30 March 2017

BK Murli 31 March 2017 Tamil

BK Murli 31 March 2017 Tamil

31.03.2017    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


இனிமையான குழந்தைகளே! எல்லையற்ற தந்தையிடமிருந்து சதா சுகத்திற்கான ஆஸ்தி சதா அடைய வேண்டுமென்றால் இருக்கக் கூடிய குறைகளை நீக்கி விடுங்கள், படிப்பை நல்ல முறையில் படியுங்கள் மற்றும் கற்பியுங்கள்.கேள்வி:

தந்தைக்குச் சமமாக சேவைக்கு நிமித்தம் ஆவதற்காக முக்கியமாக எந்த குணம் தேவை?பதில்:

பொறுமை, (சகிப்புத் தன்மை) தேகத்தின் மீது அதிப்படியான மோகம் வைக்கக் கூடாது. யோக பலத்தின் மூலம் காரியங்கள் செய்ய வேண்டும். எப்போது யோகா பலத்தின் மூலம் அனைத்து குறைகளும் அழிந்து விடுமோ அப்போது பாபாவிற்குச் சமமாக சேவைக்கு நிமித்தமாக ஆக முடியும்.கேள்வி:

எந்த ஒரு மகா பாவம் ஏற்படுவதன் மூலம் புத்தியின் பூட்டு பூட்டப்பட்டு விடுகிறது?பதில்:

தந்தையினுடையவராக ஆன பின்பு தந்தைக்கு நிந்தனை செய்வித்தால், கட்டளைப்படி நடக்காமல், நேர்மையாக இல்லாமல் ஏதாவது பூதத்திற்கு வசமாகி தீங்கு செய்தால், கருமையை விடவில்லையெனில் - இந்த மகா பாவத்தினால் புத்தியின் பூட்டு பூட்டப்பட்டு விடும்.பாட்டு:

எனது மனம் என்ற வாசலில் யார் வந்தது ........ஓம்சாந்தி.

பகவானின் மகாவாக்கியம் - பதீத பாவன், ஞானக் கடலான நிராகாரமானவர் அமர்ந்து ஆத்மாக்களுக்கு கற்பிக்கின்றார் என்பதை குழந்தைகள் அறிவீர்கள். சாஸ்திரம் போன்றவைகள் படிப்பது அனைத்தும் பக்தி மார்க்கமாகும். சத்யுகம் திதேதா யுகத்தில் யாரும் படிப்பது கிடையாது. துவாபரத்திலிருந்து மனிதர்கள் இதை படித்துக் கொண்டே வந்திருக்கின்றனர். மனிதர்கள் தான் சாஸ்திரங்களை உருவாக்கி இருக்கின்றனர். பகவான் உருவாக்கவில்லை, வியாச பகவானும் உருவாக்கவில்லை. வியாசரும் மனிதர் ஆவார். நிராகார பரம்பிதா பரமாத்மாவை அனைவரும் நினைவு செய்கின்றனர். கீதையின் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் என்று புரிந்து கொண்டது தான் தவறாகும். ஞானக் கடலானவர் நானே அன்றி ஸ்ரீகிருஷ்ணர் அல்ல என்பதை தந்தை புரிய வைக்கின்றார். இந்த எல்லையற்ற உலக சரித்திர, பூகோளத்தின் ஆரம்பம் முதல், கடைசி வரை மற்றும் இந்த ஆத்மாக்கள் எப்படி வருகின்றனர்? என்பதை தந்தை மட்டுமே அறிவார். மூலவதனம், சூட்சுமவதனம் மற்றும் இது ஸ்தூலவதனமாகும். இந்த சக்கரம் எப்படி சுற்றிக் கொண்டே இருக்கிறது! என்ற இந்த ஞானத்தை நிராகாரமான, விதை ரூபமான, ஞானக் கடலான என்னைத் தவிர வேறு யாரும் கூற முடியாது. பிறகு பக்தி மார்க்கம் ஆரம்பமாகும் போது பக்தர்களே அமர்ந்து இந்த சாஸ்திரம் போன்றவைகளை உருவாக்குகின்றனர். இந்த சாஸ்திரங்கள் மீண்டும் உருவாகும். இவ்வாறு உருவாக்குவது நின்று விடும் என்பது கிடையாது. பாரதத்தின் உண்மையான தர்மம் ஆதி சநாதன தேவி தேவதா தர்மமாகும். சத்யுகத்தில் ஆரம்பத்தில் தேவி தேவதா தர்மம் இருந்தது. பாரதவாசிகள் தங்களது தர்மத்தை மறந்து விட்டனர். யார் தூய்மையாக இருந்தார்களோ அவர்களே தூய்மை இல்லாதவர்களாக ஆகிவிட்டனர். அதனால் தான் பகவான் கூறுகின்றார் - நான் வந்து உங்களை தூய்மையற்ற மனிதனிலிருந்து தூய்மையான தேவதைகளாக ஆக்குகிறேன். தேவதை ஆவதற்காக நாம் படித்துக் கொண்டிருக்கிறோம் என்பதை நீங்களும் அறிவீர்கள். மனிதனிலிருந்து தேவதையாக தந்தையைத் தவிர வேறு யாரும் ஆக்க முடியாது. ஏனெனில் இங்கு அனைவரும் தூய்மையின்றி, கீழானவர்களாக இருக்கின்றனர். அவர்கள் எப்படி தூய்மையானவர்களாக, சிரேஷ்டமானவர்களாக ஆக்க முடியும்? இது அசுத்தமான, அசுர உலகம், இராவண இராஜ்யமாகும். இராஜ்யம் என்பதே கிடையாது. இராம இராஜ்யம், இராவண இராஜ்யம் என்று கூறப்பட்டிருக்கிறது. பகவான் வந்து இராம இராஜ்யத்தை ஸ்தாபனை செய்கின்றார். ஹே பகவானே! வந்து மீண்டும் கீதையின் ஞானத்தை கூறுங்கள் என்றும் கூறுகின்றனர். கிருஷ்ணர் கூறமாட்டார். நமக்கு எந்த மனிதனும் கற்பிப்பது கிடையாது என்பதை குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். மனித ஆத்மாக்கள் தான் அனைத்தையும் படிக்கின்றது. படிப்பு கற்பிக்கக் கூடியவர் நிராகார பகவான் ஆவார். என்னவாக ஆக்குகின்றார்? மனிதனிலிருந்து தேவதை. இது இலட்சியமாகும். பள்ளியில் இலட்சியமில்லாதவர்கள் என்ன படிக்க முடியும்? நாம் மீண்டும் மனிதனிலிருந்து தேவதை ஆவதற்காக வந்திருக்கிறோம் என்பது குழந்தைகளாகிய உங்களது புத்தியில் இருக்கிறது. கற்பிப்பவரையும் முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும் அல்லவா! அவரது பெயர் சிவன். சரீரத்தின் பெயர் கிடையாது. மற்ற படிப்புகள் கற்பிக்கக் கூடிய ஆத்மாக்கள் அவரவர்களது சரீரத்தின் மூலம் கற்பிப்பர். ஒவ்வொருவருக்கும் அவரவருக்கான சரீரம் இருக்கிறது. எனக்கென்று சரீரம் கிடையாது என்று கூறக் கூடிய இவர் ஒருவர் தான் பரம்பிதா பரமாத்மா ஆவார். நான் இவர் உடலை ஆதாரமாக எடுத்துக் கொள்கிறேன், இவரது ஆத்மாவும் படித்து முதல் நம்பர் தேவதையாக ஆகிறது. யார் புது மனிதனாக இருந்தாரோ அவரே பழைய மனிதனாக ஆகிவிட்டார். கிருஷ்ணர் அனைவரையும் விட முதல் புது மனிதன் ஆவார், பிறகு 84 பிறவிகளுக்குப் பின் வந்து பிரம்மாவாக ஆகிவிட்டார். இவர் தனது பிறப்பைப் பற்றி அறியவில்லை, ஆகையால் நான் வந்து கூறுகிறேன். முதல் பிறவியில் இவர் ஸ்ரீகிருஷ்ணராக இருந்தார், பிறகு மறு பிறவி எடுத்து எடுத்து தூய்மை இல்லாதவராக ஆகிவிட்டார். இப்போது நான் இவரை மீண்டும் பிரம்மா மற்றும் ஸ்ரீகிருஷ்ணராக ஆக்குகிறேன். மரத்தின் படத்திலும் தெளிவாக எழுதப்பட்டிருக்கிறது. கீழே இவர் பிரம்மாவின் ரூபத்தில் தபஸ்யா செய்து கொண்டிருக்கின்றார். மேலே அதே பிரம்மா தூய்மை இல்லாத உலகில் நின்று கொண்டிருக்கின்றார். மேலும் இங்கு சங்கமத்தில் இப்போது தபஸ்யா செய்து கொண்டிருக்கின்றார். அவ்வாறே. நீங்களும் தேவதைகளாக இருந்தீர்கள், பிறகு மறுபிறவி எடுத்து எடுத்து தூய்மை இழந்து, சூத்திரர்களாக ஆகிவிட்டீர்கள். இப்போது மீண்டும் நீங்கள் தூய்மை ஆகிறீர்கள். பதீத பாவனாகிய பரம்பிதா பரமாத்மாவின் மூலம் நாம் தூய்மையாகிக் கொண்டிருக்கிறோம் என்பதை அறிவீர்கள். என்னை நினைவு செய்யுங்கள் என்ற உபாயத்தை தந்தை கூறுகின்றார். என்னை நினைவு செய்தால் நீங்கள் தூய்மை ஆவீர்கள், ஆத்மா மற்றும் சரீரம் இரண்டும் தூய்மையாக சத்யுகத்தில் தான் இருக்கும். இங்கு அனைவருக்கும் சரீரம் தூய்மை இல்லாமல் தான் கிடைக்கிறது. அனைத்தையும் விட மிகவும் கெட்டது, கீழானது காம விகாரமாகும். விகாரத்தின் மூலம் உருவாகின்றவர்கள் தான் கீழானவர்கள் என்ற கூறப்படுகின்றனர். சத்யுகத்தில் கீழானவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். ஏனெனில் அங்கு விஷம் கிடையாது. கிருஷ்ணர் முழுமையாக விகாரமற்றவர் என்று கூறப்படுகின்றார், பிறகு முழு விகாரியாக ஆகின்றார். சத்யுகம், திரேதாவில் விகாரமே கிடையாது, அதானல் தான் இந்த 5 விகாரங்களின் மீது வெற்றி அடையுங்கள் என்று தந்தை கூறுகின்றார். தந்தை தான் விகார உலகை விகாரமற்றதாக ஆக்குகின்றார். சிலருக்கு முற்றிலும் தாரணை ஏற்படுவதே கிடையாது. கோபத்தின் பூதம், பேராசை என்ற பூதம், பற்றுதல் என்ற பூதம் ஒரேயடியாக கருப்பாக்கி விடுகிறது. அனைத்தையும் விட மிக அசுத்தமானது காம விகாரமாகும். தேக அபிமானம் வரும் போது தான் அதுவும் வருகிறது. தன்னை ஆத்மா என்று புரிந்து கொள்ளுங்கள் என்று தந்தை கூறுகின்றார். ஆத்மாவிற்குள் தான் ஞான சமஸ்காரம் இருக்கிறது. இப்போது ஆத்மாவிற்குள் ஞான சமஸ்காரம் (அலங்காரம்) முற்றிலும் அழிந்து விட்டது.என்னை நினைவு செய்யுங்கள் என்று பாபா கூறுகின்றார். மனிதர்கள் சாகாரத்தையே நினைவு செய்கின்றனர். பக்தியில் மூழ்கியிருக்கின்றனர், குúவையோ அல்லது எந்த தேவதையையோ நினைவு செய்வர். பத்ரிநாத், அமர்நாத் செல்கின்றனர் எனில் சென்று கல்லுக்கு பூஜை செய்வர். சிவன் கோயிலுக்கும் செல்கின்றனர், ஆனால் அவர் தந்தை என்பது யாருக்கும் தெரியாது. இது தான் குருட்டு நம்பிக்கை என்று கூறப்படுகிறது. தந்தை எப்போது வந்தார்? எப்படி வந்தார்? என்பதை யாரும் அறியவேவில்லை. இப்போது குழந்தைகளாகிய உங்களுக்கு அனைத்தும் புரிய வைக்கப்படுகிறது. ஆனாலும் உங்களிலும் கூட மிகச் சிலர் மட்டுமே நல்ல புத்திசாலிகளாக நேர்மையான, கட்டளைப்படி நடக்கும் குழந்தைகளாக இருக்கின்றனர். அவர்களிடத்தில் பூதங்கள் பிரவேசம் ஆவதே கிடையாது. பூதங்கள் பிரவேசமாகி விட்டால் அதிக தொந்தரவு செய்கிறது. அதிக சேவைக்கு புறம்பான காரியங்கள் செய்கின்றனர் எனில் பதவியும் கீழானதாக கிடைக்கும். புண்ணிய ஆத்மா ஆவதற்குப் பதிலாக மேலும் பாவ ஆத்மாவாக ஆகிவிடுகின்றனர். ஒன்று தேக அபிமானம். மற்றொன்று மற்ற விகாரங்களும் வந்து விடுகின்றன. பேராசை என்ற பூதம் வந்து விடுகிறது. இந்த ரபடி (பாசந்தி), பாலாடை சாப்பிட வேண்டும் என்று உள்ளம் விரும்பும். இவ்வாறு ஆரம்பத்திலிருந்தே நடைபெற்று வருகிறது. இப்போது மனநிலையை பரிபக்குவமாக ஆக்கிக் கொள்ள வேண்டும். பேராசை என்ற பூதமும் பதவியை கீழானதாக ஆக்கிவிடும். அரைக் கல்பத்திற்கு இந்த பூதங்கள் அதிகம் தொந்தரவு செய்திருக்கிறது. நாம் புண்ணிய ஆத்மாக்களாக ஆகிறோம் மற்றும் ஆக்குகின்றோம் என்று கூறியவர்கள் சுயம் பாவ ஆத்மாக்களாக ஆத்மாக்களாக ஆகி விட்டனர். மேலும் மற்றவர்களையும் ஆக்க ஆரம்பித்து விடுகின்றனர். பெயரை கெடுத்து விடுகின்றனர். உங்களிடமே கோபம் என்ற பூதம் இருந்தால் நீங்கள் மற்றவர்களிடமிருந்து எப்படி நீக்க முடியும்? ஏதாவது தேக அபிமானத்திற்கான தலைகீழான நடத்தைகளை பார்க்கிறீர்கள் எனில் ரிப்போர்ட் செய்யுங்கள். தர்மராஜரிடத்தில் ரிஜிஸ்டர் இருக்கிறது, தண்டனை அடையும் நேரத்தில் நீ இந்த பூதத்திற்கு வசமாகி பலருக்கு தொந்தரவு செய்தாய் என்று உங்களுக்கு அனைத்தையும் சாட்சாத்காரம் செய்விப்பார். சில குழந்தைகள் கோப நெருப்பில் எரிந்து இறந்து விடுகின்றனர். ஆத்மா முற்றிலும் கருப்பாக ஆகிவிடுகிறது. எதிரான சேவை செய்கின்றனர் எனில் பாபா புத்தி பூட்டை பூட்டி விடுகின்றார். பிறகு அவர்களிடமிருந்து வேறு எந்த சேவையும் நடைபெறாது. கடைசியில் அனைத்தையும் பாபா சாட்சாத்காரம் செய்விப்பார். பிறகு அதிக குழப்பமடைவீர்கள், ஆகையால் குழந்தைகளே! இப்படிப்பட்ட எந்த காரியத்தையும் செய்யாதீர்கள். ஒருவேளை ஏதாவது தவறாக நடந்து கொள்கின்றனர் எனில் ரிப்போர்ட் செய்யுங்கள் என்று பாபா கூறுகின்றார். தேக அபிமானத்தின் காரணத்தினால் இவர் சத்யுகம் சென்று வேலைக்காரனாக ஆவார், பிரஜைகளிலும் குறைந்த பதவி அடைவார் என்பதை பாபா புரிந்து கொள்வார். பாபா குழந்தைகளாகிய உங்களுக்கு ஞான அலங்காரம் செய்விக்கின்றார், இருப்பினும் விழிப்படைவது கிடையாது. இந்த நேரத்தில் தான் தந்தை வந்து ஞான அலங்காரம் செய்வித்து சத்யுகத்தின் மகாராஜா, மகாராணியாக ஆக்குகின்றார். இதில் சகிப்புத்தன்மை மிக நன்றாக தேவைப்படுகிறது. தேகத்தின் மீது அளவுக்கு அதிகமாக பற்றுதல் இருக்கக் கூடாது. யோக பலத்தின் மூலம் காரியம் செய்விக்க வேண்டும். பாபாவும் வயோதிகர் ஆவார், ஆனால் யோகாவில் நிலையாக இருக்கின்றார். இருமல் போன்றவைகள் வந்தாலும் சேவை செய்து கொண்டே இருக்கின்றார். புத்தி சேவை எவ்வளவு செய்ய வேண்டியிருக்கிறது! இவ்வளவு குழந்தைகளை வளர்க்க வேண்டும், விருந்தினர்களுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் - எவ்வளவு சுமைகள் இருக்கின்றன! எண்ணங்களும் எழுகிறது. ஏதாவது ஒரு குழந்தையின் நடத்தை கெட்டு விட்டால் பெயர் கெட்டு விடும். பிரம்மா குமார், குமாரிகளே இப்படித் தான் என்ற கூறுவர். ஆக பிரம்மாவின் பெயர் (கெட்டு விடுகிறது) ஆகிவிடுகிறது அல்லவா! அதனால் தான் குருவை நிந்திப்பவர்கள் ....... என்று கூறப்படுகிறது. சத்குருவிற்காக கூறப்பட்டிருக்கிறது. இதை கலியுக குருக்கள் தங்களுக்கு என்று கூறிவிட்டனர். அதனால் தான் மனிதர்கள் குருஜி எந்த சாபமும் கொடுத்து விடக் கூடாது என்று அவர்களிடத்தில் பயப்படுகின்றனர். இங்கு அந்த மாதிரியான விசயங்கள் எதுவும் கிடையாது. தனது நடத்தையின் மூலம் தனக்கே சாபமிட்டுக் கொள்கின்றனர். குழந்தைகள் தனது எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்க வேண்டும், இப்போது முயற்சி செய்யவில்லையெனில் கல்ப கல்பத்திற்கும் இதே நிலை ஏற்படும். தந்தை எவ்வளவு நல்ல முறையில் புரிய வைக்கின்றார்! இருப்பினும் சிலர் கருப்பாக்கிக் கொள்வதை விடுவதே கிடையாது. பிறகு கெட்டுப் போய்விடுகின்றனர், அதாவது இறந்து சேற்றில் விழுந்து விடுகின்றனர். படிப்பை விட்டு விடுகின்றனர். சில குழந்தைகள் நன்றாக நடந்து கொள்கின்றனர். சிலர் ஈஸ்வரிய பிறப்பு எடுத்து 8-10 ஆண்டுகளுக்குப் பிறகும் இறந்துவிடுகின்றனர் அதாவது கை விட்டு விடுகின்றனர். லௌககீக தந்தையும் நல்ல குழந்தைகளைப் பார்த்து குஷியடைவார். இருப்பினும் வரிசைக்கிரமம் இருக்கிறது அல்லவா! சென்டர்களில் சிலர் தொந்தரவும் செய்கின்றனர். மிகப் பெரிய முள்ளாக ஆகிவிடுகின்றனர். பாபா வீட்டுக் குழந்தையாக ஆன பின்பும் நிந்தனை செய்விக்கின்றனர் எனில் மகான் பாவ ஆத்மாக்களாக ஆகிவிடுகின்றனர். அதனால் தான் பாபா புரிய வைத்துக் கொண்டே இருக்கின்றார். எல்லையற்ற தந்தையிடமிருந்து சுகத்தின் ஆஸ்தியடைவதற்காகத் தான் நீங்கள் இங்கு வந்திருக்கிறீர்கள், ஆக குறைகள் அனைத்தையும் நீக்கி விட வேண்டும் என்று பாபா புரிய வைக்கின்றார். பள்ளியில் தேர்ச்சி பெறக் கூடிய மாணவன் நான் 80 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெறுவேன், 90 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெறுவேன் என்று இலட்சியம் வைப்பார், பிறகு தேர்ச்சி பெற்று விட்டால் மகிழ்ச்சியுடன் ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்துக் கொள்வர். இது எல்லையற்ற படிப்பாகும். சூரியவம்சத்தினர்களாக ஆவீர்களா? அல்லது சந்திரவம்சத்தினர்களாக ஆவீர்களா? என்பதும் தெரிந்து விடும். சந்திரவம்ச ராஜா, ராணி ஆகும் போது அவர்களுக்கு முன் சூரியவம்சத்தினர்கள் இரண்டாம் நம்பராக ஆகிவிடுவர். இராமர், சீதையின் இராஜ்யம் நடைபெறும் போது லெட்சுமி நாராயணன் சிறியவர்களாக (மதிப்பு குறைந்தவர்களாக) ஆகிவிடுவர். சூரியவம்சம் என்ற பெயரே அழிந்து விடும். இந்த ஞானம் மிகவும் ரமணீகரமானது. யார் ஸ்ரீமத் படி நடப்பார்களோ அவர்களுக்குத் தான் தாரணை நன்றாக ஏற்படும். அவர்களே பிறகு உயர்ந்த பதவி அடையமுடியும். சிவபாபாவிற்கு பக்திமார்க்கத்திலும் பாகம் இருக்கிறது, ஞான மார்க்கத்திலும் பாகம் இருக்கிறது. சங்கரின் வேலை விநாசம் செய்வது, அவரைப் பற்றி என்ன வர்ணனை செய்ய முடியும்? சிவபாபா மற்றும் பிரம்மா பாபாவிற்கு அதிக வர்ணனை இருக்கிறது. 84 பிறவிச் சக்கரத்தில் அனைவரையும் விட நம்பர் ஒன் பாகம் பாபாவினுடையது ஆகும். அவர்கள் சிவனையும், சங்கரையும் ஒன்றாக்கி விட்டனர். சிவபாபாவிற்கு மிகப் பெரிய பாகம் இருக்கிறது. அனைத்து குழந்தைகளையும் சுகமானவர்களாக ஆக்குவது என்பது எவ்வளவு கடினமான காரியமாகும்! பிறகு ஓய்வெடுக்கின்றார். இவருக்கு (பிரம்மா) 84 பிறவிக்கான பாகம் இருக்கிறது. இஸ்லாமியர்கள், பௌத்தர்கள் பிறகு தான் வருகின்றனர். அவர்கள் ஆல்ரவுண்ட் பாகம் நடிப்பது கிடையாது. ஆல்ரவுண்ட் நடிப்பு நடிப்பவர்களுக்கு எவ்வளவு சுகம் இருக்கிறது! நாம் தான் சொர்க்கத்திற்கு எஜமானர்களாக ஆகிவிடுகிறோம். பாரதம் சொர்க்கம் என்று கூறப்படுகிறது. எவ்வளவு குஷி ஏற்படுகிறது! நாம் நமக்காகவே சொர்க்க இராஜ்யத்தை ஸ்தாபனை செய்து கொண்டிருக்கிறோம். மற்றவர்களுக்கும் புரிய வைக்க வேண்டும், அவர்களும் வந்து தனது வாழ்க்கையை உருவாக்கிக் கொள்ள வேண்டும். பரம்பிதா பரமாத்மாவிடமிருந்து சொர்க்க ஆஸ்தி பெறுவதற்காக நீங்கள் வந்திருக்கிறீர்கள். புத்தியில் இலட்சியம் இல்லையெனில் இங்கு வாழ்ந்து என்ன செய்வார்கள்! பிராமணர்கள் என்றால் பிரம்மாவின் வாய்வழிவம்சத்தினர்கள். எல்லையற்ற தந்தை எல்லையற்ற குழந்தைகளை தத்தெடுக்கின்றார். எவ்வளவு குழந்தைகள் இருக்கின்றனர்! பிரம்மாவினுடையவர்களாக ஆகாமல் சிவபாபாவிடமிருந்து ஆஸ்தி அடைய முடியாது. பாரதம் சிரேஷ்டமானதாக இருந்தது. அங்கு எந்த பூதமும் கிடையாது. ஒரே ஒரு பூதம் இருந்தாலும் கலப்படம் என்று தான் கூற முடியும். பூதங்களை முற்றிலும் விரட்டி விட வேண்டும். பாபா, காமத்தின் பூதம் வந்தது, ஆனால் தப்பித்து விட்டேன் என்று பலர் பாபாவிற்கு எழுதுகின்றனர். பாபா கூறுகின்றார் - குழந்தைகளே! புயல்கள் அதிகம் வரும், ஆனால் கர்மேந்திரியங்களின் மூலம் எந்த தீய காரியமும் செய்து விடக் கூடாது, பூதங்களை விரட்ட வேண்டும். இல்லையெனில் சூரியவம்சத்தினர்களான, சந்திரவம்சத்தினர்களாக ஆக முடியாது. தியானத்தில் (டிரான்ஸில்) செல்வதும் நல்லது கிடையாது. ஏனெனில் மாயை அதிகம் பிரவேசமாகி விடுகிறது. நல்லது.இனிமையிலும் இனிமையான, தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு, தாய் தந்தையாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்தே.தாரணைக்கான முக்கிய சாரம்:

1) கர்மúந்திரியங்களின் மூலம் எந்த விகர்மங்களும் செய்யக் கூடாது. பலரது சாபம் கிடைக்குமளவிற்கு நடந்து கொள்ளக் கூடாது. தனது எதிர்காலத்தை நினைவில் வைத்து புண்ணிய காரியம் செய்ய வேண்டும்.2) உள்ளுக்குள் இருக்கும் அசுத்தங்கள், தேக அபிமானத்தின் காரணத்தினால் பூதங்களின் பிரவேசம் ஆகிறது அவைகளை நீக்கி விட வேண்டும். ஞானத்தின் மூலம் தன்னை அலங்கரித்துக் கொண்டு உண்மையான குழந்தை ஆக வேண்டும்.வரதானம்:

பிரம்மா பாபாவின் அன்பிற்கு நடைமுறை (பிராக்டிக்கல்) நிரூபணம் கொடுக்கக் கூடிய நல்ல மற்றும் சமமானவர் ஆகுக.பிரம்மா பாபாவின் மீது எனக்கு மிகுந்த அன்பு இருக்கிறது என்று கூறுகிறீர்கள் எனில் அன்பின் அடையாளம் என்னவெனில் தந்தைக்கு எதன் மீது அன்பு இருக்கிறதோ அதன் மீது அன்பு இருக்க வேண்டும். எந்த காரியம் செய்தாலும் காரியம் செய்வதற்கு முன், பேசுவதற்கு முன், சங்கல்பத்திற்கு முன் இது பிரம்மா பாபாவிற்கு பிரியமானதா? என்று சோதியுங்கள். பிரம்மா பாபாவின் சிறப்பான விசேஷம் என்னவெனில் என்ன நினைத்தாரோ அதை செய்தார், எதை கூறினாரோ அதை செய்தார். எதிர்ப்பு இருந்தாலும் சதா தனது சுயமரியாதையில் நிலையாக இருந்தார், ஆக அன்பின் நடைமுறை நிரூபணம் கொடுப்பது என்றால் தந்தையை பின்பற்றி நல்ல மற்றும் சமம் ஆவதாகும்.சுலோகன்:

யாருடைய சங்கல்பத்திலும் துக்கத்தின் அலைகள் வரவில்லையோ அவர்கள் தான் அதிர்ஷ்டசாலி ஆத்மா ஆவர். 


***OM SHANTI***

Whatsapp Button works on Mobile Device only