த விதமான குறைபாட்டிலிருந்தும் (டிஃபெக்ட்) விலகி இருப்பது தான் சம்பூரணம் (பெர்ஃபெக்ட்) ஆவதாகும்.


***OM SHANTI***

Whatsapp Button works on Mobile Device only