05 March 2017

BK Murli 6 March 2017 Tamil

BK Murli 6 March 2017 Tamil

06.03.2017    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


இனிமையான குழந்தைகளே ! மாயாவின் மேகமூட்டம் மிகவும் கடுமையானது. அதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஒருபோதும் மேகமூட்டத்தில் குழம்பி விடக் கூடாது.கேள்வி :

மகாவீர் குழந்தைகள் என்ன கடமையை செய்தனர். அதனுடைய நினைவு சின்னம் சாஸ்திரங்களில் இருக்கிறது?பதில்:

மகாவீர் குழந்தைகள் மயங்கிப் போனவர்களை சஞ்சீவினி மூகை கொடுத்து, தெளியவைத்திருக்கின்றனர். இதனுடைய ஞாபகார்த்தத்தை சாஸ்திரங்களில் காட்டப்பட்டிருக்கிறது. குழந்தைகளாகிய உங்களுக்கு இரக்கம் ஏற்பட வேண்டும். யார் சேவை செய்து செய்து பாபாவிடமிருந்து ஆஸ்தி அடைந்து. பிறகு ஏதோ ஒரு காரணத்தால் பாபாவின் கையை விட்டு விட்டு சென்று விட்டனர், அவர்களை மயக்கத்திலிருந்து தெளியச்செய்ய வேண்டும். நீங்கள் படிப்பை விட்டு விட்டீர்கள்..... உங்களுக்கு என்ன ஆயிற்று? துரதிர்ஷ்டசாலியாக ஏன் ஆனீர்கள் என கடிதம் எழுதுங்கள். அவ்வாறு விழுந்தவர்களைக் காப்பாற்ற வேண்டும்.பாடல் :

கண்ணில்லாதவர்களுக்கு வழி காட்டுங்கள் பிரபுவே.....ஓம் சாந்தி.

இந்த பாட்டை மிகவும் பொதுவாகப் பாடுகிறார்கள். ஓ, பகவானே ! குருடர்களுக்கு ஊன்று கோல் ஆகுங்கள். ஏனென்றால் பக்தி மார்க்கத்தில் நிறைய ஏமாற்றங்களை அடைகிறார்கள். ஆனால் பாபாவை அறியவில்லை. பெறவில்லை. பாபா நான் உங்களை அடைவதற்காக இந்த சரீரத்தின் மூலமாக அலைந்தேன் என ஆத்மா கூறுகிறது. தங்களின் வழி மிகவும் கடினமாக இருக்கிறது. பல பிறவிகளாக நாம் பக்தி செய்து வந்தோம் என நிச்சயமாக மனிதர்கள் புரிந்துக் கொள்கிறார்கள். நமக்கு ஞானம் கிடைக்க வேண்டும். அப்போது நாம் கண்ணில்லாத நிலைமையிலிருந்து கண் பார்வை அடையலாம் எனத் தெரியவில்லை. பக்தி மார்க்கத்தின் சட்டம் அலைதல் பக்தி செய்தல் ஆகும். அரை கல்பமாக முட்டி மோதிக் கொண்டு வந்தோம். இப்போது முட்டி மோதுதல் முடிந்து விட்டது. நீங்கள் பக்தி செய்யவில்லை, சாஸ்திரங்களைப் படிப்பதில்லை. பகவான் கிடைத்து விட்ட பிறகு இவை அனைத்தையும் ஏன் செய்ய வேண்டும் ! நம்மை உடன் அழைத்துச் செல்லக் கூடிய பகவான் கிடைத்த பிறகு நாம் ஏன் முட்டிமோதிக் கொள்ள வேண்டும். பகவான் வருகிறார் என்றால், அனைவரையும் உடன் அழைத்துச் செல்வார். அனைவரும் மோதிக் கொண்டும் இருக்கிறார்கள். ஒருவருக்கொருவர் ஆசீர்வாதமும் செய்துக் கொண்டிருக்கிறார்கள். எதையும் புரிந்துக் கொள்ளவில்லை. போப், சாது, சன்னியாசி போன்றோர் வருகிறார்கள் என்றால், தங்களுக்கு பகவானை அடைய வழி காட்டுவார்கள் என நினைக்கிறார்கள். ஆனால் அந்த குருக்களுக்கே வழி தெரியவில்லை எனும் போது எப்படி காண்பிப்பார்கள்? ஆசீர்வாதம் கொடுக்கிறார்கள் என்றாலும் பகவானை நினையுங்கள். ராம்,ராம் என கூறுங்கள் என கூறி விடுகிறார்கள். வழியில் யாரிடமாவது இந்த இடம் எங்கே இருக்கிறது என்று கேட்கும் போது இந்த வழியில் சென்றால், சென்று விடலாம் என்று கூறுவது போல கூறுகிறார்கள். கூடவே அழைத்துச் செல்கிறேன் என கூறமாட்டார்கள். உங்களுக்கு வழி வேண்டும். அதை கூறுகின்றார்கள். ஆனால் கூடவே வழிகாட்டி வேண்டும் அல்லவா? வழிகாட்டி இல்லாமல் குழம்பிப் போகிறார்கள். எப்படி நீங்கள் கூட ஒரு நாள் மேகமூட்டத்தின் காரணமாக காட்டில் குழம்பிப் போய் விட்டீர்கள். இந்த மாயாவின் மேக மூட்டம் மிகவும் பலமானது. கப்பலில் வருபவர்களுக்கு மேக மூட்டத்தின் காரணமாக வழி தெரிவதில்லை. மிகவும் கவனம் வைக்கிறார்கள். இருந்தாலும் இது மாயாவின் மேக மூட்டமாகும். சிலருக்கு வழி தெரிவதில்லை. ஜபம், தவம், தீர்த்த யாத்திரைகளைச் செய்கிறார்கள். பல பிறவிகளாக பகவானை சந்திப்பதற்காக பக்தி செய்து வந்தனர். பல விதமான வழிகள் கிடைத்திருக்கிறது. எப்படி சங்கமோ அப்படி நிறமாகும். ஒவ்வொரு பிறவியிலும் குருவும் வைக்க வேண்டியிருக்கிறது. இப்போது குழந்தைகளாகிய உங்களுக்கு சத்குரு கிடைத்திருக்கிறார். நான் கல்ப கல்பமாக வந்து குழந்தைகளாகிய உங்களை வீட்டிற்குத் திரும்ப அழைத்துச் செல்கிறேன், பிறகு விஷ்ணுபுரிக்கு அனுப்பி விடுவேன் என அவரே கூறுகின்றார்.இப்போது நாம் பாபாவிடமிருந்து ஆஸ்தி அடைந்துக் கொண்டிருக்கிறோம். யாராவது குரு அல்லது பண்டிதர்கள் வந்து இந்த ஞானத்தை எடுத்து மற்றவர்களுக்கு மனதால் தந்தையை நினையுங்கள், சிவபாபாவை நினையுங்கள் என்று கூறினால், அவர்களுடைய சிஷ்யர்கள் நீங்கள் இந்த ஞானத்தை எங்கிருந்து அடைந்தீர்கள் எனக் கேட்பார்கள். அவர்கள் உடனே வேறு வழியை எடுத்துக் கொண்டார் என நினைப்பார்கள். அவர்களுடைய கடை முடிந்து போகும். மரியாதை இல்லாமல் போய்விடும். நீங்கள் பிரம்மா குமாரிகளின் ஞானத்தை எடுத்துக் கொண்டீர்கள் என்றால், நாங்கள் பி.கேவிடம் ஏன் செல்லக் கூடாது என கேட்பார்கள். அந்த குருக்களே கூறுகின்றனர். எங்களுடைய மாணவர்கள் அனைவரும் எங்களை விட்டுவிட்டு சென்று விடுவார்கள். பிறகு நாங்கள் சாப்பாட்டிற்கு எங்கே போவோம். அனைத்து தொழிலும் அழிந்து போகும். அனைத்து மரியாதையும் மறைந்து போகும். இங்கேயோ ஏழு நாள் பட்டியில் வைத்து பிறகு அனைத்தையும் செய்ய வைக்க வேண்டியிருக்கிறது. ரொட்டி சமையுங்கள், இதை செய்யுங்கள்..... சன்னியாசிகள் கூட செய்விக்கிறார்கள் என்றால், தேக உணர்வு நீங்கிப் போகும். எனவே இப்படிப்பட்டவர்கள் நிலைத்திருப்பது மிகவும் கடினமாகும். மற்றொரு விஷயம் யார் வெளியில் இருந்து வந்தாலும் முதன் முதலில் பாபாவின் அறிமுகத்தைக் கொடுக்க வேண்டும். நாங்கள் தாய் தந்தையிடமிருந்து உலகத்தின் அதிபதி பதவியை அடைந்துக் கொண்டிருக்கிறோம். பாபா (புதிய) உலகத்தைப் படைக்கக் கூடியவர் ஆவார். நம்முடைய குறிக்கோள் நாம் நரனிலிருந்து நாராயணன் ஆக வேண்டும். நீங்களும் சேர வேண்டும் என்றால், 8 நாட்கள் வந்து படிக்க வேண்டும். மிகவும் கடினமான முயற்சி ஆகும். இந்த அளவிற்கு அபிமானத்தை யாரும் உடைக்க முடியாது. இப்படிப்பட்ட மனிதர்கள் சீக்கிரமாக வர முடியாது. நீங்கள் சகோதரன் சகோதரிகள் என பாபா புரிய வைக்கிறார். ஒருவருக்கொருவர் புரிய வைக்க முடியும். பாருங்கள், சில குழந்தைகள் நன்கு சேவை செய்தனர், பலருக்கு புரிய வைத்தனர். இப்போது பாபாவின் கையை விட்டுவிட்டனர். சிவபாபா பிரம்மா மூலமாக நம்மை படிக்க வைக்கிறார் என நீங்கள் அறிகிறீர்கள். நேரடியாக படிக்க வைக்க முடியாது. எனவே பிரம்மா மூலமாக ஸ்தாபனை செய்கிறேன் என பாபா கூறுகிறார். இராஜயோகத்தைக் கற்பிக்கிறேன். ஒரு வேளை யாராவது பிரம்மாவின் கையை விட்டுவிட்டனர் என்றால், சிவனின் கையையே விட்டு விட்டுனர். இன்னார் ஏன் விட்டனர் என சிந்தனை செய்யப்படுகிறது. அதிர்ஷ்டசாலியாக ஆவதற்குப் பதிலாக ஏன் துரதிர்ஷ்டசாலி ஆகிறீர்கள். நீங்கள் யாரிடம் கோபித்துக் கொள்கிறீர்கள். நீங்கள் இவ்வளவு சொத்து அடையக் கூடியவராக இருந்தீர்கள். பிறகு என்னவாயிற்று? சொல்லிக்கொடுக்கக் கூடிய தந்தை உங்களை ஏதாவது கூறினாரா? படிப்பை விட்டு விட்டதால் மேலும் துரதிர்ஷ்டசாலி ஆகிவிட்டீர்கள். நீங்கள் இராஜயோகம் கற்பதை ஏன் விட்டு விட்டீர்கள் என பாபா கூட கேட்க முடியும். நீங்கள் ஆச்சரியபடக் கூடிய வகையில் பாபாவினுடையவரானீர்கள், பிறருக்கு கூறினீர்கள், ஓடுபவர்களின் பட்டியலிலும் வந்து விட்டீர்கள். உங்களின் அதிர்ஷ்டத்தைத் தடுத்து விட்டீர்கள். நேரம் பார்த்து அவர்களுக்கு எழுத வேண்டும். கடிதத்தைப் படிப்பதால் மீண்டும் எழுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. விழக் கூடியவர்களைக் காப்பாற்ற வேண்டியிருக்கிறது. மூழ்கக் கூடியவர்களை காப்பாற்றினால் அவர்களுக்கு ஏதாவது கொடுக்கிறார்கள். இதுவும் மூழ்குவதிலிருந்து காப்பாற்றுதல் ஆகும். ஞானத்தின் நிறைய விஷயங்கள் ஆகும். நீங்கள் படகோட்டியின் கையை விட்டு விட்டால் மூழ்கி இறந்து போவீர்கள் என எழுத வேண்டும். நீந்துபவர்கள் தனது உயிரை பணயமாக வைத்து மற்றவர்களின் உயிரை காப்பாற்றுகிறார்கள். சிலருக்கு முழுமையாக நீந்தத் தெரியவில்லை என்றால் தானும் மூழ்கிப் போகிறார்கள். நீங்கள் கூட யாராவது மூழ்கிக் கொண்டிருப்பவர்களைப் பார்த்தால் 10-20 கடிதங்களை எழுதுங்கள். இது ஒன்றும் அவமானம் இல்லை. நீங்கள் இவ்வளவு காலம் கையைப் பிடித்திருந்தீர்கள், மற்றவர்களுக்குப் புரிய வைத்தீர்கள். பிறகு நீங்கள் எப்படி மூழ்குகிறீர்கள். நீங்கள் அன்புடன் எழுதுங்கள். சகோதரி, நீங்கள் இராஜயோகத்தைக் கற்று, கடந்து போக கூடியவராக இருந்தீர்கள். இப்போது நீங்கள் மூழ்கிக் கொண்டிருக்கிறீர்கள். பாவம் அவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற இரக்கம் ஏற்படுகிறது. பிறகு தப்பிக்கிறார்கள் அல்லது இல்லை. அது அவர்களுடைய அதிர்ஷ்டம். இன்னொரு விஷயம் படக்கண்காட்சிகளில் இங்கே நரனிலிருந்து நாராயணனான மாறுவதற்கான வழி காண்பிக்கப்படுகிறது. இந்த இராஜயோகம் மிகவும் நல்லது என்று தனது கருத்துக்களை எழுதி கொடுக்கிறார்கள். எழுதுகிறார்கள். வெளியில் சென்றதும் மறந்து விடுகின்றனர். அவ்வளவு தான் ! ஆகையால் யார் எழுதுகிறார்களோ அவர்களிடம் நீங்கள் இவ்வாறு தங்கள் கருத்துக்களை எழுதிக் கொடுத்தீர்கள் பிறகும் என்ன செய்தீர்கள் தனக்கும் நன்மை இல்லை, மற்றவர் களுக்கும் இல்லை என்று அவர்களைக் கேட்க வேண்டும். முதல் முக்கியமான விஷயம் தாய் தந்தையின் அறிமுகத்தை அளிக்க வேண்டும். ஆகையால் தான் பாபா கேள்விப் பதில்களை உருவாக்கினார். பரம்பிதா பரமாத்மாவிற்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம், என்ன ஆஸ்தி கிடைக்கிறது என கேளுங்கள். பிறகு அதை எழுத வைக்க வேண்டும். மற்றபடி முழு கண்காட்சியையும் புரிய வைத்து கடைசியில் எழுத வைப்பதால் எந்த நன்மையும் இல்லை. முக்கியமான விஷயம் தாய் தந்தையின் அறிமுகத்தைக் கொடுக்க வேண்டும். இப்போது புரிந்துக் கொண்டிருந்தால் எழுதுங்கள், இல்லை என்றால் ஒன்றும் புரிய வில்லை. இதயத்தைத் தொடும் அளவு புரிய வைத்து எழுத வைக்க வேண்டும். உண்மையில் இவர்கள் ஜகதம்பா, ஜகத்பிதா ஆவார். அவர்கள் உண்மையில் அப்பாவிடமிருந்து ஆஸ்தி கிடைக்கிறது என எழுதட்டும். இவ்வாறு எழுதி கொடுத்தார்கள் என்றால், நீங்கள் சிறிது சேவை செய்திருக்கிறீர்கள் என புரிந்துக் கொள்ளுங்கள். பிறகு வரவில்லை என்றால் கடிதம் எழுதுங்கள். உண்மையில் இவர் ஜகதம்பா மற்றும் ஜகத்பிதா என்றால் சொத்து அடைய ஏன் வரவில்லை? திடீரென்று காலன் தின்று விடுவான். உழைக்க வேண்டும். படக் கண்காட்சிகள் நடந்தது. அதிலிருந்து இரண்டு நான்கு பேர் வருகிறார்கள் என்றால், நன்மை என்ன? குழந்தைகள் முயற்சி செய்ய வேண்டும். வருவதை விட்டு விட்டால் கடிதம் எழுத வேண்டும். நீங்கள் எல்லையற்ற தந்தையிடம் ஆஸ்தி அடைந்தீர்கள். பிறகு மாயை உங்களைப் பிடித்துவிட்டது. பிரபுவை விட்டு விட்டீர்கள். இதுவோ உங்களின் பதவியை குறைத்துக் கொண்டீர்கள். யார் மகாவீரர்களாக இருக்கிறார்களோ அவர்கள் உடனே சஞ்சீவினி மூகையை கொடுப்பார்கள். இவர் மயங்கி போய் விட்டார். மாயை மூக்கை பிடித்து விட்டதால், அவர்களைக் காப்பாற்ற வேண்டும். இந்த அளவுக்கு கடினமாக உழைத்தால் கோடியில் ஒரு சிலர் வருவார்கள். இந்த நாற்றை எப்படி நடுவது என்று சோதிக்க வேண்டும். எங்களுடைய தொண்டை கட்டி விட்டது என்று குழந்தைகள் எழுதுகிறார்கள். ஆனால் நீங்கள் நிறைய விஷயங்களில் செல்லாதீர்கள். முதலில் முக்கியமான விஷயத்தைப் புரிய வைத்து எழுதவையுங்கள். பிறகு மற்றவை ஒரேயொரு திரிமூர்த்தியின் சித்திரத்தின் மீது முழுமையாக புரிய வைக்க வேண்டும். உங்களுடைய தாய் தந்தை என்ற நிச்சயம் இருக்கிறது என்றால், இவர்களிடமிருந்து ஆஸ்தி கிடைக்கிறது. யார் எவ்வளவு வயதானவராக இருந்தாலும் இந்த இரண்டு வார்த்தைகளை அனைவருக்கும் புரிய வைக்க முடியும் அல்லவா? ஒரு வேளை இந்த இரண்டு வார்த்தைகள் கூட தாரணை ஆகவில்லை என்றால், இவர்களுடைய புத்தி எங்கோ சேற்றில் மாட்டிக் கொண்டிருக்கிறது என பாபா புரிந்துக் கொள்கின்றார். வாயில் அதிகம் பேசக் கூடாது. பாபா மற்றும் ஆஸ்தியை மட்டும் நினையுங்கள். விஷ்ணுபுரி என்பது ஆஸ்தி ஆகும். அதற்கு நீங்கள் அதிபதியாகின்றீர்கள். பாபா மிகவும் எளிதாக்கிப் புரிய வைக்கின்றார். அகல்யா போன்றவர்களும், அவலட்சணமானவர்களும் எப்படி இருந்தாலும் ஆஸ்தி அடைய முடியும். ஸ்ரீமத் படி மட்டும் செல்லுங்கள். ஆத்ம உணர்வுடையவராக மாறுவது எளிதாகும். யாருக்கு இல்லற விவகாரம் இல்லையோ தனியாக இருக்கிறார்களோ மிகவும் சேவை செய்ய முடியும். சிலருக்கு தேக உணர்வு இருக்கிறது. மோகத்தின் நாடி துண்டிக்கப்படுவதில்லை. ஆத்ம உணர்வுடையவர்கள் சரீரத்தின் மீது பற்று வைக்க மாட்டார்கள். நீங்கள் தன்னை ஆத்மா என உணருங்கள் என பாபா யுக்தி தெரிவிக்கின்றார். இது பழைய உலகம். இதிலிருந்து பற்றுதலை நீக்குங்கள். ஒரு தந்தையை நினையுங்கள், ஆஸ்தியை நினைவு செய்வதால் படைப்பவரின் நினைவும் வந்துவிடும். எவ்வளவு வருமானம் இருக்கிறது, தானும் சம்பாதியுங்கள், மற்றவர்களையும் செய்ய வையுங்கள். தாய், தந்தை குழந்தைகளைத் தகுதி அடைய வைக்கின்றனர். பிறகு குழந்தையின் வேலை தந்தையைக் காப்பாற்ற வேண்டும். பின் தாய் தந்தை விடுவார்கள். இங்கே பலருக்கு பற்று இருக்கிறது. சிலருக்கு தனக்கென்று பிள்ளை இல்லாவிட்டால் தத்துக் குழந்தை பக்கம் பற்று போகிறது, பிறகு அவர்கள் பதவியைப் பெற முடியாது. சேவைக்குப் பதிலாக சேவையில் இடையூறு (டிஸ்சர்வீஸ்) செய்கிறார்கள் உண்மையில் இவர் நம்முடைய தந்தை, இவருடைய இராஜயோகத்தின் மூலமாக 21 பிறவிகளுக்கு ஆஸ்தி கிடைக்கிறது, என்ற நிச்சயம் ஏற்பட வேண்டும். கண்காட்சிகளில் முக்கியமாக இதை புரிய வைக்க வேண்டும். புதிய உலகத்தின் படைப்பு எப்படி உண்டாகும். நாம் எப்படி அதிபதியாகின்றோம், இதுவே குறிக்கோளாகும். ஆனால் குழந்தைகள் முழுமையாக புரிய வைப்பதில்லை. குழந்தைகளாகிய நீங்கள் இரவும் பகலும், நாம் ஈஸ்வரிய குழந்தைகள் என மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். அங்கே விஷ்ணுவின் தெய்வீகக் குழந்தையாக இருந்தாலும் இப்போது நீங்கள் ஈஸ்வரிய குழந்தையாக இருக்கும் அளவிற்கு மகிழ்ச்சி ஏற்படாது. இப்போது நீங்கள் ஈஸ்வரிய குழந்தையாகி இருக்கிறீர்கள். நீங்களே ஈஸ்வரிய வாரிசாக மாறுவீர்கள். தேவதைகளை ஈஸ்வரிய வாரிசுகளை விட உயர்ந்தவர்கள் என்று கூற முடியாது. எனவே ஈஸ்வரிய வாரிசுகளுக்கு எவ்வளவு மகிழ்ச்சி இருக்க வேண்டும். ஆனால் இங்கிருந்து வெளியே சென்றதும் மாயை முற்றிலும் மறக்க வைத்துவிடுகிறது. எனவே அதிர்ஷ்டத்தில் இராஜ்ஜிய பதவி இல்லை என புரிந்துக் கொள்ளுங்கள். மிகவும் கடினமாக உழைக்க வேண்டும். மாயை அங்கேயே அடி கொடுத்து மறக்க வைக்க கூடியது. நல்லது.இனிமையிலும் இனிமையான காணாமல் போய்க் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு, தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.தாரணைக்கான முக்கிய சாரம் :

1. மோகத்தின் அனைத்து நரம்புகளையும் இந்த பழைய உடல் மற்றும் உலகத்தின் மீதுள்ள பற்றுதலிலிருந்து நீக்கி சேவையில் ஈடுபட வேண்டும். அப்பா, மற்றும் ஆஸ்தியை நினைவு செய்து வருமானத்தை சேமிக்க வேண்டும்.2. நன்கு நீந்தக் கூடியவராகி, அனைவரையும் கடக்க வைக்கக் கூடிய சேவை செய்ய வேண்டும். ஸ்ரீமத்படி நடக்க வேண்டும். புத்தி சேற்றில் இருக்கக் கூடாது.வரதானம்:

ஒரே பலம்-ஒரே நம்பிக்கை வைத்து குழப்பமான சூழ்நிலையிலும், ஒரே நிலையில் இருக்கக் கூடிய, சர்வ சக்தி நிறைந்தவர் ஆகுக !ஒரே பலம் ஒரே நம்பிக்கையில் இருக்கக் கூடிய ஆத்மா சதா ஒரே நிலையில் நிலைத்திருக்கும். ஒரே நிலை என்றால் சதா அசையாமல், இல்லாமல் இருப்பதாகும். ஒரு பாபா மூலமாக அனைத்து சக்திகளையும் அடைந்து, அனைத்து சக்தியும் நிறைந்த ஆத்மா எப்படிபட்ட குழப்பமான சூழ்நிலையிலும் ஆடாமல் இருக்க முடியும். ஒரு நிலை என்பதன் பொருள் ஒருவர் மூலமாக அனைத்து சம்பந்தம், அனைத்து பிராப்திகளின் ரசத்தை அனுபவம் செய்வதாகும். அவர்களை வேறு எந்த சம்பந்தமும் தன் பக்கம் கவர்ச்சிக்க முடியாது.சுலோகன்:

எல்லையற்ற சேவையின் உயர்ந்த உள்ளுணர்வு வைத்தலே விஷ்வ கல்யாணகாரி ஆகுதல் ஆகும்.


***OM SHANTI***

Whatsapp Button works on Mobile Device only