BK Murli 9 March 2017 Tamil

BK Murli 9 March 2017 Tamil

09.03.2017    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்

இனிமையான குழந்தைகளே! தந்தையுடன் சந்திப்பை கொண்டாட வேண்டும், தூய்மையடைய வேண்டும் என்றால் உண்மையிலும் உண்மையான (பிரியதர்ஷினி) அன்பு கொண்டவராக ஆகுங்கள், ஒரு தந்தையைத் தவிர வேறு யாரையும் நினைவு செய்யாதீர்கள்.கேள்வி:

பிராமணரிலிருந்து தேவதை ஆகக்கூடிய பிராமணர்களின் பதவி தேவதைகளை விட உயர்ந்தது, எப்படி?பதில்:

பிராமணர்கள் இந்த சமயத்தில் உண்மையிலும் உண்மையான ஆன்மீக சேவகர்களாக இருக்கின்றனர். மனிதர்களின் ஆத்மாவுக்கு தூய்மை மற்றும் யோகத்தின் இஞ்செக்ஷன் (ஊசி) போடுகின்றனர். பாரதத்தின் மூழ்கிப் போன படகை ஸ்ரீமத்படி கரை சேர்க்கின்றனர். நரகவாசிகள் வசிக்கும் பாரதத்தை சொர்க்கவாசிகள் வசிக்கக் கூடியதாக ஆக்குகின்றனர். இப்படிப்பட்ட சேவை தேவதைகள் செய்வதில்லை. அவர்கள் இந்த சமயத்தின் சேவையின் பலனை அனுபவிக்கின்றனர், ஆகையால் பிராமணர்கள் தேவதைகளைவிடவும் உயர்ந்தவர்கள்.பாடல்:

நம்முடைய தீர்த்தம் தனிப்பட்டது. . . .ஓம் சாந்தி.

குழந்தைகள் பாடலைக் கேட்டீர்கள். நாம் ஜீவ ஆத்மாக்களாக இருப்பவர்கள். ஆத்மா மற்றும் சரீரம், ஆத்மாவை ஆத்மா எனவும் சரீரத்தை ஜீவன் எனவும் சொல்லப்படுகிறது. ஆத்மாக்கள் வருவது பரந்தாமத்திலிருந்து.இங்கே வந்து சரீரத்தை தாரணை செய்கின்றனர். இது கர்ம க்ஷேத்திரம் ஆகும், இங்கே வந்து நடிப்பை நடிக்கிறோம். நானும் நடிக்க வேண்டும் என தந்தை சொல்கிறார். நான் தூய்மையற்றவர்களை தூய்மையாக்குவதற்காக வந்துள்ளேன். இந்த சமயத்தில் இந்த தூய்மையற்ற உலகில் ஒருவரும் தூய்மையானவர் இல்லை. தூய்மையான உலகில் பிறகு ஒருவர் கூட தூய்மையற்றவராக இருக்க மாட்டார்கள். சத்ய, திரேதாயுகங்கள் தூய்மையானவை மற்றும் துவாபர கலியுகங்கள் தூய்மையற்றவை. அனைவரையும் தூய்மை ஆக்கக் கூடிய தந்தைதான் வந்து அனைவருக்கும் அறிவுரைகள் கொடுக்கிறார் - ஓ ஆத்மாக்களே நீங்கள் இந்த சரீரத்துடன் 84 பிறவிகளின் நடிப்பை முடித்திருக்கிறீர்கள். அதில் பாதி நேரம் சுகத்தையும், பாதி நேரம் துக்கத்தையும் அடைந்தீர்கள். துக்கமும் கூட மெது மெதுவாக தொடங்குகிறது. இப்போது அதிக துக்கம் உள்ளது. இன்னும் அதிக ஆபத்துக்கள் வரவுள்ளன. இந்த சமயத்தில் அனைவரும் பிரஷ்டாச்சாரிகள் (கீழானவர்கள்). யாருடைய நினைவின் தொடர்பும் தந்தையிடம் இல்லை. ஆத்மா தன்னை மறந்து விட்டுள்ளது. இப்போது தந்தை வந்து புரிய வைக்கிறார். பிரியதர்ஷன், பிரியதர்ஷினி இருக்கின்றனர் அல்லவா. எப்படி, பாருங்கள் ஒரு பெண் குழந்தை மற்றும் ஆண் குழந்தை இருக்கின்றனர், ஒருவரைப் பற்றி ஒருவருக்கு எதுவும் தெரியாது. இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தவுடன் பிரியதர்ஷன், பிரியதர்ஷினி ஆகி விடுகின்றனர். அந்த நிச்சயதார்த்தம் விகாரத்திற்காக நடக்கிறது. விகாரம் நிறைந்த தூய்மையற்ற பிரியதர்ஷினி, பிரியதர்ஷன் என சொல்வோம். மற்றொரு வகை பிரியதர்ஷினி, பிரியதர்ஷன் இருக்கின்றனர், அவர்கள் முகத்தைக் கண்டு பிரியதர்ஷினி ஆகின்றனர், லைலா, மஜ்னு முதலானவர்கள் ஒருவர் மற்றவரின் முகத்தைப் பார்த்தபடி இருப்பார்கள். அவர்கள் விகாரத்தில் செல்வதில்லை. காரியங்கள் செய்தபடி இருக்கும்போது பிரியதர்ஷன் முன்னால் வந்து நின்று விடுவார் - மீராவுக்கு முன்னால் கிருஷ்ணர் நின்று கொள்வது போல. இப்போது இந்த பரமபிதா பரமாத்மா பிரியதர்ஷனாக இருக்கிறார், நாம் அனைவரும் அவருடைய பிரியதர்ஷினிகளாக ஆகியுள்ளோம். அனைவரும் அவரை நினைவு செய்கின்றனர். பிரியதர்ஷினிகள் நிறைய பேர் உள்ளனர் – அனைவரின் பிரியதர்ஷன் ஒருவர் ஆவார். அனைத்து மனிதர்களும் அந்த ஒருவருடைய பிரியதர்ஷினிகள் ஆவர். பகவானுடன் சந்திப்பதற்காக பக்தி செய்கின்றனர், பக்தர்கள் பிரியதர்ஷினிகளாகவும் பகவான் பிரியதர்ஷனாகவும் ஆகி விடுகின்றனர். இப்போது சந்திப்பு எப்படி நடக்கும்? ஆக அனைவரின் பிரியதர்ஷனாகிய பரமாத்மா வருகிறார். இப்போது வந்திருக்கிறார் மற்றும் சொல்கிறார் - குழந்தைகளாகிய நீங்கள் என்னுடன் சந்திக்க வேண்டும் என்றால் நிரந்தரமாக என்னை நினைவு செய்யுங்கள். என்னுடன் நினைவின் தொடர்பை ஈடுபடுத்தி என்னுடைய பிரியதர்ஷினியாகவே ஆகுங்கள். இந்த இராவண இராஜ்யத்தில் துக்கமே துக்கம்தான் உள்ளது. இப்போது இது வினாசமாக வேண்டியுள்ளது. நான் உங்களை தூய்மையாக்க வந்திருக்கிறேன். இது உங்களுடைய கடைசி பிறவியாகும், ஆகையால் நினைவு செய்தீர்கள் என்றால் பாவ கர்மங்கள் அழியும். தர்மராஜாவின் தண்டனைகளிலிருந்து கூட விடுபடுவீர்கள். அந்த நிராகாரமான தந்தை சொல்கிறார் - என்னுடைய செல்லக் குழந்தைகளே, இப்போது இறுதி சமயமாகும், தலை மீது பாவங்களின் சுமை இருக்கிறது. இப்போது புண்ணிய ஆத்மாவாக ஆக வேண்டும். யோகத்தின் மூலமே பாவகர்மங்கள் வினாசமாகும், மற்றும் புண்ணிய ஆத்மாவாக ஆகிவிடுவீர்கள். 63 பிறவிகள் நீங்கள் இராவண இராஜ்யத்தில் பாவாத்மாக்களாக இருந்தீர்கள். இப்போது உங்களை பாவாத்மாவிலிருந்து புண்ணியாத்மாவாக ஆக்குகிறார். தேவதைகள் புண்ணியாத்மாக்கள் ஆவர். பாவாத்மாக்கள்தான் புண்ணிய ஆத்மாக்களுக்கு பூஜை செய்கின்றனர். இப்போது இது கடைசி பிறவி ஆகும் அனைவரும் இறந்து போகவே வேண்டும் எனும்போது ஏன் ஆஸ்தியை பெற்றுக் கொள்ளக் கூடாது? ஏன் புண்ணிய ஆத்மா ஆகக் கூடாது? அனைத்திலும் பெரிய பாவம் விகாரத்தில் செல்வதாகும். விகாரி தூய்மையற்றவர் எனவும், நிர்விகாரி தூய்மையானவர் எனவும் சொல்லப்படுகின்றனர். சன்னியாசிகளும் கூட தூய்மையற்றவர்களாக இருந்ததால் தூய்மையடைவதற்காக வீடு வாசலை துறக்கின்றனர். பிறகு தூய்மையடையும்போது அனைவரும் அவரை வணங்குகின்றனர். முன்னர் தூய்மையற்றவராக இருந்தபோது யாரும் தலை வணங்கவில்லை. இங்கே தலை வணங்குதல் முதலான எந்த விஷயமும் கிடையாது. தந்தை குழந்தைகளுக்கு ஸ்ரீமத் (உயர்ந்த வழி) கொடுக்கிறார் - தன்னை ஆத்மா என புரிந்து கொள்ளுங்கள், நாம் இங்கே நடிப்பை நடிப்பதற்காக வந்தோம், பிறகு தந்தையிடம் செல்ல வேண்டும். இப்போது ஸ்தூலமான தீர்த்த யாத்திரை அனைத்தும் நின்று போக வேண்டியுள்ளது. நீங்கள் சாந்திதாம் வீட்டிற்கு திரும்பிச் செல்ல வேண்டும். யாத்திரையில் செல்லும்போது தூய்மையாக இருக்கின்றனர். பிறகு வீட்டிற்குச் சென்று தூய்மையற்றவராக ஆகி விடுகின்றனர். அது அல்ப காலத்திற்கான ஸ்தூலமான யாத்திரை. இப்போது உங்களுக்கு ஆன்மீக யாத்திரை கற்றுத் தருகிறார். தந்தை சொல்கிறார் - என்னுடைய ஸ்ரீமத் படி நடந்தீர்கள் என்றால் நீங்கள் அரைக் கல்பத்திற்கு தூய்மையற்றவர் ஆகமாட்டீர்கள். சத்யுகத்தில் இராதா கிருஷ்ணரின் நிச்சயதார்த்தம் தூய்மையை இழப்பதற்காக நடப்பதில்லை. அங்கே தூய்மையாக இருப்பார்கள். யோகபலத்தின் மூலம் குழந்தைகள் பிறக்கும் - யோகபலத்தின் மூலம் நீங்கள் உலகின் எஜமான் ஆவது போல. அங்கே குழந்தைகள் ஒருபோதும் தீய (விகார) செயல்களைச் செய்ய மாட்டார்கள் ஏனென்றால் அங்கே மாயை இருப்பதில்லை. குழந்தைகள் நல்ல கர்மங்கள்தான் செய்வார்கள். அந்த கர்மங்கள் அகர்மமாக (எதிர் விளைவு இல்லாததாக) ஆகிவிடும். இந்த விளையாட்டு உருவாக்கப்பட்டுள்ளது. குமார் குமாரிகளான நீங்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் சகோதரன், சகோதரி ஆவீர்கள். சிவபாபாவின் பேரக்குழந்தைகளாகி விட்டீர்கள். சொர்க்க இராஜ்யத்தின் ஆஸ்தி தாத்தாவிடமிருந்து கிடைக்கிறது. இப்போது தந்தை வந்து ஆண், பெண் என இருவரின் நினைவின் தொடர்பை தன்னுடன் இருக்கும்படியாக ஈடுபடுத்துகிறார். இல்லற விஷயங்களில் இருந்தபடி தூய்மையாய் இருங்கள் என சொல்கிறார். இந்த தைரியத்தைக் காட்டுங்கள். ஒன்றாக இருந்தபடி காம அக்னி பற்றி விடக் கூடாது. அப்படி இருந்து காட்டினால் உயர்ந்த பதவி அடைவீர்கள். பீஷ்ம பிதாமகர் போல பிரம்மச்சாரி ஆவது என்பது முயற்சி செய்ய வேண்டிய ஒன்றாகும். இது மிகவும் கடினம் என மனிதர்கள் புரிந்து கொள்கின்றனர். ஆனால் இந்த யுக்தியை தந்தைதான் கற்றுத் தருகிறார். சிவ பகவானுடைய மகா வாக்கியம் - கிருஷ்ணர் பகவான் அல்ல. அவர் தெய்வீக குணங்களுள்ள மனிதர் ஆவார். பிரம்மா-விஷ்ணு- சங்கரர் கூட சூட்சுமவதனவாசிகள். பிரம்மாவின் பதவி விஷ்ணுவை விட உயர்வானதாகும் - பிராமணர்களின் பதவி தேவதைகளை விடவும் உயர்வானது போல, ஏனென்றால் இந்த சமயம் நீங்கள் ஆன்மீக சமூக சேவகர்களாக இருக்கிறீர்கள். மனிதர்களின் ஆத்மாக்களுக்கு தூய்மை மற்றும் யோகத்தின் இஞ்செக்ஷன் (ஊசி) போடுகிறீர்கள். நீங்கள்தான் பாரதத்தை சொர்க்கமாக ஆக்குகிறீர்கள், ஆகையால் அவ்வாறு ஆக்கக் கூடியவர்களுக்கு மகிமை அதிகமாகும். நீங்கள்தான் தேவதைகள் ஆகிறீர்கள், ஆனால் இந்த சமயத்தில் நீங்கள் பிராமணர் ஆகி சேவை செய்கிறீர்கள், தேவதைகளின் ரூபத்தில் சேவை செய்ய மாட்டீர்கள். அங்கே நீங்கள் இராஜ்யம் செய்வீர்கள். உங்களின் சேவை நரகவாசிகள் உள்ள பாரதத்தை சொர்க்கவாசிகள் வசிக்கும் உலகமாக ஆக்குவது, ஆகையால் வந்தே மாதரம் என சொல்கின்றனர். சிவசக்தி சேனை. மம்மாவை சிங்கத்தின் மீது சவாரி செய்வதாக காட்டுகின்றனர், ஆனால் அப்படி எதுவும் கிடையாது. நீங்கள் பெண் சிங்கங்கள் ஏனென்றால் நீங்கள் 5 விகாரங்களின் மீது வெற்றி அடைகிறீர்கள். பாரதத்தை சொர்க்கமாக ஆக்குகிறீர்கள். இது உயர்ந்த சேவை அல்லவா. ஆகையால்தான் சக்திகளின் கோவில்கள் நிறைய இருக்கின்றன. முக்கியமானவர் ஒருவர் ஆவார். சக்தியை கொடுப்பவர் சிவபாபா. மகிமைகள் அனைத்தும் அவருடையதாகும். பிறகு யாரெல்லாம் உதவியாளர்களோ அவர்களுடைய பெயரும் உள்ளது. ஆண்களான பாண்டவர்களையும் கூட மகாரதி என சொல்லப்படுகிறது. ஆண்கள் பெண்கள் இருவரும் தேவை. இல்லற மார்க்கம் அல்லவா. ஒரு போதும் எந்த விகாரியும் குருவை பின்பற்றக் கூடாது. இல்லறவாசிகள் குருவை பின்பற்றுவதால் எந்த லாபமும் இல்லை. இல்லறவாசியானவர் அதாவது தூய்மையற்றவர் தூய்மையற்றவருக்கு கிடைத்தார், அவர் ஒரு போதும் மற்றவரை தூய்மையாக்க முடியாது. சன்னியாசிகளின் சீடர்கள் என தன்னை சொல்லிக் கொள்கின்றனர், ஆனால் தான் சன்னியாசி ஆகவில்லை என்றால் அதுவும் பொய்யானதாகி விட்டது. இன்றைய நாட்களின் நிறைய ஏமாற்று வேலை நடக்கிறது. இல்லறவாசி குருவை பின்பற்றிக் கொண்டு உட்கார்ந்து விடுகின்றனர், தூய்மையின் விஷயத்தை எடுப்பதில்லை. இங்கேயோ, தூய்மை அடைந்தீர்கள் என்றால் குழந்தை என சொல்லிக்கொள்ளுங்கள் என தந்தை சொல்கிறார். தூய்மை அடையாமல் இராஜ்யம் கிடைக்காது. ஆக தந்தையிடம் நினைவின் தொடர்பை கண்டிப்பாக ஈடுபடுத்த வேண்டும். பிறகு யார் யாரை ஏற்றுக் கொள்கின்றனரோ, அதாவது யாராவது குருநானக்கை ஏற்றுக் கொள்கின்றனர் என வைத்துக் கொள்ளுங்கள், அவர் அந்த குலத்தில் சென்று சேருவார். யார் இந்த சமயம் படிப்பை படித்து தூய்மை அடைகின்றனரோ அவர்கள் சொர்க்கத்தில் வருவார்கள். குருநானக்கை ஒருபோதும் தேவதை என சொல்ல மாட்டார்கள். தேவதைகள் சத்யுகத்தில் இருப்பார்கள். அங்கே நிறைய சுகம் இருக்கும், வேற்று தர்மத்தவர்களுக்கு சொர்க்கத்தின் சுகத்தைப் பற்றி எதுவும் தெரியாது. சொர்க்கத்தில் பாரதவாசிகள்தான் இருப்பார்கள். மற்றவர்கள் பின்னர் வருவார்கள். யார் யார் தேவதைகளாக ஆக வேண்டியிருக்குமோ அவர்கள்தான் ஆவார்கள். இந்த சமயத்தில் தேவதைகளை, லட்சுமி-நாராயணரை பூஜிக்கின்றனர் மற்றும் தனது தர்மத்தை இந்து என சொல்லி விடுகின்றனர், ஏனென்றால் தூய்மையற்றவராக ஆகி விட்டனர், எனவே தனது தூய்மையான தர்மத்தை மறந்து இந்து என சொல்லிக் கொள்கின்றனர். அட, நீங்கள் தேவி தேவதா தர்மத்தைச் சேர்ந்தவர்கள், பிறகு ஏன் தன்னை இந்து என சொல்லிக் கொள்கிறீர்கள்? இந்து என்பது தர்மம் ஒன்றும் அல்ல, ஆனால் விழுந்து (விகாரி ஆகி) விட்டுள்ளனர். தேவதைகள் மிகவும் சிலரே இருப்பார்கள், யார் வந்து இங்கே படிப்பை படிக்கின்றனரோ அவர்களே மனிதரிலிருந்து தேவதை ஆகின்றனர். கொஞ்சம் படிப்பை படித்தாலும் சாதாரண பிரஜைகளில் வருவார்கள். தந்தையுடையவராய் ஆவதன் மூலம் வெற்றி மாலையில் வருவீர்கள். இப்போது ஆன்மீக பிரியதர்ஷன், பிரியதர்ஷினி ஆக வேண்டும். சத்யுகத்தில் சரீரம் தரித்தவர் ஆவீர்கள். கலியுகத்தில் கூட சரீரமுள்ளவர்களாக ஆவீர்கள். இப்போது சங்கமயுகத்தில் ஒரு ஆன்மீக பிரியதர்ஷனின் பிரியதர்ஷினி ஆக வேண்டும்.என்னை நினைவு செய்தபடி இருங்கள் என தந்தை சொல்கிறார். விகாரத்தில் செல்வதன் மூலம் நூறு மடங்கு தண்டனை கிடைத்து விடும். விகாரத்தில் விழுந்து விட்டீர்கள் என்றால் பாபா, நாங்கள் முகத்தைக் கருப்பாக்கிக் கொண்டோம் என எழுத வேண்டும். குழந்தைகளே ! இப்போது நீங்கள் வெண்மையாக (அழகாக) ஆக வேண்டும் என தந்தை சொல்கிறார். கிருஷ்ணரை ஷியாம் சுந்தர் என சொல்கின்றனர். அவருடைய ஆத்மா இந்த சமயம் கருப்பாகி விட்டுள்ளது. பிறகு ஞானச் சிதையில் அமர்ந்து வெண்மையாக ஆகி விடும். 21 பிறவிகளுக்கு அழகாக ஆகிவிடும். பிறகு ஷியாம் (கருப்பாக) ஆகி விடும். இந்த கருமை மற்றும் சுந்தரம் ஒரு விளையாட்டு உருவாகியுள்ளது. கருமை நிறத்திலிருந்து சுந்தராக ஆவதற்கு ஒரு வினாடி பிடிக்கிறது, சுந்தரிலிருந்து கருமை ஆவதில் அரை கல்பம் ஆகிவிடுகிறது. அரைக் கல்பம் கருப்பாக என்றால் அரைக் கல்பம் சுந்தர். ஒரு பிரயாணியாக வருபவர் சிவ பாபா ஆவார். மற்ற அனைவரும் மணமகள்கள் ஆகி விட்டனர். சுந்தர் ஆவதற்காகத்தான் உங்களுக்கு யோகம் கற்பிக்கிறார். சத்யுகத்தில் முதல் தரமான இயற்கையான அழகு இருக்கும். ஏனென்றால் 5 தத்துவங்களும் சதோ பிரதானமாக இருப்பதால் சரீரமும் அழகாக உருவாகிறது. இங்கே செயற்கையான அழகு உள்ளது. தூய்மை மிகவும் நல்லது ஆகும். பாபாவிடம் நிறைய பேர் வருகின்றனர், தூய்மையின் உறுதிமொழி எடுக்கின்றனர். ஆனால் சிலர் தவறி விடுகின்றனர், சிலர் தேர்ச்சி அடைந்துவிடுகின்றனர். இது ஈஸ்வரிய மிஷன் ஆகும். மூழ்கியிருக்கும் பாரதத்தை மீட்க வேண்டும். பாரதத்தின் படகு இராவணன் மூழ்கடித்தான். இராமன் வந்து கரை சேர்க்கிறார். நாம் சொர்க்கத்தில் சென்று வைர வைடூரியங்களால் ஆன மாளிகைகளை கட்டுவோம் என்பது உங்களுடைய புத்தியில் உள்ளது. இந்த சரீரத்தை விட்டு இளவரசன், இளவரசி ஆவீர்கள். யார் குழந்தைகளாய் இருக்கின்றனரோ அவர்களுக்குத்தான் இப்படிப்பட்ட சிந்தனைகள் வரும். இது ஈஸ்வரிய தர்பார் அல்லது ஈஸ்வரிய குடும்பம் ஆகும். நீயே தாய் தந்தை, நாங்கள் உன்னுடைய பாலகர்கள் என பாடுகின்றனர், ஆக குடும்பம் என ஆகி விட்டது அல்லவா. ஈஸ்வரன் தாத்தாவாக இருக்கிறார், பிரம்மா தந்தையாக உள்ளார், நீங்கள் சாகோதரன், சகோதரியாக இருக்கிறீர்கள். சொர்க்கத்தின் ஆஸ்தியை நீங்கள் தாத்தாவிடமிருந்து பெறுகிறீர்கள். பிறகு நீங்கள் இழந்து விடுகிறீர்கள், பிறகு பாபா மீண்டும் கொடுக்க வருகிறார். நீங்கள் நடைமுறையில் தந்தையுடையவராக ஆகியுள்ளீர்கள் - ஆஸ்தியை எடுப்பதற்காக. பிரம்மாவின் குழந்தைகள், சிவனின் பேரக்குழந்தைகள் - நடைமுறையில் ஆகிறீர்கள். ஆக இதனை ஈஸ்வரிய தர்பார் (சபை) எனவும் சொல்கிறோம். ஈஸ்வரிய குடும்பம் எனவும் சொல்ல முடியும். நல்லது!இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.தாரணைக்கான முக்கிய சாரம் :

1. ஞானச்சிதையில் அமர்ந்து முழுமையாக தூய்மையடைய (சுந்தர்) வேண்டும். தூய்மைதான் முதல் நம்பர் அழகு ஆகும். இந்த அழகை தாரணை செய்து தந்தையின் குழந்தை என சொல்லிக் கொள்ளும் உரிமைமிக்கவர் ஆக வேண்டும்.2. இந்த கடைசி சமயத்தில் தலை மீது இருக்கும் பாவங்களின் சுமைகளை ஒரு தந்தையின் நினைவின் மூலம் இறக்க வேண்டும். புண்ணிய ஆத்மா ஆவதற்காக உயர்ந்த காரியங்கள் செய்ய வேண்டும்.வரதானம் :

தனது நெற்றியில் சதா தந்தையின் ஆசீர்வாதங்களின் கரங்களை அனுபவம் செய்யக் கூடிய தடைகளை அழிப்பவர் ஆகுக !யாரிடம் அனைத்து சக்திகளும் இருக்குமோ அவர்கள்தான் தடைகளை அழிப்பவராக ஆகவே முடியும். ஆக, சதா நான் மாஸ்டர் சர்வ சக்திவான் என்ற இந்த போதை உள்ளவர் ஆகவும். சர்வ சக்திகளை சமயத்தில் காரியத்தில் ஈடுபடுத்துங்கள். எத்தனை ரூபத்தில் வேண்டுமானாலும் மாயை வரட்டும், ஆனால் நீங்கள் ஞானம்மிக்கவர் ஆகுங்கள். தந்தையின் கரம் மற்றும் துணையின் அனுபவம் செய்தபடி இணைந்த ரூபத்தில் இருங்கள். தினமும் அமிர்த வேளையில் வெற்றித் திலகத்தை நினைவில் கொண்டு வாருங்கள். பாப்தாதாவின் ஆசீர்வாதங்களின் கரம் என்னுடைய நெற்றியில் உள்ளது என அனுபவம் செய்தீர்கள் என்றால் தடைகளை அழிப்பவர் ஆகி எப்போதும் கவலையற்றவராக இருப்பீர்கள்.சுலோகன் :

சேவையின் மூலம் அழிவற்ற குஷியின் அனுபவம் செய்பவரும், செய்விப்பவரும்தான் உண்மையான சேவாதாரிகள்.***OM SHANTI***