19 April 2017

BK Murli 20 April 2017 Tamil

BK Murli 20 April 2017 Tamil

20.04.2017    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


இனிமையான குழந்தைகளே! என்ன நடந்தாலும் பொறுத்துக் கொள்ள வேண்டியிருக்கும் எனினும் இந்த கடைசி பிறவியில் கண்டிப்பாக தூய்மையடைய வேண்டும், தந்தைக்கு தூய்மைபடுத்தும் காரியத்தில் தான் சகயோகம் வேண்டியுள்ளது.கேள்வி:

கடைசி காட்சி என்னவாக இருக்கும், அதை புரிந்து கொள்வதற்கு நல்ல விசால புத்தி தேவைப்படுகிறது?பதில்:

கடைசி காட்சி அனைவரும் திரும்பிச் செல்வதற்கானதாகும். . . ராமன் சென்றான், ராவணன் சென்றான். என சொல்லப்படுகிறது. மற்றபடி சிருஷ்டியை சுத்தம் செய்வதற்காக, புதிய உலகத்தை தயார் செய்வதற்காக கொஞ்சம் பேர் தப்பித்து இருப்பார்கள். நாமும் போகப் போகிறோம், பிறகு எங்கே சுகமான வாழ்க்கையோ அங்கே பிறவி ஏற்படும். பாரதத்தில் தான் வாழ்க்கை இருக்கும், மற்ற அனைத்தும் அழிந்து போய் விடும். செல்வந்தராக விளங்கும் இராஜாக்கள் மட்டும் மிச்சம் இருப்பார்கள், அவர்களிடம் நம்முடைய பிறவி ஏற்படும். பிறகு நாம் சிருஷ்டியின் எஜமானாக ஆகப் போகிறோம். இதனை புரிந்து கொள்வதற்காக விசால புத்தி தேவை.பாடல்:

கண்ணிழந்தவர்க்கு வழி காட்டுங்கள். . .ஓம் சாந்தி.

குழந்தைகள் பாடலைக் கேட்டீர்கள். ஓ பிரபு, நாங்கள் குருடர்கள் என சொல்கின்றனர். ஒவ்வொரு வாசலும், ஒவ்வோர் அடி எடுத்து வைக்கும் போதும் ஏமாற்றம் நஷ்டமடைகின்றனர். நாங்கள் குருடரின் புதல்வர்கள் குருடர்களாக இருக்கிறோம் என தன்னைப் பற்றி தானே சொல்லிக் கொள்கின்றனர். ஓ பிரபு வாருங்கள் என அழைக்கின்றனர். குருமார்களின் வாசலில், கோவில்களின் வாசல்களில், நதிகளின் கரைகளில் என எல்லா இடங்களிலும் ஏமாற்றம் நஷ்டமடைந்தபடி இருக்கின்றனர். அவர் நம்முடைய தந்தை என்ற அர்த்தத்தை அவர்கள் தெரிந்து கொள்ளவில்லை. பிரபுவுக்கும் கூட பல பெயர்களை கொடுத்து விட்டார்கள். நிராகாரமானவர், பெயர் உருவத்திற்கும் அப்பாற்பட்டவர் என சொல்கின்றனர். இப்போது பெயர் உருவத்திற்கும் அப்பாற்பட்ட எந்த பொருளும் கிடையாது. பரமபிதா பரமாத்மா எப்போதாவது பெயர் உருவத்திற்கும் அப்பாற்பட்டவராக இருக்க முடியுமா? என நீங்கள் சொல்கிறீர்கள். நாங்கள் குருடர்கள் என மனிதர்கள் தாங்களே பாடியபடி இருக்கின்றனர். தந்தை வந்து வழி காட்டும்போது கண் பார்வை பெற்றவர்களாக ஆகிவிடுகின்றனர். ஞானக்கடலாகிய தந்தை உங்களுக்கு கற்பிக்கிறார், முக்தி ஜீவன்முக்திக்கான வழி காட்டுகிறார். மற்ற எந்த சாது சன்னியாசிகளும் முக்தி ஜீவன் முக்திக்கான வழியைச் சொல்ல முடியாது. அப்படி இருக்கும்போது அவர்களை எப்படி குரு என சொல்ல முடியும். நாடகத்தில் அவர்களின் பாகம் இருக்கிறது. பாரதத்தை தூய்மையால் அழகுபடுத்த வேண்டியுள்ளது. தூய்மையாக இருக்கின்றனர், ஆனால் ஞான-யோகத்தால் தூய்மை யடைவதில்லை. மருந்து சாப்பிட்டு காமேந்திரியங்களை பிணம் போல உணர்வின்றி ஆக்கிக் கொள்கின்றனர், அதில் எந்த சக்தியும் கிடையாது. இல்லற விஷயங்களில் இருந்தபடி, கணவன், மனைவி இருவரும் சுயம்வர முறையில் திருமணம் செய்து கொண்டு பிறகு தூய்மையாய் இருக்கும்போது சக்தி கிடைக்கும். அவர்கள் பால பிரம்மச்சாரி தம்பதியர் என சொல்லப்படுகின்றனர். இங்கும் கூட தந்தையிடமிருந்து பலம் கிடைக்கிறது. பரமபிதா பரமாத்மாதான் வந்து தூய்மையின் மார்க்கத்தை ஸ்தாபனை செய்கிறார். சத்யுகத்தில் தேவி தேவதைகள் தூய்மையான இல்லற மார்க்கத்தினராக இருந்தனர். தூய்மையாய் இருந்தும் அவர்களுக்கு குழந்தைகள் இருந்தனர். பரமபிதா பரமாத்மா எப்படி வந்து அவர்களுக்கு சக்தியை கொடுக்கிறார், அவர்கள் வீடு வாசலில் இருந்தபடி எப்படி தூய்மையை இழக்காமல் இருக்கின்றனர் என்பதை மனிதர்கள் தெரிந்து கொள்ளவில்லை. இந்த துச்சாதனன் என்னை துகிலுரிகிறான் என திரௌபதி கூக்குரலிட்டாள், இங்கும் கூட நிறைய குழந்தைகள் அப்படி கூக்குரலிடுகின்றனர். இப்போது பரமாத்மா வந்து 21 பிறவிகளுக்கு தூய்மை இழப்பதிலிருந்து விடுவிக்கிறார். ஒரு திரௌபதி இல்லை, நீங்கள் அனைவரும் திரௌபதிகளே. குழந்தைகளாகிய உங்களுக்கு அறிவுரை கிடைக்கிறது - குழந்தைகளே, உங்களின் கணவன்மார்கள் உங்களை அடித்தாலும் உதைத்தாலும் நீங்கள் சகித்துக் கொள்ள வேண்டும், ஏனென்றால் தூய்மையடையாமல் நீங்கள் தூய்மையான உலகின் எஜமானர் ஆக முடியாது. ஒவ்வொரு கல்பத்திலும் தாய்மார்களாகிய நீங்கள்தான் சிவசக்திகள் ஆகின்றீர்கள். ஜகதம்பா சரஸ்வதியை புலியின் மீது சவாரி செய்வதாகக் காட்டுகின்றனர், இந்த மகிமையும் உங்களுடையதே ஆகும். இது தூய்மையற்ற உலகம் அல்லது அசுர உலகம் ஆகும். தூய்மையான உலகம் என்றால் ஈஸ்வரிய உலகமாகும். ஆக ராமன் வந்து இராம இராஜ்யத்தை ஸ்தாபனை செய்கிறார். தூய்மை முதன்மையானது. காம விகாரம் எவ்வளவு பலவானாக உள்ளது. நல்ல நல்ல மனிதர்களும் சொல்லி விடுகின்றனர் – தூய்மையாக இருப்பது என்பது நடக்காத விஷயம். அட, சத்யுகத்தில் தேவி தேவதைகள் சம்பூரண நிர்விகாரிகளாக இருந்தனர். நீங்கள் மகிமை பாடுகின்றீர்கள். - நீங்கள் அனைத்து குணங்களும் நிரம்பியவர், நாங்கள் தூய்மையற்றவர்கள், நீசர்கள் (கீழானவர்கள்). ஆக அவர்களை அப்படி ஆக்கக் கூடியவர் ஒருவர் இருப்பார் அல்லவா. தந்தை சங்கமயுகத்தில் வந்து சத்யுகத்தின் ஸ்தாபனையை செய்தார். தந்தைதான் வந்து அசுர உலகத்தை தெய்வீக உலகமாக ஆக்குகிறார். மனிதர்கள் பதிதர் (தூய்மையற்றவர்) என்பதன் அர்த்தத்தைக் கூட புரிந்து கொள்வதில்லை. அட, நீங்கள் கூக்குரலிடுகிறீர்கள் - நாங்கள் அனைவரும் பதிதர்கள் (தூய்மையற்றவர்), ஓ பதித பாவனா வாருங்கள் என்று. பாரதம் தூய்மையாக இருந்தபோது இரட்டை கிரீடமுள்ளதாக இருந்தது. இப்போது நீங்கள் அனைவரின் வாழ்க்கை வரலாற்றையும் தெரிந்திருக்கிறீர்கள். இப்போது நீங்கள் தந்தையுடையவர்களாக ஆகியுள்ளீர்கள். உங்களுக்கு புத்தியில் இறைத்தந்தைதான் நினைவுக்கு வருகிறார். அந்த தந்தை நிராகாரமானவர் (உடலற்றவர்), பரமதாமத்தில் வசிப்பவர். இப்படிப்பட்ட தந்தையை முற்றிலும் தெரிந்து கொள்வதில்லை. மனிதர்கள் இந்த சமயம் மிகவும் துக்கம் மிக்கவர்களாக இருக்கின்றனர். மரணத்தின் பயம் எவ்வளவு இருக்கிறது பாருங்கள். மரணம் முன்னால் நின்றிருக்கிறது என இப்போது தந்தை சொல்கிறார். முதலில் ரத்த ஆறு பாயும், பிறகு பாலாறு பாயும்.இப்போது தந்தை உங்களை விஷக்கடலிலிருந்து பாற்கடலுக்கு அழைத்துச் செல்கிறார். லட்சுமி நாராயணர், பாற்கடலில் எல்லாம் இருப்பது சத்யுகத்தில். இங்கேயோ குடிப்பதற்குக் கூட பால் கிடைப்பதில்லை, பவுடர்தான் கிடைக்கிறது. சத்யுகத்தில் எந்தப் பொருளுக்கும் குறைபாடு இருக்காது. பாரதம் முதலில் சொர்க்கமாக இருந்தது,  இப்போது நரகமாக இருக்கிறது. ஒருவர் மற்றவரை (கொத்திக்) விஷத்திற்காக துன்புறுத்திக் கொண்டே இருக்கின்றனர். தோற்றம் மனிதருடையது, ஆனால் நடத்தை அழுக்காக உள்ளது. ஒருவர் மற்றவருக்குள் சண்டை சச்சரவு போட்டபடி இருக்கின்றனர். இருப்பதே பாவாத்மாக்களின் உலகம் எனும்போது குணமுள்ளவர்கள் எங்கிருந்து வருவார்கள். தான புண்ணியங்கள் செய்தால் அவர்கள் குணவான் ஆகிவிடுவார்களா என்ன? இப்போது அனைவரும் இராவணனின் வழியில் இருக்கின்றனர். தேவதைகள் எவ்வளவு தூய்மையாகவும் சுகம் மிக்கவர்களாகவும் இருந்தனர். இராமராஜ்யம் மற்றும் இராவண இராஜ்யம் என சொல்லப்படுவது எது என்பதே பாரதவாசிகளுக்குத் தெரியாது. இராமராஜ்யத்தை விரும்புகின்றனர், ஆனால் அதனை யார் ஸ்தாபனை செய்கின்றனர் என்பது தெரியாது. இந்த சமயத்தில் யாருக்காவது பணத்தைக் கொடுத்தால் அதனைக் கொண்டு பாவம்தான் செய்கின்றனர் ஏனென்றால் இது பாவாத்மாக்களின் உலகம். இப்போது நீங்கள் தந்தையின் வழிப்படி நடக்க வேண்டும். நாம் தந்தையிடம் ஆஸ்தியை எடுக்கத்தான் போகிறோம் என நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். ஆனால் இந்த கடைசி பிறவியில் தூய்மையடையுங்கள், 63 பிறவிகள் நீங்கள் விகாரத்தில் சென்றீர்கள். இப்போது ஒரு பிறவி தூய்மையின் உதவி செய்யுங்கள் என்றால் தூய்மையாக இருக்க வேண்டியிருக்கும். கிருஷ்ணர் (வெள்ளை) தூய்மையாக இருந்தார், பிறகு காமச்சிதையில் அமர்ந்ததன் மூலம் இப்போது ஷியாம் (கருப்பாக) ஆகியுள்ளார். மீண்டும் ஞானச் சிதையில் அமர்வதன் மூலம் வெள்ளையாக சொர்க்கத்தின் எஜமானாக ஆகிறார். நீங்கள்தான் தேவதையாக இருந்தீர்கள், இப்போது அசுரர்களாக ஆகியிருக்கிறீர்கள். இது சக்கரமாகும், பூஜைக்குரியவரே பிறகு பூஜாரி. . . சன்னியாசிகள் ஆத்மாவே பரமாத்மா என சொல்லிவிடுகின்றனர். இரவுக்கும் பகலுக்குமிடையிலான வித்தியாசம் ஏற்பட்டு விட்டது. நாடகத்தின்படி அனைவரும் விழுந்துதானாக (கீழானவர்களாக) வேண்டும். இப்போது உங்களுக்கு குருமார்களுக்கெல்லாம் குருவாக, பதிகளுக்கெல்லாம் பதியாக எல்லைக்கப்பாற்பட்ட தந்தை கிடைத்திருக்கிறார் எனும்போது அவரின் ஸ்ரீமத் படி நடக்க வேண்டும். பரமபிதா பரமாத்மாவை ஏற்கிறீர்கள்தானே? சிவ ஜெயந்தியும் கொண்டாடுகின்றனர் எனும்போது சிவபாபா வந்து என்ன செய்தார்? எப்படி செய்தார்? இவ்வளவு பெரிய சோம்நாத் கோவிலை கட்டியுள்ளனர். கண்டிப்பாக பாரதத்தில்தான் வந்திருக்கிறார். எப்படி வந்தார், என்ன செய்தார் என எதையும் சொல்ல முடியாது. இதுவும் பரம்பரையாக நடந்து வருகிறது. கங்கையின் மேளா, கும்பமேளா இவை பரம்பரையாக நடந்து வருகிறது என சொல்கின்றனர். இவை அனைத்தையும் தலை கீழாகச் சொல்கின்றனர். சத்யுகத்திலிருந்தே சிருஷ்டி தூய்மை இல்லாமல் இருந்ததா என்ன? சொல்லக் கூடிய எதற்கும் அர்த்தத்தைப் புரிந்து கொள்வதில்லை. இது பக்திமார்க்கம் எனப்படுகிறது. கிறிஸ்து வந்தார், மீண்டும் எப்போது வருவார்? யாருக்கும் தெரியவே தெரியாது. கண்காட்சிகளில் நீங்கள் ஆயிரக்கணக்கானவருக்கு புரிய வைக்கிறீர்கள், ஆனாலும் கூட கோடியில் யாரோ ஒருவர் வெளிப்படுகிறார்.இப்போது நீங்கள் எல்லைக்கப்பாற்பட்ட தந்தையிடமிருந்து எல்லைக்கப்பாற்பட்ட ஆஸ்தியை அடைகிறீர்கள். உலகம் இப்போது மாறிக்கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். நாங்கள் சன்னியாசிகளுக்கும் கூட தூய்மையாய் இருந்து காட்டுவோம் என நீங்கள் சொல்கிறீர்கள். இவர்களுக்கு படிப்பை சொல்லிக்கொடுப்பவர் பரமபிதா பரமாத்மா என அவர்களும் ஒப்புக் கொள்வார்கள். நீங்கள் இதை மட்டும் உறுதியாக சொல்லுங்கள் - தந்தை சர்வவியாபி (எங்கும் நிறைந்தவர்) அல்ல, ஸ்ரீகிருஷ்ணர் கீதையை சொல்லவில்லை – அப்போது அவர்களின் செல்வாக்கே குறைந்து விடும். இவையனைத்தும் இறுதியில் நடக்கும். பரமபிதா பரமாத்மா நம்முடைய தந்தை என இப்போது குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். முதலில் சூட்சும வதனத்தில் பிரம்மா, விஷ்ணு, சங்கரர் இவர்களின் படைப்பை படைக்கிறார். பிரம்மா பிரஜாபிதா ஆவார். பிரம்மாதான் பிராமணர்களுக்கு பிறவி கொடுக்கிறார். பிராமண வர்ணம் அனைத்திலும் உயர்ந்ததாகும். சிவபாபாவின் வாய் வழி வம்சாவளியினர் பிராமணர்கள் ஆவர். அவர்கள் விகார வழி வம்சாவளியினர் ஆவர். தந்தையின் ஸ்ரீமத் படி நடப்பதன் மூலம் நீங்கள் தூய்மையடையக் கூடியவர்கள் ஆவீர்கள். தேகதாரிகளை மறந்து விட வேண்டும். முயற்சி உள்ளதல்லவா. இப்போது நாடகம் முடிவடைகிறது, நடிகர்களாகிய அனைவரும் திரும்பிச் சென்று விடுவார்கள், கொஞ்சம் பேர் மீதி இருப்பார்கள். ராமன் சென்றான், ராவணன் சென்றான், மீதி இருப்பவர் யார்? இரு புறத்திலும் கொஞ்சம் பேர் மீதியிருப்பார்கள், மற்ற அனைவரும் திரும்பிச் சென்று விடுவார்கள். பிறகு வீடு முதலானவைகளை கட்டுபவர்கள், சுத்தம் செய்பவர்கள் கூட மீதி இருப்பார்கள். கால அவகாசம் தேவைப்படும் அல்லவா. நாமும் கூட சென்று விடுவோம். உங்களுக்கு இராஜ்யத்தில் பிறவி கிடைக்கும். அவர்கள் சுத்தம் செய்வார்கள். எங்கே சுகமான வாழ்க்கையோ அங்கே பிறவி கிடைக்கும் என பாபா சொன்னார். பாரதத்தில்தான் வெற்றியின் பலன் இருக்கும். மற்றவர்கள் அனைவரும் மடிந்து போய் விடுவார்கள். செல்வந்தர்களாக இருக்கக் கூடிய ராஜாக்கள் முதலானவர்கள் மீதி இருப்பார்கள், அவர்களிடம் நீங்கள் பிறவி எடுப்பீர்கள். பிறகு நீங்கள் முழு சிருஷ்டிக்கும் எஜமானாக வேண்டும். இங்குள்ள செல்வங்கள் ஏதாவது அங்கே பயன்படும் என்பது கிடையாது. இங்குள்ள செல்வங்கள் பைசா அளவு கூட மதிப்பற்றவையாகும். அங்கே அனைத்தும் புதியதாக உருவாகிவிடும். வைர வைடூரியங்களின் சுரங்கங்கள் நிறைந்திருக்கும். இல்லாவிட்டால் மாளிகைகள் எங்கிருந்து உருவாகும்? புரிந்து கொள்வதற்கு எவ்வளவு புத்தி தேவை. குழந்தைகளாகிய நீங்கள் இப்போது இரட்டை அகிம்சையாளர்கள் ஆகியிருக்கிறீர்கள். நாம் எந்த இம்சை முறையிலும் ஈடுபட முடியாது என நீங்கள் அறிவீர்கள். இங்கே இரட்டை இம்சை செயல் உள்ளது. சத்யுகத்தில் இம்சை என்பதே இல்லை. அது சொர்க்கம் எனப்படுகிறது. தந்தை சொல்கிறார் - இந்த ஞானம் செல்வந்தர்களுக்கு கடினமானதாகும் என நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள் அல்லவா. பாபா ஏழைப் பங்காளர் ஆவார், சிவபாபா வள்ளலாக இருப்பவர். இந்த வீடு முதலானவை அனைத்தும் உங்களுக்காகத்தான் ஆகும். உங்களைத்தான் உலகின் எஜமானாக ஆக்குகிறேன். ஆக நான் பிறகு புதிய வீட்டில் ஏன் இருக்கப் போகிறேன். இந்த பாபா சொன்னார் - நாங்கள் அமரப் போவதில்லை. பாபா சொல்கிறார் - நான் அமர மாட்டேன் என்றால் நீங்கள் (குழந்தைகள்) எப்படி அமர்வீர்கள்? சிவபாபா சொல்கிறார் - நான் அபோக்தா (அனுபவம் செய்யாதவர்), யோசனை செய்யாதவர் - இதன் அர்த்தம் என்ன என்பதையும் நீங்கள் அறிவீர்கள். நல்லது!இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.தாரணைக்கான முக்கிய சாரம் :

1. இப்போது நாடகம் முடிவடைந்து கொண்டிருக்கிறது, வீடு திரும்ப வேண்டும், ஆகையால் கண்டிப்பாக தூய்மையடைய வேண்டும். எந்த தேகதாரியையும் நினைவு செய்யக் கூடாது.2. தந்தையிடமிருந்து பலத்தைப் பெற்று இந்த கடைசி பிறவியில் கணவன், மனைவியாக இருந்தாலும் தூய்மையாக வாழ்ந்து காட்ட வேண்டும். எல்லைக்கப்பாற்பட்ட தந்தை கிடைத்தார் எனும்போது அவருடைய ஸ்ரீமத் படி கண்டிப்பாக நடக்க வேண்டும்.வரதானம் :

(திடத்தன்மையின்) உறுதியான நம்பிக்கை சக்தியின் மூலம் வெற்றியை (பிராப்தி) பலனாக அடையக் கூடிய மற்றும் பயன்படுத்தும் திரிகால தரிசி ஆகுக.பாப்தாதாவின் வரதானம் - எங்கே உறுதியான நம்பிக்கை உள்ளதோ அங்கே வெற்றி உள்ளது. எனவே உறுதியின் மூலம் ஏதாவது ஒரு குணம் அல்லது சக்தியின் பயன்படுத்துவதற்கான புரோகிராம் (திட்டம்) செய்யுங்கள். நான் செய்யவே வேண்டும் என்ற திட சங்கல்பம் இருக்க வேண்டும். மற்றவருடைய கவனக் குறைவின் தாக்கம் ஏற்படக் கூடாது. திரிகாலதரிசி தன்மை நிலையின் ஆசனத்தில் அமர்ந்து சமயத்திற்குத் தகுந்த விதியின் மூலம் முதலில் நீங்கள் வெற்றி சொரூபமாகுங்கள், அப்போது நடைமுறைபடுத்து:ம ஆத்மாக்களின் குழு தயாராகும் மற்றும் அந்த குழுவின் கிரணங்கள் (அதிர்வலை) நிறைய காரியங்களை செய்து காட்டும்.சுலோகன் :

அனைவரின் ஆசீர்வாதங்களை (பிராப்தி) பெறுபவர்களே திருப்தி மணிகள் ஆவர்.


***OM SHANTI***

Whatsapp Button works on Mobile Device only